Monday, June 06, 2016

1 Thesaloanikkeayar 2 | 1 தெசலோனிக்கேயர் 2 | 1 Thessalonians 2

சகோதரரே,  நாங்கள்  உங்களிடத்தில்  பிரவேசித்தது  வீணாயிருக்கவில்லையென்று  நீங்களே  அறிந்திருக்கிறீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  2:1)

sagoathararea,  naangga'l  ungga'lidaththil  piraveasiththathu  vee'naayirukkavillaiyen’ru  neengga'lea  a’rinthirukki’reerga'l.  (1thesaloanikkeayar  2:1)

உங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  முன்னே  பிலிப்பிபட்டணத்திலே  நாங்கள்  பாடுபட்டு  நிந்தையடைந்திருந்தும்,  வெகு  போராட்டத்தோடே  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களுக்குச்  சொல்லும்படி,  நம்முடைய  தேவனுக்குள்  தைரியங்கொண்டிருந்தோம்.  (1தெசலோனிக்கேயர்  2:2)

ungga'lukkuth  therinthirukki’rapadi,  munnea  pilippipatta'naththilea  naangga'l  paadupattu  ninthaiyadainthirunthum,  vegu  poaraattaththoadea  theavanudaiya  suviseashaththai  ungga'lukkuch  sollumpadi,  nammudaiya  theavanukku'l  thairiyangko'ndirunthoam.  (1thesaloanikkeayar  2:2)

எங்கள்  போதகம்  வஞ்சகத்தினாலும்  துராசையினாலும்  உண்டாகவில்லை,  அது  கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.  (1தெசலோனிக்கேயர்  2:3)

engga'l  poathagam  vagnchagaththinaalum  thuraasaiyinaalum  u'ndaagavillai,  athu  kabadamu'l'lathaayumirukkavillai.  (1thesaloanikkeayar  2:3)

சுவிசேஷத்தை  எங்களிடத்தில்  ஒப்புவிக்கத்தக்கதாய்,  தேவன்  எங்களை  உத்தமரென்றெண்ணினபடியே,  நாங்கள்  மனுஷருக்கு  அல்ல,  எங்கள்  இருதயங்களைச்  சோதித்தறிகிற  தேவனுக்கே  பிரியமுண்டாகப்  பேசுகிறோம்.  (1தெசலோனிக்கேயர்  2:4)

suviseashaththai  engga'lidaththil  oppuvikkaththakkathaay,  theavan  engga'lai  uththamaren’re'n'ninapadiyea,  naangga'l  manusharukku  alla,  engga'l  iruthayangga'laich  soathiththa’rigi’ra  theavanukkea  piriyamu'ndaagap  peasugi’roam.  (1thesaloanikkeayar  2:4)

உங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நாங்கள்  ஒருக்காலும்  இச்சகமான  வசனங்களைச்  சொல்லவுமில்லை,  பொருளாசையுள்ளவர்களாய்  மாயம்பண்ணவுமில்லை;  தேவனே  சாட்சி.  (1தெசலோனிக்கேயர்  2:5)

ungga'lukkuth  therinthirukki’rapadi,  naangga'l  orukkaalum  ichchagamaana  vasanangga'laich  sollavumillai,  poru'laasaiyu'l'lavarga'laay  maayampa'n'navumillai;  theavanea  saadchi.  (1thesaloanikkeayar  2:5)

நாங்கள்  கிறிஸ்துவின்  அப்போஸ்தலராக  உங்களுக்குப்  பாரமாயிருக்கக்  கூடியவர்களானாலும்,  உங்களிடத்திலாவது,  மற்றவர்களிடத்திலாவது,  மனுஷரால்  வரும்  மகிமையை  நாங்கள்  தேடவில்லை.  (1தெசலோனிக்கேயர்  2:6)

naangga'l  ki’risthuvin  appoasthalaraaga  ungga'lukkup  baaramaayirukkak  koodiyavarga'laanaalum,  ungga'lidaththilaavathu,  mat’ravarga'lidaththilaavathu,  manusharaal  varum  magimaiyai  naangga'l  theadavillai.  (1thesaloanikkeayar  2:6)

உங்களிடத்தில்  பட்சமாய்  நடந்துகொண்டோம்;  பால்  கொடுக்கிற  தாயானவள்  தன்  பிள்ளைகளைக்  காப்பாற்றுகிறதுபோல,  (1தெசலோனிக்கேயர்  2:7)

ungga'lidaththil  padchamaay  nadanthuko'ndoam;  paal  kodukki’ra  thaayaanava'l  than  pi'l'laiga'laik  kaappaat’rugi’rathupoala,  (1thesaloanikkeayar  2:7)

நாங்கள்  உங்கள்மேல்  வாஞ்சையாயிருந்து,  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களுக்குக்  கொடுத்ததுமல்லாமல்,  நீங்கள்  எங்களுக்குப்  பிரியமானவர்களானபடியினாலே,  எங்கள்  ஜீவனையும்  உங்களுக்குக்  கொடுக்க  மனதாயிருந்தோம்.  (1தெசலோனிக்கேயர்  2:8)

naangga'l  ungga'lmeal  vaagnchaiyaayirunthu,  theavanudaiya  suviseashaththai  ungga'lukkuk  koduththathumallaamal,  neengga'l  engga'lukkup  piriyamaanavarga'laanapadiyinaalea,  engga'l  jeevanaiyum  ungga'lukkuk  kodukka  manathaayirunthoam.  (1thesaloanikkeayar  2:8)

சகோதரரே,  நாங்கள்  பட்ட  பிரயாசமும்  வருத்தமும்  உங்களுக்கு  ஞாபகமாயிருக்கும்;  உங்களில்  ஒருவனுக்கும்  பாரமாயிராதபடிக்கு,  இரவும்  பகலும்  நாங்கள்  வேலைசெய்து,  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களிடத்தில்  பிரசங்கித்தோம்.  (1தெசலோனிக்கேயர்  2:9)

sagoathararea,  naangga'l  patta  pirayaasamum  varuththamum  ungga'lukku  gnaabagamaayirukkum;  ungga'lil  oruvanukkum  baaramaayiraathapadikku,  iravum  pagalum  naangga'l  vealaiseythu,  theavanudaiya  suviseashaththai  ungga'lidaththil  pirasanggiththoam.  (1thesaloanikkeayar  2:9)

விசுவாசிகளாகிய  உங்களுக்குள்ளே  நாங்கள்  எவ்வளவு  பரிசுத்தமும்  நீதியும்  பிழையின்மையுமாய்  நடந்தோமென்பதற்கு  நீங்களும்  சாட்சி,  தேவனும்  சாட்சி.  (1தெசலோனிக்கேயர்  2:10)

visuvaasiga'laagiya  ungga'lukku'l'lea  naangga'l  evva'lavu  parisuththamum  neethiyum  pizhaiyinmaiyumaay  nadanthoamenbatha’rku  neengga'lum  saadchi,  theavanum  saadchi.  (1thesaloanikkeayar  2:10)

மேலும்,  தம்முடைய  ராஜ்யத்திற்கும்  மகிமைக்கும்  உங்களை  அழைத்த  தேவனுக்கு  நீங்கள்  பாத்திரராய்  நடக்கவேண்டுமென்று,  (1தெசலோனிக்கேயர்  2:11)

mealum,  thammudaiya  raajyaththi’rkum  magimaikkum  ungga'lai  azhaiththa  theavanukku  neengga'l  paaththiraraay  nadakkavea'ndumen’ru,  (1thesaloanikkeayar  2:11)

தகப்பன்  தன்  பிள்ளைகளுக்குச்  சொல்லுகிறதுபோல,  நாங்கள்  உங்களில்  ஒவ்வொருவனுக்கும்  புத்தியும்  தேறுதலும்  எச்சரிப்பும்  சொன்னதை  அறிந்திருக்கிறீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  2:12)

thagappan  than  pi'l'laiga'lukkuch  sollugi’rathupoala,  naangga'l  ungga'lil  ovvoruvanukkum  buththiyum  thea’ruthalum  echcharippum  sonnathai  a’rinthirukki’reerga'l.  (1thesaloanikkeayar  2:12)

ஆகையால்,  நீங்கள்  தேவவசனத்தை  எங்களாலே  கேள்விப்பட்டு  ஏற்றுக்கொண்டபோது,  அதை  மனுஷர்  வசனமாக  ஏற்றுக்கொள்ளாமல்,  தேவவசனமாகவே  ஏற்றுக்கொண்டதினாலே  நாங்கள்  இடைவிடாமல்  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்  செலுத்துகிறோம்;  அது  மெய்யாகவே  தேவவசனந்தான்,  விசுவாசிக்கிற  உங்களுக்குள்ளே  அது  பெலனும்  செய்கிறது.  (1தெசலோனிக்கேயர்  2:13)

aagaiyaal,  neengga'l  theavavasanaththai  engga'laalea  kea'lvippattu  eat’rukko'ndapoathu,  athai  manushar  vasanamaaga  eat’rukko'l'laamal,  theavavasanamaagavea  eat’rukko'ndathinaalea  naangga'l  idaividaamal  theavanukku  sthoaththiragn  seluththugi’roam;  athu  meyyaagavea  theavavasananthaan,  visuvaasikki’ra  ungga'lukku'l'lea  athu  belanum  seygi’rathu.  (1thesaloanikkeayar  2:13)

எப்படியெனில்,  சகோதரரே,  யூதேயா  தேசத்தில்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான  தேவனுடைய  சபைகளை  நீங்கள்  பின்பற்றினவர்களாகி,  அவர்கள்  யூதராலே  எப்படிப்  பாடுபட்டார்களோ,  அப்படியே  நீங்களும்  உங்கள்  சுய  ஜனங்களாலே  பாடுபட்டீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  2:14)

eppadiyenil,  sagoathararea,  yootheayaa  theasaththil  ki’risthu  iyeasuvukku'l'laana  theavanudaiya  sabaiga'lai  neengga'l  pinpat’rinavarga'laagi,  avarga'l  yootharaalea  eppadip  paadupattaarga'loa,  appadiyea  neengga'lum  ungga'l  suya  janangga'laalea  paadupatteerga'l.  (1thesaloanikkeayar  2:14)

அந்த  யூதர்கள்  கர்த்தராகிய  இயேசுவையும்,  தங்கள்  தீர்க்கதரிசிகளையும்  கொலைசெய்தவர்களும்,  எங்களைத்  துன்பப்படுத்தினவர்களும்,  தேவனுக்கேற்காதவர்களும்,  மனுஷர்  யாவருக்கும்  விரோதிகளுமாயிருந்து,  (1தெசலோனிக்கேயர்  2:15)

antha  yootharga'l  karththaraagiya  iyeasuvaiyum,  thangga'l  theerkkatharisiga'laiyum  kolaiseythavarga'lum,  engga'laith  thunbappaduththinavarga'lum,  theavanukkea’rkaathavarga'lum,  manushar  yaavarukkum  viroathiga'lumaayirunthu,  (1thesaloanikkeayar  2:15)

புறஜாதியார்  இரட்சிக்கப்படுவதற்கு  நாங்கள்  அவர்களோடே  பேசாதபடிக்குத்  தடைபண்ணுகிறார்கள்;  இவ்விதமாய்  எக்காலத்திலும்  தங்கள்  பாவங்களை  நிறைவாக்குகிறார்கள்;  அவர்கள்மேல்  கோபாக்கினை  பூரணமாய்  வந்திருக்கிறது.  (1தெசலோனிக்கேயர்  2:16)

pu’rajaathiyaar  iradchikkappaduvatha’rku  naangga'l  avarga'loadea  peasaathapadikkuth  thadaipa'n'nugi’raarga'l;  ivvithamaay  ekkaalaththilum  thangga'l  paavangga'lai  ni’raivaakkugi’raarga'l;  avarga'lmeal  koabaakkinai  poora'namaay  vanthirukki’rathu.  (1thesaloanikkeayar  2:16)

சகோதரரே,  நாங்கள்  இருதயத்தின்படி  உங்களோடிருந்து,  சரீரத்தின்படி  கொஞ்சக்காலம்  உங்களைவிட்டுப்  பிரிந்திருந்தபடியினாலே,  உங்கள்  முகத்தைப்  பார்க்கவேண்டுமென்று  மிகுந்த  ஆசையோடே  அதிகமாய்ப்  பிரயத்தனம்பண்ணினோம்.  (1தெசலோனிக்கேயர்  2:17)

sagoathararea,  naangga'l  iruthayaththinpadi  ungga'loadirunthu,  sareeraththinpadi  kognchakkaalam  ungga'laivittup  pirinthirunthapadiyinaalea,  ungga'l  mugaththaip  paarkkavea'ndumen’ru  miguntha  aasaiyoadea  athigamaayp  pirayaththanampa'n'ninoam.  (1thesaloanikkeayar  2:17)

ஆகையால்,  நாங்கள்  உங்களிடத்தில்  வர  இரண்டொருதரம்  மனதாயிருந்தோம்,  பவுலாகிய  நானே  வர  மனதாயிருந்தேன்;  சாத்தானோ  எங்களைத்  தடைபண்ணினான்.  (1தெசலோனிக்கேயர்  2:18)

aagaiyaal,  naangga'l  ungga'lidaththil  vara  ira'ndorutharam  manathaayirunthoam,  pavulaagiya  naanea  vara  manathaayirunthean;  saaththaanoa  engga'laith  thadaipa'n'ninaan.  (1thesaloanikkeayar  2:18)

எங்களுக்கு  நம்பிக்கையும்  சந்தோஷமும்  மகிழ்ச்சியின்  கிரீடமுமாயிருப்பவர்கள்  யார்?  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  வரும்போது  அவருடைய  சந்நிதானத்திலே  நீங்களல்லவா  அப்படியிருப்பீர்கள்;  (1தெசலோனிக்கேயர்  2:19)

engga'lukku  nambikkaiyum  santhoashamum  magizhchchiyin  kireedamumaayiruppavarga'l  yaar?  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthu  varumpoathu  avarudaiya  sannithaanaththilea  neengga'lallavaa  appadiyiruppeerga'l;  (1thesaloanikkeayar  2:19)

நீங்களே  எங்களுக்கு  மகிமையும்  சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  2:20)

neengga'lea  engga'lukku  magimaiyum  santhoashamumaayirukki’reerga'l.  (1thesaloanikkeayar  2:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!