Monday, June 06, 2016

1 Thesaloanikkeayar 1 | 1 தெசலோனிக்கேயர் 1 | 1 Thessalonians 1

பவுலும்,  சில்வானும்,  தீமோத்தேயும்,  பிதாவாகிய  தேவனுக்குள்ளும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்ளும்  இருக்கிற  தெசலோனிக்கேயர்  சபைக்கு  எழுதுகிறதாவது:  நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (1தெசலோனிக்கேயர்  1:1)

pavulum,  silvaanum,  theemoaththeayum,  pithaavaagiya  theavanukku'l'lum  karththaraagiya  iyeasuki’risthuvukku'l'lum  irukki’ra  thesaloanikkeayar  sabaikku  ezhuthugi’rathaavathu:  nammudaiya  pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (1thesaloanikkeayar  1:1)

தேவனுக்குப்  பிரியமான  சகோதரரே,  உங்கள்  விசுவாசத்தின்  கிரியையையும்,  உங்கள்  அன்பின்  பிரயாசத்தையும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள  உங்கள்  நம்பிக்கையின்  பொறுமையையும்,  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்குமுன்பாக  நாங்கள்  இடைவிடாமல்  நினைவுகூர்ந்து,  (1தெசலோனிக்கேயர்  1:2)

theavanukkup  piriyamaana  sagoathararea,  ungga'l  visuvaasaththin  kiriyaiyaiyum,  ungga'l  anbin  pirayaasaththaiyum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinmealu'l'la  ungga'l  nambikkaiyin  po’rumaiyaiyum,  nammudaiya  pithaavaagiya  theavanukkumunbaaga  naangga'l  idaividaamal  ninaivukoornthu,  (1thesaloanikkeayar  1:2)

நீங்கள்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று  நாங்கள்  அறிந்து,  (1தெசலோனிக்கேயர்  1:3)

neengga'l  therinthuko'l'lappattavarga'len’ru  naangga'l  a’rinthu,  (1thesaloanikkeayar  1:3)

எங்கள்  ஜெபங்களில்  இடைவிடாமல்  உங்களைக்குறித்து  விண்ணப்பம்பண்ணி,  உங்களெல்லாருக்காகவும்  எப்பொழுதும்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறோம்.  (1தெசலோனிக்கேயர்  1:4)

engga'l  jebangga'lil  idaividaamal  ungga'laikku’riththu  vi'n'nappampa'n'ni,  ungga'lellaarukkaagavum  eppozhuthum  theavanai  sthoaththirikki’roam.  (1thesaloanikkeayar  1:4)

எங்கள்  சுவிசேஷம்  உங்களிடத்தில்  வசனத்தோடேமாத்திரமல்ல,  வல்லமையோடும்,  பரிசுத்த  ஆவியோடும்,  முழு  நிச்சயத்தோடும்  வந்தது;  நாங்களும்  உங்களுக்குள்ளே  இருந்தபோது  உங்கள்நிமித்தம்  எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று  அறிந்திருக்கிறீர்களே.  (1தெசலோனிக்கேயர்  1:5)

engga'l  suviseasham  ungga'lidaththil  vasanaththoadeamaaththiramalla,  vallamaiyoadum,  parisuththa  aaviyoadum,  muzhu  nichchayaththoadum  vanthathu;  naangga'lum  ungga'lukku'l'lea  irunthapoathu  ungga'lnimiththam  eppadippattavarga'laayirunthoamen’ru  a’rinthirukki’reerga'lea.  (1thesaloanikkeayar  1:5)

நீங்கள்  மிகுந்த  உபத்திரவத்திலே,  பரிசுத்த  ஆவியின்  சந்தோஷத்தோடே,  திருவசனத்தை  ஏற்றுக்கொண்டு,  எங்களையும்  கர்த்தரையும்  பின்பற்றுகிறவர்களாகி,  (1தெசலோனிக்கேயர்  1:6)

neengga'l  miguntha  ubaththiravaththilea,  parisuththa  aaviyin  santhoashaththoadea,  thiruvasanaththai  eat’rukko'ndu,  engga'laiyum  karththaraiyum  pinpat’rugi’ravarga'laagi,  (1thesaloanikkeayar  1:6)

இவ்விதமாய்  மக்கெதோனியாவிலும்  அகாயாவிலுமுள்ள  விசுவாசிகள்  யாவருக்கும்  மாதிரிகளானீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  1:7)

ivvithamaay  makkethoaniyaavilum  akaayaavilumu'l'la  visuvaasiga'l  yaavarukkum  maathiriga'laaneerga'l.  (1thesaloanikkeayar  1:7)

எப்படியெனில்,  உங்களிடத்திலிருந்து  கர்த்தருடைய  வசனம்  மக்கெதோனியாவிலும்  அகாயாவிலும்  தொனித்ததுமல்லாமல்,  நாங்கள்  அதைக்குறித்து  ஒன்றும்  சொல்லவேண்டியதாயிராதபடிக்கு,  தேவனைப்பற்றின  உங்கள்  விசுவாசம்  எங்கும்  பிரசித்தமாயிற்று.  (1தெசலோனிக்கேயர்  1:8)

eppadiyenil,  ungga'lidaththilirunthu  karththarudaiya  vasanam  makkethoaniyaavilum  akaayaavilum  thoniththathumallaamal,  naangga'l  athaikku’riththu  on’rum  sollavea'ndiyathaayiraathapadikku,  theavanaippat’rina  ungga'l  visuvaasam  enggum  pirasiththamaayit’ru.  (1thesaloanikkeayar  1:8)

ஏனெனில்,  அவர்கள்தாமே  எங்களைக்குறித்து,  உங்களிடத்தில்  நாங்கள்  அடைந்த  பிரவேசம்  இன்னதென்பதையும்,  ஜீவனுள்ள  மெய்யான  தேவனுக்கு  ஊழியஞ்செய்வதற்கு,  நீங்கள்  விக்கிரகங்களைவிட்டுத்  தேவனிடத்திற்கு  மனந்திரும்பினதையும்,  (1தெசலோனிக்கேயர்  1:9)

eanenil,  avarga'lthaamea  engga'laikku’riththu,  ungga'lidaththil  naangga'l  adaintha  piraveasam  innathenbathaiyum,  jeevanu'l'la  meyyaana  theavanukku  oozhiyagnseyvatha’rku,  neengga'l  vikkiragangga'laivittuth  theavanidaththi’rku  mananthirumbinathaiyum,  (1thesaloanikkeayar  1:9)

அவர்  மரித்தோரிலிருந்தெழுப்பினவரும்,  இனிவரும்  கோபாக்கினையினின்று  நம்மை  நீங்கலாக்கி  இரட்சிக்கிறவருமாயிருக்கிற  அவருடைய  குமாரனாகிய  இயேசு  பரலோகத்திலிருந்து  வருவதை  நீங்கள்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும்,  அறிவிக்கிறார்களே.  (1தெசலோனிக்கேயர்  1:10)

avar  mariththoarilirunthezhuppinavarum,  inivarum  koabaakkinaiyinin’ru  nammai  neenggalaakki  iradchikki’ravarumaayirukki’ra  avarudaiya  kumaaranaagiya  iyeasu  paraloagaththilirunthu  varuvathai  neengga'l  ethirpaarththukko'ndirukki’rathaiyum,  a’rivikki’raarga'lea.  (1thesaloanikkeayar  1:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!