Wednesday, June 08, 2016

1 Theemoaththeayu 5 | 1 தீமோத்தேயு 5 | 1 Timothy 5

முதிர்வயதுள்ளவனைக்  கடிந்துகொள்ளாமல்,  அவனைத்  தகப்பனைப்போலவும்,  பாலிய  புருஷரைச்  சகோதரரைப்போலவும்,  (1தீமோத்தேயு  5:1)

muthirvayathu'l'lavanaik  kadinthuko'l'laamal,  avanaith  thagappanaippoalavum,  paaliya  purusharaich  sagoathararaippoalavum,  (1theemoaththeayu  5:1)

முதிர்வயதுள்ள  ஸ்திரீகளைத்  தாய்களைப்போலவும்,  பாலிய  ஸ்திரீகளை  எல்லாக்  கற்புடன்  சகோதரிகளைப்போலவும்  பாவித்து,  புத்திசொல்லு.  (1தீமோத்தேயு  5:2)

muthirvayathu'l'la  sthireega'laith  thaayga'laippoalavum,  paaliya  sthireega'lai  ellaak  ka’rpudan  sagoathariga'laippoalavum  paaviththu,  buththisollu.  (1theemoaththeayu  5:2)

உத்தம  விதவைகளாகிய  விதவைகளைக்  கனம்பண்ணு.  (1தீமோத்தேயு  5:3)

uththama  vithavaiga'laagiya  vithavaiga'laik  kanampa'n'nu.  (1theemoaththeayu  5:3)

விதவையானவளுக்குப்  பிள்ளைகளாவது,  பேரன்  பேர்த்திகளாவது  இருந்தால்,  இவர்கள்  முதலாவது  தங்கள்  சொந்தக்  குடும்பத்தைத்  தேவபக்தியாய்  விசாரித்து,  பெற்றார்  செய்த  நன்மைகளுக்குப்  பதில்  நன்மைகளைச்  செய்யக்  கற்றுக்கொள்ளக்கடவர்கள்;  அது  நன்மையும்  தேவனுக்கு  முன்பாகப்  பிரியமுமாயிருக்கிறது.  (1தீமோத்தேயு  5:4)

vithavaiyaanava'lukkup  pi'l'laiga'laavathu,  pearan  pearththiga'laavathu  irunthaal,  ivarga'l  muthalaavathu  thangga'l  sonthak  kudumbaththaith  theavabakthiyaay  visaariththu,  pet’raar  seytha  nanmaiga'lukkup  bathil  nanmaiga'laich  seyyak  kat’rukko'l'lakkadavarga'l;  athu  nanmaiyum  theavanukku  munbaagap  piriyamumaayirukki’rathu.  (1theemoaththeayu  5:4)

உத்தம  விதவையாயிருந்து  தனிமையாயிருக்கிறவள்  தேவனிடத்தில்  நம்பிக்கையுள்ளவளாய்,  இரவும்  பகலும்  வேண்டுதல்களிலும்  ஜெபங்களிலும்  நிலைத்திருப்பாள்.  (1தீமோத்தேயு  5:5)

uththama  vithavaiyaayirunthu  thanimaiyaayirukki’rava'l  theavanidaththil  nambikkaiyu'l'lava'laay,  iravum  pagalum  vea'nduthalga'lilum  jebangga'lilum  nilaiththiruppaa'l.  (1theemoaththeayu  5:5)

சுகபோகமாய்  வாழ்கிறவள்  உயிரோடே  செத்தவள்.  (1தீமோத்தேயு  5:6)

sugaboagamaay  vaazhgi’rava'l  uyiroadea  seththava'l.  (1theemoaththeayu  5:6)

அவர்கள்  குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி  இவைகளைக்  கட்டளையிடு.  (1தீமோத்தேயு  5:7)

avarga'l  kut’ragnsaattappadaathavarga'laayirukkumpadi  ivaiga'laik  katta'laiyidu.  (1theemoaththeayu  5:7)

ஒருவன்  தன்  சொந்த  ஜனங்களையும்,  விசேஷமாகத்  தன்  வீட்டாரையும்  விசாரியாமற்போனால்,  அவன்  விசுவாசத்தை  மறுதலித்தவனும்,  அவிசுவாசியிலும்  கெட்டவனுமாயிருப்பான்.  (1தீமோத்தேயு  5:8)

oruvan  than  sontha  janangga'laiyum,  viseashamaagath  than  veettaaraiyum  visaariyaama’rpoanaal,  avan  visuvaasaththai  ma’ruthaliththavanum,  avisuvaasiyilum  kettavanumaayiruppaan.  (1theemoaththeayu  5:8)

அறுபது  வயதுக்குக்  குறையாதவளும்,  ஒரே  புருஷனுக்கு  மனைவியாயிருந்தவளுமாகி,  (1தீமோத்தேயு  5:9)

a’rubathu  vayathukkuk  ku’raiyaathava'lum,  orea  purushanukku  manaiviyaayirunthava'lumaagi,  (1theemoaththeayu  5:9)

பிள்ளைகளை  வளர்த்து,  அந்நியரை  உபசரித்து,  பரிசுத்தவான்களுடைய  கால்களைக்கழுவி,  உபத்திரவப்படுகிறவர்களுக்கு  உதவிசெய்து,  சகலவித  நற்கிரியைகளையும்  ஜாக்கிரதையாய்  நடப்பித்து,  இவ்விதமாய்  நற்கிரியைகளைக்குறித்து  நற்சாட்சி  பெற்றவளுமாயிருந்தால்,  அப்படிப்பட்ட  விதவையையே  விதவைகள்  கூட்டத்தில்  சேர்த்துக்கொள்ளவேண்டும்.  (1தீமோத்தேயு  5:10)

pi'l'laiga'lai  va'larththu,  anniyarai  ubasariththu,  parisuththavaanga'ludaiya  kaalga'laikkazhuvi,  ubaththiravappadugi’ravarga'lukku  uthaviseythu,  sagalavitha  na’rkiriyaiga'laiyum  jaakkirathaiyaay  nadappiththu,  ivvithamaay  na’rkiriyaiga'laikku’riththu  na’rsaadchi  pet’rava'lumaayirunthaal,  appadippatta  vithavaiyaiyea  vithavaiga'l  koottaththil  searththukko'l'lavea'ndum.  (1theemoaththeayu  5:10)

இளவயதுள்ள  விதவைகளை  அதிலே  சேர்த்துக்கொள்ளாதே;  ஏனெனில்,  அவர்கள்  கிறிஸ்துவுக்கு  விரோதமாய்க்  காமவிகாரங்கொள்ளும்போது  விவாகம்பண்ண  மனதாகி,  (1தீமோத்தேயு  5:11)

i'lavayathu'l'la  vithavaiga'lai  athilea  searththukko'l'laathea;  eanenil,  avarga'l  ki’risthuvukku  viroathamaayk  kaamavigaarangko'l'lumpoathu  vivaagampa'n'na  manathaagi,  (1theemoaththeayu  5:11)

முதலில்  கொண்டிருந்த  விசுவாசத்தை  விடுவதினாலே,  ஆக்கினைக்குட்படுவார்கள்.  (1தீமோத்தேயு  5:12)

muthalil  ko'ndiruntha  visuvaasaththai  viduvathinaalea,  aakkinaikkudpaduvaarga'l.  (1theemoaththeayu  5:12)

அதுவுமல்லாமல்,  அவர்கள்  சோம்பலுள்ளவர்களாய்,  வீடுவீடாய்த்  திரியப்பழகுவார்கள்;  சோம்பலுள்ளவர்களாய்  மாத்திரமல்ல,  அலப்புகிறவர்களாயும்  வீணலுவற்காரிகளாயும்  தகாத  காரியங்களைப்  பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.  (1தீமோத்தேயு  5:13)

athuvumallaamal,  avarga'l  soambalu'l'lavarga'laay,  veeduveedaayth  thiriyappazhaguvaarga'l;  soambalu'l'lavarga'laay  maaththiramalla,  alappugi’ravarga'laayum  vee'naluva’rkaariga'laayum  thagaatha  kaariyangga'laip  peasugi’ravarga'laayumiruppaarga'l.  (1theemoaththeayu  5:13)

ஆகையால்  இளவயதுள்ள  விதவைகள்  விவாகம்பண்ணவும்,  பிள்ளைகளைப்  பெறவும்,  வீட்டை  நடத்தவும்,  விரோதியானவன்  நிந்திக்கிறதற்கு  இடமுண்டாக்காமலிருக்கவும்  வேண்டுமென்றிருக்கிறேன்.  (1தீமோத்தேயு  5:14)

aagaiyaal  i'lavayathu'l'la  vithavaiga'l  vivaagampa'n'navum,  pi'l'laiga'laip  pe’ravum,  veettai  nadaththavum,  viroathiyaanavan  ninthikki’ratha’rku  idamu'ndaakkaamalirukkavum  vea'ndumen’rirukki’rean.  (1theemoaththeayu  5:14)

ஏனெனில்  இதற்குமுன்னே  சிலர்  சாத்தானைப்  பின்பற்றி  விலகிப்போனார்கள்.  (1தீமோத்தேயு  5:15)

eanenil  itha’rkumunnea  silar  saaththaanaip  pinpat’ri  vilagippoanaarga'l.  (1theemoaththeayu  5:15)

விசுவாசியாகிய  ஒருவனிடத்திலாவது  ஒருத்தியிடத்திலாவது  விதவைகளிருந்தால்,  அவர்கள்  இவர்களுக்கு  உதவி  செய்யக்கடவர்கள்;  சபையானது  உத்தம  விதவைகளானவர்களுக்கு  உதவிசெய்யவேண்டியதாகையால்  அந்தப்  பாரத்தை  அதின்மேல்  வைக்கக்கூடாது.  (1தீமோத்தேயு  5:16)

visuvaasiyaagiya  oruvanidaththilaavathu  oruththiyidaththilaavathu  vithavaiga'lirunthaal,  avarga'l  ivarga'lukku  uthavi  seyyakkadavarga'l;  sabaiyaanathu  uththama  vithavaiga'laanavarga'lukku  uthaviseyyavea'ndiyathaagaiyaal  anthap  baaraththai  athinmeal  vaikkakkoodaathu.  (1theemoaththeayu  5:16)

நன்றாய்  விசாரணைசெய்கிற  மூப்பர்களை,  விசேஷமாகத்  திருவசனத்திலும்  உபதேசத்திலும்  பிரயாசப்படுகிறவர்களை,  இரட்டிப்பான  கனத்திற்குப்  பாத்திரராக  எண்ணவேண்டும்.  (1தீமோத்தேயு  5:17)

nan’raay  visaara'naiseygi’ra  moopparga'lai,  viseashamaagath  thiruvasanaththilum  ubatheasaththilum  pirayaasappadugi’ravarga'lai,  irattippaana  kanaththi’rkup  paaththiraraaga  e'n'navea'ndum.  (1theemoaththeayu  5:17)

போரடிக்கிற  மாட்டை  வாய்கட்டாயாக  என்றும்,  வேலையாள்  தன்  கூலிக்குப்  பாத்திரனாயிருக்கிறான்  என்றும்,  வேதவாக்கியம்  சொல்லுகிறதே.  (1தீமோத்தேயு  5:18)

poaradikki’ra  maattai  vaaykattaayaaga  en’rum,  vealaiyaa'l  than  koolikkup  paaththiranaayirukki’raan  en’rum,  veathavaakkiyam  sollugi’rathea.  (1theemoaththeayu  5:18)

மூப்பனானவனுக்கு  விரோதமாக  ஒருவன்  செய்யும்  பிராதை  இரண்டு  மூன்று  சாட்சிகள்  இல்லாமல்  நீ  ஏற்றுக்கொள்ளக்கூடாது.  (1தீமோத்தேயு  5:19)

mooppanaanavanukku  viroathamaaga  oruvan  seyyum  piraathai  ira'ndu  moon’ru  saadchiga'l  illaamal  nee  eat’rukko'l'lakkoodaathu.  (1theemoaththeayu  5:19)

மற்றவர்களுக்குப்  பயமுண்டாகும்படி,  பாவஞ்செய்தவர்களை  எல்லாருக்கும்  முன்பாகக்  கடிந்துகொள்.  (1தீமோத்தேயு  5:20)

mat’ravarga'lukkup  bayamu'ndaagumpadi,  paavagnseythavarga'lai  ellaarukkum  munbaagak  kadinthuko'l.  (1theemoaththeayu  5:20)

நீ  பட்சபாதத்தோடே  ஒன்றும்  செய்யாமலும்,  விசாரிக்குமுன்  நிருணயம்பண்ணாமலும்,  இவைகளைக்  காத்து  நடக்கும்படி,  தேவனுக்கும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கும்,  தெரிந்துகொள்ளப்பட்ட  தூதருக்கும்  முன்பாக,  உறுதியாய்க்  கட்டளையிடுகிறேன்.  (1தீமோத்தேயு  5:21)

nee  padchapaathaththoadea  on’rum  seyyaamalum,  visaarikkumun  niru'nayampa'n'naamalum,  ivaiga'laik  kaaththu  nadakkumpadi,  theavanukkum,  karththaraagiya  iyeasuki’risthuvukkum,  therinthuko'l'lappatta  thootharukkum  munbaaga,  u’ruthiyaayk  katta'laiyidugi’rean.  (1theemoaththeayu  5:21)

ஒருவன்மேலும்  சீக்கிரமாய்க்  கைகளை  வையாதே;  மற்றவர்கள்  செய்யும்  பாவங்களுக்கும்  உடன்படாதே;  உன்னைச்  சுத்தவானாகக்  காத்துக்கொள்.  (1தீமோத்தேயு  5:22)

oruvanmealum  seekkiramaayk  kaiga'lai  vaiyaathea;  mat’ravarga'l  seyyum  paavangga'lukkum  udanpadaathea;  unnaich  suththavaanaagak  kaaththukko'l.  (1theemoaththeayu  5:22)

நீ  இனிமேல்  தண்ணீர்  மாத்திரம்  குடியாமல்,  உன்  வயிற்றிற்காகவும்,  உனக்கு  அடிக்கடி  நேரிடுகிற  பலவீனங்களுக்காகவும்,  கொஞ்சம்  திராட்சரசமும்  கூட்டிக்கொள்.  (1தீமோத்தேயு  5:23)

nee  inimeal  tha'n'neer  maaththiram  kudiyaamal,  un  vayit’ri’rkaagavum,  unakku  adikkadi  nearidugi’ra  balaveenangga'lukkaagavum,  kogncham  thiraadcharasamum  koottikko'l.  (1theemoaththeayu  5:23)

சிலருடைய  பாவங்கள்  வெளியரங்கமாயிருந்து,  நியாயத்தீர்ப்புக்கு  முந்திக்கொள்ளும்;  சிலருடைய  பாவங்கள்  அவர்களைப்  பின்தொடரும்.  (1தீமோத்தேயு  5:24)

silarudaiya  paavangga'l  ve'liyaranggamaayirunthu,  niyaayaththeerppukku  munthikko'l'lum;  silarudaiya  paavangga'l  avarga'laip  pinthodarum.  (1theemoaththeayu  5:24)

அப்படியே  சிலருடைய  நற்கிரியைகளும்  வெளியரங்கமாயிருக்கும்;  அப்படி  இராதவைகளும்  மறைந்திருக்கமாட்டாது.  (1தீமோத்தேயு  5:25)

appadiyea  silarudaiya  na’rkiriyaiga'lum  ve'liyaranggamaayirukkum;  appadi  iraathavaiga'lum  ma’rainthirukkamaattaathu.  (1theemoaththeayu  5:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!