Wednesday, June 08, 2016

1 Theemoaththeayu 4 | 1 தீமோத்தேயு 4 | 1 Timothy 4

ஆகிலும்,  ஆவியானவர்  வெளிப்படையாய்ச்  சொல்லுகிறபடி,  பிற்காலங்களிலே  மனச்சாட்சியில்  சூடுண்ட  பொய்யருடைய  மாயத்தினாலே  சிலர்  வஞ்சிக்கிற  ஆவிகளுக்கும்  பிசாசுகளின்  உபதேசங்களுக்கும்  செவிகொடுத்து,  விசுவாசத்தை  விட்டு  விலகிப்போவார்கள்.  (1தீமோத்தேயு  4:1)

aagilum,  aaviyaanavar  ve'lippadaiyaaych  sollugi’rapadi,  pi’rkaalangga'lilea  manachsaadchiyil  soodu'nda  poyyarudaiya  maayaththinaalea  silar  vagnchikki’ra  aaviga'lukkum  pisaasuga'lin  ubatheasangga'lukkum  sevikoduththu,  visuvaasaththai  vittu  vilagippoavaarga'l.  (1theemoaththeayu  4:1)

விவாகம்பண்ணாதிருக்கவும்,  (1தீமோத்தேயு  4:2)

vivaagampa'n'naathirukkavum,  (1theemoaththeayu  4:2)

விசுவாசிகளும்  சத்தியத்தை  அறிந்தவர்களும்  ஸ்தோத்திரத்தோடே  அநுபவிக்கும்படி  தேவன்  படைத்த  போஜனபதார்த்தங்களை  விலக்கவும்  வேண்டுமென்று  அந்தப்  பொய்யர்  கட்டளையிடுவார்கள்.  (1தீமோத்தேயு  4:3)

visuvaasiga'lum  saththiyaththai  a’rinthavarga'lum  sthoaththiraththoadea  anubavikkumpadi  theavan  padaiththa  poajanapathaarththangga'lai  vilakkavum  vea'ndumen’ru  anthap  poyyar  katta'laiyiduvaarga'l.  (1theemoaththeayu  4:3)

தேவன்  படைத்ததெல்லாம்  நல்லதாயிருக்கிறது;  ஸ்தோத்திரத்தோடே  ஏற்றுக்கொள்ளப்படுமாகில்  ஒன்றும்  தள்ளப்படத்தக்கதல்ல.  (1தீமோத்தேயு  4:4)

theavan  padaiththathellaam  nallathaayirukki’rathu;  sthoaththiraththoadea  eat’rukko'l'lappadumaagil  on’rum  tha'l'lappadaththakkathalla.  (1theemoaththeayu  4:4)

அது  தேவவசனத்தினாலும்  ஜெபத்தினாலும்  பரிசுத்தமாக்கப்படும்.  (1தீமோத்தேயு  4:5)

athu  theavavasanaththinaalum  jebaththinaalum  parisuththamaakkappadum.  (1theemoaththeayu  4:5)

இவைகளை  நீ  சகோதரருக்குப்  போதித்துவந்தால்,  விசுவாசத்திற்குரிய  வார்த்தைகளிலும்  நீ  அநுசரித்த  நற்போதகத்திலும்  தேறினவனாகி,  இயேசுகிறிஸ்துவுக்கு  நல்ல  ஊழியக்காரனாயிருப்பாய்.  (1தீமோத்தேயு  4:6)

ivaiga'lai  nee  sagoathararukkup  poathiththuvanthaal,  visuvaasaththi’rkuriya  vaarththaiga'lilum  nee  anusariththa  na’rpoathagaththilum  thea’rinavanaagi,  iyeasuki’risthuvukku  nalla  oozhiyakkaaranaayiruppaay.  (1theemoaththeayu  4:6)

சீர்கேடும்  கிழவிகள்  பேச்சுமாயிருக்கிற  கட்டுக்கதைகளுக்கு  விலகி,  தேவ  பக்திக்கேதுவாக  முயற்சிபண்ணு.  (1தீமோத்தேயு  4:7)

seerkeadum  kizhaviga'l  peachchumaayirukki’ra  kattukkathaiga'lukku  vilagi,  theava  bakthikkeathuvaaga  muya’rchipa'n'nu.  (1theemoaththeayu  4:7)

சரீரமுயற்சி  அற்ப  பிரயோஜனமுள்ளது;  தேவபக்தியானது  இந்த  ஜீவனுக்கும்  இதற்குப்  பின்வரும்  ஜீவனுக்கும்  வாக்குத்தத்தமுள்ளதாகையால்  எல்லாவற்றிலும்  பிரயோஜனமுள்ளது.  (1தீமோத்தேயு  4:8)

sareeramuya’rchi  a’rpa  pirayoajanamu'l'lathu;  theavabakthiyaanathu  intha  jeevanukkum  itha’rkup  pinvarum  jeevanukkum  vaakkuththaththamu'l'lathaagaiyaal  ellaavat’rilum  pirayoajanamu'l'lathu.  (1theemoaththeayu  4:8)

இந்த  வார்த்தை  உண்மையும்  எல்லா  அங்கிகரிப்புக்கும்  பாத்திரமுமாயிருக்கிறது.  (1தீமோத்தேயு  4:9)

intha  vaarththai  u'nmaiyum  ellaa  anggigarippukkum  paaththiramumaayirukki’rathu.  (1theemoaththeayu  4:9)

இதினிமித்தம்  பிரயாசப்படுகிறோம்,  நிந்தையும்  அடைகிறோம்;  ஏனெனில்  எல்லா  மனுஷருக்கும்,  விசேஷமாக  விசுவாசிகளுக்கும்  இரட்சகராகிய  ஜீவனுள்ள  தேவன்மேல்  நம்பிக்கை  வைத்திருக்கிறோம்.  (1தீமோத்தேயு  4:10)

ithinimiththam  pirayaasappadugi’roam,  ninthaiyum  adaigi’roam;  eanenil  ellaa  manusharukkum,  viseashamaaga  visuvaasiga'lukkum  iradchagaraagiya  jeevanu'l'la  theavanmeal  nambikkai  vaiththirukki’roam.  (1theemoaththeayu  4:10)

இவைகளை  நீ  கட்டளையிட்டுப்  போதித்துக்கொண்டிரு.  (1தீமோத்தேயு  4:11)

ivaiga'lai  nee  katta'laiyittup  poathiththukko'ndiru.  (1theemoaththeayu  4:11)

உன்  இளமையைக்குறித்து  ஒருவனும்  உன்னை  அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ  வார்த்தையிலும்,  நடக்கையிலும்,  அன்பிலும்,  ஆவியிலும்,  விசுவாசத்திலும்,  கற்பிலும்,  விசுவாசிகளுக்கு  மாதிரியாயிரு.  (1தீமோத்தேயு  4:12)

un  i'lamaiyaikku’riththu  oruvanum  unnai  asattaipa'n'naathapadikku,  nee  vaarththaiyilum,  nadakkaiyilum,  anbilum,  aaviyilum,  visuvaasaththilum,  ka’rpilum,  visuvaasiga'lukku  maathiriyaayiru.  (1theemoaththeayu  4:12)

நான்  வருமளவும்  வாசிக்கிறதிலும்  புத்திசொல்லுகிறதிலும்  உபதேசிக்கிறதிலும்  ஜாக்கிரதையாயிரு.  (1தீமோத்தேயு  4:13)

naan  varuma'lavum  vaasikki’rathilum  buththisollugi’rathilum  ubatheasikki’rathilum  jaakkirathaiyaayiru.  (1theemoaththeayu  4:13)

மூப்பராகிய  சங்கத்தார்  உன்மேல்  கைகளை  வைத்தபோது  தீர்க்கதரிசனத்தினால்  உனக்கு  அளிக்கப்பட்ட  வரத்தைப்பற்றி  அசதியாயிராதே.  (1தீமோத்தேயு  4:14)

moopparaagiya  sanggaththaar  unmeal  kaiga'lai  vaiththapoathu  theerkkatharisanaththinaal  unakku  a'likkappatta  varaththaippat’ri  asathiyaayiraathea.  (1theemoaththeayu  4:14)

நீ  தேறுகிறது  யாவருக்கும்  விளங்கும்படி  இவைகளையே  சிந்தித்துக்கொண்டு,  இவைகளிலே  நிலைத்திரு.  (1தீமோத்தேயு  4:15)

nee  thea’rugi’rathu  yaavarukkum  vi'langgumpadi  ivaiga'laiyea  sinthiththukko'ndu,  ivaiga'lilea  nilaiththiru.  (1theemoaththeayu  4:15)

உன்னைக்குறித்தும்  உபதேசத்தைக்குறித்தும்  எச்சரிக்கையாயிரு,  இவைகளில்  நிலைகொண்டிரு,  இப்படிச்  செய்வாயானால்,  உன்னையும்  உன்  உபதேசத்தைக்  கேட்பவர்களையும்  இரட்சித்துக்கொள்ளுவாய்.  (1தீமோத்தேயு  4:16)

unnaikku’riththum  ubatheasaththaikku’riththum  echcharikkaiyaayiru,  ivaiga'lil  nilaiko'ndiru,  ippadich  seyvaayaanaal,  unnaiyum  un  ubatheasaththaik  keadpavarga'laiyum  iradchiththukko'l'luvaay.  (1theemoaththeayu  4:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!