Wednesday, June 08, 2016

1 Theemoaththeayu 2 | 1 தீமோத்தேயு 2 | 1 Timothy 2

நான்  பிரதானமாய்ச்  சொல்லுகிற  புத்தியென்னவெனில்,  எல்லா  மனுஷருக்காகவும்  விண்ணப்பங்களையும்  ஜெபங்களையும்  வேண்டுதல்களையும்  ஸ்தோத்திரங்களையும்  பண்ணவேண்டும்;  (1தீமோத்தேயு  2:1)

naan  pirathaanamaaych  sollugi’ra  buththiyennavenil,  ellaa  manusharukkaagavum  vi'n'nappangga'laiyum  jebangga'laiyum  vea'nduthalga'laiyum  sthoaththirangga'laiyum  pa'n'navea'ndum;  (1theemoaththeayu  2:1)

நாம்  எல்லாப்  பக்தியோடும்  நல்லொழுக்கத்தோடும்  கலகமில்லாமல்  அமைதலுள்ள  ஜீவனம்பண்ணும்படிக்கு,  ராஜாக்களுக்காகவும்,  அதிகாரமுள்ள  யாவருக்காகவும்  அப்படியே  செய்யவேண்டும்.  (1தீமோத்தேயு  2:2)

naam  ellaap  bakthiyoadum  nallozhukkaththoadum  kalagamillaamal  amaithalu'l'la  jeevanampa'n'numpadikku,  raajaakka'lukkaagavum,  athigaaramu'l'la  yaavarukkaagavum  appadiyea  seyyavea'ndum.  (1theemoaththeayu  2:2)

நம்முடைய  இரட்சகராகிய  தேவனுக்குமுன்பாக  அது  நன்மையும்  பிரியமுமாயிருக்கிறது.  (1தீமோத்தேயு  2:3)

nammudaiya  iradchagaraagiya  theavanukkumunbaaga  athu  nanmaiyum  piriyamumaayirukki’rathu.  (1theemoaththeayu  2:3)

எல்லா  மனுஷரும்  இரட்சிக்கப்படவும்,  சத்தியத்தை  அறிகிற  அறிவை  அடையவும்,  அவர்  சித்தமுள்ளவராயிருக்கிறார்.  (1தீமோத்தேயு  2:4)

ellaa  manusharum  iradchikkappadavum,  saththiyaththai  a’rigi’ra  a’rivai  adaiyavum,  avar  siththamu'l'lavaraayirukki’raar.  (1theemoaththeayu  2:4)

தேவன்  ஒருவரே,  தேவனுக்கும்  மனுஷருக்கும்  மத்தியஸ்தரும்  ஒருவரே.  (1தீமோத்தேயு  2:5)

theavan  oruvarea,  theavanukkum  manusharukkum  maththiyastharum  oruvarea.  (1theemoaththeayu  2:5)

எல்லாரையும்  மீட்கும்பொருளாகத்  தம்மை  ஒப்புக்கொடுத்த  மனுஷனாகிய  கிறிஸ்து  இயேசு  அவரே;  இதற்குரிய  சாட்சி  ஏற்ற  காலங்களில்  விளங்கிவருகிறது.  (1தீமோத்தேயு  2:6)

ellaaraiyum  meedkumporu'laagath  thammai  oppukkoduththa  manushanaagiya  ki’risthu  iyeasu  avarea;  itha’rkuriya  saadchi  eat’ra  kaalangga'lil  vi'langgivarugi’rathu.  (1theemoaththeayu  2:6)

இதற்காகவே  நான்  பிரசங்கியாகவும்,  அப்போஸ்தலனாகவும்,  புறஜாதிகளுக்கு  விசுவாசத்தையும்  சத்தியத்தையும்  விளங்கப்பண்ணுகிற  போதகனாகவும்  நியமிக்கப்பட்டிருக்கிறேன்;  நான்  பொய்  சொல்லாமல்  கிறிஸ்துவுக்குள்  உண்மையைச்  சொல்லுகிறேன்.  (1தீமோத்தேயு  2:7)

itha’rkaagavea  naan  pirasanggiyaagavum,  appoasthalanaagavum,  pu’rajaathiga'lukku  visuvaasaththaiyum  saththiyaththaiyum  vi'langgappa'n'nugi’ra  poathaganaagavum  niyamikkappattirukki’rean;  naan  poy  sollaamal  ki’risthuvukku'l  u'nmaiyaich  sollugi’rean.  (1theemoaththeayu  2:7)

அன்றியும்,  புருஷர்கள்  கோபமும்  தர்க்கமுமில்லாமல்  பரிசுத்தமான  கைகளை  உயர்த்தி,  எல்லா  இடங்களிலேயும்  ஜெபம்பண்ணவேண்டுமென்று  விரும்புகிறேன்.  (1தீமோத்தேயு  2:8)

an’riyum,  purusharga'l  koabamum  tharkkamumillaamal  parisuththamaana  kaiga'lai  uyarththi,  ellaa  idangga'lileayum  jebampa'n'navea'ndumen’ru  virumbugi’rean.  (1theemoaththeayu  2:8)

ஸ்திரீகளும்  மயிரைப்  பின்னுதலினாலாவது,  பொன்னினாலாவது,  முத்துக்களினாலாவது,  விலையேறப்பெற்ற  வஸ்திரத்தினாலாவது  தங்களை  அலங்கரியாமல்,  (1தீமோத்தேயு  2:9)

sthireega'lum  mayiraip  pinnuthalinaalaavathu,  ponninaalaavathu,  muththukka'linaalaavathu,  vilaiyea’rappet’ra  vasthiraththinaalaavathu  thangga'lai  alanggariyaamal,  (1theemoaththeayu  2:9)

தகுதியான  வஸ்திரத்தினாலும்,  நாணத்தினாலும்,  தெளிந்த  புத்தியினாலும்,  தேவபக்தியுள்ளவர்களென்று  சொல்லிக்கொள்ளுகிற  ஸ்திரீகளுக்கு  ஏற்றபடியே  நற்கிரியைகளினாலும்,  தங்களை  அலங்கரிக்கவேண்டும்.  (1தீமோத்தேயு  2:10)

thaguthiyaana  vasthiraththinaalum,  naa'naththinaalum,  the'lintha  buththiyinaalum,  theavabakthiyu'l'lavarga'len’ru  sollikko'l'lugi’ra  sthireega'lukku  eat’rapadiyea  na’rkiriyaiga'linaalum,  thangga'lai  alanggarikkavea'ndum.  (1theemoaththeayu  2:10)

ஸ்திரீயானவள்  எல்லாவற்றிலும்  அடக்கமுடையவளாயிருந்து,  அமைதலோடு  கற்றுக்கொள்ளக்கடவள்.  (1தீமோத்தேயு  2:11)

sthireeyaanava'l  ellaavat’rilum  adakkamudaiyava'laayirunthu,  amaithaloadu  kat’rukko'l'lakkadava'l.  (1theemoaththeayu  2:11)

உபதேசம்பண்ணவும்,  புருஷன்மேல்  அதிகாரஞ்  செலுத்தவும்,  ஸ்திரீயானவளுக்கு  நான்  உத்தரவு  கொடுக்கிறதில்லை;  அவள்  அமைதலாயிருக்கவேண்டும்.  (1தீமோத்தேயு  2:12)

ubatheasampa'n'navum,  purushanmeal  athigaaragn  seluththavum,  sthireeyaanava'lukku  naan  uththaravu  kodukki’rathillai;  ava'l  amaithalaayirukkavea'ndum.  (1theemoaththeayu  2:12)

என்னத்தினாலெனில்,  முதலாவது  ஆதாம்  உருவாக்கப்பட்டான்,  பின்பு  ஏவாள்  உருவாக்கப்பட்டாள்.  (1தீமோத்தேயு  2:13)

ennaththinaalenil,  muthalaavathu  aathaam  uruvaakkappattaan,  pinbu  eavaa'l  uruvaakkappattaa'l.  (1theemoaththeayu  2:13)

மேலும்,  ஆதாம்  வஞ்சிக்கப்படவில்லை,  ஸ்திரீயானவளே  வஞ்சிக்கப்பட்டு  மீறுதலுக்கு  உட்பட்டாள்.  (1தீமோத்தேயு  2:14)

mealum,  aathaam  vagnchikkappadavillai,  sthireeyaanava'lea  vagnchikkappattu  mee’ruthalukku  udpattaa'l.  (1theemoaththeayu  2:14)

அப்படியிருந்தும்,  தெளிந்த  புத்தியோடு  விசுவாசத்திலும்  அன்பிலும்  பரிசுத்தத்திலும்  நிலைகொண்டிருந்தால்,  பிள்ளைப்பேற்றினாலே  இரட்சிக்கப்படுவாள்.  (1தீமோத்தேயு  2:15)

appadiyirunthum,  the'lintha  buththiyoadu  visuvaasaththilum  anbilum  parisuththaththilum  nilaiko'ndirunthaal,  pi'l'laippeat’rinaalea  iradchikkappaduvaa'l.  (1theemoaththeayu  2:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!