Saturday, June 11, 2016

1 Peathuru 3 | 1 பேதுரு 3 | 1 Peter 3

அந்தப்படி  மனைவிகளே,  உங்கள்  சொந்தப்  புருஷர்களுக்குக்  கீழ்ப்படிந்திருங்கள்;  அப்பொழுது  அவர்களில்  யாராவது  திருவசனத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களாயிருந்தால்,  பயபக்தியோடு  கூடிய  உங்கள்  கற்புள்ள  நடக்கையை  அவர்கள்  பார்த்து,  (1பேதுரு  3:1)

anthappadi  manaiviga'lea,  ungga'l  sonthap  purusharga'lukkuk  keezhppadinthirungga'l;  appozhuthu  avarga'lil  yaaraavathu  thiruvasanaththi’rkuk  keezhppadiyaathavarga'laayirunthaal,  bayabakthiyoadu  koodiya  ungga'l  ka’rpu'l'la  nadakkaiyai  avarga'l  paarththu,  (1peathuru  3:1)

போதனையின்றி,  மனைவிகளின்  நடக்கையினாலேயே  ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.  (1பேதுரு  3:2)

poathanaiyin’ri,  manaiviga'lin  nadakkaiyinaaleayea  aathaayappaduththikko'l'lappaduvaarga'l.  (1peathuru  3:2)

மயிரைப்  பின்னி,  பொன்னாபரணங்களை  அணிந்து,  உயர்ந்த  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்ளுதலாகிய  புறம்பான  அலங்கரிப்பு  உங்களுக்கு  அலங்காரமாயிராமல்,  (1பேதுரு  3:3)

mayiraip  pinni,  ponnaabara'nangga'lai  a'ninthu,  uyarntha  vasthirangga'lai  uduththikko'l'luthalaagiya  pu’rambaana  alanggarippu  ungga'lukku  alanggaaramaayiraamal,  (1peathuru  3:3)

அழியாத  அலங்கரிப்பாயிருக்கிற  சாந்தமும்  அமைதலுமுள்ள  ஆவியாகிய  இருதயத்தில்  மறைந்திருக்கிற  குணமே  உங்களுக்கு  அலங்காரமாயிருக்கக்கடவது;  அதுவே  தேவனுடைய  பார்வையில்  விலையேறப்பெற்றது.  (1பேதுரு  3:4)

azhiyaatha  alanggarippaayirukki’ra  saanthamum  amaithalumu'l'la  aaviyaagiya  iruthayaththil  ma’rainthirukki’ra  ku'namea  ungga'lukku  alanggaaramaayirukkakkadavathu;  athuvea  theavanudaiya  paarvaiyil  vilaiyea’rappet’rathu.  (1peathuru  3:4)

இப்படியே  பூர்வத்தில்  தேவனிடத்தில்  நம்பிக்கையாயிருந்த  பரிசுத்த  ஸ்திரீகளும்  தங்களுடைய  புருஷர்களுக்குக்  கீழ்ப்படிந்து  தங்களை  அலங்கரித்தார்கள்.  (1பேதுரு  3:5)

ippadiyea  poorvaththil  theavanidaththil  nambikkaiyaayiruntha  parisuththa  sthireega'lum  thangga'ludaiya  purusharga'lukkuk  keezhppadinthu  thangga'lai  alanggariththaarga'l.  (1peathuru  3:5)

அந்தப்படியே  சாராள்  ஆபிரகாமை  ஆண்டவன்  என்று  சொல்லி,  அவனுக்குக்  கீழ்ப்படிந்திருந்தாள்;  நீங்கள்  நன்மைசெய்து  ஒரு  ஆபத்துக்கும்  பயப்படாதிருந்தீர்களானால்  அவளுக்குப்  பிள்ளைகளாயிருப்பீர்கள்.  (1பேதுரு  3:6)

anthappadiyea  saaraa'l  aabirahaamai  aa'ndavan  en’ru  solli,  avanukkuk  keezhppadinthirunthaa'l;  neengga'l  nanmaiseythu  oru  aabaththukkum  bayappadaathiruntheerga'laanaal  ava'lukkup  pi'l'laiga'laayiruppeerga'l.  (1peathuru  3:6)

அந்தப்படி  புருஷர்களே,  மனைவியானவள்  பெலவீன  பாண்டமாயிருக்கிறபடியினால்,  உங்கள்  ஜெபங்களுக்குத்  தடைவராதபடிக்கு,  நீங்கள்  விவேகத்தோடு  அவர்களுடனே  வாழ்ந்து,  உங்களுடனேகூட  அவர்களும்  நித்திய  ஜீவனாகிய  கிருபையைச்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால்,  அவர்களுக்குச்  செய்யவேண்டிய  கனத்தைச்  செய்யுங்கள்.  (1பேதுரு  3:7)

anthappadi  purusharga'lea,  manaiviyaanava'l  belaveena  paa'ndamaayirukki’rapadiyinaal,  ungga'l  jebangga'lukkuth  thadaivaraathapadikku,  neengga'l  viveagaththoadu  avarga'ludanea  vaazhnthu,  ungga'ludaneakooda  avarga'lum  niththiya  jeevanaagiya  kirubaiyaich  suthanthariththukko'l'lugi’ravarga'laanapadiyinaal,  avarga'lukkuch  seyyavea'ndiya  kanaththaich  seyyungga'l.  (1peathuru  3:7)

மேலும்,  நீங்களெல்லாரும்  ஒருமனப்பட்டவர்களும்,  இரக்கமுள்ளவர்களும்,  சகோதர  சிநேகமுள்ளவர்களும்,  மனஉருக்கமுள்ளவர்களும்,  இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,  (1பேதுரு  3:8)

mealum,  neengga'lellaarum  orumanappattavarga'lum,  irakkamu'l'lavarga'lum,  sagoathara  sineagamu'l'lavarga'lum,  manaurukkamu'l'lavarga'lum,  i'nakkamu'l'lavarga'lumaayirunthu,  (1peathuru  3:8)

தீமைக்குத்  தீமையையும்,  உதாசனத்துக்கு  உதாசனத்தையும்  சரிக்கட்டாமல்,  அதற்குப்  பதிலாக,  நீங்கள்  ஆசீர்வாதத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று  அறிந்து,  ஆசீர்வதியுங்கள்.  (1பேதுரு  3:9)

theemaikkuth  theemaiyaiyum,  uthaasanaththukku  uthaasanaththaiyum  sarikkattaamal,  atha’rkup  bathilaaga,  neengga'l  aaseervaathaththaich  suthanthariththukko'l'lumpadi  azhaikkappattirukki’ravarga'len’ru  a’rinthu,  aaseervathiyungga'l.  (1peathuru  3:9)

ஜீவனை  விரும்பி,  நல்ல  நாட்களைக்  காணவேண்டுமென்றிருக்கிறவன்  பொல்லாப்புக்குத்  தன்  நாவையும்,  கபடத்துக்குத்  தன்  உதடுகளையும்  விலக்கிக்காத்து,  (1பேதுரு  3:10)

jeevanai  virumbi,  nalla  naadka'laik  kaa'navea'ndumen’rirukki’ravan  pollaappukkuth  than  naavaiyum,  kabadaththukkuth  than  uthaduga'laiyum  vilakkikkaaththu,  (1peathuru  3:10)

பொல்லாப்பைவிட்டு  நீங்கி,  நன்மைசெய்து,  சமாதானத்தைத்  தேடி,  அதைப்  பின்தொடரக்கடவன்.  (1பேதுரு  3:11)

pollaappaivittu  neenggi,  nanmaiseythu,  samaathaanaththaith  theadi,  athaip  pinthodarakkadavan.  (1peathuru  3:11)

கர்த்தருடைய  கண்கள்  நீதிமான்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது,  அவருடைய  செவிகள்  அவர்கள்  வேண்டுதலுக்குக்  கவனமாயிருக்கிறது;  தீமைசெய்கிறவர்களுக்கோ  கர்த்தருடைய  முகம்  விரோதமாயிருக்கிறது.  (1பேதுரு  3:12)

karththarudaiya  ka'nga'l  neethimaanga'lmeal  noakkamaayirukki’rathu,  avarudaiya  seviga'l  avarga'l  vea'nduthalukkuk  kavanamaayirukki’rathu;  theemaiseygi’ravarga'lukkoa  karththarudaiya  mugam  viroathamaayirukki’rathu.  (1peathuru  3:12)

நீங்கள்  நன்மையைப்  பின்பற்றுகிறவர்களானால்,  உங்களுக்குத்  தீமைசெய்கிறவன்  யார்?  (1பேதுரு  3:13)

neengga'l  nanmaiyaip  pinpat’rugi’ravarga'laanaal,  ungga'lukkuth  theemaiseygi’ravan  yaar?  (1peathuru  3:13)

நீதியினிமித்தமாக  நீங்கள்  பாடுபட்டால்  பாக்கியவான்களாயிருப்பீர்கள்;  அவர்களுடைய  பயமுறுத்தலுக்கு  நீங்கள்  பயப்படாமலும்  கலங்காமலும்  இருந்து;  (1பேதுரு  3:14)

neethiyinimiththamaaga  neengga'l  paadupattaal  baakkiyavaanga'laayiruppeerga'l;  avarga'ludaiya  bayamu’ruththalukku  neengga'l  bayappadaamalum  kalanggaamalum  irunthu;  (1peathuru  3:14)

கர்த்தராகிய  தேவனை  உங்கள்  இருதயங்களில்  பரிசுத்தம்பண்ணுங்கள்;  உங்களிலிருக்கிற  நம்பிக்கையைக்குறித்து  உங்களிடத்தில்  விசாரித்துக்  கேட்கிற  யாவருக்கும்  சாந்தத்தோடும்  வணக்கத்தோடும்  உத்தரவுசொல்ல  எப்பொழுதும்  ஆயத்தமாயிருங்கள்.  (1பேதுரு  3:15)

karththaraagiya  theavanai  ungga'l  iruthayangga'lil  parisuththampa'n'nungga'l;  ungga'lilirukki’ra  nambikkaiyaikku’riththu  ungga'lidaththil  visaariththuk  keadki’ra  yaavarukkum  saanthaththoadum  va'nakkaththoadum  uththaravusolla  eppozhuthum  aayaththamaayirungga'l.  (1peathuru  3:15)

கிறிஸ்துவுக்கேற்ற  உங்கள்  நல்ல  நடக்கையைத்  தூஷிக்கிறவர்கள்  உங்களை  அக்கிரமக்காரரென்று  உங்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிற  விஷயத்தில்  வெட்கப்படும்படிக்கு  நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.  (1பேதுரு  3:16)

ki’risthuvukkeat’ra  ungga'l  nalla  nadakkaiyaith  thooshikki’ravarga'l  ungga'lai  akkiramakkaararen’ru  ungga'lukku  viroathamaaych  sollugi’ra  vishayaththil  vedkappadumpadikku  nalmanachsaadchiyudaiyavarga'laayirungga'l.  (1peathuru  3:16)

தீமைசெய்து  பாடநுபவிப்பதிலும்,  தேவனுக்குச்  சித்தமானால்,  நன்மைசெய்து  பாடநுபவிப்பதே  மேன்மையாயிருக்கும்.  (1பேதுரு  3:17)

theemaiseythu  paadanubavippathilum,  theavanukkuch  siththamaanaal,  nanmaiseythu  paadanubavippathea  meanmaiyaayirukkum.  (1peathuru  3:17)

ஏனெனில்,  கிறிஸ்துவும்  நம்மைத்  தேவனிடத்தில்  சேர்க்கும்படி  அநீதியுள்ளவர்களுக்குப்  பதிலாக  நீதியுள்ளவராய்ப்  பாவங்களினிமித்தம்  ஒருதரம்  பாடுபட்டார்;  அவர்  மாம்சத்திலே  கொலையுண்டு,  ஆவியிலே  உயிர்ப்பிக்கப்பட்டார்.  (1பேதுரு  3:18)

eanenil,  ki’risthuvum  nammaith  theavanidaththil  searkkumpadi  aneethiyu'l'lavarga'lukkup  bathilaaga  neethiyu'l'lavaraayp  paavangga'linimiththam  orutharam  paadupattaar;  avar  maamsaththilea  kolaiyu'ndu,  aaviyilea  uyirppikkappattaar.  (1peathuru  3:18)

அந்த  ஆவியிலே  அவர்  போய்க்  காவலிலுள்ள  ஆவிகளுக்குப்  பிரசங்கித்தார்.  (1பேதுரு  3:19)

antha  aaviyilea  avar  poayk  kaavalilu'l'la  aaviga'lukkup  pirasanggiththaar.  (1peathuru  3:19)

அந்த  ஆவிகள்,  பூர்வத்திலே  நோவா  பேழையை  ஆயத்தம்பண்ணும்  நாட்களிலே,  தேவன்  நீடிய  பொறுமையோடே  காத்திருந்தபோது,  கீழ்ப்படியாமற்  போனவைகள்;  அந்தப்  பேழையிலே  சிலராகிய  எட்டுப்பேர்மாத்திரம்  பிரவேசித்து  ஜலத்தினாலே  காக்கப்பட்டார்கள்.  (1பேதுரு  3:20)

antha  aaviga'l,  poorvaththilea  noavaa  peazhaiyai  aayaththampa'n'num  naadka'lilea,  theavan  neediya  po’rumaiyoadea  kaaththirunthapoathu,  keezhppadiyaama’r  poanavaiga'l;  anthap  peazhaiyilea  silaraagiya  ettuppearmaaththiram  piraveasiththu  jalaththinaalea  kaakkappattaarga'l.  (1peathuru  3:20)

அதற்கு  ஒப்பனையான  ஞானஸ்நானமானது,  மாம்ச  அழுக்கை  நீக்குதலாயிராமல்,  தேவனைப்பற்றும்  நல்மனச்சாட்சியின்  உடன்படிக்கையாயிருந்து,  இப்பொழுது  நம்மையும்  இயேசுகிறிஸ்துவினுடைய  உயிர்த்தெழுதலினால்  இரட்சிக்கிறது;  (1பேதுரு  3:21)

atha’rku  oppanaiyaana  gnaanasnaanamaanathu,  maamsa  azhukkai  neekkuthalaayiraamal,  theavanaippat’rum  nalmanachsaadchiyin  udanpadikkaiyaayirunthu,  ippozhuthu  nammaiyum  iyeasuki’risthuvinudaiya  uyirththezhuthalinaal  iradchikki’rathu;  (1peathuru  3:21)

அவர்  பரலோகத்திற்குப்  போய்,  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  இருக்கிறார்;  தேவதூதர்களும்  அதிகாரங்களும்  வல்லமைகளும்  அவருக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறது.  (1பேதுரு  3:22)

avar  paraloagaththi’rkup  poay,  theavanudaiya  valathupaarisaththil  irukki’raar;  theavathootharga'lum  athigaarangga'lum  vallamaiga'lum  avarukkuk  keezhppattirukki’rathu.  (1peathuru  3:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!