Friday, June 10, 2016

1 Peathuru 1 | 1 பேதுரு 1 | 1 Peter 1

இயேசுகிறிஸ்துவின்  அப்போஸ்தலனாகிய  பேதுரு,  பொந்து,  கலாத்தியா,  கப்பத்தோக்கியா,  ஆசியா,  பித்தினியா  தேசங்களிலே  சிதறியிருக்கிறவர்களில்,  (1பேதுரு  1:1)

iyeasuki’risthuvin  appoasthalanaagiya  peathuru,  ponthu,  kalaaththiyaa,  kappaththoakkiyaa,  aasiyaa,  biththiniyaa  theasangga'lilea  sitha’riyirukki’ravarga'lil,  (1peathuru  1:1)

பிதாவாகிய  தேவனுடைய  முன்னறிவின்படியே,  ஆவியானவரின்  பரிசுத்தமாக்குதலினாலே,  கீழ்ப்படிதலுக்கும்  இயேசுகிறிஸ்துவினுடைய  இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும்  தெரிந்துகொள்ளப்பட்ட  பரதேசிகளுக்கு  எழுதுகிறதாவது:  கிருபையும்  சமாதானமும்  உங்களுக்குப்  பெருகக்கடவது.  (1பேதுரு  1:2)

pithaavaagiya  theavanudaiya  munna’rivinpadiyea,  aaviyaanavarin  parisuththamaakkuthalinaalea,  keezhppadithalukkum  iyeasuki’risthuvinudaiya  iraththanthe'likkappaduthalukkum  therinthuko'l'lappatta  paratheasiga'lukku  ezhuthugi’rathaavathu:  kirubaiyum  samaathaanamum  ungga'lukkup  perugakkadavathu.  (1peathuru  1:2)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  பிதாவாகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக;  (1பேதுரு  1:3)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  pithaavaagiya  theavanukku  sthoaththiram  u'ndaavathaaga;  (1peathuru  1:3)

அவர்,  இயேசுகிறிஸ்து  மரித்தோரிலிருந்து  எழுந்ததினாலே,  அழியாததும்  மாசற்றதும்  வாடாததுமாகிய  சுதந்தரத்திற்கேதுவாக,  ஜீவனுள்ள  நம்பிக்கை  உண்டாகும்படி,  தமது  மிகுந்த  இரக்கத்தின்படியே  நம்மை  மறுபடியும்  ஜெநிப்பித்தார்.  (1பேதுரு  1:4)

avar,  iyeasuki’risthu  mariththoarilirunthu  ezhunthathinaalea,  azhiyaathathum  maasat’rathum  vaadaathathumaagiya  suthantharaththi’rkeathuvaaga,  jeevanu'l'la  nambikkai  u'ndaagumpadi,  thamathu  miguntha  irakkaththinpadiyea  nammai  ma’rupadiyum  jenippiththaar.  (1peathuru  1:4)

கடைசிக்காலத்திலே  வெளிப்பட  ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற  இரட்சிப்புக்கு  ஏதுவாக  விசுவாசத்தைக்கொண்டு  தேவனுடைய  பலத்தினாலே  காக்கப்பட்டிருக்கிற  உங்களுக்கு  அந்தச்  சுதந்தரம்  பரலோகத்தில்  வைக்கப்பட்டிருக்கிறது.  (1பேதுரு  1:5)

kadaisikkaalaththilea  ve'lippada  aayaththamaakkappattirukki’ra  iradchippukku  eathuvaaga  visuvaasaththaikko'ndu  theavanudaiya  balaththinaalea  kaakkappattirukki’ra  ungga'lukku  anthach  suthantharam  paraloagaththil  vaikkappattirukki’rathu.  (1peathuru  1:5)

இதிலே  நீங்கள்  மிகவும்  சந்தோஷப்படுகிறீர்கள்;  என்றாலும்,  துன்பப்படவேண்டியது  அவசியமானதால்,  இப்பொழுது  கொஞ்சக்காலம்  பலவிதமான  சோதனைகளினாலே  துக்கப்படுகிறீர்கள்.  (1பேதுரு  1:6)

ithilea  neengga'l  migavum  santhoashappadugi’reerga'l;  en’raalum,  thunbappadavea'ndiyathu  avasiyamaanathaal,  ippozhuthu  kognchakkaalam  palavithamaana  soathanaiga'linaalea  thukkappadugi’reerga'l.  (1peathuru  1:6)

அழிந்துபோகிற  பொன்  அக்கினியினாலே  சோதிக்கப்படும்;  அதைப்பார்க்கிலும்  அதிக  விலையேறப்பெற்றதாயிருக்கிற  உங்கள்  விசுவாசம்  சோதிக்கப்பட்டு,  இயேசுகிறிஸ்து  வெளிப்படும்போது  உங்களுக்குப்  புகழ்ச்சியும்  கனமும்  மகிமையுமுண்டாகக்  காணப்படும்.  (1பேதுரு  1:7)

azhinthupoagi’ra  pon  akkiniyinaalea  soathikkappadum;  athaippaarkkilum  athiga  vilaiyea’rappet’rathaayirukki’ra  ungga'l  visuvaasam  soathikkappattu,  iyeasuki’risthu  ve'lippadumpoathu  ungga'lukkup  pugazhchchiyum  kanamum  magimaiyumu'ndaagak  kaa'nappadum.  (1peathuru  1:7)

அவரை  நீங்கள்  காணாமலிருந்தும்  அவரிடத்தில்  அன்புகூருகிறீர்கள்;  இப்பொழுது  அவரைத்  தரிசியாமலிருந்தும்  அவரிடத்தில்  விசுவாசம்  வைத்து,  சொல்லிமுடியாததும்  மகிமையால்  நிறைந்ததுமாயிருக்கிற  சந்தோஷமுள்ளவர்களாய்க்  களிகூர்ந்து,  (1பேதுரு  1:8)

avarai  neengga'l  kaa'naamalirunthum  avaridaththil  anbukoorugi’reerga'l;  ippozhuthu  avaraith  tharisiyaamalirunthum  avaridaththil  visuvaasam  vaiththu,  sollimudiyaathathum  magimaiyaal  ni’rainthathumaayirukki’ra  santhoashamu'l'lavarga'laayk  ka'likoornthu,  (1peathuru  1:8)

உங்கள்  விசுவாசத்தின்  பலனாகிய  ஆத்துமரட்சிப்பை  அடைகிறீர்கள்.  (1பேதுரு  1:9)

ungga'l  visuvaasaththin  palanaagiya  aaththumaradchippai  adaigi’reerga'l.  (1peathuru  1:9)

உங்களுக்கு  உண்டான  கிருபையைக்  குறித்துத்  தீர்க்கதரிசனஞ்சொன்ன  தீர்க்கதரிசிகள்  இந்த  இரட்சிப்பைக்குறித்துக்  கருத்தாய்  ஆராய்ந்து  பரிசோதனைபண்ணினார்கள்;  (1பேதுரு  1:10)

ungga'lukku  u'ndaana  kirubaiyaik  ku’riththuth  theerkkatharisanagnsonna  theerkkatharisiga'l  intha  iradchippaikku’riththuk  karuththaay  aaraaynthu  parisoathanaipa'n'ninaarga'l;  (1peathuru  1:10)

தங்களிலுள்ள  கிறிஸ்துவின்  ஆவியானவர்  கிறிஸ்துவுக்கு  உண்டாகும்  பாடுகளையும்,  அவைகளுக்குப்  பின்வரும்  மகிமைகளையும்  முன்னறிவித்தபோது,  இன்னகாலத்தைக்  குறித்தாரென்பதையும்,  அந்தக்  காலத்தின்  விசேஷம்  இன்னதென்பதையும்  ஆராய்ந்தார்கள்.  (1பேதுரு  1:11)

thangga'lilu'l'la  ki’risthuvin  aaviyaanavar  ki’risthuvukku  u'ndaagum  paaduga'laiyum,  avaiga'lukkup  pinvarum  magimaiga'laiyum  munna’riviththapoathu,  innakaalaththaik  ku’riththaarenbathaiyum,  anthak  kaalaththin  viseasham  innathenbathaiyum  aaraaynthaarga'l.  (1peathuru  1:11)

தங்கள்நிமித்தமல்ல,  நமதுநிமித்தமே  இவைகளைத்  தெரிவித்தார்களென்று  அவர்களுக்கு  வெளியாக்கப்பட்டது;  பரலோகத்திலிருந்து  அனுப்பப்பட்ட  பரிசுத்த  ஆவியினாலே  உங்களுக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்தவர்களைக்கொண்டு  இவைகள்  இப்பொழுது  உங்களுக்கு  அறிவிக்கப்பட்டு  வருகிறது;  இவைகளை  உற்றுப்பார்க்கத்  தேவதூதரும்  ஆசையாயிருக்கிறார்கள்.  (1பேதுரு  1:12)

thangga'lnimiththamalla,  namathunimiththamea  ivaiga'laith  theriviththaarga'len’ru  avarga'lukku  ve'liyaakkappattathu;  paraloagaththilirunthu  anuppappatta  parisuththa  aaviyinaalea  ungga'lukkuch  suviseashaththaip  pirasanggiththavarga'laikko'ndu  ivaiga'l  ippozhuthu  ungga'lukku  a’rivikkappattu  varugi’rathu;  ivaiga'lai  ut’ruppaarkkath  theavathootharum  aasaiyaayirukki’raarga'l.  (1peathuru  1:12)

ஆகையால்,  நீங்கள்  உங்கள்  மனதின்  அரையைக்  கட்டிக்கொண்டு,  தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருந்து;  இயேசுகிறிஸ்து  வெளிப்படும்போது  உங்களுக்கு  அளிக்கப்படுங்  கிருபையின்மேல்  பூரண  நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.  (1பேதுரு  1:13)

aagaiyaal,  neengga'l  ungga'l  manathin  araiyaik  kattikko'ndu,  the'lintha  buththiyu'l'lavarga'laayirunthu;  iyeasuki’risthu  ve'lippadumpoathu  ungga'lukku  a'likkappadung  kirubaiyinmeal  poora'na  nambikkaiyu'l'lavarga'laayirungga'l.  (1peathuru  1:13)

நீங்கள்  முன்னே  உங்கள்  அறியாமையினாலே  கொண்டிருந்த  இச்சைகளின்படி  இனி  நடவாமல்,  கீழ்ப்படிகிற  பிள்ளைகளாயிருந்து,  (1பேதுரு  1:14)

neengga'l  munnea  ungga'l  a’riyaamaiyinaalea  ko'ndiruntha  ichchaiga'linpadi  ini  nadavaamal,  keezhppadigi’ra  pi'l'laiga'laayirunthu,  (1peathuru  1:14)

உங்களை  அழைத்தவர்  பரிசுத்தராயிருக்கிறதுபோல,  நீங்களும்  உங்கள்  நடக்கைகளெல்லாவற்றிலேயும்  பரிசுத்தராயிருங்கள்.  (1பேதுரு  1:15)

ungga'lai  azhaiththavar  parisuththaraayirukki’rathupoala,  neengga'lum  ungga'l  nadakkaiga'lellaavat’rileayum  parisuththaraayirungga'l.  (1peathuru  1:15)

நான்  பரிசுத்தர்,  ஆகையால்  நீங்களும்  பரிசுத்தராயிருங்கள்  என்று  எழுதியிருக்கிறதே.  (1பேதுரு  1:16)

naan  parisuththar,  aagaiyaal  neengga'lum  parisuththaraayirungga'l  en’ru  ezhuthiyirukki’rathea.  (1peathuru  1:16)

அன்றியும்,  பட்சபாதமில்லாமல்  அவனவனுடைய  கிரியைகளின்படி  நியாயந்தீர்க்கிறவரை  நீங்கள்  பிதாவாகத்  தொழுதுகொண்டுவருகிறபடியால்,  இங்கே  பரதேசிகளாய்ச்  சஞ்சரிக்குமளவும்  பயத்துடனே  நடந்துகொள்ளுங்கள்.  (1பேதுரு  1:17)

an’riyum,  padchapaathamillaamal  avanavanudaiya  kiriyaiga'linpadi  niyaayantheerkki’ravarai  neengga'l  pithaavaagath  thozhuthuko'nduvarugi’rapadiyaal,  inggea  paratheasiga'laaych  sagncharikkuma'lavum  bayaththudanea  nadanthuko'l'lungga'l.  (1peathuru  1:17)

உங்கள்  முன்னோர்களால்  பாரம்பரியமாய்  நீங்கள்  அநுசரித்துவந்த  வீணான  நடத்தையினின்று  அழிவுள்ள  வஸ்துக்களாகிய  வெள்ளியினாலும்  பொன்னினாலும்  மீட்கப்படாமல்,  (1பேதுரு  1:18)

ungga'l  munnoarga'laal  paarambariyamaay  neengga'l  anusariththuvantha  vee'naana  nadaththaiyinin’ru  azhivu'l'la  vasthukka'laagiya  ve'l'liyinaalum  ponninaalum  meedkappadaamal,  (1peathuru  1:18)

குற்றமில்லாத  மாசற்ற  ஆட்டுக்குட்டியாகிய  கிறிஸ்துவின்  விலையேறப்பெற்ற  இரத்தத்தினாலே  மீட்கப்பட்டீர்களென்று  அறிந்திருக்கிறீர்களே.  (1பேதுரு  1:19)

kut’ramillaatha  maasat’ra  aattukkuttiyaagiya  ki’risthuvin  vilaiyea’rappet’ra  iraththaththinaalea  meedkappatteerga'len’ru  a’rinthirukki’reerga'lea.  (1peathuru  1:19)

அவர்  உலகத்தோற்றத்திற்கு  முன்னே  குறிக்கப்பட்டவராயிருந்து,  தமது  மூலமாய்த்  தேவன்மேல்  விசுவாசமாயிருக்கிற  உங்களுக்காக  இந்தக்  கடைசிக்  காலங்களில்  வெளிப்பட்டார்.  (1பேதுரு  1:20)

avar  ulagaththoat’raththi’rku  munnea  ku’rikkappattavaraayirunthu,  thamathu  moolamaayth  theavanmeal  visuvaasamaayirukki’ra  ungga'lukkaaga  inthak  kadaisik  kaalangga'lil  ve'lippattaar.  (1peathuru  1:20)

உங்கள்  விசுவாசமும்  நம்பிக்கையும்  தேவன்மேலிருக்கும்படி,  அவரை  மரித்தோரிலிருந்து  எழுப்பி,  அவருக்கு  மகிமையைக்  கொடுத்தார்.  (1பேதுரு  1:21)

ungga'l  visuvaasamum  nambikkaiyum  theavanmealirukkumpadi,  avarai  mariththoarilirunthu  ezhuppi,  avarukku  magimaiyaik  koduththaar.  (1peathuru  1:21)

ஆகையால்  நீங்கள்  மாயமற்ற  சகோதர  சிநேகமுள்ளவர்களாகும்படி,  ஆவியினாலே  சத்தியத்திற்குக்  கீழ்ப்படிந்து,  உங்கள்  ஆத்துமாக்களைச்  சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால்,  சுத்த  இருதயத்தோடே  ஒருவரிலொருவர்  ஊக்கமாய்  அன்புகூருங்கள்;  (1பேதுரு  1:22)

aagaiyaal  neengga'l  maayamat’ra  sagoathara  sineagamu'l'lavarga'laagumpadi,  aaviyinaalea  saththiyaththi’rkuk  keezhppadinthu,  ungga'l  aaththumaakka'laich  suththamaakkikko'ndavarga'laayirukki’rapadiyaal,  suththa  iruthayaththoadea  oruvariloruvar  ookkamaay  anbukoorungga'l;  (1peathuru  1:22)

அழிவுள்ள  வித்தினாலே  அல்ல,  என்றென்றைக்கும்  நிற்கிறதும்  ஜீவனுள்ளதுமான  தேவவசனமாகிய  அழிவில்லாத  வித்தினாலே  மறுபடியும்  ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.  (1பேதுரு  1:23)

azhivu'l'la  viththinaalea  alla,  en’ren’raikkum  ni’rki’rathum  jeevanu'l'lathumaana  theavavasanamaagiya  azhivillaatha  viththinaalea  ma’rupadiyum  jenippikkappattirukki’reerga'lea.  (1peathuru  1:23)

மாம்சமெல்லாம்  புல்லைப்போலவும்,  மனுஷருடைய  மகிமையெல்லாம்  புல்லின்  பூவைப்போலவுமிருக்கிறது;  புல்  உலர்ந்தது,  அதின்  பூவும்  உதிர்ந்தது.  (1பேதுரு  1:24)

maamsamellaam  pullaippoalavum,  manusharudaiya  magimaiyellaam  pullin  poovaippoalavumirukki’rathu;  pul  ularnthathu,  athin  poovum  uthirnthathu.  (1peathuru  1:24)

கர்த்தருடைய  வசனமோ  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்;  உங்களுக்குச்  சுவிசேஷமாய்  அறிவிக்கப்பட்டுவருகிற  வசனம்  இதுவே.  (1பேதுரு  1:25)

karththarudaiya  vasanamoa  en’ren’raikkum  nilaiththirukkum;  ungga'lukkuch  suviseashamaay  a’rivikkappattuvarugi’ra  vasanam  ithuvea.  (1peathuru  1:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!