Wednesday, May 11, 2016

Yoavaan 5 | யோவான் 5 | John 5


இவைகளுக்குப்பின்பு  யூதருடைய  பண்டிகை  ஒன்று  வந்தது;  அப்பொழுது  இயேசு  எருசலேமுக்குப்  போனார்.  (யோவான்  5:1)

ivaiga'lukkuppinbu  yootharudaiya  pa'ndigai  on’ru  vanthathu;  appozhuthu  iyeasu  erusaleamukkup  poanaar.  (yoavaan  5:1)

எபிரெய  பாஷையிலே  பெதஸ்தா  என்னப்பட்ட  ஒரு  குளம்  எருசலேமில்  ஆட்டுவாசலினருகே  இருக்கிறது,  அதற்கு  ஐந்து  மண்டபங்களுண்டு.  (யோவான்  5:2)

ebireya  baashaiyilea  bethasthaa  ennappatta  oru  ku'lam  erusaleamil  aattuvaasalinarugea  irukki’rathu,  atha’rku  ainthu  ma'ndabangga'lu'ndu.  (yoavaan  5:2)

அவைகளிலே  குருடர்,  சப்பாணிகள்,  சூம்பின  உறுப்புடையவர்கள்  முதலான  வியாதிக்காரர்  அநேகர்  படுத்திருந்து,  தண்ணீர்  எப்பொழுது  கலங்கும்  என்று  காத்துக்கொண்டிருப்பார்கள்.  (யோவான்  5:3)

avaiga'lilea  kurudar,  sappaa'niga'l,  soombina  u’ruppudaiyavarga'l  muthalaana  viyaathikkaarar  aneagar  paduththirunthu,  tha'n'neer  eppozhuthu  kalanggum  en’ru  kaaththukko'ndiruppaarga'l.  (yoavaan  5:3)

ஏனெனில்  சில  சமயங்களிலே  தேவதூதன்  ஒருவன்  அந்தக்  குளத்தில்  இறங்கி,  தண்ணீரைக்  கலக்குவான்;  தண்ணீர்  கலங்கினபின்பு  யார்  முந்தி  அதில்  இறங்குவானோ  அவன்  எப்பேர்ப்பட்ட  வியாதிஸ்தனாயிருந்தாலும்  சொஸ்தமாவான்.  (யோவான்  5:4)

eanenil  sila  samayangga'lilea  theavathoothan  oruvan  anthak  ku'laththil  i’ranggi,  tha'n'neeraik  kalakkuvaan;  tha'n'neer  kalangginapinbu  yaar  munthi  athil  i’rangguvaanoa  avan  eppearppatta  viyaathisthanaayirunthaalum  sosthamaavaan.  (yoavaan  5:4)

முப்பத்தெட்டு  வருஷம்  வியாதிகொண்டிருந்த  ஒரு  மனுஷன்  அங்கே  இருந்தான்.  (யோவான்  5:5)

muppaththettu  varusham  viyaathiko'ndiruntha  oru  manushan  anggea  irunthaan.  (yoavaan  5:5)

படுத்திருந்த  அவனை  இயேசு  கண்டு,  அவன்  வெகுகாலமாய்  வியாதிஸ்தனென்று  அறிந்து,  அவனை  நோக்கி:  சொஸ்தமாகவேண்டுமென்று  விரும்புகிறாயா  என்று  கேட்டார்.  (யோவான்  5:6)

paduththiruntha  avanai  iyeasu  ka'ndu,  avan  vegukaalamaay  viyaathisthanen’ru  a’rinthu,  avanai  noakki:  sosthamaagavea'ndumen’ru  virumbugi’raayaa  en’ru  keattaar.  (yoavaan  5:6)

அதற்கு  வியாதிஸ்தன்:  ஆண்டவரே,  தண்ணீர்  கலக்கப்படும்போது  என்னைக்  குளத்தில்  கொண்டுபோய்  விடுகிறதற்கு  ஒருவருமில்லை,  நான்  போகிறதற்குள்ளே  வேறொருவன்  எனக்கு  முந்தி  இறங்கிவிடுகிறான்  என்றான்.  (யோவான்  5:7)

atha’rku  viyaathisthan:  aa'ndavarea,  tha'n'neer  kalakkappadumpoathu  ennaik  ku'laththil  ko'ndupoay  vidugi’ratha’rku  oruvarumillai,  naan  poagi’ratha’rku'l'lea  vea’roruvan  enakku  munthi  i’ranggividugi’raan  en’raan.  (yoavaan  5:7)

இயேசு  அவனை  நோக்கி:  எழுந்திரு,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  நட  என்றார்.  (யோவான்  5:8)

iyeasu  avanai  noakki:  ezhunthiru,  un  padukkaiyai  eduththukko'ndu  nada  en’raar.  (yoavaan  5:8)

உடனே  அந்த  மனுஷன்  சொஸ்தமாகி,  தன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  நடந்துபோனான்.  அந்த  நாள்  ஓய்வுநாளாயிருந்தது.  (யோவான்  5:9)

udanea  antha  manushan  sosthamaagi,  than  padukkaiyai  eduththukko'ndu,  nadanthupoanaan.  antha  naa'l  oayvunaa'laayirunthathu.  (yoavaan  5:9)

ஆதலால்  யூதர்கள்  குணமாக்கப்பட்டவனை  நோக்கி:  இது  ஓய்வுநாளாயிருக்கிறதே,  படுக்கையை  எடுத்துக்கொண்டு  போகிறது  உனக்கு  நியாயமல்ல  என்றார்கள்.  (யோவான்  5:10)

aathalaal  yootharga'l  ku'namaakkappattavanai  noakki:  ithu  oayvunaa'laayirukki’rathea,  padukkaiyai  eduththukko'ndu  poagi’rathu  unakku  niyaayamalla  en’raarga'l.  (yoavaan  5:10)

அவன்  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  என்னைச்  சொஸ்தமாக்கினவர்,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  நடவென்று  எனக்குச்  சொன்னார்  என்றான்.  (யோவான்  5:11)

avan  avarga'lukkup  pirathiyuththaramaaga:  ennaich  sosthamaakkinavar,  un  padukkaiyai  eduththukko'ndu  nadaven’ru  enakkuch  sonnaar  en’raan.  (yoavaan  5:11)

அதற்கு  அவர்கள்:  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  நடவென்று  உன்னுடனே  சொன்ன  மனுஷன்  யார்  என்று  அவனிடத்தில்  கேட்டார்கள்.  (யோவான்  5:12)

atha’rku  avarga'l:  un  padukkaiyai  eduththukko'ndu  nadaven’ru  unnudanea  sonna  manushan  yaar  en’ru  avanidaththil  keattaarga'l.  (yoavaan  5:12)

சொஸ்தமாக்கப்பட்டவன்  அவர்  இன்னாரென்று  அறியவில்லை;  அவ்விடத்தில்  ஜனங்கள்  கூட்டமாயிருந்தபடியினால்  இயேசு  விலகியிருந்தார்.  (யோவான்  5:13)

sosthamaakkappattavan  avar  innaaren’ru  a’riyavillai;  avvidaththil  janangga'l  koottamaayirunthapadiyinaal  iyeasu  vilagiyirunthaar.  (yoavaan  5:13)

அதற்குப்பின்பு  இயேசு  அவனைத்  தேவாலயத்திலே  கண்டு:  இதோ,  நீ  சொஸ்தமானாய்,  அதிக  கேடானதொன்றும்  உனக்கு  வராதபடி  இனிப்  பாவஞ்செய்யாதே  என்றார்.  (யோவான்  5:14)

atha’rkuppinbu  iyeasu  avanaith  theavaalayaththilea  ka'ndu:  ithoa,  nee  sosthamaanaay,  athiga  keadaanathon’rum  unakku  varaathapadi  inip  paavagnseyyaathea  en’raar.  (yoavaan  5:14)

அந்த  மனுஷன்  போய்,  தன்னைச்  சொஸ்தமாக்கினவர்  இயேசு  என்று  யூதர்களுக்கு  அறிவித்தான்.  (யோவான்  5:15)

antha  manushan  poay,  thannaich  sosthamaakkinavar  iyeasu  en’ru  yootharga'lukku  a’riviththaan.  (yoavaan  5:15)

இயேசு  இவைகளை  ஓய்வுநாளில்  செய்தபடியால்,  யூதர்கள்  அவரைத்  துன்பப்படுத்தி,  அவரைக்  கொலைசெய்ய  வகைதேடினார்கள்.  (யோவான்  5:16)

iyeasu  ivaiga'lai  oayvunaa'lil  seythapadiyaal,  yootharga'l  avaraith  thunbappaduththi,  avaraik  kolaiseyya  vagaitheadinaarga'l.  (yoavaan  5:16)

இயேசு  அவர்களை  நோக்கி:  என்  பிதா  இதுவரைக்கும்  கிரியை  செய்து  வருகிறார்,  நானும்  கிரியை  செய்து  வருகிறேன்  என்றார்.  (யோவான்  5:17)

iyeasu  avarga'lai  noakki:  en  pithaa  ithuvaraikkum  kiriyai  seythu  varugi’raar,  naanum  kiriyai  seythu  varugi’rean  en’raar.  (yoavaan  5:17)

அவர்  ஓய்வுநாள்  கட்டளையை  மீறினதுமல்லாமல்,  தேவனைத்  தம்முடைய  சொந்தப்  பிதா  என்றுஞ்சொல்லித்  தம்மைத்  தேவனுக்குச்  சமமாக்கினபடியினாலே,  யூதர்கள்  அவரைக்  கொலைசெய்யும்படி  அதிகமாய்  வகைதேடினார்கள்.  (யோவான்  5:18)

avar  oayvunaa'l  katta'laiyai  mee’rinathumallaamal,  theavanaith  thammudaiya  sonthap  pithaa  en’rugnsollith  thammaith  theavanukkuch  samamaakkinapadiyinaalea,  yootharga'l  avaraik  kolaiseyyumpadi  athigamaay  vagaitheadinaarga'l.  (yoavaan  5:18)

அப்பொழுது  இயேசு  அவர்களை  நோக்கி:  மெய்யாகவே  மெய்யாகவே  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  பிதாவானவர்  செய்யக்  குமாரன்  காண்கிறதெதுவோ,  அதையேயன்றி,  வேறொன்றையும்  தாமாய்ச்  செய்யமாட்டார்;  அவர்  எவைகளைச்  செய்கிறாரோ,  அவைகளைக்  குமாரனும்  அந்தப்படியே  செய்கிறார்.  (யோவான்  5:19)

appozhuthu  iyeasu  avarga'lai  noakki:  meyyaagavea  meyyaagavea  naan  ungga'lukkuch  sollugi’rean:  pithaavaanavar  seyyak  kumaaran  kaa'ngi’rathethuvoa,  athaiyeayan’ri,  vea’ron’raiyum  thaamaaych  seyyamaattaar;  avar  evaiga'laich  seygi’raaroa,  avaiga'laik  kumaaranum  anthappadiyea  seygi’raar.  (yoavaan  5:19)

பிதாவானவர்  குமாரனிடத்தில்  அன்பாயிருந்து,  தாம்  செய்கிறவைகளையெல்லாம்  அவருக்குக்  காண்பிக்கிறார்;  நீங்கள்  ஆச்சரியப்படத்தக்கதாக  இவைகளைப்  பார்க்கிலும்  பெரிதான  கிரியைகளையும்  அவருக்குக்  காண்பிப்பார்.  (யோவான்  5:20)

pithaavaanavar  kumaaranidaththil  anbaayirunthu,  thaam  seygi’ravaiga'laiyellaam  avarukkuk  kaa'nbikki’raar;  neengga'l  aachchariyappadaththakkathaaga  ivaiga'laip  paarkkilum  perithaana  kiriyaiga'laiyum  avarukkuk  kaa'nbippaar.  (yoavaan  5:20)

பிதாவானவர்  மரித்தோரை  எழுப்பி  உயிர்ப்பிக்கிறதுபோல,  குமாரனும்  தமக்குச்  சித்தமானவர்களை  உயிர்ப்பிக்கிறார்.  (யோவான்  5:21)

pithaavaanavar  mariththoarai  ezhuppi  uyirppikki’rathupoala,  kumaaranum  thamakkuch  siththamaanavarga'lai  uyirppikki’raar.  (yoavaan  5:21)

அன்றியும்  பிதாவைக்  கனம்பண்ணுகிறதுபோல  எல்லாரும்  குமாரனையும்  கனம்பண்ணும்படிக்கு,  பிதாவானவர்  தாமே  ஒருவருக்கும்  நியாயத்தீர்ப்புச்  செய்யாமல்,  நியாயத்தீர்ப்புச்  செய்யும்  அதிகாரம்  முழுவதையும்  குமாரனுக்கு  ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  (யோவான்  5:22)

an’riyum  pithaavaik  kanampa'n'nugi’rathupoala  ellaarum  kumaaranaiyum  kanampa'n'numpadikku,  pithaavaanavar  thaamea  oruvarukkum  niyaayaththeerppuch  seyyaamal,  niyaayaththeerppuch  seyyum  athigaaram  muzhuvathaiyum  kumaaranukku  oppukkoduththirukki’raar.  (yoavaan  5:22)

குமாரனைக்  கனம்பண்ணாதவன்  அவரை  அனுப்பின  பிதாவையும்  கனம்  பண்ணாதவனாயிருக்கிறான்.  (யோவான்  5:23)

kumaaranaik  kanampa'n'naathavan  avarai  anuppina  pithaavaiyum  kanam  pa'n'naathavanaayirukki’raan.  (yoavaan  5:23)

என்  வசனத்தைக்  கேட்டு,  என்னை  அனுப்பினவரை  விசுவாசிக்கிறவனுக்கு  நித்தியஜீவன்  உண்டு;  அவன்  ஆக்கினைத்  தீர்ப்புக்குட்படாமல்,  மரணத்தைவிட்டு  நீங்கி,  ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  5:24)

en  vasanaththaik  keattu,  ennai  anuppinavarai  visuvaasikki’ravanukku  niththiyajeevan  u'ndu;  avan  aakkinaith  theerppukkudpadaamal,  mara'naththaivittu  neenggi,  jeevanukkudpattirukki’raan  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  5:24)

மரித்தோர்  தேவகுமாரனுடைய  சத்தத்தைக்  கேட்குங்  காலம்  வரும்,  அது  இப்பொழுதே  வந்திருக்கிறது;  அதைக்  கேட்கிறவர்கள்  பிழைப்பார்கள்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  5:25)

mariththoar  theavakumaaranudaiya  saththaththaik  keadkung  kaalam  varum,  athu  ippozhuthea  vanthirukki’rathu;  athaik  keadki’ravarga'l  pizhaippaarga'l  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  5:25)

ஏனெனில்,  பிதாவானவர்  தம்மில்  தாமே  ஜீவனுடையவராயிருக்கிறது  போல,  குமாரனும்  தம்மில்தாமே  ஜீவனுடையவராயிருக்கும்படி  அருள்செய்திருக்கிறார்.  (யோவான்  5:26)

eanenil,  pithaavaanavar  thammil  thaamea  jeevanudaiyavaraayirukki’rathu  poala,  kumaaranum  thammilthaamea  jeevanudaiyavaraayirukkumpadi  aru'lseythirukki’raar.  (yoavaan  5:26)

அவர்  மனுஷகுமாரனாயிருக்கிறபடியால்,  நியாயத்தீர்ப்புச்  செய்யும்படிக்கு  அதிகாரத்தையும்  அவருக்குக்  கொடுத்திருக்கிறார்.  (யோவான்  5:27)

avar  manushakumaaranaayirukki’rapadiyaal,  niyaayaththeerppuch  seyyumpadikku  athigaaraththaiyum  avarukkuk  koduththirukki’raar.  (yoavaan  5:27)

இதைக்குறித்து  நீங்கள்  ஆச்சரியப்படவேண்டாம்;  ஏனென்றால்  பிரேதக்குழிகளிலுள்ள  அனைவரும்  அவருடைய  சத்தத்தைக்  கேட்குங்  காலம்  வரும்;  (யோவான்  5:28)

ithaikku’riththu  neengga'l  aachchariyappadavea'ndaam;  eanen’raal  pireathakkuzhiga'lilu'l'la  anaivarum  avarudaiya  saththaththaik  keadkung  kaalam  varum;  (yoavaan  5:28)

அப்பொழுது,  நன்மைசெய்தவர்கள்  ஜீவனை  அடையும்படி  எழுந்திருக்கிறவர்களாகவும்,  தீமைசெய்தவர்கள்  ஆக்கினையை  அடையும்படி  எழுந்திருக்கிறவர்களாகவும்  புறப்படுவார்கள்.  (யோவான்  5:29)

appozhuthu,  nanmaiseythavarga'l  jeevanai  adaiyumpadi  ezhunthirukki’ravarga'laagavum,  theemaiseythavarga'l  aakkinaiyai  adaiyumpadi  ezhunthirukki’ravarga'laagavum  pu’rappaduvaarga'l.  (yoavaan  5:29)

நான்  என்  சுயமாய்  ஒன்றுஞ்  செய்கிறதில்லை;  நான்  கேட்கிறபடியே  நியாயந்தீர்க்கிறேன்;  எனக்குச்  சித்தமானதை  நான்  தேடாமல்,  என்னை  அனுப்பின  பிதாவுக்குச்  சித்தமானதையே  நான்  தேடுகிறபடியால்  என்  தீர்ப்பு  நீதியாயிருக்கிறது.  (யோவான்  5:30)

naan  en  suyamaay  on’rugn  seygi’rathillai;  naan  keadki’rapadiyea  niyaayantheerkki’rean;  enakkuch  siththamaanathai  naan  theadaamal,  ennai  anuppina  pithaavukkuch  siththamaanathaiyea  naan  theadugi’rapadiyaal  en  theerppu  neethiyaayirukki’rathu.  (yoavaan  5:30)

என்னைக்குறித்து  நானே  சாட்சிகொடுத்தால்  என்  சாட்சி  மெய்யாயிராது.  (யோவான்  5:31)

ennaikku’riththu  naanea  saadchikoduththaal  en  saadchi  meyyaayiraathu.  (yoavaan  5:31)

என்னைக்குறித்துச்  சாட்சிகொடுக்கிறவர்  வேறொருவர்  இருக்கிறார்,  அவர்  என்னைக்குறித்துக்  கொடுக்கிற  சாட்சி  மெய்யான  சாட்சியென்று  அறிந்திருக்கிறேன்.  (யோவான்  5:32)

ennaikku’riththuch  saadchikodukki’ravar  vea’roruvar  irukki’raar,  avar  ennaikku’riththuk  kodukki’ra  saadchi  meyyaana  saadchiyen’ru  a’rinthirukki’rean.  (yoavaan  5:32)

நீங்கள்  யோவானிடத்தில்  ஆளனுப்பி  விசாரித்தீர்கள்,  அவன்  சத்தியத்திற்குச்  சாட்சிகொடுத்தான்.  (யோவான்  5:33)

neengga'l  yoavaanidaththil  aa'lanuppi  visaariththeerga'l,  avan  saththiyaththi’rkuch  saadchikoduththaan.  (yoavaan  5:33)

நான்  ஏற்றுக்கொள்ளுகிற  சாட்சி  மனுஷருடைய  சாட்சியல்ல,  நீங்கள்  இரட்சிக்கப்படுவதற்காகவே  இவைகளைச்  சொல்லுகிறேன்.  (யோவான்  5:34)

naan  eat’rukko'l'lugi’ra  saadchi  manusharudaiya  saadchiyalla,  neengga'l  iradchikkappaduvatha’rkaagavea  ivaiga'laich  sollugi’rean.  (yoavaan  5:34)

அவன்  எரிந்து  பிரகாசிக்கிற  விளக்காயிருந்தான்;  நீங்களும்  சிலகாலம்  அவன்  வெளிச்சத்திலே  களிகூர  மனதாயிருந்தீர்கள்.  (யோவான்  5:35)

avan  erinthu  piragaasikki’ra  vi'lakkaayirunthaan;  neengga'lum  silakaalam  avan  ve'lichchaththilea  ka'likoora  manathaayiruntheerga'l.  (yoavaan  5:35)

யோவானுடைய  சாட்சியைப்பார்க்கிலும்  மேன்மையான  சாட்சி  எனக்கு  உண்டு;  அதென்னவெனில்,  நான்  நிறைவேற்றும்படிக்குப்  பிதாவானவர்  எனக்குக்  கற்பித்ததும்  நான்  செய்துவருகிறதுமான  கிரியைகளே  பிதா  என்னை  அனுப்பினார்  என்று  என்னைக்குறித்துச்  சாட்சி  கொடுக்கிறது.  (யோவான்  5:36)

yoavaanudaiya  saadchiyaippaarkkilum  meanmaiyaana  saadchi  enakku  u'ndu;  athennavenil,  naan  ni’raiveat’rumpadikkup  pithaavaanavar  enakkuk  ka’rpiththathum  naan  seythuvarugi’rathumaana  kiriyaiga'lea  pithaa  ennai  anuppinaar  en’ru  ennaikku’riththuch  saadchi  kodukki’rathu.  (yoavaan  5:36)

என்னை  அனுப்பின  பிதா  தாமே  என்னைக்குறித்துச்  சாட்சி  கொடுத்திருக்கிறார்;  நீங்கள்  ஒருக்காலும்  அவர்  சத்தத்தைக்  கேட்டதுமில்லை,  அவர்  ரூபத்தைக்  கண்டதுமில்லை.  (யோவான்  5:37)

ennai  anuppina  pithaa  thaamea  ennaikku’riththuch  saadchi  koduththirukki’raar;  neengga'l  orukkaalum  avar  saththaththaik  keattathumillai,  avar  roobaththaik  ka'ndathumillai.  (yoavaan  5:37)

அவர்  அனுப்பினவரை  நீங்கள்  விசுவாசியாதபடியால்  அவருடைய  வசனம்  உங்களில்  தரித்திருக்கிறதுமில்லை.  (யோவான்  5:38)

avar  anuppinavarai  neengga'l  visuvaasiyaathapadiyaal  avarudaiya  vasanam  ungga'lil  thariththirukki’rathumillai.  (yoavaan  5:38)

வேதவாக்கியங்களை  ஆராய்ந்து  பாருங்கள்;  அவைகளால்  உங்களுக்கு  நித்தியஜீவன்  உண்டென்று  எண்ணுகிறீர்களே,  என்னைக்குறித்துச்  சாட்சிகொடுக்கிறவைகளும்  அவைகளே.  (யோவான்  5:39)

veathavaakkiyangga'lai  aaraaynthu  paarungga'l;  avaiga'laal  ungga'lukku  niththiyajeevan  u'nden’ru  e'n'nugi’reerga'lea,  ennaikku’riththuch  saadchikodukki’ravaiga'lum  avaiga'lea.  (yoavaan  5:39)

அப்படியிருந்தும்  உங்களுக்கு  ஜீவன்  உண்டாகும்படி  என்னிடத்தில்  வர  உங்களுக்கு  மனதில்லை.  (யோவான்  5:40)

appadiyirunthum  ungga'lukku  jeevan  u'ndaagumpadi  ennidaththil  vara  ungga'lukku  manathillai.  (yoavaan  5:40)

நான்  மனுஷரால்  மகிமையை  ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.  (யோவான்  5:41)

naan  manusharaal  magimaiyai  eat’rukko'l'lugi’rathillai.  (yoavaan  5:41)

உங்களில்  தேவ  அன்பு  இல்லையென்று  உங்களை  அறிந்திருக்கிறேன்.  (யோவான்  5:42)

ungga'lil  theava  anbu  illaiyen’ru  ungga'lai  a’rinthirukki’rean.  (yoavaan  5:42)

நான்  என்  பிதாவின்  நாமத்தினாலே  வந்திருந்தும்  நீங்கள்  என்னை  ஏற்றுக்கொள்ளவில்லை,  வேறொருவன்  தன்  சுயநாமத்தினாலே  வந்தால்  அவனை  ஏற்றுக்கொள்வீர்கள்.  (யோவான்  5:43)

naan  en  pithaavin  naamaththinaalea  vanthirunthum  neengga'l  ennai  eat’rukko'l'lavillai,  vea’roruvan  than  suyanaamaththinaalea  vanthaal  avanai  eat’rukko'lveerga'l.  (yoavaan  5:43)

தேவனாலேமாத்திரம்  வருகிற  மகிமையைத்  தேடாமல்,  ஒருவராலொருவர்  மகிமையை  ஏற்றுக்கொள்ளுகிற  நீங்கள்  எப்படி  விசுவாசிப்பீர்கள்?  (யோவான்  5:44)

theavanaaleamaaththiram  varugi’ra  magimaiyaith  theadaamal,  oruvaraaloruvar  magimaiyai  eat’rukko'l'lugi’ra  neengga'l  eppadi  visuvaasippeerga'l?  (yoavaan  5:44)

பிதாவினிடத்தில்  நான்  உங்கள்மேல்  குற்றஞ்சாட்டுவேன்  என்று  நினையாதிருங்கள்;  நீங்கள்  நம்புகிற  மோசேயே  உங்கள்மேல்  குற்றஞ்சாட்டுவான்.  (யோவான்  5:45)

pithaavinidaththil  naan  ungga'lmeal  kut’ragnsaattuvean  en’ru  ninaiyaathirungga'l;  neengga'l  nambugi’ra  moaseayea  ungga'lmeal  kut’ragnsaattuvaan.  (yoavaan  5:45)

நீங்கள்  மோசேயை  விசுவாசித்தீர்களானால்,  என்னையும்  விசுவாசிப்பீர்கள்;  அவன்  என்னைக்குறித்து  எழுதியிருக்கிறானே.  (யோவான்  5:46)

neengga'l  moaseayai  visuvaasiththeerga'laanaal,  ennaiyum  visuvaasippeerga'l;  avan  ennaikku’riththu  ezhuthiyirukki’raanea.  (yoavaan  5:46)

அவன்  எழுதின  வாக்கியங்களை  நீங்கள்  விசுவாசியாமலிருந்தால்  நான்  சொல்லுகிற  வசனங்களை  எப்படி  விசுவாசிப்பீர்கள்  என்றார்.  (யோவான்  5:47)

avan  ezhuthina  vaakkiyangga'lai  neengga'l  visuvaasiyaamalirunthaal  naan  sollugi’ra  vasanangga'lai  eppadi  visuvaasippeerga'l  en’raar.  (yoavaan  5:47)


1 comment:

  1. Correction(s) made on (March 18, 2019)

    (John 5:3) sombina to soombina

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!