Wednesday, May 11, 2016

Yoavaan 4 | யோவான் 4 | John 4


யோவானைப்பார்க்கிலும்  இயேசு  அநேகம்  பேரைச்  சீஷராக்கி  ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று  பரிசேயர்  கேள்விப்பட்டதாகக்  கர்த்தர்  அறிந்தபோது,  (யோவான்  4:1)

yoavaanaippaarkkilum  iyeasu  aneagam  pearaich  seesharaakki  gnaanasnaanangkodukki’raaren’ru  pariseayar  kea'lvippattathaagak  karththar  a’rinthapoathu,  (yoavaan  4:1)

யூதேயாவைவிட்டு  மறுபடியுங்  கலிலேயாவுக்குப்  போனார்.  (யோவான்  4:2)

yootheayaavaivittu  ma’rupadiyung  kalileayaavukkup  poanaar.  (yoavaan  4:2)

இயேசு  தாமே  ஞானஸ்நானங்கொடுக்கவில்லை,  அவருடைய  சீஷர்கள்  கொடுத்தார்கள்.  (யோவான்  4:3)

iyeasu  thaamea  gnaanasnaanangkodukkavillai,  avarudaiya  seesharga'l  koduththaarga'l.  (yoavaan  4:3)

அவர்  சமாரியா  நாட்டின்  வழியாய்ப்  போகவேண்டியதாயிருந்தபடியால்,  (யோவான்  4:4)

avar  samaariyaa  naattin  vazhiyaayp  poagavea'ndiyathaayirunthapadiyaal,  (yoavaan  4:4)

யாக்கோபு  தன்  குமாரனாகிய  யோசேப்புக்குக்  கொடுத்த  நிலத்துக்கு  அருகே  இருந்த  சமாரியாவிலுள்ள  சீகார்  என்னப்பட்ட  ஊருக்கு  வந்தார்.  (யோவான்  4:5)

yaakkoabu  than  kumaaranaagiya  yoaseappukkuk  koduththa  nilaththukku  arugea  iruntha  samaariyaavilu'l'la  seekaar  ennappatta  oorukku  vanthaar.  (yoavaan  4:5)

அங்கே  யாக்கோபுடைய  கிணறு  இருந்தது;  இயேசு  பிரயாணத்தினால்  இளைப்படைந்தவராய்  அந்தக்  கிணற்றினருகே  உட்கார்ந்தார்;  அப்பொழுது  ஏறக்குறைய  ஆறாம்மணி  வேளையாயிருந்தது.  (யோவான்  4:6)

anggea  yaakkoabudaiya  ki'na’ru  irunthathu;  iyeasu  pirayaa'naththinaal  i'laippadainthavaraay  anthak  ki'nat’rinarugea  udkaarnthaar;  appozhuthu  ea’rakku’raiya  aa’raamma'ni  vea'laiyaayirunthathu.  (yoavaan  4:6)

அவருடைய  சீஷர்கள்  போஜனபதார்த்தங்களைக்  கொள்ளும்படி  ஊருக்குள்ளே  போயிருந்தார்கள்.  (யோவான்  4:7)

avarudaiya  seesharga'l  poajanapathaarththangga'laik  ko'l'lumpadi  oorukku'l'lea  poayirunthaarga'l.  (yoavaan  4:7)

அப்பொழுது  சமாரியா  நாட்டாளாகிய  ஒரு  ஸ்திரீ  தண்ணீர்  மொள்ள  வந்தாள்.  இயேசு  அவளை  நோக்கி:  தாகத்துக்குத்  தா  என்றார்.  (யோவான்  4:8)

appozhuthu  samaariyaa  naattaa'laagiya  oru  sthiree  tha'n'neer  mo'l'la  vanthaa'l.  iyeasu  ava'lai  noakki:  thaagaththukkuth  thaa  en’raar.  (yoavaan  4:8)

யூதர்கள்  சமாரியருடனே  சம்பந்தங்கலவாதவர்களானபடியால்,  சமாரியா  ஸ்திரீ  அவரை  நோக்கி:  நீர்  யூதனாயிருக்க,  சமாரியா  ஸ்திரீயாகிய  என்னிடத்தில்,  தாகத்துக்குத்தா  என்று  எப்படிக்  கேட்கலாம்  என்றாள்.  (யோவான்  4:9)

yootharga'l  samaariyarudanea  sambanthangkalavaathavarga'laanapadiyaal,  samaariyaa  sthiree  avarai  noakki:  neer  yoothanaayirukka,  samaariyaa  sthireeyaagiya  ennidaththil,  thaagaththukkuththaa  en’ru  eppadik  keadkalaam  en’raa'l.  (yoavaan  4:9)

இயேசு  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  நீ  தேவனுடைய  ஈவையும்,  தாகத்துக்குத்தா  என்று  உன்னிடத்தில்  கேட்கிறவர்  இன்னார்  என்பதையும்  அறிந்திருந்தாயானால்,  நீயே  அவரிடத்தில்  கேட்டிருப்பாய்,  அவர்  உனக்கு  ஜீவத்தண்ணீரைக்  கொடுத்திருப்பார்  என்றார்.  (யோவான்  4:10)

iyeasu  ava'lukkup  pirathiyuththaramaaga:  nee  theavanudaiya  eevaiyum,  thaagaththukkuththaa  en’ru  unnidaththil  keadki’ravar  innaar  enbathaiyum  a’rinthirunthaayaanaal,  neeyea  avaridaththil  keattiruppaay,  avar  unakku  jeevaththa'n'neeraik  koduththiruppaar  en’raar.  (yoavaan  4:10)

அதற்கு  அந்த  ஸ்திரீ:  ஆண்டவரே,  மொண்டுகொள்ள  உம்மிடத்தில்  பாத்திரமில்லையே,  கிணறும்  ஆழமாயிருக்கிறதே,  பின்னை  எங்கேயிருந்து  உமக்கு  ஜீவத்தண்ணீர்  உண்டாகும்.  (யோவான்  4:11)

atha’rku  antha  sthiree:  aa'ndavarea,  mo'nduko'l'la  ummidaththil  paaththiramillaiyea,  ki'na’rum  aazhamaayirukki’rathea,  pinnai  enggeayirunthu  umakku  jeevaththa'n'neer  u'ndaagum.  (yoavaan  4:11)

இந்தக்  கிணற்றை  எங்களுக்குத்  தந்த  நம்முடைய  பிதாவாகிய  யாக்கோபைப்பார்க்கிலும்  நீர்  பெரியவரோ?  அவரும்  அவர்  பிள்ளைகளும்  அவர்  மிருகஜீவன்களும்  இதிலே  குடித்ததுண்டே  என்றாள்.  (யோவான்  4:12)

inthak  ki'nat’rai  engga'lukkuth  thantha  nammudaiya  pithaavaagiya  yaakkoabaippaarkkilum  neer  periyavaroa?  avarum  avar  pi'l'laiga'lum  avar  mirugajeevanga'lum  ithilea  kudiththathu'ndea  en’raa'l.  (yoavaan  4:12)

இயேசு  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  இந்தத்  தண்ணீரைக்  குடிக்கிறவனுக்கு  மறுபடியும்  தாகமுண்டாகும்.  (யோவான்  4:13)

iyeasu  ava'lukkup  pirathiyuththaramaaga:  inthath  tha'n'neeraik  kudikki’ravanukku  ma’rupadiyum  thaagamu'ndaagum.  (yoavaan  4:13)

நான்  கொடுக்கும்  தண்ணீரைக்  குடிக்கிறவனுக்கோ  ஒருக்காலும்  தாகமுண்டாகாது;  நான்  அவனுக்குக்  கொடுக்கும்  தண்ணீர்  அவனுக்குள்ளே  நித்திய  ஜீவகாலமாய்  ஊறுகிற  நீரூற்றாயிருக்கும்  என்றார்.  (யோவான்  4:14)

naan  kodukkum  tha'n'neeraik  kudikki’ravanukkoa  orukkaalum  thaagamu'ndaagaathu;  naan  avanukkuk  kodukkum  tha'n'neer  avanukku'l'lea  niththiya  jeevakaalamaay  oo’rugi’ra  neeroot’raayirukkum  en’raar.  (yoavaan  4:14)

அந்த  ஸ்திரீ  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  எனக்குத்  தாகமுண்டாகாமலும்,  நான்  இங்கே  மொண்டுகொள்ள  வராமலுமிருக்கும்படி  அந்தத்  தண்ணீரை  எனக்குத்  தரவேண்டும்  என்றாள்.  (யோவான்  4:15)

antha  sthiree  avarai  noakki:  aa'ndavarea,  enakkuth  thaagamu'ndaagaamalum,  naan  inggea  mo'nduko'l'la  varaamalumirukkumpadi  anthath  tha'n'neerai  enakkuth  tharavea'ndum  en’raa'l.  (yoavaan  4:15)

இயேசு  அவளை  நோக்கி:  நீ  போய்,  உன்  புருஷனை  இங்கே  அழைத்துக்  கொண்டுவா  என்றார்.  (யோவான்  4:16)

iyeasu  ava'lai  noakki:  nee  poay,  un  purushanai  inggea  azhaiththuk  ko'nduvaa  en’raar.  (yoavaan  4:16)

அதற்கு  அந்த  ஸ்திரீ:  எனக்குப்  புருஷன்  இல்லை  என்றாள்.  இயேசு  அவளை  நோக்கி:  எனக்குப்  புருஷன்  இல்லையென்று  நீ  சொன்னது  சரிதான்.  (யோவான்  4:17)

atha’rku  antha  sthiree:  enakkup  purushan  illai  en’raa'l.  iyeasu  ava'lai  noakki:  enakkup  purushan  illaiyen’ru  nee  sonnathu  sarithaan.  (yoavaan  4:17)

எப்படியெனில்,  ஐந்து  புருஷர்  உனக்கிருந்தார்கள்,  இப்பொழுது  உனக்கிருக்கிறவன்  உனக்குப்  புருஷனல்ல,  இதை  உள்ளபடி  சொன்னாய்  என்றார்.  (யோவான்  4:18)

eppadiyenil,  ainthu  purushar  unakkirunthaarga'l,  ippozhuthu  unakkirukki’ravan  unakkup  purushanalla,  ithai  u'l'lapadi  sonnaay  en’raar.  (yoavaan  4:18)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  நீர்  தீர்க்கதரிசி  என்று  காண்கிறேன்.  (யோவான்  4:19)

appozhuthu  antha  sthiree  avarai  noakki:  aa'ndavarea,  neer  theerkkatharisi  en’ru  kaa'ngi’rean.  (yoavaan  4:19)

எங்கள்  பிதாக்கள்  இந்த  மலையிலே  தொழுதுகொண்டுவந்தார்கள்;  நீங்கள்  எருசலேமிலிருக்கிற  ஸ்தலத்திலே  தொழுதுகொள்ளவேண்டும்  என்கிறீர்களே  என்றாள்.  (யோவான்  4:20)

engga'l  pithaakka'l  intha  malaiyilea  thozhuthuko'nduvanthaarga'l;  neengga'l  erusaleamilirukki’ra  sthalaththilea  thozhuthuko'l'lavea'ndum  engi’reerga'lea  en’raa'l.  (yoavaan  4:20)

அதற்கு  இயேசு:  ஸ்திரீயே,  நான்  சொல்லுகிறதை  நம்பு,  நீங்கள்  இந்த  மலையிலும்  எருசலேமிலும்  மாத்திரமல்ல,  எங்கும்  பிதாவைத்  தொழுதுகொள்ளுங்காலம்  வருகிறது.  (யோவான்  4:21)

atha’rku  iyeasu:  sthireeyea,  naan  sollugi’rathai  nambu,  neengga'l  intha  malaiyilum  erusaleamilum  maaththiramalla,  enggum  pithaavaith  thozhuthuko'l'lungkaalam  varugi’rathu.  (yoavaan  4:21)

நீங்கள்  அறியாததைத்  தொழுதுகொள்ளுகிறீர்கள்;  நாங்கள்  அறிந்திருக்கிறதைத்  தொழுதுகொள்ளுகிறோம்;  ஏனென்றால்  இரட்சிப்பு  யூதர்கள்  வழியாய்  வருகிறது.  (யோவான்  4:22)

neengga'l  a’riyaathathaith  thozhuthuko'l'lugi’reerga'l;  naangga'l  a’rinthirukki’rathaith  thozhuthuko'l'lugi’roam;  eanen’raal  iradchippu  yootharga'l  vazhiyaay  varugi’rathu.  (yoavaan  4:22)

உண்மையாய்த்  தொழுதுகொள்ளுகிறவர்கள்  பிதாவை  ஆவியோடும்  உண்மையோடும்  தொழுதுகொள்ளுங்காலம்  வரும்,  அது  இப்பொழுதே  வந்திருக்கிறது;  தம்மைத்  தொழுதுகொள்ளுகிறவர்கள்  இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி  பிதாவானவர்  விரும்புகிறார்.  (யோவான்  4:23)

u'nmaiyaayth  thozhuthuko'l'lugi’ravarga'l  pithaavai  aaviyoadum  u'nmaiyoadum  thozhuthuko'l'lungkaalam  varum,  athu  ippozhuthea  vanthirukki’rathu;  thammaith  thozhuthuko'l'lugi’ravarga'l  ippadippattavarga'laayirukkumpadi  pithaavaanavar  virumbugi’raar.  (yoavaan  4:23)

தேவன்  ஆவியாயிருக்கிறார்,  அவரைத்  தொழுதுகொள்ளுகிறவர்கள்  ஆவியோடும்  உண்மையோடும்  அவரைத்  தொழுதுகொள்ளவேண்டும்  என்றார்.  (யோவான்  4:24)

theavan  aaviyaayirukki’raar,  avaraith  thozhuthuko'l'lugi’ravarga'l  aaviyoadum  u'nmaiyoadum  avaraith  thozhuthuko'l'lavea'ndum  en’raar.  (yoavaan  4:24)

அந்த  ஸ்திரீ  அவரை  நோக்கி:  கிறிஸ்து  என்னப்படுகிற  மேசியா  வருகிறார்  என்று  அறிவேன்,  அவர்  வரும்போது  எல்லாவற்றையும்  நமக்கு  அறிவிப்பார்  என்றாள்.  (யோவான்  4:25)

antha  sthiree  avarai  noakki:  ki’risthu  ennappadugi’ra  measiyaa  varugi’raar  en’ru  a’rivean,  avar  varumpoathu  ellaavat’raiyum  namakku  a’rivippaar  en’raa'l.  (yoavaan  4:25)

அதற்கு  இயேசு:  உன்னுடனே  பேசுகிற  நானே  அவர்  என்றார்.  (யோவான்  4:26)

atha’rku  iyeasu:  unnudanea  peasugi’ra  naanea  avar  en’raar.  (yoavaan  4:26)

அத்தருணத்தில்  அவருடைய  சீஷர்கள்  வந்து,  அவர்  ஸ்திரீயுடனே  பேசுகிறதைப்பற்றி  ஆச்சரியப்பட்டார்கள்.  ஆகிலும்  என்ன  தேடுகிறீரென்றாவது,  ஏன்  அவளுடனே  பேசுகிறீரென்றாவது,  ஒருவனும்  கேட்கவில்லை.  (யோவான்  4:27)

aththaru'naththil  avarudaiya  seesharga'l  vanthu,  avar  sthireeyudanea  peasugi’rathaippat’ri  aachchariyappattaarga'l.  aagilum  enna  theadugi’reeren’raavathu,  ean  ava'ludanea  peasugi’reeren’raavathu,  oruvanum  keadkavillai.  (yoavaan  4:27)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ,  தன்  குடத்தை  வைத்துவிட்டு,  ஊருக்குள்ளே  போய்,  ஜனங்களை  நோக்கி:  (யோவான்  4:28)

appozhuthu  antha  sthiree,  than  kudaththai  vaiththuvittu,  oorukku'l'lea  poay,  janangga'lai  noakki:  (yoavaan  4:28)

நான்  செய்த  எல்லாவற்றையும்  ஒரு  மனுஷன்  எனக்குச்  சொன்னார்;  அவரை  வந்து  பாருங்கள்;  அவர்  கிறிஸ்துதானோ  என்றாள்.  (யோவான்  4:29)

naan  seytha  ellaavat’raiyum  oru  manushan  enakkuch  sonnaar;  avarai  vanthu  paarungga'l;  avar  ki’risthuthaanoa  en’raa'l.  (yoavaan  4:29)

அப்பொழுது  அவர்கள்  ஊரிலிருந்து  புறப்பட்டு  அவரிடத்தில்  வந்தார்கள்.  (யோவான்  4:30)

appozhuthu  avarga'l  oorilirunthu  pu’rappattu  avaridaththil  vanthaarga'l.  (yoavaan  4:30)

இப்படி  நடக்கையில்  சீஷர்கள்  அவரை  நோக்கி:  ரபீ,  போஜனம்பண்ணும்  என்று  வேண்டிக்கொண்டார்கள்.  (யோவான்  4:31)

ippadi  nadakkaiyil  seesharga'l  avarai  noakki:  rabee,  poajanampa'n'num  en’ru  vea'ndikko'ndaarga'l.  (yoavaan  4:31)

அதற்கு  அவர்:  நான்  புசிப்பதற்கு  நீங்கள்  அறியாத  ஒரு  போஜனம்  எனக்கு  உண்டு  என்றார்.  (யோவான்  4:32)

atha’rku  avar:  naan  pusippatha’rku  neengga'l  a’riyaatha  oru  poajanam  enakku  u'ndu  en’raar.  (yoavaan  4:32)

அப்பொழுது  சீஷர்கள்  ஒருவரையொருவர்  பார்த்து:  யாராவது  அவருக்குப்  போஜனம்  கொண்டுவந்திருப்பானோ  என்றார்கள்.  (யோவான்  4:33)

appozhuthu  seesharga'l  oruvaraiyoruvar  paarththu:  yaaraavathu  avarukkup  poajanam  ko'nduvanthiruppaanoa  en’raarga'l.  (yoavaan  4:33)

இயேசு  அவர்களை  நோக்கி:  நான்  என்னை  அனுப்பினவருடைய  சித்தத்தின்படி  செய்து  அவருடைய  கிரியையை  முடிப்பதே  என்னுடைய  போஜனமாயிருக்கிறது.  (யோவான்  4:34)

iyeasu  avarga'lai  noakki:  naan  ennai  anuppinavarudaiya  siththaththinpadi  seythu  avarudaiya  kiriyaiyai  mudippathea  ennudaiya  poajanamaayirukki’rathu.  (yoavaan  4:34)

அறுப்புக்காலம்  வருகிறதற்கு  இன்னும்  நாலுமாதம்  செல்லும்  என்று  நீங்கள்  சொல்லுகிறதில்லையா?  இதோ,  வயல்  நிலங்கள்  இப்பொழுதே  அறுப்புக்கு  விளைந்திருக்கிறதென்று  உங்கள்  கண்களை  ஏறெடுத்துப்பாருங்கள்  என்று  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  4:35)

a’ruppukkaalam  varugi’ratha’rku  innum  naalumaatham  sellum  en’ru  neengga'l  sollugi’rathillaiyaa?  ithoa,  vayal  nilangga'l  ippozhuthea  a’ruppukku  vi'lainthirukki’rathen’ru  ungga'l  ka'nga'lai  ea'reduththuppaarungga'l  en’ru  naan  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  4:35)

விதைக்கிறவனும்  அறுக்கிறவனுமாகிய  இருவரும்  ஒருமித்துச்  சந்தோஷப்படத்தக்கதாக,  அறுக்கிறவன்  கூலியை  வாங்கி,  நித்திய  ஜீவனுக்காகப்  பலனைச்  சேர்த்துக்கொள்ளுகிறான்.  (யோவான்  4:36)

vithaikki’ravanum  a’rukki’ravanumaagiya  iruvarum  orumiththuch  santhoashappadaththakkathaaga,  a’rukki’ravan  kooliyai  vaanggi,  niththiya  jeevanukkaagap  palanaich  searththukko'l'lugi’raan.  (yoavaan  4:36)

விதைக்கிறவன்  ஒருவன்  அறுக்கிறவன்  ஒருவன்  என்கிற  மெய்யான  வழக்கச்சொல்  இதினாலே  விளங்குகிறது.  (யோவான்  4:37)

vithaikki’ravan  oruvan  a’rukki’ravan  oruvan  engi’ra  meyyaana  vazhakkachsol  ithinaalea  vi'langgugi’rathu.  (yoavaan  4:37)

நீங்கள்  பிரயாசப்பட்டுப்  பயிரிடாததை  அறுக்க  நான்  உங்களை  அனுப்பினேன்,  மற்றவர்கள்  பிரயாசப்பட்டார்கள்,  அவர்களுடைய  பிரயாசத்தின்  பலனை  நீங்கள்  பெற்றீர்கள்  என்றார்.  (யோவான்  4:38)

neengga'l  pirayaasappattup  payiridaathathai  a’rukka  naan  ungga'lai  anuppinean,  mat’ravarga'l  pirayaasappattaarga'l,  avarga'ludaiya  pirayaasaththin  palanai  neengga'l  pet’reerga'l  en’raar.  (yoavaan  4:38)

நான்  செய்த  எல்லாவற்றையும்  எனக்குச்  சொன்னார்  என்று  சாட்சி  சொன்ன  அந்த  ஸ்திரீயினுடைய  வார்த்தையினிமித்தம்  அந்த  ஊரிலுள்ள  சமாரியரில்  அநேகர்  அவர்மேல்  விசுவாசமுள்ளவர்களானார்கள்.  (யோவான்  4:39)

naan  seytha  ellaavat’raiyum  enakkuch  sonnaar  en’ru  saadchi  sonna  antha  sthireeyinudaiya  vaarththaiyinimiththam  antha  oorilu'l'la  samaariyaril  aneagar  avarmeal  visuvaasamu'l'lavarga'laanaarga'l.  (yoavaan  4:39)

சமாரியர்  அவரிடத்தில்  வந்து,  தங்களிடத்தில்  தங்கவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்;  அவர்  இரண்டுநாள்  அங்கே  தங்கினார்.  (யோவான்  4:40)

samaariyar  avaridaththil  vanthu,  thangga'lidaththil  thanggavea'ndumen’ru  avarai  vea'ndikko'ndaarga'l;  avar  ira'ndunaa'l  anggea  thangginaar.  (yoavaan  4:40)

அப்பொழுது  அவருடைய  உபதேசத்தினிமித்தம்  இன்னும்  அநேகம்பேர்  விசுவாசித்து,  (யோவான்  4:41)

appozhuthu  avarudaiya  ubatheasaththinimiththam  innum  aneagampear  visuvaasiththu,  (yoavaan  4:41)

அந்த  ஸ்திரீயை  நோக்கி:  உன்  சொல்லினிமித்தம்  அல்ல,  அவருடைய  உபதேசத்தை  நாங்களே  கேட்டு,  அவர்  மெய்யாய்க்  கிறிஸ்துவாகிய  உலகரட்சகர்  என்று  அறிந்து  விசுவாசிக்கிறோம்  என்றார்கள்.  (யோவான்  4:42)

antha  sthireeyai  noakki:  un  sollinimiththam  alla,  avarudaiya  ubatheasaththai  naangga'lea  keattu,  avar  meyyaayk  ki’risthuvaagiya  ulagaradchagar  en’ru  a’rinthu  visuvaasikki’roam  en’raarga'l.  (yoavaan  4:42)

இரண்டுநாளைக்குப்பின்பு  அவர்  அவ்விடம்விட்டுப்  புறப்பட்டு,  கலிலேயாவுக்குப்  போனார்.  (யோவான்  4:43)

ira'ndunaa'laikkuppinbu  avar  avvidamvittup  pu’rappattu,  kalileayaavukkup  poanaar.  (yoavaan  4:43)

ஒரு  தீர்க்கதரிசிக்குத்  தன்  சொந்த  ஊரிலே  கனமில்லையென்று  இயேசு  தாமே  சொல்லியிருந்தார்.  (யோவான்  4:44)

oru  theerkkatharisikkuth  than  sontha  oorilea  kanamillaiyen’ru  iyeasu  thaamea  solliyirunthaar.  (yoavaan  4:44)

அவர்  கலிலேயாவில்  வந்தபோது,  எருசலேமில்  பண்டிகையிலே  அவர்  செய்த  எல்லாவற்றையும்  பார்த்திருந்த  கலிலேயர்  அவரை  ஏற்றுக்கொண்டார்கள்;  அவர்களும்  பண்டிகைக்குப்  போயிருந்தார்கள்.  (யோவான்  4:45)

avar  kalileayaavil  vanthapoathu,  erusaleamil  pa'ndigaiyilea  avar  seytha  ellaavat’raiyum  paarththiruntha  kalileayar  avarai  eat’rukko'ndaarga'l;  avarga'lum  pa'ndigaikkup  poayirunthaarga'l.  (yoavaan  4:45)

பின்பு,  இயேசு  தாம்  தண்ணீரைத்  திராட்சரசமாக்கின  கலிலேயாவிலுள்ள  கானா  ஊருக்கு  மறுபடியும்  வந்தார்;  அப்பொழுது  கப்பர்நகூமிலே  ராஜாவின்  மனுஷரில்  ஒருவனுடைய  குமாரன்  வியாதியாயிருந்தான்.  (யோவான்  4:46)

pinbu,  iyeasu  thaam  tha'n'neeraith  thiraadcharasamaakkina  kalileayaavilu'l'la  kaanaa  oorukku  ma’rupadiyum  vanthaar;  appozhuthu  kapparnahoomilea  raajaavin  manusharil  oruvanudaiya  kumaaran  viyaathiyaayirunthaan.  (yoavaan  4:46)

இயேசு  யூதேயாவிலிருந்து  கலிலேயாவுக்கு  வந்தாரென்று  அந்த  மனுஷன்  கேள்விப்பட்டபோது,  அவரிடத்திற்குப்  போய்,  தன்  மகன்  மரண  அவஸ்தையாயிருந்தபடியினாலே,  அவனைக்  குணமாக்கும்படிக்கு  வரவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டான்.  (யோவான்  4:47)

iyeasu  yootheayaavilirunthu  kalileayaavukku  vanthaaren’ru  antha  manushan  kea'lvippattapoathu,  avaridaththi’rkup  poay,  than  magan  mara'na  avasthaiyaayirunthapadiyinaalea,  avanaik  ku'namaakkumpadikku  varavea'ndumen’ru  avarai  vea'ndikko'ndaan.  (yoavaan  4:47)

அப்பொழுது  இயேசு  அவனை  நோக்கி:  நீங்கள்  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  காணாவிட்டால்  விசுவாசிக்கமாட்டீர்கள்  என்றார்.  (யோவான்  4:48)

appozhuthu  iyeasu  avanai  noakki:  neengga'l  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  kaa'naavittaal  visuvaasikkamaatteerga'l  en’raar.  (yoavaan  4:48)

அதற்கு  ராஜாவின்  மனுஷன்:  ஆண்டவரே,  என்  பிள்ளை  சாகிறதற்குமுன்னே  வரவேண்டும்  என்றான்.  (யோவான்  4:49)

atha’rku  raajaavin  manushan:  aa'ndavarea,  en  pi'l'lai  saagi’ratha’rkumunnea  varavea'ndum  en’raan.  (yoavaan  4:49)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  போகலாம்,  உன்  குமாரன்  பிழைத்திருக்கிறான்  என்றார்.  அந்த  மனுஷன்,  இயேசு  சொன்ன  வார்த்தையை  நம்பிப்  போனான்.  (யோவான்  4:50)

iyeasu  avanai  noakki:  nee  poagalaam,  un  kumaaran  pizhaiththirukki’raan  en’raar.  antha  manushan,  iyeasu  sonna  vaarththaiyai  nambip  poanaan.  (yoavaan  4:50)

அவன்  போகையில்,  அவனுடைய  ஊழியக்காரர்  அவனுக்கு  எதிர்கொண்டுவந்து,  உம்முடைய  குமாரன்  பிழைத்திருக்கிறான்  என்று  அறிவித்தார்கள்.  (யோவான்  4:51)

avan  poagaiyil,  avanudaiya  oozhiyakkaarar  avanukku  ethirko'nduvanthu,  ummudaiya  kumaaran  pizhaiththirukki’raan  en’ru  a’riviththaarga'l.  (yoavaan  4:51)

அப்பொழுது:  எந்த  மணிநேரத்தில்  அவனுக்குக்  குணமுண்டாயிற்று  என்று  அவர்களிடத்தில்  விசாரித்தான்.  அவர்கள்:  நேற்று  ஏழாமணிநேரத்தில்  ஜுரம்  அவனை  விட்டது  என்றார்கள்.  (யோவான்  4:52)

appozhuthu:  entha  ma'ninearaththil  avanukkuk  ku'namu'ndaayit’ru  en’ru  avarga'lidaththil  visaariththaan.  avarga'l:  neat’ru  eazhaama'ninearaththil  juram  avanai  vittathu  en’raarga'l.  (yoavaan  4:52)

உன்  குமாரன்  பிழைத்திருக்கிறான்  என்று  இயேசு  தன்னுடனே  சொன்ன  மணிநேரம்  அதுவே  என்று  தகப்பன்  அறிந்து,  அவனும்  அவன்  வீட்டாரனைவரும்  விசுவாசித்தார்கள்.  (யோவான்  4:53)

un  kumaaran  pizhaiththirukki’raan  en’ru  iyeasu  thannudanea  sonna  ma'ninearam  athuvea  en’ru  thagappan  a’rinthu,  avanum  avan  veettaaranaivarum  visuvaasiththaarga'l.  (yoavaan  4:53)

இயேசு  யூதேயாவிலிருந்து  கலிலேயாவுக்குத்  திரும்பிவந்தபின்பு,  இது  அவர்  செய்த  இரண்டாம்  அற்புதம்.  (யோவான்  4:54)

iyeasu  yootheayaavilirunthu  kalileayaavukkuth  thirumbivanthapinbu,  ithu  avar  seytha  ira'ndaam  a’rputham.  (yoavaan  4:54)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!