Friday, May 13, 2016

Yoavaan 19 | யோவான் 19 | John 19

அப்பொழுது  பிலாத்து  இயேசுவைப்  பிடித்து  வாரினால்  அடிப்பித்தான்.  (யோவான்  19:1)

appozhuthu  pilaaththu  iyeasuvaip  pidiththu  vaarinaal  adippiththaan.  (yoavaan  19:1)

போர்ச்சேவகர்  முள்ளுகளினால்  ஒரு  முடியைப்  பின்னி  அவர்  சிரசின்மேல்  வைத்து,  சிவப்பான  ஒரு  அங்கியை  அவருக்கு  உடுத்தி:  (யோவான்  19:2)

poarchseavagar  mu'l'luga'linaal  oru  mudiyaip  pinni  avar  sirasinmeal  vaiththu,  sivappaana  oru  anggiyai  avarukku  uduththi:  (yoavaan  19:2)

யூதருடைய  ராஜாவே,  வாழ்க  என்று  சொல்லி,  அவரைக்  கையினால்  அடித்தார்கள்.  (யோவான்  19:3)

yootharudaiya  raajaavea,  vaazhga  en’ru  solli,  avaraik  kaiyinaal  adiththaarga'l.  (yoavaan  19:3)

பிலாத்து  மறுபடியும்  வெளியே  வந்து:  நான்  இவனிடத்தில்  ஒரு  குற்றமும்  காணேன்  என்று  நீங்கள்  அறியும்படிக்கு,  இதோ,  உங்களிடத்தில்  இவனை  வெளியே  கொண்டுவருகிறேன்  என்றான்.  (யோவான்  19:4)

pilaaththu  ma’rupadiyum  ve'liyea  vanthu:  naan  ivanidaththil  oru  kut’ramum  kaa'nean  en’ru  neengga'l  a’riyumpadikku,  ithoa,  ungga'lidaththil  ivanai  ve'liyea  ko'nduvarugi’rean  en’raan.  (yoavaan  19:4)

இயேசு,  முள்முடியும்  சிவப்பங்கியும்  தரித்தவராய்,  வெளியே  வந்தார்.  அப்பொழுது  பிலாத்து  அவர்களை  நோக்கி:  இதோ,  இந்த  மனுஷன்  என்றான்.  (யோவான்  19:5)

iyeasu,  mu'lmudiyum  sivappanggiyum  thariththavaraay,  ve'liyea  vanthaar.  appozhuthu  pilaaththu  avarga'lai  noakki:  ithoa,  intha  manushan  en’raan.  (yoavaan  19:5)

பிரதான  ஆசாரியரும்  சேவகரும்  அவரைக்  கண்டபோது:  சிலுவையில்  அறையும்  சிலுவையில்  அறையும்  என்று  சத்தமிட்டார்கள்.  அதற்குப்  பிலாத்து:  நீங்களே  இவனைக்  கொண்டுபோய்ச்  சிலுவையில்  அறையுங்கள்,  நான்  இவனிடத்தில்  ஒரு  குற்றமும்  காணேன்  என்றான்.  (யோவான்  19:6)

pirathaana  aasaariyarum  seavagarum  avaraik  ka'ndapoathu:  siluvaiyil  a’raiyum  siluvaiyil  a’raiyum  en’ru  saththamittaarga'l.  atha’rkup  pilaaththu:  neengga'lea  ivanaik  ko'ndupoaych  siluvaiyil  a’raiyungga'l,  naan  ivanidaththil  oru  kut’ramum  kaa'nean  en’raan.  (yoavaan  19:6)

யூதர்கள்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  எங்களுக்கு  ஒரு  நியாயப்பிரமாணமுண்டு,  இவன்  தன்னைத்  தேவனுடைய  குமாரனென்று  சொன்னபடியினால்,  அந்த  நியாயப்பிரமாணத்தின்படியே,  இவன்  சாகவேண்டும்  என்றார்கள்.  (யோவான்  19:7)

yootharga'l  avanukkup  pirathiyuththaramaaga:  engga'lukku  oru  niyaayappiramaa'namu'ndu,  ivan  thannaith  theavanudaiya  kumaaranen’ru  sonnapadiyinaal,  antha  niyaayappiramaa'naththinpadiyea,  ivan  saagavea'ndum  en’raarga'l.  (yoavaan  19:7)

பிலாத்து  இந்த  வார்த்தையைக்  கேட்டபொழுது  அதிகமாய்ப்  பயந்து,  (யோவான்  19:8)

pilaaththu  intha  vaarththaiyaik  keattapozhuthu  athigamaayp  bayanthu,  (yoavaan  19:8)

மறுபடியும்  அரமனைக்குள்ளே  போய்,  இயேசுவை  நோக்கி:  நீ  எங்கேயிருந்து  வந்தவன்  என்றான்.  அதற்கு  இயேசு  மாறுத்தரம்  ஒன்றும்  சொல்லவில்லை.  (யோவான்  19:9)

ma’rupadiyum  aramanaikku'l'lea  poay,  iyeasuvai  noakki:  nee  enggeayirunthu  vanthavan  en’raan.  atha’rku  iyeasu  maa’ruththaram  on’rum  sollavillai.  (yoavaan  19:9)

அப்பொழுது  பிலாத்து:  நீ  என்னோடே  பேசுகிறதில்லையா?  உன்னைச்  சிலுவையில்  அறைய  எனக்கு  அதிகாரமுண்டென்றும்,  உன்னை  விடுதலைபண்ண  எனக்கு  அதிகாரமுண்டென்றும்  உனக்குத்  தெரியாதா  என்றான்.  (யோவான்  19:10)

appozhuthu  pilaaththu:  nee  ennoadea  peasugi’rathillaiyaa?  unnaich  siluvaiyil  a’raiya  enakku  athigaaramu'nden’rum,  unnai  viduthalaipa'n'na  enakku  athigaaramu'nden’rum  unakkuth  theriyaathaa  en’raan.  (yoavaan  19:10)

இயேசு  பிரதியுத்தரமாக:  பரத்திலிருந்து  உமக்குக்  கொடுக்கப்படாதிருந்தால்,  என்மேல்  உமக்கு  ஒரு  அதிகாரமுமிராது;  ஆனபடியினாலே  என்னை  உம்மிடத்தில்  ஒப்புக்கொடுத்தவனுக்கு  அதிக  பாவமுண்டு  என்றார்.  (யோவான்  19:11)

iyeasu  pirathiyuththaramaaga:  paraththilirunthu  umakkuk  kodukkappadaathirunthaal,  enmeal  umakku  oru  athigaaramumiraathu;  aanapadiyinaalea  ennai  ummidaththil  oppukkoduththavanukku  athiga  paavamu'ndu  en’raar.  (yoavaan  19:11)

அதுமுதல்  பிலாத்து  அவரை  விடுதலைபண்ண  வகைதேடினான்.  யூதர்கள்  அவனை  நோக்கி:  இவனை  விடுதலைபண்ணினால்  நீர்  இராயனுக்குச்  சிநேகிதனல்ல;  தன்னை  ராஜாவென்கிறவனெவனோ  அவன்  இராயனுக்கு  விரோதி  என்று  சத்தமிட்டார்கள்.  (யோவான்  19:12)

athumuthal  pilaaththu  avarai  viduthalaipa'n'na  vagaitheadinaan.  yootharga'l  avanai  noakki:  ivanai  viduthalaipa'n'ninaal  neer  iraayanukkuch  sineagithanalla;  thannai  raajaavengi’ravanevanoa  avan  iraayanukku  viroathi  en’ru  saththamittaarga'l.  (yoavaan  19:12)

பிலாத்து  இந்த  வார்த்தையைக்  கேட்டபொழுது,  இயேசுவை  வெளியே  அழைத்துவந்து,  தளவரிசைப்படுத்தின  மேடையென்றும்,  எபிரெயு  பாஷையிலே  கபத்தா  என்றும்  சொல்லப்பட்ட  இடத்திலே,  நியாயாசனத்தின்மேல்  உட்கார்ந்தான்.  (யோவான்  19:13)

pilaaththu  intha  vaarththaiyaik  keattapozhuthu,  iyeasuvai  ve'liyea  azhaiththuvanthu,  tha'lavarisaippaduththina  meadaiyen’rum,  ebireyu  baashaiyilea  kabaththaa  en’rum  sollappatta  idaththilea,  niyaayaasanaththinmeal  udkaarnthaan.  (yoavaan  19:13)

அந்த  நாள்  பஸ்காவுக்கு  ஆயத்தநாளும்  ஏறக்குறைய  ஆறுமணி  நேரமுமாயிருந்தது;  அப்பொழுது  அவன்  யூதர்களை  நோக்கி:  இதோ,  உங்கள்  ராஜா  என்றான்.  (யோவான்  19:14)

antha  naa'l  paskaavukku  aayaththanaa'lum  ea’rakku’raiya  aa’ruma'ni  nearamumaayirunthathu;  appozhuthu  avan  yootharga'lai  noakki:  ithoa,  ungga'l  raajaa  en’raan.  (yoavaan  19:14)

அவர்கள்:  இவனை  அகற்றும்  அகற்றும்,  சிலுவையில்  அறையும்  என்று  சத்தமிட்டார்கள்.  அதற்குப்  பிலாத்து:  உங்கள்  ராஜாவை  நான்  சிலுவையில்  அறையலாமா  என்றான்.  பிரதான  ஆசாரியர்  பிரதியுத்தரமாக:  இராயனேயல்லாமல்  எங்களுக்கு  வேறே  ராஜா  இல்லை  என்றார்கள்.  (யோவான்  19:15)

avarga'l:  ivanai  agat’rum  agat’rum,  siluvaiyil  a’raiyum  en’ru  saththamittaarga'l.  atha’rkup  pilaaththu:  ungga'l  raajaavai  naan  siluvaiyil  a’raiyalaamaa  en’raan.  pirathaana  aasaariyar  pirathiyuththaramaaga:  iraayaneayallaamal  engga'lukku  vea’rea  raajaa  illai  en’raarga'l.  (yoavaan  19:15)

அப்பொழுது  அவரைச்  சிலுவையில்  அறையும்படிக்கு  அவர்களிடத்தில்  ஒப்புக்கொடுத்தான்.  அவர்கள்  இயேசுவைப்  பிடித்துக்கொண்டுபோனார்கள்.  (யோவான்  19:16)

appozhuthu  avaraich  siluvaiyil  a’raiyumpadikku  avarga'lidaththil  oppukkoduththaan.  avarga'l  iyeasuvaip  pidiththukko'ndupoanaarga'l.  (yoavaan  19:16)

அவர்  தம்முடைய  சிலுவையைச்  சுமந்துகொண்டு,  எபிரெயு  பாஷையிலே  கொல்கொதா  என்று  சொல்லப்படும்  கபாலஸ்தலம்  என்கிற  இடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்.  (யோவான்  19:17)

avar  thammudaiya  siluvaiyaich  sumanthuko'ndu,  ebireyu  baashaiyilea  kolgothaa  en’ru  sollappadum  kabaalasthalam  engi’ra  idaththi’rkup  pu’rappattuppoanaar.  (yoavaan  19:17)

அங்கே  அவரைச்  சிலுவையில்  அறைந்தார்கள்;  அவரோடேகூட  வேறிரண்டுபேரை  இரண்டு  பக்கங்களிலும்  இயேசுவை  நடுவிலுமாகச்  சிலுவைகளில்  அறைந்தார்கள்.  (யோவான்  19:18)

anggea  avaraich  siluvaiyil  a’rainthaarga'l;  avaroadeakooda  vea’rira'ndupearai  ira'ndu  pakkangga'lilum  iyeasuvai  naduvilumaagach  siluvaiga'lil  a’rainthaarga'l.  (yoavaan  19:18)

பிலாத்து  ஒரு  மேல்விலாசத்தை  எழுதி,  சிலுவையின்மேல்  போடுவித்தான்.  அதில்  நசரேயனாகிய  இயேசு  யூதருடைய  ராஜா  என்று  எழுதியிருந்தது.  (யோவான்  19:19)

pilaaththu  oru  mealvilaasaththai  ezhuthi,  siluvaiyinmeal  poaduviththaan.  athil  nasareayanaagiya  iyeasu  yootharudaiya  raajaa  en’ru  ezhuthiyirunthathu.  (yoavaan  19:19)

இயேசு  சிலுவையில்  அறையப்பட்ட  இடம்  நகரத்திற்குச்  சமீபமாயிருந்தபடியினால்,  யூதரில்  அநேகர்  அந்த  மேல்விலாசத்தை  வாசித்தார்கள்;  அது  எபிரெயு  கிரேக்கு  லத்தீன்  பாஷைகளில்  எழுதியிருந்தது.  (யோவான்  19:20)

iyeasu  siluvaiyil  a’raiyappatta  idam  nagaraththi’rkuch  sameebamaayirunthapadiyinaal,  yootharil  aneagar  antha  mealvilaasaththai  vaasiththaarga'l;  athu  ebireyu  kireakku  laththeen  baashaiga'lil  ezhuthiyirunthathu.  (yoavaan  19:20)

அப்பொழுது  யூதருடைய  பிரதான  ஆசாரியர்  பிலாத்துவை  நோக்கி:  யூதருடைய  ராஜா  என்று  நீர்  எழுதாமல்,  தான்  யூதருடைய  ராஜா  என்று  அவன்  சொன்னதாக  எழுதும்  என்றார்கள்.  (யோவான்  19:21)

appozhuthu  yootharudaiya  pirathaana  aasaariyar  pilaaththuvai  noakki:  yootharudaiya  raajaa  en’ru  neer  ezhuthaamal,  thaan  yootharudaiya  raajaa  en’ru  avan  sonnathaaga  ezhuthum  en’raarga'l.  (yoavaan  19:21)

பிலாத்து  பிரதியுத்தரமாக:  நான்  எழுதினது  எழுதினதே  என்றான்.  (யோவான்  19:22)

pilaaththu  pirathiyuththaramaaga:  naan  ezhuthinathu  ezhuthinathea  en’raan.  (yoavaan  19:22)

போர்ச்சேவகர்  இயேசுவைச்  சிலுவையில்  அறைந்தபின்பு,  அவருடைய  வஸ்திரங்களை  எடுத்து,  ஒவ்வொரு  சேவகனுக்கு  ஒவ்வொரு  பங்காக  நாலு  பங்காக்கினார்கள்;  அங்கியையும்  எடுத்தார்கள்,  அந்த  அங்கி,  தையலில்லாமல்  மேலே  தொடங்கி  முழுவதும்  நெய்யப்பட்டதாயிருந்தது.  (யோவான்  19:23)

poarchseavagar  iyeasuvaich  siluvaiyil  a’rainthapinbu,  avarudaiya  vasthirangga'lai  eduththu,  ovvoru  seavaganukku  ovvoru  panggaaga  naalu  panggaakkinaarga'l;  anggiyaiyum  eduththaarga'l,  antha  anggi,  thaiyalillaamal  mealea  thodanggi  muzhuvathum  neyyappattathaayirunthathu.  (yoavaan  19:23)

அவர்கள்:  இதை  நாம்  கிழியாமல்,  யாருக்கு  வருமோ  என்று  இதைக்குறித்துச்  சீட்டுப்போடுவோம்  என்று  ஒருவரோடொருவர்  பேசிக்கொண்டார்கள்.  என்  வஸ்திரங்களைத்  தங்களுக்குள்ளே  பங்கிட்டு,  என்  உடையின்மேல்  சீட்டுப்போட்டார்கள்  என்கிற  வேதவாக்கியம்  நிறைவேறத்தக்கதாகப்  போர்ச்சேவகர்  இப்படிச்  செய்தார்கள்.  (யோவான்  19:24)

avarga'l:  ithai  naam  kizhiyaamal,  yaarukku  varumoa  en’ru  ithaikku’riththuch  seettuppoaduvoam  en’ru  oruvaroadoruvar  peasikko'ndaarga'l.  en  vasthirangga'laith  thangga'lukku'l'lea  panggittu,  en  udaiyinmeal  seettuppoattaarga'l  engi’ra  veathavaakkiyam  ni’raivea’raththakkathaagap  poarchseavagar  ippadich  seythaarga'l.  (yoavaan  19:24)

இயேசுவின்  சிலுவையினருகே  அவருடைய  தாயும்,  அவருடைய  தாயின்  சகோதரி  கிலெயோப்பா  மரியாளும்,  மகதலேனா  மரியாளும்  நின்றுகொண்டிருந்தார்கள்.  (யோவான்  19:25)

iyeasuvin  siluvaiyinarugea  avarudaiya  thaayum,  avarudaiya  thaayin  sagoathari  kileyoappaa  mariyaa'lum,  magathaleanaa  mariyaa'lum  nin’ruko'ndirunthaarga'l.  (yoavaan  19:25)

அப்பொழுது  இயேசு  தம்முடைய  தாயையும்  அருகே  நின்ற  தமக்கு  அன்பாயிருந்த  சீஷனையும்  கண்டு,  தம்முடைய  தாயை  நோக்கி:  ஸ்திரீயே,  அதோ,  உன்  மகன்  என்றார்.  (யோவான்  19:26)

appozhuthu  iyeasu  thammudaiya  thaayaiyum  arugea  nin’ra  thamakku  anbaayiruntha  seeshanaiyum  ka'ndu,  thammudaiya  thaayai  noakki:  sthireeyea,  athoa,  un  magan  en’raar.  (yoavaan  19:26)

பின்பு  அந்தச்  சீஷனை  நோக்கி:  அதோ,  உன்  தாய்  என்றார்.  அந்நேரமுதல்  அந்தச்  சீஷன்  அவளைத்  தன்னிடமாய்  ஏற்றுக்கொண்டான்.  (யோவான்  19:27)

pinbu  anthach  seeshanai  noakki:  athoa,  un  thaay  en’raar.  annearamuthal  anthach  seeshan  ava'laith  thannidamaay  eat’rukko'ndaan.  (yoavaan  19:27)

அதன்பின்பு,  எல்லாம்  முடிந்தது  என்று  இயேசு  அறிந்து,  வேதவாக்கியம்  நிறைவேறத்தக்கதாக:  தாகமாயிருக்கிறேன்  என்றார்.  (யோவான்  19:28)

athanpinbu,  ellaam  mudinthathu  en’ru  iyeasu  a’rinthu,  veathavaakkiyam  ni’raivea’raththakkathaaga:  thaagamaayirukki’rean  en’raar.  (yoavaan  19:28)

காடி  நிறைந்த  பாத்திரம்  அங்கே  வைக்கப்பட்டிருந்தது;  அவர்கள்  கடற்காளானைக்  காடியிலே  தோய்த்து,  ஈசோப்புத்தண்டில்  மாட்டி,  அவர்  வாயினிடத்தில்  நீட்டிக்கொடுத்தார்கள்.  (யோவான்  19:29)

kaadi  ni’raintha  paaththiram  anggea  vaikkappattirunthathu;  avarga'l  kada’rkaa'laanaik  kaadiyilea  thoayththu,  eesoappuththa'ndil  maatti,  avar  vaayinidaththil  neettikkoduththaarga'l.  (yoavaan  19:29)

இயேசு  காடியை  வாங்கினபின்பு,  முடிந்தது  என்று  சொல்லி,  தலையைச்  சாய்த்து,  ஆவியை  ஒப்புக்கொடுத்தார்.  (யோவான்  19:30)

iyeasu  kaadiyai  vaangginapinbu,  mudinthathu  en’ru  solli,  thalaiyaich  saayththu,  aaviyai  oppukkoduththaar.  (yoavaan  19:30)

அந்த  நாள்  பெரிய  ஓய்வுநாளுக்கு  ஆயத்தநாளாயிருந்தபடியினால்,  உடல்கள்  அந்த  ஓய்வுநாளிலே  சிலுவைகளில்  இராதபடிக்கு,  யூதர்கள்  பிலாத்துவினிடத்தில்  போய்,  அவர்களுடைய  காலெலும்புகளை  முறிக்கும்படிக்கும்,  உடல்களை  எடுத்துப்போடும்படிக்கும்  உத்தரவு  கேட்டுக்கொண்டார்கள்.  (யோவான்  19:31)

antha  naa'l  periya  oayvunaa'lukku  aayaththanaa'laayirunthapadiyinaal,  udalga'l  antha  oayvunaa'lilea  siluvaiga'lil  iraathapadikku,  yootharga'l  pilaaththuvinidaththil  poay,  avarga'ludaiya  kaalelumbuga'lai  mu’rikkumpadikkum,  udalga'lai  eduththuppoadumpadikkum  uththaravu  keattukko'ndaarga'l.  (yoavaan  19:31)

அந்தப்படி  போர்ச்சேவகர்  வந்து,  அவருடனேகூடச்  சிலுவையில்  அறையப்பட்ட  முந்தினவனுடைய  காலெலும்புகளையும்  மற்றவனுடைய  காலெலும்புகளையும்  முறித்தார்கள்.  (யோவான்  19:32)

anthappadi  poarchseavagar  vanthu,  avarudaneakoodach  siluvaiyil  a’raiyappatta  munthinavanudaiya  kaalelumbuga'laiyum  mat’ravanudaiya  kaalelumbuga'laiyum  mu’riththaarga'l.  (yoavaan  19:32)

அவர்கள்  இயேசுவினிடத்தில்  வந்து,  அவர்  மரித்திருக்கிறதைக்  கண்டு,  அவருடைய  காலெலும்புகளை  முறிக்கவில்லை.  (யோவான்  19:33)

avarga'l  iyeasuvinidaththil  vanthu,  avar  mariththirukki’rathaik  ka'ndu,  avarudaiya  kaalelumbuga'lai  mu’rikkavillai.  (yoavaan  19:33)

ஆகிலும்  போர்ச்சேவகரில்  ஒருவன்  ஈட்டியினாலே  அவருடைய  விலாவில்  குத்தினான்;  உடனே  இரத்தமும்  தண்ணீரும்  புறப்பட்டது.  (யோவான்  19:34)

aagilum  poarchseavagaril  oruvan  eettiyinaalea  avarudaiya  vilaavil  kuththinaan;  udanea  iraththamum  tha'n'neerum  pu’rappattathu.  (yoavaan  19:34)

அதைக்  கண்டவன்  சாட்சிகொடுக்கிறான்,  அவனுடைய  சாட்சி  மெய்யாயிருக்கிறது;  நீங்கள்  விசுவாசிக்கும்படி,  தான்  சொல்லுகிறது  மெய்யென்று  அவன்  அறிந்திருக்கிறான்.  (யோவான்  19:35)

athaik  ka'ndavan  saadchikodukki’raan,  avanudaiya  saadchi  meyyaayirukki’rathu;  neengga'l  visuvaasikkumpadi,  thaan  sollugi’rathu  meyyen’ru  avan  a’rinthirukki’raan.  (yoavaan  19:35)

அவருடைய  எலும்புகளில்  ஒன்றும்  முறிக்கப்படுவதில்லை  என்கிற  வேதவாக்கியம்  நிறைவேறும்படி  இவைகள்  நடந்தது.  (யோவான்  19:36)

avarudaiya  elumbuga'lil  on’rum  mu’rikkappaduvathillai  engi’ra  veathavaakkiyam  ni’raivea’rumpadi  ivaiga'l  nadanthathu.  (yoavaan  19:36)

அல்லாமலும்  தாங்கள்  குத்தினவரை  நோக்கிப்பார்ப்பார்கள்  என்று  வேறொரு  வேதவாக்கியம்  சொல்லுகிறது.  (யோவான்  19:37)

allaamalum  thaangga'l  kuththinavarai  noakkippaarppaarga'l  en’ru  vea’roru  veathavaakkiyam  sollugi’rathu.  (yoavaan  19:37)

இவைகளுக்குப்பின்பு  அரிமத்தியா  ஊரானும்,  யூதருக்குப்  பயந்ததினால்  இயேசுவுக்கு  அந்தரங்க  சீஷனுமாகிய  யோசேப்பு  இயேசுவின்  சரீரத்தை  எடுத்துக்கொண்டுபோகும்படி  பிலாத்துவினிடத்தில்  உத்தரவு  கேட்டான்;  பிலாத்து  உத்தரவு  கொடுத்தான்.  ஆகையால்  அவன்  வந்து,  இயேசுவின்  சரீரத்தை  எடுத்துக்கொண்டுபோனான்.  (யோவான்  19:38)

ivaiga'lukkuppinbu  arimaththiyaa  ooraanum,  yootharukkup  bayanthathinaal  iyeasuvukku  antharangga  seeshanumaagiya  yoaseappu  iyeasuvin  sareeraththai  eduththukko'ndupoagumpadi  pilaaththuvinidaththil  uththaravu  keattaan;  pilaaththu  uththaravu  koduththaan.  aagaiyaal  avan  vanthu,  iyeasuvin  sareeraththai  eduththukko'ndupoanaan.  (yoavaan  19:38)

ஆரம்பத்திலே  ஒரு  இராத்திரியில்  இயேசுவினிடத்தில்  வந்திருந்த  நிக்கொதேமு  என்பவன்  வெள்ளைப்போளமும்  கரியபோளமும்  கலந்து  ஏறக்குறைய  நூறு  இராத்தல்  கொண்டுவந்தான்.  (யோவான்  19:39)

aarambaththilea  oru  iraaththiriyil  iyeasuvinidaththil  vanthiruntha  nikkotheamu  enbavan  ve'l'laippoa'lamum  kariyapoa'lamum  kalanthu  ea’rakku’raiya  noo’ru  iraaththal  ko'nduvanthaan.  (yoavaan  19:39)

அவர்கள்  இயேசுவின்  சரீரத்தை  எடுத்து,  யூதர்கள்  அடக்கம்பண்ணும்  முறைமையின்படியே  அதைச்  சுகந்தவர்க்கங்களுடனே  சீலைகளில்  சுற்றிக்  கட்டினார்கள்.  (யோவான்  19:40)

avarga'l  iyeasuvin  sareeraththai  eduththu,  yootharga'l  adakkampa'n'num  mu’raimaiyinpadiyea  athaich  suganthavarkkangga'ludanea  seelaiga'lil  sut’rik  kattinaarga'l.  (yoavaan  19:40)

அவர்  சிலுவையில்  அறையப்பட்ட  இடத்தில்  ஒரு  தோட்டமும்,  அந்தத்  தோட்டத்தில்  ஒருக்காலும்  ஒருவனும்  வைக்கப்பட்டிராத  ஒரு  புதிய  கல்லறையும்  இருந்தது.  (யோவான்  19:41)

avar  siluvaiyil  a’raiyappatta  idaththil  oru  thoattamum,  anthath  thoattaththil  orukkaalum  oruvanum  vaikkappattiraatha  oru  puthiya  kalla’raiyum  irunthathu.  (yoavaan  19:41)

யூதருடைய  ஆயத்தநாளானபடியினாலும்,  அந்தக்  கல்லறை  சமீபமாயிருந்தபடியினாலும்,  அவ்விடத்திலே  இயேசுவை  வைத்தார்கள்.  (யோவான்  19:42)

yootharudaiya  aayaththanaa'laanapadiyinaalum,  anthak  kalla’rai  sameebamaayirunthapadiyinaalum,  avvidaththilea  iyeasuvai  vaiththaarga'l.  (yoavaan  19:42)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!