Monday, May 02, 2016

Maa’rku 16 | மாற்கு 16 | Mark 16

ஓய்வுநாளானபின்பு  மகதலேனா  மரியாளும்,  யாக்கோபின்  தாயாகிய  மரியாளும்,  சலோமே  என்பவளும்,  அவருக்குச்  சுகந்தவர்க்கமிடும்படி  அவைகளை  வாங்கிக்கொண்டு,  (மாற்கு  16:1)

oayvunaa'laanapinbu  magathaleanaa  mariyaa'lum,  yaakkoabin  thaayaagiya  mariyaa'lum,  saloamea  enbava'lum,  avarukkuch  suganthavarkkamidumpadi  avaiga'lai  vaanggikko'ndu,  (maa’rku  16:1)

வாரத்தின்  முதலாம்நாள்  அதிகாலையிலே  சூரியன்  உதயமாகிறபோது  கல்லறையினிடத்தில்  வந்து,  (மாற்கு  16:2)

vaaraththin  muthalaamnaa'l  athikaalaiyilea  sooriyan  uthayamaagi’rapoathu  kalla’raiyinidaththil  vanthu,  (maa’rku  16:2)

கல்லறையின்  வாசலிலிருக்கிற  கல்லை  நமக்காக  எவன்  புரட்டித்தள்ளுவான்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  (மாற்கு  16:3)

kalla’raiyin  vaasalilirukki’ra  kallai  namakkaaga  evan  purattiththa'l'luvaan  en’ru  oruvaroadoruvar  sollikko'ndaarga'l.  (maa’rku  16:3)

அந்தக்  கல்  மிகவும்  பெரிதாயிருந்தது;  அவர்கள்  ஏறிட்டுப்பார்க்கிறபோது,  அது  தள்ளப்பட்டிருக்கக்  கண்டார்கள்.  (மாற்கு  16:4)

anthak  kal  migavum  perithaayirunthathu;  avarga'l  ea'rittuppaarkki’rapoathu,  athu  tha'l'lappattirukkak  ka'ndaarga'l.  (maa’rku  16:4)

அவர்கள்  கல்லறைக்குள்  பிரவேசித்து,  வெள்ளையங்கி  தரித்தவனாய்  வலதுபக்கத்தில்  உட்கார்ந்திருந்த  ஒரு  வாலிபனைக்  கண்டு  பயந்தார்கள்.  (மாற்கு  16:5)

avarga'l  kalla’raikku'l  piraveasiththu,  ve'l'laiyanggi  thariththavanaay  valathupakkaththil  udkaarnthiruntha  oru  vaalibanaik  ka'ndu  bayanthaarga'l.  (maa’rku  16:5)

அவன்  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்,  சிலுவையில்  அறையப்பட்ட  நசரேயனாகிய  இயேசுவைத்  தேடுகிறீர்கள்;  அவர்  உயிர்த்தெழுந்தார்;  அவர்  இங்கேயில்லை;  இதோ,  அவரை  வைத்த  இடம்.  (மாற்கு  16:6)

avan  avarga'lai  noakki:  bayappadaathirungga'l,  siluvaiyil  a’raiyappatta  nasareayanaagiya  iyeasuvaith  theadugi'reerga'l;  avar  uyirththezhunthaar;  avar  inggeayillai;  ithoa,  avarai  vaiththa  idam.  (maa’rku  16:6)

நீங்கள்  அவருடைய  சீஷரிடத்திற்கும்  பேதுருவினிடத்திற்கும்  போய்:  உங்களுக்கு  முன்னே  கலிலேயாவுக்குப்  போகிறார்,  அவர்  உங்களுக்குச்  சொன்னபடியே  அங்கே  அவரைக்  காண்பீர்கள்  என்று,  அவர்களுக்குச்  சொல்லுங்கள்  என்றான்.  (மாற்கு  16:7)

neengga'l  avarudaiya  seesharidaththi’rkum  peathuruvinidaththi’rkum  poay:  ungga'lukku  munnea  kalileayaavukkup  poagi’raar,  avar  ungga'lukkuch  sonnapadiyea  anggea  avaraik  kaa'nbeerga'l  en’ru,  avarga'lukkuch  sollungga'l  en’raan.  (maa’rku  16:7)

நடுக்கமும்  திகிலும்  அவர்களைப்  பிடித்தபடியால்,  அவர்கள்  சீக்கிரமாய்  வெளியே  வந்து,  கல்லறையை  விட்டு  ஓடினார்கள்;  அவர்கள்  பயந்திருந்தபடியினால்  ஒருவருக்கும்  ஒன்றும்  சொல்லாமற்  போனார்கள்.  (மாற்கு  16:8)

nadukkamum  thigilum  avarga'laip  pidiththapadiyaal,  avarga'l  seekkiramaay  ve'liyea  vanthu,  kalla’raiyai  vittu  oadinaarga'l;  avarga'l  bayanthirunthapadiyinaal  oruvarukkum  on’rum  sollaama’r  poanaarga'l.  (maa’rku  16:8)

வாரத்தின்  முதலாம்நாள்  அதிகாலையிலே  இயேசு  எழுந்திருந்தபின்பு,  மகதலேனா  மரியாளுக்கு  முதல்முதல்  தரிசனமானார்.  (மாற்கு  16:9)

vaaraththin  muthalaamnaa'l  athikaalaiyilea  iyeasu  ezhunthirunthapinbu,  magathaleanaa  mariyaa'lukku  muthalmuthal  tharisanamaanaar.  (maa’rku  16:9)

அவளிடத்திலிருந்து  அவர்  ஏழு  பிசாசுகளைத்  துரத்தியிருந்தார்.  அவள்  புறப்பட்டு,  அவரோடேகூட  இருந்தவர்கள்  துக்கப்பட்டு  அழுதுகொண்டிருக்கையில்,  அவர்களிடத்தில்  போய்,  அந்தச்  செய்தியை  அறிவித்தாள்.  (மாற்கு  16:10)

ava'lidaththilirunthu  avar  eazhu  pisaasuga'laith  thuraththiyirunthaar.  ava'l  pu’rappattu,  avaroadeakooda  irunthavarga'l  thukkappattu  azhuthuko'ndirukkaiyil,  avarga'lidaththil  poay,  anthach  seythiyai  a'riviththaa'l.  (maa’rku  16:10)

அவர்  உயிரோடிருக்கிறாரென்றும்  அவளுக்குக்  காணப்பட்டார்  என்றும்  அவர்கள்  கேட்டபொழுது  நம்பவில்லை.  (மாற்கு  16:11)

avar  uyiroadirukki’raaren’rum  ava'lukkuk  kaa'nappattaar  en’rum  avarga'l  keattapozhuthu  nambavillai.  (maa’rku  16:11)

அதன்பின்பு  அவர்களில்  இரண்டுபேர்  ஒரு  கிராமத்துக்கு  நடந்துபோகிறபொழுது  அவர்களுக்கு  மறுரூபமாய்த்  தரிசனமானார்.  (மாற்கு  16:12)

athanpinbu  avarga'lil  ira'ndupear  oru  kiraamaththukku  nadanthupoagi’rapozhuthu  avarga'lukku  ma’ruroobamaayth  tharisanamaanaar.  (maa’rku  16:12)

அவர்களும்  போய்,  அதை  மற்றவர்களுக்கு  அறிவித்தார்கள்;  அவர்களையும்  அவர்கள்  நம்பவில்லை.  (மாற்கு  16:13)

avarga'lum  poay,  athai  mat’ravarga'lukku  a'riviththaarga'l;  avarga'laiyum  avarga'l  nambavillai.  (maa’rku  16:13)

அதன்பின்பு  பதினொருவரும்  போஜனபந்தியிலிருக்கையில்  அவர்களுக்கு  அவர்  தரிசனமாகி,  உயிர்த்தெழுந்திருந்த  தம்மைக்  கண்டவர்களை  அவர்கள்  நம்பாமற்போனதினிமித்தம்  அவர்களுடைய  அவிசுவாசத்தைக்குறித்தும்  இருதயகடினத்தைக்குறித்தும்  அவர்களைக்  கடிந்துகொண்டார்.  (மாற்கு  16:14)

athanpinbu  pathinoruvarum  poajanapanthiyilirukkaiyil  avarga'lukku  avar  tharisanamaagi,  uyirththezhunthiruntha  thammaik  ka'ndavarga'lai  avarga'l  nambaama’rpoanathinimiththam  avarga'ludaiya  avisuvaasaththaikku'riththum  iruthayakadinaththaikku'riththum  avarga'laik  kadinthuko'ndaar.  (maa’rku  16:14)

பின்பு,  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உலகமெங்கும்  போய்,  சர்வ  சிருஷ்டிக்கும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கியுங்கள்.  (மாற்கு  16:15)

pinbu,  avar  avarga'lai  noakki:  neengga'l  ulagamenggum  poay,  sarva  sirushdikkum  suviseashaththaip  pirasanggiyungga'l.  (maa’rku  16:15)

விசுவாசமுள்ளவனாகி  ஞானஸ்நானம்  பெற்றவன்  இரட்சிக்கப்படுவான்;  விசுவாசியாதவனோ  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுவான்.  (மாற்கு  16:16)

visuvaasamu'l'lavanaagi  gnaanasnaanam  pet’ravan  iradchikkappaduvaan;  visuvaasiyaathavanoa  aakkinaikku'l'laagath  theerkkappaduvaan.  (maa’rku  16:16)

விசுவாசிக்கிறவர்களால்  நடக்கும்  அடையாளங்களாவன:  என்  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துவார்கள்;  நவமான  பாஷைகளைப்  பேசுவார்கள்;  (மாற்கு  16:17)

visuvaasikki’ravarga'laal  nadakkum  adaiyaa'langga'laavana:  en  naamaththinaalea  pisaasuga'laith  thuraththuvaarga'l;  navamaana  baashaiga'laip  peasuvaarga'l;  (maa’rku  16:17)

சர்ப்பங்களை  எடுப்பார்கள்;  சாவுக்கேதுவான  யாதொன்றைக்  குடித்தாலும்  அது  அவர்களைச்  சேதப்படுத்தாது;  வியாதியஸ்தர்மேல்  கைகளை  வைப்பார்கள்,  அப்பொழுது  அவர்கள்  சொஸ்தமாவார்கள்  என்றார்.  (மாற்கு  16:18)

sarppangga'lai  eduppaarga'l;  saavukkeathuvaana  yaathon’raik  kudiththaalum  athu  avarga'laich  seathappaduththaathu;  viyaathiyastharmeal  kaiga'lai  vaippaarga'l,  appozhuthu  avarga'l  sosthamaavaarga'l  en’raar.  (maa’rku  16:18)

இவ்விதமாய்க்  கர்த்தர்  அவர்களுடனே  பேசினபின்பு,  பரலோகத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டு,  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  உட்கார்ந்தார்.  (மாற்கு  16:19)

ivvithamaayk  karththar  avarga'ludanea  peasinapinbu,  paraloagaththukku  eduththukko'l'lappattu,  theavanudaiya  valathupaarisaththil  udkaarnthaar.  (maa’rku  16:19)

அவர்கள்  புறப்பட்டுப்போய்,  எங்கும்  பிரசங்கம்பண்ணினார்கள்.  கர்த்தர்  அவர்களுடனேகூடக்  கிரியையை  நடப்பித்து,  அவர்களால்  நடந்த  அடையாளங்களினாலே  வசனத்தை  உறுதிப்படுத்தினார்.  ஆமென்.  (மாற்கு  16:20)

avarga'l  pu’rappattuppoay,  enggum  pirasanggampa'n'ninaarga'l.  karththar  avarga'ludaneakoodak  kiriyaiyai  nadappiththu,  avarga'laal  nadantha  adaiyaa'langga'linaalea  vasanaththai  u’ruthippaduththinaar.  aamen.  (maa’rku  16:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!