Monday, May 02, 2016

Maa’rku 14 | மாற்கு 14 | Mark 14

இரண்டு  நாளைக்குப்பின்பு  புளிப்பில்லாத  அப்பஞ்சாப்பிடுகிற  பஸ்காபண்டிகை  வந்தது.  அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்,  அவரைத்  தந்திரமாய்ப்  பிடித்துக்  கொலைசெய்யும்படி  வகைதேடினார்கள்.  (மாற்கு  14:1)

ira'ndu  naa'laikkuppinbu  pu'lippillaatha  appagnsaappidugi'ra  paskaapa'ndigai  vanthathu.  appozhuthu  pirathaana  aasaariyarum  veathapaaragarum,  avaraith  thanthiramaayp  pidiththuk  kolaiseyyumpadi  vagaitheadinaarga'l.  (maa’rku  14:1)

ஆகிலும்  ஜனங்களுக்குள்ளே  கலகம்  உண்டாகாதபடிக்கு,  பண்டிகையிலே  அப்படிச்  செய்யலாகாது  என்றார்கள்.  (மாற்கு  14:2)

aagilum  janangga'lukku'l'lea  kalagam  u'ndaagaathapadikku,  pa'ndigaiyilea  appadich  seyyalaagaathu  en’raarga'l.  (maa’rku  14:2)

அவர்  பெத்தானியாவில்  குஷ்டரோகியாயிருந்த  சீமோன்  வீட்டிலே  போஜனபந்தியிருக்கையில்,  ஒரு  ஸ்திரீ  விலையேறப்பெற்ற  நளதம்  என்னும்  உத்தம  தைலமுள்ள  வெள்ளைக்கல்  பரணியைக்  கொண்டுவந்து,  அதை  உடைத்து,  அந்தத்  தைலத்தை  அவர்  சிரசின்மேல்  ஊற்றினாள்.  (மாற்கு  14:3)

avar  beththaaniyaavil  kushdaroagiyaayiruntha  seemoan  veettilea  poajanapanthiyirukkaiyil,  oru  sthiree  vilaiyea’rappet’ra  na'latham  ennum  uththama  thailamu'l'la  ve'l'laikkal  para'niyaik  ko'nduvanthu,  athai  udaiththu,  anthath  thailaththai  avar  sirasinmeal  oot’rinaa'l.  (maa’rku  14:3)

அப்பொழுது  சிலர்  தங்களுக்குள்ளே  விசனமடைந்து:  இந்தத்  தைலத்தை  இப்படி  வீணாய்ச்  செலவழிப்பானேன்?  (மாற்கு  14:4)

appozhuthu  silar  thangga'lukku'l'lea  visanamadainthu:  inthath  thailaththai  ippadi  vee'naaych  selavazhippaanean?  (maa’rku  14:4)

இதை  முந்நூறு  பணத்துக்கு  அதிகமான  கிரயத்துக்கு  விற்று,  தரித்திரருக்குக்  கொடுக்கலாமே  என்று  சொல்லி,  அவளைக்குறித்து  முறுமுறுத்தார்கள்.  (மாற்கு  14:5)

ithai  munnoo'ru  pa'naththukku  athigamaana  kirayaththukku  vit’ru,  thariththirarukkuk  kodukkalaamea  en'ru  solli,  ava'laikku'riththu  mu’rumu’ruththaarga'l.  (maa’rku  14:5)

இயேசு  அவர்களை  நோக்கி:  அவளை  விட்டுவிடுங்கள்;  ஏன்  அவளைத்  தொந்தரவு  படுத்துகிறீர்கள்?  என்னிடத்தில்  நற்கிரியையைச்  செய்திருக்கிறாள்.  (மாற்கு  14:6)

iyeasu  avarga'lai  noakki:  ava'lai  vittuvidungga'l;  ean  ava'laith  thontharavu  paduththugi'reerga'l?  ennidaththil  na’rkiriyaiyaich  seythirukki’raa'l.  (maa’rku  14:6)

தரித்திரர்  எப்போதும்  உங்களிடத்தில்  இருக்கிறார்கள்,  உங்களுக்கு  மனதுண்டாகும்போதெல்லாம்  நீங்கள்  அவர்களுக்கு  நன்மை  செய்யலாம்,  நானோ  எப்போதும்  உங்களிடத்தில்  இரேன்.  (மாற்கு  14:7)

thariththirar  eppoathum  ungga'lidaththil  irukki’raarga'l,  ungga'lukku  manathu'ndaagumpoathellaam  neengga'l  avarga'lukku  nanmai  seyyalaam,  naanoa  eppoathum  ungga'lidaththil  irean.  (maa’rku  14:7)

இவள்  தன்னால்  இயன்றதைச்  செய்தாள்;  நான்  அடக்கம்பண்ணப்படுவதற்கு  எத்தனமாக,  என்  சரீரத்தில்  தைலம்பூச  முந்திக்கொண்டாள்.  (மாற்கு  14:8)

iva'l  thannaal  iyan’rathaich  seythaa'l;  naan  adakkampa'n'nappaduvatha’rku  eththanamaaga,  en  sareeraththil  thailampoosa  munthikko'ndaa'l.  (maa’rku  14:8)

இந்தச்  சுவிசேஷம்  உலகத்தில்  எங்கெங்கே  பிரசங்கிக்கப்படுமோ  அங்கங்கே  இவளை  நினைப்பதற்காக  இவள்  செய்ததும்  சொல்லப்படும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  14:9)

inthach  suviseasham  ulagaththil  enggenggea  pirasanggikkappadumoa  angganggea  iva'lai  ninaippatha’rkaaga  iva'l  seythathum  sollappadum  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  14:9)

அப்பொழுது,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்காரியோத்து  என்பவன்  அவரைப்  பிரதான  ஆசாரியருக்குக்  காட்டிக்கொடுக்கும்படி  அவர்களிடத்திற்குப்  போனான்.  (மாற்கு  14:10)

appozhuthu,  panniruvaril  oruvanaagiya  yoothaaskaariyoaththu  enbavan  avaraip  pirathaana  aasaariyarukkuk  kaattikkodukkumpadi  avarga'lidaththi’rkup  poanaan.  (maa’rku  14:10)

அவர்கள்  அதைக்  கேட்டு,  சந்தோஷப்பட்டு,  அவனுக்குப்  பணங்கொடுப்போம்  என்று  வாக்குத்தத்தம்  பண்ணினார்கள்;  அவன்  அவரைக்  காட்டிக்கொடுப்பதற்குத்  தகுந்த  சமயம்  பார்த்துக்கொண்டிருந்தான்.  (மாற்கு  14:11)

avarga'l  athaik  keattu,  santhoashappattu,  avanukkup  pa'nangkoduppoam  en’ru  vaakkuththaththam  pa'n'ninaarga'l;  avan  avaraik  kaattikkoduppatha’rkuth  thaguntha  samayam  paarththukko'ndirunthaan.  (maa’rku  14:11)

பஸ்காவைப்  பலியிடும்  நாளாகிய  புளிப்பில்லாத  அப்பஞ்சாப்பிடுகிற  முதலாம்  நாளிலே,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  நீர்  பஸ்காவைப்  புசிப்பதற்கு  நாங்கள்  எங்கே  போய்  ஆயத்தம்பண்ணச்  சித்தமாயிருக்கிறீர்  என்று  கேட்டார்கள்.  (மாற்கு  14:12)

paskaavaip  baliyidum  naa'laagiya  pu'lippillaatha  appagnsaappidugi’ra  muthalaam  naa'lilea,  avarudaiya  seesharga'l  avaridaththil  vanthu:  neer  paskaavaip  pusippatha’rku  naangga'l  enggea  poay  aayaththampa'n'nach  siththamaayirukki'reer  en’ru  keattaarga'l.  (maa’rku  14:12)

அவர்  தம்முடைய  சீஷரில்  இரண்டுபேரை  நோக்கி:  நீங்கள்  நகரத்திற்குள்ளே  போங்கள்,  அங்கே  தண்ணீர்க்குடம்  சுமந்துவருகிற  ஒரு  மனுஷன்  உங்களுக்கு  எதிர்ப்படுவான்,  அவன்  பின்னே  போங்கள்;  (மாற்கு  14:13)

avar  thammudaiya  seesharil  ira'ndupearai  noakki:  neengga'l  nagaraththi’rku'l'lea  poangga'l,  anggea  tha'n'neerkkudam  sumanthuvarugi’ra  oru  manushan  ungga'lukku  ethirppaduvaan,  avan  pinnea  poangga'l;  (maa’rku  14:13)

அவன்  எந்த  வீட்டிற்குள்  பிரவேசிக்கிறானோ  அந்த  வீட்டு  எஜமானை  நீங்கள்  நோக்கி:  நான்  என்  சீஷரோடுகூடப்  பஸ்காவைப்  புசிக்கிறதற்குத்  தகுதியான  இடம்  எங்கேயென்று  போதகர்  கேட்கிறார்  என்று  சொல்லுங்கள்.  (மாற்கு  14:14)

avan  entha  veetti’rku'l  piraveasikki’raanoa  antha  veettu  ejamaanai  neengga'l  noakki:  naan  en  seesharoadukoodap  paskaavaip  pusikki’ratha’rkuth  thaguthiyaana  idam  enggeayen’ru  poathagar  keadki’raar  en’ru  sollungga'l.  (maa’rku  14:14)

அவன்  கம்பளம்  முதலானவைகள்  விரித்து  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற  விஸ்தாரமான  மேல்வீட்டறையை  உங்களுக்குக்  காண்பிப்பான்;  அங்கே  நமக்காக  ஆயத்தம்பண்ணுங்கள்  என்று  சொல்லி  அனுப்பினார்.  (மாற்கு  14:15)

avan  kamba'lam  muthalaanavaiga'l  viriththu  aayaththampa'n'nappattirukki’ra  visthaaramaana  mealveetta’raiyai  ungga'lukkuk  kaa'nbippaan;  anggea  namakkaaga  aayaththampa'n'nungga'l  en’ru  solli  anuppinaar.  (maa’rku  14:15)

அப்படியே,  அவருடைய  சீஷர்  புறப்பட்டு  நகரத்தில்  போய்,  தங்களுக்கு  அவர்  சொன்னபடியே  கண்டு,  பஸ்காவை  ஆயத்தம்பண்ணினார்கள்.  (மாற்கு  14:16)

appadiyea,  avarudaiya  seeshar  pu’rappattu  nagaraththil  poay,  thangga'lukku  avar  sonnapadiyea  ka'ndu,  paskaavai  aayaththampa'n'ninaarga'l.  (maa’rku  14:16)

சாயங்காலமானபோது,  அவர்  பன்னிருவரோடுங்கூட  அவ்விடத்திற்கு  வந்தார்.  (மாற்கு  14:17)

saayanggaalamaanapoathu,  avar  panniruvaroadungkooda  avvidaththi’rku  vanthaar.  (maa’rku  14:17)

அவர்கள்  பந்தியமர்ந்து  போஜனம்பண்ணுகையில்,  இயேசு  அவர்களை  நோக்கி:  என்னுடனே  புசிக்கிற  உங்களில்  ஒருவன்  என்னைக்  காட்டிக்கொடுப்பான்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  14:18)

avarga'l  panthiyamarnthu  poajanampa'n'nugaiyil,  iyeasu  avarga'lai  noakki:  ennudanea  pusikki’ra  ungga'lil  oruvan  ennaik  kaattikkoduppaan  en’ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  14:18)

அப்பொழுது  அவர்கள்  துக்கமடைந்து:  நானோ?  நானோ?  என்று  ஒவ்வொருவரும்,  அவரிடத்தில்  கேட்கத்  தொடங்கினார்கள்.  (மாற்கு  14:19)

appozhuthu  avarga'l  thukkamadainthu:  naanoa?  naanoa?  en’ru  ovvoruvarum,  avaridaththil  keadkath  thodangginaarga'l.  (maa’rku  14:19)

அவர்  பிரதியுத்தரமாக:  என்னுடனேகூடத்  தாலத்தில்  கையிடுகிறவனாகிய  பன்னிருவரிலொருவனே  அவன்  என்று  சொல்லி;  (மாற்கு  14:20)

avar  pirathiyuththaramaaga:  ennudaneakoodath  thaalaththil  kaiyidugi’ravanaagiya  panniruvariloruvanea  avan  en’ru  solli;  (maa’rku  14:20)

மனுஷகுமாரன்  தம்மைக்குறித்து  எழுதியிருக்கிறபடியே  போகிறார்;  ஆகிலும்,  எந்த  மனுஷனால்  மனுஷகுமாரன்  காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ,  அந்த  மனுஷனுக்கு  ஐயோ!  அந்த  மனுஷன்  பிறவாதிருந்தானானால்  அவனுக்கு  நலமாயிருக்கும்  என்றார்.  (மாற்கு  14:21)

manushakumaaran  thammaikku’riththu  ezhuthiyirukki’rapadiyea  poagi’raar;  aagilum,  entha  manushanaal  manushakumaaran  kaattikkodukkappadugi’raaroa,  antha  manushanukku  aiyoa!  antha  manushan  pi’ravaathirunthaanaanaal  avanukku  nalamaayirukkum  en’raar.  (maa’rku  14:21)

அவர்கள்  போஜனம்பண்ணுகையில்,  இயேசு  அப்பத்தை  எடுத்து  ஆசீர்வதித்து,  அதைப்  பிட்டு,  அவர்களுக்குக்  கொடுத்து:  நீங்கள்  வாங்கிப்  புசியுங்கள்,  இது  என்னுடைய  சரீரமாயிருக்கிறது  என்றார்.  (மாற்கு  14:22)

avarga'l  poajanampa'n'nugaiyil,  iyeasu  appaththai  eduththu  aaseervathiththu,  athaip  pittu,  avarga'lukkuk  koduththu:  neengga'l  vaanggip  pusiyungga'l,  ithu  ennudaiya  sareeramaayirukki’rathu  en’raar.  (maa’rku  14:22)

பின்பு,  பாத்திரத்தையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி,  அதை  அவர்களுக்குக்  கொடுத்தார்.  அவர்களெல்லாரும்  அதிலே  பானம்பண்ணினார்கள்.  (மாற்கு  14:23)

pinbu,  paaththiraththaiyum  eduththu,  sthoaththirampa'n'ni,  athai  avarga'lukkuk  koduththaar.  avarga'lellaarum  athilea  baanampa'n'ninaarga'l.  (maa’rku  14:23)

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  இது  அநேகருக்காகச்  சிந்தப்படுகிற  புது  உடன்படிக்கைக்குரிய  என்னுடைய  இரத்தமாயிருக்கிறது.  (மாற்கு  14:24)

appozhuthu  avar  avarga'lai  noakki:  ithu  aneagarukkaagach  sinthappadugi’ra  puthu  udanpadikkaikkuriya  ennudaiya  iraththamaayirukki’rathu.  (maa’rku  14:24)

நான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  நவமான  ரசத்தைப்  பானம்பண்ணும்  நாள்வரைக்கும்  திராட்சப்பழரசத்தை  இனி  நான்  பானம்பண்ணுவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  14:25)

naan  theavanudaiya  raajyaththil  navamaana  rasaththaip  baanampa'n'num  naa'lvaraikkum  thiraadchappazharasaththai  ini  naan  baanampa'n'nuvathillaiyen’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  14:25)

அவர்கள்  ஸ்தோத்திரப்பாட்டைப்  பாடினபின்பு,  ஒலிவமலைக்குப்  புறப்பட்டுப்போனார்கள்.  (மாற்கு  14:26)

avarga'l  sthoaththirappaattaip  paadinapinbu,  olivamalaikkup  pu’rappattuppoanaarga'l.  (maa’rku  14:26)

அப்பொழுது,  இயேசு  அவர்களை  நோக்கி:  மேய்ப்பனை  வெட்டுவேன்,  ஆடுகள்  சிதறடிக்கப்படும்,  என்று  எழுதியிருக்கிறபடி,  இந்த  இராத்திரியிலே  நீங்களெல்லாரும்  என்னிமித்தம்  இடறலடைவீர்கள்.  (மாற்கு  14:27)

appozhuthu,  iyeasu  avarga'lai  noakki:  meayppanai  vettuvean,  aaduga'l  sitha’radikkappadum,  en’ru  ezhuthiyirukki’rapadi,  intha  iraaththiriyilea  neengga'lellaarum  ennimiththam  ida’raladaiveerga'l.  (maa’rku  14:27)

ஆகிலும்  நான்  உயிர்த்தெழுந்தபின்பு,  உங்களுக்கு  முன்னே  கலிலேயாவுக்குப்  போவேன்  என்றார்.  (மாற்கு  14:28)

aagilum  naan  uyirththezhunthapinbu,  ungga'lukku  munnea  kalileayaavukkup  poavean  en’raar.  (maa’rku  14:28)

அதற்குப்  பேதுரு:  உமதுநிமித்தம்  எல்லாரும்  இடறலடைந்தாலும்,  நான்  இடறலடையேன்  என்றான்.  (மாற்கு  14:29)

atha’rkup  peathuru:  umathunimiththam  ellaarum  ida’raladainthaalum,  naan  ida’raladaiyean  en’raan.  (maa’rku  14:29)

இயேசு  அவனை  நோக்கி:  இன்றைக்கு,  இந்த  இராத்திரியிலே,  சேவல்  இரண்டுதரம்  கூவுகிறதற்குமுன்னே,  நீ  மூன்றுதரம்  என்னை  மறுதலிப்பாய்  என்று  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  14:30)

iyeasu  avanai  noakki:  in’raikku,  intha  iraaththiriyilea,  seaval  ira'ndutharam  koovugi’ratha’rkumunnea,  nee  moon’rutharam  ennai  ma’ruthalippaay  en’ru  meyyaagavea  unakkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  14:30)

அதற்கு  அவன்:  நான்  உம்மோடே  மரிக்கவேண்டியதாயிருந்தாலும்  உம்மை  மறுதலிக்கமாட்டேன்  என்று  உறுதியாய்ச்  சொன்னான்;  எல்லாரும்  அப்படியே  சொன்னார்கள்.  (மாற்கு  14:31)

atha’rku  avan:  naan  ummoadea  marikkavea'ndiyathaayirunthaalum  ummai  ma’ruthalikkamaattean  en’ru  u’ruthiyaaych  sonnaan;  ellaarum  appadiyea  sonnaarga'l.  (maa’rku  14:31)

பின்பு  கெத்செமனே  என்னப்பட்ட  இடத்திற்கு  வந்தார்கள்.  அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  நான்  ஜெபம்பண்ணுமளவும்  இங்கே  உட்கார்ந்திருங்கள்  என்று  சொல்லி;  (மாற்கு  14:32)

pinbu  kethsemanea  ennappatta  idaththi’rku  vanthaarga'l.  appozhuthu  avar  thammudaiya  seesharga'lai  noakki:  naan  jebampa'n'numa'lavum  inggea  udkaarnthirungga'l  en’ru  solli;  (maa’rku  14:32)

பேதுருவையும்  யாக்கோபையும்  யோவானையும்  தம்மோடே  கூட்டிக்கொண்டுபோய்,  திகிலடையவும்,  மிகவும்  வியாகுலப்படவும்  தொடங்கினார்.  (மாற்கு  14:33)

peathuruvaiyum  yaakkoabaiyum  yoavaanaiyum  thammoadea  koottikko'ndupoay,  thigiladaiyavum,  migavum  viyaagulappadavum  thodangginaar.  (maa’rku  14:33)

அப்பொழுது  அவர்:  என்  ஆத்துமா  மரணத்துக்கேதுவான  துக்கங்கொண்டிருக்கிறது.  நீங்கள்  இங்கே  தங்கி,  விழித்திருங்கள்  என்று  சொல்லி,  (மாற்கு  14:34)

appozhuthu  avar:  en  aaththumaa  mara'naththukkeathuvaana  thukkangko'ndirukki’rathu.  neengga'l  inggea  thanggi,  vizhiththirungga'l  en’ru  solli,  (maa’rku  14:34)

சற்று  அப்புறம்போய்,  தரையிலே  விழுந்து,  அந்த  வேளை  தம்மைவிட்டு  நீங்கிப்போகக்கூடுமானால்  அது  நீங்கவேண்டுமென்று  வேண்டிக்கொண்டு:  (மாற்கு  14:35)

sat’ru  appu’rampoay,  tharaiyilea  vizhunthu,  antha  vea'lai  thammaivittu  neenggippoagakkoodumaanaal  athu  neenggavea'ndumen’ru  vea'ndikko'ndu:  (maa’rku  14:35)

அப்பா  பிதாவே,  எல்லாம்  உம்மாலே  கூடும்;  இந்தப்  பாத்திரத்தை  என்னிடத்திலிருந்து  எடுத்துப்போடும்,  ஆகிலும்  என்  சித்தத்தின்படியல்ல,  உம்முடைய  சித்தத்தின்படியே  ஆகக்கடவது  என்றார்.  (மாற்கு  14:36)

appaa  pithaavea,  ellaam  ummaalea  koodum;  inthap  paaththiraththai  ennidaththilirunthu  eduththuppoadum,  aagilum  en  siththaththinpadiyalla,  ummudaiya  siththaththinpadiyea  aagakkadavathu  en’raar.  (maa’rku  14:36)

பின்பு  அவர்  வந்து,  அவர்கள்  நித்திரைபண்ணுகிறதைக்கண்டு,  பேதுருவை  நோக்கி:  சீமோனே,  நித்திரைபண்ணுகிறாயா?  ஒரு  மணிநேரம்  நீ  விழித்திருக்கக்கூடாதா?  (மாற்கு  14:37)

pinbu  avar  vanthu,  avarga'l  niththiraipa'n'nugi’rathaikka'ndu,  peathuruvai  noakki:  seemoanea,  niththiraipa'n'nugi’raayaa?  oru  ma'ninearam  nee  vizhiththirukkakkoodaathaa?  (maa’rku  14:37)

நீங்கள்  சோதனைக்குட்படாதபடிக்கு  விழித்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்.  ஆவி  உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ  பலவீனமுள்ளது  என்றார்.  (மாற்கு  14:38)

neengga'l  soathanaikkudpadaathapadikku  vizhiththirunthu  jebampa'n'nungga'l.  aavi  u’rchaagamu'l'lathuthaan,  maamsamoa  balaveenamu'l'lathu  en’raar.  (maa’rku  14:38)

அவர்  மறுபடியும்  போய்  அந்த  வார்த்தைகளையே  சொல்லி  ஜெபம்பண்ணினார்.  (மாற்கு  14:39)

avar  ma’rupadiyum  poay  antha  vaarththaiga'laiyea  solli  jebampa'n'ninaar.  (maa’rku  14:39)

அவர்  திரும்ப  வந்தபோது,  அவர்கள்  மறுபடியும்  நித்திரைபண்ணுகிறதைக்  கண்டார்;  அவர்களுடைய  கண்கள்  மிகுந்த  நித்திரைமயக்கம்  அடைந்திருந்தபடியால்,  தாங்கள்  மறுமொழியாக  அவருக்குச்  சொல்வது  இன்னதென்று  அறியாதிருந்தார்கள்.  (மாற்கு  14:40)

avar  thirumba  vanthapoathu,  avarga'l  ma’rupadiyum  niththiraipa'n'nugi’rathaik  ka'ndaar;  avarga'ludaiya  ka'nga'l  miguntha  niththiraimayakkam  adainthirunthapadiyaal,  thaangga'l  ma’rumozhiyaaga  avarukkuch  solvathu  innathen’ru  a’riyaathirunthaarga'l.  (maa’rku  14:40)

அவர்  மூன்றாந்தரம்  வந்து:  இனி  நித்திரைபண்ணி  இளைப்பாறுங்கள்;  போதும்,  வேளை  வந்தது,  இதோ,  மனுஷகுமாரன்  பாவிகளுடைய  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.  (மாற்கு  14:41)

avar  moon’raantharam  vanthu:  ini  niththiraipa'n'ni  i'laippaa’rungga'l;  poathum,  vea'lai  vanthathu,  ithoa,  manushakumaaran  paaviga'ludaiya  kaiga'lil  oppukkodukkappadugi’raar.  (maa’rku  14:41)

என்னைக்  காட்டிக்கொடுக்கிறவன்,  இதோ,  வந்துவிட்டான்,  எழுந்திருங்கள்,  போவோம்  என்றார்.  (மாற்கு  14:42)

ennaik  kaattikkodukki’ravan,  ithoa,  vanthuvittaan,  ezhunthirungga'l,  poavoam  en’raar.  (maa’rku  14:42)

உடனே,  அவர்  இப்படிப்  பேசுகையில்,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்  வந்தான்;  அவனோடேகூடப்  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  மூப்பரும்  அனுப்பின  திரளான  ஜனங்கள்,  பட்டயங்களையும்  தடிகளையும்  பிடித்துக்கொண்டு  வந்தார்கள்.  (மாற்கு  14:43)

udanea,  avar  ippadip  peasugaiyil,  panniruvaril  oruvanaagiya  yoothaas  vanthaan;  avanoadeakoodap  pirathaana  aasaariyarum  veathapaaragarum  moopparum  anuppina  thira'laana  janangga'l,  pattayangga'laiyum  thadiga'laiyum  pidiththukko'ndu  vanthaarga'l.  (maa’rku  14:43)

அவரைக்  காட்டிக்கொடுக்கிறவன்:  நான்  எவனை  முத்தஞ்செய்வேனோ  அவன்தான்,  அவனைப்  பிடித்துப்  பத்திரமாய்க்  கொண்டுபோங்கள்  என்று  அவர்களுக்குக்  குறிப்புச்  சொல்லியிருந்தான்.  (மாற்கு  14:44)

avaraik  kaattikkodukki’ravan:  naan  evanai  muththagnseyveanoa  avanthaan,  avanaip  pidiththup  paththiramaayk  ko'ndupoangga'l  en’ru  avarga'lukkuk  ku’rippuch  solliyirunthaan.  (maa’rku  14:44)

அவன்  வந்தவுடனே,  அவரண்டையில்  சேர்ந்து:  ரபீ,  ரபீ,  என்று  சொல்லி,  அவரை  முத்தஞ்செய்தான்.  (மாற்கு  14:45)

avan  vanthavudanea,  avara'ndaiyil  searnthu:  rabee,  rabee,  en’ru  solli,  avarai  muththagnseythaan.  (maa’rku  14:45)

அப்பொழுது  அவர்கள்  அவர்மேல்  கைபோட்டு,  அவரைப்  பிடித்தார்கள்.  (மாற்கு  14:46)

appozhuthu  avarga'l  avarmeal  kaipoattu,  avaraip  pidiththaarga'l.  (maa’rku  14:46)

அப்பொழுது  கூடநின்றவர்களில்  ஒருவன்  கத்தியை  உருவி,  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரனைக்  காதற  வெட்டினான்.  (மாற்கு  14:47)

appozhuthu  koodanin’ravarga'lil  oruvan  kaththiyai  uruvi,  pirathaana  aasaariyanudaiya  vealaikkaaranaik  kaatha’ra  vettinaan.  (maa’rku  14:47)

இயேசு  அவர்களை  நோக்கி:  கள்ளனைப்  பிடிக்கப்  புறப்படுகிறதுபோல,  நீங்கள்  பட்டயங்களையும்  தடிகளையும்  எடுத்துக்கொண்டு  என்னைப்  பிடிக்கவந்தீர்கள்;  (மாற்கு  14:48)

iyeasu  avarga'lai  noakki:  ka'l'lanaip  pidikkap  pu’rappadugi’rathupoala,  neengga'l  pattayangga'laiyum  thadiga'laiyum  eduththukko'ndu  ennaip  pidikkavantheerga'l;  (maa’rku  14:48)

நான்  தினந்தோறும்  உங்கள்  நடுவிலே  தேவாலயத்தில்  உபதேசம்பண்ணிக்  கொண்டிருந்தேன்;  அப்பொழுது  நீங்கள்  என்னைப்  பிடிக்கவில்லையே;  ஆனாலும்  வேதவாக்கியங்கள்  நிறைவேற  வேண்டியதாயிருக்கிறது  என்றார்.  (மாற்கு  14:49)

naan  thinanthoa’rum  ungga'l  naduvilea  theavaalayaththil  ubatheasampa'n'nik  ko'ndirunthean;  appozhuthu  neengga'l  ennaip  pidikkavillaiyea;  aanaalum  veathavaakkiyangga'l  ni’raivea’ra  vea'ndiyathaayirukki’rathu  en’raar.  (maa’rku  14:49)

அப்பொழுது  எல்லாரும்  அவரைவிட்டு  ஓடிப்போனார்கள்.  (மாற்கு  14:50)

appozhuthu  ellaarum  avaraivittu  oadippoanaarga'l.  (maa’rku  14:50)

ஒரு  வாலிபன்  ஒரு  துப்பட்டியை  மாத்திரம்  தன்மேல்  போர்த்துக்கொண்டு  அவர்  பின்னே  போனான்;  அவனைப்  பிடித்தார்கள்.  (மாற்கு  14:51)

oru  vaaliban  oru  thuppattiyai  maaththiram  thanmeal  poarththukko'ndu  avar  pinnea  poanaan;  avanaip  pidiththaarga'l.  (maa’rku  14:51)

அவன்  தன்  துப்பட்டியைப்  போட்டு  விட்டு,  நிர்வாணமாய்  அவர்களை  விட்டு  ஓடிப்போனான்.  (மாற்கு  14:52)

avan  than  thuppattiyaip  poattu  vittu,  nirvaa'namaay  avarga'lai  vittu  oadippoanaan.  (maa’rku  14:52)

இயேசுவை  அவர்கள்  பிரதான  ஆசாரியனிடத்தில்  கொண்டுபோனார்கள்;  அங்கே  ஆசாரியர்  மூப்பர்  வேதபாரகர்  எல்லாரும்  கூடிவந்திருந்தார்கள்.  (மாற்கு  14:53)

iyeasuvai  avarga'l  pirathaana  aasaariyanidaththil  ko'ndupoanaarga'l;  anggea  aasaariyar  mooppar  veathapaaragar  ellaarum  koodivanthirunthaarga'l.  (maa’rku  14:53)

பேதுரு  தூரத்திலே  அவருக்குப்  பின்சென்று,  பிரதான  ஆசாரியனுடைய  அரமனைக்குள்  வந்து,  சேவகரோடேகூட  உட்கார்ந்து,  நெருப்பண்டையிலே  குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.  (மாற்கு  14:54)

peathuru  thooraththilea  avarukkup  pinsen’ru,  pirathaana  aasaariyanudaiya  aramanaikku'l  vanthu,  seavagaroadeakooda  udkaarnthu,  neruppa'ndaiyilea  ku'lirkaaynthuko'ndirunthaan.  (maa’rku  14:54)

அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  ஆலோசனைச்  சங்கத்தாரனைவரும்  இயேசுவைக்  கொலைசெய்யும்படி  அவருக்கு  விரோதமாகச்  சாட்சி  தேடினார்கள்;  அகப்படவில்லை.  (மாற்கு  14:55)

appozhuthu  pirathaana  aasaariyarum  aaloasanaich  sanggaththaaranaivarum  iyeasuvaik  kolaiseyyumpadi  avarukku  viroathamaagach  saadchi  theadinaarga'l;  agappadavillai.  (maa’rku  14:55)

அநேகர்  அவருக்கு  விரோதமாகப்  பொய்ச்சாட்சி  சொல்லியும்,  அந்தச்  சாட்சிகள்  ஒவ்வவில்லை.  (மாற்கு  14:56)

aneagar  avarukku  viroathamaagap  poychsaadchi  solliyum,  anthach  saadchiga'l  ovvavillai.  (maa’rku  14:56)

அப்பொழுது  சிலர்  எழுந்து,  கைவேலையாகிய  இந்தத்  தேவாலயத்தை  நான்  இடித்துப்போட்டு,  கைவேலையல்லாத  வேறொன்றை  மூன்று  நாளைக்குள்ளே  கட்டுவேன்  என்று  இவன்  சொன்னதை  நாங்கள்  கேட்டோம்  என்று,  (மாற்கு  14:57)

appozhuthu  silar  ezhunthu,  kaivealaiyaagiya  inthath  theavaalayaththai  naan  idiththuppoattu,  kaivealaiyallaatha  vea'ron’rai  moon’ru  naa'laikku'l'lea  kattuvean  en’ru  ivan  sonnathai  naangga'l  keattoam  en’ru,  (maa’rku  14:57)

அவருக்கு  விரோதமாய்ப்  பொய்ச்சாட்சி  சொன்னார்கள்.  (மாற்கு  14:58)

avarukku  viroathamaayp  poychsaadchi  sonnaarga'l.  (maa’rku  14:58)

அப்படிச்  சொல்லியும்  அவர்கள்  சாட்சி  ஒவ்வாமற்போயிற்று.  (மாற்கு  14:59)

appadich  solliyum  avarga'l  saadchi  ovvaama’rpoayit’ru.  (maa’rku  14:59)

அப்பொழுது  பிரதான  ஆசாரியன்  எழுந்து  நடுவே  நின்று,  இயேசுவை  நோக்கி:  இவர்கள்  உனக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறதைக்  குறித்து  நீ  ஒன்றும்  சொல்லுகிறதில்லையா  என்று  கேட்டான்.  (மாற்கு  14:60)

appozhuthu  pirathaana  aasaariyan  ezhunthu  naduvea  nin’ru,  iyeasuvai  noakki:  ivarga'l  unakku  viroathamaaych  sollugi’rathaik  ku’riththu  nee  on’rum  sollugi’rathillaiyaa  en’ru  keattaan.  (maa’rku  14:60)

அவரோ  ஒரு  உத்தரவும்  சொல்லாமல்  பேசாதிருந்தார்.  மறுபடியும்  பிரதான  ஆசாரியன்  அவரை  நோக்கி:  நீ  ஸ்தோத்திரிக்கப்பட்ட  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்துதானா?  என்று  கேட்டான்.  (மாற்கு  14:61)

avaroa  oru  uththaravum  sollaamal  peasaathirunthaar.  ma’rupadiyum  pirathaana  aasaariyan  avarai  noakki:  nee  sthoaththirikkappatta  theavanudaiya  kumaaranaagiya  ki’risthuthaanaa?  en’ru  keattaan.  (maa’rku  14:61)

அதற்கு  இயேசு:  நான்  அவர்தான்;  மனுஷகுமாரன்  சர்வவல்லவரின்  வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பதையும்,  வானத்தின்  மேகங்கள்மேல்  வருவதையும்  நீங்கள்  காண்பீர்கள்  என்றார்.  (மாற்கு  14:62)

atha’rku  iyeasu:  naan  avarthaan;  manushakumaaran  sarvavallavarin  valathupaarisaththil  veet’riruppathaiyum,  vaanaththin  meagangga'lmeal  varuvathaiyum  neengga'l  kaa'nbeerga'l  en’raar.  (maa’rku  14:62)

பிரதான  ஆசாரியன்  இதைக்  கேட்டவுடனே,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  இனிச்  சாட்சிகள்  நமக்கு  வேண்டியதென்ன?  (மாற்கு  14:63)

pirathaana  aasaariyan  ithaik  keattavudanea,  than  vasthirangga'laik  kizhiththukko'ndu:  inich  saadchiga'l  namakku  vea'ndiyathenna?  (maa’rku  14:63)

தேவதூஷணத்தைக்  கேட்டீர்களே,  உங்களுக்கு  என்னமாய்த்  தோன்றுகிறது  என்றான்.  அதற்கு  அவர்களெல்லாரும்:  இவன்  மரணத்துக்குப்  பாத்திரனாயிருக்கிறான்  என்று  தீர்மானம்பண்ணினார்கள்.  (மாற்கு  14:64)

theavathoosha'naththaik  keatteerga'lea,  ungga'lukku  ennamaayth  thoan’rugi’rathu  en’raan.  atha’rku  avarga'lellaarum:  ivan  mara'naththukkup  paaththiranaayirukki’raan  en’ru  theermaanampa'n'ninaarga'l.  (maa’rku  14:64)

அப்பொழுது  சிலர்  அவர்மேல்  துப்பவும்,  அவருடைய  முகத்தை  மூடவும்,  அவரைக்  குட்டவும்,  ஞானதிருஷ்டியினாலே  பார்த்துச்  சொல்  என்று  சொல்லவும்  தொடங்கினார்கள்;  வேலைக்காரரும்  அவரைக்  கன்னத்தில்  அறைந்தார்கள்.  (மாற்கு  14:65)

appozhuthu  silar  avarmeal  thuppavum,  avarudaiya  mugaththai  moodavum,  avaraik  kuttavum,  gnaanathirushdiyinaalea  paarththuch  sol  en’ru  sollavum  thodangginaarga'l;  vealaikkaararum  avaraik  kannaththil  a’rainthaarga'l.  (maa’rku  14:65)

அத்தருணத்திலே  பேதுரு  கீழே  அரமனை  முற்றத்திலிருக்கையில்,  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரிகளில்  ஒருத்தி  வந்து,  (மாற்கு  14:66)

aththaru'naththilea  peathuru  keezhea  aramanai  mut’raththilirukkaiyil,  pirathaana  aasaariyanudaiya  vealaikkaariga'lil  oruththi  vanthu,  (maa’rku  14:66)

குளிர்காய்ந்துகொண்டிருக்கிற  பேதுருவைக்  கண்டு,  அவனை  உற்றுப்பார்த்து:  நீயும்  நசரேயனாகிய  இயேசுவோடே  இருந்தாய்  என்றாள்.  (மாற்கு  14:67)

ku'lirkaaynthuko'ndirukki’ra  peathuruvaik  ka'ndu,  avanai  ut’ruppaarththu:  neeyum  nasareayanaagiya  iyeasuvoadea  irunthaay  en’raa'l.  (maa’rku  14:67)

அதற்கு  அவன்:  நான்  அறியேன்;  நீ  சொல்லுகிறது  எனக்குத்  தெரியாது  என்று  மறுதலித்து,  வெளியே  வாசல்  மண்டபத்துக்குப்  போனான்;  அப்பொழுது  சேவல்  கூவிற்று.  (மாற்கு  14:68)

atha’rku  avan:  naan  a’riyean;  nee  sollugi’rathu  enakkuth  theriyaathu  en’ru  ma’ruthaliththu,  ve'liyea  vaasal  ma'ndabaththukkup  poanaan;  appozhuthu  seaval  koovit’ru.  (maa’rku  14:68)

வேலைக்காரி  அவனை  மறுபடியும்  கண்டு:  இவன்  அவர்களில்  ஒருவன்  என்று  அருகே  நின்றவர்களுக்குச்  சொன்னாள்.  (மாற்கு  14:69)

vealaikkaari  avanai  ma’rupadiyum  ka'ndu:  ivan  avarga'lil  oruvan  en’ru  arugea  nin’ravarga'lukkuch  sonnaa'l.  (maa’rku  14:69)

அவன்  மறுபடியும்  மறுதலித்தான்.  சற்றுநேரத்துக்குப்பின்பு  மறுபடியும்  அருகே  நிற்கிறவர்கள்  பேதுருவைப்  பார்த்து:  மெய்யாகவே  நீ  அவர்களில்  ஒருவன்,  நீ  கலிலேயன்,  உன்  பேச்சு  அதற்கு  ஒத்திருக்கிறது  என்றார்கள்.  (மாற்கு  14:70)

avan  ma’rupadiyum  ma’ruthaliththaan.  sat’runearaththukkuppinbu  ma’rupadiyum  arugea  ni’rki’ravarga'l  peathuruvaip  paarththu:  meyyaagavea  nee  avarga'lil  oruvan,  nee  kalileayan,  un  peachchu  atha’rku  oththirukki’rathu  en’raarga'l.  (maa’rku  14:70)

அதற்கு  அவன்:  நீங்கள்  சொல்லுகிற  மனுஷனை  அறியேன்  என்று  சொல்லி,  சபிக்கவும்  சத்தியம்பண்ணவும்  தொடங்கினான்.  (மாற்கு  14:71)

atha’rku  avan:  neengga'l  sollugi’ra  manushanai  a’riyean  en’ru  solli,  sabikkavum  saththiyampa'n'navum  thodangginaan.  (maa’rku  14:71)

உடனே  சேவல்  இரண்டாந்தரம்  கூவிற்று.  சேவல்  இரண்டுதரங்  கூவுகிறதற்குமுன்னே  நீ  என்னை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று  இயேசு  தனக்குச்  சொன்ன  வார்த்தையைப்  பேதுரு  நினைவுகூர்ந்து,  மிகவும்  அழுதான்.  (மாற்கு  14:72)

udanea  seaval  ira'ndaantharam  koovit’ru.  seaval  ira'ndutharang  koovugi’ratha’rkumunnea  nee  ennai  moon’rutharam  ma’ruthalippaay  en’ru  iyeasu  thanakkuch  sonna  vaarththaiyaip  peathuru  ninaivukoornthu,  migavum  azhuthaan.  (maa’rku  14:72)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!