Monday, May 02, 2016

Maa’rku 12 | மாற்கு 12 | Mark 12


பின்பு  அவர்  உவமைகளாய்  அவர்களுக்குச்  சொல்லத்தொடங்கினதாவது:  ஒரு  மனுஷன்  ஒரு  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதைச்  சுற்றிலும்  வேலியடைத்து,  இரசத்தொட்டியை  உண்டுபண்ணி,  கோபுரத்தையும்  கட்டி,  தோட்டக்காரருக்கு  அதைக்  குத்தகையாக  விட்டு,  புறத்தேசத்துக்குப்  போயிருந்தான்.  (மாற்கு  12:1)

pinbu  avar  uvamaiga'laay  avarga'lukkuch  sollaththodangginathaavathu:  oru  manushan  oru  thiraadchaththoattaththai  u'ndaakki,  athaich  sut’rilum  vealiyadaiththu,  irasaththottiyai  u'ndupa'n'ni,  koapuraththaiyum  katti,  thoattakkaararukku  athaik  kuththagaiyaaga  vittu,  pu'raththeasaththukkup  poayirunthaan.  (maa’rku  12:1)

தோட்டக்காரரிடத்தில்  திராட்சத்தோட்டத்துக்  கனிகளில்  தன்  பாகத்தை  வாங்கிக்கொண்டுவரும்படி,  பருவகாலத்திலே  அவர்களிடத்தில்  ஒரு  ஊழியக்காரனை  அனுப்பினான்.  (மாற்கு  12:2)

thoattakkaararidaththil  thiraadchaththoattaththuk  kaniga'lil  than  paagaththai  vaanggikko'nduvarumpadi,  paruvakaalaththilea  avarga'lidaththil  oru  oozhiyakkaaranai  anuppinaan.  (maa’rku  12:2)

அவர்கள்  அவனைப்  பிடித்து,  அடித்து,  வெறுமையாய்  அனுப்பிவிட்டார்கள்.  (மாற்கு  12:3)

avarga'l  avanaip  pidiththu,  adiththu,  ve'rumaiyaay  anuppivittaarga'l.  (maa’rku  12:3)

பின்பு  வேறொரு  ஊழியக்காரனை  அவர்களிடத்தில்  அனுப்பினான்;  அவர்கள்  அவன்மேல்  கல்லெறிந்து,  தலையிலே  காயப்படுத்தி,  அவமானப்படுத்தி,  அனுப்பிவிட்டார்கள்.  (மாற்கு  12:4)

pinbu  vea'roru  oozhiyakkaaranai  avarga'lidaththil  anuppinaan;  avarga'l  avanmeal  kalle'rinthu,  thalaiyilea  kaayappaduththi,  avamaanappaduththi,  anuppivittaarga'l.  (maa’rku  12:4)

மறுபடியும்  வேறொருவனை  அனுப்பினான்;  அவனை  அவர்கள்  கொலைசெய்தார்கள்.  வேறு  அநேகரையும்  அனுப்பினான்;  அவர்களில்  சிலரை  அடித்து,  சிலரைக்  கொன்றுபோட்டார்கள்.  (மாற்கு  12:5)

ma'rupadiyum  vea'roruvanai  anuppinaan;  avanai  avarga'l  kolaiseythaarga'l.  vea'ru  aneagaraiyum  anuppinaan;  avarga'lil  silarai  adiththu,  silaraik  kon'rupoattaarga'l.  (maa’rku  12:5)

அவனுக்குப்  பிரியமான  ஒரே  குமாரன்  இருந்தான்;  என்  குமாரனுக்கு  அஞ்சுவார்களென்று  சொல்லி,  அவனையும்  கடைசியிலே  அவர்களிடத்தில்  அனுப்பினான்.  (மாற்கு  12:6)

avanukkup  piriyamaana  orea  kumaaran  irunthaan;  en  kumaaranukku  agnchuvaarga'len'ru  solli,  avanaiyum  kadaisiyilea  avarga'lidaththil  anuppinaan.  (maa’rku  12:6)

தோட்டக்காரரோ:  இவன்  சுதந்தரவாளி,  இவனைக்  கொலைசெய்வோம்  வாருங்கள்;  அப்பொழுது  சுதந்தரம்  நம்முடையதாகும்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு;  (மாற்கு  12:7)

thoattakkaararoa:  ivan  suthantharavaa'li,  ivanaik  kolaiseyvoam  vaarungga'l;  appozhuthu  suthantharam  nammudaiyathaagum  en'ru  oruvaroadoruvar  sollikko'ndu;  (maa’rku  12:7)

அவனைப்  பிடித்துக்  கொலைசெய்து,  திராட்சத்தோட்டத்துக்குப்  புறம்பே  போட்டுவிட்டார்கள்.  (மாற்கு  12:8)

avanaip  pidiththuk  kolaiseythu,  thiraadchaththoattaththukkup  pu'rambea  poattuvittaarga'l.  (maa’rku  12:8)

அப்படியிருக்க,  திராட்சத்தோட்டத்துக்கு  எஜமான்  என்ன  செய்வான்?  அவன்  வந்து  அந்தத்  தோட்டக்காரரைச்  சங்கரித்து,  திராட்சத்தோட்டத்தை  மற்றவர்களுக்கு  ஒப்புக்கொடுப்பான்  அல்லவா?  (மாற்கு  12:9)

appadiyirukka,  thiraadchaththoattaththukku  ejamaan  enna  seyvaan?  avan  vanthu  anthath  thoattakkaararaich  sanggariththu,  thiraadchaththoattaththai  mat’ravarga'lukku  oppukkoduppaan  allavaa?  (maa’rku  12:9)

வீடு  கட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று;  (மாற்கு  12:10)

veedu  kattugi'ravarga'l  aagaathen'ru  tha'l'lina  kallea  moolaikkuth  thalaikkallaayit’ru;  (maa’rku  12:10)

அது  கர்த்தராலே  ஆயிற்று,  அது  நம்முடைய  கண்களுக்கு  ஆச்சரியமாயிருக்கிறது  என்று  எழுதியிருக்கிற  வாக்கியத்தை  நீங்கள்  வாசிக்கவில்லையா  என்றார்.  (மாற்கு  12:11)

athu  karththaraalea  aayit'ru,  athu  nammudaiya  ka'nga'lukku  aachchariyamaayirukki'rathu  en'ru  ezhuthiyirukki'ra  vaakkiyaththai  neengga'l  vaasikkavillaiyaa  en'raar.  (maa’rku  12:11)

இந்த  உவமையைத்  தங்களைக்குறித்துச்  சொன்னாரென்று  அவர்கள்  அறிந்து,  அவரைப்  பிடிக்க  வகைதேடினார்கள்;  ஆனாலும்  ஜனத்துக்குப்  பயந்து,  அவரை  விட்டுப்  போய்விட்டார்கள்.  (மாற்கு  12:12)

intha  uvamaiyaith  thangga'laikku'riththuch  sonnaaren'ru  avarga'l  a'rinthu,  avaraip  pidikka  vagaitheadinaarga'l;  aanaalum  janaththukkup  bayanthu,  avarai  vittup  poayvittaarga'l.  (maa’rku  12:12)

அவர்கள்,  பேச்சிலே  அவரை  அகப்படுத்தும்படிக்கு,  பரிசேயரிலும்  ஏரோதியரிலும்  சிலரை  அவரிடத்தில்  அனுப்பினார்கள்.  (மாற்கு  12:13)

avarga'l,  peachchilea  avarai  agappaduththumpadikku,  pariseayarilum  earoathiyarilum  silarai  avaridaththil  anuppinaarga'l.  (maa’rku  12:13)

அவர்கள்  வந்து:  போதகரே,  நீர்  சத்தியமுள்ளவரென்றும்,  எவனைக்குறித்தும்  உமக்குக்  கவலையில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்,  நீர்  முகதாட்சணியம்  இல்லாதவராய்த்  தேவனுடைய  மார்க்கத்தைச்  சத்தியமாய்ப்  போதிக்கிறீர்,  இராயனுக்கு  வரிகொடுக்கிறது  நியாயமோ  அல்லவோ?  நாம்  கொடுக்கலாமோ,  கொடுக்கக்கூடாதோ?  என்று  கேட்டார்கள்.  (மாற்கு  12:14)

avarga'l  vanthu:  poathagarea,  neer  saththiyamu'l'lavaren'rum,  evanaikku'riththum  umakkuk  kavalaiyillaiyen'rum  a'rinthirukki'roam,  neer  mugathaadcha'niyam  illaathavaraayth  theavanudaiya  maarkkaththaich  saththiyamaayp  poathikki'reer,  iraayanukku  varikodukki'rathu  niyaayamoa  allavoa?  naam  kodukkalaamoa,  kodukkakkoodaathoa?  en'ru  keattaarga'l.  (maa’rku  12:14)

அவர்களுடைய  மாயத்தை  அவர்  அறிந்து:  நீங்கள்  என்னை  ஏன்  சோதிக்கிறீர்கள்?  நான்  பார்க்கும்படிக்கு  ஒரு  பணத்தை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  (மாற்கு  12:15)

avarga'ludaiya  maayaththai  avar  a'rinthu:  neengga'l  ennai  ean  soathikki'reerga'l?  naan  paarkkumpadikku  oru  pa'naththai  ennidaththil  ko'nduvaarungga'l  en'raar.  (maa’rku  12:15)

அவர்கள்  அதைக்  கொண்டுவந்தார்கள்.  அப்பொழுது  அவர்:  இந்தச்  சுரூபமும்  மேலெழுத்தும்  யாருடையது  என்று  கேட்டார்;  இராயனுடையது  என்றார்கள்.  (மாற்கு  12:16)

avarga'l  athaik  ko'nduvanthaarga'l.  appozhuthu  avar:  inthach  suroobamum  mealezhuththum  yaarudaiyathu  en'ru  keattaar;  iraayanudaiyathu  en'raarga'l.  (maa’rku  12:16)

அதற்கு  இயேசு:  இராயனுடையதை  இராயனுக்கும்,  தேவனுடையதைத்  தேவனுக்கும்  செலுத்துங்கள்  என்றார்.  அவர்கள்  அவரைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  (மாற்கு  12:17)

atha’rku  iyeasu:  iraayanudaiyathai  iraayanukkum,  theavanudaiyathaith  theavanukkum  seluththungga'l  en'raar.  avarga'l  avaraikku'riththu  aachchariyappattaarga'l.  (maa’rku  12:17)

உயிர்த்தெழுதல்  இல்லையென்று  சாதிக்கிற  சதுசேயர்  அவரிடத்தில்  வந்து:  (மாற்கு  12:18)

uyirththezhuthal  illaiyen'ru  saathikki'ra  sathuseayar  avaridaththil  vanthu:  (maa’rku  12:18)

போதகரே,  ஒருவனுடைய  சகோதரன்  சந்தானமில்லாமல்  தன்  மனைவியை  விட்டு  இறந்துபோனால்,  அவனுடைய  சகோதரன்  அவன்  மனைவியை  விவாகம்பண்ணி,  தன்  சகோதரனுக்குச்  சந்தானம்  உண்டாக்கவேண்டுமென்று  மோசே  எங்களுக்கு  எழுதிவைத்திருக்கிறாரே.  (மாற்கு  12:19)

poathagarea,  oruvanudaiya  sagoatharan  santhaanamillaamal  than  manaiviyai  vittu  i'ranthupoanaal,  avanudaiya  sagoatharan  avan  manaiviyai  vivaagampa'n'ni,  than  sagoatharanukkuch  santhaanam  u'ndaakkavea'ndumen'ru  moasea  engga'lukku  ezhuthivaiththirukki'raarea.  (maa’rku  12:19)

இப்படியிருக்க,  ஏழுபேர்  சகோதரர்  இருந்தார்கள்;  மூத்தவன்  ஒரு  பெண்ணை  விவாகம்பண்ணி,  சந்தானமில்லாமல்  இறந்துபோனான்.  (மாற்கு  12:20)

ippadiyirukka,  eazhupear  sagoatharar  irunthaarga'l;  mooththavan  oru  pe'n'nai  vivaagampa'n'ni,  santhaanamillaamal  i'ranthupoanaan.  (maa’rku  12:20)

இரண்டாம்  சகோதரன்  அவளை  விவாகம்பண்ணி,  அவனும்  சந்தானமில்லாமல்  இறந்துபோனான்.  மூன்றாம்  சகோதரனும்  அப்படியேயானான்.  (மாற்கு  12:21)

ira'ndaam  sagoatharan  ava'lai  vivaagampa'n'ni,  avanum  santhaanamillaamal  i'ranthupoanaan.  moon'raam  sagoatharanum  appadiyeayaanaan.  (maa’rku  12:21)

ஏழுபேரும்  அவளை  விவாகம்பண்ணி,  சந்தானமில்லாமல்  இறந்துபோனார்கள்.  எல்லாருக்கும்  பின்பு  அந்த  ஸ்திரீயும்  இறந்துபோனாள்.  (மாற்கு  12:22)

eazhupearum  ava'lai  vivaagampa'n'ni,  santhaanamillaamal  i'ranthupoanaarga'l.  ellaarukkum  pinbu  antha  sthireeyum  i'ranthupoanaa'l.  (maa’rku  12:22)

ஆகையால்,  உயிர்த்தெழுதலில்,  அவர்கள்  எழுந்திருக்கும்போது,  அவர்களில்  எவனுக்கு  அவள்  மனைவியாயிருப்பாள்?  ஏழுபேரும்  அவளை  மனைவியாகக்  கொண்டிருந்தார்களே  என்று  கேட்டார்கள்.  (மாற்கு  12:23)

aagaiyaal,  uyirththezhuthalil,  avarga'l  ezhunthirukkumpoathu,  avarga'lil  evanukku  ava'l  manaiviyaayiruppaa'l?  eazhupearum  ava'lai  manaiviyaagak  ko'ndirunthaarga'lea  en'ru  keattaarga'l.  (maa’rku  12:23)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  வேதவாக்கியங்களையும்,  தேவனுடைய  வல்லமையையும்  அறியாததினாலல்லவா  தப்பான  எண்ணங்  கொள்ளுகிறீர்கள்?  (மாற்கு  12:24)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  neengga'l  veathavaakkiyangga'laiyum,  theavanudaiya  vallamaiyaiyum  a’riyaathathinaalallavaa  thappaana  e'n'nang  ko'l'lugi'reerga'l?  (maa’rku  12:24)

மரித்தோர்  உயிரோடெழுந்திருக்கும்போது  கொள்வனையும்  கொடுப்பனையும்  இல்லை.  அவர்கள்  பரலோகத்தில்  இருக்கிற  தேவதூதரைப்போலிருப்பார்கள்.  (மாற்கு  12:25)

mariththoar  uyiroadezhunthirukkumpoathu  ko'lvanaiyum  koduppanaiyum  illai.  avarga'l  paraloagaththil  irukki’ra  theavathootharaippoaliruppaarga’l.  (maa’rku  12:25)

மரித்தோர்  எழுந்திருப்பதைப்பற்றி:  நான்  ஆபிரகாமின்  தேவனும்,  ஈசாக்கின்  தேவனும்,  யாக்கோபின்  தேவனுமாய்  இருக்கிறேன்  என்று,  தேவன்  முட்செடியைக்குறித்துச்  சொல்லிய  இடத்தில்,  மோசேயின்  ஆகமத்தில்  அவனுக்குச்  சொன்னதை,  நீங்கள்  வாசிக்கவில்லையா?  (மாற்கு  12:26)

mariththoar  ezhunthiruppathaippat’ri:  naan  aabirahaamin  theavanum,  eesaakkin  theavanum,  yaakkoabin  theavanumaay  irukki’rean  en’ru,  theavan  mudchediyaikku’riththuch  solliya  idaththil,  moaseayin  aagamaththil  avanukkuch  sonnathai,  neengga’l  vaasikkavillaiyaa?  (maa’rku  12:26)

அவர்  மரித்தோருக்குத்  தேவனாயிராமல்,  ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்;  ஆகையால்  நீங்கள்  மிகவும்  தப்பான  எண்ணங்கொள்ளுகிறீர்கள்  என்றார்.  (மாற்கு  12:27)

avar  mariththoarukkuth  theavanaayiraamal,  jeevanu'l'loarukkuth  theavanaayirukki’raar;  aagaiyaal  neengga’l  migavum  thappaana  e'n'nangko'l'lugi'reerga’l  en’raar.  (maa’rku  12:27)

வேதபாரகரில்  ஒருவன்  அவர்கள்  தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு,  அவர்களுக்கு  நன்றாய்  உத்தரவு  சொன்னாரென்று  அறிந்து,  அவரிடத்தில்  வந்து:  கற்பனைகளிலெல்லாம்  பிரதான  கற்பனை  எதுவென்று  கேட்டான்.  (மாற்கு  12:28)

veathapaaragaril  oruvan  avarga’l  tharkkampa'n'nugi’rathaikkeattu,  avarga’lukku  nan’raay  uththaravu  sonnaaren’ru  a’rinthu,  avaridaththil  vanthu:  ka’rpanaiga’lilellaam  pirathaana  ka’rpanai  ethuven’ru  keattaan.  (maa’rku  12:28)

இயேசு  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  கற்பனைகளிலெல்லாம்  பிரதான  கற்பனை  எதுவென்றால்:  இஸ்ரவேலே  கேள்,  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஒருவரே  கர்த்தர்.  (மாற்கு  12:29)

iyeasu  avanukkup  pirathiyuththaramaaga:  ka’rpanaiga’lilellaam  pirathaana  ka’rpanai  ethuven’raal:  isravealea  kea'l,  nammudaiya  theavanaagiya  karththar  oruvarea  karththar.  (maa’rku  12:29)

உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்,  உன்  முழு  ஆத்துமாவோடும்,  உன்  முழு  மனதோடும்,  உன்  முழுப்  பலத்தோடும்  அன்புகூருவாயாக  என்பதே  பிரதான  கற்பனை.  (மாற்கு  12:30)

un  theavanaagiya  karththaridaththil  un  muzhu  iruthayaththoadum,  un  muzhu  aaththumaavoadum,  un  muzhu  manathoadum,  un  muzhup  balaththoadum  anbukooruvaayaaga  enbathea  pirathaana  ka’rpanai.  (maa’rku  12:30)

இதற்கு  ஒப்பாயிருக்கிற  இரண்டாம்  கற்பனை  என்னவென்றால்:  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோல்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பதே;  இவைகளிலும்  பெரிய  கற்பனை  வேறொன்றுமில்லை  என்றார்.  (மாற்கு  12:31)

itha’rku  oppaayirukki’ra  ira'ndaam  ka’rpanai  ennaven’raal:  unnidaththil  nee  anbukooruvathupoal  pi’ranidaththilum  anbukooruvaayaaga  enbathea;  ivaiga’lilum  periya  ka’rpanai  vea’ron’rumillai  en’raar.  (maa’rku  12:31)

அதற்கு  வேதபாரகன்:  சரிதான்,  போதகரே,  நீர்  சொன்னது  சத்தியம்;  ஒரே  தேவன்  உண்டு,  அவரைத்தவிர  வேறொரு  தேவன்  இல்லை.  (மாற்கு  12:32)

atha’rku  veathapaaragan:  sarithaan,  poathagarea,  neer  sonnathu  saththiyam;  orea  theavan  u'ndu,  avaraiththavira  vea’roru  theavan  illai.  (maa’rku  12:32)

முழு  இருதயத்தோடும்,  முழு  மனதோடும்,  முழு  ஆத்துமாவோடும்,  முழுப்  பலத்தோடும்  அவரிடத்தில்  அன்புகூருகிறதும்,  தன்னிடத்தில்  அன்புகூருகிறதுபோல்  பிறனிடத்தில்  அன்புகூருகிறதுமே  சர்வாங்கதகனம்  முதலிய  பலிகளைப்பார்க்கிலும்  முக்கியமாயிருக்கிறது  என்றான்.  (மாற்கு  12:33)

muzhu  iruthayaththoadum,  muzhu  manathoadum,  muzhu  aaththumaavoadum,  muzhup  balaththoadum  avaridaththil  anbukoorugi’rathum,  thannidaththil  anbukoorugi’rathupoal  pi’ranidaththil  anbukoorugi’rathumea  sarvaanggathaganam  muthaliya  baliga’laippaarkkilum  mukkiyamaayirukki’rathu  en’raan.  (maa’rku  12:33)

அவன்  விவேகமாய்  உத்தரவுசொன்னதை  இயேசு  கண்டு:  நீ  தேவனுடைய  ராஜ்யத்துக்குத்  தூரமானவனல்ல  என்றார்.  அதன்பின்பு  ஒருவரும்  அவரிடத்தில்  யாதொரு  கேள்வியுங்  கேட்கத்  துணியவில்லை.  (மாற்கு  12:34)

avan  viveagamaay  uththaravusonnathai  iyeasu  ka'ndu:  nee  theavanudaiya  raajyaththukkuth  thooramaanavanalla  en’raar.  athanpinbu  oruvarum  avaridaththil  yaathoru  kea'lviyung  keadkath  thu'niyavillai.  (maa’rku  12:34)

இயேசு  தேவாலயத்திலே  உபதேசம்பண்ணுகையில்,  அவர்:  கிறிஸ்து  தாவீதின்  குமாரனென்று  வேதபாரகர்  எப்படிச்  சொல்லுகிறார்கள்?  (மாற்கு  12:35)

iyeasu  theavaalayaththilea  ubatheasampa'n'nugaiyil,  avar:  ki’risthu  thaaveethin  kumaaranen’ru  veathapaaragar  eppadich  sollugi’raarga’l?  (maa’rku  12:35)

நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று  கர்த்தர்  என்  ஆண்டவரோடே  சொன்னார்  என்று  தாவீது  பரிசுத்த  ஆவியினாலே  சொல்லியிருக்கிறானே.  (மாற்கு  12:36)

naan  ummudaiya  saththurukka'lai  umakkup  paathapadiyaakkip  poadumvaraikkum  neer  ennudaiya  valathupaarisaththil  udkaarum  en’ru  karththar  en  aa'ndavaroadea  sonnaar  en’ru  thaaveethu  parisuththa  aaviyinaalea  solliyirukki’raanea.  (maa’rku  12:36)

தாவீதுதானே  அவரை  ஆண்டவரென்று  சொல்லியிருக்க,  அவனுக்கு  அவர்  குமாரனாயிருப்பது  எப்படி  என்றார்.  அநேக  ஜனங்கள்  அவருடைய  உபதேசத்தை  விருப்பத்தோடே  கேட்டார்கள்.  (மாற்கு  12:37)

thaaveethuthaanea  avarai  aa'ndavaren’ru  solliyirukka,  avanukku  avar  kumaaranaayiruppathu  eppadi  en’raar.  aneaga  janangga’l  avarudaiya  ubatheasaththai  viruppaththoadea  keattaarga’l.  (maa’rku  12:37)

பின்னும்  அவர்  உபதேசம்பண்ணுகையில்  அவர்களை  நோக்கி:  நீண்ட  அங்கிகளைத்  தரித்துக்கொண்டு  திரியவும்,  சந்தைவெளிகளில்  வந்தனங்களை  அடையவும்,  (மாற்கு  12:38)

pinnum  avar  ubatheasampa'n'nugaiyil  avarga’lai  noakki:  nee'nda  anggiga’laith  thariththukko'ndu  thiriyavum,  santhaive'liga’lil  vanthanangga’lai  adaiyavum,  (maa’rku  12:38)

ஜெப  ஆலயங்களில்  முதன்மையான  ஆசனங்களில்  உட்காரவும்,  விருந்துகளில்  முதன்மையான  இடங்களில்  இருக்கவும்  விரும்பி,  (மாற்கு  12:39)

jeba  aalayangga’lil  muthanmaiyaana  aasanangga’lil  udkaaravum,  virunthuga’lil  muthanmaiyaana  idangga’lil  irukkavum  virumbi,  (maa’rku  12:39)

விதவைகளின்  வீடுகளைப்  பட்சித்து,  பார்வைக்கு  நீண்ட  ஜெபம்  பண்ணுகிற  வேதபாரகரைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்கள்  அதிக  ஆக்கினையை  அடைவார்கள்  என்றார்.  (மாற்கு  12:40)

vithavaiga’lin  veeduga’laip  padchiththu,  paarvaikku  nee'nda  jebam  pa'n'nugi’ra  veathapaaragaraikku’riththu  echcharikkaiyaayirungga’l;  avarga’l  athiga  aakkinaiyai  adaivaarga’l  en’raar.  (maa’rku  12:40)

இயேசு  காணிக்கைப்  பெட்டிக்கு  எதிராக  உட்கார்ந்து,  ஜனங்கள்  காணிக்கைப்  பெட்டியில்  பணம்  போடுகிறதைப்  பார்த்துக்கொண்டிருந்தார்;  ஐசுவரியவான்கள்  அநேகர்  அதிகமாய்ப்  போட்டார்கள்.  (மாற்கு  12:41)

iyeasu  kaa'nikkaip  pettikku  ethiraaga  udkaarnthu,  janangga’l  kaa'nikkaip  pettiyil  pa'nam  poadugi’rathaip  paarththukko'ndirunthaar;  aisuvariyavaanga’l  aneagar  athigamaayp  poattaarga’l.  (maa’rku  12:41)

ஏழையான  ஒரு  விதவையும்  வந்து,  ஒரு  துட்டுக்குச்  சரியான  இரண்டு  காசைப்  போட்டாள்.  (மாற்கு  12:42)

eazhaiyaana  oru  vithavaiyum  vanthu,  oru  thuttukkuch  sariyaana  ira'ndu  kaasaip  poattaa'l.  (maa’rku  12:42)

அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷரை  அழைத்து,  காணிக்கைப்  பெட்டியில்  பணம்  போட்ட  மற்றெல்லாரைப்  பார்க்கிலும்  இந்த  ஏழை  விதவை  அதிகமாய்ப்  போட்டாள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  (மாற்கு  12:43)

appozhuthu  avar  thammudaiya  seesharai  azhaiththu,  kaa'nikkaip  pettiyil  pa'nam  poatta  mat’rellaaraip  paarkkilum  intha  eazhai  vithavai  athigamaayp  poattaa'l  en’ru  meyyaagavea  ungga’lukkuch  sollugi’rean;  (maa’rku  12:43)

அவர்களெல்லாரும்  தங்கள்  பரிபூரணத்திலிருந்து  எடுத்துப்போட்டார்கள்;  இவளோ  தன்  வறுமையிலிருந்து  தன்  ஜீவனத்துக்கு  உண்டாயிருந்ததெல்லாம்  போட்டுவிட்டாள்  என்றார்.  (மாற்கு  12:44)

avarga’lellaarum  thangga’l  paripoora'naththilirunthu  eduththuppoattaarga’l;  iva'loa  than  va’rumaiyilirunthu  than  jeevanaththukku  u'ndaayirunthathellaam  poattuvittaa'l  en’raar.  (maa’rku  12:44)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!