Monday, May 02, 2016

Maa’rku 10 | மாற்கு 10 | Mark 10

அவர்  அவ்விடம்  விட்டெழுந்து,  யோர்தானுக்கு  அக்கரையிலுள்ள  தேசத்தின்  வழியாய்  யூதேயாவின்  எல்லைகளில்  வந்தார்.  ஜனங்கள்  மறுபடியும்  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  அவர்  தம்முடைய  வழக்கத்தின்படியே  மறுபடியும்  அவர்களுக்குப்  போதகம்பண்ணினார்.  (மாற்கு  10:1)

avar  avvidam  vittezhunthu,  yoarthaanukku  akkaraiyilu'l'la  theasaththin  vazhiyaay  yootheayaavin  ellaiga'lil  vanthaar.  janangga'l  ma'rupadiyum  avaridaththil  koodivanthaarga'l.  avar  thammudaiya  vazhakkaththinpadiyea  ma'rupadiyum  avarga'lukkup  poathagampa'n'ninaar.  (maa’rku  10:1)

அப்பொழுது  பரிசேயர்,  அவரைச்  சோதிக்கவேண்டுமென்று,  அவரிடத்தில்  வந்து:  புருஷனானவன்  தன்  மனைவியைத்  தள்ளிவிடுவது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  (மாற்கு  10:2)

appozhuthu  pariseayar,  avaraich  soathikkavea'ndumen'ru,  avaridaththil  vanthu:  purushanaanavan  than  manaiviyaith  tha'l'lividuvathu  niyaayamaa  en'ru  keattaarga'l.  (maa’rku  10:2)

அவர்  பிரதியுத்தரமாக:  மோசே  உங்களுக்குக்  கட்டளையிட்டிருக்கிறது  என்ன  என்று  கேட்டார்.  (மாற்கு  10:3)

avar  pirathiyuththaramaaga:  moasea  ungga'lukkuk  katta'laiyittirukki'rathu  enna  en'ru  keattaar.  (maa’rku  10:3)

அதற்கு  அவர்கள்:  தள்ளுதற்சீட்டை  எழுதிக்கொடுத்து,  அவளைத்  தள்ளிவிடலாமென்று  மோசே  உத்தரவுகொடுத்திருக்கிறார்  என்றார்கள்.  (மாற்கு  10:4)

atha’rku  avarga'l:  tha'l'lutha’rseettai  ezhuthikkoduththu,  ava'laith  tha'l'lividalaamen'ru  moasea  uththaravukoduththirukki'raar  en'raarga'l.  (maa’rku  10:4)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  உங்கள்  இருதயகடினத்தினிமித்தம்  இந்தக்  கட்டளையை  உங்களுக்கு  எழுதிக்கொடுத்தான்.  (மாற்கு  10:5)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  ungga'l  iruthayakadinaththinimiththam  inthak  katta'laiyai  ungga'lukku  ezhuthikkoduththaan.  (maa’rku  10:5)

ஆகிலும்,  ஆதியிலே  மனுஷரைச்  சிருஷ்டித்த  தேவன்  அவர்களை  ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார்.  (மாற்கு  10:6)

aagilum,  aathiyilea  manusharaich  sirushdiththa  theavan  avarga'lai  aa'num  pe'n'numaaga  u'ndaakkinaar.  (maa’rku  10:6)

இதினிமித்தம்  புருஷனானவன்  தன்  தகப்பனையும்  தாயையும்  விட்டுத்  தன்  மனைவியோடே  இசைந்திருப்பான்;  (மாற்கு  10:7)

ithinimiththam  purushanaanavan  than  thagappanaiyum  thaayaiyum  vittuth  than  manaiviyoadea  isainthiruppaan;  (maa’rku  10:7)

அவர்கள்  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்;  இவ்விதமாய்  அவர்கள்  இருவராயிராமல்  ஒரே  மாம்சமாயிருக்கிறார்கள்.  (மாற்கு  10:8)

avarga'l  iruvarum  orea  maamsamaayiruppaarga'l;  ivvithamaay  avarga'l  iruvaraayiraamal  orea  maamsamaayirukki'raarga'l.  (maa’rku  10:8)

ஆகையால்,  தேவன்  இணைத்ததை  மனுஷன்  பிரிக்காதிருக்கக்கடவன்  என்றார்.  (மாற்கு  10:9)

aagaiyaal,  theavan  i'naiththathai  manushan  pirikkaathirukkakkadavan  en'raar.  (maa’rku  10:9)

பின்பு  வீட்டிலே  அவருடைய  சீஷர்கள்  அந்தக்  காரியத்தைக்குறித்து  மறுபடியும்  அவரிடத்தில்  விசாரித்தார்கள்.  (மாற்கு  10:10)

pinbu  veettilea  avarudaiya  seesharga'l  anthak  kaariyaththaikku'riththu  ma'rupadiyum  avaridaththil  visaariththaarga'l.  (maa’rku  10:10)

அப்பொழுது  அவர்:  எவனாகிலும்  தன்  மனைவியைத்  தள்ளிவிட்டு,  வேறொருத்தியை  விவாகம்பண்ணினால்,  அவன்  அவளுக்கு  விரோதமாய்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.  (மாற்கு  10:11)

appozhuthu  avar:  evanaagilum  than  manaiviyaith  tha'l'livittu,  vea'roruththiyai  vivaagampa'n'ninaal,  avan  ava'lukku  viroathamaay  vibasaaragnseygi'ravanaayiruppaan.  (maa’rku  10:11)

மனைவியும்  தன்  புருஷனைத்  தள்ளிவிட்டு,  வேறொருவனை  விவாகம்பண்ணினால்,  விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள்  என்றார்.  (மாற்கு  10:12)

manaiviyum  than  purushanaith  tha'l'livittu,  vea'roruvanai  vivaagampa'n'ninaal,  vibasaaragnseygi'rava'laayiruppaa'l  en'raar.  (maa’rku  10:12)

அப்பொழுது,  சிறு  பிள்ளைகளை  அவர்  தொடும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  கொண்டுவந்தவர்களைச்  சீஷர்கள்  அதட்டினார்கள்.  (மாற்கு  10:13)

appozhuthu,  si'ru  pi'l'laiga'lai  avar  thodumpadikku  avarga'lai  avaridaththil  ko'nduvanthaarga'l;  ko'nduvanthavarga'laich  seesharga'l  athattinaarga'l.  (maa’rku  10:13)

இயேசு  அதைக்  கண்டு,  விசனமடைந்து:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது.  (மாற்கு  10:14)

iyeasu  athaik  ka'ndu,  visanamadainthu:  si'ru  pi'l'laiga'l  ennidaththil  varugi'ratha’rku  idangkodungga'l;  avarga'laith  thadaipa'n'naathirungga'l;  theavanudaiya  raajyam  appadippattavarga'ludaiyathu.  (maa’rku  10:14)

எவனாகிலும்  சிறு  பிள்ளையைப்போல்  தேவனுடைய  ராஜ்யத்தை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்,  அவன்  அதில்  பிரவேசிப்பதில்லையென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (மாற்கு  10:15)

evanaagilum  si'ru  pi'l'laiyaippoal  theavanudaiya  raajyaththai  eat’rukko'l'laavittaal,  avan  athil  piraveasippathillaiyen'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en'ru  solli,  (maa’rku  10:15)

அவர்களை  அணைத்துக்கொண்டு,  அவர்கள்மேல்  கைகளை  வைத்து,  அவர்களை  ஆசீர்வதித்தார்.  (மாற்கு  10:16)

avarga'lai  a'naiththukko'ndu,  avarga'lmeal  kaiga'lai  vaiththu,  avarga'lai  aaseervathiththaar.  (maa’rku  10:16)

பின்பு  அவர்  புறப்பட்டு  வழியிலே  போகையில்,  ஒருவன்  ஓடிவந்து,  அவருக்கு  முன்பாக  முழங்கால்படியிட்டு:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  நான்  என்னசெய்யவேண்டும்  என்று  கேட்டான்.  (மாற்கு  10:17)

pinbu  avar  pu'rappattu  vazhiyilea  poagaiyil,  oruvan  oadivanthu,  avarukku  munbaaga  muzhangkaalpadiyittu:  nalla  poathagarea,  niththiyajeevanaich  suthanthariththukko'l'lumpadi  naan  ennaseyyavea'ndum  en'ru  keattaan.  (maa’rku  10:17)

அதற்கு  இயேசு:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனுமில்லையே.  (மாற்கு  10:18)

atha’rku  iyeasu:  nee  ennai  nallavan  en'ru  solvaanean?  theavan  oruvar  thavira  nallavan  oruvanumillaiyea.  (maa’rku  10:18)

விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  கொலை  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக,  வஞ்சனை  செய்யாதிருப்பாயாக,  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்கிற  கற்பனைகளை  அறிந்திருக்கிறாயே  என்றார்.  (மாற்கு  10:19)

vibasaaragn  seyyaathiruppaayaaga,  kolai  seyyaathiruppaayaaga,  ka'lavu  seyyaathiruppaayaaga,  poychsaadchi  sollaathiruppaayaaga,  vagnchanai  seyyaathiruppaayaaga,  un  thagappanaiyum  un  thaayaiyum  kanampa'n'nuvaayaaga  engi'ra  ka’rpanaiga'lai  a'rinthirukki'raayea  en'raar.  (maa’rku  10:19)

அதற்கு  அவன்:  போதகரே,  இவைகளையெல்லாம்  என்  சிறு  வயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்  என்றான்.  (மாற்கு  10:20)

atha’rku  avan:  poathagarea,  ivaiga'laiyellaam  en  si'ru  vayathumuthal  kaikko'ndirukki'rean  en'raan.  (maa’rku  10:20)

இயேசு  அவனைப்  பார்த்து,  அவனிடத்தில்  அன்புகூர்ந்து:  உன்னிடத்தில்  ஒரு  குறைவு  உண்டு;  நீ  போய்,  உனக்கு  உண்டானவைகளையெல்லாம்  விற்று,  தரித்திரருக்குக்  கொடு;  அப்பொழுது  பரலோகத்திலே  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  சிலுவையை  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  (மாற்கு  10:21)

iyeasu  avanaip  paarththu,  avanidaththil  anbukoornthu:  unnidaththil  oru  ku'raivu  u'ndu;  nee  poay,  unakku  u'ndaanavaiga'laiyellaam  vit’ru,  thariththirarukkuk  kodu;  appozhuthu  paraloagaththilea  unakkup  pokkisham  u'ndaayirukkum;  pinbu  siluvaiyai  eduththukko'ndu,  ennaip  pinpat’rivaa  en'raar.  (maa’rku  10:21)

அவன்  மிகுந்த  ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,  இந்த  வார்த்தையைக்  கேட்டு,  மனமடிந்து,  துக்கத்தோடே  போய்விட்டான்.  (மாற்கு  10:22)

avan  miguntha  aasthiyu'l'lavanaayirunthapadiyaal,  intha  vaarththaiyaik  keattu,  manamadinthu,  thukkaththoadea  poayvittaan.  (maa’rku  10:22)

அப்பொழுது  இயேசு  சுற்றிப்பார்த்து,  தம்முடைய  சீஷரை  நோக்கி:  ஐசுவரியமுள்ளவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது  என்றார்.  (மாற்கு  10:23)

appozhuthu  iyeasu  sut'rippaarththu,  thammudaiya  seesharai  noakki:  aisuvariyamu'l'lavarga'l  theavanudaiya  raajyaththil  piraveasippathu  evva'lavu  arithaayirukki'rathu  en'raar.  (maa’rku  10:23)

சீஷர்கள்  அவருடைய  வார்த்தைகளைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  இயேசு  பின்னும்  அவர்களை  நோக்கி:  பிள்ளைகளே,  ஐசுவரியத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்கிறவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிக்கிறது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது!  (மாற்கு  10:24)

seesharga'l  avarudaiya  vaarththaiga'laikku'riththu  aachchariyappattaarga'l.  iyeasu  pinnum  avarga'lai  noakki:  pi'l'laiga'lea,  aisuvariyaththinmeal  nambikkaiyaayirukki'ravarga'l  theavanudaiya  raajyaththil  piraveasikki'rathu  evva'lavu  arithaayirukki'rathu!  (maa’rku  10:24)

ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்றார்.  (மாற்கு  10:25)

aisuvariyavaan  theavanudaiya  raajyaththil  piraveasippathaippaarkkilum,  ottagamaanathu  oosiyin  kaathilea  nuzhaivathu  e'lithaayirukkum  en'raar.  (maa’rku  10:25)

அவர்கள்  பின்னும்  அதிகமாய்  ஆச்சரியப்பட்டு:  அப்படியானால்  யார்  இரட்சிக்கப்படக்கூடும்  என்று  தங்களுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  (மாற்கு  10:26)

avarga'l  pinnum  athigamaay  aachchariyappattu:  appadiyaanaal  yaar  iradchikkappadakkoodum  en'ru  thangga'lukku'l'lea  sollikko'ndaarga'l.  (maa’rku  10:26)

இயேசு  அவர்களைப்  பார்த்து:  மனுஷரால்  இது  கூடாததுதான்,  தேவனால்  இது  கூடாததல்ல;  தேவனாலே  எல்லாம்  கூடும்  என்றார்.  (மாற்கு  10:27)

iyeasu  avarga'laip  paarththu:  manusharaal  ithu  koodaathathuthaan,  theavanaal  ithu  koodaathathalla;  theavanaalea  ellaam  koodum  en'raar.  (maa’rku  10:27)

அப்பொழுது  பேதுரு  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே,  என்று  சொல்லத்தொடங்கினான்.  (மாற்கு  10:28)

appozhuthu  peathuru  avarai  noakki:  ithoa,  naangga'l  ellaavat’raiyumvittu,  ummaip  pinpat'rinoamea,  en'ru  sollaththodangginaan.  (maa’rku  10:28)

அதற்கு  இயேசு  பிரதியுத்தரமாக:  என்னிமித்தமாகவும்,  சுவிசேஷத்தினிமித்தமாகவும்,  வீட்டையாவது,  சகோதரரையாவது,  சகோதரிகளையாவது,  தகப்பனையாவது,  தாயையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது,  நிலங்களையாவது  விட்டவன்  எவனும்,  (மாற்கு  10:29)

atha’rku  iyeasu  pirathiyuththaramaaga:  ennimiththamaagavum,  suviseashaththinimiththamaagavum,  veettaiyaavathu,  sagoathararaiyaavathu,  sagoathariga'laiyaavathu,  thagappanaiyaavathu,  thaayaiyaavathu,  manaiviyaiyaavathu,  pi'l'laiga'laiyaavathu,  nilangga'laiyaavathu  vittavan  evanum,  (maa’rku  10:29)

இப்பொழுது  இம்மையிலே,  துன்பங்களோடேகூட  நூறத்தனையாக,  வீடுகளையும்,  சகோதரரையும்,  சகோதரிகளையும்,  தாய்களையும்,  பிள்ளைகளையும்,  நிலங்களையும்,  மறுமையிலே  நித்தியஜீவனையும்  அடைவான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மாற்கு  10:30)

ippozhuthu  immaiyilea,  thunbangga'loadeakooda  noo'raththanaiyaaga,  veeduga'laiyum,  sagoathararaiyum,  sagoathariga'laiyum,  thaayga'laiyum,  pi'l'laiga'laiyum,  nilangga'laiyum,  ma'rumaiyilea  niththiyajeevanaiyum  adaivaan  en'ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maa’rku  10:30)

ஆகிலும்  முந்தினோர்  அநேகர்  பிந்தினோராயும்,  பிந்தினோர்  அநேகர்  முந்தினோராயும்  இருப்பார்கள்  என்றார்.  (மாற்கு  10:31)

aagilum  munthinoar  aneagar  pinthinoaraayum,  pinthinoar  aneagar  munthinoaraayum  iruppaarga'l  en'raar.  (maa’rku  10:31)

பின்பு  அவர்கள்  எருசலேமுக்குப்  பிரயாணமாய்ப்  போகையில்,  இயேசு  அவர்களுக்கு  முன்னே  நடந்துபோனார்;  அவர்கள்  திகைத்து,  அவருக்குப்  பின்னே,  பயத்தோடே  போனார்கள்.  அப்பொழுது  அவர்  பன்னிருவரையும்  அழைத்து,  தமக்குச்  சம்பவிக்கப்போகிறவைகளை  அவர்களுக்கு  மறுபடியும்  சொல்லத்தொடங்கினார்:  (மாற்கு  10:32)

pinbu  avarga'l  erusaleamukkup  pirayaa'namaayp  poagaiyil,  iyeasu  avarga'lukku  munnea  nadanthupoanaar;  avarga'l  thigaiththu,  avarukkup  pinnea,  bayaththoadea  poanaarga'l.  appozhuthu  avar  panniruvaraiyum  azhaiththu,  thamakkuch  sambavikkappoagi'ravaiga'lai  avarga'lukku  ma'rupadiyum  sollaththodangginaar:  (maa’rku  10:32)

இதோ,  எருசலேமுக்குப்  போகிறோம்;  அங்கே  மனுஷகுமாரன்  பிரதான  ஆசாரியரிடத்திலும்  வேதபாரகரிடத்திலும்  ஒப்புக்கொடுக்கப்படுவார்;  அவர்கள்  அவரை  மரண  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  புறத்தேசத்தாரிடத்தில்  ஒப்புக்கொடுப்பார்கள்.  (மாற்கு  10:33)

ithoa,  erusaleamukkup  poagi'roam;  anggea  manushakumaaran  pirathaana  aasaariyaridaththilum  veathapaaragaridaththilum  oppukkodukkappaduvaar;  avarga'l  avarai  mara'na  aakkinaikku'l'laagath  theerththu,  pu'raththeasaththaaridaththil  oppukkoduppaarga'l.  (maa’rku  10:33)

அவர்கள்  அவரைப்  பரியாசம்பண்ணி,  அவரை  வாரினால்  அடித்து,  அவர்மேல்  துப்பி,  அவரைக்  கொலைசெய்வார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  (மாற்கு  10:34)

avarga'l  avaraip  pariyaasampa'n'ni,  avarai  vaarinaal  adiththu,  avarmeal  thuppi,  avaraik  kolaiseyvaarga'l;  aagilum  moon'raam  naa'lilea  avar  uyiroadea  ezhunthiruppaar  en'raar.  (maa’rku  10:34)

அப்பொழுது  செபெதேயுவின்  குமாரராகிய  யாக்கோபும்  யோவானும்  அவரிடத்தில்  வந்து:  போதகரே,  நாங்கள்  கேட்டுக்கொள்ளப்போகிறதை  நீர்  எங்களுக்குச்  செய்யவேண்டுமென்று  விரும்புகிறோம்  என்றார்கள்.  (மாற்கு  10:35)

appozhuthu  sebetheayuvin  kumaararaagiya  yaakkoabum  yoavaanum  avaridaththil  vanthu:  poathagarea,  naangga'l  keattukko'l'lappoagi'rathai  neer  engga'lukkuch  seyyavea'ndumen'ru  virumbugi'roam  en'raarga'l.  (maa’rku  10:35)

அவர்  அவர்களை  நோக்கி:  நான்  உங்களுக்கு  என்னசெய்யவேண்டுமென்று  விரும்புகிறீர்கள்  என்று  கேட்டார்.  (மாற்கு  10:36)

avar  avarga'lai  noakki:  naan  ungga'lukku  ennaseyyavea'ndumen'ru  virumbugi'reerga'l  en'ru  keattaar.  (maa’rku  10:36)

அதற்கு  அவர்கள்:  உமது  மகிமையிலே,  எங்களில்  ஒருவன்  உமது  வலதுபாரிசத்திலும்,  ஒருவன்  உமது  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  எங்களுக்கு  அருள்செய்யவேண்டும்  என்றார்கள்.  (மாற்கு  10:37)

atha’rku  avarga'l:  umathu  magimaiyilea,  engga'lil  oruvan  umathu  valathupaarisaththilum,  oruvan  umathu  idathupaarisaththilum  udkaarnthirukkumpadi  engga'lukku  aru'lseyyavea'ndum  en'raarga'l.  (maa’rku  10:37)

இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கேட்டுக்கொள்ளுகிறது  இன்னது  என்று  உங்களுக்கே  தெரியவில்லை.  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிக்கவும்,  நான்  பெறும்  ஸ்நானத்தை  நீங்கள்  பெறவும்,  உங்களால்  கூடுமா  என்றார்.  (மாற்கு  10:38)

iyeasu  avarga'lai  noakki:  neengga'l  keattukko'l'lugi'rathu  innathu  en'ru  ungga'lukkea  theriyavillai.  naan  kudikkum  paaththiraththil  neengga'l  kudikkavum,  naan  pe'rum  snaanaththai  neengga'l  pe'ravum,  ungga'laal  koodumaa  en'raar.  (maa’rku  10:38)

அதற்கு  அவர்கள்:  கூடும்  என்றார்கள்.  இயேசு  அவர்களை  நோக்கி:  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிப்பீர்கள்,  நான்  பெறும்  ஸ்நானத்தையும்  நீங்கள்  பெறுவீர்கள்.  (மாற்கு  10:39)

atha’rku  avarga'l:  koodum  en'raarga'l.  iyeasu  avarga'lai  noakki:  naan  kudikkum  paaththiraththil  neengga'l  kudippeerga'l,  naan  pe'rum  snaanaththaiyum  neengga'l  pe'ruveerga'l.  (maa’rku  10:39)

ஆனாலும்  என்  வலதுபாரிசத்திலும்  என்  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  எவர்களுக்கு  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ  அவர்களுக்கேயல்லாமல்,  மற்றொருவருக்கும்  அதை  அருளுவது  என்  காரியமல்ல  என்றார்.  (மாற்கு  10:40)

aanaalum  en  valathupaarisaththilum  en  idathupaarisaththilum  udkaarnthirukkumpadi  evarga'lukku  aayaththampa'n'nappattirukki'rathoa  avarga'lukkeayallaamal,  mat’roruvarukkum  athai  aru'luvathu  en  kaariyamalla  en'raar.  (maa’rku  10:40)

மற்றப்  பத்துப்பேரும்  அதைக்கேட்டு,  யாக்கோபின்  மேலும்  யோவானின்  மேலும்  எரிச்சலானார்கள்.  (மாற்கு  10:41)

mat'rap  paththuppearum  athaikkeattu,  yaakkoabin  mealum  yoavaanin  mealum  erichchalaanaarga'l.  (maa’rku  10:41)

அப்பொழுது,  இயேசு  அவர்களைக்  கிட்டவரச்செய்து:  புறஜாதியாருக்கு  அதிகாரிகளாக  எண்ணப்பட்டவர்கள்  அவர்களை  இறுமாப்பாய்  ஆளுகிறார்கள்  என்றும்,  அவர்களில்  பெரியவர்கள்  அவர்கள்மேல்  கடினமாய்  அதிகாரம்  செலுத்துகிறார்கள்  என்றும்  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  (மாற்கு  10:42)

appozhuthu,  iyeasu  avarga'laik  kittavarachseythu:  pu'rajaathiyaarukku  athigaariga'laaga  e'n'nappattavarga'l  avarga'lai  i'rumaappaay  aa'lugi'raarga'l  en'rum,  avarga'lil  periyavarga'l  avarga'lmeal  kadinamaay  athigaaram  seluththugi'raarga'l  en'rum  neengga'l  a'rinthirukki'reerga'l.  (maa’rku  10:42)

உங்களுக்குள்ளே  அப்படி  இருக்கலாகாது;  உங்களில்  எவனாகிலும்  பெரியவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்குப்  பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.  (மாற்கு  10:43)

ungga'lukku'l'lea  appadi  irukkalaagaathu;  ungga'lil  evanaagilum  periyavanaayirukka  virumbinaal,  avan  ungga'lukkup  pa'nividaikkaaranaayirukkakkadavan.  (maa’rku  10:43)

உங்களில்  எவனாகிலும்  முதன்மையானவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  எல்லாருக்கும்  ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  (மாற்கு  10:44)

ungga'lil  evanaagilum  muthanmaiyaanavanaayirukka  virumbinaal,  avan  ellaarukkum  oozhiyakkaaranaayirukkakkadavan.  (maa’rku  10:44)

அப்படியே,  மனுஷகுமாரனும்  ஊழியங்கொள்ளும்படி  வராமல்,  ஊழியஞ்செய்யவும்,  அநேகரை  மீட்கும்பொருளாகத்  தம்முடைய  ஜீவனைக்  கொடுக்கவும்  வந்தார்  என்றார்.  (மாற்கு  10:45)

appadiyea,  manushakumaaranum  oozhiyangko'l'lumpadi  varaamal,  oozhiyagnseyyavum,  aneagarai  meedkumporu'laagath  thammudaiya  jeevanaik  kodukkavum  vanthaar  en'raar.  (maa’rku  10:45)

பின்பு  அவர்கள்  எரிகோவுக்கு  வந்தார்கள்.  அவரும்  அவருடைய  சீஷர்களும்  திரளான  ஜனங்களும்  எரிகோவைவிட்டுப்  புறப்படுகிறபோது,  திமேயுவின்  மகனாகிய  பர்திமேயு  என்கிற  ஒரு  குருடன்,  வழியருகே  உட்கார்ந்து,  பிச்சை  கேட்டுக்கொண்டிருந்தான்.  (மாற்கு  10:46)

pinbu  avarga'l  erigoavukku  vanthaarga'l.  avarum  avarudaiya  seesharga'lum  thira'laana  janangga'lum  erigoavaivittup  pu'rappadugi'rapoathu,  thimeayuvin  maganaagiya  barthimeayu  engi'ra  oru  kurudan,  vazhiyarugea  udkaarnthu,  pichchai  keattukko'ndirunthaan.  (maa’rku  10:46)

அவன்  நசரேயனாகிய  இயேசு  வருகிறாரென்று  கேள்விப்பட்டு:  இயேசுவே,  தாவீதின்  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  கூப்பிடத்  தொடங்கினான்.  (மாற்கு  10:47)

avan  nasareayanaagiya  iyeasu  varugi'raaren'ru  kea'lvippattu:  iyeasuvea,  thaaveethin  kumaaranea,  enakku  iranggum  en'ru  kooppidath  thodangginaan.  (maa’rku  10:47)

அவன்  பேசாதிருக்கும்படி  அநேகர்  அவனை  அதட்டினார்கள்.  அவனோ:  தாவீதின்  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று,  முன்னிலும்  அதிகமாய்க்  கூப்பிட்டான்.  (மாற்கு  10:48)

avan  peasaathirukkumpadi  aneagar  avanai  athattinaarga'l.  avanoa:  thaaveethin  kumaaranea,  enakku  iranggum  en'ru,  munnilum  athigamaayk  kooppittaan.  (maa’rku  10:48)

இயேசு  நின்று,  அவனை  அழைத்துவரச்  சொன்னார்.  அவர்கள்  அந்தக்  குருடனை  அழைத்து:  திடன்கொள்,  எழுந்திரு,  உன்னை  அழைக்கிறார்  என்றார்கள்.  (மாற்கு  10:49)

iyeasu  nin'ru,  avanai  azhaiththuvarach  sonnaar.  avarga'l  anthak  kurudanai  azhaiththu:  thidanko'l,  ezhunthiru,  unnai  azhaikki'raar  en'raarga'l.  (maa’rku  10:49)

உடனே  அவன்  தன்  மேல்வஸ்திரத்தை  எறிந்துவிட்டு,  எழுந்து,  இயேசுவினிடத்தில்  வந்தான்.  (மாற்கு  10:50)

udanea  avan  than  mealvasthiraththai  e'rinthuvittu,  ezhunthu,  iyeasuvinidaththil  vanthaan.  (maa’rku  10:50)

இயேசு  அவனை  நோக்கி:  நான்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறாய்  என்றார்.  அதற்கு  அந்தக்  குருடன்:  ஆண்டவரே,  நான்  பார்வையடையவேண்டும்  என்றான்.  (மாற்கு  10:51)

iyeasu  avanai  noakki:  naan  unakku  enna  seyyavea'ndum  en'rirukki'raay  en'raar.  atha’rku  anthak  kurudan:  aa'ndavarea,  naan  paarvaiyadaiyavea'ndum  en'raan.  (maa’rku  10:51)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  போகலாம்,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  உடனே  அவன்  பார்வையடைந்து,  வழியிலே  இயேசுவுக்குப்  பின்சென்றான்.  (மாற்கு  10:52)

iyeasu  avanai  noakki:  nee  poagalaam,  un  visuvaasam  unnai  iradchiththathu  en'raar.  udanea  avan  paarvaiyadainthu,  vazhiyilea  iyeasuvukkup  pinsen'raan.  (maa’rku  10:52)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!