Friday, May 06, 2016

Lookkaa 9 | லூக்கா 9 | Luke 9


அவர்  தம்முடைய  பன்னிரண்டு  சீஷரையும்  வரவழைத்து,  சகல  பிசாசுகளையும்  துரத்தவும்,  வியாதியுள்ளவர்களைக்  குணமாக்கவும்  அவர்களுக்கு  வல்லமையும்  அதிகாரமும்  கொடுத்து,  (லூக்கா  9:1)

avar  thammudaiya  pannira'ndu  seesharaiyum  varavazhaiththu,  sagala  pisaasuga'laiyum  thuraththavum,  viyaathiyu'l'lavarga'laik  ku'namaakkavum  avarga'lukku  vallamaiyum  athigaaramum  koduththu,  (lookkaa  9:1)

தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கிக்கவும்,  பிணியாளிகளைச்  சொஸ்தமாக்கவும்  அவர்களை  அனுப்பினார்.  (லூக்கா  9:2)

theavanudaiya  raajyaththaikku’riththup  pirasanggikkavum,  pi'niyaa'liga'laich  sosthamaakkavum  avarga'lai  anuppinaar.  (lookkaa  9:2)

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  வழிக்குத்  தடியையாவது  பையையாவது  அப்பத்தையாவது  காசையாவது  எடுத்துக்கொண்டு  போகவேண்டாம்;  இரண்டு  அங்கிகளைக்  கொண்டுபோகவும்  வேண்டாம்.  (லூக்கா  9:3)

appozhuthu  avar  avarga'lai  noakki:  vazhikkuth  thadiyaiyaavathu  paiyaiyaavathu  appaththaiyaavathu  kaasaiyaavathu  eduththukko'ndu  poagavea'ndaam;  ira'ndu  anggiga'laik  ko'ndupoagavum  vea'ndaam.  (lookkaa  9:3)

எந்த  வீட்டிலே  பிரவேசிக்கிறீர்களோ,  அங்கே  தங்கி,  அங்கிருந்து  புறப்படுங்கள்.  (லூக்கா  9:4)

entha  veettilea  piraveasikki’reerga'loa,  anggea  thanggi,  anggirunthu  pu’rappadungga'l.  (lookkaa  9:4)

உங்களை  ஏற்றுக்கொள்ளாதவர்கள்  எவர்களோ  அவர்களுடைய  ஊரைவிட்டு  நீங்கள்  புறப்படும்போது,  அவர்களுக்குச்  சாட்சியாக  உங்கள்  கால்களில்  படிந்த  தூசியை  உதறிப்போடுங்கள்  என்றார்.  (லூக்கா  9:5)

ungga'lai  eat’rukko'l'laathavarga'l  evarga'loa  avarga'ludaiya  ooraivittu  neengga'l  pu’rappadumpoathu,  avarga'lukkuch  saadchiyaaga  ungga'l  kaalga'lil  padintha  thoosiyai  utha’rippoadungga'l  en’raar.  (lookkaa  9:5)

அவர்கள்  புறப்பட்டுப்போய்,  கிராமங்கள்தோறும்  திரிந்து,  எங்கும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  பிணியாளிகளைக்  குணமாக்கினார்கள்.  (லூக்கா  9:6)

avarga'l  pu’rappattuppoay,  kiraamangga'lthoa’rum  thirinthu,  enggum  suviseashaththaip  pirasanggiththu,  pi'niyaa'liga'laik  ku'namaakkinaarga'l.  (lookkaa  9:6)

அப்பொழுது  காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோது  அவரால்  செய்யப்பட்ட  யாவையும்  கேள்விப்பட்டதுமன்றி;  சிலர்  யோவான்  மரித்தோரிலிருந்து  எழுந்தான்  என்றும்,  (லூக்கா  9:7)

appozhuthu  kaa’rpanggu  theasaathibathiyaagiya  earoathu  avaraal  seyyappatta  yaavaiyum  kea'lvippattathuman’ri;  silar  yoavaan  mariththoarilirunthu  ezhunthaan  en’rum,  (lookkaa  9:7)

சிலர்  எலியா  தோன்றினான்  என்றும்,  வேறு  சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரிசிகளில்  ஒருவன்  உயிர்த்தெழுந்தான்  என்றும்  சொல்லிக்கொண்டபடியால்,  கலக்கமடைந்து:  (லூக்கா  9:8)

silar  eliyaa  thoan’rinaan  en’rum,  vea’ru  silar  poorvakaalaththuth  theerkkatharisiga'lil  oruvan  uyirththezhunthaan  en’rum  sollikko'ndapadiyaal,  kalakkamadainthu:  (lookkaa  9:8)

யோவானை  நான்  சிரச்சேதம்பண்ணினேன்,  இவன்  இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறான்  என்று  கேள்விப்படுகிறேனே!  இவன்  யார்?  என்று  ஏரோது  சொல்லி,  அவரைப்  பார்க்க  விரும்பினான்.  (லூக்கா  9:9)

yoavaanai  naan  sirachseathampa'n'ninean,  ivan  ippadippattavaiga'laich  seygi’raan  en’ru  kea'lvippadugi’reanea!  ivan  yaar?  en’ru  earoathu  solli,  avaraip  paarkka  virumbinaan.  (lookkaa  9:9)

அப்போஸ்தலர்  திரும்பிவந்து,  தாங்கள்  செய்த  யாவையும்  அவருக்கு  விவரித்துச்  சொன்னார்கள்.  அப்பொழுது  அவர்  அவர்களைக்  கூட்டிக்கொண்டு,  தனித்திருக்கும்படி  பெத்சாயிதா  என்னும்  பட்டணத்தைச்  சேர்ந்த  வனாந்தரமான  ஒரு  இடத்துக்குப்  போனார்.  (லூக்கா  9:10)

appoasthalar  thirumbivanthu,  thaangga'l  seytha  yaavaiyum  avarukku  vivariththuch  sonnaarga'l.  appozhuthu  avar  avarga'laik  koottikko'ndu,  thaniththirukkumpadi  bethsaayithaa  ennum  patta'naththaich  searntha  vanaantharamaana  oru  idaththukkup  poanaar.  (lookkaa  9:10)

ஜனங்கள்  அதை  அறிந்து,  அவர்  பின்னே  போனார்கள்;  அவர்களை  அவர்  ஏற்றுக்கொண்டு,  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்து  அவர்களுடனே  பேசி,  சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச்  சொஸ்தப்படுத்தினார்.  (லூக்கா  9:11)

janangga'l  athai  a’rinthu,  avar  pinnea  poanaarga'l;  avarga'lai  avar  eat’rukko'ndu,  theavanudaiya  raajyaththaikku’riththu  avarga'ludanea  peasi,  sosthamadaiyavea'ndumen’rirunthavarga'laich  sosthappaduththinaar.  (lookkaa  9:11)

சாயங்காலமாகிறபோது,  பன்னிருவரும்  சேர்ந்துவந்து,  அவரை  நோக்கி:  நாம்  இருக்கிற  இடம்  வனாந்தரமாயிருக்கிறது,  சுற்றியிருக்கிற  ஊர்களிலும்  கிராமங்களிலும்  ஜனங்கள்  போய்த்  தங்கி,  போஜனபதார்த்தங்களைச்  சம்பாதித்துக்கொள்ளும்படி  அவர்களை  அனுப்பிவிடவேண்டும்  என்றார்கள்.  (லூக்கா  9:12)

saayanggaalamaagi’rapoathu,  panniruvarum  searnthuvanthu,  avarai  noakki:  naam  irukki’ra  idam  vanaantharamaayirukki’rathu,  sut’riyirukki’ra  oorga'lilum  kiraamangga'lilum  janangga'l  poayth  thanggi,  poajanapathaarththangga'laich  sambaathiththukko'l'lumpadi  avarga'lai  anuppividavea'ndum  en’raarga'l.  (lookkaa  9:12)

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்களே  அவர்களுக்குப்  போஜனங்கொடுங்கள்  என்றார்.  அதற்கு  அவர்கள்:  எங்களிடத்தில்  ஐந்து  அப்பங்களும்  இரண்டு  மீன்களுமாத்திரமுண்டு,  இந்த  ஜனங்களெல்லாருக்கும்  போஜனங்  கொடுக்கவேண்டியதானால்,  நாங்கள்  போய்  வாங்கிக்கொண்டு  வரவேண்டுமே  என்றார்கள்.  (லூக்கா  9:13)

avar  avarga'lai  noakki:  neengga'lea  avarga'lukkup  poajanangkodungga'l  en’raar.  atha’rku  avarga'l:  engga'lidaththil  ainthu  appangga'lum  ira'ndu  meenga'lumaaththiramu'ndu,  intha  janangga'lellaarukkum  poajanang  kodukkavea'ndiyathaanaal,  naangga'l  poay  vaanggikko'ndu  varavea'ndumea  en’raarga'l.  (lookkaa  9:13)

ஏறக்குறைய  ஐயாயிரம்  புருஷர்  இருந்தார்கள்.  அவர்களைப்  பந்திக்கு  ஐம்பது  ஐம்பதுபேராக  உட்காரும்படி  சொல்லுங்கள்  என்று  தம்முடைய  சீஷர்களுக்குச்  சொன்னார்.  (லூக்கா  9:14)

ea’rakku’raiya  aiyaayiram  purushar  irunthaarga'l.  avarga'laip  panthikku  aimbathu  aimbathupearaaga  udkaarumpadi  sollungga'l  en’ru  thammudaiya  seesharga'lukkuch  sonnaar.  (lookkaa  9:14)

அவர்கள்  அந்தப்படியே  எல்லாரையும்  உட்காரும்படி  செய்தார்கள்.  (லூக்கா  9:15)

avarga'l  anthappadiyea  ellaaraiyum  udkaarumpadi  seythaarga'l.  (lookkaa  9:15)

அப்பொழுது  அவர்  அந்த  ஐந்து  அப்பங்களையும்  அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  அவைகளை  ஆசீர்வதித்து,  பிட்டு,  ஜனங்கள்முன்  வைக்கும்படி  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்.  (லூக்கா  9:16)

appozhuthu  avar  antha  ainthu  appangga'laiyum  antha  ira'ndu  meenga'laiyum  eduththu,  vaanaththai  a'n'naanthupaarththu,  avaiga'lai  aaseervathiththu,  pittu,  janangga'lmun  vaikkumpadi  seesharga'lidaththil  koduththaar.  (lookkaa  9:16)

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்.  மீதியான  துணிக்கைகள்  பன்னிரண்டு  கூடைநிறைய  எடுக்கப்பட்டது.  (லூக்கா  9:17)

ellaarum  saappittuth  thirupthiyadainthaarga'l.  meethiyaana  thu'nikkaiga'l  pannira'ndu  koodaini’raiya  edukkappattathu.  (lookkaa  9:17)

பின்பு  அவர்  தமது  சீஷரோடேகூடத்  தனித்து  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில்,  அவர்களை  நோக்கி:  ஜனங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  (லூக்கா  9:18)

pinbu  avar  thamathu  seesharoadeakoodath  thaniththu  jebampa'n'nikko'ndirukkaiyil,  avarga'lai  noakki:  janangga'l  ennai  yaar  en’ru  sollugi’raarga'l  en’ru  keattaar.  (lookkaa  9:18)

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்  என்றும்,  சிலர்  எலியா  என்றும்,  வேறு  சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  உயிர்த்தெழுந்தார்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  (லூக்கா  9:19)

atha’rku  avarga'l:  silar  ummai  yoavaansnaanan  en’rum,  silar  eliyaa  en’rum,  vea’ru  silar  poorvakaalaththuth  theerkkatharisiga'lil  oruvar  uyirththezhunthaar  en’rum  sollugi’raarga'l  en’raarga'l.  (lookkaa  9:19)

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்;  பேதுரு  பிரதியுத்தரமாக:  நீர்  தேவனுடைய  கிறிஸ்து  என்றான்.  (லூக்கா  9:20)

appozhuthu  avar:  neengga'l  ennai  yaar  en’ru  sollugi’reerga'l  en’ru  keattaar;  peathuru  pirathiyuththaramaaga:  neer  theavanudaiya  ki’risthu  en’raan.  (lookkaa  9:20)

அப்பொழுது  அவர்கள்  அதை  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  உறுதியாய்க்  கட்டளையிட்டார்.  (லூக்கா  9:21)

appozhuthu  avarga'l  athai  oruvarukkum  sollaathapadikku  u’ruthiyaayk  katta'laiyittaar.  (lookkaa  9:21)

மேலும்  மனுஷகுமாரன்  பல  பாடுகள்படவும்,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  ஆகாதவனென்று  தள்ளப்படவும்,  கொல்லப்படவும்,  மூன்றாம்  நாளில்  உயிர்த்தெழுந்திருக்கவும்  வேண்டும்  என்று  சொன்னார்.  (லூக்கா  9:22)

mealum  manushakumaaran  pala  paaduga'lpadavum,  moopparaalum  pirathaana  aasaariyaraalum  veathapaaragaraalum  aagaathavanen’ru  tha'l'lappadavum,  kollappadavum,  moon’raam  naa'lil  uyirththezhunthirukkavum  vea'ndum  en’ru  sonnaar.  (lookkaa  9:22)

பின்பு  அவர்  எல்லாரையும்  நோக்கி:  ஒருவன்  என்  பின்னே  வர  விரும்பினால்  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  அநுதினமும்  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றக்கடவன்.  (லூக்கா  9:23)

pinbu  avar  ellaaraiyum  noakki:  oruvan  en  pinnea  vara  virumbinaal  avan  thannaiththaan  ve’ruththu,  than  siluvaiyai  anuthinamum  eduththukko'ndu,  ennaip  pinpat’rakkadavan.  (lookkaa  9:23)

தன்  ஜீவனை  இரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்;  என்னிமித்தமாகத்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதை  இரட்சித்துக்கொள்ளுவான்.  (லூக்கா  9:24)

than  jeevanai  iradchikka  virumbugi’ravan  athai  izhanthupoavaan;  ennimiththamaagath  than  jeevanai  izhanthupoagi’ravan  athai  iradchiththukko'l'luvaan.  (lookkaa  9:24)

மனுஷன்  உலகமுழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்னைத்  தான்  கெடுத்து  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  (லூக்கா  9:25)

manushan  ulagamuzhuvathaiyum  aathaayappaduththikko'ndaalum,  thannaith  thaan  keduththu  nashdappaduththinaal  avanukku  laabam  enna?  (lookkaa  9:25)

என்னைக்குறித்தும்  என்  வார்த்தைகளைக்குறித்தும்  எவன்  வெட்கப்படுகிறானோ,  அவனைக்குறித்து  மனுஷகுமாரனும்  தம்முடைய  மகிமையோடும்  பிதாவின்  மகிமையோடும்  பரிசுத்த  தூதர்களின்  மகிமையோடும்  வரும்போது  வெட்கப்படுவார்.  (லூக்கா  9:26)

ennaikku’riththum  en  vaarththaiga'laikku’riththum  evan  vedkappadugi’raanoa,  avanaikku’riththu  manushakumaaranum  thammudaiya  magimaiyoadum  pithaavin  magimaiyoadum  parisuththa  thootharga'lin  magimaiyoadum  varumpoathu  vedkappaduvaar.  (lookkaa  9:26)

இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  தேவனுடைய  ராஜ்யத்தைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  9:27)

inggea  ni’rki’ravarga'lil  silar  theavanudaiya  raajyaththaik  kaa'numun,  mara'naththai  rusipaarppathillaiyen’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  9:27)

இந்த  வார்த்தைகளை  அவர்  சொல்லி  ஏறக்குறைய  எட்டுநாளானபின்பு,  அவர்  பேதுருவையும்  யோவானையும்  யாக்கோபையும்  கூட்டிக்கொண்டு,  ஜெபம்பண்ணுகிறதற்கு  ஒரு  மலையின்மேல்  ஏறினார்.  (லூக்கா  9:28)

intha  vaarththaiga'lai  avar  solli  ea’rakku’raiya  ettunaa'laanapinbu,  avar  peathuruvaiyum  yoavaanaiyum  yaakkoabaiyum  koottikko'ndu,  jebampa'n'nugi’ratha’rku  oru  malaiyinmeal  ea’rinaar.  (lookkaa  9:28)

அவர்  ஜெபம்பண்ணுகையில்,  அவருடைய  முகரூபம்  மாறிற்று,  அவருடைய  வஸ்திரம்  வெண்மையாகிப்  பிரகாசித்தது.  (லூக்கா  9:29)

avar  jebampa'n'nugaiyil,  avarudaiya  mugaroobam  maa’rit’ru,  avarudaiya  vasthiram  ve'nmaiyaagip  piragaasiththathu.  (lookkaa  9:29)

அன்றியும்  மோசே  எலியா  என்னும்  இரண்டுபேரும்  மகிமையோடே  காணப்பட்டு,  அவருடனே  சம்பாஷணைபண்ணி,  (லூக்கா  9:30)

an’riyum  moasea  eliyaa  ennum  ira'ndupearum  magimaiyoadea  kaa'nappattu,  avarudanea  sambaasha'naipa'n'ni,  (lookkaa  9:30)

அவர்  எருசலேமிலே  நிறைவேற்றப்போகிற  அவருடைய  மரணத்தைக்குறித்துப்  பேசிக்கொண்டிருந்தார்கள்.  (லூக்கா  9:31)

avar  erusaleamilea  ni’raiveat’rappoagi’ra  avarudaiya  mara'naththaikku’riththup  peasikko'ndirunthaarga'l.  (lookkaa  9:31)

பேதுருவும்  அவனோடிருந்தவர்களும்  நித்திரைமயக்கமாயிருந்தார்கள்.  ஆகிலும்  அவர்கள்  விழித்து  அவருடைய  மகிமையையும்  அவரோடே  நின்ற  அவ்விரண்டுபேரையும்  கண்டார்கள்.  (லூக்கா  9:32)

peathuruvum  avanoadirunthavarga'lum  niththiraimayakkamaayirunthaarga'l.  aagilum  avarga'l  vizhiththu  avarudaiya  magimaiyaiyum  avaroadea  nin’ra  avvira'ndupearaiyum  ka'ndaarga'l.  (lookkaa  9:32)

அவ்விருவரும்  அவரைவிட்டுப்  பிரிந்துபோகையில்,  பேதுரு  இயேசுவை  நோக்கி:  ஐயரே,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது,  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்று,  தான்  சொல்லுகிறது  இன்னதென்று  அறியாமல்  சொன்னான்.  (லூக்கா  9:33)

avviruvarum  avaraivittup  pirinthupoagaiyil,  peathuru  iyeasuvai  noakki:  aiyarea,  naam  inggea  irukki’rathu  nallathu,  umakku  oru  koodaaramum,  moaseakku  oru  koodaaramum,  eliyaavukku  oru  koodaaramumaaga,  moon’ru  koodaarangga'laip  poaduvoam  en’ru,  thaan  sollugi’rathu  innathen’ru  a’riyaamal  sonnaan.  (lookkaa  9:33)

இப்படி  அவன்  பேசுகையில்,  ஒரு  மேகம்  வந்து  அவர்கள்மேல்  நிழலிட்டது;  அவர்கள்  அந்த  மேகத்துக்குள்  பிரவேசிக்கையில்  சீஷர்கள்  பயந்தார்கள்.  (லூக்கா  9:34)

ippadi  avan  peasugaiyil,  oru  meagam  vanthu  avarga'lmeal  nizhalittathu;  avarga'l  antha  meagaththukku'l  piraveasikkaiyil  seesharga'l  bayanthaarga'l.  (lookkaa  9:34)

அப்பொழுது:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  மேகத்திலிருந்து  ஒரு  சத்தமுண்டாயிற்று.  (லூக்கா  9:35)

appozhuthu:  ivar  ennudaiya  neasakumaaran,  ivarukkuch  sevikodungga'l  en’ru  meagaththilirunthu  oru  saththamu'ndaayit’ru.  (lookkaa  9:35)

அந்தச்  சத்தம்  உண்டாகையில்  இயேசு  ஒருவரே  காணப்பட்டார்.  தாங்கள்  கண்டவைகளில்  ஒன்றையும்  அவர்கள்  அந்நாட்களில்  ஒருவருக்கும்  சொல்லாமல்  அடக்கிவைத்திருந்தார்கள்.  (லூக்கா  9:36)

anthach  saththam  u'ndaagaiyil  iyeasu  oruvarea  kaa'nappattaar.  thaangga'l  ka'ndavaiga'lil  on’raiyum  avarga'l  annaadka'lil  oruvarukkum  sollaamal  adakkivaiththirunthaarga'l.  (lookkaa  9:36)

மறுநாளில்  அவர்கள்  மலையிலிருந்திறங்கினபோது,  திரளான  ஜனங்கள்  அவருக்கு  எதிர்கொண்டுவந்தார்கள்.  (லூக்கா  9:37)

ma’runaa'lil  avarga'l  malaiyilirunthi’rangginapoathu,  thira'laana  janangga'l  avarukku  ethirko'nduvanthaarga'l.  (lookkaa  9:37)

அவர்களில்  ஒருவன்  சத்தமிட்டு:  போதகரே,  என்  மகனைக்  கடாட்சித்தருள  வேண்டுமென்று  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்,  அவன்  எனக்கு  ஒரே  பிள்ளையாயிருக்கிறான்.  (லூக்கா  9:38)

avarga'lil  oruvan  saththamittu:  poathagarea,  en  maganaik  kadaadchiththaru'la  vea'ndumen’ru  ummai  vea'ndikko'l'lugi’rean,  avan  enakku  orea  pi'l'laiyaayirukki’raan.  (lookkaa  9:38)

ஒரு  ஆவி  அவனைப்  பிடிக்கிறது,  அப்பொழுது  அலறுகிறான்,  அது  அவனை  நுரைதள்ள  அலைக்கழித்து,  அவனைக்  கசக்கினபின்பும்,  அவனை  விட்டு  நீங்குவது  அரிதாயிருக்கிறது.  (லூக்கா  9:39)

oru  aavi  avanaip  pidikki’rathu,  appozhuthu  ala’rugi’raan,  athu  avanai  nuraitha'l'la  alaikkazhiththu,  avanaik  kasakkinapinbum,  avanai  vittu  neengguvathu  arithaayirukki’rathu.  (lookkaa  9:39)

அதைத்  துரத்திவிடும்படி  உம்முடைய  சீஷரை  வேண்டிக்கொண்டேன்,  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  (லூக்கா  9:40)

athaith  thuraththividumpadi  ummudaiya  seesharai  vea'ndikko'ndean,  avarga'laal  koodaama’rpoayit’ru  en’raan.  (lookkaa  9:40)

இயேசு  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  மாறுபாடான  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடிருந்து,  உங்களிடத்தில்  பொறுமையாயிருப்பேன்?  உன்  மகனை  இங்கே  கொண்டுவா  என்றார்.  (லூக்கா  9:41)

iyeasu  pirathiyuththaramaaga:  visuvaasamillaatha  maa’rupaadaana  santhathiyea,  ethuvaraikkum  naan  ungga'loadirunthu,  ungga'lidaththil  po’rumaiyaayiruppean?  un  maganai  inggea  ko'nduvaa  en’raar.  (lookkaa  9:41)

அவன்  சமீபித்துவருகையில்,  பிசாசு  அவனைக்  கீழே  தள்ளி,  அலைக்கழித்தது.  இயேசு  அந்த  அசுத்தஆவியை  அதட்டி,  இளைஞனைக்  குணமாக்கி,  அவன்  தகப்பனிடத்தில்  அவனை  ஒப்புக்கொடுத்தார்.  (லூக்கா  9:42)

avan  sameebiththuvarugaiyil,  pisaasu  avanaik  keezhea  tha'l'li,  alaikkazhiththathu.  iyeasu  antha  asuththaaaviyai  athatti,  i'laignanaik  ku'namaakki,  avan  thagappanidaththil  avanai  oppukkoduththaar.  (lookkaa  9:42)

அப்பொழுது  எல்லாரும்  தேவனுடைய  மகத்துவத்தைக்  குறித்துப்  பிரமித்தார்கள்.  இயேசு  செய்த  யாவையுங்குறித்து  அனைவரும்  ஆச்சரியப்படுகையில்  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  (லூக்கா  9:43)

appozhuthu  ellaarum  theavanudaiya  magaththuvaththaik  ku’riththup  piramiththaarga'l.  iyeasu  seytha  yaavaiyungku’riththu  anaivarum  aachchariyappadugaiyil  avar  thammudaiya  seesharga'lai  noakki:  (lookkaa  9:43)

நீங்கள்  இந்த  வார்த்தைகளைக்  கவனமாய்க்  கேளுங்கள்;  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார்  என்றார்.  (லூக்கா  9:44)

neengga'l  intha  vaarththaiga'laik  kavanamaayk  kea'lungga'l;  manushakumaaran  manushar  kaiga'lil  oppukkodukkappadappoagi’raar  en’raar.  (lookkaa  9:44)

அவர்கள்  அந்த  வார்த்தையின்  கருத்தை  அறிந்துகொள்ளவில்லை;  அது  அவர்களுக்குத்  தோன்றாமல்  மறைபொருளாயிருந்தது;  அந்த  வார்த்தையைக்குறித்து  அவரிடத்தில்  விசாரிக்கவும்  பயந்தார்கள்.  (லூக்கா  9:45)

avarga'l  antha  vaarththaiyin  karuththai  a’rinthuko'l'lavillai;  athu  avarga'lukkuth  thoan’raamal  ma’raiporu'laayirunthathu;  antha  vaarththaiyaikku’riththu  avaridaththil  visaarikkavum  bayanthaarga'l.  (lookkaa  9:45)

பின்பு  தங்களில்  எவன்  பெரியவனாயிருப்பானென்கிற  வாக்குவாதம்  அவர்களுக்குள்  உண்டாயிற்று.  (லூக்கா  9:46)

pinbu  thangga'lil  evan  periyavanaayiruppaanengi’ra  vaakkuvaatham  avarga'lukku'l  u'ndaayit’ru.  (lookkaa  9:46)

இயேசு  அவர்கள்  இருதயத்தின்  யோசனையை  அறிந்து,  ஒரு  சிறுபிள்ளையை  எடுத்து,  அதைத்  தமதருகே  நிறுத்தி,  (லூக்கா  9:47)

iyeasu  avarga'l  iruthayaththin  yoasanaiyai  a’rinthu,  oru  si’rupi'l'laiyai  eduththu,  athaith  thamatharugea  ni’ruththi,  (lookkaa  9:47)

அவர்களை  நோக்கி:  இந்தச்  சிறுபிள்ளையை  என்  நாமத்தினிமித்தம்  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  அனுப்பினவரை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  உங்களெல்லாருக்குள்ளும்  எவன்  சிறியவனாயிருக்கிறானோ  அவனே  பெரியவனாயிருப்பான்  என்றார்.  (லூக்கா  9:48)

avarga'lai  noakki:  inthach  si’rupi'l'laiyai  en  naamaththinimiththam  eat’rukko'l'lugi’ravan  ennai  eat’rukko'l'lugi’raan;  ennai  eat’rukko'l'lugi’ravan  ennai  anuppinavarai  eat’rukko'l'lugi’raan;  ungga'lellaarukku'l'lum  evan  si’riyavanaayirukki’raanoa  avanea  periyavanaayiruppaan  en’raar.  (lookkaa  9:48)

அப்பொழுது  யோவான்  அவரை  நோக்கி:  ஐயரே,  ஒருவன்  உம்முடைய  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறதை  நாங்கள்  கண்டு,  அவன்  எங்களுடனேகூட  உம்மைப்  பின்பற்றாதவனானபடியால்,  அவனைத்  தடுத்தோம்  என்றான்.  (லூக்கா  9:49)

appozhuthu  yoavaan  avarai  noakki:  aiyarea,  oruvan  ummudaiya  naamaththinaalea  pisaasuga'laith  thuraththugi’rathai  naangga'l  ka'ndu,  avan  engga'ludaneakooda  ummaip  pinpat’raathavanaanapadiyaal,  avanaith  thaduththoam  en’raan.  (lookkaa  9:49)

அதற்கு  இயேசு:  தடுக்கவேண்டாம்;  நமக்கு  விரோதியாயிராதவன்  நமது  பட்சத்திலிருக்கிறான்  என்றார்.  (லூக்கா  9:50)

atha’rku  iyeasu:  thadukkavea'ndaam;  namakku  viroathiyaayiraathavan  namathu  padchaththilirukki’raan  en’raar.  (lookkaa  9:50)

பின்பு,  அவர்  எடுத்துக்கொள்ளப்படும்  நாட்கள்  சமீபித்தபோது,  அவர்  எருசலேமுக்குப்  போகத்  தமது  முகத்தைத்திருப்பி,  (லூக்கா  9:51)

pinbu,  avar  eduththukko'l'lappadum  naadka'l  sameebiththapoathu,  avar  erusaleamukkup  poagath  thamathu  mugaththaiththiruppi,  (lookkaa  9:51)

தமக்கு  முன்னாகத்  தூதர்களை  அனுப்பினார்.  அவர்கள்  போய்,  அவருக்கு  இடத்தை  ஆயத்தம்பண்ணும்படி  சமாரியருடைய  ஒரு  கிராமத்திலே  பிரவேசித்தார்கள்.  (லூக்கா  9:52)

thamakku  munnaagath  thootharga'lai  anuppinaar.  avarga'l  poay,  avarukku  idaththai  aayaththampa'n'numpadi  samaariyarudaiya  oru  kiraamaththilea  piraveasiththaarga'l.  (lookkaa  9:52)

அவர்  எருசலேமுக்குப்  போக  நோக்கமாயிருந்தபடியினால்  அவ்வூரார்  அவரை  ஏற்றுக்கொள்ளவில்லை.  (லூக்கா  9:53)

avar  erusaleamukkup  poaga  noakkamaayirunthapadiyinaal  avvooraar  avarai  eat’rukko'l'lavillai.  (lookkaa  9:53)

அவருடைய  சீஷராகிய  யாக்கோபும்  யோவானும்  அதைக்  கண்டபோது:  ஆண்டவரே,  எலியா  செய்ததுபோல,  வானத்திலிருந்து  அக்கினி  இறங்கி  இவர்களை  அழிக்கும்படி  நாங்கள்  கட்டளையிட  உமக்குச்  சித்தமா  என்று  கேட்டார்கள்.  (லூக்கா  9:54)

avarudaiya  seesharaagiya  yaakkoabum  yoavaanum  athaik  ka'ndapoathu:  aa'ndavarea,  eliyaa  seythathupoala,  vaanaththilirunthu  akkini  i’ranggi  ivarga'lai  azhikkumpadi  naangga'l  katta'laiyida  umakkuch  siththamaa  en’ru  keattaarga'l.  (lookkaa  9:54)

அவர்  திரும்பிப்பார்த்து:  நீங்கள்  இன்ன  ஆவியுள்ளவர்களென்பதை  அறியீர்கள்  என்று  அதட்டி,  (லூக்கா  9:55)

avar  thirumbippaarththu:  neengga'l  inna  aaviyu'l'lavarga'lenbathai  a’riyeerga'l  en’ru  athatti,  (lookkaa  9:55)

மனுஷகுமாரன்  மனுஷருடைய  ஜீவனை  அழிக்கிறதற்கு  அல்ல,  இரட்சிக்கிறதற்கே  வந்தார்  என்றார்.  அதன்பின்பு  அவர்கள்  வேறொரு  கிராமத்துக்குப்  போனார்கள்.  (லூக்கா  9:56)

manushakumaaran  manusharudaiya  jeevanai  azhikki’ratha’rku  alla,  iradchikki’ratha’rkea  vanthaar  en’raar.  athanpinbu  avarga'l  vea'roru  kiraamaththukkup  poanaarga'l.  (lookkaa  9:56)

அவர்கள்  வழியிலே  போகையில்  ஒருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  நீர்  எங்கே  போனாலும்  உம்மைப்  பின்பற்றி  வருவேன்  என்றான்.  (லூக்கா  9:57)

avarga'l  vazhiyilea  poagaiyil  oruvan  avarai  noakki:  aa'ndavarea,  neer  enggea  poanaalum  ummaip  pinpat’ri  varuvean  en’raan.  (lookkaa  9:57)

அதற்கு  இயேசு:  நரிகளுக்குக்  குழிகளும்  ஆகாயத்துப்  பறவைகளுக்குக்  கூடுகளும்  உண்டு,  மனுஷகுமாரனுக்கோ  தலைசாய்க்க  இடமில்லை  என்றார்.  (லூக்கா  9:58)

atha’rku  iyeasu:  nariga'lukkuk  kuzhiga'lum  aagaayaththup  pa’ravaiga'lukkuk  kooduga'lum  u'ndu,  manushakumaaranukkoa  thalaisaaykka  idamillai  en’raar.  (lookkaa  9:58)

வேறொருவனை  அவர்  நோக்கி:  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  அதற்கு  அவன்:  ஆண்டவரே,  முன்பு  நான்  போய்  என்  தகப்பனை  அடக்கம்பண்ண  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  (லூக்கா  9:59)

vea'roruvanai  avar  noakki:  ennaip  pinpat’rivaa  en’raar.  atha’rku  avan:  aa'ndavarea,  munbu  naan  poay  en  thagappanai  adakkampa'n'na  enakku  uththaravu  kodukkavea'ndum  en’raan.  (lookkaa  9:59)

அதற்கு  இயேசு:  மரித்தோர்  தங்கள்  மரித்தோரை  அடக்கம்பண்ணட்டும்;  நீ  போய்,  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கி  என்றார்.  (லூக்கா  9:60)

atha’rku  iyeasu:  mariththoar  thangga'l  mariththoarai  adakkampa'n'nattum;  nee  poay,  theavanudaiya  raajyaththaikku’riththup  pirasanggi  en’raar.  (lookkaa  9:60)

பின்பு  வேறொருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  உம்மைப்  பின்பற்றுவேன்,  ஆனாலும்  முன்பு  நான்  போய்  வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டுவரும்படி  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  (லூக்கா  9:61)

pinbu  vea'roruvan  avarai  noakki:  aa'ndavarea,  ummaip  pinpat’ruvean,  aanaalum  munbu  naan  poay  veettilirukki’ravarga'lidaththil  anuppuviththukko'nduvarumpadi  enakku  uththaravu  kodukkavea'ndum  en’raan.  (lookkaa  9:61)

அதற்கு  இயேசு:  கலப்பையின்மேல்  தன்  கையை  வைத்துப்  பின்னிட்டுப்பார்க்கிற  எவனும்  தேவனுடைய  ராஜ்யத்துக்குத்  தகுதியுள்ளவன்  அல்ல  என்றார்.  (லூக்கா  9:62)

atha’rku  iyeasu:  kalappaiyinmeal  than  kaiyai  vaiththup  pinnittuppaarkki’ra  evanum  theavanudaiya  raajyaththukkuth  thaguthiyu'l'lavan  alla  en’raar.  (lookkaa  9:62)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!