Thursday, May 05, 2016

Lookkaa 8 | லூக்கா 8 | Luke 8

பின்பு,  அவர்  பட்டணங்கள்தோறும்  கிராமங்கள்தோறும்  பிரயாணம்பண்ணி,  தேவனுடைய  ராஜ்யத்திற்குரிய  நற்செய்தியைக்  கூறிப்  பிரசங்கித்துவந்தார்.  பன்னிருவரும்  அவருடனேகூட  இருந்தார்கள்.  (லூக்கா  8:1)

pinbu,  avar  patta'nangga'lthoa’rum  kiraamangga'lthoa’rum  pirayaa'nampa'n'ni,  theavanudaiya  raajyaththi’rkuriya  na’rseythiyaik  koo’rip  pirasanggiththuvanthaar.  panniruvarum  avarudaneakooda  irunthaarga'l.  (lookkaa  8:1)

அவர்  பொல்லாத  ஆவிகளையும்  வியாதிகளையும்  நீக்கிக்  குணமாக்கின  சில  ஸ்திரீகளும்,  ஏழு  பிசாசுகள்  நீங்கின  மகதலேனாள்  என்னப்பட்ட  மரியாளும்,  (லூக்கா  8:2)

avar  pollaatha  aaviga'laiyum  viyaathiga'laiyum  neekkik  ku'namaakkina  sila  sthireega'lum,  eazhu  pisaasuga'l  neenggina  magathaleanaa'l  ennappatta  mariyaa'lum,  (lookkaa  8:2)

ஏரோதின்  காரியக்காரனான  கூசாவின்  மனைவியாகிய  யோவன்னாளும்,  சூசன்னாளும்,  தங்கள்  ஆஸ்திகளால்  அவருக்கு  ஊழியஞ்செய்துகொண்டுவந்த  மற்ற  அநேகம்  ஸ்திரீகளும்  அவருடனே  இருந்தார்கள்.  (லூக்கா  8:3)

earoathin  kaariyakkaaranaana  koosaavin  manaiviyaagiya  yoavannaa'lum,  soosannaa'lum,  thangga'l  aasthiga'laal  avarukku  oozhiyagnseythuko'nduvantha  mat’ra  aneagam  sthireega'lum  avarudanea  irunthaarga'l.  (lookkaa  8:3)

சகல  பட்டணங்களிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  வந்து  கூடினபோது,  அவர்  உவமையாகச்  சொன்னது:  (லூக்கா  8:4)

sagala  patta'nangga'lilumirunthu  thira'laana  janangga'l  avaridaththil  vanthu  koodinapoathu,  avar  uvamaiyaagach  sonnathu:  (lookkaa  8:4)

விதைக்கிறவன்  ஒருவன்  விதையை  விதைக்கப்  புறப்பட்டான்;  அவன்  விதைக்கையில்  சில  விதை  வழியருகே  விழுந்து  மிதியுண்டது,  ஆகாயத்துப்  பறவைகள்  வந்து  அதைப்  பட்சித்துப்போட்டது.  (லூக்கா  8:5)

vithaikki’ravan  oruvan  vithaiyai  vithaikkap  pu’rappattaan;  avan  vithaikkaiyil  sila  vithai  vazhiyarugea  vizhunthu  mithiyu'ndathu,  aagaayaththup  pa’ravaiga'l  vanthu  athaip  padchiththuppoattathu.  (lookkaa  8:5)

சில  விதை  கற்பாறையின்மேல்  விழுந்தது;  அது  முளைத்தபின்  அதற்கு  ஈரமில்லாததினால்  உலர்ந்துபோயிற்று.  (லூக்கா  8:6)

sila  vithai  ka’rpaa’raiyinmeal  vizhunthathu;  athu  mu'laiththapin  atha’rku  eeramillaathathinaal  ularnthupoayit’ru.  (lookkaa  8:6)

சில  விதை  முள்ளுள்ள  இடங்களில்  விழுந்தது;  முள்  கூட  வளர்ந்து,  அதை  நெருக்கிப்போட்டது.  (லூக்கா  8:7)

sila  vithai  mu'l'lu'l'la  idangga'lil  vizhunthathu;  mu'l  kooda  va'larnthu,  athai  nerukkippoattathu.  (lookkaa  8:7)

சில  விதை  நல்ல  நிலத்தில்  விழுந்தது,  அது  முளைத்து,  ஒன்று  நூறாகப்  பலன்  கொடுத்தது  என்றார்.  இவைகளைச்  சொல்லி,  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்று  சத்தமிட்டுக்  கூறினார்.  (லூக்கா  8:8)

sila  vithai  nalla  nilaththil  vizhunthathu,  athu  mu'laiththu,  on’ru  noo’raagap  palan  koduththathu  en’raar.  ivaiga'laich  solli,  keadki’ratha’rkuk  kaathu'l'lavan  keadkakkadavan  en’ru  saththamittuk  koo’rinaar.  (lookkaa  8:8)

அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்,  இந்த  உவமையின்  கருத்து  என்னவென்று  அவரிடத்தில்  கேட்டார்கள்.  (லூக்கா  8:9)

appozhuthu  avarudaiya  seesharga'l,  intha  uvamaiyin  karuththu  ennaven’ru  avaridaththil  keattaarga'l.  (lookkaa  8:9)

அதற்கு  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தின்  இரகசியங்களை  அறியும்படி  உங்களுக்கு  அருளப்பட்டது;  மற்றவர்களுக்கோ,  அவர்கள்  கண்டும்  காணாதவர்களாகவும்,  கேட்டும்  உணராதவர்களாகவும்  இருக்கத்தக்கதாக,  அவைகள்  உவமைகளாகச்  சொல்லப்படுகிறது.  (லூக்கா  8:10)

atha’rku  avar:  theavanudaiya  raajyaththin  iragasiyangga'lai  a’riyumpadi  ungga'lukku  aru'lappattathu;  mat’ravarga'lukkoa,  avarga'l  ka'ndum  kaa'naathavarga'laagavum,  keattum  u'naraathavarga'laagavum  irukkaththakkathaaga,  avaiga'l  uvamaiga'laagach  sollappadugi’rathu.  (lookkaa  8:10)

அந்த  உவமையின்  கருத்தாவது:  விதை  தேவனுடைய  வசனம்.  (லூக்கா  8:11)

antha  uvamaiyin  karuththaavathu:  vithai  theavanudaiya  vasanam.  (lookkaa  8:11)

வழியருகே  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;  அவர்கள்  விசுவாசித்து  இரட்சிக்கப்படாதபடிக்குப்  பிசாசானவன்  வந்து,  அவ்வசனத்தை  அவர்கள்  இருதயத்திலிருந்து  எடுத்துப்போடுகிறான்.  (லூக்கா  8:12)

vazhiyarugea  vithaikkappattavarga'l  vasanaththaik  keadki’ravarga'laayirukki’raarga'l;  avarga'l  visuvaasiththu  iradchikkappadaathapadikkup  pisaasaanavan  vanthu,  avvasanaththai  avarga'l  iruthayaththilirunthu  eduththuppoadugi’raan.  (lookkaa  8:12)

கற்பாறையின்மேல்  விதைக்கப்பட்டவர்கள்  கேட்கும்போது  சந்தோஷத்துடனே  வசனத்தை  ஏற்றுக்கொள்ளுகிறார்கள்;  ஆயினும்  தங்களுக்குள்ளே  வேர்கொள்ளாதபடியினாலே,  கொஞ்சக்காலமாத்திரம்  விசுவாசித்து,  சோதனை  காலத்தில்  பின்வாங்கிப்போகிறார்கள்.  (லூக்கா  8:13)

ka’rpaa’raiyinmeal  vithaikkappattavarga'l  keadkumpoathu  santhoashaththudanea  vasanaththai  eat’rukko'l'lugi’raarga'l;  aayinum  thangga'lukku'l'lea  vearko'l'laathapadiyinaalea,  kognchakkaalamaaththiram  visuvaasiththu,  soathanai  kaalaththil  pinvaanggippoagi’raarga'l.  (lookkaa  8:13)

முள்ளுள்ள  இடங்களில்  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;  கேட்டவுடனே  போய்,  பிரபஞ்சத்திற்குரிய  கவலைகளினாலும்  ஐசுவரியத்தினாலும்  சிற்றின்பங்களினாலும்  நெருக்கப்பட்டு,  பலன்கொடாதிருக்கிறார்கள்.  (லூக்கா  8:14)

mu'l'lu'l'la  idangga'lil  vithaikkappattavarga'l  vasanaththaik  keadki’ravarga'laayirukki’raarga'l;  keattavudanea  poay,  pirapagnchaththi’rkuriya  kavalaiga'linaalum  aisuvariyaththinaalum  sit’rinbangga'linaalum  nerukkappattu,  palankodaathirukki’raarga'l.  (lookkaa  8:14)

நல்ல  நிலத்தில்  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்டு,  அதை  உண்மையும்  நன்மையுமான  இருதயத்திலே  காத்துப்  பொறுமையுடனே  பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.  (லூக்கா  8:15)

nalla  nilaththil  vithaikkappattavarga'l  vasanaththaik  keattu,  athai  u'nmaiyum  nanmaiyumaana  iruthayaththilea  kaaththup  po’rumaiyudanea  palankodukki’ravarga'laayirukki’raarga'l.  (lookkaa  8:15)

ஒருவனும்  விளக்கைக்  கொளுத்தி,  அதை  ஒரு  பாத்திரத்தினாலே  மூடவுமாட்டான்,  கட்டிலின்கீழே  வைக்கவுமாட்டான்;  உள்ளே  பிரவேசிக்கிறவர்கள்  அதின்  வெளிச்சத்தைக்  காணும்படிக்கு  அதை  விளக்குத்தண்டின்மேல்  வைப்பான்.  (லூக்கா  8:16)

oruvanum  vi'lakkaik  ko'luththi,  athai  oru  paaththiraththinaalea  moodavumaattaan,  kattilinkeezhea  vaikkavumaattaan;  u'l'lea  piraveasikki’ravarga'l  athin  ve'lichchaththaik  kaa'numpadikku  athai  vi'lakkuththa'ndinmeal  vaippaan.  (lookkaa  8:16)

வெளியரங்கமாகாத  இரகசியமுமில்லை,  அறியப்பட்டு  வெளிக்குவராத  மறைபொருளுமில்லை.  (லூக்கா  8:17)

ve'liyaranggamaagaatha  iragasiyamumillai,  a’riyappattu  ve'likkuvaraatha  ma’raiporu'lumillai.  (lookkaa  8:17)

ஆதலால்  நீங்கள்  கேட்கிற  விதத்தைக்குறித்துக்  கவனியுங்கள்;  உள்ளவனெவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்;  இல்லாதவனெவனோ  அவன்  தனக்குண்டென்று  நினைக்கிறதும்  அவனிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளப்படும்  என்றார்.  (லூக்கா  8:18)

aathalaal  neengga'l  keadki’ra  vithaththaikku’riththuk  kavaniyungga'l;  u'l'lavanevanoa  avanukkuk  kodukkappadum;  illaathavanevanoa  avan  thanakku'nden’ru  ninaikki’rathum  avanidaththilirunthu  eduththukko'l'lappadum  en’raar.  (lookkaa  8:18)

அப்பொழுது  அவருடைய  தாயாரும்  சகோதரரும்  அவரிடத்தில்  வந்தார்கள்;  ஜனக்கூட்டத்தினாலே  அவரண்டையில்  அவர்கள்  சேரக்கூடாதிருந்தது.  (லூக்கா  8:19)

appozhuthu  avarudaiya  thaayaarum  sagoathararum  avaridaththil  vanthaarga'l;  janakkoottaththinaalea  avara'ndaiyil  avarga'l  searakkoodaathirunthathu.  (lookkaa  8:19)

அப்பொழுது:  உம்முடைய  தாயாரும்  உம்முடைய  சகோதரரும்  உம்மைப்  பார்க்கவேண்டுமென்று  வெளியே  நிற்கிறார்கள்  என்று  அவருக்கு  அறிவித்தார்கள்.  (லூக்கா  8:20)

appozhuthu:  ummudaiya  thaayaarum  ummudaiya  sagoathararum  ummaip  paarkkavea'ndumen’ru  ve'liyea  ni’rki’raarga'l  en’ru  avarukku  a’riviththaarga'l.  (lookkaa  8:20)

அதற்கு  அவர்:  தேவனுடைய  வசனத்தைக்  கேட்டு,  அதின்படி  செய்கிறவர்களே  எனக்குத்  தாயும்  எனக்குச்  சகோதரருமாயிருக்கிறார்கள்  என்றார்.  (லூக்கா  8:21)

atha’rku  avar:  theavanudaiya  vasanaththaik  keattu,  athinpadi  seygi’ravarga'lea  enakkuth  thaayum  enakkuch  sagoathararumaayirukki’raarga'l  en’raar.  (lookkaa  8:21)

பின்பு  ஒருநாள்  அவர்  தமது  சீஷரோடுங்கூடப்  படவில்  ஏறி:  கடலின்  அக்கரைக்குப்  போவோம்  வாருங்கள்  என்றார்;  அப்படியே  புறப்பட்டுப்போனார்கள்.  (லூக்கா  8:22)

pinbu  orunaa'l  avar  thamathu  seesharoadungkoodap  padavil  ea’ri:  kadalin  akkaraikkup  poavoam  vaarungga'l  en’raar;  appadiyea  pu’rappattuppoanaarga'l.  (lookkaa  8:22)

படவு  ஓடுகையில்  அவர்  நித்திரையாயிருந்தார்.  அப்பொழுது  கடலிலே  சுழல்காற்றுண்டானதால்,  அவர்கள்  மோசமடையத்தக்கதாய்ப்  படவு  ஜலத்தினால்  நிறைந்தது.  (லூக்கா  8:23)

padavu  oadugaiyil  avar  niththiraiyaayirunthaar.  appozhuthu  kadalilea  suzhalkaat’ru'ndaanathaal,  avarga'l  moasamadaiyaththakkathaayp  padavu  jalaththinaal  ni’rainthathu.  (lookkaa  8:23)

அவர்கள்  அவரிடத்தில்  வந்து,  ஐயரே,  ஐயரே,  மடிந்துபோகிறோம்  என்று  அவரை  எழுப்பினார்கள்;  அவர்  எழுந்து,  காற்றையும்  ஜலத்தின்  கொந்தளிப்பையும்  அதட்டினார்;  உடனே  அவைகள்  நின்றுபோய்,  அமைதலுண்டாயிற்று.  (லூக்கா  8:24)

avarga'l  avaridaththil  vanthu,  aiyarea,  aiyarea,  madinthupoagi’roam  en’ru  avarai  ezhuppinaarga'l;  avar  ezhunthu,  kaat’raiyum  jalaththin  kontha'lippaiyum  athattinaar;  udanea  avaiga'l  nin’rupoay,  amaithalu'ndaayit’ru.  (lookkaa  8:24)

அவர்  அவர்களை  நோக்கி:  உங்கள்  விசுவாசம்  எங்கே  என்றார்.  அவர்கள்  பயந்து  ஆச்சரியப்பட்டு:  இவர்  யாரோ,  காற்றுக்கும்  ஜலத்துக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகளும்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  (லூக்கா  8:25)

avar  avarga'lai  noakki:  ungga'l  visuvaasam  enggea  en’raar.  avarga'l  bayanthu  aachchariyappattu:  ivar  yaaroa,  kaat’rukkum  jalaththukkum  katta'laiyidugi’raar,  avaiga'lum  ivarukkuk  keezhppadigi’rathea  en’ru  oruvaroadoruvar  sollikko'ndaarga'l.  (lookkaa  8:25)

பின்பு  கலிலேயாவுக்கு  எதிரான  கதரேனருடைய  நாட்டில்  சேர்ந்தார்கள்.  (லூக்கா  8:26)

pinbu  kalileayaavukku  ethiraana  kathareanarudaiya  naattil  searnthaarga'l.  (lookkaa  8:26)

அவர்  கரையிலிறங்கினபோது,  நெடுநாளாய்ப்  பிசாசுகள்  பிடித்தவனும்,  வஸ்திரந்தரியாதவனும்,  வீட்டில்  தங்காமல்  பிரேதக்  கல்லறைகளிலே  தங்கினவனுமாயிருந்த  அந்தப்  பட்டணத்து  மனுஷன்  ஒருவன்  அவருக்கு  எதிராக  வந்தான்.  (லூக்கா  8:27)

avar  karaiyili’rangginapoathu,  nedunaa'laayp  pisaasuga'l  pidiththavanum,  vasthiranthariyaathavanum,  veettil  thanggaamal  pireathak  kalla’raiga'lilea  thangginavanumaayiruntha  anthap  patta'naththu  manushan  oruvan  avarukku  ethiraaga  vanthaan.  (lookkaa  8:27)

அவன்  இயேசுவைக்  கண்டபோது  கூக்குரலிட்டு,  அவருக்கு  முன்பாக  விழுந்து:  இயேசுவே,  உன்னதமான  தேவனுடைய  குமாரனே,  எனக்கும்  உமக்கும்  என்ன?  என்னை  வேதனைப்படுத்தாதபடிக்கு  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்று  மகா  சத்தத்தோடே  சொன்னான்.  (லூக்கா  8:28)

avan  iyeasuvaik  ka'ndapoathu  kookkuralittu,  avarukku  munbaaga  vizhunthu:  iyeasuvea,  unnathamaana  theavanudaiya  kumaaranea,  enakkum  umakkum  enna?  ennai  veathanaippaduththaathapadikku  ummai  vea'ndikko'l'lugi’rean  en’ru  mahaa  saththaththoadea  sonnaan.  (lookkaa  8:28)

அந்த  அசுத்தஆவி  அவனை  விட்டுப்  போகும்படி  இயேசு  கட்டளையிட்டபடியினாலே  அப்படிச்  சொன்னான்.  அந்த  அசுத்தஆவி  வெகுகாலமாய்  அவனைப்  பிடித்திருந்தது;  அவன்  சங்கிலிகளினாலும்  விலங்குகளினாலும்  கட்டுண்டு  காவல்பண்ணப்பட்டிருந்தும்  கட்டுகளை  முறித்துப்போட்டுப்  பிசாசினால்  வனாந்தரங்களுக்குத்  துரத்தப்பட்டிருந்தான்.  (லூக்கா  8:29)

antha  asuththaaavi  avanai  vittup  poagumpadi  iyeasu  katta'laiyittapadiyinaalea  appadich  sonnaan.  antha  asuththaaavi  vegukaalamaay  avanaip  pidiththirunthathu;  avan  sanggiliga'linaalum  vilangguga'linaalum  kattu'ndu  kaavalpa'n'nappattirunthum  kattuga'lai  mu’riththuppoattup  pisaasinaal  vanaantharangga'lukkuth  thuraththappattirunthaan.  (lookkaa  8:29)

இயேசு  அவனை  நோக்கி:  உன்  பேர்  என்னவென்று  கேட்டார்;  அதற்கு  அவன்:  லேகியோன்  என்றான்;  அநேகம்  பிசாசுகள்  அவனுக்குள்  புகுந்திருந்தபடியால்  அந்தப்  பேரைச்  சொன்னான்.  (லூக்கா  8:30)

iyeasu  avanai  noakki:  un  pear  ennaven’ru  keattaar;  atha’rku  avan:  leagiyoan  en’raan;  aneagam  pisaasuga'l  avanukku'l  pugunthirunthapadiyaal  anthap  pearaich  sonnaan.  (lookkaa  8:30)

தங்களைப்  பாதாளத்திலே  போகக்  கட்டளையிடாதபடிக்கு  அவைகள்  அவரை  வேண்டிக்கொண்டன.  (லூக்கா  8:31)

thangga'laip  paathaa'laththilea  poagak  katta'laiyidaathapadikku  avaiga'l  avarai  vea'ndikko'ndana.  (lookkaa  8:31)

அவ்விடத்தில்  அநேகம்  பன்றிகள்  கூட்டமாய்  மலையிலே  மேய்ந்துகொண்டிருந்தது.  அந்தப்  பன்றிகளுக்குள்  போகும்படி  தங்களுக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டன;  அவைகளுக்கு  உத்தரவுகொடுத்தார்.  (லூக்கா  8:32)

avvidaththil  aneagam  pan’riga'l  koottamaay  malaiyilea  meaynthuko'ndirunthathu.  anthap  pan’riga'lukku'l  poagumpadi  thangga'lukku  uththaravu  kodukkavea'ndum  en’ru  avarai  vea'ndikko'ndana;  avaiga'lukku  uththaravukoduththaar.  (lookkaa  8:32)

அப்படியே  பிசாசுகள்  அந்த  மனுஷனைவிட்டு  நீங்கி,  பன்றிகளுக்குள்  புகுந்தன;  அப்பொழுது  அந்தப்  பன்றிக்கூட்டம்  உயர்ந்த  மேட்டிலிருந்து  கடலிலே  பாய்ந்து,  அமிழ்ந்து,  மாண்டது.  (லூக்கா  8:33)

appadiyea  pisaasuga'l  antha  manushanaivittu  neenggi,  pan’riga'lukku'l  pugunthana;  appozhuthu  anthap  pan’rikkoottam  uyarntha  meattilirunthu  kadalilea  paaynthu,  amizhnthu,  maa'ndathu.  (lookkaa  8:33)

அவைகளை  மேய்த்தவர்கள்  சம்பவித்ததைக்  கண்டு,  ஓடிப்போய்,  பட்டணத்திலும்  சுற்றுப்புறங்களிலும்  அறிவித்தார்கள்.  (லூக்கா  8:34)

avaiga'lai  meayththavarga'l  sambaviththathaik  ka'ndu,  oadippoay,  patta'naththilum  sut’ruppu’rangga'lilum  a’riviththaarga'l.  (lookkaa  8:34)

அப்பொழுது,  சம்பவித்ததைப்  பார்க்கும்படி  ஜனங்கள்  புறப்பட்டு,  இயேசுவினிடத்தில்  வந்து,  பிசாசுகள்  விட்டுப்போன  மனுஷன்  வஸ்திரந்தரித்து  இயேசுவின்  பாதத்தருகே  உட்கார்ந்து  புத்திதெளிந்திருக்கிறதைக்  கண்டு,  பயந்தார்கள்.  (லூக்கா  8:35)

appozhuthu,  sambaviththathaip  paarkkumpadi  janangga'l  pu’rappattu,  iyeasuvinidaththil  vanthu,  pisaasuga'l  vittuppoana  manushan  vasthiranthariththu  iyeasuvin  paathaththarugea  udkaarnthu  buththithe'linthirukki’rathaik  ka'ndu,  bayanthaarga'l.  (lookkaa  8:35)

பிசாசுகள்  பிடித்திருந்தவன்  சொஸ்தமாக்கப்பட்டதைக்  கண்டவர்களும்  அதை  அவர்களுக்கு  அறிவித்தார்கள்.  (லூக்கா  8:36)

pisaasuga'l  pidiththirunthavan  sosthamaakkappattathaik  ka'ndavarga'lum  athai  avarga'lukku  a’riviththaarga'l.  (lookkaa  8:36)

அப்பொழுது  கதரேனருடைய  சுற்றுப்புறத்திலுள்ள  திரளான  ஜனங்கள்  எல்லாரும்  மிகவும்  பயமடைந்தபடியினாலே,  தங்களை  விட்டுப்  போகும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  அந்தப்படி  அவர்  படவில்  ஏறி,  திரும்பிப்போனார்.  (லூக்கா  8:37)

appozhuthu  kathareanarudaiya  sut’ruppu’raththilu'l'la  thira'laana  janangga'l  ellaarum  migavum  bayamadainthapadiyinaalea,  thangga'lai  vittup  poagumpadi  avarai  vea'ndikko'ndaarga'l.  anthappadi  avar  padavil  ea’ri,  thirumbippoanaar.  (lookkaa  8:37)

பிசாசுகள்  நீங்கின  மனுஷன்  அவரோடேகூட  இருக்கும்படி  உத்தரவு  கேட்டான்.  (லூக்கா  8:38)

pisaasuga'l  neenggina  manushan  avaroadeakooda  irukkumpadi  uththaravu  keattaan.  (lookkaa  8:38)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  உன்  வீட்டுக்குத்  திரும்பிப்போய்,  தேவன்  உனக்குச்  செய்தவைகளையெல்லாம்  அறிவி  என்று  சொல்லி,  அவனை  அனுப்பிவிட்டார்.  அந்தப்படி  அவன்  போய்,  இயேசு  தனக்குச்  செய்தவைகளையெல்லாம்  பட்டணத்தில்  எங்கும்  பிரசித்தப்படுத்தினான்.  (லூக்கா  8:39)

iyeasu  avanai  noakki:  nee  un  veettukkuth  thirumbippoay,  theavan  unakkuch  seythavaiga'laiyellaam  a’rivi  en’ru  solli,  avanai  anuppivittaar.  anthappadi  avan  poay,  iyeasu  thanakkuch  seythavaiga'laiyellaam  patta'naththil  enggum  pirasiththappaduththinaan.  (lookkaa  8:39)

இயேசு  திரும்பிவந்தபோது  ஜனங்களெல்லாரும்  அவருக்காகக்  காத்திருந்தபடியால்  அவரைச்  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டார்கள்.  (லூக்கா  8:40)

iyeasu  thirumbivanthapoathu  janangga'lellaarum  avarukkaagak  kaaththirunthapadiyaal  avaraich  santhoashamaay  eat’rukko'ndaarga'l.  (lookkaa  8:40)

அப்பொழுது  ஜெபஆலயத்தலைவனாகிய  யவீரு  என்னும்  பேருள்ள  ஒருவன்  வந்து,  இயேசுவின்  பாதத்தில்  விழுந்து,  பன்னிரண்டு  வயதுள்ள  தன்னுடைய  ஒரே  குமாரத்தி  மரண  அவஸ்தையாயிருந்தபடியால்,  (லூக்கா  8:41)

appozhuthu  jebaaalayaththalaivanaagiya  yaveeru  ennum  pearu'l'la  oruvan  vanthu,  iyeasuvin  paathaththil  vizhunthu,  pannira'ndu  vayathu'l'la  thannudaiya  orea  kumaaraththi  mara'na  avasthaiyaayirunthapadiyaal,  (lookkaa  8:41)

தன்  வீட்டிற்கு  வரும்படி  அவரை  வேண்டிக்கொண்டான்.  அவர்  போகையில்  திரளான  ஜனங்கள்  அவரை  நெருக்கினார்கள்.  (லூக்கா  8:42)

than  veetti’rku  varumpadi  avarai  vea'ndikko'ndaan.  avar  poagaiyil  thira'laana  janangga'l  avarai  nerukkinaarga'l.  (lookkaa  8:42)

அப்பொழுது  பன்னிரண்டு  வருஷமாய்ப்  பெரும்பாடுள்ளவளாயிருந்து,  தன்  ஆஸ்திகளையெல்லாம்  வைத்தியர்களுக்குச்  செலவழித்தும்,  ஒருவனாலும்  சொஸ்தமாக்கப்படாதிருந்த  ஒரு  ஸ்திரீ,  (லூக்கா  8:43)

appozhuthu  pannira'ndu  varushamaayp  perumpaadu'l'lava'laayirunthu,  than  aasthiga'laiyellaam  vaiththiyarga'lukkuch  selavazhiththum,  oruvanaalum  sosthamaakkappadaathiruntha  oru  sthiree,  (lookkaa  8:43)

அவருக்குப்  பின்னாக  வந்து,  அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தைத்  தொட்டாள்;  உடனே  அவளுடைய  பெரும்பாடு  நின்றுபோயிற்று.  (லூக்கா  8:44)

avarukkup  pinnaaga  vanthu,  avarudaiya  vasthiraththin  oaraththaith  thottaa'l;  udanea  ava'ludaiya  perumpaadu  nin’rupoayit’ru.  (lookkaa  8:44)

அப்பொழுது  இயேசு:  என்னைத்  தொட்டது  யார்  என்று  கேட்டார்.  எங்களுக்குத்  தெரியாதென்று  எல்லாரும்  சொன்னபோது,  பேதுருவும்  அவனுடனே  கூட  இருந்தவர்களும்:  ஐயரே,  திரளான  ஜனங்கள்  உம்மைச்  சூழ்ந்து  நெருக்கிக்  கொண்டிருக்கிறார்களே,  என்னைத்  தொட்டது  யார்  என்று  எப்படிக்  கேட்கிறீர்  என்றார்கள்.  (லூக்கா  8:45)

appozhuthu  iyeasu:  ennaith  thottathu  yaar  en’ru  keattaar.  engga'lukkuth  theriyaathen’ru  ellaarum  sonnapoathu,  peathuruvum  avanudanea  kooda  irunthavarga'lum:  aiyarea,  thira'laana  janangga'l  ummaich  soozhnthu  nerukkik  ko'ndirukki’raarga'lea,  ennaith  thottathu  yaar  en’ru  eppadik  keadki’reer  en’raarga'l.  (lookkaa  8:45)

அதற்கு  இயேசு:  என்னிலிருந்து  வல்லமை  புறப்பட்டதை  அறிந்திருக்கிறேன்;  ஆதலால்  ஒருவர்  என்னைத்  தொட்டதுண்டு  என்றார்.  (லூக்கா  8:46)

atha’rku  iyeasu:  ennilirunthu  vallamai  pu’rappattathai  a’rinthirukki’rean;  aathalaal  oruvar  ennaith  thottathu'ndu  en’raar.  (lookkaa  8:46)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  தான்  மறைந்திருக்கவில்லையென்று  கண்டு,  நடுங்கிவந்து,  அவர்  முன்பாக  விழுந்து,  தான்  அவரைத்  தொட்ட  காரணத்தையும்  உடனே  தான்  சொஸ்தமானதையும்  எல்லா  ஜனங்களுக்கும்  முன்பாக  அவருக்கு  அறிவித்தாள்.  (லூக்கா  8:47)

appozhuthu  antha  sthiree  thaan  ma’rainthirukkavillaiyen’ru  ka'ndu,  nadunggivanthu,  avar  munbaaga  vizhunthu,  thaan  avaraith  thotta  kaara'naththaiyum  udanea  thaan  sosthamaanathaiyum  ellaa  janangga'lukkum  munbaaga  avarukku  a’riviththaa'l.  (lookkaa  8:47)

அவர்  அவளைப்  பார்த்து:  மகளே,  திடன்கொள்,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது,  சமாதானத்தோடே  போ  என்றார்.  (லூக்கா  8:48)

avar  ava'laip  paarththu:  maga'lea,  thidanko'l,  un  visuvaasam  unnai  iradchiththathu,  samaathaanaththoadea  poa  en’raar.  (lookkaa  8:48)

அவர்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  ஜெபஆலயத்தலைவனுடைய  வீட்டிலிருந்து  ஒருவன்  வந்து,  அவனை  நோக்கி:  உம்முடைய  குமாரத்தி  மரித்துப்போனாள்,  போதகரை  வருத்தப்படுத்த  வேண்டாம்  என்றான்.  (லூக்கா  8:49)

avar  ippadip  peasikko'ndirukkaiyil,  jebaaalayaththalaivanudaiya  veettilirunthu  oruvan  vanthu,  avanai  noakki:  ummudaiya  kumaaraththi  mariththuppoanaa'l,  poathagarai  varuththappaduththa  vea'ndaam  en’raan.  (lookkaa  8:49)

இயேசு  அதைக்  கேட்டு:  பயப்படாதே;  விசுவாசமுள்ளவனாயிரு,  அப்பொழுது  அவள்  இரட்சிக்கப்படுவாள்  என்றார்.  (லூக்கா  8:50)

iyeasu  athaik  keattu:  bayappadaathea;  visuvaasamu'l'lavanaayiru,  appozhuthu  ava'l  iradchikkappaduvaa'l  en’raar.  (lookkaa  8:50)

அவர்  வீட்டில்  வந்தபோது,  பேதுருவையும்  யாக்கோபையும்  யோவானையும்  பெண்ணின்  தகப்பனையும்  தாயையும்  தவிர  வேறொருவரையும்  உள்ளே  வரவொட்டாமல்,  (லூக்கா  8:51)

avar  veettil  vanthapoathu,  peathuruvaiyum  yaakkoabaiyum  yoavaanaiyum  pe'n'nin  thagappanaiyum  thaayaiyum  thavira  vea’roruvaraiyum  u'l'lea  varavottaamal,  (lookkaa  8:51)

எல்லாரும்  அழுது  அவளைக்குறித்துத்  துக்கங்கொண்டாடுகிறதைக்  கண்டு:  அழாதேயுங்கள்,  அவள்  மரித்துப்போகவில்லை,  நித்திரையாயிருக்கிறாள்  என்றார்.  (லூக்கா  8:52)

ellaarum  azhuthu  ava'laikku’riththuth  thukkangko'ndaadugi’rathaik  ka'ndu:  azhaatheayungga'l,  ava'l  mariththuppoagavillai,  niththiraiyaayirukki’raa'l  en’raar.  (lookkaa  8:52)

அவள்  மரித்துப்போனாளென்று  அவர்கள்  அறிந்ததினால்,  அவரைப்  பார்த்து  நகைத்தார்கள்.  (லூக்கா  8:53)

ava'l  mariththuppoanaa'len’ru  avarga'l  a’rinthathinaal,  avaraip  paarththu  nagaiththaarga'l.  (lookkaa  8:53)

எல்லாரையும்  அவர்  வெளியே  போகப்பண்ணி,  அவளுடைய  கையைப்  பிடித்து:  பிள்ளையே  எழுந்திரு  என்றார்.  (லூக்கா  8:54)

ellaaraiyum  avar  ve'liyea  poagappa'n'ni,  ava'ludaiya  kaiyaip  pidiththu:  pi'l'laiyea  ezhunthiru  en’raar.  (lookkaa  8:54)

அப்பொழுது  அவள்  உயிர்  திரும்ப  வந்தது;  உடனே  அவள்  எழுந்திருந்தாள்;  அவளுக்கு  ஆகாரங்கொடுக்கக்  கட்டளையிட்டார்.  (லூக்கா  8:55)

appozhuthu  ava'l  uyir  thirumba  vanthathu;  udanea  ava'l  ezhunthirunthaa'l;  ava'lukku  aagaarangkodukkak  katta'laiyittaar.  (lookkaa  8:55)

அவள்  தாய்தகப்பன்மார்  ஆச்சரியப்பட்டார்கள்.  அப்பொழுது  நடந்ததை  ஒருவருக்கும்  சொல்லாமலிருக்கும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டார்.  (லூக்கா  8:56)

ava'l  thaaythagappanmaar  aachchariyappattaarga'l.  appozhuthu  nadanthathai  oruvarukkum  sollaamalirukkumpadi  avarga'lukkuk  katta'laiyittaar.  (lookkaa  8:56)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!