Thursday, May 05, 2016

Lookkaa 7 | லூக்கா 7 | Luke 7


அவர்  தம்முடைய  வார்த்தைகளையெல்லாம்  ஜனங்களுடைய  காதுகள்  கேட்கும்படி  சொல்லி  முடித்தபின்பு,  கப்பர்நகூமுக்குப்  போனார்.  (லூக்கா  7:1)

avar  thammudaiya  vaarththaiga'laiyellaam  janangga'ludaiya  kaathuga'l  keadkumpadi  solli  mudiththapinbu,  kapparnahoomukkup  poanaar.  (lookkaa  7:1)

அங்கே  நூற்றுக்கு  அதிபதியாகிய  ஒருவனுக்குப்  பிரியமான  வேலைக்காரன்  வியாதிப்பட்டு  மரண  அவஸ்தையாயிருந்தான்.  (லூக்கா  7:2)

anggea  noot’rukku  athibathiyaagiya  oruvanukkup  piriyamaana  vealaikkaaran  viyaathippattu  mara'na  avasthaiyaayirunthaan.  (lookkaa  7:2)

அவன்  இயேசுவைக்குறித்துக்  கேள்விப்பட்டபோது,  அவர்  வந்து  தன்  வேலைக்காரனைக்  குணமாக்கவேண்டுமென்று,  அவரை  வேண்டிக்கொள்ளும்படி  யூதருடைய  மூப்பரை  அவரிடத்தில்  அனுப்பினான்.  (லூக்கா  7:3)

avan  iyeasuvaikku’riththuk  kea'lvippattapoathu,  avar  vanthu  than  vealaikkaaranaik  ku'namaakkavea'ndumen’ru,  avarai  vea'ndikko'l'lumpadi  yootharudaiya  moopparai  avaridaththil  anuppinaan.  (lookkaa  7:3)

அவர்கள்  இயேசுவினிடத்தில்  வந்து,  அவரைக்  கருத்தாய்  வேண்டிக்கொண்டு:  நீர்  இந்தத்  தயவுசெய்கிறதற்கு  அவன்  பாத்திரனாயிருக்கிறான்.  (லூக்கா  7:4)

avarga'l  iyeasuvinidaththil  vanthu,  avaraik  karuththaay  vea'ndikko'ndu:  neer  inthath  thayavuseygi’ratha’rku  avan  paaththiranaayirukki’raan.  (lookkaa  7:4)

அவன்  நம்முடைய  ஜனத்தை  நேசிக்கிறான்,  நமக்கு  ஒரு  ஜெபஆலயத்தையும்  கட்டினான்  என்றார்கள்.  (லூக்கா  7:5)

avan  nammudaiya  janaththai  neasikki’raan,  namakku  oru  jebaaalayaththaiyum  kattinaan  en’raarga'l.  (lookkaa  7:5)

அப்பொழுது  இயேசு  அவர்களுடனே  கூடப்போனார்.  வீட்டுக்குச்  சமீபமானபோது,  நூற்றுக்கு  அதிபதி  தன்  சிநேகிதரை  நோக்கி:  நீங்கள்  அவரிடத்தில்  போய்,  ஆண்டவரே!  நீர்  வருத்தப்படவேண்டாம்;  நீர்  என்  வீட்டு  வாசலுக்குள்  பிரவேசிக்க  நான்  பாத்திரன்  அல்ல;  (லூக்கா  7:6)

appozhuthu  iyeasu  avarga'ludanea  koodappoanaar.  veettukkuch  sameebamaanapoathu,  noot’rukku  athibathi  than  sineagitharai  noakki:  neengga'l  avaridaththil  poay,  aa'ndavarea!  neer  varuththappadavea'ndaam;  neer  en  veettu  vaasalukku'l  piraveasikka  naan  paaththiran  alla;  (lookkaa  7:6)

நான்  உம்மிடத்தில்  வரவும்  என்னைப்  பாத்திரனாக  எண்ணவில்லை;  ஒரு  வார்த்தைமாத்திரம்  சொல்லும்,  அப்பொழுது  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான்.  (லூக்கா  7:7)

naan  ummidaththil  varavum  ennaip  paaththiranaaga  e'n'navillai;  oru  vaarththaimaaththiram  sollum,  appozhuthu  en  vealaikkaaran  sosthamaavaan.  (lookkaa  7:7)

நான்  அதிகாரத்துக்குக்  கீழ்ப்பட்டவனாயிருந்தும்,  எனக்குக்  கீழ்ப்பட்டிருக்கிற  சேவகருமுண்டு;  நான்  ஒருவனைப்  போவென்றால்  போகிறான்,  மற்றொருவனை  வாவென்றால்  வருகிறான்;  என்  வேலைக்காரனை,  இதைச்  செய்யென்றால்  செய்கிறான்  என்று  நான்  சொன்னதாகச்  சொல்லுங்கள்  என்று  அவர்களை  அனுப்பினான்.  (லூக்கா  7:8)

naan  athigaaraththukkuk  keezhppattavanaayirunthum,  enakkuk  keezhppattirukki’ra  seavagarumu'ndu;  naan  oruvanaip  poaven’raal  poagi’raan,  mat’roruvanai  vaaven’raal  varugi’raan;  en  vealaikkaaranai,  ithaich  seyyen’raal  seygi’raan  en’ru  naan  sonnathaagach  sollungga'l  en’ru  avarga'lai  anuppinaan.  (lookkaa  7:8)

இயேசு  இவைகளைக்  கேட்டு  அவனைக்  குறித்து  ஆச்சரியப்பட்டு,  திரும்பி,  தமக்குப்  பின்செல்லுகிற  திரளான  ஜனங்களை  நோக்கி:  இஸ்ரவேலருக்குள்ளும்  நான்  இப்படிப்பட்ட  விசுவாசத்தைக்  காணவில்லை  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  7:9)

iyeasu  ivaiga'laik  keattu  avanaik  ku’riththu  aachchariyappattu,  thirumbi,  thamakkup  pinsellugi’ra  thira'laana  janangga'lai  noakki:  isravealarukku'l'lum  naan  ippadippatta  visuvaasaththaik  kaa'navillai  en’ru  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (lookkaa  7:9)

அனுப்பப்பட்டவர்கள்  வீட்டுக்குத்  திரும்பிவந்தபோது,  வியாதியாய்க்  கிடந்த  வேலைக்காரன்  சுகமடைந்திருக்கிறதைக்  கண்டார்கள்.  (லூக்கா  7:10)

anuppappattavarga'l  veettukkuth  thirumbivanthapoathu,  viyaathiyaayk  kidantha  vealaikkaaran  sugamadainthirukki’rathaik  ka'ndaarga'l.  (lookkaa  7:10)

மறுநாளிலே  அவர்  நாயீன்  என்னும்  ஊருக்குப்  போனார்;  அவருடைய  சீஷர்  அநேகரும்  திரளான  ஜனங்களும்  அவருடனேகூடப்  போனார்கள்.  (லூக்கா  7:11)

ma’runaa'lilea  avar  naayeen  ennum  oorukkup  poanaar;  avarudaiya  seeshar  aneagarum  thira'laana  janangga'lum  avarudaneakoodap  poanaarga'l.  (lookkaa  7:11)

அவர்  ஊரின்  வாசலுக்குச்  சமீபித்தபோது,  மரித்துப்போன  ஒருவனை  அடக்கம்பண்ணும்படி  கொண்டுவந்தார்கள்;  அவன்  தன்  தாய்க்கு  ஒரே  மகனாயிருந்தான்.  அவளோ  கைம்பெண்ணாயிருந்தாள்;  ஊராரில்  வெகு  ஜனங்கள்  அவளுடனேகூட  வந்தார்கள்.  (லூக்கா  7:12)

avar  oorin  vaasalukkuch  sameebiththapoathu,  mariththuppoana  oruvanai  adakkampa'n'numpadi  ko'nduvanthaarga'l;  avan  than  thaaykku  orea  maganaayirunthaan.  ava'loa  kaimpe'n'naayirunthaa'l;  ooraaril  vegu  janangga'l  ava'ludaneakooda  vanthaarga'l.  (lookkaa  7:12)

கர்த்தர்  அவளைப்  பார்த்து,  அவள்மேல்  மனதுருகி:  அழாதே  என்று  சொல்லி,  (லூக்கா  7:13)

karththar  ava'laip  paarththu,  ava'lmeal  manathurugi:  azhaathea  en’ru  solli,  (lookkaa  7:13)

கிட்டவந்து,  பாடையைத்  தொட்டார்;  அதைச்  சுமந்தவர்கள்  நின்றார்கள்;  அப்பொழுது  அவர்:  வாலிபனே,  எழுந்திரு  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  7:14)

kittavanthu,  paadaiyaith  thottaar;  athaich  sumanthavarga'l  nin’raarga'l;  appozhuthu  avar:  vaalibanea,  ezhunthiru  en’ru  unakkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  7:14)

மரித்தவன்  எழுந்து  உட்கார்ந்து,  பேசத்தொடங்கினான்.  அவனை  அவன்  தாயினிடத்தில்  ஒப்புவித்தார்.  (லூக்கா  7:15)

mariththavan  ezhunthu  udkaarnthu,  peasaththodangginaan.  avanai  avan  thaayinidaththil  oppuviththaar.  (lookkaa  7:15)

எல்லாரும்  பயமடைந்து:  மகா  தீர்க்கதரிசியானவர்  நமக்குள்ளே  தோன்றியிருக்கிறார்  என்றும்,  தேவன்  தமது  ஜனங்களைச்  சந்தித்தார்  என்றும்  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (லூக்கா  7:16)

ellaarum  bayamadainthu:  mahaa  theerkkatharisiyaanavar  namakku'l'lea  thoan’riyirukki’raar  en’rum,  theavan  thamathu  janangga'laich  santhiththaar  en’rum  solli,  theavanai  magimaippaduththinaarga'l.  (lookkaa  7:16)

இந்தச்  செய்தி  யூதேயா  தேசமுழுவதிலும்  சுற்றியிருக்கிற  திசைகள்  யாவற்றிலும்  பிரசித்தமாயிற்று.  (லூக்கா  7:17)

inthach  seythi  yootheayaa  theasamuzhuvathilum  sut’riyirukki’ra  thisaiga'l  yaavat’rilum  pirasiththamaayit’ru.  (lookkaa  7:17)

இவைகளையெல்லாம்  யோவானுடைய  சீஷர்கள்  அவனுக்கு  அறிவித்தார்கள்.  அப்பொழுது  யோவான்  தன்  சீஷரில்  இரண்டுபேரை  அழைத்து,  (லூக்கா  7:18)

ivaiga'laiyellaam  yoavaanudaiya  seesharga'l  avanukku  a’riviththaarga'l.  appozhuthu  yoavaan  than  seesharil  ira'ndupearai  azhaiththu,  (lookkaa  7:18)

நீங்கள்  இயேசுவினிடத்திற்குப்  போய்:  வருகிறவர்  நீர்தானா?  அல்லது  வேறொருவர்  வரக்  காத்திருக்கவேண்டுமா?  என்று  கேளுங்கள்  என்று  சொல்லி  அனுப்பினான்.  (லூக்கா  7:19)

neengga'l  iyeasuvinidaththi’rkup  poay:  varugi’ravar  neerthaanaa?  allathu  vea’roruvar  varak  kaaththirukkavea'ndumaa?  en’ru  kea'lungga'l  en’ru  solli  anuppinaan.  (lookkaa  7:19)

அந்தப்படி  அவர்கள்  அவரிடத்தில்  வந்து:  வருகிறவர்  நீர்தானா?  அல்லது  வேறொருவர்  வரக்  காத்திருக்கவேண்டுமா?  என்று  கேட்கும்படி  யோவான்ஸ்நானன்  எங்களை  உம்மிடத்திற்கு  அனுப்பினார்  என்றார்கள்.  (லூக்கா  7:20)

anthappadi  avarga'l  avaridaththil  vanthu:  varugi’ravar  neerthaanaa?  allathu  vea’roruvar  varak  kaaththirukkavea'ndumaa?  en’ru  keadkumpadi  yoavaansnaanan  engga'lai  ummidaththi’rku  anuppinaar  en’raarga'l.  (lookkaa  7:20)

அந்தச்  சமயத்திலே  நோய்களையும்  கொடிய  வியாதிகளையும்  பொல்லாத  ஆவிகளையும்  கொண்டிருந்த  அநேகரை  அவர்  குணமாக்கி,  அநேகங்  குருடருக்குப்  பார்வையளித்தார்.  (லூக்கா  7:21)

anthach  samayaththilea  noayga'laiyum  kodiya  viyaathiga'laiyum  pollaatha  aaviga'laiyum  ko'ndiruntha  aneagarai  avar  ku'namaakki,  aneagang  kurudarukkup  paarvaiya'liththaar.  (lookkaa  7:21)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  போய்,  கண்டவைகளையும்  கேட்டவைகளையும்  யோவானுக்கு  அறிவியுங்கள்;  குருடர்  பார்வையடைகிறார்கள்,  சப்பாணிகள்  நடக்கிறார்கள்,  குஷ்டரோகிகள்  சுத்தமாகிறார்கள்,  செவிடர்  கேட்கிறார்கள்,  மரித்தோர்  எழுந்திருக்கிறார்கள்,  தரித்திரருக்குச்  சுவிசேஷம்  பிரசங்கிக்கப்படுகிறது.  (லூக்கா  7:22)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  neengga'l  poay,  ka'ndavaiga'laiyum  keattavaiga'laiyum  yoavaanukku  a’riviyungga'l;  kurudar  paarvaiyadaigi’raarga'l,  sappaa'niga'l  nadakki’raarga'l,  kushdaroagiga'l  suththamaagi’raarga'l,  sevidar  keadki’raarga'l,  mariththoar  ezhunthirukki’raarga'l,  thariththirarukkuch  suviseasham  pirasanggikkappadugi’rathu.  (lookkaa  7:22)

என்னிடத்தில்  இடறலடையாதிருக்கிறவன்  எவனோ  அவன்  பாக்கியவான்  என்றார்.  (லூக்கா  7:23)

ennidaththil  ida’raladaiyaathirukki’ravan  evanoa  avan  baakkiyavaan  en’raar.  (lookkaa  7:23)

யோவானுடைய  தூதர்கள்  போனபின்பு  அவர்  யோவானைக்குறித்து  ஜனங்களுக்குச்  சொன்னது  என்னவென்றால்:  எதைப்பார்க்க  வனாந்தரத்திற்குப்  போனீர்கள்?  காற்றினால்  அசையும்  நாணலையோ?  (லூக்கா  7:24)

yoavaanudaiya  thootharga'l  poanapinbu  avar  yoavaanaikku’riththu  janangga'lukkuch  sonnathu  ennaven’raal:  ethaippaarkka  vanaantharaththi’rkup  poaneerga'l?  kaat’rinaal  asaiyum  naa'nalaiyoa?  (lookkaa  7:24)

அல்லவென்றால்,  எதைப்பார்க்கப்  போனீர்கள்?  மெல்லிய  வஸ்திரந்தரித்த  மனுஷனையோ?  அலங்கார  வஸ்திரந்தரித்துச்  செல்வமாய்  வாழ்கிறவர்கள்  அரசர்  மாளிகைகளிலே  இருக்கிறார்கள்.  (லூக்கா  7:25)

allaven’raal,  ethaippaarkkap  poaneerga'l?  melliya  vasthiranthariththa  manushanaiyoa?  alanggaara  vasthiranthariththuch  selvamaay  vaazhgi’ravarga'l  arasar  maa'ligaiga'lilea  irukki’raarga'l.  (lookkaa  7:25)

அல்லவென்றால்,  எதைப்பார்க்கப்  போனீர்கள்?  தீர்க்கதரிசியையோ?  ஆம்,  தீர்க்கதரிசியைப்  பார்க்கிலும்  மேன்மையுள்ளவனையே  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  7:26)

allaven’raal,  ethaippaarkkap  poaneerga'l?  theerkkatharisiyaiyoa?  aam,  theerkkatharisiyaip  paarkkilum  meanmaiyu'l'lavanaiyea  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  7:26)

இதோ,  நான்  என்  தூதனை  உமக்கு  முன்பாக  அனுப்புகிறேன்;  அவன்  உமக்கு  முன்னே  போய்,  உமது  வழியை  ஆயத்தம்பண்ணுவான்  என்று  எழுதிய  வாக்கியத்தால்  குறிக்கப்பட்டவன்  இவன்தான்.  (லூக்கா  7:27)

ithoa,  naan  en  thoothanai  umakku  munbaaga  anuppugi’rean;  avan  umakku  munnea  poay,  umathu  vazhiyai  aayaththampa'n'nuvaan  en’ru  ezhuthiya  vaakkiyaththaal  ku’rikkappattavan  ivanthaan.  (lookkaa  7:27)

ஸ்திரீகளிடத்திலே  பிறந்தவர்களில்  யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும்  பெரிய  தீர்க்கதரிசி  ஒருவனுமில்லை;  ஆகிலும்,  தேவனுடைய  ராஜ்யத்தில்  சிறியவனாயிருக்கிறவன்  அவனிலும்  பெரியவனாயிருக்கிறானென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  7:28)

sthireega'lidaththilea  pi’ranthavarga'lil  yoavaansnaananaippaarkkilum  periya  theerkkatharisi  oruvanumillai;  aagilum,  theavanudaiya  raajyaththil  si’riyavanaayirukki’ravan  avanilum  periyavanaayirukki’raanen’ru  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  7:28)

யோவானுடைய  உபதேசத்தைக்  கேட்ட  ஆயக்காரர்  முதலான  சகல  ஜனங்களும்  அவனாலே  ஞானஸ்நானம்  பெற்று,  தேவன்  நீதிபரர்  என்று  அறிக்கையிட்டார்கள்.  (லூக்கா  7:29)

yoavaanudaiya  ubatheasaththaik  keatta  aayakkaarar  muthalaana  sagala  janangga'lum  avanaalea  gnaanasnaanam  pet’ru,  theavan  neethiparar  en’ru  a’rikkaiyittaarga'l.  (lookkaa  7:29)

பரிசேயரும்  நியாயசாஸ்திரிகளுமோ  அவனாலே  ஞானஸ்நானம்  பெறாமல்  தங்களுக்குக்  கேடுண்டாகத்  தேவனுடைய  ஆலோசனையைத்  தள்ளிவிட்டார்கள்.  (லூக்கா  7:30)

pariseayarum  niyaayasaasthiriga'lumoa  avanaalea  gnaanasnaanam  pe’raamal  thangga'lukkuk  keadu'ndaagath  theavanudaiya  aaloasanaiyaith  tha'l'livittaarga'l.  (lookkaa  7:30)

பின்னும்  கர்த்தர்  சொன்னது:  இந்தச்  சந்ததியை  யாருக்கு  ஒப்பிடுவேன்?  இவர்கள்  யாருக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்?  (லூக்கா  7:31)

pinnum  karththar  sonnathu:  inthach  santhathiyai  yaarukku  oppiduvean?  ivarga'l  yaarukku  oppaayirukki’raarga'l?  (lookkaa  7:31)

சந்தை  வெளியில்  உட்கார்ந்து,  ஒருவரையொருவர்  பார்த்து:  உங்களுக்காகக்  குழல்  ஊதினோம்,  நீங்கள்  கூத்தாடவில்லை;  உங்களுக்காகப்  புலம்பினோம்,  நீங்கள்  அழவில்லை  என்று  குறை  சொல்லுகிற  பிள்ளைகளுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  (லூக்கா  7:32)

santhai  ve'liyil  udkaarnthu,  oruvaraiyoruvar  paarththu:  ungga'lukkaagak  kuzhal  oothinoam,  neengga'l  kooththaadavillai;  ungga'lukkaagap  pulambinoam,  neengga'l  azhavillai  en’ru  ku’rai  sollugi’ra  pi'l'laiga'lukku  oppaayirukki’raarga'l.  (lookkaa  7:32)

எப்படியெனில்,  யோவான்ஸ்நானன்  அப்பம்  புசியாதவனும்  திராட்சரசம்  குடியாதவனுமாய்  வந்தான்;  அதற்கு  நீங்கள்:  அவன்  பிசாசு  பிடித்திருக்கிறவன்  என்கிறீர்கள்.  (லூக்கா  7:33)

eppadiyenil,  yoavaansnaanan  appam  pusiyaathavanum  thiraadcharasam  kudiyaathavanumaay  vanthaan;  atha’rku  neengga'l:  avan  pisaasu  pidiththirukki’ravan  engi'reerga'l.  (lookkaa  7:33)

மனுஷகுமாரன்  போஜனபானம்  பண்ணுகிறவராய்  வந்தார்;  அதற்கு  நீங்கள்:  இதோ,  போஜனப்பிரியனும்  மதுபானப்பிரியனுமான  மனுஷன்,  ஆயக்காரருக்கும்  பாவிகளுக்கும்  சிநேகிதன்  என்கிறீர்கள்.  (லூக்கா  7:34)

manushakumaaran  poajanabaanam  pa'n'nugi’ravaraay  vanthaar;  atha’rku  neengga'l:  ithoa,  poajanappiriyanum  mathubaanappiriyanumaana  manushan,  aayakkaararukkum  paaviga'lukkum  sineagithan  engi'reerga'l.  (lookkaa  7:34)

ஆனாலும்  ஞானமானது  அதன்  பிள்ளைகளெல்லாராலும்  நீதியுள்ளதென்று  ஒப்புக்கொள்ளப்படும்  என்றார்.  (லூக்கா  7:35)

aanaalum  gnaanamaanathu  athan  pi'l'laiga'lellaaraalum  neethiyu'l'lathen’ru  oppukko'l'lappadum  en’raar.  (lookkaa  7:35)

பரிசேயரில்  ஒருவன்  தன்னுடனே  போஜனம்பண்ணவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டான்;  அவர்  அந்தப்  பரிசேயனுடைய  வீட்டில்  பிரவேசித்துப்  பந்தியிருந்தார்.  (லூக்கா  7:36)

pariseayaril  oruvan  thannudanea  poajanampa'n'navea'ndumen’ru  avarai  vea'ndikko'ndaan;  avar  anthap  pariseayanudaiya  veettil  piraveasiththup  panthiyirunthaar.  (lookkaa  7:36)

அப்பொழுது  அந்த  ஊரிலிருந்த  பாவியாகிய  ஒரு  ஸ்திரீ  அவர்  பரிசேயன்  வீட்டிலே  பந்தியிருக்கிறதை  அறிந்து,  ஒரு  பரணியில்  பரிமளதைலம்  கொண்டுவந்து,  (லூக்கா  7:37)

appozhuthu  antha  ooriliruntha  paaviyaagiya  oru  sthiree  avar  pariseayan  veettilea  panthiyirukki’rathai  a’rinthu,  oru  para'niyil  parima'lathailam  ko'nduvanthu,  (lookkaa  7:37)

அவருடைய  பாதங்களின்  அருகே  பின்னாக  நின்று  அழுதுகொண்டு,  அவருடைய  பாதங்களைத்  தன்  கண்ணீரினால்  நனைத்து,  தன்  தலைமயிரினால்  துடைத்து,  அவருடைய  பாதங்களை  முத்தஞ்செய்து,  பரிமளதைலத்தைப்  பூசினாள்.  (லூக்கா  7:38)

avarudaiya  paathangga'lin  arugea  pinnaaga  nin’ru  azhuthuko'ndu,  avarudaiya  paathangga'laith  than  ka'n'neerinaal  nanaiththu,  than  thalaimayirinaal  thudaiththu,  avarudaiya  paathangga'lai  muththagnseythu,  parima'lathailaththaip  poosinaa'l.  (lookkaa  7:38)

அவரை  அழைத்த  பரிசேயன்  அதைக்  கண்டபோது,  இவர்  தீர்க்கதரிசியாயிருந்தால்  தம்மைத்  தொடுகிற  ஸ்திரீ  இன்னாளென்றும்  இப்படிப்பட்டவளென்றும்  அறிந்திருப்பார்;  இவள்  பாவியாயிருக்கிறாளே  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டான்.  (லூக்கா  7:39)

avarai  azhaiththa  pariseayan  athaik  ka'ndapoathu,  ivar  theerkkatharisiyaayirunthaal  thammaith  thodugi’ra  sthiree  innaa'len’rum  ippadippattava'len’rum  a’rinthiruppaar;  iva'l  paaviyaayirukki’raa'lea  en’ru  thanakku'l'lea  sollikko'ndaan.  (lookkaa  7:39)

இயேசு  அவனை  நோக்கி:  சீமோனே,  உனக்கு  நான்  ஒரு  காரியம்  சொல்லவேண்டும்  என்றார்.  அதற்கு  அவன்:  போதகரே,  சொல்லும்  என்றான்.  (லூக்கா  7:40)

iyeasu  avanai  noakki:  seemoanea,  unakku  naan  oru  kaariyam  sollavea'ndum  en’raar.  atha’rku  avan:  poathagarea,  sollum  en’raan.  (lookkaa  7:40)

அப்பொழுது  அவர்:  ஒருவனிடத்தில்  இரண்டுபேர்  கடன்பட்டிருந்தார்கள்;  ஒருவன்  ஐந்நூறு  வெள்ளிக்காசும்,  மற்றவன்  ஐம்பது  வெள்ளிக்காசும்  கொடுக்கவேண்டியதாயிருந்தது.  (லூக்கா  7:41)

appozhuthu  avar:  oruvanidaththil  ira'ndupear  kadanpattirunthaarga'l;  oruvan  ainnoo’ru  ve'l'likkaasum,  mat’ravan  aimbathu  ve'l'likkaasum  kodukkavea'ndiyathaayirunthathu.  (lookkaa  7:41)

கொடுக்க  அவர்களுக்கு  நிர்வாகமில்லாதபோது,  இருவருக்கும்  கடனை  மன்னித்துவிட்டான்.  இப்படியிருக்க,  அவர்களில்  எவன்  அவனிடத்தில்  அதிக  அன்பாயிருப்பான்?  அதைச்  சொல்  என்றார்.  (லூக்கா  7:42)

kodukka  avarga'lukku  nirvaagamillaathapoathu,  iruvarukkum  kadanai  manniththuvittaan.  ippadiyirukka,  avarga'lil  evan  avanidaththil  athiga  anbaayiruppaan?  athaich  sol  en’raar.  (lookkaa  7:42)

சீமோன்  பிரதியுத்தரமாக:  எவனுக்கு  அதிகமாய்  மன்னித்துவிட்டானோ  அவனே  அதிக  அன்பாயிருப்பான்  என்று  நினைக்கிறேன்  என்றான்;  அதற்கு  அவர்:  சரியாய்  நிதானித்தாய்  என்று  சொல்லி,  (லூக்கா  7:43)

seemoan  pirathiyuththaramaaga:  evanukku  athigamaay  manniththuvittaanoa  avanea  athiga  anbaayiruppaan  en’ru  ninaikki’rean  en’raan;  atha’rku  avar:  sariyaay  nithaaniththaay  en’ru  solli,  (lookkaa  7:43)

ஸ்திரீயினிடமாய்த்  திரும்பி,  சீமோனை  நோக்கி:  இந்த  ஸ்திரீயைப்  பார்க்கிறாயே;  நான்  உன்  வீட்டில்  பிரவேசித்தேன்,  நீ  என்  கால்களுக்குத்  தண்ணீர்  தரவில்லை,  இவளோ,  கண்ணீரினால்  என்  கால்களை  நனைத்து,  தன்  தலைமயிரினால்  அவைகளைத்  துடைத்தாள்.  (லூக்கா  7:44)

sthireeyinidamaayth  thirumbi,  seemoanai  noakki:  intha  sthireeyaip  paarkki’raayea;  naan  un  veettil  piraveasiththean,  nee  en  kaalga'lukkuth  tha'n'neer  tharavillai,  iva'loa,  ka'n'neerinaal  en  kaalga'lai  nanaiththu,  than  thalaimayirinaal  avaiga'laith  thudaiththaa'l.  (lookkaa  7:44)

நீ  என்னை  முத்தஞ்செய்யவில்லை,  இவளோ,  நான்  உட்பிரவேசித்தது  முதல்,  என்  பாதங்களை  ஓயாமல்  முத்தஞ்செய்தாள்.  (லூக்கா  7:45)

nee  ennai  muththagnseyyavillai,  iva'loa,  naan  udpiraveasiththathu  muthal,  en  paathangga'lai  oayaamal  muththagnseythaa'l.  (lookkaa  7:45)

நீ  என்  தலையில்  எண்ணெய்  பூசவில்லை,  இவளோ,  என்  பாதங்களில்  பரிமளதைலம்  பூசினாள்.  (லூக்கா  7:46)

nee  en  thalaiyil  e'n'ney  poosavillai,  iva'loa,  en  paathangga'lil  parima'lathailam  poosinaa'l.  (lookkaa  7:46)

ஆதலால்  நான்  உனக்குச்  சொல்லுகிறேன்:  இவள்  செய்த  அநேக  பாவங்கள்  மன்னிக்கப்பட்டது;  இவள்  மிகவும்  அன்புகூர்ந்தாளே.  எவனுக்குக்  கொஞ்சம்  மன்னிக்கப்படுகிறதோ,  அவன்  கொஞ்சமாய்  அன்புகூருவான்  என்று  சொல்லி;  (லூக்கா  7:47)

aathalaal  naan  unakkuch  sollugi’rean:  iva'l  seytha  aneaga  paavangga'l  mannikkappattathu;  iva'l  migavum  anbukoornthaa'lea.  evanukkuk  kogncham  mannikkappadugi’rathoa,  avan  kognchamaay  anbukooruvaan  en’ru  solli;  (lookkaa  7:47)

அவளை  நோக்கி:  உன்  பாவங்கள்  மன்னிக்கப்பட்டது  என்றார்.  (லூக்கா  7:48)

ava'lai  noakki:  un  paavangga'l  mannikkappattathu  en’raar.  (lookkaa  7:48)

அப்பொழுது  கூடப்  பந்தியிருந்தவர்கள்:  பாவங்களை  மன்னிக்கிற  இவன்  யார்  என்று  தங்களுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  (லூக்கா  7:49)

appozhuthu  koodap  panthiyirunthavarga'l:  paavangga'lai  mannikki’ra  ivan  yaar  en’ru  thangga'lukku'l'lea  sollikko'ndaarga'l.  (lookkaa  7:49)

அவர்  ஸ்திரீயை  நோக்கி:  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது,  சமாதானத்தோடே  போ  என்றார்.  (லூக்கா  7:50)

avar  sthireeyai  noakki:  un  visuvaasam  unnai  iradchiththathu,  samaathaanaththoadea  poa  en’raar.  (lookkaa  7:50)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!