Thursday, May 05, 2016

Lookkaa 6 | லூக்கா 6 | Luke 6


பஸ்காபண்டிகையின்  இரண்டாம்  நாளைக்குப்  பின்வந்த  முதலாம்  ஓய்வுநாளிலே,  அவர்  பயிர்வழியே  நடந்துபோகையில்,  அவருடைய  சீஷர்கள்  கதிர்களைக்  கொய்து,  கைகளினால்  நிமிட்டித்  தின்றார்கள்.  (லூக்கா  6:1)

paskaapa'ndigaiyin  ira'ndaam  naa'laikkup  pinvantha  muthalaam  oayvunaa'lilea,  avar  payirvazhiyea  nadanthupoagaiyil,  avarudaiya  seesharga'l  kathirga'laik  koythu,  kaiga'linaal  nimittith  thin’raarga'l.  (lookkaa  6:1)

பரிசேயரில்  சிலர்  அவர்களை  நோக்கி:  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  நீங்கள்  ஏன்  செய்கிறீர்கள்  என்று  கேட்டார்கள்.  (லூக்கா  6:2)

pariseayaril  silar  avarga'lai  noakki:  oayvunaa'lil  seyyaththagaathathai  neengga'l  ean  seygi’reerga'l  en’ru  keattaarga'l.  (lookkaa  6:2)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  தாவீதும்  அவனோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது  செய்ததை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்  மாத்திரமே  தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தேவசமுகத்து  அப்பங்களைக்  கேட்டு  வாங்கி,  (லூக்கா  6:3)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  thaaveethum  avanoadirunthavarga'lum  pasiyaayirunthapoathu  seythathai  neengga'l  vaasikkavillaiyaa?  avan  theavanudaiya  veettil  piraveasiththu,  aasaariyar  maaththiramea  thavira  vea’roruvarum  pusikkaththagaatha  theavasamugaththu  appangga'laik  keattu  vaanggi,  (lookkaa  6:3)

தான்  புசித்ததுமன்றி,  தன்னுடனே  கூட  இருந்தவர்களுக்கும்  கொடுத்தானே  என்று  சொன்னார்.  (லூக்கா  6:4)

thaan  pusiththathuman’ri,  thannudanea  kooda  irunthavarga'lukkum  koduththaanea  en’ru  sonnaar.  (lookkaa  6:4)

மேலும்  மனுஷகுமாரன்  ஓய்வுநாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  (லூக்கா  6:5)

mealum  manushakumaaran  oayvunaa'lukkum  aa'ndavaraay  irukki’raar  en’raar.  (lookkaa  6:5)

வேறொரு  ஓய்வுநாளிலே,  அவர்  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து  உபதேசித்தார்.  அங்கே  சூம்பின  வலதுகையையுடைய  ஒரு  மனுஷன்  இருந்தான்.  (லூக்கா  6:6)

vea’roru  oayvunaa'lilea,  avar  jebaaalayaththil  piraveasiththu  ubatheasiththaar.  anggea  soombina  valathukaiyaiyudaiya  oru  manushan  irunthaan.  (lookkaa  6:6)

அப்பொழுது  வேதபாரகரும்  பரிசேயரும்  அவரிடத்தில்  குற்றம்  பிடிக்கும்படி,  ஓய்வுநாளில்  சொஸ்தமாக்குவாரோ  என்று  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.  (லூக்கா  6:7)

appozhuthu  veathapaaragarum  pariseayarum  avaridaththil  kut’ram  pidikkumpadi,  oayvunaa'lil  sosthamaakkuvaaroa  en’ru  avarmeal  noakkamaayirunthaarga'l.  (lookkaa  6:7)

அவர்களுடைய  சிந்தனைகளை  அவர்  அறிந்து,  சூம்பின  கையையுடைய  மனுஷனை  நோக்கி:  நீ  எழுந்து,  நடுவே  நில்  என்றார்.  அவன்  எழுந்து  நின்றான்.  (லூக்கா  6:8)

avarga'ludaiya  sinthanaiga'lai  avar  a’rinthu,  soombina  kaiyaiyudaiya  manushanai  noakki:  nee  ezhunthu,  naduvea  nil  en’raar.  avan  ezhunthu  nin’raan.  (lookkaa  6:8)

அப்பொழுது  இயேசு  அவர்களை  நோக்கி:  நான்  உங்களிடத்தில்  ஒன்று  கேட்கிறேன்;  ஓய்வுநாட்களில்  நன்மை  செய்வதோ,  தீமை  செய்வதோ,  ஜீவனைக்  காப்பதோ,  அழிப்பதோ,  எது  நியாயம்  என்று  கேட்டு,  (லூக்கா  6:9)

appozhuthu  iyeasu  avarga'lai  noakki:  naan  ungga'lidaththil  on’ru  keadki’rean;  oayvunaadka'lil  nanmai  seyvathoa,  theemai  seyvathoa,  jeevanaik  kaappathoa,  azhippathoa,  ethu  niyaayam  en’ru  keattu,  (lookkaa  6:9)

அவர்களெல்லாரையும்  சுற்றிப்  பார்த்து,  அந்த  மனுஷனை  நோக்கி:  உன்  கையை  நீட்டு  என்றார்.  அப்படியே  அவன்  தன்  கையை  நீட்டினான்,  உடனே  அவன்  கை  மறுகையைப்போலச்  சொஸ்தமாயிற்று.  (லூக்கா  6:10)

avarga'lellaaraiyum  sut’rip  paarththu,  antha  manushanai  noakki:  un  kaiyai  neettu  en’raar.  appadiyea  avan  than  kaiyai  neettinaan,  udanea  avan  kai  ma’rukaiyaippoalach  sosthamaayit’ru.  (lookkaa  6:10)

அவர்களோ  மூர்க்கவெறிகொண்டு,  இயேசுவை  என்ன  செய்யலாமென்று  ஒருவரோடொருவர்  ஆலோசித்தார்கள்.  (லூக்கா  6:11)

avarga'loa  moorkkave’riko'ndu,  iyeasuvai  enna  seyyalaamen’ru  oruvaroadoruvar  aaloasiththaarga'l.  (lookkaa  6:11)

அந்நாட்களிலே,  அவர்  ஜெபம்பண்ணும்படி  ஒரு  மலையின்மேல்  ஏறி,  இராமுழுவதும்  தேவனை  நோக்கி  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.  (லூக்கா  6:12)

annaadka'lilea,  avar  jebampa'n'numpadi  oru  malaiyinmeal  ea’ri,  iraamuzhuvathum  theavanai  noakki  jebampa'n'nikko'ndirunthaar.  (lookkaa  6:12)

பொழுது  விடிந்தபோது,  அவர்  தம்முடைய  சீஷர்களை  வரவழைத்து,  அவர்களில்  பன்னிரண்டுபேரைத்  தெரிந்துகொண்டு,  அவர்களுக்கு  அப்போஸ்தலர்  என்று  பேரிட்டார்.  (லூக்கா  6:13)

pozhuthu  vidinthapoathu,  avar  thammudaiya  seesharga'lai  varavazhaiththu,  avarga'lil  pannira'ndupearaith  therinthuko'ndu,  avarga'lukku  appoasthalar  en’ru  pearittaar.  (lookkaa  6:13)

அவர்கள்  யாரெனில்,  பேதுரு  என்று  தாம்  பேரிட்ட  சீமோன்,  அவன்  சகோதரனாகிய  அந்திரேயா,  யாக்கோபு,  யோவான்,  பிலிப்பு,  பற்தொலொமேயு,  (லூக்கா  6:14)

avarga'l  yaarenil,  peathuru  en’ru  thaam  pearitta  seemoan,  avan  sagoatharanaagiya  anthireayaa,  yaakkoabu,  yoavaan,  pilippu,  ba'rtholomeayu,  (lookkaa  6:14)

மத்தேயு,  தோமா,  அல்பேயுவின்  குமாரனாகிய  யாக்கோபு,  செலோத்தே  என்னப்பட்ட  சீமோன்,  (லூக்கா  6:15)

maththeayu,  thoamaa,  alpeayuvin  kumaaranaagiya  yaakkoabu,  seloaththea  ennappatta  seemoan,  (lookkaa  6:15)

யாக்கோபின்  சகோதரனாகிய  யூதா,  துரோகியான  யூதாஸ்காரியோத்து  என்பவர்களே.  (லூக்கா  6:16)

yaakkoabin  sagoatharanaagiya  yoothaa,  thuroagiyaana  yoothaaskaariyoaththu  enbavarga'lea.  (lookkaa  6:16)

பின்பு  அவர்  அவர்களுடனேகூட  இறங்கி,  சமனான  ஒரு  இடத்திலே  நின்றார்.  அங்கே  அவருடைய  சீஷரில்  அநேகம்பேரும்  அவருடைய  உபதேசத்தைக்  கேட்கும்படிக்கும்,  தங்கள்  வியாதிகளினின்று  குணமாக்கப்படும்படிக்கும்,  யூதேயாதேசத்துத்  திசைகள்  யாவற்றிலிருந்தும்,  எருசலேம்  நகரத்திலிருந்தும்,  தீரு  சீதோன்  பட்டணங்கள்  இருக்கிற  கடலோரத்திலிருந்தும்  வந்தவர்களாகிய  திரளான  ஜனங்களும்  இருந்தார்கள்.  (லூக்கா  6:17)

pinbu  avar  avarga'ludaneakooda  i’ranggi,  samanaana  oru  idaththilea  nin’raar.  anggea  avarudaiya  seesharil  aneagampearum  avarudaiya  ubatheasaththaik  keadkumpadikkum,  thangga'l  viyaathiga'linin’ru  ku'namaakkappadumpadikkum,  yootheayaatheasaththuth  thisaiga'l  yaavat’rilirunthum,  erusaleam  nagaraththilirunthum,  theeru  seethoan  patta'nangga'l  irukki’ra  kadaloaraththilirunthum  vanthavarga'laagiya  thira'laana  janangga'lum  irunthaarga'l.  (lookkaa  6:17)

அசுத்த  ஆவிகளால்  வாதிக்கப்பட்டவர்களும்  வந்து,  ஆரோக்கியமடைந்தார்கள்.  (லூக்கா  6:18)

asuththa  aaviga'laal  vaathikkappattavarga'lum  vanthu,  aaroakkiyamadainthaarga'l.  (lookkaa  6:18)

அவரிடத்திலிருந்து  வல்லமை  புறப்பட்டு  எல்லாரையும்  குணமாக்கினபடியினாலே,  ஜனங்கள்  யாவரும்  அவரைத்  தொடும்படிக்கு  வகைதேடினார்கள்.  (லூக்கா  6:19)

avaridaththilirunthu  vallamai  pu’rappattu  ellaaraiyum  ku'namaakkinapadiyinaalea,  janangga'l  yaavarum  avaraith  thodumpadikku  vagaitheadinaarga'l.  (lookkaa  6:19)

அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கிப்பார்த்து:  தரித்திரராகிய  நீங்கள்  பாக்கியவான்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுடையது.  (லூக்கா  6:20)

appozhuthu  avar  thammudaiya  seesharga'lai  noakkippaarththu:  thariththiraraagiya  neengga'l  baakkiyavaanga'l;  theavanudaiya  raajyam  ungga'ludaiyathu.  (lookkaa  6:20)

இப்பொழுது  பசியாயிருக்கிற  நீங்கள்  பாக்கியவான்கள்;  திருப்தியடைவீர்கள்.  இப்பொழுது  அழுகிற  நீங்கள்  பாக்கியவான்கள்;  இனி  நகைப்பீர்கள்.  (லூக்கா  6:21)

ippozhuthu  pasiyaayirukki’ra  neengga'l  baakkiyavaanga'l;  thirupthiyadaiveerga'l.  ippozhuthu  azhugi’ra  neengga'l  baakkiyavaanga'l;  ini  nagaippeerga'l.  (lookkaa  6:21)

மனுஷகுமாரன்  நிமித்தமாக  ஜனங்கள்  உங்களைப்  பகைத்து,  உங்களைப்  புறம்பாக்கி,  உங்களை  நிந்தித்து,  உங்கள்  நாமத்தைப்  பொல்லாததென்று  தள்ளிவிடும்போது  நீங்கள்  பாக்கியவான்களாயிருப்பீர்கள்.  (லூக்கா  6:22)

manushakumaaran  nimiththamaaga  janangga'l  ungga'laip  pagaiththu,  ungga'laip  pu’rambaakki,  ungga'lai  ninthiththu,  ungga'l  naamaththaip  pollaathathen’ru  tha'l'lividumpoathu  neengga'l  baakkiyavaanga'laayiruppeerga'l.  (lookkaa  6:22)

அந்நாளிலே  நீங்கள்  சந்தோஷப்பட்டுக்  களிகூருங்கள்;  பரலோகத்தில்  உங்கள்  பலன்  மிகுதியாயிருக்கும்;  அவர்களுடைய  பிதாக்கள்  தீர்க்கதரிசிகளுக்கும்  அப்படியே  செய்தார்கள்.  (லூக்கா  6:23)

annaa'lilea  neengga'l  santhoashappattuk  ka'likoorungga'l;  paraloagaththil  ungga'l  palan  miguthiyaayirukkum;  avarga'ludaiya  pithaakka'l  theerkkatharisiga'lukkum  appadiyea  seythaarga'l.  (lookkaa  6:23)

ஐசுவரியவான்களாகிய  உங்களுக்கு  ஐயோ;  உங்கள்  ஆறுதலை  நீங்கள்  அடைந்து  தீர்ந்தது.  (லூக்கா  6:24)

aisuvariyavaanga'laagiya  ungga'lukku  aiyoa;  ungga'l  aa’ruthalai  neengga'l  adainthu  theernthathu.  (lookkaa  6:24)

திருப்தியுள்ளவர்களாயிருக்கிற  உங்களுக்கு  ஐயோ;  பசியாயிருப்பீர்கள்.  இப்பொழுது  நகைக்கிற  உங்களுக்கு  ஐயோ;  இனி  துக்கப்பட்டு  அழுவீர்கள்.  (லூக்கா  6:25)

thirupthiyu'l'lavarga'laayirukki’ra  ungga'lukku  aiyoa;  pasiyaayiruppeerga'l.  ippozhuthu  nagaikki’ra  ungga'lukku  aiyoa;  ini  thukkappattu  azhuveerga'l.  (lookkaa  6:25)

எல்லா  மனுஷரும்  உங்களைக்  குறித்துப்  புகழ்ச்சியாய்ப்  பேசும்போது  உங்களுக்கு  ஐயோ;  அவர்கள்  பிதாக்கள்  கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும்  அப்படியே  செய்தார்கள்.  (லூக்கா  6:26)

ellaa  manusharum  ungga'laik  ku’riththup  pugazhchchiyaayp  peasumpoathu  ungga'lukku  aiyoa;  avarga'l  pithaakka'l  ka'l'laththeerkkatharisiga'lukkum  appadiyea  seythaarga'l.  (lookkaa  6:26)

எனக்குச்  செவிகொடுக்கிற  உங்களுக்கு  நான்  சொல்லுகிறேன்:  உங்கள்  சத்துருக்களைச்  சிநேகியுங்கள்;  உங்களைப்  பகைக்கிறவர்களுக்கு  நன்மைசெய்யுங்கள்.  (லூக்கா  6:27)

enakkuch  sevikodukki’ra  ungga'lukku  naan  sollugi’rean:  ungga'l  saththurukka'laich  sineagiyungga'l;  ungga'laip  pagaikki’ravarga'lukku  nanmaiseyyungga'l.  (lookkaa  6:27)

உங்களைச்  சபிக்கிறவர்களை  ஆசீர்வதியுங்கள்;  உங்களை  நிந்திக்கிறவர்களுக்காக  ஜெபம்  பண்ணுங்கள்.  (லூக்கா  6:28)

ungga'laich  sabikki’ravarga'lai  aaseervathiyungga'l;  ungga'lai  ninthikki’ravarga'lukkaaga  jebam  pa'n'nungga'l.  (lookkaa  6:28)

உன்னை  ஒரு  கன்னத்தில்  அறைகிறவனுக்கு  மறு  கன்னத்தையும்  கொடு;  உன்  அங்கியை  எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு  உன்  வஸ்திரத்தையும்  எடுத்துக்கொள்ளத்  தடைபண்ணாதே.  (லூக்கா  6:29)

unnai  oru  kannaththil  a’raigi’ravanukku  ma’ru  kannaththaiyum  kodu;  un  anggiyai  eduththukko'l'lugi’ravanukku  un  vasthiraththaiyum  eduththukko'l'lath  thadaipa'n'naathea.  (lookkaa  6:29)

உன்னிடத்தில்  கேட்கிற  எவனுக்கும்  கொடு;  உன்னுடையதை  எடுத்துக்  கொள்ளுகிறவனிடத்தில்  அதைத்  திரும்பக்  கேளாதே.  (லூக்கா  6:30)

unnidaththil  keadki’ra  evanukkum  kodu;  unnudaiyathai  eduththuk  ko'l'lugi’ravanidaththil  athaith  thirumbak  kea'laathea.  (lookkaa  6:30)

மனுஷர்  உங்களுக்கு  எப்படிச்  செய்ய  வேண்டுமென்று  விரும்புகிறீர்களோ,  அப்படியே  நீங்களும்  அவர்களுக்குச்  செய்யுங்கள்.  (லூக்கா  6:31)

manushar  ungga'lukku  eppadich  seyya  vea'ndumen’ru  virumbugi’reerga'loa,  appadiyea  neengga'lum  avarga'lukkuch  seyyungga'l.  (lookkaa  6:31)

உங்களைச்  சிநேகிக்கிறவர்களையே  நீங்கள்  சிநேகித்தால்,  உங்களுக்குப்  பலன்  என்ன?  பாவிகளும்  தங்களைச்  சிநேகிக்கிறவர்களைச்  சிநேகிக்கிறார்களே.  (லூக்கா  6:32)

ungga'laich  sineagikki’ravarga'laiyea  neengga'l  sineagiththaal,  ungga'lukkup  palan  enna?  paaviga'lum  thangga'laich  sineagikki’ravarga'laich  sineagikki’raarga'lea.  (lookkaa  6:32)

உங்களுக்கு  நன்மைசெய்கிறவர்களுக்கே  நீங்கள்  நன்மைசெய்தால்,  உங்களுக்குப்  பலன்  என்ன?  பாவிகளும்  அப்படிச்  செய்கிறார்களே.  (லூக்கா  6:33)

ungga'lukku  nanmaiseygi’ravarga'lukkea  neengga'l  nanmaiseythaal,  ungga'lukkup  palan  enna?  paaviga'lum  appadich  seygi’raarga'lea.  (lookkaa  6:33)

திரும்பக்  கொடுப்பார்களென்று  நம்பி  நீங்கள்  கடன்கொடுத்தால்  உங்களுக்குப்  பலன்  என்ன?  திரும்பத்  தங்களுக்குக்  கொடுக்கப்படும்படியாகப்  பாவிகளும்  பாவிகளுக்குக்  கடன்கொடுக்கிறார்களே.  (லூக்கா  6:34)

thirumbak  koduppaarga'len’ru  nambi  neengga'l  kadankoduththaal  ungga'lukkup  palan  enna?  thirumbath  thangga'lukkuk  kodukkappadumpadiyaagap  paaviga'lum  paaviga'lukkuk  kadankodukki’raarga'lea.  (lookkaa  6:34)

உங்கள்  சத்துருக்களைச்  சிநேகியுங்கள்,  நன்மைசெய்யுங்கள்,  கைம்மாறு  கருதாமல்  கடன்  கொடுங்கள்;  அப்பொழுது  உங்கள்  பலன்  மிகுதியாயிருக்கும்,  உன்னதமானவருக்கு  நீங்கள்  பிள்ளைகளாயிருப்பீர்கள்;  அவர்  நன்றியறியாதவர்களுக்கும்  துரோகிகளுக்கும்  நன்மை  செய்கிறாரே.  (லூக்கா  6:35)

ungga'l  saththurukka'laich  sineagiyungga'l,  nanmaiseyyungga'l,  kaimmaa’ru  karuthaamal  kadan  kodungga'l;  appozhuthu  ungga'l  palan  miguthiyaayirukkum,  unnathamaanavarukku  neengga'l  pi'l'laiga'laayiruppeerga'l;  avar  nan’riya’riyaathavarga'lukkum  thuroagiga'lukkum  nanmai  seygi’raarea.  (lookkaa  6:35)

ஆகையால்  உங்கள்  பிதா  இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல,  நீங்களும்  இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.  (லூக்கா  6:36)

aagaiyaal  ungga'l  pithaa  irakkamu'l'lavaraayirukki’rathupoala,  neengga'lum  irakkamu'l'lavarga'laayirungga'l.  (lookkaa  6:36)

மற்றவர்களைக்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்;  அப்பொழுது  நீங்களும்  குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதிருப்பீர்கள்;  மற்றவர்களை  ஆக்கினைக்குள்ளாகும்படி  தீர்க்காதிருங்கள்,  அப்பொழுது  நீங்களும்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதிருப்பீர்கள்;  விடுதலைபண்ணுங்கள்,  அப்பொழுது  நீங்களும்  விடுதலைபண்ணப்படுவீர்கள்.  (லூக்கா  6:37)

mat’ravarga'laik  kut’ravaa'liga'len’ru  theerkkaathirungga'l;  appozhuthu  neengga'lum  kut’ravaa'liga'len’ru  theerkkappadaathiruppeerga'l;  mat’ravarga'lai  aakkinaikku'l'laagumpadi  theerkkaathirungga'l,  appozhuthu  neengga'lum  aakkinaikku'l'laagath  theerkkappadaathiruppeerga'l;  viduthalaipa'n'nungga'l,  appozhuthu  neengga'lum  viduthalaipa'n'nappaduveerga'l.  (lookkaa  6:37)

கொடுங்கள்,  அப்பொழுது  உங்களுக்கும்  கொடுக்கப்படும்;  அமுக்கிக்  குலுக்கிச்  சரிந்து  விழும்படி  நன்றாய்  அளந்து,  உங்கள்  மடியிலே  போடுவார்கள்;  நீங்கள்  எந்த  அளவினால்  அளக்கிறீர்களோ  அந்த  அளவினால்  உங்களுக்கும்  அளக்கப்படும்  என்றார்.  (லூக்கா  6:38)

kodungga'l,  appozhuthu  ungga'lukkum  kodukkappadum;  amukkik  kulukkich  sarinthu  vizhumpadi  nan’raay  a'lanthu,  ungga'l  madiyilea  poaduvaarga'l;  neengga'l  entha  a'lavinaal  a'lakki’reerga'loa  antha  a'lavinaal  ungga'lukkum  a'lakkappadum  en’raar.  (lookkaa  6:38)

பின்னும்  அவர்  ஒரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  குருடனுக்குக்  குருடன்  வழிகாட்டக்கூடுமோ?  இருவரும்  பள்ளத்தில்  விழுவார்கள்  அல்லவா?  (லூக்கா  6:39)

pinnum  avar  oru  uvamaiyai  avarga'lukkuch  sonnaar:  kurudanukkuk  kurudan  vazhikaattakkoodumoa?  iruvarum  pa'l'laththil  vizhuvaarga'l  allavaa?  (lookkaa  6:39)

சீஷன்  தன்  குருவுக்கு  மேற்பட்டவனல்ல,  தேறினவன்  எவனும்  தன்  குருவைப்போலிருப்பான்.  (லூக்கா  6:40)

seeshan  than  kuruvukku  mea’rpattavanalla,  thea’rinavan  evanum  than  kuruvaippoaliruppaan.  (lookkaa  6:40)

நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பைப்  பார்க்கிறதென்ன?  (லூக்கா  6:41)

nee  un  ka'n'nilirukki’ra  uththiraththai  u'naraamal,  un  sagoatharan  ka'n'nilirukki’ra  thurumbaip  paarkki’rathenna?  (lookkaa  6:41)

அல்லது  நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரனை  நோக்கி:  சகோதரனே,  நான்  உன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போடட்டும்  என்று  நீ  சொல்வதெப்படி?  மாயக்காரனே!  முன்பு  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  எடுத்துப்போடு,  பின்பு  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போட  வகைபார்ப்பாய்.  (லூக்கா  6:42)

allathu  nee  un  ka'n'nilirukki’ra  uththiraththai  u'naraamal,  un  sagoatharanai  noakki:  sagoatharanea,  naan  un  ka'n'nilirukki’ra  thurumbai  eduththuppoadattum  en’ru  nee  solvatheppadi?  maayakkaaranea!  munbu  un  ka'n'nilirukki’ra  uththiraththai  eduththuppoadu,  pinbu  un  sagoatharan  ka'n'nilirukki’ra  thurumbai  eduththuppoada  vagaipaarppaay.  (lookkaa  6:42)

நல்ல  மரமானது  கெட்ட  கனி  கொடாது,  கெட்ட  மரமானது  நல்ல  கனி  கொடாது.  (லூக்கா  6:43)

nalla  maramaanathu  ketta  kani  kodaathu,  ketta  maramaanathu  nalla  kani  kodaathu.  (lookkaa  6:43)

அந்தந்த  மரம்  அதனதன்  கனியினால்  அறியப்படும்;  முட்செடிகளில்  அத்திப்பழங்களைப்  பறிக்கிறதுமில்லை,  நெருஞ்சிச்செடியில்  திராட்சப்பழங்களைப்  பறிக்கிறதுமில்லை.  (லூக்கா  6:44)

anthantha  maram  athanathan  kaniyinaal  a’riyappadum;  mudchediga'lil  aththippazhangga'laip  pa’rikki’rathumillai,  nerugnchichsediyil  thiraadchappazhangga'laip  pa’rikki’rathumillai.  (lookkaa  6:44)

நல்ல  மனுஷன்  தன்  இருதயமாகிய  நல்ல  பொக்கிஷத்திலிருந்து  நல்லதை  எடுத்துக்  காட்டுகிறான்;  பொல்லாத  மனுஷன்  தன்  இருதயமாகிய  பொல்லாத  பொக்கிஷத்திலிருந்து  பொல்லாததை  எடுத்துக்காட்டுகிறான்;  இருதயத்தின்  நிறைவினால்  அவனவன்  வாய்  பேசும்.  (லூக்கா  6:45)

nalla  manushan  than  iruthayamaagiya  nalla  pokkishaththilirunthu  nallathai  eduththuk  kaattugi’raan;  pollaatha  manushan  than  iruthayamaagiya  pollaatha  pokkishaththilirunthu  pollaathathai  eduththukkaattugi’raan;  iruthayaththin  ni’raivinaal  avanavan  vaay  peasum.  (lookkaa  6:45)

என்னை  ஆண்டவரே!  ஆண்டவரே!  என்று  நீங்கள்  சொல்லியும்,  நான்  சொல்லுகிறபடி  நீங்கள்  செய்யாமற்போகிறதென்ன?  (லூக்கா  6:46)

ennai  aa'ndavarea!  aa'ndavarea!  en’ru  neengga'l  solliyum,  naan  sollugi’rapadi  neengga'l  seyyaama’rpoagi’rathenna?  (lookkaa  6:46)

என்னிடத்தில்  வந்து,  என்  வார்த்தைகளைக்  கேட்டு,  அவைகளின்படி  செய்கிறவன்  யாருக்கு  ஒப்பாயிருக்கிறானென்று  உங்களுக்குக்  காண்பிப்பேன்.  (லூக்கா  6:47)

ennidaththil  vanthu,  en  vaarththaiga'laik  keattu,  avaiga'linpadi  seygi’ravan  yaarukku  oppaayirukki’raanen’ru  ungga'lukkuk  kaa'nbippean.  (lookkaa  6:47)

ஆழமாய்த்  தோண்டி,  கற்பாறையின்மேல்  அஸ்திபாரம்  போட்டு,  வீடுகட்டுகிற  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான்;  பெருவெள்ளம்  வந்து,  நீரோட்டம்  அந்த  வீட்டின்மேல்  மோதியும்,  அதை  அசைக்கக்  கூடாமற்போயிற்று;  ஏனென்றால்  அது  கன்மலையின்மேல்  அஸ்திபாரம்  போடப்பட்டிருந்தது.  (லூக்கா  6:48)

aazhamaayth  thoa'ndi,  ka’rpaa’raiyinmeal  asthibaaram  poattu,  veedukattugi’ra  manushanukku  oppaayirukki’raan;  peruve'l'lam  vanthu,  neeroattam  antha  veettinmeal  moathiyum,  athai  asaikkak  koodaama’rpoayit’ru;  eanen’raal  athu  kanmalaiyinmeal  asthibaaram  poadappattirunthathu.  (lookkaa  6:48)

என்  வார்த்தைகளைக்  கேட்டும்  அவைகளின்படி  செய்யாதவனோ  அஸ்திபாரமில்லாமல்  மண்ணின்மேல்  வீடுகட்டினவனுக்கு  ஒப்பாயிருக்கிறான்;  நீரோட்டம்  அதின்மேல்  மோதினவுடனே  அது  விழுந்தது;  விழுந்து  முழுவதும்  அழிந்தது  என்றார்.  (லூக்கா  6:49)

en  vaarththaiga'laik  keattum  avaiga'linpadi  seyyaathavanoa  asthibaaramillaamal  ma'n'ninmeal  veedukattinavanukku  oppaayirukki’raan;  neeroattam  athinmeal  moathinavudanea  athu  vizhunthathu;  vizhunthu  muzhuvathum  azhinthathu  en’raar.  (lookkaa  6:49)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!