Thursday, May 05, 2016

Lookkaa 5 | லூக்கா 5 | Luke 5


பின்பு  அவர்  கெனேசரேத்துக்  கடலருகே  நின்றபோது,  திரளான  ஜனங்கள்  தேவவசனத்தைக்  கேட்கும்படி  அவரிடத்தில்  நெருங்கினார்கள்.  (லூக்கா  5:1)

pinbu  avar  keneasareaththuk  kadalarugea  nin’rapoathu,  thira'laana  janangga'l  theavavasanaththaik  keadkumpadi  avaridaththil  nerungginaarga'l.  (lookkaa  5:1)

அப்பொழுது  கடற்கரையிலே  நின்ற  இரண்டு  படவுகளைக்  கண்டார்.  மீன்பிடிக்கிறவர்கள்  அவைகளை  விட்டிறங்கி,  வலைகளை  அலைசிக்கொண்டிருந்தார்கள்.  (லூக்கா  5:2)

appozhuthu  kada’rkaraiyilea  nin’ra  ira'ndu  padavuga'laik  ka'ndaar.  meenpidikki’ravarga'l  avaiga'lai  vitti’ranggi,  valaiga'lai  alaisikko'ndirunthaarga'l.  (lookkaa  5:2)

அப்பொழுது  அந்தப்  படவுகளில்  ஒன்றில்  ஏறினார்,  அது  சீமோனுடையதாயிருந்தது;  அதைக்  கரையிலிருந்து  சற்றே  தள்ளும்படி  அவனைக்  கேட்டுக்கொண்டு,  அந்தப்  படவில்  உட்கார்ந்து,  ஜனங்களுக்குப்  போதகம்பண்ணினார்.  (லூக்கா  5:3)

appozhuthu  anthap  padavuga'lil  on’ril  ea’rinaar,  athu  seemoanudaiyathaayirunthathu;  athaik  karaiyilirunthu  sat’rea  tha'l'lumpadi  avanaik  keattukko'ndu,  anthap  padavil  udkaarnthu,  janangga'lukkup  poathagampa'n'ninaar.  (lookkaa  5:3)

அவர்  போதகம்பண்ணி  முடித்த  பின்பு  சீமோனை  நோக்கி:  ஆழத்திலே  தள்ளிக்கொண்டுபோய்,  மீன்பிடிக்கும்படி  உங்கள்  வலைகளைப்  போடுங்கள்  என்றார்.  (லூக்கா  5:4)

avar  poathagampa'n'ni  mudiththa  pinbu  seemoanai  noakki:  aazhaththilea  tha'l'likko'ndupoay,  meenpidikkumpadi  ungga'l  valaiga'laip  poadungga'l  en’raar.  (lookkaa  5:4)

அதற்குச்  சீமோன்:  ஐயரே,  இராமுழுவதும்  நாங்கள்  பிரயாசப்பட்டும்  ஒன்றும்  அகப்படவில்லை;  ஆகிலும்  உம்முடைய  வார்த்தையின்படியே  வலையைப்  போடுகிறேன்  என்றான்.  (லூக்கா  5:5)

atha’rkuch  seemoan:  aiyarea,  iraamuzhuvathum  naangga'l  pirayaasappattum  on’rum  agappadavillai;  aagilum  ummudaiya  vaarththaiyinpadiyea  valaiyaip  poadugi’rean  en’raan.  (lookkaa  5:5)

அந்தப்படியே  அவர்கள்  செய்து,  தங்கள்  வலை  கிழிந்துபோகத்தக்கதாக  மிகுதியான  மீன்களைப்  பிடித்தார்கள்.  (லூக்கா  5:6)

anthappadiyea  avarga'l  seythu,  thangga'l  valai  kizhinthupoagaththakkathaaga  miguthiyaana  meenga'laip  pidiththaarga'l.  (lookkaa  5:6)

அப்பொழுது  மற்றப்  படவிலிருந்த  கூட்டாளிகள்  வந்து  தங்களுக்கு  உதவிசெய்யும்படிக்குச்  சைகைகாட்டினார்கள்;  அவர்கள்  வந்து,  இரண்டு  படவுகளும்  அமிழத்தக்கதாக  நிரப்பினார்கள்.  (லூக்கா  5:7)

appozhuthu  mat’rap  padaviliruntha  koottaa'liga'l  vanthu  thangga'lukku  uthaviseyyumpadikkuch  saigaikaattinaarga'l;  avarga'l  vanthu,  ira'ndu  padavuga'lum  amizhaththakkathaaga  nirappinaarga'l.  (lookkaa  5:7)

சீமோன்  பேதுரு  அதைக்  கண்டு,  இயேசுவின்  பாதத்தில்  விழுந்து:  ஆண்டவரே,  நான்  பாவியான  மனுஷன்,  நீர்  என்னைவிட்டுப்  போகவேண்டும்  என்றான்.  (லூக்கா  5:8)

seemoan  peathuru  athaik  ka'ndu,  iyeasuvin  paathaththil  vizhunthu:  aa'ndavarea,  naan  paaviyaana  manushan,  neer  ennaivittup  poagavea'ndum  en’raan.  (lookkaa  5:8)

அவர்கள்  திரளான  மீன்களைப்  பிடித்ததினிமித்தம்,  அவனுக்கும்  அவனோடுகூட  இருந்த  யாவருக்கும்  பிரமிப்புண்டானபடியினால்  அப்படிச்  சொன்னான்.  (லூக்கா  5:9)

avarga'l  thira'laana  meenga'laip  pidiththathinimiththam,  avanukkum  avanoadukooda  iruntha  yaavarukkum  piramippu'ndaanapadiyinaal  appadich  sonnaan.  (lookkaa  5:9)

சீமோனுக்குக்  கூட்டாளிகளான  செபெதேயுவின்  குமாரராகிய  யாக்கோபும்  யோவானும்  அந்தப்படியே  பிரமித்தார்கள்.  அப்பொழுது  இயேசு  சீமோனை  நோக்கி:  பயப்படாதே,  இதுமுதல்  நீ  மனுஷரைப்  பிடிக்கிறவனாயிருப்பாய்  என்றார்.  (லூக்கா  5:10)

seemoanukkuk  koottaa'liga'laana  sebetheayuvin  kumaararaagiya  yaakkoabum  yoavaanum  anthappadiyea  piramiththaarga'l.  appozhuthu  iyeasu  seemoanai  noakki:  bayappadaathea,  ithumuthal  nee  manusharaip  pidikki’ravanaayiruppaay  en’raar.  (lookkaa  5:10)

அவர்கள்  படவுகளைக்  கரையிலே  கொண்டுபோய்  நிறுத்தி,  எல்லாவற்றையும்  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (லூக்கா  5:11)

avarga'l  padavuga'laik  karaiyilea  ko'ndupoay  ni’ruththi,  ellaavat’raiyum  vittu,  avarukkup  pinsen’raarga'l.  (lookkaa  5:11)

பின்பு  அவர்  ஒரு  பட்டணத்தில்  இருக்கையில்,  குஷ்டரோகம்  நிறைந்த  ஒரு  மனுஷன்  இயேசுவைக்  கண்டு,  முகங்குப்புற  விழுந்து:  ஆண்டவரே,  உமக்குச்  சித்தமானால்,  என்னைச்  சுத்தமாக்க  உம்மாலே  ஆகும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டான்.  (லூக்கா  5:12)

pinbu  avar  oru  patta'naththil  irukkaiyil,  kushdaroagam  ni’raintha  oru  manushan  iyeasuvaik  ka'ndu,  mugangkuppu’ra  vizhunthu:  aa'ndavarea,  umakkuch  siththamaanaal,  ennaich  suththamaakka  ummaalea  aagum  en’ru  avarai  vea'ndikko'ndaan.  (lookkaa  5:12)

அவர்  தமது  கையை  நீட்டி,  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்;  உடனே  குஷ்டரோகம்  அவனை  விட்டு  நீங்கிற்று.  (லூக்கா  5:13)

avar  thamathu  kaiyai  neetti,  avanaith  thottu:  enakkuch  siththamu'ndu,  suththamaagu  en’raar;  udanea  kushdaroagam  avanai  vittu  neenggit’ru.  (lookkaa  5:13)

அவர்  அவனை  நோக்கி:  நீ  இதை  ஒருவருக்கும்  சொல்லாமல்,  போய்,  உன்னை  ஆசாரியனுக்குக்  காண்பித்து,  நீ  சுத்தமானதினிமித்தம்,  மோசே  கட்டளையிட்டபடியே,  அவர்களுக்குச்  சாட்சியாகப்  பலி  செலுத்து  என்று  கட்டளையிட்டார்.  (லூக்கா  5:14)

avar  avanai  noakki:  nee  ithai  oruvarukkum  sollaamal,  poay,  unnai  aasaariyanukkuk  kaa'nbiththu,  nee  suththamaanathinimiththam,  moasea  katta'laiyittapadiyea,  avarga'lukkuch  saadchiyaagap  bali  seluththu  en’ru  katta'laiyittaar.  (lookkaa  5:14)

அப்படியிருந்தும்  அவருடைய  கீர்த்தி  அதிகமாகப்  பரம்பிற்று.  திரளான  ஜனங்கள்  அவருடைய  உபதேசத்தைக்  கேட்பதற்கும்  அவராலே  தங்கள்  பிணிகள்  நீங்கிச்  சவுக்கியமடைவதற்கும்  கூடிவந்தார்கள்.  (லூக்கா  5:15)

appadiyirunthum  avarudaiya  keerththi  athigamaagap  parambit’ru.  thira'laana  janangga'l  avarudaiya  ubatheasaththaik  keadpatha’rkum  avaraalea  thangga'l  pi'niga'l  neenggich  savukkiyamadaivatha’rkum  koodivanthaarga'l.  (lookkaa  5:15)

அவரோ  வனாந்தரத்தில்  தனித்துப்  போய்,  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.  (லூக்கா  5:16)

avaroa  vanaantharaththil  thaniththup  poay,  jebampa'n'nikko'ndirunthaar.  (lookkaa  5:16)

பின்பு  ஒருநாள்  அவர்  உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது,  கலிலேயா  யூதேயா  நாடுகளிலுள்ள  சகல  கிராமங்களிலும்,  எருசலேம்  நகரத்திலுமிருந்து  வந்த  பரிசேயரும்  நியாயசாஸ்திரிகளும்  உட்கார்ந்திருந்தார்கள்;  அப்பொழுது  பிணியாளிகளைக்  குணமாக்கத்தக்கதாகக்  கர்த்தருடைய  வல்லமை  விளங்கிற்று.  (லூக்கா  5:17)

pinbu  orunaa'l  avar  ubatheasiththukko'ndirukki’rapoathu,  kalileayaa  yootheayaa  naaduga'lilu'l'la  sagala  kiraamangga'lilum,  erusaleam  nagaraththilumirunthu  vantha  pariseayarum  niyaayasaasthiriga'lum  udkaarnthirunthaarga'l;  appozhuthu  pi'niyaa'liga'laik  ku'namaakkaththakkathaagak  karththarudaiya  vallamai  vi'langgit’ru.  (lookkaa  5:17)

அப்பொழுது  சில  மனுஷர்  திமிர்வாதக்காரன்  ஒருவனைப்  படுக்கையோடே  எடுத்துக்கொண்டுவந்து,  அவனை  உள்ளே  கொண்டுபோகவும்  அவர்  முன்பாக  வைக்கவும்  வகைதேடினார்கள்.  (லூக்கா  5:18)

appozhuthu  sila  manushar  thimirvaathakkaaran  oruvanaip  padukkaiyoadea  eduththukko'nduvanthu,  avanai  u'l'lea  ko'ndupoagavum  avar  munbaaga  vaikkavum  vagaitheadinaarga'l.  (lookkaa  5:18)

ஜனக்கூட்டம்  மிகுதியாயிருந்தபடியால்  அவனை  உள்ளே  கொண்டுபோகிறதற்கு  வகைகாணாமல்,  வீட்டின்மேல்  ஏறி,  தட்டோடுகள்  வழியாய்  ஜனங்களின்  மத்தியில்  இயேசுவுக்கு  முன்பாக  அவனைப்  படுக்கையோடே  இறக்கினார்கள்.  (லூக்கா  5:19)

janakkoottam  miguthiyaayirunthapadiyaal  avanai  u'l'lea  ko'ndupoagi’ratha’rku  vagaikaa'naamal,  veettinmeal  ea’ri,  thattoaduga'l  vazhiyaay  janangga'lin  maththiyil  iyeasuvukku  munbaaga  avanaip  padukkaiyoadea  i’rakkinaarga'l.  (lookkaa  5:19)

அவர்களுடைய  விசுவாசத்தை  அவர்  கண்டு,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  மனுஷனே,  உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்றார்.  (லூக்கா  5:20)

avarga'ludaiya  visuvaasaththai  avar  ka'ndu,  thimirvaathakkaaranai  noakki:  manushanea,  un  paavangga'l  unakku  mannikkappattathu  en’raar.  (lookkaa  5:20)

அப்பொழுது  வேதபாரகரும்  பரிசேயரும்  யோசனைபண்ணி,  தேவதூஷணம்  சொல்லுகிற  இவன்  யார்?  தேவன்  ஒருவரேயன்றிப்  பாவங்களை  மன்னிக்கத்தக்கவர்  யார்  என்றார்கள்.  (லூக்கா  5:21)

appozhuthu  veathapaaragarum  pariseayarum  yoasanaipa'n'ni,  theavathoosha'nam  sollugi’ra  ivan  yaar?  theavan  oruvareayan’rip  paavangga'lai  mannikkaththakkavar  yaar  en’raarga'l.  (lookkaa  5:21)

இயேசு  அவர்கள்  சிந்தனைகளை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  உங்கள்  இருதயங்களில்  நீங்கள்  சிந்திக்கிறதென்ன?  (லூக்கா  5:22)

iyeasu  avarga'l  sinthanaiga'lai  a’rinthu,  avarga'lai  noakki:  ungga'l  iruthayangga'lil  neengga'l  sinthikki’rathenna?  (lookkaa  5:22)

உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்று  சொல்வதோ,  எழுந்து  நடவென்று  சொல்வதோ,  எது  எளிது?  (லூக்கா  5:23)

un  paavangga'l  unakku  mannikkappattathu  en’ru  solvathoa,  ezhunthu  nadaven’ru  solvathoa,  ethu  e'lithu?  (lookkaa  5:23)

பூமியிலே  பாவங்களை  மன்னிக்க  மனுஷகுமாரனுக்கு  அதிகாரம்  உண்டென்பதை  நீங்கள்  அறியவேண்டும்  என்று  சொல்லி,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  நீ  எழுந்து,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  உன்  வீட்டுக்குப்  போ  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  5:24)

boomiyilea  paavangga'lai  mannikka  manushakumaaranukku  athigaaram  u'ndenbathai  neengga'l  a’riyavea'ndum  en’ru  solli,  thimirvaathakkaaranai  noakki:  nee  ezhunthu,  un  padukkaiyai  eduththukko'ndu,  un  veettukkup  poa  en’ru  unakkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  5:24)

உடனே  அவன்  அவர்களுக்கு  முன்பாக  எழுந்து,  தன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  தேவனை  மகிமைப்படுத்தி,  தன்  வீட்டுக்குப்  போனான்.  (லூக்கா  5:25)

udanea  avan  avarga'lukku  munbaaga  ezhunthu,  than  padukkaiyai  eduththukko'ndu,  theavanai  magimaippaduththi,  than  veettukkup  poanaan.  (lookkaa  5:25)

அதினாலே  எல்லாரும்  ஆச்சரியப்பட்டு,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்;  அல்லாமலும்,  அவர்கள்  பயம்  நிறைந்தவர்களாகி,  அதிசயமான  காரியங்களை  இன்று  கண்டோம்  என்றார்கள்.  (லூக்கா  5:26)

athinaalea  ellaarum  aachchariyappattu,  theavanai  magimaippaduththinaarga'l;  allaamalum,  avarga'l  bayam  ni’rainthavarga'laagi,  athisayamaana  kaariyangga'lai  in’ru  ka'ndoam  en’raarga'l.  (lookkaa  5:26)

இவைகளுக்குப்  பின்பு,  அவர்  புறப்பட்டு,  ஆயத்துறையில்  உட்கார்ந்திருந்த  லேவி  என்னும்  பேருடைய  ஒரு  ஆயக்காரனைக்  கண்டு:  எனக்குப்  பின்சென்று  வா  என்றார்.  (லூக்கா  5:27)

ivaiga'lukkup  pinbu,  avar  pu’rappattu,  aayaththu’raiyil  udkaarnthiruntha  leavi  ennum  pearudaiya  oru  aayakkaaranaik  ka'ndu:  enakkup  pinsen’ru  vaa  en’raar.  (lookkaa  5:27)

அவன்  எல்லாவற்றையும்  விட்டு,  எழுந்து,  அவருக்குப்  பின்சென்றான்.  (லூக்கா  5:28)

avan  ellaavat’raiyum  vittu,  ezhunthu,  avarukkup  pinsen’raan.  (lookkaa  5:28)

அந்த  லேவி  என்பவன்  தன்  வீட்டிலே  அவருக்குப்  பெரிய  விருந்துபண்ணினான்.  அநேக  ஆயக்காரரும்  மற்றவர்களும்  அவர்களோடேகூடப்  பந்தியிருந்தார்கள்.  (லூக்கா  5:29)

antha  leavi  enbavan  than  veettilea  avarukkup  periya  virunthupa'n'ninaan.  aneaga  aayakkaararum  mat’ravarga'lum  avarga'loadeakoodap  panthiyirunthaarga'l.  (lookkaa  5:29)

வேதபாரகரும்  பரிசேயரும்  அவருடைய  சீஷருக்கு  விரோதமாக  முறுமுறுத்து:  நீங்கள்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்.  (லூக்கா  5:30)

veathapaaragarum  pariseayarum  avarudaiya  seesharukku  viroathamaaga  mu’rumu’ruththu:  neengga'l  aayakkaararoadum  paaviga'loadum  poajanabaanampa'n'nugi’rathennaven’ru  keattaarga'l.  (lookkaa  5:30)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல்  சுகமுள்ளவர்களுக்கு  வேண்டியதில்லை.  (லூக்கா  5:31)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  pi'niyaa'liga'lukku  vaiththiyan  vea'ndiyatheayallaamal  sugamu'l'lavarga'lukku  vea'ndiyathillai.  (lookkaa  5:31)

நீதிமான்களையல்ல,  பாவிகளையே  மனந்திரும்புகிறதற்கு  அழைக்கவந்தேன்  என்றார்.  (லூக்கா  5:32)

neethimaanga'laiyalla,  paaviga'laiyea  mananthirumbugi’ratha’rku  azhaikkavanthean  en’raar.  (lookkaa  5:32)

பின்பு  அவர்கள்  அவரை  நோக்கி:  யோவானுடைய  சீஷர்  அநேகந்தரம்  உபவாசித்து  ஜெபம்பண்ணிக்கொண்டு  வருகிறார்கள்,  பரிசேயருடைய  சீஷரும்  அப்படியே  செய்கிறார்கள்,  உம்முடைய  சீஷர்  போஜனபானம்பண்ணுகிறார்களே,  அதெப்படியென்று  கேட்டார்கள்.  (லூக்கா  5:33)

pinbu  avarga'l  avarai  noakki:  yoavaanudaiya  seeshar  aneagantharam  ubavaasiththu  jebampa'n'nikko'ndu  varugi’raarga'l,  pariseayarudaiya  seesharum  appadiyea  seygi’raarga'l,  ummudaiya  seeshar  poajanabaanampa'n'nugi’raarga'lea,  atheppadiyen’ru  keattaarga'l.  (lookkaa  5:33)

அதற்கு  அவர்:  மணவாளன்  தங்களோடிருக்கையில்  மணவாளனுடைய  தோழர்களை  நீங்கள்  உபவாசிக்கச்  செய்யக்கூடுமா?  (லூக்கா  5:34)

atha’rku  avar:  ma'navaa'lan  thangga'loadirukkaiyil  ma'navaa'lanudaiya  thoazharga'lai  neengga'l  ubavaasikkach  seyyakkoodumaa?  (lookkaa  5:34)

மணவாளன்  அவர்களை  விட்டு  எடுபடும்  நாட்கள்  வரும்,  அந்த  நாட்களிலே  உபவாசிப்பார்கள்  என்றார்.  (லூக்கா  5:35)

ma'navaa'lan  avarga'lai  vittu  edupadum  naadka'l  varum,  antha  naadka'lilea  ubavaasippaarga'l  en’raar.  (lookkaa  5:35)

அவர்களுக்கு  ஒரு  உவமையையும்  சொன்னார்:  ஒருவனும்  புதிய  வஸ்திரத்துண்டைப்  பழைய  வஸ்திரத்தின்மேல்  போட்டு  இணைக்கமாட்டான்,  இணைத்தால்  புதியது  பழையதைக்  கிழிக்கும்;  புதிய  வஸ்திரத்துண்டு  பழைய  வஸ்திரத்துக்கு  ஒவ்வாது.  (லூக்கா  5:36)

avarga'lukku  oru  uvamaiyaiyum  sonnaar:  oruvanum  puthiya  vasthiraththu'ndaip  pazhaiya  vasthiraththinmeal  poattu  i'naikkamaattaan,  i'naiththaal  puthiyathu  pazhaiyathaik  kizhikkum;  puthiya  vasthiraththu'ndu  pazhaiya  vasthiraththukku  ovvaathu.  (lookkaa  5:36)

ஒருவனும்  புது  திராட்சரசத்தைப்  பழந்துருத்திகளில்  வார்த்துவைக்கமாட்டான்;  வார்த்துவைத்தால்  புதுரசம்  துருத்திகளைக்  கிழித்துப்போடும்,  இரசமும்  சிந்திப்போம்,  துருத்திகளும்  கெட்டுப்போம்.  (லூக்கா  5:37)

oruvanum  puthu  thiraadcharasaththaip  pazhanthuruththiga'lil  vaarththuvaikkamaattaan;  vaarththuvaiththaal  puthurasam  thuruththiga'laik  kizhiththuppoadum,  irasamum  sinthippoam,  thuruththiga'lum  kettuppoam.  (lookkaa  5:37)

புது  ரசத்தைப்  புது  துருத்திகளில்  வார்த்துவைக்கவேண்டும்,  அப்பொழுது  இரண்டும்  பத்திரப்பட்டிருக்கும்.  (லூக்கா  5:38)

puthu  rasaththaip  puthu  thuruththiga'lil  vaarththuvaikkavea'ndum,  appozhuthu  ira'ndum  paththirappattirukkum.  (lookkaa  5:38)

அன்றியும்  ஒருவனும்  பழைய  ரசத்தைக்  குடித்தவுடனே  புது  ரசத்தை  விரும்பமாட்டான்,  பழைய  ரசமே  நல்லதென்று  சொல்லுவான்  என்றார்.  (லூக்கா  5:39)

an’riyum  oruvanum  pazhaiya  rasaththaik  kudiththavudanea  puthu  rasaththai  virumbamaattaan,  pazhaiya  rasamea  nallathen’ru  solluvaan  en’raar.  (lookkaa  5:39)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!