Thursday, May 05, 2016

Lookkaa 4 | லூக்கா 4 | Luke 4

இயேசு  பரிசுத்த  ஆவியினாலே  நிறைந்தவராய்  யோர்தானை  விட்டுத்  திரும்பி,  ஆவியானவராலே  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோகப்பட்டு,  (லூக்கா  4:1)

iyeasu  parisuththa  aaviyinaalea  ni’rainthavaraay  yoarthaanai  vittuth  thirumbi,  aaviyaanavaraalea  vanaantharaththi’rkuk  ko'ndupoagappattu,  (lookkaa  4:1)

நாற்பதுநாள்  பிசாசினால்  சோதிக்கப்பட்டார்.  அந்த  நாட்களில்  அவர்  ஒன்றும்  புசியாதிருந்தார்;  அந்த  நாட்கள்  முடிந்தபின்பு  அவருக்குப்  பசியுண்டாயிற்று.  (லூக்கா  4:2)

naa’rpathunaa'l  pisaasinaal  soathikkappattaar.  antha  naadka'lil  avar  on’rum  pusiyaathirunthaar;  antha  naadka'l  mudinthapinbu  avarukkup  pasiyu'ndaayit’ru.  (lookkaa  4:2)

அப்பொழுது  பிசாசு  அவரை  நோக்கி:  நீர்  தேவனுடைய  குமாரனேயானால்,  இந்தக்  கல்  அப்பமாகும்படி  சொல்லும்  என்றான்.  (லூக்கா  4:3)

appozhuthu  pisaasu  avarai  noakki:  neer  theavanudaiya  kumaaraneayaanaal,  inthak  kal  appamaagumpadi  sollum  en’raan.  (lookkaa  4:3)

அவர்  பிரதியுத்தரமாக:  மனுஷன்  அப்பத்தினாலேமாத்திரமல்ல,  தேவனுடைய  ஒவ்வொரு  வார்த்தையினாலும்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  (லூக்கா  4:4)

avar  pirathiyuththaramaaga:  manushan  appaththinaaleamaaththiramalla,  theavanudaiya  ovvoru  vaarththaiyinaalum  pizhaippaan  en’ru  ezhuthiyirukki’rathea  en’raar.  (lookkaa  4:4)

பின்பு  பிசாசு  அவரை  உயர்ந்த  மலையின்மேல்  கொண்டுபோய்,  உலகத்தின்  சகல  ராஜ்யங்களையும்  ஒரு  நிமிஷத்திலே  அவருக்குக்  காண்பித்து:  (லூக்கா  4:5)

pinbu  pisaasu  avarai  uyarntha  malaiyinmeal  ko'ndupoay,  ulagaththin  sagala  raajyangga'laiyum  oru  nimishaththilea  avarukkuk  kaa'nbiththu:  (lookkaa  4:5)

இவைகள்  எல்லாவற்றின்மேலுமுள்ள  அதிகாரத்தையும்  இவைகளின்  மகிமையையும்  உமக்குத்  தருவேன்,  இவைகள்  எனக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;  எனக்கு  இஷ்டமானவனுக்கு  இவைகளைக்  கொடுக்கிறேன்.  (லூக்கா  4:6)

ivaiga'l  ellaavat’rinmealumu'l'la  athigaaraththaiyum  ivaiga'lin  magimaiyaiyum  umakkuth  tharuvean,  ivaiga'l  enakku  oppukkodukkappattirukki’rathu;  enakku  ishdamaanavanukku  ivaiga'laik  kodukki’rean.  (lookkaa  4:6)

நீர்  என்னைப்  பணிந்துகொண்டால்  எல்லாம்  உம்முடையதாகும்  என்று  சொன்னான்.  (லூக்கா  4:7)

neer  ennaip  pa'ninthuko'ndaal  ellaam  ummudaiyathaagum  en’ru  sonnaan.  (lookkaa  4:7)

இயேசு  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  எனக்குப்  பின்னாகப்போ  சாத்தானே,  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  அவர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்வாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  (லூக்கா  4:8)

iyeasu  avanukkup  pirathiyuththaramaaga:  enakkup  pinnaagappoa  saaththaanea,  un  theavanaagiya  karththaraip  pa'ninthuko'ndu,  avar  oruvarukkea  aaraathanaiseyvaayaaga  en’ru  ezhuthiyirukki’rathea  en’raar.  (lookkaa  4:8)

அப்பொழுது  அவன்  அவரை  எருசலேமுக்குக்  கொண்டுபோய்,  தேவாலயத்து  உப்பரிகையின்மேல்  அவரை  நிறுத்தி:  நீர்  தேவனுடைய  குமாரனேயானால்,  இங்கேயிருந்து  தாழக்குதியும்.  (லூக்கா  4:9)

appozhuthu  avan  avarai  erusaleamukkuk  ko'ndupoay,  theavaalayaththu  upparigaiyinmeal  avarai  ni’ruththi:  neer  theavanudaiya  kumaaraneayaanaal,  inggeayirunthu  thaazhakkuthiyum.  (lookkaa  4:9)

ஏனெனில்,  உம்மைக்  காக்கும்படிக்குத்  தம்முடைய  தூதர்களுக்கு  உம்மைக்குறித்துக்  கட்டளையிடுவார்  என்றும்,  (லூக்கா  4:10)

eanenil,  ummaik  kaakkumpadikkuth  thammudaiya  thootharga'lukku  ummaikku’riththuk  katta'laiyiduvaar  en’rum,  (lookkaa  4:10)

உமது  பாதம்  கல்லில்  இடறாதபடிக்கு,  அவர்கள்  உம்மைக்  கைகளில்  ஏந்திக்கொண்டுபோவார்கள்  என்றும்,  எழுதியிருக்கிறது  என்று  சொன்னான்.  (லூக்கா  4:11)

umathu  paatham  kallil  ida’raathapadikku,  avarga'l  ummaik  kaiga'lil  eanthikko'ndupoavaarga'l  en’rum,  ezhuthiyirukki’rathu  en’ru  sonnaan.  (lookkaa  4:11)

அதற்கு  இயேசு:  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பரீட்சை  பாராதிருப்பாயாக  என்று  சொல்லியிருக்கிறதே  என்றார்.  (லூக்கா  4:12)

atha’rku  iyeasu:  un  theavanaagiya  karththaraip  pareedchai  paaraathiruppaayaaga  en’ru  solliyirukki’rathea  en’raar.  (lookkaa  4:12)

பிசாசானவன்  சோதனையெல்லாம்  முடித்தபின்பு,  சிலகாலம்  அவரை  விட்டு  விலகிப்போனான்.  (லூக்கா  4:13)

pisaasaanavan  soathanaiyellaam  mudiththapinbu,  silakaalam  avarai  vittu  vilagippoanaan.  (lookkaa  4:13)

பின்பு  இயேசு  ஆவியானவருடைய  பலத்தினாலே  கலிலேயாவுக்குத்  திரும்பிப்  போனார்.  அவருடைய  கீர்த்தி  சுற்றிலும்  இருக்கிற  தேசமெங்கும்  பரம்பிற்று.  (லூக்கா  4:14)

pinbu  iyeasu  aaviyaanavarudaiya  balaththinaalea  kalileayaavukkuth  thirumbip  poanaar.  avarudaiya  keerththi  sut’rilum  irukki’ra  theasamenggum  parambit’ru.  (lookkaa  4:14)

அவர்களுடைய  ஜெபஆலயங்களில்  அவர்  உபதேசித்து,  எல்லாராலும்  புகழப்பட்டார்.  (லூக்கா  4:15)

avarga'ludaiya  jebaaalayangga'lil  avar  ubatheasiththu,  ellaaraalum  pugazhappattaar.  (lookkaa  4:15)

தாம்  வளர்ந்த  ஊராகிய  நாசரேத்துக்கு  அவர்  வந்து,  தம்முடைய  வழக்கத்தின்படியே  ஓய்வுநாளில்  ஜெபஆலயத்திலே  பிரவேசித்து,  வாசிக்க  எழுந்து  நின்றார்.  (லூக்கா  4:16)

thaam  va'larntha  ooraagiya  naasareaththukku  avar  vanthu,  thammudaiya  vazhakkaththinpadiyea  oayvunaa'lil  jebaaalayaththilea  piraveasiththu,  vaasikka  ezhunthu  nin’raar.  (lookkaa  4:16)

அப்பொழுது  ஏசாயா  தீர்க்கதரிசியின்  புஸ்தகம்  அவரிடத்தில்  கொடுக்கப்பட்டது.  அவர்  புஸ்தகத்தை  விரித்தபோது:  (லூக்கா  4:17)

appozhuthu  easaayaa  theerkkatharisiyin  pusthagam  avaridaththil  kodukkappattathu.  avar  pusthagaththai  viriththapoathu:  (lookkaa  4:17)

கர்த்தருடைய  ஆவியானவர்  என்மேலிருக்கிறார்;  தரித்திரருக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கும்படி  என்னை  அபிஷேகம்  பண்ணினார்;  இருதயம்  நருங்குண்டவர்களைக்  குணமாக்கவும்,  சிறைப்பட்டவர்களுக்கு  விடுதலையையும்,  குருடருக்குப்  பார்வையையும்  பிரசித்தப்படுத்தவும்,  நொறுங்குண்டவர்களை  விடுதலையாக்கவும்,  (லூக்கா  4:18)

karththarudaiya  aaviyaanavar  enmealirukki’raar;  thariththirarukkuch  suviseashaththaip  pirasanggikkumpadi  ennai  abisheagam  pa'n'ninaar;  iruthayam  narunggu'ndavarga'laik  ku'namaakkavum,  si’raippattavarga'lukku  viduthalaiyaiyum,  kurudarukkup  paarvaiyaiyum  pirasiththappaduththavum,  no’runggu'ndavarga'lai  viduthalaiyaakkavum,  (lookkaa  4:18)

கர்த்தருடைய  அநுக்கிரக  வருஷத்தைப்  பிரசித்தப்படுத்தவும்,  என்னை  அனுப்பினார்,  என்று  எழுதியிருக்கிற  இடத்தை  அவர்  கண்டு,  (லூக்கா  4:19)

karththarudaiya  anukkiraga  varushaththaip  pirasiththappaduththavum,  ennai  anuppinaar,  en’ru  ezhuthiyirukki’ra  idaththai  avar  ka'ndu,  (lookkaa  4:19)

வாசித்து,  புஸ்தகத்தைச்  சுருட்டி,  பணிவிடைக்காரனிடத்தில்  கொடுத்து,  உட்கார்ந்தார்.  ஜெபஆலயத்திலுள்ள  எல்லாருடைய  கண்களும்  அவர்மேல்  நோக்கமாயிருந்தது.  (லூக்கா  4:20)

vaasiththu,  pusthagaththaich  surutti,  pa'nividaikkaaranidaththil  koduththu,  udkaarnthaar.  jebaaalayaththilu'l'la  ellaarudaiya  ka'nga'lum  avarmeal  noakkamaayirunthathu.  (lookkaa  4:20)

அப்பொழுது  அவர்  அவர்களோடே  பேசத்தொடங்கி:  உங்கள்  காதுகள்  கேட்க  இந்த  வேதவாக்கியம்  இன்றையத்தினம்  நிறைவேறிற்று  என்றார்.  (லூக்கா  4:21)

appozhuthu  avar  avarga'loadea  peasaththodanggi:  ungga'l  kaathuga'l  keadka  intha  veathavaakkiyam  in’raiyaththinam  ni’raivea’rit’ru  en’raar.  (lookkaa  4:21)

எல்லாரும்  அவருக்கு  நற்சாட்சி  கொடுத்து,  அவருடைய  வாயிலிருந்து  புறப்பட்ட  கிருபையுள்ள  வார்த்தைகளைக்  குறித்து  ஆச்சரியப்பட்டு:  இவன்  யோசேப்பின்  குமாரன்  அல்லவா  என்றார்கள்.  (லூக்கா  4:22)

ellaarum  avarukku  na’rsaadchi  koduththu,  avarudaiya  vaayilirunthu  pu’rappatta  kirubaiyu'l'la  vaarththaiga'laik  ku’riththu  aachchariyappattu:  ivan  yoaseappin  kumaaran  allavaa  en’raarga'l.  (lookkaa  4:22)

அவர்  அவர்களை  நோக்கி:  வைத்தியனே,  உன்னைத்தானே  குணமாக்கிக்கொள்  என்கிற  பழமொழியைச்  சொல்லி,  நாங்கள்  கேள்விப்பட்டபடி  கப்பர்நகூமூரில்  உன்னால்  செய்யப்பட்ட  கிரியைகள்  எவைகளோ  அவைகளை  உன்  ஊராகிய  இவ்விடத்திலும்  செய்  என்று  நீங்கள்  என்னுடன்  சொல்லுவீர்கள்  என்பது  நிச்சயம்.  (லூக்கா  4:23)

avar  avarga'lai  noakki:  vaiththiyanea,  unnaiththaanea  ku'namaakkikko'l  engi’ra  pazhamozhiyaich  solli,  naangga'l  kea'lvippattapadi  kapparnahoomooril  unnaal  seyyappatta  kiriyaiga'l  evaiga'loa  avaiga'lai  un  ooraagiya  ivvidaththilum  sey  en’ru  neengga'l  ennudan  solluveerga'l  enbathu  nichchayam.  (lookkaa  4:23)

ஆனாலும்  தீர்க்கதரிசி  ஒருவனும்  தன்  ஊரிலே  அங்கீகரிக்கப்படமாட்டான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  4:24)

aanaalum  theerkkatharisi  oruvanum  than  oorilea  anggeegarikkappadamaattaan  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  4:24)

அன்றியும்  எலியாவின்  நாட்களிலே  மூன்று  வருஷமும்  ஆறுமாதமும்  வானம்  அடைபட்டு,  தேசமெங்கும்  மிகுந்த  பஞ்சம்  உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள்  அநேகம்  விதவைகள்  இருந்தார்கள்.  (லூக்கா  4:25)

an’riyum  eliyaavin  naadka'lilea  moon’ru  varushamum  aa’rumaathamum  vaanam  adaipattu,  theasamenggum  miguntha  pagncham  u'ndaayirunthapoathu,  isravealarukku'l  aneagam  vithavaiga'l  irunthaarga'l.  (lookkaa  4:25)

ஆயினும்  எலியா  சீதோன்  நாட்டிலுள்ள  சரெப்தா  (சாறிபாத்)  ஊரிலிருந்த  ஒரு  விதவையினிடத்திற்கு  அனுப்பப்பட்டானேயல்லாமல்    மற்றொருத்தியினிடத்திற்கும்  அனுப்பப்படவில்லை.  (லூக்கா  4:26)

aayinum  eliyaa  seethoan  naattilu'l'la  sarepthaa  (saa’ripaath)  ooriliruntha  oru  vithavaiyinidaththi’rku  anuppappattaaneayallaamal    mat’roruththiyinidaththi’rkum  anuppappadavillai.  (lookkaa  4:26)

அல்லாமலும்  எலிசா  தீர்க்கதரிசியின்  காலத்திலே  இஸ்ரவேலருக்குள்ளே  அநேகம்  குஷ்டரோகிகள்  இருந்தார்கள்;  ஆயினும்  சீரியா  தேசத்தானாகிய  நாகமானேயல்லாமல்  அவர்களில்  வேறொருவனும்  சுத்தமாக்கப்படவில்லை  என்று  சத்தியத்தின்படியே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  4:27)

allaamalum  elisaa  theerkkatharisiyin  kaalaththilea  isravealarukku'l'lea  aneagam  kushdaroagiga'l  irunthaarga'l;  aayinum  seeriyaa  theasaththaanaagiya  naagamaaneayallaamal  avarga'lil  vea’roruvanum  suththamaakkappadavillai  en’ru  saththiyaththinpadiyea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  4:27)

ஜெபஆலயத்திலிருந்த  எல்லாரும்,  இவைகளைக்  கேட்டபொழுது,  கோபமூண்டு,  (லூக்கா  4:28)

jebaaalayaththiliruntha  ellaarum,  ivaiga'laik  keattapozhuthu,  koabamoo'ndu,  (lookkaa  4:28)

எழுந்திருந்து,  அவரை  ஊருக்குப்  புறம்பே  தள்ளி,  தங்கள்  ஊர்  கட்டப்பட்டிருந்த  செங்குத்தான  மலையின்  சிகரத்திலிருந்து  அவரைத்  தலைகீழாய்த்  தள்ளிவிடும்படிக்கு  அவ்விடத்திற்குக்  கொண்டுபோனார்கள்.  (லூக்கா  4:29)

ezhunthirunthu,  avarai  oorukkup  pu’rambea  tha'l'li,  thangga'l  oor  kattappattiruntha  sengguththaana  malaiyin  sigaraththilirunthu  avaraith  thalaikeezhaayth  tha'l'lividumpadikku  avvidaththi’rkuk  ko'ndupoanaarga'l.  (lookkaa  4:29)

அவரோ  அவர்கள்  நடுவினின்று  கடந்துபோய்விட்டார்.  (லூக்கா  4:30)

avaroa  avarga'l  naduvinin’ru  kadanthupoayvittaar.  (lookkaa  4:30)

பின்பு  அவர்  கலிலேயாவிலுள்ள  கப்பர்நகூம்  பட்டணத்துக்கு  வந்து,  ஓய்வுநாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார்.  (லூக்கா  4:31)

pinbu  avar  kalileayaavilu'l'la  kapparnahoom  patta'naththukku  vanthu,  oayvunaadka'lil  janangga'lukkup  poathagam  pa'n'ninaar.  (lookkaa  4:31)

அவருடைய  வசனம்  அதிகாரமுள்ளதாயிருந்தபடியால்  அவருடைய  போதகத்தைக்குறித்து  அவர்கள்  ஆச்சரியப்பட்டார்கள்.  (லூக்கா  4:32)

avarudaiya  vasanam  athigaaramu'l'lathaayirunthapadiyaal  avarudaiya  poathagaththaikku’riththu  avarga'l  aachchariyappattaarga'l.  (lookkaa  4:32)

ஜெபஆலயத்திலே  அசுத்த  ஆவி  பிடித்திருந்த  ஒரு  மனுஷன்  இருந்தான்.  (லூக்கா  4:33)

jebaaalayaththilea  asuththa  aavi  pidiththiruntha  oru  manushan  irunthaan.  (lookkaa  4:33)

அவன்:  ஐயோ!  நசரேயனாகிய  இயேசுவே,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்?  உம்மை  இன்னார்  என்று  அறிவேன்;  நீர்  தேவனுடைய  பரிசுத்தர்  என்று  உரத்தசத்தமிட்டான்.  (லூக்கா  4:34)

avan:  aiyoa!  nasareayanaagiya  iyeasuvea,  engga'lukkum  umakkum  enna?  engga'laik  kedukkavaa  vantheer?  ummai  innaar  en’ru  a’rivean;  neer  theavanudaiya  parisuththar  en’ru  uraththasaththamittaan.  (lookkaa  4:34)

அதற்கு  இயேசு:  நீ  பேசாமல்  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்  போ  என்று  அதை  அதட்டினார்;  அப்பொழுது  பிசாசு  அவனை  ஜனங்களின்  நடுவே  விழத்தள்ளி,  அவனுக்கு  ஒரு  சேதமுஞ்செய்யாமல்,  அவனை  விட்டுப்  போய்விட்டது.  (லூக்கா  4:35)

atha’rku  iyeasu:  nee  peasaamal  ivanai  vittup  pu’rappattup  poa  en’ru  athai  athattinaar;  appozhuthu  pisaasu  avanai  janangga'lin  naduvea  vizhaththa'l'li,  avanukku  oru  seathamugnseyyaamal,  avanai  vittup  poayvittathu.  (lookkaa  4:35)

எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  இது  என்ன  வார்த்தையோ!  அதிகாரத்தோடும்  வல்லமையோடும்  அசுத்த  ஆவிகளுக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகள்  புறப்பட்டுப்போகிறதே  என்று  ஒருவரோடொருவர்  பேசிக்கொண்டார்கள்.  (லூக்கா  4:36)

ellaarum  aachchariyappattu:  ithu  enna  vaarththaiyoa!  athigaaraththoadum  vallamaiyoadum  asuththa  aaviga'lukkum  katta'laiyidugi’raar,  avaiga'l  pu’rappattuppoagi’rathea  en’ru  oruvaroadoruvar  peasikko'ndaarga'l.  (lookkaa  4:36)

அவருடைய  கீர்த்தி  சுற்றிலுமிருந்த  நாடுகளிலுள்ள  இடங்களிலெல்லாம்  பிரசித்தமாயிற்று.  (லூக்கா  4:37)

avarudaiya  keerththi  sut’rilumiruntha  naaduga'lilu'l'la  idangga'lilellaam  pirasiththamaayit’ru.  (lookkaa  4:37)

பின்பு  அவர்  ஜெபஆலயத்தை  விட்டுப்  புறப்பட்டு,  சீமோன்  வீட்டில்  பிரவேசித்தார்,  சீமோனுடைய  மாமி  கடும்  ஜுரமாய்க்  கிடந்தாள்.  அவளுக்காக  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  (லூக்கா  4:38)

pinbu  avar  jebaaalayaththai  vittup  pu’rappattu,  seemoan  veettil  piraveasiththaar,  seemoanudaiya  maami  kadum  juramaayk  kidanthaa'l.  ava'lukkaaga  avarai  vea'ndikko'ndaarga'l.  (lookkaa  4:38)

அவர்  அவளிடத்தில்  குனிந்துநின்று,  ஜுரம்  நீங்கும்படி  கட்டளையிட்டார்,  அது  அவளை  விட்டு  நீங்கிற்று;  உடனே  அவள்  எழுந்திருந்து  அவர்களுக்குப்  பணிவிடை  செய்தாள்.  (லூக்கா  4:39)

avar  ava'lidaththil  kuninthunin’ru,  juram  neenggumpadi  katta'laiyittaar,  athu  ava'lai  vittu  neenggit’ru;  udanea  ava'l  ezhunthirunthu  avarga'lukkup  pa'nividai  seythaa'l.  (lookkaa  4:39)

சூரியன்  அஸ்தமித்தபோது,  ஜனங்களெல்லாரும்  தங்களுக்குள்ளே  பலபல  வியாதிகளால்  வருத்தப்பட்டவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  அவர்கள்  ஒவ்வொருவர்மேலும்  அவர்  தம்முடைய  கைகளை  வைத்து,  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  (லூக்கா  4:40)

sooriyan  asthamiththapoathu,  janangga'lellaarum  thangga'lukku'l'lea  palapala  viyaathiga'laal  varuththappattavarga'lai  avaridaththil  ko'nduvanthaarga'l.  avarga'l  ovvoruvarmealum  avar  thammudaiya  kaiga'lai  vaiththu,  avarga'laich  sosthamaakkinaar.  (lookkaa  4:40)

பிசாசுகளும்:  நீர்  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து  என்று  சத்தமிட்டு,  அநேகரைவிட்டுப்  புறப்பட்டது.  அவரைக்  கிறிஸ்து  என்று  பிசாசுகள்  அறிந்திருந்தபடியால்  அவர்  அவைகளைப்  பேசவொட்டாமல்  அதட்டினார்.  (லூக்கா  4:41)

pisaasuga'lum:  neer  theavanudaiya  kumaaranaagiya  ki’risthu  en’ru  saththamittu,  aneagaraivittup  pu’rappattathu.  avaraik  ki’risthu  en’ru  pisaasuga'l  a’rinthirunthapadiyaal  avar  avaiga'laip  peasavottaamal  athattinaar.  (lookkaa  4:41)

உதயமானபோது,  அவர்  புறப்பட்டு,  வனாந்தரமான  ஓரிடத்திற்குப்  போனார்.  திரளான  ஜனங்கள்  அவரைத்  தேடி,  அவரிடத்தில்  வந்து,  தங்களை  விட்டுப்  போகாதபடிக்கு  அவரை  நிறுத்திக்கொண்டார்கள்.  (லூக்கா  4:42)

uthayamaanapoathu,  avar  pu’rappattu,  vanaantharamaana  oaridaththi’rkup  poanaar.  thira'laana  janangga'l  avaraith  theadi,  avaridaththil  vanthu,  thangga'lai  vittup  poagaathapadikku  avarai  ni’ruththikko'ndaarga'l.  (lookkaa  4:42)

அவரோ  அவர்களை  நோக்கி:  நான்  மற்ற  ஊர்களிலும்  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கிக்கவேண்டும்,  இதற்காகவே  அனுப்பப்பட்டேன்  என்றார்.  (லூக்கா  4:43)

avaroa  avarga'lai  noakki:  naan  mat’ra  oorga'lilum  theavanudaiya  raajyaththaikku’riththup  pirasanggikkavea'ndum,  itha’rkaagavea  anuppappattean  en’raar.  (lookkaa  4:43)

அந்தப்படியே  கலிலேயா  நாட்டிலுள்ள  ஜெபஆலயங்களில்  பிரசங்கம்  பண்ணிக்கொண்டுவந்தார்.  (லூக்கா  4:44)

anthappadiyea  kalileayaa  naattilu'l'la  jebaaalayangga'lil  pirasanggam  pa'n'nikko'nduvanthaar.  (lookkaa  4:44)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!