Wednesday, May 04, 2016

Lookkaa 2 | லூக்கா 2 | Luke 2


அந்நாட்களில்  உலகமெங்கும்  குடிமதிப்பு  எழுதப்படவேண்டுமென்று  அகுஸ்துராயனால்  கட்டளை  பிறந்தது.  (லூக்கா  2:1)

annaadka'lil  ulagamenggum  kudimathippu  ezhuthappadavea'ndumen’ru  agusthuraayanaal  katta'lai  pi’ranthathu.  (lookkaa  2:1)

சீரியாநாட்டிலே  சிரேனியு  என்பவன்  தேசாதிபதியாயிருந்தபோது  இந்த  முதலாம்  குடிமதிப்பு  உண்டாயிற்று.  (லூக்கா  2:2)

seeriyaanaattilea  sireaniyu  enbavan  theasaathibathiyaayirunthapoathu  intha  muthalaam  kudimathippu  u'ndaayit’ru.  (lookkaa  2:2)

அந்தப்படி  குடிமதிப்பெழுதப்படும்படிக்கு  எல்லாரும்  தங்கள்  தங்கள்  ஊர்களுக்குப்  போனார்கள்.  (லூக்கா  2:3)

anthappadi  kudimathippezhuthappadumpadikku  ellaarum  thangga'l  thangga'l  oorga'lukkup  poanaarga'l.  (lookkaa  2:3)

அப்பொழுது  யோசேப்பும்,  தான்  தாவீதின்  வம்சத்தானும்  குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே,  தனக்கு  மனைவியாக  நியமிக்கப்பட்டுக்  கர்ப்பவதியான  மரியாளுடனே  குடிமதிப்பெழுதப்படும்படி,  (லூக்கா  2:4)

appozhuthu  yoaseappum,  thaan  thaaveethin  vamsaththaanum  kudumbaththaanumaayirunthapadiyinaalea,  thanakku  manaiviyaaga  niyamikkappattuk  karppavathiyaana  mariyaa'ludanea  kudimathippezhuthappadumpadi,  (lookkaa  2:4)

கலிலேயா  நாட்டிலுள்ள  நாசரேத்தூரிலிருந்து  யூதேயா  நாட்டிலுள்ள  பெத்லெகேம்  என்னும்  தாவீதின்  ஊருக்குப்  போனான்.  (லூக்கா  2:5)

kalileayaa  naattilu'l'la  naasareaththoorilirunthu  yootheayaa  naattilu'l'la  bethleheam  ennum  thaaveethin  oorukkup  poanaan.  (lookkaa  2:5)

அவ்விடத்திலே  அவர்கள்  இருக்கையில்,  அவளுக்குப்  பிரசவகாலம்  நேரிட்டது.  (லூக்கா  2:6)

avvidaththilea  avarga'l  irukkaiyil,  ava'lukkup  pirasavakaalam  nearittathu.  (lookkaa  2:6)

அவள்  தன்  முதற்பேறான  குமாரனைப்பெற்று,  சத்திரத்திலே  அவர்களுக்கு  இடமில்லாதிருந்தபடியினால்,  பிள்ளையைத்  துணிகளில்  சுற்றி,  முன்னணையிலே  கிடத்தினாள்.  (லூக்கா  2:7)

ava'l  than  mutha’rpea’raana  kumaaranaippet’ru,  saththiraththilea  avarga'lukku  idamillaathirunthapadiyinaal,  pi'l'laiyaith  thu'niga'lil  sut’ri,  munna'naiyilea  kidaththinaa'l.  (lookkaa  2:7)

அப்பொழுது  அந்த  நாட்டிலே  மேய்ப்பர்கள்  வயல்வெளியில்  தங்கி,  இராத்திரியிலே  தங்கள்  மந்தையைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  (லூக்கா  2:8)

appozhuthu  antha  naattilea  meaypparga'l  vayalve'liyil  thanggi,  iraaththiriyilea  thangga'l  manthaiyaik  kaaththukko'ndirunthaarga'l.  (lookkaa  2:8)

அவ்வேளையில்  கர்த்தருடைய  தூதன்  அவர்களிடத்தில்  வந்து  நின்றான்,  கர்த்தருடைய  மகிமை  அவர்களைச்  சுற்றிலும்  பிரகாசித்தது;  அவர்கள்  மிகவும்  பயந்தார்கள்.  (லூக்கா  2:9)

avvea'laiyil  karththarudaiya  thoothan  avarga'lidaththil  vanthu  nin’raan,  karththarudaiya  magimai  avarga'laich  sut’rilum  piragaasiththathu;  avarga'l  migavum  bayanthaarga'l.  (lookkaa  2:9)

தேவதூதன்  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்;  இதோ,  எல்லா  ஜனத்துக்கும்  மிகுந்த  சந்தோஷத்தை  உண்டாக்கும்  நற்செய்தியை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்.  (லூக்கா  2:10)

theavathoothan  avarga'lai  noakki:  bayappadaathirungga'l;  ithoa,  ellaa  janaththukkum  miguntha  santhoashaththai  u'ndaakkum  na’rseythiyai  ungga'lukku  a'rivikki'rean.  (lookkaa  2:10)

இன்று  கர்த்தராகிய  கிறிஸ்து  என்னும்  இரட்சகர்  உங்களுக்குத்  தாவீதின்  ஊரிலே  பிறந்திருக்கிறார்.  (லூக்கா  2:11)

in’ru  karththaraagiya  ki'risthu  ennum  iradchagar  ungga'lukkuth  thaaveethin  oorilea  pi’ranthirukki’raar.  (lookkaa  2:11)

பிள்ளையைத்  துணிகளில்  சுற்றி,  முன்னணையிலே  கிடத்தியிருக்கக்  காண்பீர்கள்;  இதுவே  உங்களுக்கு  அடையாளம்  என்றான்.  (லூக்கா  2:12)

pi'l'laiyaith  thu'niga'lil  sut’ri,  munna'naiyilea  kidaththiyirukkak  kaa'nbeerga'l;  ithuvea  ungga'lukku  adaiyaa'lam  en’raan.  (lookkaa  2:12)

அந்தக்ஷணமே  பரமசேனையின்  திரள்  அந்தத்  தூதனுடனே  தோன்றி:  (லூக்கா  2:13)

anthaksha'namea  paramaseanaiyin  thira'l  anthath  thoothanudanea  thoan'ri:  (lookkaa  2:13)

உன்னதத்திலிருக்கிற  தேவனுக்கு  மகிமையும்,  பூமியிலே  சமாதானமும்,  மனுஷர்மேல்  பிரியமும்  உண்டாவதாக  என்று  சொல்லி,  தேவனைத்  துதித்தார்கள்.  (லூக்கா  2:14)

unnathaththilirukki’ra  theavanukku  magimaiyum,  boomiyilea  samaathaanamum,  manusharmeal  piriyamum  u'ndaavathaaga  en’ru  solli,  theavanaith  thuthiththaarga'l.  (lookkaa  2:14)

தேவதூதர்கள்  அவர்களை  விட்டுப்  பரலோகத்துக்குப்  போனபின்பு,  மேய்ப்பர்கள்  ஒருவரையொருவர்  நோக்கி:  நாம்  பெத்லெகேம்  ஊருக்குப்  போய்,  நடந்ததாகக்  கர்த்தரால்  நமக்கு  அறிவிக்கப்பட்ட  இந்தக்  காரியத்தைப்  பார்ப்போம்  வாருங்கள்  என்று  சொல்லி,  (லூக்கா  2:15)

theavathootharga'l  avarga'lai  vittup  paraloagaththukkup  poanapinbu,  meaypparga'l  oruvaraiyoruvar  noakki:  naam  bethleheam  oorukkup  poay,  nadanthathaagak  karththaraal  namakku  a’rivikkappatta  inthak  kaariyaththaip  paarppoam  vaarungga'l  en’ru  solli,  (lookkaa  2:15)

தீவிரமாய்  வந்து,  மரியாளையும்,  யோசேப்பையும்,  முன்னணையிலே  கிடத்தியிருக்கிற  பிள்ளையையும்  கண்டார்கள்.  (லூக்கா  2:16)

theeviramaay  vanthu,  mariyaa'laiyum,  yoaseappaiyum,  munna'naiyilea  kidaththiyirukki’ra  pi'l'laiyaiyum  ka'ndaarga'l.  (lookkaa  2:16)

கண்டு,  அந்தப்  பிள்ளையைக்  குறித்துத்  தங்களுக்குச்  சொல்லப்பட்ட  சங்கதியைப்  பிரசித்தம்பண்ணினார்கள்.  (லூக்கா  2:17)

ka'ndu,  anthap  pi'l'laiyaik  ku’riththuth  thangga'lukkuch  sollappatta  sanggathiyaip  pirasiththampa'n'ninaarga'l.  (lookkaa  2:17)

மேய்ப்பராலே  தங்களுக்குச்  சொல்லப்பட்டதைக்  கேட்ட  யாவரும்  அவைகளைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  (லூக்கா  2:18)

meaypparaalea  thangga'lukkuch  sollappattathaik  keatta  yaavarum  avaiga'laikku’riththu  aachchariyappattaarga'l.  (lookkaa  2:18)

மரியாளோ  அந்தச்  சங்கதிகளையெல்லாம்  தன்  இருதயத்திலே  வைத்து,  சிந்தனைபண்ணினாள்.  (லூக்கா  2:19)

mariyaa'loa  anthach  sanggathiga'laiyellaam  than  iruthayaththilea  vaiththu,  sinthanaipa'n'ninaa'l.  (lookkaa  2:19)

மேய்ப்பர்களும்  தங்களுக்குச்  சொல்லப்பட்டதின்படியே  கேட்டு  கண்ட  எல்லாவற்றிற்காகவும்  தேவனை  மகிமைப்படுத்தி,  துதித்துக்கொண்டு  திரும்பிப்போனார்கள்.  (லூக்கா  2:20)

meaypparga'lum  thangga'lukkuch  sollappattathinpadiyea  keattu  ka'nda  ellaavat’ri’rkaagavum  theavanai  magimaippaduththi,  thuthiththukko'ndu  thirumbippoanaarga'l.  (lookkaa  2:20)

பிள்ளைக்கு  விருத்தசேதனம்  பண்ணவேண்டிய  எட்டாம்  நாளிலே,  அது  கர்ப்பத்திலே  உற்பவிக்கிறதற்கு  முன்னே  தேவதூதனால்  சொல்லப்பட்டபடியே,  அதற்கு  இயேசு  என்று  பேரிட்டார்கள்.  (லூக்கா  2:21)

pi'l'laikku  viruththaseathanam  pa'n'navea'ndiya  ettaam  naa'lilea,  athu  karppaththilea  u’rpavikki’ratha’rku  munnea  theavathoothanaal  sollappattapadiyea,  atha’rku  iyeasu  en’ru  pearittaarga'l.  (lookkaa  2:21)

மோசேயின்  நியாயப்பிரமாணத்தின்படியே  அவர்களுடைய  சுத்திகரிப்பின்  நாட்கள்  நிறைவேறினபோது,  (லூக்கா  2:22)

moaseayin  niyaayappiramaa'naththinpadiyea  avarga'ludaiya  suththigarippin  naadka'l  ni’raivea’rinapoathu,  (lookkaa  2:22)

முதற்பேறான  எந்த  ஆண்பிள்ளையும்  கர்த்தருக்குப்  பரிசுத்தமானதென்னப்படும்  என்று  கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடி  அவரைக்  கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுக்கவும்,  (லூக்கா  2:23)

mutha’rpea’raana  entha  aa'npi'l'laiyum  karththarukkup  parisuththamaanathennappadum  en’ru  karththarudaiya  niyaayappiramaa'naththil  ezhuthiyirukki’rapadi  avaraik  karththarukken’ru  oppukkodukkavum,  (lookkaa  2:23)

கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தில்  சொல்லியிருக்கிறபடி,  ஒரு  ஜோடு  காட்டுப்புறாவையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது  பலியாகச்  செலுத்தவும்,  அவரை  எருசலேமுக்குக்  கொண்டுபோனார்கள்.  (லூக்கா  2:24)

karththarudaiya  niyaayappiramaa'naththil  solliyirukki’rapadi,  oru  joadu  kaattuppu’raavaiyaavathu  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu  baliyaagach  seluththavum,  avarai  erusaleamukkuk  ko'ndupoanaarga'l.  (lookkaa  2:24)

அப்பொழுது  சிமியோன்  என்னும்  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  எருசலேமில்  இருந்தான்;  அவன்  நீதியும்  தேவபக்தியும்  உள்ளவனாயும்,  இஸ்ரவேலின்  ஆறுதல்வரக்  காத்திருக்கிறவனாயும்  இருந்தான்;  அவன்மேல்  பரிசுத்தஆவி  இருந்தார்.  (லூக்கா  2:25)

appozhuthu  simiyoan  ennum  pearko'nda  oru  manushan  erusaleamil  irunthaan;  avan  neethiyum  theavabakthiyum  u'l'lavanaayum,  isravealin  aa’ruthalvarak  kaaththirukki’ravanaayum  irunthaan;  avanmeal  parisuththaaavi  irunthaar.  (lookkaa  2:25)

கர்த்தருடைய  கிறிஸ்துவை  நீ  காணுமுன்னே  மரணமடையமாட்டாய்  என்று  பரிசுத்த  ஆவியினாலே  அவனுக்கு  அறிவிக்கப்பட்டுமிருந்தது.  (லூக்கா  2:26)

karththarudaiya  ki’risthuvai  nee  kaa'numunnea  mara'namadaiyamaattaay  en’ru  parisuththa  aaviyinaalea  avanukku  a’rivikkappattumirunthathu.  (lookkaa  2:26)

அவன்  ஆவியின்  ஏவுதலினால்  தேவாலயத்திலே  வந்திருந்தான்.  இயேசு  என்னும்  பிள்ளைக்காக  நியாயப்பிரமாண  முறைமையின்படி  செய்வதற்குத்  தாய்  தகப்பன்மார்  அவரை  உள்ளே  கொண்டுவருகையில்,  (லூக்கா  2:27)

avan  aaviyin  eavuthalinaal  theavaalayaththilea  vanthirunthaan.  iyeasu  ennum  pi'l'laikkaaga  niyaayappiramaa'na  mu’raimaiyinpadi  seyvatha’rkuth  thaay  thagappanmaar  avarai  u'l'lea  ko'nduvarugaiyil,  (lookkaa  2:27)

அவன்  அவரைத்  தன்  கைகளில்  ஏந்திக்கொண்டு,  தேவனை  ஸ்தோத்திரித்து:  (லூக்கா  2:28)

avan  avaraith  than  kaiga'lil  eanthikko'ndu,  theavanai  sthoaththiriththu:  (lookkaa  2:28)

ஆண்டவரே,  உமது  வார்த்தையின்படி  உமது  அடியேனை  இப்பொழுது  சமாதானத்தோடே  போகவிடுகிறீர்;  (லூக்கா  2:29)

aa'ndavarea,  umathu  vaarththaiyinpadi  umathu  adiyeanai  ippozhuthu  samaathaanaththoadea  poagavidugi'reer;  (lookkaa  2:29)

புறஜாதிகளுக்குப்  பிரகாசிக்கிற  ஒளியாகவும்,  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  மகிமையாகவும்,  (லூக்கா  2:30)

pu’rajaathiga'lukkup  piragaasikki’ra  o'liyaagavum,  ummudaiya  janamaagiya  isravealukku  magimaiyaagavum,  (lookkaa  2:30)

தேவரீர்  சகல  ஜனங்களுக்கும்  முன்பாக  ஆயத்தம்பண்ணின  (லூக்கா  2:31)

theavareer  sagala  janangga'lukkum  munbaaga  aayaththampa'n'nina  (lookkaa  2:31)

உம்முடைய  இரட்சணியத்தை  என்  கண்கள்  கண்டது  என்றான்.  (லூக்கா  2:32)

ummudaiya  iradcha'niyaththai  en  ka'nga'l  ka'ndathu  en’raan.  (lookkaa  2:32)

அவரைக்குறித்துச்  சொல்லப்பட்டவைகளுக்காக  யோசேப்பும்  அவருடைய  தாயாரும்  ஆச்சரியப்பட்டார்கள்.  (லூக்கா  2:33)

avaraikku’riththuch  sollappattavaiga'lukkaaga  yoaseappum  avarudaiya  thaayaarum  aachchariyappattaarga'l.  (lookkaa  2:33)

பின்னும்  சிமியோன்  அவர்களை  ஆசீர்வதித்து,  அவருடைய  தாயாகிய  மரியாளை  நோக்கி:  இதோ,  அநேகருடைய  இருதய  சிந்தனைகள்  வெளிப்படத்தக்கதாக,  இஸ்ரவேலில்  அநேகர்  விழுகிறதற்கும்  எழுந்திருக்கிறதற்கும்,  விரோதமாகப்  பேசப்படும்  அடையாளமாவதற்கும்,  இவர்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.  (லூக்கா  2:34)

pinnum  simiyoan  avarga'lai  aaseervathiththu,  avarudaiya  thaayaagiya  mariyaa'lai  noakki:  ithoa,  aneagarudaiya  iruthaya  sinthanaiga'l  ve'lippadaththakkathaaga,  isravealil  aneagar  vizhugi’ratha’rkum  ezhunthirukki’ratha’rkum,  viroathamaagap  peasappadum  adaiyaa'lamaavatha’rkum,  ivar  niyamikkappattirukki’raar.  (lookkaa  2:34)

உன்  ஆத்துமாவையும்  ஒரு  பட்டயம்  உருவிப்போகும்  என்றான்.  (லூக்கா  2:35)

un  aaththumaavaiyum  oru  pattayam  uruvippoagum  en’raan.  (lookkaa  2:35)

ஆசேருடைய  கோத்திரத்தாளும்,  பானுவேலின்  குமாரத்தியுமாகிய  அன்னாள்  என்னும்  ஒரு  தீர்க்கதரிசி  இருந்தாள்;  அவள்  கன்னிப்பிராயத்தில்  விவாகமானதுமுதல்  ஏழுவருஷம்  புருஷனுடனே  வாழ்ந்தவளும்,  அதிக  வயதுசென்றவளுமாயிருந்தாள்.  (லூக்கா  2:36)

aasearudaiya  koaththiraththaa'lum,  paanuvealin  kumaaraththiyumaagiya  annaa'l  ennum  oru  theerkkatharisi  irunthaa'l;  ava'l  kannippiraayaththil  vivaagamaanathumuthal  eazhuvarusham  purushanudanea  vaazhnthava'lum,  athiga  vayathusen’rava'lumaayirunthaa'l.  (lookkaa  2:36)

ஏறக்குறைய  எண்பத்துநாலு  வயதுள்ள  அந்த  விதவை  தேவாலயத்தை  விட்டு  நீங்காமல்,  இரவும்  பகலும்  உபவாசித்து,  ஜெபம்பண்ணி,  ஆராதனை  செய்துகொண்டிருந்தாள்.  (லூக்கா  2:37)

ea’rakku’raiya  e'nbaththunaalu  vayathu'l'la  antha  vithavai  theavaalayaththai  vittu  neenggaamal,  iravum  pagalum  ubavaasiththu,  jebampa'n'ni,  aaraathanai  seythuko'ndirunthaa'l.  (lookkaa  2:37)

அவளும்  அந்நேரத்திலே  வந்து  நின்று,  கர்த்தரைப்  புகழ்ந்து,  எருசலேமிலே  மீட்புண்டாகக்  காத்திருந்த  யாவருக்கும்  அவரைக்குறித்துப்  பேசினாள்.  (லூக்கா  2:38)

ava'lum  annearaththilea  vanthu  nin’ru,  karththaraip  pugazhnthu,  erusaleamilea  meedpu'ndaagak  kaaththiruntha  yaavarukkum  avaraikku’riththup  peasinaa'l.  (lookkaa  2:38)

கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தின்படி  சகலத்தையும்  அவர்கள்  செய்து  முடித்தபின்பு,  கலிலேயாநாட்டிலுள்ள  தங்கள்  ஊராகிய  நாசரேத்துக்குத்  திரும்பிப்போனார்கள்.  (லூக்கா  2:39)

karththarudaiya  niyaayappiramaa'naththinpadi  sagalaththaiyum  avarga'l  seythu  mudiththapinbu,  kalileayaanaattilu'l'la  thangga'l  ooraagiya  naasareaththukkuth  thirumbippoanaarga'l.  (lookkaa  2:39)

பிள்ளை  வளர்ந்து,  ஆவியிலே  பெலன்கொண்டு,  ஞானத்தினால்  நிறைந்தது.  தேவனுடைய  கிருபையும்  அவர்மேல்  இருந்தது.  (லூக்கா  2:40)

pi'l'lai  va'larnthu,  aaviyilea  belanko'ndu,  gnaanaththinaal  ni’rainthathu.  theavanudaiya  kirubaiyum  avarmeal  irunthathu.  (lookkaa  2:40)

அவருடைய  தாய்  தகப்பன்மார்  வருஷந்தோறும்  பஸ்கா  பண்டிகையில்  எருசலேமுக்குப்  போவார்கள்.  (லூக்கா  2:41)

avarudaiya  thaay  thagappanmaar  varushanthoa’rum  paskaa  pa'ndigaiyil  erusaleamukkup  poavaarga'l.  (lookkaa  2:41)

அவருக்குப்  பன்னிரண்டு  வயதானபோது,  அவர்கள்  அந்தப்  பண்டிகை  முறைமையின்படி  எருசலேமுக்குப்போய்,  (லூக்கா  2:42)

avarukkup  pannira'ndu  vayathaanapoathu,  avarga'l  anthap  pa'ndigai  mu’raimaiyinpadi  erusaleamukkuppoay,  (lookkaa  2:42)

பண்டிகைநாட்கள்  முடிந்து,  திரும்பிவருகிறபோது,  பிள்ளையாகிய  இயேசு  எருசலேமிலே  இருந்துவிட்டார்;  இது  அவருடைய  தாயாருக்கும்  யோசேப்புக்கும்  தெரியாதிருந்தது.  (லூக்கா  2:43)

pa'ndigainaadka'l  mudinthu,  thirumbivarugi’rapoathu,  pi'l'laiyaagiya  iyeasu  erusaleamilea  irunthuvittaar;  ithu  avarudaiya  thaayaarukkum  yoaseappukkum  theriyaathirunthathu.  (lookkaa  2:43)

அவர்  பிரயாணக்காரரின்  கூட்டத்திலே  இருப்பாரென்று  அவர்கள்  நினைத்து,  ஒருநாள்  பிரயாணம்  வந்து,  உறவின்  முறையாரிடத்திலும்  அறிமுகமானவர்களிடத்திலும்  அவரைத்  தேடினார்கள்.  (லூக்கா  2:44)

avar  pirayaa'nakkaararin  koottaththilea  iruppaaren’ru  avarga'l  ninaiththu,  orunaa'l  pirayaa'nam  vanthu,  u’ravin  mu’raiyaaridaththilum  a’rimugamaanavarga'lidaththilum  avaraith  theadinaarga'l.  (lookkaa  2:44)

காணாததினாலே  அவரைத்  தேடிக்கொண்டே  எருசலேமுக்குத்  திரும்பிப்  போனார்கள்.  (லூக்கா  2:45)

kaa'naathathinaalea  avaraith  theadikko'ndea  erusaleamukkuth  thirumbip  poanaarga'l.  (lookkaa  2:45)

மூன்றுநாளைக்குப்  பின்பு,  அவர்  தேவாலயத்தில்  போதகர்  நடுவில்  உட்கார்ந்திருக்கவும்,  அவர்கள்  பேசுகிறதைக்  கேட்கவும்,  அவர்களை  வினாவவும்  கண்டார்கள்.  (லூக்கா  2:46)

moon’runaa'laikkup  pinbu,  avar  theavaalayaththil  poathagar  naduvil  udkaarnthirukkavum,  avarga'l  peasugi’rathaik  keadkavum,  avarga'lai  vinaavavum  ka'ndaarga'l.  (lookkaa  2:46)

அவர்  பேசக்கேட்ட  யாவரும்  அவருடைய  புத்தியையும்  அவர்  சொன்ன  மாறுத்தரங்களையுங்குறித்துப்  பிரமித்தார்கள்.  (லூக்கா  2:47)

avar  peasakkeatta  yaavarum  avarudaiya  buththiyaiyum  avar  sonna  maa’ruththarangga'laiyungku’riththup  piramiththaarga'l.  (lookkaa  2:47)

தாய்  தகப்பன்மாரும்  அவரைக்  கண்டு  ஆச்சரியப்பட்டார்கள்.  அப்பொழுது  அவருடைய  தாயார்  அவரை  நோக்கி:  மகனே!  ஏன்  எங்களுக்கு  இப்படிச்  செய்தாய்?  இதோ,  உன்  தகப்பனும்  நானும்  விசாரத்தோடே  உன்னைத்  தேடினோமே  என்றாள்.  (லூக்கா  2:48)

thaay  thagappanmaarum  avaraik  ka'ndu  aachchariyappattaarga'l.  appozhuthu  avarudaiya  thaayaar  avarai  noakki:  maganea!  ean  engga'lukku  ippadich  seythaay?  ithoa,  un  thagappanum  naanum  visaaraththoadea  unnaith  theadinoamea  en’raa'l.  (lookkaa  2:48)

அதற்கு  அவர்:  நீங்கள்  ஏன்  என்னைத்  தேடினீர்கள்?  என்  பிதாவுக்கடுத்தவைகளில்  நான்  இருக்கவேண்டியதென்று  அறியீர்களா  என்றார்.  (லூக்கா  2:49)

atha’rku  avar:  neengga'l  ean  ennaith  theadineerga'l?  en  pithaavukkaduththavaiga'lil  naan  irukkavea'ndiyathen’ru  a’riyeerga'laa  en’raar.  (lookkaa  2:49)

தங்களுக்கு  அவர்  சொன்ன  வார்த்தையை  அவர்கள்  உணர்ந்துகொள்ளவில்லை.  (லூக்கா  2:50)

thangga'lukku  avar  sonna  vaarththaiyai  avarga'l  u'narnthuko'l'lavillai.  (lookkaa  2:50)

பின்பு  அவர்  அவர்களுடனே  கூடப்போய்,  நாசரேத்தூரில்  சேர்ந்து,  அவர்களுக்குக்  கீழ்ப்படிந்திருந்தார்.  அவருடைய  தாயார்  இந்தச்  சங்கதிகளையெல்லாம்  தன்  இருதயத்திலே  வைத்துக்கொண்டாள்.  (லூக்கா  2:51)

pinbu  avar  avarga'ludanea  koodappoay,  naasareaththooril  searnthu,  avarga'lukkuk  keezhppadinthirunthaar.  avarudaiya  thaayaar  inthach  sanggathiga'laiyellaam  than  iruthayaththilea  vaiththukko'ndaa'l.  (lookkaa  2:51)

இயேசுவானவர்  ஞானத்திலும்,  வளர்த்தியிலும்,  தேவகிருபையிலும்,  மனுஷர்  தயவிலும்  அதிகமதிகமாய்  விருத்தியடைந்தார்.  (லூக்கா  2:52)

iyeasuvaanavar  gnaanaththilum,  va'larththiyilum,  theavakirubaiyilum,  manushar  thayavilum  athigamathigamaay  viruththiyadainthaar.  (lookkaa  2:52)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!