Sunday, May 08, 2016

Lookkaa 18 | லூக்கா 18 | Luke 18


சோர்ந்துபோகாமல்  எப்பொழுதும்  ஜெபம்பண்ணவேண்டும்  என்பதைக்  குறித்து  அவர்களுக்கு  அவர்  ஒரு  உவமையைச்  சொன்னார்.  (லூக்கா  18:1)

soarnthupoagaamal  eppozhuthum  jebampa'n'navea'ndum  enbathaik  ku’riththu  avarga'lukku  avar  oru  uvamaiyaich  sonnaar.  (lookkaa  18:1)

ஒரு  பட்டணத்திலே  ஒரு  நியாயாதிபதி  இருந்தான்;  அவன்  தேவனுக்குப்  பயப்படாதவனும்  மனுஷரை  மதியாதவனுமாயிருந்தான்.  (லூக்கா  18:2)

oru  patta'naththilea  oru  niyaayaathibathi  irunthaan;  avan  theavanukkup  bayappadaathavanum  manusharai  mathiyaathavanumaayirunthaan.  (lookkaa  18:2)

அந்தப்  பட்டணத்திலே  ஒரு  விதவையும்  இருந்தாள்;  அவள்  அவனிடத்தில்  போய்:  எனக்கும்  என்  எதிராளிக்கும்  இருக்கிற  காரியத்தில்  எனக்கு  நியாயஞ்செய்யவேண்டும்  என்று  விண்ணப்பம்பண்ணினாள்.  (லூக்கா  18:3)

anthap  patta'naththilea  oru  vithavaiyum  irunthaa'l;  ava'l  avanidaththil  poay:  enakkum  en  ethiraa'likkum  irukki’ra  kaariyaththil  enakku  niyaayagnseyyavea'ndum  en’ru  vi'n'nappampa'n'ninaa'l.  (lookkaa  18:3)

வெகுநாள்வரைக்கும்  அவனுக்கு  மனதில்லாதிருந்தது.  பின்பு  அவன்:  நான்  தேவனுக்குப்  பயப்படாமலும்  மனுஷரை  மதியாமலும்  இருந்தும்,  (லூக்கா  18:4)

vegunaa'lvaraikkum  avanukku  manathillaathirunthathu.  pinbu  avan:  naan  theavanukkup  bayappadaamalum  manusharai  mathiyaamalum  irunthum,  (lookkaa  18:4)

இந்த  விதவை  என்னை  எப்பொழுதும்  தொந்தரவு  செய்கிறபடியினால்,  இவள்  அடிக்கடி  வந்து  என்னை  அலட்டாதபடி  இவளுக்கு  நியாயஞ்செய்யவேண்டும்  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டான்  என்றார்.  (லூக்கா  18:5)

intha  vithavai  ennai  eppozhuthum  thontharavu  seygi’rapadiyinaal,  iva'l  adikkadi  vanthu  ennai  alattaathapadi  iva'lukku  niyaayagnseyyavea'ndum  en’ru  thanakku'l'lea  sollikko'ndaan  en’raar.  (lookkaa  18:5)

பின்னும்  கர்த்தர்  அவர்களை  நோக்கி:  அநீதியுள்ள  அந்த  நியாயாதிபதி  சொன்னதைச்  சிந்தித்துப்பாருங்கள்.  (லூக்கா  18:6)

pinnum  karththar  avarga'lai  noakki:  aneethiyu'l'la  antha  niyaayaathibathi  sonnathaich  sinthiththuppaarungga'l.  (lookkaa  18:6)

அந்தப்படியே  தேவன்  தம்மை  நோக்கி  இரவும்  பகலும்  கூப்பிடுகிறவர்களாகிய  தம்மால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்  விஷயத்தில்  நீடிய  பொறுமையுள்ளவராயிருந்து  அவர்களுக்கு  நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?  (லூக்கா  18:7)

anthappadiyea  theavan  thammai  noakki  iravum  pagalum  kooppidugi’ravarga'laagiya  thammaal  therinthuko'l'lappattavarga'lin  vishayaththil  neediya  po’rumaiyu'l'lavaraayirunthu  avarga'lukku  niyaayagnseyyaamaliruppaaroa?  (lookkaa  18:7)

சீக்கிரத்திலே  அவர்களுக்கு  நியாயஞ்செய்வார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  ஆகிலும்  மனுஷகுமாரன்  வரும்போது  பூமியிலே  விசுவாசத்தைக்  காண்பாரோ  என்றார்.  (லூக்கா  18:8)

seekkiraththilea  avarga'lukku  niyaayagnseyvaar  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  aagilum  manushakumaaran  varumpoathu  boomiyilea  visuvaasaththaik  kaa'nbaaroa  en’raar.  (lookkaa  18:8)

அன்றியும்,  தங்களை  நீதிமான்களென்று  நம்பி,  மற்றவர்களை  அற்பமாயெண்ணின  சிலரைக்குறித்து,  அவர்  ஒரு  உவமையைச்  சொன்னார்.  (லூக்கா  18:9)

an’riyum,  thangga'lai  neethimaanga'len’ru  nambi,  mat’ravarga'lai  a’rpamaaye'n'nina  silaraikku’riththu,  avar  oru  uvamaiyaich  sonnaar.  (lookkaa  18:9)

இரண்டு  மனுஷர்  ஜெபம்பண்ணும்படி  தேவாலயத்துக்குப்  போனார்கள்;  ஒருவன்  பரிசேயன்,  மற்றவன்  ஆயக்காரன்.  (லூக்கா  18:10)

ira'ndu  manushar  jebampa'n'numpadi  theavaalayaththukkup  poanaarga'l;  oruvan  pariseayan,  mat’ravan  aayakkaaran.  (lookkaa  18:10)

பரிசேயன்  நின்று:  தேவனே!  நான்  பறிகாரர்,  அநியாயக்காரர்,  விபசாரக்காரர்  ஆகிய  மற்ற  மனுஷரைப்போலவும்,  இந்த  ஆயக்காரனைப்போலவும்  இராததனால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (லூக்கா  18:11)

pariseayan  nin’ru:  theavanea!  naan  pa’rikaarar,  aniyaayakkaarar,  vibasaarakkaarar  aagiya  mat’ra  manusharaippoalavum,  intha  aayakkaaranaippoalavum  iraathathanaal  ummai  sthoaththirikki’rean.  (lookkaa  18:11)

வாரத்தில்  இரண்டுதரம்  உபவாசிக்கிறேன்;  என்  சம்பாத்தியத்திலெல்லாம்  தசமபாகம்  செலுத்தி  வருகிறேன்  என்று,  தனக்குள்ளே  ஜெபம்பண்ணினான்.  (லூக்கா  18:12)

vaaraththil  ira'ndutharam  ubavaasikki’rean;  en  sambaaththiyaththilellaam  thasamapaagam  seluththi  varugi’rean  en’ru,  thanakku'l'lea  jebampa'n'ninaan.  (lookkaa  18:12)

ஆயக்காரன்  தூரத்திலே  நின்று,  தன்  கண்களையும்  வானத்துக்கு  ஏறெடுக்கத்  துணியாமல்,  தன்  மார்பிலே  அடித்துக்கொண்டு:  தேவனே!  பாவியாகிய  என்மேல்  கிருபையாயிரும்  என்றான்.  (லூக்கா  18:13)

aayakkaaran  thooraththilea  nin’ru,  than  ka'nga'laiyum  vaanaththukku  ea’redukkath  thu'niyaamal,  than  maarbilea  adiththukko'ndu:  theavanea!  paaviyaagiya  enmeal  kirubaiyaayirum  en’raan.  (lookkaa  18:13)

அவனல்ல,  இவனே  நீதிமானாக்கப்பட்டவனாய்த்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  ஏனெனில்  தன்னை  உயர்த்துகிறவனெவனும்  தாழ்த்தப்படுவான்,  தன்னைத்  தாழ்த்துகிறவன்  உயர்த்தப்படுவான்  என்றார்.  (லூக்கா  18:14)

avanalla,  ivanea  neethimaanaakkappattavanaayth  than  veettukkuth  thirumbippoanaan  en’ru  ungga'lukkuch  sollugi’rean;  eanenil  thannai  uyarththugi’ravanevanum  thaazhththappaduvaan,  thannaith  thaazhththugi’ravan  uyarththappaduvaan  en’raar.  (lookkaa  18:14)

பின்பு  குழந்தைகளையும்  அவர்  தொடும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  சீஷர்கள்  அதைக்  கண்டு,  கொண்டுவந்தவர்களை  அதட்டினார்கள்.  (லூக்கா  18:15)

pinbu  kuzhanthaiga'laiyum  avar  thodumpadikku  avarga'lai  avaridaththil  ko'nduvanthaarga'l.  seesharga'l  athaik  ka'ndu,  ko'nduvanthavarga'lai  athattinaarga'l.  (lookkaa  18:15)

இயேசுவோ  அவர்களைக்  கொண்டுவரும்படி  கட்டளையிட்டு:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்,  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது.  (லூக்கா  18:16)

iyeasuvoa  avarga'laik  ko'nduvarumpadi  katta'laiyittu:  si’ru  pi'l'laiga'l  ennidaththil  varugi’ratha’rku  idangkodungga'l,  avarga'laith  thadaipa'n'naathirungga'l;  theavanudaiya  raajyam  appadippattavarga'ludaiyathu.  (lookkaa  18:16)

எவனாகிலும்  சிறு  பிள்ளையைப்போல்  தேவனுடைய  ராஜ்யத்தை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்,  அதில்  பிரவேசிக்கமாட்டான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  18:17)

evanaagilum  si’ru  pi'l'laiyaippoal  theavanudaiya  raajyaththai  eat’rukko'l'laavittaal,  athil  piraveasikkamaattaan  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  18:17)

அப்பொழுது  தலைவன்  ஒருவன்  அவரை  நோக்கி:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்வதற்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  (லூக்கா  18:18)

appozhuthu  thalaivan  oruvan  avarai  noakki:  nalla  poathagarea,  niththiyajeevanaich  suthanthariththukko'lvatha’rku  naan  enna  seyyavea'ndum  en’ru  keattaan.  (lookkaa  18:18)

அதற்கு  இயேசு:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனும்  இல்லையே.  (லூக்கா  18:19)

atha’rku  iyeasu:  nee  ennai  nallavan  en’ru  solvaanean?  theavan  oruvar  thavira  nallavan  oruvanum  illaiyea.  (lookkaa  18:19)

விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  கொலை  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக,  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்  பண்ணுவாயாக  என்கிற  கற்பனைகளை  நீ  அறிந்திருக்கிறாயே  என்றார்.  (லூக்கா  18:20)

vibasaaragn  seyyaathiruppaayaaga,  kolai  seyyaathiruppaayaaga,  ka'lavu  seyyaathiruppaayaaga,  poychsaadchi  sollaathiruppaayaaga,  un  thagappanaiyum  un  thaayaiyum  kanam  pa'n'nuvaayaaga  engi’ra  ka’rpanaiga'lai  nee  a’rinthirukki’raayea  en’raar.  (lookkaa  18:20)

அதற்கு  அவன்:  இவைகளையெல்லாம்  என்  சிறு  வயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்  என்றான்.  (லூக்கா  18:21)

atha’rku  avan:  ivaiga'laiyellaam  en  si’ru  vayathumuthal  kaikko'ndirukki’rean  en’raan.  (lookkaa  18:21)

இயேசு  அதைக்  கேட்டு:  இன்னும்  உன்னிடத்தில்  ஒரு  குறைவு  உண்டு;  உனக்கு  உண்டானவைகளையெல்லாம்  விற்றுத்  தரித்திரருக்குக்  கொடு,  அப்பொழுது  பரலோகத்திலே  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  (லூக்கா  18:22)

iyeasu  athaik  keattu:  innum  unnidaththil  oru  ku’raivu  u'ndu;  unakku  u'ndaanavaiga'laiyellaam  vit’ruth  thariththirarukkuk  kodu,  appozhuthu  paraloagaththilea  unakkup  pokkisham  u'ndaayirukkum;  pinbu  ennaip  pinpat’rivaa  en’raar.  (lookkaa  18:22)

அவன்  அதிக  ஐசுவரியமுள்ளவனானபடியினால்,  இதைக்  கேட்டபொழுது,  மிகுந்த  துக்கமடைந்தான்.  (லூக்கா  18:23)

avan  athiga  aisuvariyamu'l'lavanaanapadiyinaal,  ithaik  keattapozhuthu,  miguntha  thukkamadainthaan.  (lookkaa  18:23)

அவன்  மிகுந்த  துக்கமடைந்ததை  இயேசு  கண்டு:  ஐசுவரியமுள்ளவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது.  (லூக்கா  18:24)

avan  miguntha  thukkamadainthathai  iyeasu  ka'ndu:  aisuvariyamu'l'lavarga'l  theavanudaiya  raajyaththil  piraveasippathu  evva'lavu  arithaayirukki’rathu.  (lookkaa  18:24)

ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்றார்.  (லூக்கா  18:25)

aisuvariyavaan  theavanudaiya  raajyaththil  piraveasippathaippaarkkilum,  ottagamaanathu  oosiyin  kaathilea  nuzhaivathu  e'lithaayirukkum  en’raar.  (lookkaa  18:25)

அதைக்  கேட்டவர்கள்:  அப்படியானால்  யார்  இரட்சிக்கப்படக்கூடும்  என்றார்கள்.  (லூக்கா  18:26)

athaik  keattavarga'l:  appadiyaanaal  yaar  iradchikkappadakkoodum  en’raarga'l.  (lookkaa  18:26)

அதற்கு  அவர்:  மனுஷரால்  கூடாதவைகள்  தேவனால்  கூடும்  என்றார்.  (லூக்கா  18:27)

atha’rku  avar:  manusharaal  koodaathavaiga'l  theavanaal  koodum  en’raar.  (lookkaa  18:27)

அப்பொழுது  பேதுரு  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்  விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே  என்றான்.  (லூக்கா  18:28)

appozhuthu  peathuru  avarai  noakki:  ithoa,  naangga'l  ellaavat’raiyum  vittu,  ummaip  pinpat’rinoamea  en’raan.  (lookkaa  18:28)

அதற்கு  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தினிமித்தம்  வீட்டையாவது,  பெற்றாரையாவது,  சகோதரரையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது  விட்டுவிட்ட  எவனும்,  (லூக்கா  18:29)

atha’rku  avar:  theavanudaiya  raajyaththinimiththam  veettaiyaavathu,  pet’raaraiyaavathu,  sagoathararaiyaavathu,  manaiviyaiyaavathu,  pi'l'laiga'laiyaavathu  vittuvitta  evanum,  (lookkaa  18:29)

இம்மையிலே  அதிகமானவைகளையும்,  மறுமையிலே  நித்திய  ஜீவனையும்  அடையாமற்போவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  18:30)

immaiyilea  athigamaanavaiga'laiyum,  ma’rumaiyilea  niththiya  jeevanaiyum  adaiyaama’rpoavathillaiyen’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  18:30)

பின்பு  அவர்  பன்னிருவரையும்  தம்மிடத்தில்  அழைத்து:  இதோ,  எருசலேமுக்குப்  போகிறோம்,  மனுஷகுமாரனைக்  குறித்துத்  தீர்க்கதரிசிகளால்  எழுதப்பட்டவைகளெல்லாம்  நிறைவேறும்.  (லூக்கா  18:31)

pinbu  avar  panniruvaraiyum  thammidaththil  azhaiththu:  ithoa,  erusaleamukkup  poagi'roam,  manushakumaaranaik  ku’riththuth  theerkkatharisiga'laal  ezhuthappattavaiga'lellaam  ni’raivea’rum.  (lookkaa  18:31)

எப்படியெனில்,  அவர்  புறஜாதியாரிடத்தில்  ஒப்புக்கொடுக்கப்பட்டு,  பரியாசமும்  நிந்தையும்  அடைந்து,  துப்பப்படுவார்.  (லூக்கா  18:32)

eppadiyenil,  avar  pu’rajaathiyaaridaththil  oppukkodukkappattu,  pariyaasamum  ninthaiyum  adainthu,  thuppappaduvaar.  (lookkaa  18:32)

அவரை  வாரினால்  அடித்து,  கொலை  செய்வார்கள்;  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  (லூக்கா  18:33)

avarai  vaarinaal  adiththu,  kolai  seyvaarga'l;  moon’raam  naa'lilea  avar  uyiroadea  ezhunthiruppaar  en’raar.  (lookkaa  18:33)

இவைகளில்  ஒன்றையும்  அவர்கள்  உணரவில்லை;  அவைகளின்  பொருள்  அவர்களுக்கு  மறைவாயிருந்தது,  அவர்  சொன்னவைகளை  அவர்கள்  அறிந்துகொள்ளவில்லை.  (லூக்கா  18:34)

ivaiga'lil  on’raiyum  avarga'l  u'naravillai;  avaiga'lin  poru'l  avarga'lukku  ma’raivaayirunthathu,  avar  sonnavaiga'lai  avarga'l  a’rinthuko'l'lavillai.  (lookkaa  18:34)

பின்பு  அவர்  எரிகோவுக்குச்  சமீபமாய்  வரும்போது,  ஒரு  குருடன்  வழியருகே  உட்கார்ந்து  பிச்சை  கேட்டுக்கொண்டிருந்தான்.  (லூக்கா  18:35)

pinbu  avar  erigoavukkuch  sameebamaay  varumpoathu,  oru  kurudan  vazhiyarugea  udkaarnthu  pichchai  keattukko'ndirunthaan.  (lookkaa  18:35)

ஜனங்கள்  நடக்கிற  சத்தத்தை  அவன்  கேட்டு,  இதென்ன  என்று  விசாரித்தான்.  (லூக்கா  18:36)

janangga'l  nadakki’ra  saththaththai  avan  keattu,  ithenna  en’ru  visaariththaan.  (lookkaa  18:36)

நசரேயனாகிய  இயேசு  போகிறார்  என்று  அவனுக்கு  அறிவித்தார்கள்.  அப்பொழுது  அவன்:  இயேசுவே,  தாவீதின்  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  கூப்பிட்டான்.  (லூக்கா  18:37)

nasareayanaagiya  iyeasu  poagi’raar  en’ru  avanukku  a’riviththaarga'l.  appozhuthu  avan:  iyeasuvea,  thaaveethin  kumaaranea,  enakku  iranggum  en’ru  kooppittaan.  (lookkaa  18:37)

முன்  நடப்பவர்கள்  அவன்  பேசாமலிருக்கும்படி  அவனை  அதட்டினார்கள்.  அவனோ:  தாவீதின்  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  மிகவும்  அதிகமாய்க்  கூப்பிட்டான்.  (லூக்கா  18:38)

mun  nadappavarga'l  avan  peasaamalirukkumpadi  avanai  athattinaarga'l.  avanoa:  thaaveethin  kumaaranea,  enakku  iranggum  en’ru  migavum  athigamaayk  kooppittaan.  (lookkaa  18:38)

இயேசு  நின்று,  அவனைத்  தம்மிடத்தில்  கொண்டுவரும்படி  சொன்னார்.  (லூக்கா  18:39)

iyeasu  nin’ru,  avanaith  thammidaththil  ko'nduvarumpadi  sonnaar.  (lookkaa  18:39)

அவன்  கிட்டவந்தபோது,  அவர்  அவனை  நோக்கி:  (லூக்கா  18:40)

avan  kittavanthapoathu,  avar  avanai  noakki:  (lookkaa  18:40)

நான்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறாய்  என்று  கேட்டார்.  அதற்கு  அவன்:  ஆண்டவரே,  நான்  பார்வையடையவேண்டும்  என்றான்.  (லூக்கா  18:41)

naan  unakku  enna  seyyavea'ndum  en’rirukki’raay  en’ru  keattaar.  atha’rku  avan:  aa'ndavarea,  naan  paarvaiyadaiyavea'ndum  en’raan.  (lookkaa  18:41)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  பார்வையடைவாயாக,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  (லூக்கா  18:42)

iyeasu  avanai  noakki:  nee  paarvaiyadaivaayaaga,  un  visuvaasam  unnai  iradchiththathu  en’raar.  (lookkaa  18:42)

உடனே  அவன்  பார்வையடைந்து,  தேவனை  மகிமைப்படுத்திக்கொண்டே,  அவருக்குப்  பின்சென்றான்.  ஜனங்களெல்லாரும்  அதைக்  கண்டு,  தேவனைப்  புகழ்ந்தார்கள்.  (லூக்கா  18:43)

udanea  avan  paarvaiyadainthu,  theavanai  magimaippaduththikko'ndea,  avarukkup  pinsen’raan.  janangga'lellaarum  athaik  ka'ndu,  theavanaip  pugazhnthaarga'l.  (lookkaa  18:43)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!