Sunday, May 08, 2016

Lookkaa 16 | லூக்கா 16 | Luke 16

பின்னும்  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஐசுவரியவானாகிய  ஒரு  மனுஷனுக்கு  ஒரு  உக்கிராணக்காரன்  இருந்தான்;  அவன்  தன்  எஜமானுடைய  ஆஸ்திகளை  அழித்துப்போடுகிறதாக  எஜமானுக்கு  அறிவிக்கப்பட்டது.  (லூக்கா  16:1)

pinnum  avar  thammudaiya  seesharga'lai  noakki:  aisuvariyavaanaagiya  oru  manushanukku  oru  ukkiraa'nakkaaran  irunthaan;  avan  than  ejamaanudaiya  aasthiga'lai  azhiththuppoadugi’rathaaga  ejamaanukku  a’rivikkappattathu.  (lookkaa  16:1)

அப்பொழுது  எஜமான்  அவனை  வரவழைத்து:  உன்னைக்குறித்து  நான்  இப்படிக்  கேள்விப்படுகிறதென்ன?  உன்  உக்கிராணக்  கணக்கை  யொப்புவி,  இனி  நீ  உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது  என்றான்.  (லூக்கா  16:2)

appozhuthu  ejamaan  avanai  varavazhaiththu:  unnaikku’riththu  naan  ippadik  kea'lvippadugi’rathenna?  un  ukkiraa'nak  ka'nakkai  yoppuvi,  ini  nee  ukkiraa'nakkaaranaayirukkakkoodaathu  en’raan.  (lookkaa  16:2)

அப்பொழுது  உக்கிராணக்காரன்:  நான்  என்ன  செய்வேன்,  என்  எஜமான்  உக்கிராண  விசாரிப்பிலிருந்து  என்னைத்  தள்ளிப்போடுகிறானே;  கொத்துகிறதற்கு  எனக்குப்  பெலனில்லை,  இரக்கவும்  வெட்கப்படுகிறேன்.  (லூக்கா  16:3)

appozhuthu  ukkiraa'nakkaaran:  naan  enna  seyvean,  en  ejamaan  ukkiraa'na  visaarippilirunthu  ennaith  tha'l'lippoadugi’raanea;  koththugi’ratha’rku  enakkup  belanillai,  irakkavum  vedkappadugi’rean.  (lookkaa  16:3)

உக்கிராண  விசாரிப்பைவிட்டு  நான்  தள்ளப்படும்போது,  என்னைத்  தங்கள்  வீடுகளில்  ஏற்றுக்கொள்வார்  உண்டாகும்படி  செய்யவேண்டியது  இன்னதென்று  எனக்குத்  தெரியவந்தது,  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டு;  (லூக்கா  16:4)

ukkiraa'na  visaarippaivittu  naan  tha'l'lappadumpoathu,  ennaith  thangga'l  veeduga'lil  eat’rukko'lvaar  u'ndaagumpadi  seyyavea'ndiyathu  innathen’ru  enakkuth  theriyavanthathu,  en’ru  thanakku'l'lea  sollikko'ndu;  (lookkaa  16:4)

தன்  எஜமானிடத்தில்  கடன்பட்டவர்களை  ஒவ்வொருவனாக  வரவழைத்து:  முதலாவது  வந்தவனை  நோக்கி:  நீ  என்  எஜமானிடத்தில்  பட்ட  கடன்  எவ்வளவு  என்றான்.  (லூக்கா  16:5)

than  ejamaanidaththil  kadanpattavarga'lai  ovvoruvanaaga  varavazhaiththu:  muthalaavathu  vanthavanai  noakki:  nee  en  ejamaanidaththil  patta  kadan  evva'lavu  en’raan.  (lookkaa  16:5)

அவன்:  நூறுகுடம்  எண்ணெய்  என்றான்.  அப்பொழுது  உக்கிராணக்காரன்  அவனை  நோக்கி:  நீ  உன்  சீட்டை  வாங்கி,  உட்கார்ந்து,  ஐம்பது  என்று  சீக்கிரமாய்  எழுது  என்றான்.  (லூக்கா  16:6)

avan:  noo’rukudam  e'n'ney  en’raan.  appozhuthu  ukkiraa'nakkaaran  avanai  noakki:  nee  un  seettai  vaanggi,  udkaarnthu,  aimbathu  en’ru  seekkiramaay  ezhuthu  en’raan.  (lookkaa  16:6)

பின்பு  அவன்  வேறொருவனை  நோக்கி:  நீ  பட்ட  கடன்  எவ்வளவு  என்றான்.  அவன்:  நூறு  கலம்  கோதுமை  என்றான்.  அப்பொழுது  அவன்:  நீ  உன்  சீட்டை  வாங்கி,  எண்பது  என்று  எழுது  என்றான்.  (லூக்கா  16:7)

pinbu  avan  vea'roruvanai  noakki:  nee  patta  kadan  evva'lavu  en’raan.  avan:  noo’ru  kalam  koathumai  en’raan.  appozhuthu  avan:  nee  un  seettai  vaanggi,  e'nbathu  en’ru  ezhuthu  en’raan.  (lookkaa  16:7)

அநீதியுள்ள  உக்கிராணக்காரன்  புத்தியாய்ச்  செய்தான்  என்று  எஜமான்  கண்டு,  அவனை  மெச்சிக்கொண்டான்.  இவ்விதமாய்  ஒளியின்  பிள்ளைகளைப்பார்க்கிலும்  இந்தப்  பிரபஞ்சத்தின்  பிள்ளைகள்  தங்கள்  சந்ததியில்  அதிக  புத்திமான்களாயிருக்கிறார்கள்.  (லூக்கா  16:8)

aneethiyu'l'la  ukkiraa'nakkaaran  buththiyaaych  seythaan  en’ru  ejamaan  ka'ndu,  avanai  mechchikko'ndaan.  ivvithamaay  o'liyin  pi'l'laiga'laippaarkkilum  inthap  pirapagnchaththin  pi'l'laiga'l  thangga'l  santhathiyil  athiga  buththimaanga'laayirukki’raarga'l.  (lookkaa  16:8)

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்,  நீங்கள்  மாளும்போது  உங்களை  நித்தியமான  வீடுகளிலே  ஏற்றுக்  கொள்வாருண்டாகும்படி,  அநீதியான  உலகப்பொருளால்  உங்களுக்குச்  சிநேகிதரைச்  சம்பாதியுங்கள்.  (லூக்கா  16:9)

naan  ungga'lukkuch  sollugi’rean,  neengga'l  maa'lumpoathu  ungga'lai  niththiyamaana  veeduga'lilea  eat’ruk  ko'lvaaru'ndaagumpadi,  aneethiyaana  ulagapporu'laal  ungga'lukkuch  sineagitharaich  sambaathiyungga'l.  (lookkaa  16:9)

கொஞ்சத்திலே  உண்மையுள்ளவன்  அநேகத்திலும்  உண்மையுள்ளவனாயிருக்கிறான்,  கொஞ்சத்திலே  அநீதியுள்ளவன்  அநேகத்திலும்  அநீதியுள்ளவனாயிருக்கிறான்.  (லூக்கா  16:10)

kognchaththilea  u'nmaiyu'l'lavan  aneagaththilum  u'nmaiyu'l'lavanaayirukki’raan,  kognchaththilea  aneethiyu'l'lavan  aneagaththilum  aneethiyu'l'lavanaayirukki’raan.  (lookkaa  16:10)

அநீதியான  உலகப்பொருளைப்பற்றி  நீங்கள்  உண்மையாயிராவிட்டால்,  யார்  உங்களை  நம்பி  உங்களிடத்தில்  மெய்யான  பொருளை  ஒப்புவிப்பார்கள்?  (லூக்கா  16:11)

aneethiyaana  ulagapporu'laippat’ri  neengga'l  u'nmaiyaayiraavittaal,  yaar  ungga'lai  nambi  ungga'lidaththil  meyyaana  poru'lai  oppuvippaarga'l?  (lookkaa  16:11)

வேறொருவனுடைய  காரியத்தில்  நீங்கள்  உண்மையுள்ளவர்களாயிராவிட்டால்,  உங்களுக்கு  யாதொன்றைச்  சொந்தமாகக்  கொடுப்பவர்  யார்?  (லூக்கா  16:12)

vea’roruvanudaiya  kaariyaththil  neengga'l  u'nmaiyu'l'lavarga'laayiraavittaal,  ungga'lukku  yaathon’raich  sonthamaagak  koduppavar  yaar?  (lookkaa  16:12)

எந்த  ஊழியக்காரனும்  இரண்டு  எஜமான்களுக்கு  ஊழியஞ்செய்யக்கூடாது;  ஒருவனைப்  பகைத்து  மற்றவனைச்  சிநேகிப்பான்,  அல்லது  ஒருவனைப்  பற்றிக்கொண்டு  மற்றவனை  அசட்டைபண்ணுவான்.  தேவனுக்கும்  உலகப்பொருளுக்கும்  ஊழியஞ்செய்ய  உங்களாலே  கூடாது  என்றார்.  (லூக்கா  16:13)

entha  oozhiyakkaaranum  ira'ndu  ejamaanga'lukku  oozhiyagnseyyakkoodaathu;  oruvanaip  pagaiththu  mat’ravanaich  sineagippaan,  allathu  oruvanaip  pat’rikko'ndu  mat’ravanai  asattaipa'n'nuvaan.  theavanukkum  ulagapporu'lukkum  oozhiyagnseyya  ungga'laalea  koodaathu  en’raar.  (lookkaa  16:13)

இவைகளையெல்லாம்  பொருளாசைக்காரராகிய  பரிசேயரும்  கேட்டு,  அவரைப்  பரியாசம்பண்ணினார்கள்.  (லூக்கா  16:14)

ivaiga'laiyellaam  poru'laasaikkaararaagiya  pariseayarum  keattu,  avaraip  pariyaasampa'n'ninaarga'l.  (lookkaa  16:14)

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மனுஷர்முன்பாக  உங்களை  நீதிமான்களாகக்  காட்டுகிறீர்கள்,  தேவனோ  உங்கள்  இருதயங்களை  அறிந்திருக்கிறார்;  மனுஷருக்குள்ளே  மேன்மையாக  எண்ணப்படுகிறது  தேவனுக்கு  முன்பாக  அருவருப்பாயிருக்கிறது.  (லூக்கா  16:15)

avar  avarga'lai  noakki:  neengga'l  manusharmunbaaga  ungga'lai  neethimaanga'laagak  kaattugi’reerga'l,  theavanoa  ungga'l  iruthayangga'lai  a’rinthirukki’raar;  manusharukku'l'lea  meanmaiyaaga  e'n'nappadugi’rathu  theavanukku  munbaaga  aruvaruppaayirukki’rathu.  (lookkaa  16:15)

நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசன  வாக்கியங்களும்  யோவான்வரைக்கும்  வழங்கிவந்தது;  அதுமுதல்  தேவனுடைய  ராஜ்யம்  சுவிசேஷமாய்  அறிவிக்கப்பட்டுவருகிறது,  யாவரும்  பலவந்தமாய்  அதில்  பிரவேசிக்கிறார்கள்.  (லூக்கா  16:16)

niyaayappiramaa'namum  theerkkatharisana  vaakkiyangga'lum  yoavaanvaraikkum  vazhanggivanthathu;  athumuthal  theavanudaiya  raajyam  suviseashamaay  a’rivikkappattuvarugi’rathu,  yaavarum  balavanthamaay  athil  piraveasikki’raarga'l.  (lookkaa  16:16)

வேதத்தில்  ஒரு  எழுத்தின்  உறுப்பு  அவமாய்ப்  போவதைப்பார்க்கிலும்,  வானமும்  பூமியும்  ஒழிந்துபோவது  எளிதாயிருக்கும்.  (லூக்கா  16:17)

veathaththil  oru  ezhuththin  u’ruppu  avamaayp  poavathaippaarkkilum,  vaanamum  boomiyum  ozhinthupoavathu  e'lithaayirukkum.  (lookkaa  16:17)

தன்  மனைவியைத்  தள்ளிவிட்டு,  வேறொருத்தியை  விவாகம்பண்ணுகிறவன்  விபசாரஞ்செய்கிறான்,  புருஷனாலே  தள்ளப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறான்.  (லூக்கா  16:18)

than  manaiviyaith  tha'l'livittu,  vea’roruththiyai  vivaagampa'n'nugi’ravan  vibasaaragnseygi’raan,  purushanaalea  tha'l'lappattava'lai  vivaagampa'n'nugi’ravanum  vibasaaragnseygi’raan.  (lookkaa  16:18)

ஐசுவரியமுள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  இரத்தாம்பரமும்  விலையேறப்பெற்ற  வஸ்திரமும்  தரித்து,  அநுதினமும்  சம்பிரமமாய்  வாழ்ந்துகொண்டிருந்தான்.  (லூக்கா  16:19)

aisuvariyamu'l'la  oru  manushan  irunthaan;  avan  iraththaambaramum  vilaiyea’rappet’ra  vasthiramum  thariththu,  anuthinamum  sambiramamaay  vaazhnthuko'ndirunthaan.  (lookkaa  16:19)

லாசரு  என்னும்  பேர்கொண்ட  ஒரு  தரித்திரனும்  இருந்தான்;  அவன்  பருக்கள்  நிறைந்தவனாய்,  அந்த  ஐசுவரியவானுடைய  வாசலருகே  கிடந்து,  (லூக்கா  16:20)

laasaru  ennum  pearko'nda  oru  thariththiranum  irunthaan;  avan  parukka'l  ni’rainthavanaay,  antha  aisuvariyavaanudaiya  vaasalarugea  kidanthu,  (lookkaa  16:20)

அவனுடைய  மேஜையிலிருந்து  விழுந்  துணிக்கைகளாலே  தன்  பசியை  ஆற்ற  ஆசையாயிருந்தான்;  நாய்கள்  வந்து  அவன்  பருக்களை  நக்கிற்று.  (லூக்கா  16:21)

avanudaiya  meajaiyilirunthu  vizhun  thu'nikkaiga'laalea  than  pasiyai  aat’ra  aasaiyaayirunthaan;  naayga'l  vanthu  avan  parukka'lai  nakkit’ru.  (lookkaa  16:21)

பின்பு  அந்தத்  தரித்திரன்  மரித்து,  தேவதூதரால்  ஆபிரகாமுடைய  மடியிலே  கொண்டுபோய்  விடப்பட்டான்;  ஐசுவரியவானும்  மரித்து  அடக்கம்பண்ணப்பட்டான்.  (லூக்கா  16:22)

pinbu  anthath  thariththiran  mariththu,  theavathootharaal  aabirahaamudaiya  madiyilea  ko'ndupoay  vidappattaan;  aisuvariyavaanum  mariththu  adakkampa'n'nappattaan.  (lookkaa  16:22)

பாதாளத்திலே  அவன்  வேதனைப்படுகிறபோது,  தன்  கண்களை  ஏறெடுத்து,  தூரத்திலே  ஆபிரகாமையும்  அவன்  மடியிலே  லாசருவையும்  கண்டான்.  (லூக்கா  16:23)

paathaa'laththilea  avan  veathanaippadugi’rapoathu,  than  ka'nga'lai  ea’reduththu,  thooraththilea  aabirahaamaiyum  avan  madiyilea  laasaruvaiyum  ka'ndaan.  (lookkaa  16:23)

அப்பொழுது  அவன்:  தகப்பனாகிய  ஆபிரகாமே,  நீர்  எனக்கு  இரங்கி,  லாசரு  தன்  விரலின்  நுனியைத்  தண்ணீரில்  தோய்த்து,  என்  நாவைக்  குளிரப்பண்ணும்படி  அவனை  அனுப்பவேண்டும்;  இந்த  அக்கினிஜுவாலையில்  வேதனைப்படுகிறேனே  என்று  கூப்பிட்டான்.  (லூக்கா  16:24)

appozhuthu  avan:  thagappanaagiya  aabirahaamea,  neer  enakku  iranggi,  laasaru  than  viralin  nuniyaith  tha'n'neeril  thoayththu,  en  naavaik  ku'lirappa'n'numpadi  avanai  anuppavea'ndum;  intha  akkinijuvaalaiyil  veathanaippadugi’reanea  en’ru  kooppittaan.  (lookkaa  16:24)

அதற்கு  ஆபிரகாம்:  மகனே,  நீ  பூமியிலே  உயிரோடிருக்குங்  காலத்தில்  உன்  நன்மைகளை  அனுபவித்தாய்,  லாசருவும்  அப்படியே  தீமைகளை  அநுபவித்தான்,  அதை  நினைத்துக்கொள்;  இப்பொழுது  அவன்  தேற்றப்படுகிறான்,  நீயோ  வேதனைப்படுகிறாய்.  (லூக்கா  16:25)

atha’rku  aabirahaam:  maganea,  nee  boomiyilea  uyiroadirukkung  kaalaththil  un  nanmaiga'lai  anubaviththaay,  laasaruvum  appadiyea  theemaiga'lai  anubaviththaan,  athai  ninaiththukko'l;  ippozhuthu  avan  theat’rappadugi’raan,  neeyoa  veathanaippadugi’raay.  (lookkaa  16:25)

அதுவுமல்லாமல்,  இவ்விடத்திலிருந்து  உங்களிடத்திற்குக்  கடந்துபோகவும்,  அவ்விடத்திலிருந்து  எங்களிடத்திற்குக்  கடந்துவரவும்  மனதுள்ளவர்களுக்குக்  கூடாதபடிக்கு,  எங்களுக்கும்  உங்களுக்கும்  நடுவே  பெரும்பிளப்பு  உண்டாக்கப்பட்டிருக்கிறது  என்றான்.  (லூக்கா  16:26)

athuvumallaamal,  ivvidaththilirunthu  ungga'lidaththi’rkuk  kadanthupoagavum,  avvidaththilirunthu  engga'lidaththi’rkuk  kadanthuvaravum  manathu'l'lavarga'lukkuk  koodaathapadikku,  engga'lukkum  ungga'lukkum  naduvea  perumpi'lappu  u'ndaakkappattirukki’rathu  en’raan.  (lookkaa  16:26)

அப்பொழுது  அவன்:  அப்படியானால்,  தகப்பனே,  எனக்கு  ஐந்துபேர்  சகோதரருண்டு,  அவர்களும்  வேதனையுள்ள  இந்த  இடத்துக்கு  வராதபடி,  அவன்  போய்  அவர்களுக்குச்  சாட்சியாக  அறிவிக்கும்  பொருட்டு,  (லூக்கா  16:27)

appozhuthu  avan:  appadiyaanaal,  thagappanea,  enakku  ainthupear  sagoathararu'ndu,  avarga'lum  veathanaiyu'l'la  intha  idaththukku  varaathapadi,  avan  poay  avarga'lukkuch  saadchiyaaga  a’rivikkum  poruttu,  (lookkaa  16:27)

நீர்  அவனை  என்  தகப்பன்  வீட்டுக்கு  அனுப்பும்படி  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  (லூக்கா  16:28)

neer  avanai  en  thagappan  veettukku  anuppumpadi  ummai  vea'ndikko'l'lugi’rean  en’raan.  (lookkaa  16:28)

ஆபிரகாம்  அவனை  நோக்கி:  அவர்களுக்கு  மோசேயும்  தீர்க்கதரிசிகளும்  உண்டு,  அவர்களுக்கு  அவர்கள்  செவிகொடுக்கட்டும்  என்றான்.  (லூக்கா  16:29)

aabirahaam  avanai  noakki:  avarga'lukku  moaseayum  theerkkatharisiga'lum  u'ndu,  avarga'lukku  avarga'l  sevikodukkattum  en’raan.  (lookkaa  16:29)

அதற்கு  அவன்:  அப்படியல்ல,  தகப்பனாகிய  ஆபிரகாமே,  மரித்தோரிலிருந்து  ஒருவன்  அவர்களிடத்திற்குப்  போனால்  மனந்திரும்புவார்கள்  என்றான்.  (லூக்கா  16:30)

atha’rku  avan:  appadiyalla,  thagappanaagiya  aabirahaamea,  mariththoarilirunthu  oruvan  avarga'lidaththi’rkup  poanaal  mananthirumbuvaarga'l  en’raan.  (lookkaa  16:30)

அதற்கு  அவன்:  அவர்கள்  மோசேக்கும்  தீர்க்கதரிசிகளுக்கும்  செவிகொடாவிட்டால்,  மரித்தோரிலிருந்து  ஒருவன்  எழுந்துபோனாலும்,  நம்பமாட்டார்கள்  என்று  சொன்னான்  என்றார்.  (லூக்கா  16:31)

atha’rku  avan:  avarga'l  moaseakkum  theerkkatharisiga'lukkum  sevikodaavittaal,  mariththoarilirunthu  oruvan  ezhunthupoanaalum,  nambamaattaarga'l  en’ru  sonnaan  en’raar.  (lookkaa  16:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!