Sunday, May 08, 2016

Lookkaa 15 | லூக்கா 15 | Luke 15


சகல  ஆயக்காரரும்  பாவிகளும்  அவருடைய  வசனங்களைக்  கேட்கும்படி  அவரிடத்தில்  வந்து  சேர்ந்தார்கள்.  (லூக்கா  15:1)

sagala  aayakkaararum  paaviga'lum  avarudaiya  vasanangga'laik  keadkumpadi  avaridaththil  vanthu  searnthaarga'l.  (lookkaa  15:1)

அப்பொழுது  பரிசேயரும்  வேதபாரகரும்  முறுமுறுத்து:  இவர்  பாவிகளை  ஏற்றுக்கொண்டு  அவர்களோடே  சாப்பிடுகிறார்  என்றார்கள்.  (லூக்கா  15:2)

appozhuthu  pariseayarum  veathapaaragarum  mu’rumu’ruththu:  ivar  paaviga'lai  eat’rukko'ndu  avarga'loadea  saappidugi’raar  en’raarga'l.  (lookkaa  15:2)

அவர்களுக்கு  அவர்  சொன்ன  உவமையாவது:  (லூக்கா  15:3)

avarga'lukku  avar  sonna  uvamaiyaavathu:  (lookkaa  15:3)

உங்களில்  ஒரு  மனுஷன்  நூறு  ஆடுகளை  உடையவனாயிருந்து,  அவைகளில்  ஒன்று  காணாமற்போனால்,  தொண்ணூற்றொன்பது  ஆடுகளையும்  வனாந்தரத்திலே  விட்டு,  காணாமற்போன  ஆட்டைக்  கண்டுபிடிக்குமளவும்  தேடித்திரியானோ?  (லூக்கா  15:4)

ungga'lil  oru  manushan  noo’ru  aaduga'lai  udaiyavanaayirunthu,  avaiga'lil  on’ru  kaa'naama’rpoanaal,  tho'n'noot’ronbathu  aaduga'laiyum  vanaantharaththilea  vittu,  kaa'naama’rpoana  aattaik  ka'ndupidikkuma'lavum  theadiththiriyaanoa?  (lookkaa  15:4)

கண்டுபிடித்தபின்பு,  அவன்  சந்தோஷத்தோடே  அதைத்  தன்  தோள்களின்மேல்  போட்டுக்கொண்டு,  (லூக்கா  15:5)

ka'ndupidiththapinbu,  avan  santhoashaththoadea  athaith  than  thoa'lga'linmeal  poattukko'ndu,  (lookkaa  15:5)

வீட்டுக்கு  வந்து,  சிநேகிதரையும்  அயலகத்தாரையும்  கூட  வரவழைத்து:  காணாமற்போன  என்  ஆட்டைக்  கண்டுபிடித்தேன்  என்னோடுகூடச்  சந்தோஷப்படுங்கள்  என்பான்  அல்லவா?  (லூக்கா  15:6)

veettukku  vanthu,  sineagitharaiyum  ayalagaththaaraiyum  kooda  varavazhaiththu:  kaa'naama’rpoana  en  aattaik  ka'ndupidiththean  ennoadukoodach  santhoashappadungga'l  enbaan  allavaa?  (lookkaa  15:6)

அதுபோல,  மனந்திரும்ப  அவசியமில்லாத  தொண்ணூற்றொன்பது  நீதிமான்களைக்குறித்துச்  சந்தோஷம்  உண்டாகிறதைப்பார்க்கிலும்  மனந்திரும்புகிற  ஒரே  பாவியினிமித்தம்  பரலோகத்தில்  மிகுந்த  சந்தோஷம்  உண்டாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  15:7)

athupoala,  mananthirumba  avasiyamillaatha  tho'n'noot’ronbathu  neethimaanga'laikku’riththuch  santhoasham  u'ndaagi’rathaippaarkkilum  mananthirumbugi’ra  orea  paaviyinimiththam  paraloagaththil  miguntha  santhoasham  u'ndaayirukkum  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  15:7)

அன்றியும்,  ஒரு  ஸ்திரீ  பத்து  வெள்ளிக்காசை  உடையவளாயிருந்து,  அதில்  ஒரு  வெள்ளிக்காசு  காணாமற்போனால்,  விளக்கைக்  கொளுத்தி,  வீட்டைப்  பெருக்கி,  அதைக்  கண்டுபிடிக்கிறவரைக்கும்  ஜாக்கிரதையாய்த்  தேடாமலிருப்பாளோ?  (லூக்கா  15:8)

an’riyum,  oru  sthiree  paththu  ve'l'likkaasai  udaiyava'laayirunthu,  athil  oru  ve'l'likkaasu  kaa'naama’rpoanaal,  vi'lakkaik  ko'luththi,  veettaip  perukki,  athaik  ka'ndupidikki’ravaraikkum  jaakkirathaiyaayth  theadaamaliruppaa'loa?  (lookkaa  15:8)

கண்டுபிடித்தபின்பு,  தன்  சிநேகிதிகளையும்  அயல்  வீட்டுக்காரிகளையும்  கூட  வரவழைத்து:  காணாமற்போன  வெள்ளிக்காசைக்  கண்டுபிடித்தேன்,  என்னோடுகூடச்  சந்தோஷப்படுங்கள்  என்பாள்  அல்லவா?  (லூக்கா  15:9)

ka'ndupidiththapinbu,  than  sineagithiga'laiyum  ayal  veettukkaariga'laiyum  kooda  varavazhaiththu:  kaa'naama’rpoana  ve'l'likkaasaik  ka'ndupidiththean,  ennoadukoodach  santhoashappadungga'l  enbaa'l  allavaa?  (lookkaa  15:9)

அதுபோல  மனந்திரும்புகிற  ஒரே  பாவியினிமித்தம்  தேவனுடைய  தூதர்களுக்கு  முன்பாகச்  சந்தோஷமுண்டாயிருக்கிறது  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  15:10)

athupoala  mananthirumbugi’ra  orea  paaviyinimiththam  theavanudaiya  thootharga'lukku  munbaagach  santhoashamu'ndaayirukki’rathu  en’ru  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  15:10)

பின்னும்  அவர்  சொன்னது:  ஒரு  மனுஷனுக்கு  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்.  (லூக்கா  15:11)

pinnum  avar  sonnathu:  oru  manushanukku  ira'ndu  kumaarar  irunthaarga'l.  (lookkaa  15:11)

அவர்களில்  இளையவன்  தகப்பனை  நோக்கி:  தகப்பனே,  ஆஸ்தியில்  எனக்கு  வரும்  பங்கை  எனக்குத்  தரவேண்டும்  என்றான்.  அந்தப்படி  அவன்  அவர்களுக்குத்  தன்  ஆஸ்தியைப்  பங்கிட்டுக்கொடுத்தான்.  (லூக்கா  15:12)

avarga'lil  i'laiyavan  thagappanai  noakki:  thagappanea,  aasthiyil  enakku  varum  panggai  enakkuth  tharavea'ndum  en’raan.  anthappadi  avan  avarga'lukkuth  than  aasthiyaip  panggittukkoduththaan.  (lookkaa  15:12)

சில  நாளைக்குப்பின்பு,  இளையமகன்  எல்லாவற்றையும்  சேர்த்துக்கொண்டு,  தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய்,  அங்கே  துன்மார்க்கமாய்  ஜீவனம்பண்ணி,  தன்  ஆஸ்தியை  அழித்துப்போட்டான்.  (லூக்கா  15:13)

sila  naa'laikkuppinbu,  i'laiyamagan  ellaavat’raiyum  searththukko'ndu,  thooratheasaththukkup  pu’rappattuppoay,  anggea  thunmaarkkamaay  jeevanampa'n'ni,  than  aasthiyai  azhiththuppoattaan.  (lookkaa  15:13)

எல்லாவற்றையும்  அவன்  செலவழித்தபின்பு,  அந்தத்  தேசத்திலே  கொடிய  பஞ்சமுண்டாயிற்று.  அப்பொழுது  அவன்  குறைவுபடத்தொடங்கி,  (லூக்கா  15:14)

ellaavat’raiyum  avan  selavazhiththapinbu,  anthath  theasaththilea  kodiya  pagnchamu'ndaayit’ru.  appozhuthu  avan  ku’raivupadaththodanggi,  (lookkaa  15:14)

அந்தத்  தேசத்துக்  குடிகளில்  ஒருவனிடத்தில்  போய்  ஒட்டிக்கொண்டான்.  அந்தக்  குடியானவன்  அவனைத்  தன்  வயல்களில்  பன்றிகளை  மேய்க்கும்படி  அனுப்பினான்.  (லூக்கா  15:15)

anthath  theasaththuk  kudiga'lil  oruvanidaththil  poay  ottikko'ndaan.  anthak  kudiyaanavan  avanaith  than  vayalga'lil  pan’riga'lai  meaykkumpadi  anuppinaan.  (lookkaa  15:15)

அப்பொழுது  பன்றிகள்  தின்கிற  தவிட்டினாலே  தன்  வயிற்றை  நிரப்ப  ஆசையாயிருந்தான்,  ஒருவனும்  அதை  அவனுக்குக்  கொடுக்கவில்லை.  (லூக்கா  15:16)

appozhuthu  pan’riga'l  thingi’ra  thavittinaalea  than  vayit’rai  nirappa  aasaiyaayirunthaan,  oruvanum  athai  avanukkuk  kodukkavillai.  (lookkaa  15:16)

அவனுக்குப்  புத்தி  தெளிந்தபோது,  அவன்:  என்  தகப்பனுடைய  கூலிக்காரர்  எத்தனையோ  பேருக்குப்  பூர்த்தியான  சாப்பாடு  இருக்கிறது,  நானோ  பசியினால்  சாகிறேன்.  (லூக்கா  15:17)

avanukkup  buththi  the'linthapoathu,  avan:  en  thagappanudaiya  koolikkaarar  eththanaiyoa  pearukkup  poorththiyaana  saappaadu  irukki’rathu,  naanoa  pasiyinaal  saagi’rean.  (lookkaa  15:17)

நான்  எழுந்து,  என்  தகப்பனிடத்திற்குப்  போய்:  தகப்பனே,  பரத்துக்கு  விரோதமாகவும்  உமக்கு  முன்பாகவும்  பாவஞ்செய்தேன்.  (லூக்கா  15:18)

naan  ezhunthu,  en  thagappanidaththi’rkup  poay:  thagappanea,  paraththukku  viroathamaagavum  umakku  munbaagavum  paavagnseythean.  (lookkaa  15:18)

இனிமேல்  உம்முடைய  குமாரன்  என்று  சொல்லப்படுவதற்கு  நான்  பாத்திரனல்ல,  உம்முடைய  கூலிக்காரரில்  ஒருவனாக  என்னை  வைத்துக்கொள்ளும்  என்பேன்  என்று  சொல்லி;  (லூக்கா  15:19)

inimeal  ummudaiya  kumaaran  en’ru  sollappaduvatha’rku  naan  paaththiranalla,  ummudaiya  koolikkaararil  oruvanaaga  ennai  vaiththukko'l'lum  enbean  en’ru  solli;  (lookkaa  15:19)

எழுந்து  புறப்பட்டு,  தன்  தகப்பனிடத்தில்  வந்தான்.  அவன்  தூரத்தில்  வரும்போதே,  அவனுடைய  தகப்பன்  அவனைக்  கண்டு,  மனதுருகி,  ஓடி,  அவன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு,  அவனை  முத்தஞ்செய்தான்.  (லூக்கா  15:20)

ezhunthu  pu’rappattu,  than  thagappanidaththil  vanthaan.  avan  thooraththil  varumpoathea,  avanudaiya  thagappan  avanaik  ka'ndu,  manathurugi,  oadi,  avan  kazhuththaik  kattikko'ndu,  avanai  muththagnseythaan.  (lookkaa  15:20)

குமாரன்  தகப்பனை  நோக்கி:  தகப்பனே,  பரத்துக்கு  விரோதமாகவும்,  உமக்கு  முன்பாகவும்  பாவஞ்செய்தேன்,  இனிமேல்  உம்முடைய  குமாரன்  என்று  சொல்லப்படுவதற்கு  நான்  பாத்திரன்  அல்ல  என்று  சொன்னான்.  (லூக்கா  15:21)

kumaaran  thagappanai  noakki:  thagappanea,  paraththukku  viroathamaagavum,  umakku  munbaagavum  paavagnseythean,  inimeal  ummudaiya  kumaaran  en’ru  sollappaduvatha’rku  naan  paaththiran  alla  en’ru  sonnaan.  (lookkaa  15:21)

அப்பொழுது  தகப்பன்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  நீங்கள்  உயர்ந்த  வஸ்திரத்தைக்  கொண்டுவந்து,  இவனுக்கு  உடுத்தி,  இவன்  கைக்கு  மோதிரத்தையும்  கால்களுக்குப்  பாதரட்சைகளையும்  போடுங்கள்.  (லூக்கா  15:22)

appozhuthu  thagappan  than  oozhiyakkaararai  noakki:  neengga'l  uyarntha  vasthiraththaik  ko'nduvanthu,  ivanukku  uduththi,  ivan  kaikku  moathiraththaiyum  kaalga'lukkup  paatharadchaiga'laiyum  poadungga'l.  (lookkaa  15:22)

கொழுத்த  கன்றைக்  கொண்டுவந்து  அடியுங்கள்.  நாம்  புசித்து,  சந்தோஷமாயிருப்போம்.  (லூக்கா  15:23)

kozhuththa  kan’raik  ko'nduvanthu  adiyungga'l.  naam  pusiththu,  santhoashamaayiruppoam.  (lookkaa  15:23)

என்  குமாரனாகிய  இவன்  மரித்தான்,  திரும்பவும்  உயிர்த்தான்;  காணாமற்போனான்,  திரும்பவும்  காணப்பட்டான்  என்றான்.  அப்படியே  அவர்கள்  சந்தோஷப்படத்  தொடங்கினார்கள்.  (லூக்கா  15:24)

en  kumaaranaagiya  ivan  mariththaan,  thirumbavum  uyirththaan;  kaa'naama’rpoanaan,  thirumbavum  kaa'nappattaan  en’raan.  appadiyea  avarga'l  santhoashappadath  thodangginaarga'l.  (lookkaa  15:24)

அவனுடைய  மூத்தகுமாரன்  வயலிலிருந்தான்.  அவன்  திரும்பி  வீட்டுக்குச்  சமீபமாய்  வருகிறபோது,  கீதவாத்தியத்தையும்  நடனக்களிப்பையும்  கேட்டு;  (லூக்கா  15:25)

avanudaiya  mooththakumaaran  vayalilirunthaan.  avan  thirumbi  veettukkuch  sameebamaay  varugi’rapoathu,  keethavaaththiyaththaiyum  nadanakka'lippaiyum  keattu;  (lookkaa  15:25)

ஊழியக்காரரில்  ஒருவனை  அழைத்து:  இதென்ன  என்று  விசாரித்தான்.  (லூக்கா  15:26)

oozhiyakkaararil  oruvanai  azhaiththu:  ithenna  en’ru  visaariththaan.  (lookkaa  15:26)

அதற்கு  அவன்:  உம்முடைய  சகோதரன்  வந்தார்,  அவர்  மறுபடியும்  சுகத்துடனே  உம்முடைய  தகப்பனிடத்தில்  வந்து  சேர்ந்தபடியினாலே  அவருக்காகக்  கொழுத்த  கன்றை  அடிப்பித்தார்  என்றான்.  (லூக்கா  15:27)

atha’rku  avan:  ummudaiya  sagoatharan  vanthaar,  avar  ma’rupadiyum  sugaththudanea  ummudaiya  thagappanidaththil  vanthu  searnthapadiyinaalea  avarukkaagak  kozhuththa  kan’rai  adippiththaar  en’raan.  (lookkaa  15:27)

அப்பொழுது  அவன்  கோபமடைந்து,  உள்ளே  போக  மனதில்லாதிருந்தான்.  தகப்பனோ  வெளியே  வந்து,  அவனை  வருந்தியழைத்தான்.  (லூக்கா  15:28)

appozhuthu  avan  koabamadainthu,  u'l'lea  poaga  manathillaathirunthaan.  thagappanoa  ve'liyea  vanthu,  avanai  varunthiyazhaiththaan.  (lookkaa  15:28)

அவன்  தகப்பனுக்குப்  பிரதியுத்தரமாக:  இதோ,  இத்தனை  வருஷகாலமாய்  நான்  உமக்கு  ஊழியஞ்செய்து,  ஒருக்காலும்  உம்முடைய  கற்பனையை  மீறாதிருந்தும்,  என்  சிநேகிதரோடே  நான்  சந்தோஷமாயிருக்கும்படி  நீர்  ஒருக்காலும்  எனக்கு  ஒரு  ஆட்டுக்குட்டியையாவது  கொடுக்கவில்லை.  (லூக்கா  15:29)

avan  thagappanukkup  pirathiyuththaramaaga:  ithoa,  iththanai  varushakaalamaay  naan  umakku  oozhiyagnseythu,  orukkaalum  ummudaiya  ka’rpanaiyai  mee’raathirunthum,  en  sineagitharoadea  naan  santhoashamaayirukkumpadi  neer  orukkaalum  enakku  oru  aattukkuttiyaiyaavathu  kodukkavillai.  (lookkaa  15:29)

வேசிகளிடத்தில்  உம்முடைய  ஆஸ்தியை  அழித்துப்போட்ட  உம்முடைய  குமாரனாகிய  இவன்  வந்தவுடனே  கொழுத்த  கன்றை  இவனுக்காக  அடிப்பித்தீரே  என்றான்.  (லூக்கா  15:30)

veasiga'lidaththil  ummudaiya  aasthiyai  azhiththuppoatta  ummudaiya  kumaaranaagiya  ivan  vanthavudanea  kozhuththa  kan’rai  ivanukkaaga  adippiththeerea  en’raan.  (lookkaa  15:30)

அதற்குத்  தகப்பன்:  மகனே,  நீ  எப்போதும்  என்னோடிருக்கிறாய்,  எனக்குள்ளதெல்லாம்  உன்னுடையதாயிருக்கிறது.  (லூக்கா  15:31)

atha’rkuth  thagappan:  maganea,  nee  eppoathum  ennoadirukki’raay,  enakku'l'lathellaam  unnudaiyathaayirukki’rathu.  (lookkaa  15:31)

உன்  சகோதரனாகிய  இவனோ  மரித்தான்,  திரும்பவும்  உயிர்த்தான்;  காணாமற்போனான்,  திரும்பவும்  காணப்பட்டான்;  ஆனபடியினாலே,  நாம்  சந்தோஷப்பட்டு  மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே  என்று  சொன்னான்  என்றார்.  (லூக்கா  15:32)

un  sagoatharanaagiya  ivanoa  mariththaan,  thirumbavum  uyirththaan;  kaa'naama’rpoanaan,  thirumbavum  kaa'nappattaan;  aanapadiyinaalea,  naam  santhoashappattu  magizhchchiyaayirukkavea'ndumea  en’ru  sonnaan  en’raar.  (lookkaa  15:32)


1 comment:

  1. Correction(s) made on (March 18, 2019)

    >>>(Luke 15:32) magizhchiyaayirukkavea'ndumea to magizhchchiyaayirukkavea'ndumea

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!