Sunday, May 08, 2016

Lookkaa 14 | லூக்கா 14 | Luke 14

ஒரு  ஓய்வுநாளிலே  பரிசேயரில்  தலைவனாகிய  ஒருவனுடைய  வீட்டிலே  அவர்  போஜனம்  பண்ணும்படிக்குப்  போயிருந்தார்.  (லூக்கா  14:1)

oru  oayvunaa'lilea  pariseayaril  thalaivanaagiya  oruvanudaiya  veettilea  avar  poajanam  pa'n'numpadikkup  poayirunthaar.  (lookkaa  14:1)

அப்பொழுது  நீர்க்கோவை  வியாதியுள்ள  ஒரு  மனுஷன்  அவருக்கு  முன்பாக  இருந்தான்.  என்ன  செய்வாரோவென்று  ஜனங்கள்  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.  (லூக்கா  14:2)

appozhuthu  neerkkoavai  viyaathiyu'l'la  oru  manushan  avarukku  munbaaga  irunthaan.  enna  seyvaaroaven’ru  janangga'l  avarmeal  noakkamaayirunthaarga'l.  (lookkaa  14:2)

இயேசு  நியாயசாஸ்திரிகளையும்  பரிசேயரையும்  பார்த்து:  ஓய்வு  நாளிலே  சொஸ்தமாக்குகிறது  நியாயமா  என்று  கேட்டார்.  (லூக்கா  14:3)

iyeasu  niyaayasaasthiriga'laiyum  pariseayaraiyum  paarththu:  oayvu  naa'lilea  sosthamaakkugi’rathu  niyaayamaa  en’ru  keattaar.  (lookkaa  14:3)

அதற்கு  அவர்கள்  பேசாமலிருந்தார்கள்.  அப்பொழுது  அவர்  அவனை  அழைத்து,  சொஸ்தமாக்கி,  அனுப்பிவிட்டு,  (லூக்கா  14:4)

atha’rku  avarga'l  peasaamalirunthaarga'l.  appozhuthu  avar  avanai  azhaiththu,  sosthamaakki,  anuppivittu,  (lookkaa  14:4)

அவர்களை  நோக்கி:  உங்களில்  ஒருவனுடைய  கழுதையாவது  எருதாவது  ஓய்வுநாளில்  துரவிலே  விழுந்தால்,  அவன்  அதை  உடனே  தூக்கிவிடானோ  என்றார்.  (லூக்கா  14:5)

avarga'lai  noakki:  ungga'lil  oruvanudaiya  kazhuthaiyaavathu  eruthaavathu  oayvunaa'lil  thuravilea  vizhunthaal,  avan  athai  udanea  thookkividaanoa  en’raar.  (lookkaa  14:5)

அதற்கு  உத்தரவுசொல்ல  அவர்களால்  கூடாமற்போயிற்று.  (லூக்கா  14:6)

atha’rku  uththaravusolla  avarga'laal  koodaama’rpoayit’ru.  (lookkaa  14:6)

விருந்துக்கு  அழைக்கப்பட்டவர்கள்  பந்தியில்  முதன்மையான  இடங்களைத்  தெரிந்துகொண்டதை  அவர்  பார்த்து,  அவர்களுக்கு  ஒரு  உவமையைச்  சொன்னார்:  (லூக்கா  14:7)

virunthukku  azhaikkappattavarga'l  panthiyil  muthanmaiyaana  idangga'laith  therinthuko'ndathai  avar  paarththu,  avarga'lukku  oru  uvamaiyaich  sonnaar:  (lookkaa  14:7)

ஒருவனால்  கலியாணத்துக்கு  நீ  அழைக்கப்பட்டிருக்கும்போது,  பந்தியில்  முதன்மையான  இடத்தில்  உட்காராதே;  உன்னிலும்  கனமுள்ளவன்  ஒருவேளை  அவனால்  அழைக்கப்பட்டிருப்பான்.  (லூக்கா  14:8)

oruvanaal  kaliyaa'naththukku  nee  azhaikkappattirukkumpoathu,  panthiyil  muthanmaiyaana  idaththil  udkaaraathea;  unnilum  kanamu'l'lavan  oruvea'lai  avanaal  azhaikkappattiruppaan.  (lookkaa  14:8)

அப்பொழுது  உன்னையும்  அவனையும்  அழைத்தவன்  உன்னிடத்தில்  வந்து:  இவருக்கு  இடங்கொடு  என்பான்;  அப்பொழுது  நீ  வெட்கத்தோடே  தாழ்ந்த  இடத்திற்குப்  போகவேண்டியதாயிருக்கும்.  (லூக்கா  14:9)

appozhuthu  unnaiyum  avanaiyum  azhaiththavan  unnidaththil  vanthu:  ivarukku  idangkodu  enbaan;  appozhuthu  nee  vedkaththoadea  thaazhntha  idaththi’rkup  poagavea'ndiyathaayirukkum.  (lookkaa  14:9)

நீ  அழைக்கப்பட்டிருக்கும்போது,  போய்,  தாழ்ந்த  இடத்தில்  உட்காரு;  அப்பொழுது  உன்னை  அழைத்தவன்  வந்து:  சிநேகிதனே,  உயர்ந்த  இடத்தில்  வாரும்  என்று  சொல்லும்போது,  உன்னுடனேகூடப்  பந்தியிருக்கிறவர்களுக்கு  முன்பாக  உனக்குக்  கனமுண்டாகும்.  (லூக்கா  14:10)

nee  azhaikkappattirukkumpoathu,  poay,  thaazhntha  idaththil  udkaaru;  appozhuthu  unnai  azhaiththavan  vanthu:  sineagithanea,  uyarntha  idaththil  vaarum  en’ru  sollumpoathu,  unnudaneakoodap  panthiyirukki’ravarga'lukku  munbaaga  unakkuk  kanamu'ndaagum.  (lookkaa  14:10)

தன்னைத்தான்  உயர்த்துகிறவனெவனும்  தாழ்த்தப்படுவான்,  தன்னைத்தான்  தாழ்த்துகிறவன்  உயர்த்தப்படுவான்  என்றார்.  (லூக்கா  14:11)

thannaiththaan  uyarththugi’ravanevanum  thaazhththappaduvaan,  thannaiththaan  thaazhththugi’ravan  uyarththappaduvaan  en’raar.  (lookkaa  14:11)

அன்றியும்  அவர்  தம்மை  விருந்துக்கு  அழைத்தவனை  நோக்கி:  நீ  பகல்விருந்தாவது  இராவிருந்தாவது  பண்ணும்போது,  உன்  சிநேகிதரையாகிலும்  உன்  சகோதரரையாகிலும்,  உன்  பந்து  ஜனங்களையாகிலும்,  ஐசுவரியமுள்ள  அயலகத்தாரையாகிலும்  அழைக்கவேண்டாம்;  அழைத்தால்  அவர்களும்  உன்னை  அழைப்பார்கள்,  அப்பொழுது  உனக்குப்  பதிலுக்குப்  பதில்  செய்ததாகும்.  (லூக்கா  14:12)

an'riyum  avar  thammai  virunthukku  azhaiththavanai  noakki:  nee  pagalvirunthaavathu  iraavirunthaavathu  pa'n'numpoathu,  un  sineagitharaiyaagilum  un  sagoathararaiyaagilum,  un  panthu  janangga'laiyaagilum,  aisuvariyamu'l'la  ayalagaththaaraiyaagilum  azhaikkavea'ndaam;  azhaiththaal  avarga'lum  unnai  azhaippaarga'l,  appozhuthu  unakkup  bathilukkup  bathil  seythathaagum.  (lookkaa  14:12)

நீ  விருந்துபண்ணும்போது  ஏழைகளையும்  ஊனரையும்  சப்பாணிகளையும்  குருடரையும்  அழைப்பாயாக.  (லூக்கா  14:13)

nee  virunthupa'n'numpoathu  eazhaiga'laiyum  oonaraiyum  sappaa'niga'laiyum  kurudaraiyum  azhaippaayaaga.  (lookkaa  14:13)

அப்பொழுது  நீ  பாக்கியவானாயிருப்பாய்;  அவர்கள்  உனக்குப்  பதில்  செய்யமாட்டார்கள்;  நீதிமான்களின்  உயிர்த்தெழுதலில்  உனக்குப்  பதில்  செய்யப்படும்  என்றார்.  (லூக்கா  14:14)

appozhuthu  nee  baakkiyavaanaayiruppaay;  avarga'l  unakkup  bathil  seyyamaattaarga'l;  neethimaanga'lin  uyirththezhuthalil  unakkup  bathil  seyyappadum  en’raar.  (lookkaa  14:14)

அவரோடேகூடப்  பந்தியிருந்தவர்களில்  ஒருவன்  இவைகளைக்  கேட்டபொழுது,  அவரை  நோக்கி:  தேவனுடைய  ராஜ்யத்தில்  போஜனம்பண்ணுகிறவன்  பாக்கியவான்  என்றான்.  (லூக்கா  14:15)

avaroadeakoodap  panthiyirunthavarga'lil  oruvan  ivaiga'laik  keattapozhuthu,  avarai  noakki:  theavanudaiya  raajyaththil  poajanampa'n'nugi’ravan  baakkiyavaan  en’raan.  (lookkaa  14:15)

அதற்கு  அவர்:  ஒரு  மனுஷன்  பெரியவிருந்தை  ஆயத்தம்பண்ணி,  அநேகரை  அழைப்பித்தான்.  (லூக்கா  14:16)

atha’rku  avar:  oru  manushan  periyavirunthai  aayaththampa'n'ni,  aneagarai  azhaippiththaan.  (lookkaa  14:16)

விருந்து  வேளையில்  தன்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  அழைக்கப்பட்டவர்களிடத்தில்  போய்,  எல்லாம்  ஆயத்தமாயிருக்கிறது,  வாருங்கள்,  என்று  சொல்லென்று  அவனை  அனுப்பினான்.  (லூக்கா  14:17)

virunthu  vea'laiyil  than  oozhiyakkaaranai  noakki:  nee  azhaikkappattavarga'lidaththil  poay,  ellaam  aayaththamaayirukki’rathu,  vaarungga'l,  en’ru  sollen’ru  avanai  anuppinaan.  (lookkaa  14:17)

அவர்களெல்லாரும்  போக்குச்சொல்லத்  தொடங்கினார்கள்.  ஒருவன்:  ஒரு  வயலைக்கொண்டேன்,  நான்  அகத்தியமாய்ப்போய்,  அதைப்  பார்க்கவேண்டும்,  என்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  (லூக்கா  14:18)

avarga'lellaarum  poakkuchsollath  thodangginaarga'l.  oruvan:  oru  vayalaikko'ndean,  naan  agaththiyamaayppoay,  athaip  paarkkavea'ndum,  ennai  mannikkumpadi  vea'ndikko'l'lugi’rean  en’raan.  (lookkaa  14:18)

வேறொருவன்:  ஐந்தேர்மாடு  கொண்டேன்,  அதைச்  சோதித்துப்  பார்க்கப்  போகிறேன்,  என்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  (லூக்கா  14:19)

vea'roruvan:  ainthearmaadu  ko'ndean,  athaich  soathiththup  paarkkap  poagi’rean,  ennai  mannikkumpadi  vea'ndikko'l'lugi’rean  en’raan.  (lookkaa  14:19)

வேறொருவன்:  பெண்ணை  விவாகம்பண்ணினேன்,  அதினால்  நான்  வரக்கூடாது  என்றான்.  (லூக்கா  14:20)

vea’roruvan:  pe'n'nai  vivaagampa'n'ninean,  athinaal  naan  varakkoodaathu  en’raan.  (lookkaa  14:20)

அந்த  ஊழியக்காரன்  வந்து,  இவைகளைத்  தன்  எஜமானுக்கு  அறிவித்தான்.  அப்பொழுது  வீட்டெஜமான்  கோபமடைந்து,  தன்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  பட்டணத்தின்  தெருக்களிலும்  வீதிகளிலும்  சீக்கிரமாய்ப்  போய்,  ஏழைகளையும்  ஊனரையும்  சப்பாணிகளையும்  குருடரையும்  இங்கே  கூட்டிக்கொண்டுவா  என்றான்.  (லூக்கா  14:21)

antha  oozhiyakkaaran  vanthu,  ivaiga'laith  than  ejamaanukku  a’riviththaan.  appozhuthu  veettejamaan  koabamadainthu,  than  oozhiyakkaaranai  noakki:  nee  patta'naththin  therukka'lilum  veethiga'lilum  seekkiramaayp  poay,  eazhaiga'laiyum  oonaraiyum  sappaa'niga'laiyum  kurudaraiyum  inggea  koottikko'nduvaa  en’raan.  (lookkaa  14:21)

ஊழியக்காரன்  அப்படியே  செய்து:  ஆண்டவரே,  நீர்  கட்டளையிட்டபடி  செய்தாயிற்று,  இன்னும்  இடம்  இருக்கிறது  என்றான்.  (லூக்கா  14:22)

oozhiyakkaaran  appadiyea  seythu:  aa'ndavarea,  neer  katta'laiyittapadi  seythaayit’ru,  innum  idam  irukki’rathu  en’raan.  (lookkaa  14:22)

அப்பொழுது  எஜமான்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  பெருவழிகளிலும்  வேலிகளருகிலும்  போய்,  என்  வீடு  நிறையும்படியாக  ஜனங்களை  உள்ளே  வரும்படி  வருந்திக்  கூட்டிக்கொண்டுவா;  (லூக்கா  14:23)

appozhuthu  ejamaan  oozhiyakkaaranai  noakki:  nee  peruvazhiga'lilum  vealiga'larugilum  poay,  en  veedu  ni’raiyumpadiyaaga  janangga'lai  u'l'lea  varumpadi  varunthik  koottikko'nduvaa;  (lookkaa  14:23)

அழைக்கப்பட்டிருந்த  அந்த  மனுஷரில்  ஒருவனாகிலும்  என்  விருந்தை  ருசிபார்ப்பதில்லை  யென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றான்  என்று  சொன்னார்.  (லூக்கா  14:24)

azhaikkappattiruntha  antha  manusharil  oruvanaagilum  en  virunthai  rusipaarppathillai  yen’ru  ungga'lukkuch  sollugi’rean  en’raan  en’ru  sonnaar.  (lookkaa  14:24)

பின்பு  அநேக  ஜனங்கள்  அவரோடேகூடப்  பிரயாணமாய்ப்  போகையில்,  அவர்களிடமாய்  அவர்  திரும்பிப்பார்த்து:  (லூக்கா  14:25)

pinbu  aneaga  janangga'l  avaroadeakoodap  pirayaa'namaayp  poagaiyil,  avarga'lidamaay  avar  thirumbippaarththu:  (lookkaa  14:25)

யாதொருவன்  என்னிடத்தில்  வந்து,  தன்  தகப்பனையும்  தாயையும்  மனைவியையும்  பிள்ளைகளையும்  சகோதரரையும்  சகோதரிகளையும்,  தன்  ஜீவனையும்  வெறுக்காவிட்டால்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  (லூக்கா  14:26)

yaathoruvan  ennidaththil  vanthu,  than  thagappanaiyum  thaayaiyum  manaiviyaiyum  pi'l'laiga'laiyum  sagoathararaiyum  sagoathariga'laiyum,  than  jeevanaiyum  ve’rukkaavittaal  enakkuch  seeshanaayirukkamaattaan.  (lookkaa  14:26)

தன்  சிலுவையைச்  சுமந்துகொண்டு  எனக்குப்  பின்செல்லாதவன்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  (லூக்கா  14:27)

than  siluvaiyaich  sumanthuko'ndu  enakkup  pinsellaathavan  enakkuch  seeshanaayirukkamaattaan.  (lookkaa  14:27)

உங்களில்  ஒருவன்  ஒரு  கோபுரத்தைக்  கட்ட  மனதாயிருந்து,  (லூக்கா  14:28)

ungga'lil  oruvan  oru  koapuraththaik  katta  manathaayirunthu,  (lookkaa  14:28)

அஸ்திபாரம்  போட்டபின்பு  முடிக்கத்  திராணியில்லாமற்போனால்,  பார்க்கிறவர்களெல்லாரும்:  (லூக்கா  14:29)

asthibaaram  poattapinbu  mudikkath  thiraa'niyillaama’rpoanaal,  paarkki’ravarga'lellaarum:  (lookkaa  14:29)

இந்த  மனுஷன்  கட்டத்தொடங்கி,  முடிக்கத்  திராணியில்லாமற்போனான்  என்று  சொல்லித்  தன்னைப்  பரியாசம்பண்ணாதபடிக்கு,  அதைக்  கட்டித்  தீர்க்கிறதற்குத்  தனக்கு  நிர்வாகமுண்டோ  இல்லையோ  என்று  முன்பு  அவன்  உட்கார்ந்து  செல்லுஞ்செலவைக்  கணக்குப்  பாராமலிருப்பானோ?  (லூக்கா  14:30)

intha  manushan  kattaththodanggi,  mudikkath  thiraa'niyillaama’rpoanaan  en’ru  sollith  thannaip  pariyaasampa'n'naathapadikku,  athaik  kattith  theerkki’ratha’rkuth  thanakku  nirvaagamu'ndoa  illaiyoa  en’ru  munbu  avan  udkaarnthu  sellugnselavaik  ka'nakkup  paaraamaliruppaanoa?  (lookkaa  14:30)

அன்றியும்  ஒரு  ராஜா  மற்றொரு  ராஜாவோடே  யுத்தஞ்செய்யப்  போகிறபோது,  தன்மேல்  இருபதினாயிரம்  சேவகரோடே  வருகிற  அவனைத்  தான்  பதினாயிரம்  சேவகரைக்கொண்டு  எதிர்க்கக்  கூடுமோ  கூடாதோ  என்று  முன்பு  உட்கார்ந்து  ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?  (லூக்கா  14:31)

an’riyum  oru  raajaa  mat’roru  raajaavoadea  yuththagnseyyap  poagi’rapoathu,  thanmeal  irubathinaayiram  seavagaroadea  varugi’ra  avanaith  thaan  pathinaayiram  seavagaraikko'ndu  ethirkkak  koodumoa  koodaathoa  en’ru  munbu  udkaarnthu  aaloasanaipa'n'naamaliruppaanoa?  (lookkaa  14:31)

கூடாதென்று  கண்டால்,  மற்றவன்  இன்னும்  தூரத்திலிருக்கும்போதே,  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  சமாதானத்துக்கானவைகளைக்  கேட்டுக்கொள்வானே.  (லூக்கா  14:32)

koodaathen’ru  ka'ndaal,  mat’ravan  innum  thooraththilirukkumpoathea,  sthaanaabathiga'lai  anuppi,  samaathaanaththukkaanavaiga'laik  keattukko'lvaanea.  (lookkaa  14:32)

அப்படியே  உங்களில்  எவனாகிலும்  தனக்கு  உண்டானவைகளையெல்லாம்  வெறுத்துவிடாவிட்டால்  அவன்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  (லூக்கா  14:33)

appadiyea  ungga'lil  evanaagilum  thanakku  u'ndaanavaiga'laiyellaam  ve’ruththuvidaavittaal  avan  enakkuch  seeshanaayirukkamaattaan.  (lookkaa  14:33)

உப்பு  நல்லதுதான்,  உப்பு  சாரமற்றுப்போனால்  எதினால்  சாரமாக்கப்படும்?  (லூக்கா  14:34)

uppu  nallathuthaan,  uppu  saaramat’ruppoanaal  ethinaal  saaramaakkappadum?  (lookkaa  14:34)

அது  நிலத்துக்காகிலும்  எருவுக்காகிலும்  உதவாது,  அதை  வெளியே  கொட்டிப்  போடுவார்கள்.  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றார்.  (லூக்கா  14:35)

athu  nilaththukkaagilum  eruvukkaagilum  uthavaathu,  athai  ve'liyea  kottip  poaduvaarga'l.  keadki’ratha’rkuk  kaathu'l'lavan  keadkakkadavan  en’raar.  (lookkaa  14:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!