Sunday, May 08, 2016

Lookkaa 12 | லூக்கா 12 | Luke 12


அத்தருணத்திலே  அநேகமாயிரம்  ஜனங்கள்  ஒருவரையொருவர்  மிதிக்கத்தக்கதாகக்  கூடிவந்திருக்கையில்,  அவர்  முதலாவது  தம்முடைய  சீஷரை  நோக்கி:  நீங்கள்  மாயமாகிய  பரிசேயருடைய  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  (லூக்கா  12:1)

aththaru'naththilea  aneagamaayiram  janangga'l  oruvaraiyoruvar  mithikkaththakkathaagak  koodivanthirukkaiyil,  avar  muthalaavathu  thammudaiya  seesharai  noakki:  neengga'l  maayamaagiya  pariseayarudaiya  pu'liththamaavaikku’riththu  echcharikkaiyaayirungga'l.  (lookkaa  12:1)

வெளியாக்கப்படாத  மறைபொருளுமில்லை,  அறியப்படாத  இரகசியமுமில்லை.  (லூக்கா  12:2)

ve'liyaakkappadaatha  ma’raiporu'lumillai,  a’riyappadaatha  iragasiyamumillai.  (lookkaa  12:2)

ஆதலால்,  நீங்கள்  இருளிலே  பேசினது  எதுவோ,  அது  வெளிச்சத்திலே  கேட்கப்படும்;  நீங்கள்  அறைகளில்  காதிலே  சொன்னது  எதுவோ,  அது  வீடுகளின்மேல்  கூறப்படும்.  (லூக்கா  12:3)

aathalaal,  neengga'l  iru'lilea  peasinathu  ethuvoa,  athu  ve'lichchaththilea  keadkappadum;  neengga'l  a’raiga'lil  kaathilea  sonnathu  ethuvoa,  athu  veeduga'linmeal  koo’rappadum.  (lookkaa  12:3)

என்  சிநேகிதராகிய  உங்களுக்கு  நான்  சொல்லுகிறேன்:  சரீரத்தைக்  கொலைசெய்து,  அதன்பின்பு  அதிகமாக  ஒன்றும்  செய்யத்  திராணியில்லாதவர்களுக்குப்  பயப்படாதிருங்கள்.  (லூக்கா  12:4)

en  sineagitharaagiya  ungga'lukku  naan  sollugi’rean:  sareeraththaik  kolaiseythu,  athanpinbu  athigamaaga  on’rum  seyyath  thiraa'niyillaathavarga'lukkup  bayappadaathirungga'l.  (lookkaa  12:4)

நீங்கள்  இன்னாருக்குப்  பயப்படவேண்டுமென்று  உங்களுக்குக்  காண்பிக்கிறேன்:  கொலைசெய்தபின்பு  நரகத்திலே  தள்ள  வல்லமையுள்ளவருக்குப்  பயப்படுங்கள்;  ஆம்,  அவருக்கே  பயப்படுங்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:5)

neengga'l  innaarukkup  bayappadavea'ndumen’ru  ungga'lukkuk  kaa'nbikki’rean:  kolaiseythapinbu  naragaththilea  tha'l'la  vallamaiyu'l'lavarukkup  bayappadungga'l;  aam,  avarukkea  bayappadungga'l  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:5)

இரண்டு  காசுக்கு  ஐந்து  அடைக்கலான்  குருவிகளை  விற்கிறார்களல்லவா?  அவைகளில்  ஒன்றாகிலும்  தேவனால்  மறக்கப்  படுகிறதில்லை.  (லூக்கா  12:6)

ira'ndu  kaasukku  ainthu  adaikkalaan  kuruviga'lai  vi’rki’raarga'lallavaa?  avaiga'lil  on’raagilum  theavanaal  ma’rakkap  padugi’rathillai.  (lookkaa  12:6)

உங்கள்  தலையிலுள்ள  மயிரெல்லாம்  எண்ணப்பட்டிருக்கிறது,  ஆகையால்  பயப்படாதிருங்கள்,  அநேகம்  அடைக்கலான்  குருவிகளைப்  பார்க்கிலும்  நீங்கள்  விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.  (லூக்கா  12:7)

ungga'l  thalaiyilu'l'la  mayirellaam  e'n'nappattirukki’rathu,  aagaiyaal  bayappadaathirungga'l,  aneagam  adaikkalaan  kuruviga'laip  paarkkilum  neengga'l  viseashiththavarga'laayirukki’reerga'l.  (lookkaa  12:7)

அன்றியும்  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  மனுஷர்  முன்பாக  என்னை  அறிக்கைபண்ணுகிறவன்  எவனோ,  அவனை  மனுஷகுமாரனும்  தேவதூதர்  முன்பாக  அறிக்கைபண்ணுவார்.  (லூக்கா  12:8)

an’riyum  naan  ungga'lukkuch  sollugi’rean:  manushar  munbaaga  ennai  a’rikkaipa'n'nugi’ravan  evanoa,  avanai  manushakumaaranum  theavathoothar  munbaaga  a’rikkaipa'n'nuvaar.  (lookkaa  12:8)

மனுஷர்  முன்பாக  என்னை  மறுதலிக்கிறவன்  தேவதூதர்  முன்பாக  மறுதலிக்கப்படுவான்.  (லூக்கா  12:9)

manushar  munbaaga  ennai  ma’ruthalikki’ravan  theavathoothar  munbaaga  ma’ruthalikkappaduvaan.  (lookkaa  12:9)

எவனாகிலும்  மனுஷகுமாரனுக்கு  விரோதமான  விசேஷத்தைச்  சொன்னால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்;  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாய்த்  தூஷணஞ்  சொல்லுகிறவனுக்கோ  மன்னிக்கப்படுவதில்லை.  (லூக்கா  12:10)

evanaagilum  manushakumaaranukku  viroathamaana  viseashaththaich  sonnaal  athu  avanukku  mannikkappadum;  parisuththa  aavikku  viroathamaayth  thoosha'nagn  sollugi’ravanukkoa  mannikkappaduvathillai.  (lookkaa  12:10)

அன்றியும்,  ஜெப  ஆலயத்தலைவர்களுக்கும்  துரைத்தனத்தார்களுக்கும்  அதிகாரமுள்ளவர்களுக்கும்  முன்பாக  உங்களைக்  கொண்டுபோய்  விடும்போது:  எப்படி,  என்னத்தை  மாறுத்தரமாகச்  சொல்லுவோம்  என்றும்,  எதைப்  பேசுவோம்  என்றும்  கவலைப்படாதிருங்கள்.  (லூக்கா  12:11)

an’riyum,  jeba  aalayaththalaivarga'lukkum  thuraiththanaththaarga'lukkum  athigaaramu'l'lavarga'lukkum  munbaaga  ungga'laik  ko'ndupoay  vidumpoathu:  eppadi,  ennaththai  maa’ruththaramaagach  solluvoam  en’rum,  ethaip  peasuvoam  en’rum  kavalaippadaathirungga'l.  (lookkaa  12:11)

நீங்கள்  பேசவேண்டியவைகளைப்  பரிசுத்த  ஆவியானவர்  அந்நேரத்திலே  உங்களுக்குப்  போதிப்பார்  என்றார்.  (லூக்கா  12:12)

neengga'l  peasavea'ndiyavaiga'laip  parisuththa  aaviyaanavar  annearaththilea  ungga'lukkup  poathippaar  en’raar.  (lookkaa  12:12)

அப்பொழுது  ஜனக்கூட்டத்தில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  ஆஸ்தியைப்  பாகம்பிரித்து  என்  வீதத்தை  எனக்குத்  தரும்படி  என்  சகோதரனுக்குக்  கட்டளையிடவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டான்.  (லூக்கா  12:13)

appozhuthu  janakkoottaththil  oruvan  avarai  noakki:  poathagarea,  aasthiyaip  paagampiriththu  en  veethaththai  enakkuth  tharumpadi  en  sagoatharanukkuk  katta'laiyidavea'ndum  en’ru  keattukko'ndaan.  (lookkaa  12:13)

அதற்கு  அவர்:  மனுஷனே,  என்னை  உங்களுக்கு  நியாயாதிபதியாகவும்  பங்கிடுகிறவனாகவும்  வைத்தவன்  யார்  என்றார்.  (லூக்கா  12:14)

atha’rku  avar:  manushanea,  ennai  ungga'lukku  niyaayaathibathiyaagavum  panggidugi’ravanaagavum  vaiththavan  yaar  en’raar.  (lookkaa  12:14)

பின்பு  அவர்  அவர்களை  நோக்கி:  பொருளாசையைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்  ஒருவனுக்கு  எவ்வளவு  திரளான  ஆஸ்தி  இருந்தாலும்  அது  அவனுக்கு  ஜீவன்  அல்ல  என்றார்.  (லூக்கா  12:15)

pinbu  avar  avarga'lai  noakki:  poru'laasaiyaikku’riththu  echcharikkaiyaayirungga'l;  eanenil  oruvanukku  evva'lavu  thira'laana  aasthi  irunthaalum  athu  avanukku  jeevan  alla  en’raar.  (lookkaa  12:15)

அல்லாமலும்,  ஒரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  ஐசுவரியமுள்ள  ஒருவனுடைய  நிலம்  நன்றாய்  விளைந்தது.  (லூக்கா  12:16)

allaamalum,  oru  uvamaiyai  avarga'lukkuch  sonnaar:  aisuvariyamu'l'la  oruvanudaiya  nilam  nan’raay  vi'lainthathu.  (lookkaa  12:16)

அப்பொழுது  அவன்:  நான்  என்ன  செய்வேன்?  என்  தானியங்களைச்  சேர்த்து  வைக்கிறதற்கு  இடமில்லையே;  (லூக்கா  12:17)

appozhuthu  avan:  naan  enna  seyvean?  en  thaaniyangga'laich  searththu  vaikki’ratha’rku  idamillaiyea;  (lookkaa  12:17)

நான்  ஒன்று  செய்வேன்,  என்  களஞ்சியங்களை  இடித்து,  பெரிதாகக்  கட்டி,  எனக்கு  விளைந்த  தானியத்தையும்  என்  பொருள்களையும்  அங்கே  சேர்த்துவைத்து,  (லூக்கா  12:18)

naan  on’ru  seyvean,  en  ka'lagnchiyangga'lai  idiththu,  perithaagak  katti,  enakku  vi'laintha  thaaniyaththaiyum  en  poru'lga'laiyum  anggea  searththuvaiththu,  (lookkaa  12:18)

பின்பு:  ஆத்துமாவே,  உனக்காக  அநேக  வருஷங்களுக்கு  அநேகம்  பொருள்கள்  சேர்த்து  வைக்கப்பட்டிருக்கிறது;  நீ  இளைப்பாறி,  புசித்துக்  குடித்து,  பூரிப்பாயிரு  என்று  என்  ஆத்துமாவோடே  சொல்லுவேன்  என்று  தனக்குள்ளே  சிந்தித்துச்  சொல்லிக்கொண்டான்.  (லூக்கா  12:19)

pinbu:  aaththumaavea,  unakkaaga  aneaga  varushangga'lukku  aneagam  poru'lga'l  searththu  vaikkappattirukki’rathu;  nee  i'laippaa’ri,  pusiththuk  kudiththu,  poorippaayiru  en’ru  en  aaththumaavoadea  solluvean  en’ru  thanakku'l'lea  sinthiththuch  sollikko'ndaan.  (lookkaa  12:19)

தேவனோ  அவனை  நோக்கி:  மதிகேடனே,  உன்  ஆத்துமா  உன்னிடத்திலிருந்து  இந்த  இராத்திரியிலே  எடுத்துக்  கொள்ளப்படும்,  அப்பொழுது  நீ  சேகரித்தவைகள்  யாருடையதாகும்  என்றார்.  (லூக்கா  12:20)

theavanoa  avanai  noakki:  mathikeadanea,  un  aaththumaa  unnidaththilirunthu  intha  iraaththiriyilea  eduththuk  ko'l'lappadum,  appozhuthu  nee  seagariththavaiga'l  yaarudaiyathaagum  en’raar.  (lookkaa  12:20)

தேவனிடத்தில்  ஐசுவரியவானாயிராமல்,  தனக்காகவே  பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்கிறவன்  இப்படியே  இருக்கிறான்  என்றார்.  (லூக்கா  12:21)

theavanidaththil  aisuvariyavaanaayiraamal,  thanakkaagavea  pokkishangga'laich  searththuvaikki’ravan  ippadiyea  irukki’raan  en’raar.  (lookkaa  12:21)

பின்னும்  அவர்  தம்முடைய  சீஷரை  நோக்கி:  இப்படியிருக்கிறபடியினால்,  என்னத்தை  உண்போம்  என்று  உங்கள்  ஜீவனுக்காகவும்,  என்னத்தை  உடுப்போம்  என்று  உங்கள்  சரீரத்துக்காகவும்  கவலைப்படாதிருங்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:22)

pinnum  avar  thammudaiya  seesharai  noakki:  ippadiyirukki’rapadiyinaal,  ennaththai  u'nboam  en’ru  ungga'l  jeevanukkaagavum,  ennaththai  uduppoam  en’ru  ungga'l  sareeraththukkaagavum  kavalaippadaathirungga'l  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:22)

ஆகாரத்தைப்பார்க்கிலும்  ஜீவனும்,  உடையைப்பார்க்கிலும்  சரீரமும்  விசேஷித்தவைகளாயிருக்கிறது.  (லூக்கா  12:23)

aagaaraththaippaarkkilum  jeevanum,  udaiyaippaarkkilum  sareeramum  viseashiththavaiga'laayirukki’rathu.  (lookkaa  12:23)

காகங்களைக்  கவனித்துப்பாருங்கள்,  அவைகள்  விதைக்கிறதுமில்லை  அறுக்கிறதுமில்லை,  அவைகளுக்குப்  பண்டசாலையுமில்லை,  களஞ்சியமுமில்லை,  இல்லாவிட்டாலும்  அவைகளையும்  தேவன்  பிழைப்பூட்டுகிறார்;  பறவைகளைப்பார்க்கிலும்  நீங்கள்  எவ்வளவோ  விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.  (லூக்கா  12:24)

kaagangga'laik  kavaniththuppaarungga'l,  avaiga'l  vithaikki’rathumillai  a’rukki’rathumillai,  avaiga'lukkup  pa'ndasaalaiyumillai,  ka'lagnchiyamumillai,  illaavittaalum  avaiga'laiyum  theavan  pizhaippoottugi’raar;  pa’ravaiga'laippaarkkilum  neengga'l  evva'lavoa  viseashiththavarga'laayirukki’reerga'l.  (lookkaa  12:24)

கவலைப்படுகிறதினால்  உங்களில்  எவன்  தன்  சரீர  அளவோடு  ஒரு  முழத்தைக்  கூட்டுவான்.  (லூக்கா  12:25)

kavalaippadugi’rathinaal  ungga'lil  evan  than  sareera  a'lavoadu  oru  muzhaththaik  koottuvaan.  (lookkaa  12:25)

மிகவும்  அற்பமான  காரியமுதலாய்  உங்களால்  செய்யக்கூடாதிருக்க,  மற்றவைகளுக்காக  நீங்கள்  கவலைப்படுகிறதென்ன?  (லூக்கா  12:26)

migavum  a’rpamaana  kaariyamuthalaay  ungga'laal  seyyakkoodaathirukka,  mat’ravaiga'lukkaaga  neengga'l  kavalaippadugi’rathenna?  (lookkaa  12:26)

காட்டுப்புஷ்பங்கள்  எப்படி  வளருகிறதென்று  கவனித்துப்பாருங்கள்;  அவைகள்  உழைக்கிறதுமில்லை,  நூற்கிறதுமில்லை,  என்றாலும்  சாலொமோன்  முதலாய்த்  தன்  சர்வ  மகிமையிலும்  அவைகளில்  ஒன்றைப்போலாகிலும்  உடுத்தியிருந்ததில்லை  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:27)

kaattuppushpangga'l  eppadi  va'larugi’rathen’ru  kavaniththuppaarungga'l;  avaiga'l  uzhaikki’rathumillai,  noo’rki’rathumillai,  en’raalum  saalomoan  muthalaayth  than  sarva  magimaiyilum  avaiga'lil  on’raippoalaagilum  uduththiyirunthathillai  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:27)

இப்படியிருக்க,  அற்பவிசுவாசிகளே,  இன்றைக்குக்  காட்டிலிருந்து  நாளைக்கு  அடுப்பிலே  போடப்படுகிற  புல்லுக்குத்  தேவன்  இவ்விதமாக  உடுத்துவித்தால்,  உங்களுக்கு  உடுத்துவிப்பது  அதிக  நிச்சயமல்லவா?  (லூக்கா  12:28)

ippadiyirukka,  a’rpavisuvaasiga'lea,  in’raikkuk  kaattilirunthu  naa'laikku  aduppilea  poadappadugi’ra  pullukkuth  theavan  ivvithamaaga  uduththuviththaal,  ungga'lukku  uduththuvippathu  athiga  nichchayamallavaa?  (lookkaa  12:28)

ஆகையால்,  என்னத்தை  உண்போம்,  என்னத்தைக்  குடிப்போம்  என்று,  நீங்கள்  கேளாமலும்  சந்தேகப்படாமலும்  இருங்கள்.  (லூக்கா  12:29)

aagaiyaal,  ennaththai  u'nboam,  ennaththaik  kudippoam  en’ru,  neengga'l  kea'laamalum  santheagappadaamalum  irungga'l.  (lookkaa  12:29)

இவைகளையெல்லாம்  உலகத்தார்  நாடித்  தேடுகிறார்கள்;  இவைகள்  உங்களுக்கு  வேண்டியவைகளென்று  உங்கள்  பிதாவானவர்  அறிந்திருக்கிறார்.  (லூக்கா  12:30)

ivaiga'laiyellaam  ulagaththaar  naadith  theadugi’raarga'l;  ivaiga'l  ungga'lukku  vea'ndiyavaiga'len’ru  ungga'l  pithaavaanavar  a’rinthirukki’raar.  (lookkaa  12:30)

தேவனுடைய  ராஜ்யத்தையே  தேடுங்கள்,  அப்பொழுது  இவைகளெல்லாம்  உங்களுக்குக்  கூடக்  கொடுக்கப்படும்.  (லூக்கா  12:31)

theavanudaiya  raajyaththaiyea  theadungga'l,  appozhuthu  ivaiga'lellaam  ungga'lukkuk  koodak  kodukkappadum.  (lookkaa  12:31)

பயப்படாதே  சிறுமந்தையே,  உங்களுக்கு  ராஜ்யத்தைக்  கொடுக்க  உங்கள்  பிதா  பிரியமாயிருக்கிறார்.  (லூக்கா  12:32)

bayappadaathea  si’rumanthaiyea,  ungga'lukku  raajyaththaik  kodukka  ungga'l  pithaa  piriyamaayirukki’raar.  (lookkaa  12:32)

உங்களுக்கு  உள்ளவைகளை  விற்றுப்  பிச்சைகொடுங்கள்,  பழமையாய்ப்  போகாத  பணப்பைகளையும்  குறையாத  பொக்கிஷத்தையும்  பரலோகத்திலே  உங்களுக்குச்  சம்பாதித்து  வையுங்கள்,  அங்கே  திருடன்  அணுகுகிறதுமில்லை,  பூச்சி  கெடுக்கிறதுமில்லை.  (லூக்கா  12:33)

ungga'lukku  u'l'lavaiga'lai  vit’rup  pichchaikodungga'l,  pazhamaiyaayp  poagaatha  pa'nappaiga'laiyum  ku’raiyaatha  pokkishaththaiyum  paraloagaththilea  ungga'lukkuch  sambaathiththu  vaiyungga'l,  anggea  thirudan  a'nugugi’rathumillai,  poochchi  kedukki’rathumillai.  (lookkaa  12:33)

உங்கள்  பொக்கிஷம்  எங்கே  இருக்கிறதோ  அங்கே  உங்கள்  இருதயமும்  இருக்கும்.  (லூக்கா  12:34)

ungga'l  pokkisham  enggea  irukki’rathoa  anggea  ungga'l  iruthayamum  irukkum.  (lookkaa  12:34)

உங்கள்  அரைகள்  கட்டப்பட்டதாகவும்,  உங்கள்  விளக்குகள்  எரிகிறதாகவும்,  (லூக்கா  12:35)

ungga'l  araiga'l  kattappattathaagavum,  ungga'l  vi'lakkuga'l  erigi’rathaagavum,  (lookkaa  12:35)

தங்கள்  எஜமான்  கலியாணத்திலிருந்து  வந்து  தட்டும்போது,  உடனே  அவருக்குத்  திறக்கும்படி  எப்பொழுது  வருவார்  என்று  காத்திருக்கிற  மனுஷருக்கு  ஒப்பாகவும்  இருங்கள்.  (லூக்கா  12:36)

thangga'l  ejamaan  kaliyaa'naththilirunthu  vanthu  thattumpoathu,  udanea  avarukkuth  thi’rakkumpadi  eppozhuthu  varuvaar  en’ru  kaaththirukki’ra  manusharukku  oppaagavum  irungga'l.  (lookkaa  12:36)

எஜமான்  வரும்போது,  விழித்திருக்கிறவர்களாகக்  காணப்படுகிற  ஊழியக்காரரே  பாக்கியவான்கள்.  அவர்  அரைகட்டிக்கொண்டு,  அவர்களைப்  பந்தியிருக்கச்செய்து,  சமீபமாய்  வந்து,  அவர்களுக்கு  ஊழியஞ்செய்வார்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:37)

ejamaan  varumpoathu,  vizhiththirukki’ravarga'laagak  kaa'nappadugi’ra  oozhiyakkaararea  baakkiyavaanga'l.  avar  araikattikko'ndu,  avarga'laip  panthiyirukkachseythu,  sameebamaay  vanthu,  avarga'lukku  oozhiyagnseyvaar  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:37)

அவர்  இரண்டாம்  ஜாமத்திலாவது  மூன்றாம்  ஜாமத்திலாவது  வந்து,  அவர்கள்  அப்படியே  இருக்கக்கண்டால்,  அவ்வூழியக்காரர்  பாக்கியவான்கள்.  (லூக்கா  12:38)

avar  ira'ndaam  jaamaththilaavathu  moon’raam  jaamaththilaavathu  vanthu,  avarga'l  appadiyea  irukkakka'ndaal,  avvoozhiyakkaarar  baakkiyavaanga'l.  (lookkaa  12:38)

திருடன்  இன்னநேரத்தில்  வருவான்  என்று  வீட்டெஜமானுக்குத்  தெரிந்திருந்தால்,  அவன்  விழித்திருந்து,  தன்  வீட்டைக்  கன்னமிடவொட்டான்  என்று  அறிந்திருக்கிறீர்கள்.  (லூக்கா  12:39)

thirudan  innanearaththil  varuvaan  en’ru  veettejamaanukkuth  therinthirunthaal,  avan  vizhiththirunthu,  than  veettaik  kannamidavottaan  en’ru  a’rinthirukki’reerga'l.  (lookkaa  12:39)

அந்தப்படியே  நீங்கள்  நினையாத  நேரத்தில்  மனுஷகுமாரன்  வருவார்,  ஆகையால்  நீங்களும்  ஆயத்தமாயிருங்கள்  என்றார்.  (லூக்கா  12:40)

anthappadiyea  neengga'l  ninaiyaatha  nearaththil  manushakumaaran  varuvaar,  aagaiyaal  neengga'lum  aayaththamaayirungga'l  en’raar.  (lookkaa  12:40)

அப்பொழுது  பேதுரு  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இந்த  உவமையை  எங்களுக்குமாத்திரம்  சொல்லுகிறீரோ,  எல்லாருக்கும்  சொல்லுகிறீரோ  என்று  கேட்டான்.  (லூக்கா  12:41)

appozhuthu  peathuru  avarai  noakki:  aa'ndavarea,  intha  uvamaiyai  engga'lukkumaaththiram  sollugi’reeroa,  ellaarukkum  sollugi’reeroa  en’ru  keattaan.  (lookkaa  12:41)

அதற்குக்  கர்த்தர்:  பணிவிடைக்காரருக்குத்  தகுதியான  காலத்திலே  படிகொடுக்கும்படி  எஜமான்  அவர்கள்மேல்  அதிகாரியாக  வைக்கத்தக்க  உண்மையும்  விவேகமுமுள்ள  விசாரணைக்காரன்  யாவன்?  (லூக்கா  12:42)

atha’rkuk  karththar:  pa'nividaikkaararukkuth  thaguthiyaana  kaalaththilea  padikodukkumpadi  ejamaan  avarga'lmeal  athigaariyaaga  vaikkaththakka  u'nmaiyum  viveagamumu'l'la  visaara'naikkaaran  yaavan?  (lookkaa  12:42)

எஜமான்  வரும்போது  அப்படியே  செய்கிறவனாய்க்  காணப்படுகிற  ஊழியக்காரன்  பாக்கியவான்.  (லூக்கா  12:43)

ejamaan  varumpoathu  appadiyea  seygi’ravanaayk  kaa'nappadugi’ra  oozhiyakkaaran  baakkiyavaan.  (lookkaa  12:43)

தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும்  அவனை  விசாரணைக்காரனாக  வைப்பான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:44)

thanakku'l'lathellaavat’rinmealum  avanai  visaara'naikkaaranaaga  vaippaan  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:44)

அந்த  ஊழியக்காரனோ,  என்  எஜமான்  வர  நாள்  செல்லும்  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டு,  வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  அடிக்கவும்,  புசித்துக்  குடித்து  வெறிக்கவும்  தலைப்பட்டால்,  (லூக்கா  12:45)

antha  oozhiyakkaaranoa,  en  ejamaan  vara  naa'l  sellum  en’ru  thanakku'l'lea  sollikko'ndu,  vealaikkaararaiyum  vealaikkaariga'laiyum  adikkavum,  pusiththuk  kudiththu  ve’rikkavum  thalaippattaal,  (lookkaa  12:45)

அவன்  நினையாத  நாளிலும்,  அறியாத  நேரத்திலும்,  அந்த  ஊழியக்காரனுடைய  எஜமான்  வந்து,  அவனைக்  கடினமாய்த்  தண்டித்து,  உண்மையில்லாதவர்களோடே  அவனுக்குப்  பங்கை  நியமிப்பான்.  (லூக்கா  12:46)

avan  ninaiyaatha  naa'lilum,  a’riyaatha  nearaththilum,  antha  oozhiyakkaaranudaiya  ejamaan  vanthu,  avanaik  kadinamaayth  tha'ndiththu,  u'nmaiyillaathavarga'loadea  avanukkup  panggai  niyamippaan.  (lookkaa  12:46)

தன்  எஜமானுடைய  சித்தத்தை  அறிந்தும்  ஆயத்தமாயிராமலும்,  அவனுடைய  சித்தத்தின்படி  செய்யாமலும்  இருந்த  ஊழியக்காரன்  அநேக  அடிகள்  அடிக்கப்படுவான்.  (லூக்கா  12:47)

than  ejamaanudaiya  siththaththai  a’rinthum  aayaththamaayiraamalum,  avanudaiya  siththaththinpadi  seyyaamalum  iruntha  oozhiyakkaaran  aneaga  adiga'l  adikkappaduvaan.  (lookkaa  12:47)

அறியாதவனாயிருந்து,  அடிகளுக்கு  ஏதுவானவைகளைச்  செய்தவனோ,  சில  அடிகள்  அடிக்கப்படுவான்.  எவனிடத்தில்  அதிகங்  கொடுக்கப்படுகிறதோ  அவனிடத்தில்  அதிகங்  கேட்கப்படும்;  மனுஷர்  எவனிடத்தில்  அதிகமாய்  ஒப்புவிக்கிறார்களோ  அவனிடத்தில்  அதிகமாய்க்  கேட்பார்கள்.  (லூக்கா  12:48)

a’riyaathavanaayirunthu,  adiga'lukku  eathuvaanavaiga'laich  seythavanoa,  sila  adiga'l  adikkappaduvaan.  evanidaththil  athigang  kodukkappadugi’rathoa  avanidaththil  athigang  keadkappadum;  manushar  evanidaththil  athigamaay  oppuvikki’raarga'loa  avanidaththil  athigamaayk  keadpaarga'l.  (lookkaa  12:48)

பூமியின்மேல்  அக்கினியைப்  போடவந்தேன்,  அது  இப்பொழுதே  பற்றி  எரிய  வேண்டுமென்று  விரும்புகிறேன்.  (லூக்கா  12:49)

boomiyinmeal  akkiniyaip  poadavanthean,  athu  ippozhuthea  pat’ri  eriya  vea'ndumen’ru  virumbugi’rean.  (lookkaa  12:49)

ஆகிலும்  நான்  முழுகவேண்டிய  ஒரு  ஸ்நானமுண்டு,  அது  முடியுமளவும்  எவ்வளவோ  நெருக்கப்படுகிறேன்.  (லூக்கா  12:50)

aagilum  naan  muzhugavea'ndiya  oru  snaanamu'ndu,  athu  mudiyuma'lavum  evva'lavoa  nerukkappadugi’rean.  (lookkaa  12:50)

நான்  பூமியிலே  சமாதானத்தை  உண்டாக்கவந்தேன்  என்று  நினைக்கிறீர்களோ?  சமாதானத்தையல்ல,  பிரிவினையையே  உண்டாக்கவந்தேன்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  12:51)

naan  boomiyilea  samaathaanaththai  u'ndaakkavanthean  en’ru  ninaikki’reerga'loa?  samaathaanaththaiyalla,  pirivinaiyaiyea  u'ndaakkavanthean  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  12:51)

எப்படியெனில்,  இதுமுதல்  ஒரே  வீட்டிலே  ஐந்துபேர்  பிரிந்திருப்பார்கள்,  இரண்டுபேருக்கு  விரோதமாய்  மூன்றுபேரும்,  மூன்றுபேருக்கு  விரோதமாய்  இரண்டுபேரும்  பிரிந்திருப்பார்கள்.  (லூக்கா  12:52)

eppadiyenil,  ithumuthal  orea  veettilea  ainthupear  pirinthiruppaarga'l,  ira'ndupearukku  viroathamaay  moon’rupearum,  moon’rupearukku  viroathamaay  ira'ndupearum  pirinthiruppaarga'l.  (lookkaa  12:52)

தகப்பன்  மகனுக்கும்  மகன்  தகப்பனுக்கும்,  தாய்  மகளுக்கும்  மகள்  தாய்க்கும்,  மாமி  மருமகளுக்கும்  மருமகள்  மாமிக்கும்  விரோதமாய்ப்  பிரிந்திருப்பார்கள்  என்றார்.  (லூக்கா  12:53)

thagappan  maganukkum  magan  thagappanukkum,  thaay  maga'lukkum  maga'l  thaaykkum,  maami  marumaga'lukkum  marumaga'l  maamikkum  viroathamaayp  pirinthiruppaarga'l  en’raar.  (lookkaa  12:53)

பின்பு  அவர்  ஜனங்களை  நோக்கி:  மேற்கே  மேகம்  எழும்புகிறதை  நீங்கள்  காணும்போது,  மழை  வருமென்று  சொல்லுகிறீர்கள்;  அந்தப்படியுமாகும்.  (லூக்கா  12:54)

pinbu  avar  janangga'lai  noakki:  mea’rkea  meagam  ezhumbugi’rathai  neengga'l  kaa'numpoathu,  mazhai  varumen’ru  sollugi’reerga'l;  anthappadiyumaagum.  (lookkaa  12:54)

தென்றல்  அடிக்கிறதை  நீங்கள்  காணும்போது  உஷ்ணம்  உண்டாகுமென்று  சொல்லுகிறீர்கள்,  அந்தப்படியுமாகும்.  (லூக்கா  12:55)

then’ral  adikki’rathai  neengga'l  kaa'numpoathu  ush'nam  u'ndaagumen’ru  sollugi’reerga'l,  anthappadiyumaagum.  (lookkaa  12:55)

மாயக்காரரே,  பூமியின்  தோற்றத்தையும்  வானத்தின்  தோற்றத்தையும்  நிதானிக்க  உங்களுக்குத்  தெரியுமே,  இந்தக்  காலத்தையோ  நிதானியாமற்போகிறதென்ன?  (லூக்கா  12:56)

maayakkaararea,  boomiyin  thoat’raththaiyum  vaanaththin  thoat’raththaiyum  nithaanikka  ungga'lukkuth  theriyumea,  inthak  kaalaththaiyoa  nithaaniyaama’rpoagi’rathenna?  (lookkaa  12:56)

நியாயம்  இன்னதென்று  நீங்களே  தீர்மானியாமலிருக்கிறதென்ன?  (லூக்கா  12:57)

niyaayam  innathen’ru  neengga'lea  theermaaniyaamalirukki’rathenna?  (lookkaa  12:57)

உனக்கு  எதிராளியானவன்  உன்னை  அதிகாரியினிடத்திற்குக்  கொண்டுபோகிறபோது,  வழியிலேதானே  அவனிடத்திலிருந்து  விடுதலையாகும்படி  பிரயாசப்படு,  இல்லாவிட்டால்,  அவன்  உன்னை  நியாயாதிபதிக்கு  முன்பாகக்  கொண்டுபோவான்,  நியாயாதிபதி  உன்னைச்  சேவகனிடத்தில்  ஒப்புக்கொடுப்பான்,  சேவகன்  உன்னைச்  சிறைச்சாலையில்  போடுவான்.  (லூக்கா  12:58)

unakku  ethiraa'liyaanavan  unnai  athigaariyinidaththi’rkuk  ko'ndupoagi’rapoathu,  vazhiyileathaanea  avanidaththilirunthu  viduthalaiyaagumpadi  pirayaasappadu,  illaavittaal,  avan  unnai  niyaayaathibathikku  munbaagak  ko'ndupoavaan,  niyaayaathibathi  unnaich  seavaganidaththil  oppukkoduppaan,  seavagan  unnaich  si’raichsaalaiyil  poaduvaan.  (lookkaa  12:58)

நீ  கடைசிக்காசைக்  கொடுத்துத்  தீர்க்குமட்டும்,  அவ்விடத்திலிருந்து  புறப்படமாட்டாய்  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  12:59)

nee  kadaisikkaasaik  koduththuth  theerkkumattum,  avvidaththilirunthu  pu’rappadamaattaay  en’ru  unakkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  12:59)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!