Friday, May 06, 2016

Lookkaa 10 | லூக்கா 10 | Luke 10


இவைகளுக்குப்பின்பு  கர்த்தர்  வேறே  எழுபதுபேரை  நியமித்து,  தாம்  போகும்  சகல  பட்டணங்களுக்கும்  இடங்களுக்கும்  அவர்களைத்  தமக்கு  முன்னே  இரண்டிரண்டு  பேராக  அனுப்பினார்.  (லூக்கா  10:1)

ivaiga'lukkuppinbu  karththar  vea’rea  ezhubathupearai  niyamiththu,  thaam  poagum  sagala  patta'nangga'lukkum  idangga'lukkum  avarga'laith  thamakku  munnea  ira'ndira'ndu  pearaaga  anuppinaar.  (lookkaa  10:1)

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  அறுப்பு  மிகுதி,  வேலையாட்களோ  கொஞ்சம்;  ஆகையால்  அறுப்புக்கு  எஜமான்  தமது  அறுப்புக்கு  வேலையாட்களை  அனுப்பும்படி  அவரை  வேண்டிக்கொள்ளுங்கள்.  (லூக்கா  10:2)

appozhuthu  avar  avarga'lai  noakki:  a’ruppu  miguthi,  vealaiyaadka'loa  kogncham;  aagaiyaal  a’ruppukku  ejamaan  thamathu  a’ruppukku  vealaiyaadka'lai  anuppumpadi  avarai  vea'ndikko'l'lungga'l.  (lookkaa  10:2)

புறப்பட்டுப்போங்கள்;  ஆட்டுக்குட்டிகளை  ஓநாய்களுக்குள்ளே  அனுப்புகிறதுபோல,  இதோ,  நான்  உங்களை  அனுப்புகிறேன்.  (லூக்கா  10:3)

pu’rappattuppoangga'l;  aattukkuttiga'lai  oanaayga'lukku'l'lea  anuppugi’rathupoala,  ithoa,  naan  ungga'lai  anuppugi’rean.  (lookkaa  10:3)

பணப்பையையும்  சாமான்  பையையும்  பாதரட்சைகளையும்  கொண்டுபோகவேண்டாம்;  வழியிலே  ஒருவரையும்  வினவவும்  வேண்டாம்.  (லூக்கா  10:4)

pa'nappaiyaiyum  saamaan  paiyaiyum  paatharadchaiga'laiyum  ko'ndupoagavea'ndaam;  vazhiyilea  oruvaraiyum  vinavavum  vea'ndaam.  (lookkaa  10:4)

ஒரு  வீட்டில்  பிரவேசிக்கிறபோது:  இந்த  வீட்டுக்குச்  சமாதானம்  உண்டாவதாகவென்று  முதலாவது  சொல்லுங்கள்.  (லூக்கா  10:5)

oru  veettil  piraveasikki’rapoathu:  intha  veettukkuch  samaathaanam  u'ndaavathaagaven’ru  muthalaavathu  sollungga'l.  (lookkaa  10:5)

சமாதான  பாத்திரன்  அங்கே  இருந்தால்,  நீங்கள்  கூறின  சமாதானம்  அவனிடத்தில்  தங்கும்,  இல்லாதிருந்தால்  அது  உங்களிடத்திற்குத்  திரும்பிவரும்.  (லூக்கா  10:6)

samaathaana  paaththiran  anggea  irunthaal,  neengga'l  koo’rina  samaathaanam  avanidaththil  thanggum,  illaathirunthaal  athu  ungga'lidaththi’rkuth  thirumbivarum.  (lookkaa  10:6)

அந்த  வீட்டிலேதானே  நீங்கள்  தங்கியிருந்து,  அவர்கள்  கொடுக்கிறவைகளைப்  புசித்துக்  குடியுங்கள்;  வேலையாள்  தன்  கூலிக்குப்  பாத்திரனாயிருக்கிறான்.  வீட்டுக்கு  வீடு  போகாதிருங்கள்.  (லூக்கா  10:7)

antha  veettileathaanea  neengga'l  thanggiyirunthu,  avarga'l  kodukki’ravaiga'laip  pusiththuk  kudiyungga'l;  vealaiyaa'l  than  koolikkup  paaththiranaayirukki’raan.  veettukku  veedu  poagaathirungga'l.  (lookkaa  10:7)

ஒரு  பட்டணத்தில்  நீங்கள்  பிரவேசிக்கிறபொழுது,  ஜனங்கள்  உங்களை  ஏற்றுக்கொண்டால்  அவர்கள்  உங்கள்முன்  வைக்கிறவைகளை  நீங்கள்  புசித்து,  (லூக்கா  10:8)

oru  patta'naththil  neengga'l  piraveasikki’rapozhuthu,  janangga'l  ungga'lai  eat’rukko'ndaal  avarga'l  ungga'lmun  vaikki’ravaiga'lai  neengga'l  pusiththu,  (lookkaa  10:8)

அவ்விடத்திலுள்ள  பிணியாளிகளைச்  சொஸ்தமாக்கி:  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுக்குச்  சமீபமாய்  வந்திருக்கிறது  என்று  அவர்களுக்குச்  சொல்லுங்கள்.  (லூக்கா  10:9)

avvidaththilu'l'la  pi'niyaa'liga'laich  sosthamaakki:  theavanudaiya  raajyam  ungga'lukkuch  sameebamaay  vanthirukki’rathu  en’ru  avarga'lukkuch  sollungga'l.  (lookkaa  10:9)

யாதொரு  பட்டணத்தில்  நீங்கள்  பிரவேசிக்கிறபொழுது,  ஜனங்கள்  உங்களை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்  அதின்  வீதிகளிலே  நீங்கள்  போய்:  (லூக்கா  10:10)

yaathoru  patta'naththil  neengga'l  piraveasikki’rapozhuthu,  janangga'l  ungga'lai  eat’rukko'l'laavittaal  athin  veethiga'lilea  neengga'l  poay:  (lookkaa  10:10)

எங்களில்  ஒட்டின  உங்கள்  பட்டணத்தின்  தூசியையும்  உங்களுக்கு  விரோதமாய்த்  துடைத்துப்போடுகிறோம்;  ஆயினும்  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுக்குச்  சமீபமாய்  வந்திருக்கிறதென்பதை  அறிந்துகொள்வீர்களாக  என்று  சொல்லுங்கள்.  (லூக்கா  10:11)

engga'lil  ottina  ungga'l  patta'naththin  thoosiyaiyum  ungga'lukku  viroathamaayth  thudaiththuppoadugi’roam;  aayinum  theavanudaiya  raajyam  ungga'lukkuch  sameebamaay  vanthirukki’rathenbathai  a’rinthuko'lveerga'laaga  en’ru  sollungga'l.  (lookkaa  10:11)

அந்தப்  பட்டணத்திற்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்  அந்த  நாளிலே  சோதோம்  நாட்டிற்கு  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (லூக்கா  10:12)

anthap  patta'naththi’rku  neariduvathaippaarkkilum  antha  naa'lilea  soathoam  naatti’rku  neariduvathu  ilaguvaayirukkum  en’ru  ungga'lukkuch  sollugi’rean.  (lookkaa  10:12)

கோராசீன்  பட்டணமே,  உனக்கு  ஐயோ,  பெத்சாயிதா  பட்டணமே,  உனக்கு  ஐயோ,  உங்களில்  செய்யப்பட்ட  பலத்த  செய்கைகள்  தீருவிலும்  சீதோனிலும்  செய்யப்பட்டிருந்ததானால்,  அப்பொழுதே  இரட்டுடுத்தி,  சாம்பலில்  உட்கார்ந்து,  மனந்திரும்பியிருப்பார்கள்.  (லூக்கா  10:13)

koaraaseen  patta'namea,  unakku  aiyoa,  bethsaayithaa  patta'namea,  unakku  aiyoa,  ungga'lil  seyyappatta  balaththa  seygaiga'l  theeruvilum  seethoanilum  seyyappattirunthathaanaal,  appozhuthea  irattuduththi,  saambalil  udkaarnthu,  mananthirumbiyiruppaarga'l.  (lookkaa  10:13)

நியாயத்தீர்ப்புநாளில்  உங்களுக்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்,  தீருவுக்கும்  சீதோனுக்கும்  நேரிடுவது  இலகுவாயிருக்கும்.  (லூக்கா  10:14)

niyaayaththeerppunaa'lil  ungga'lukku  neariduvathaippaarkkilum,  theeruvukkum  seethoanukkum  neariduvathu  ilaguvaayirukkum.  (lookkaa  10:14)

வானபரியந்தம்  உயர்த்தப்பட்ட  கப்பர்நகூமே,  நீ  பாதாளபரியந்தம்  தாழ்த்தப்படுவாய்  என்று  சொல்லி,  (லூக்கா  10:15)

vaanapariyantham  uyarththappatta  kapparnahoomea,  nee  paathaa'lapariyantham  thaazhththappaduvaay  en’ru  solli,  (lookkaa  10:15)

சீஷரை  நோக்கி:  உங்களுக்குச்  செவிகொடுக்கிறவன்  எனக்குச்  செவிகொடுக்கிறான்,  உங்களை  அசட்டைபண்ணுகிறவன்  என்னை  அசட்டைபண்ணுகிறான்,  என்னை  அசட்டைபண்ணுகிறவன்  என்னை  அனுப்பினவரை  அசட்டைபண்ணுகிறான்  என்றார்.  (லூக்கா  10:16)

seesharai  noakki:  ungga'lukkuch  sevikodukki’ravan  enakkuch  sevikodukki’raan,  ungga'lai  asattaipa'n'nugi’ravan  ennai  asattaipa'n'nugi’raan,  ennai  asattaipa'n'nugi’ravan  ennai  anuppinavarai  asattaipa'n'nugi’raan  en’raar.  (lookkaa  10:16)

பின்பு  அந்த  எழுபதுபேரும்  சந்தோஷத்தோடே  திரும்பிவந்து:  ஆண்டவரே,  உம்முடைய  நாமத்தினாலே  பிசாசுகளும்  எங்களுக்குக்  கீழ்ப்படிகிறது  என்றார்கள்.  (லூக்கா  10:17)

pinbu  antha  ezhubathupearum  santhoashaththoadea  thirumbivanthu:  aa'ndavarea,  ummudaiya  naamaththinaalea  pisaasuga'lum  engga'lukkuk  keezhppadigi’rathu  en’raarga'l.  (lookkaa  10:17)

அவர்களை  அவர்  நோக்கி:  சாத்தான்  மின்னலைப்போல  வானத்திலிருந்து  விழுகிறதைக்  கண்டேன்.  (லூக்கா  10:18)

avarga'lai  avar  noakki:  saaththaan  minnalaippoala  vaanaththilirunthu  vizhugi’rathaik  ka'ndean.  (lookkaa  10:18)

இதோ,  சர்ப்பங்களையும்  தேள்களையும்  மிதிக்கவும்,  சத்துருவினுடைய  சகல  வல்லமையையும்  மேற்கொள்ளவும்  உங்களுக்கு  அதிகாரங்கொடுக்கிறேன்;  ஒன்றும்  உங்களைச்  சேதப்படுத்தமாட்டாது.  (லூக்கா  10:19)

ithoa,  sarppangga'laiyum  thea'lga'laiyum  mithikkavum,  saththuruvinudaiya  sagala  vallamaiyaiyum  mea’rko'l'lavum  ungga'lukku  athigaarangkodukki’rean;  on’rum  ungga'laich  seathappaduththamaattaathu.  (lookkaa  10:19)

ஆகிலும்,  ஆவிகள்  உங்களுக்குக்  கீழ்ப்படிகிறதற்காக  நீங்கள்  சந்தோஷப்படாமல்,  உங்கள்  நாமங்கள்  பரலோகத்தில்  எழுதியிருக்கிறதற்காகச்  சந்தோஷப்படுங்கள்  என்றார்.  (லூக்கா  10:20)

aagilum,  aaviga'l  ungga'lukkuk  keezhppadigi’ratha’rkaaga  neengga'l  santhoashappadaamal,  ungga'l  naamangga'l  paraloagaththil  ezhuthiyirukki’ratha’rkaagach  santhoashappadungga'l  en’raar.  (lookkaa  10:20)

அந்த  வேளையில்  இயேசு  ஆவியிலே  களிகூர்ந்து:  பிதாவே!  வானத்துக்கும்  பூமிக்கும்  ஆண்டவரே!  இவைகளை  நீர்  ஞானிகளுக்கும்  கல்விமான்களுக்கும்  மறைத்து,  பாலகருக்கு  வெளிப்படுத்தினபடியால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்;  ஆம்,  பிதாவே!  இப்படிச்  செய்வது  உம்முடைய  திருவுளத்துக்குப்  பிரியமாயிருந்தது.  (லூக்கா  10:21)

antha  vea'laiyil  iyeasu  aaviyilea  ka'likoornthu:  pithaavea!  vaanaththukkum  boomikkum  aa'ndavarea!  ivaiga'lai  neer  gnaaniga'lukkum  kalvimaanga'lukkum  ma’raiththu,  paalagarukku  ve'lippaduththinapadiyaal  ummai  sthoaththirikki’rean;  aam,  pithaavea!  ippadich  seyvathu  ummudaiya  thiruvu'laththukkup  piriyamaayirunthathu.  (lookkaa  10:21)

சகலமும்  என்  பிதாவினால்  எனக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;  பிதா  தவிர  வேறொருவனும்  குமாரன்  இன்னாரென்று  அறியான்,  குமாரனும்,  குமாரன்  அவரை  எவனுக்கு  வெளிப்படுத்தச்  சித்தமாயிருக்கிறாரோ  அவனுந்தவிர,  வேறொருவனும்  பிதா  இன்னாரென்று  அறியான்  என்றார்.  (லூக்கா  10:22)

sagalamum  en  pithaavinaal  enakku  oppukkodukkappattirukki’rathu;  pithaa  thavira  vea’roruvanum  kumaaran  innaaren’ru  a’riyaan,  kumaaranum,  kumaaran  avarai  evanukku  ve'lippaduththach  siththamaayirukki’raaroa  avanunthavira,  vea’roruvanum  pithaa  innaaren’ru  a’riyaan  en’raar.  (lookkaa  10:22)

பின்பு  தமது  சீஷரிடத்தில்  திரும்பி,  தனித்து  அவர்களை  நோக்கி:  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணுங்  கண்கள்  பாக்கியமுள்ளவைகள்.  (லூக்கா  10:23)

pinbu  thamathu  seesharidaththil  thirumbi,  thaniththu  avarga'lai  noakki:  neengga'l  kaa'ngi’ravaiga'laik  kaa'nung  ka'nga'l  baakkiyamu'l'lavaiga'l.  (lookkaa  10:23)

அநேக  தீர்க்கதரிசிகளும்  ராஜாக்களும்  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணவும்,  நீங்கள்  கேட்கிறவைகளைக்  கேட்கவும்  விரும்பியும்,  காணாமலும்  கேளாமலும்  போனார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (லூக்கா  10:24)

aneaga  theerkkatharisiga'lum  raajaakka'lum  neengga'l  kaa'ngi’ravaiga'laik  kaa'navum,  neengga'l  keadki’ravaiga'laik  keadkavum  virumbiyum,  kaa'naamalum  kea'laamalum  poanaarga'l  en’ru  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (lookkaa  10:24)

அப்பொழுது  நியாயசாஸ்திரி  ஒருவன்  எழுந்திருந்து,  அவரைச்  சோதிக்கும்படி:  போதகரே,  நித்திய  ஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  (லூக்கா  10:25)

appozhuthu  niyaayasaasthiri  oruvan  ezhunthirunthu,  avaraich  soathikkumpadi:  poathagarea,  niththiya  jeevanaich  suthanthariththukko'l'lumpadikku  naan  enna  seyyavea'ndum  en’ru  keattaan.  (lookkaa  10:25)

அதற்கு  அவர்:  நியாயப்பிரமாணத்தில்  என்ன  எழுதியிருக்கிறது?  நீ  வாசித்திருக்கிறது  என்ன  என்றார்.  (லூக்கா  10:26)

atha’rku  avar:  niyaayappiramaa'naththil  enna  ezhuthiyirukki’rathu?  nee  vaasiththirukki’rathu  enna  en’raar.  (lookkaa  10:26)

அவன்  பிரதியுத்தரமாக:  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்  உன்  முழு  ஆத்துமாவோடும்  உன்  முழுப்  பலத்தோடும்  உன்  முழுச்சிந்தையோடும்  அன்புகூர்ந்து,  உன்னிடத்தில்  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்று  எழுதியிருக்கிறது  என்றான்.  (லூக்கா  10:27)

avan  pirathiyuththaramaaga:  un  theavanaagiya  karththaridaththil  un  muzhu  iruthayaththoadum  un  muzhu  aaththumaavoadum  un  muzhup  balaththoadum  un  muzhuchsinthaiyoadum  anbukoornthu,  unnidaththil  anbukooruvathupoalap  pi’ranidaththilum  anbukooruvaayaaga  en’ru  ezhuthiyirukki’rathu  en’raan.  (lookkaa  10:27)

அவர்  அவனை  நோக்கி:  நிதானமாய்  உத்தரவு  சொன்னாய்;  அப்படியே  செய்,  அப்பொழுது  பிழைப்பாய்  என்றார்.  (லூக்கா  10:28)

avar  avanai  noakki:  nithaanamaay  uththaravu  sonnaay;  appadiyea  sey,  appozhuthu  pizhaippaay  en’raar.  (lookkaa  10:28)

அவன்  தன்னை  நீதிமான்  என்று  காண்பிக்க  மனதாய்  இயேசுவை  நோக்கி:  எனக்குப்  பிறன்  யார்  என்று  கேட்டான்.  (லூக்கா  10:29)

avan  thannai  neethimaan  en’ru  kaa'nbikka  manathaay  iyeasuvai  noakki:  enakkup  pi’ran  yaar  en’ru  keattaan.  (lookkaa  10:29)

இயேசு  பிரதியுத்தரமாக:  ஒரு  மனுஷன்  எருசலேமிலிருந்து  எரிகோவுக்குப்  போகையில்  கள்ளர்  கையில்  அகப்பட்டான்;  அவர்கள்  அவன்  வஸ்திரங்களை  உரிந்துகொண்டு,  அவனைக்  காயப்படுத்தி,  குற்றுயிராக  விட்டுப்  போனார்கள்.  (லூக்கா  10:30)

iyeasu  pirathiyuththaramaaga:  oru  manushan  erusaleamilirunthu  erigoavukkup  poagaiyil  ka'l'lar  kaiyil  agappattaan;  avarga'l  avan  vasthirangga'lai  urinthuko'ndu,  avanaik  kaayappaduththi,  kut’ruyiraaga  vittup  poanaarga'l.  (lookkaa  10:30)

அப்பொழுது  தற்செயலாய்  ஒரு  ஆசாரியன்  அந்த  வழியே  வந்து,  அவனைக்  கண்டு,  பக்கமாய்  விலகிப்போனான்.  (லூக்கா  10:31)

appozhuthu  tha’rseyalaay  oru  aasaariyan  antha  vazhiyea  vanthu,  avanaik  ka'ndu,  pakkamaay  vilagippoanaan.  (lookkaa  10:31)

அந்தப்படியே  ஒரு  லேவியனும்  அந்த  இடத்துக்கு  வந்து,  அவனைக்  கண்டு,  பக்கமாய்  விலகிப்போனான்.  (லூக்கா  10:32)

anthappadiyea  oru  leaviyanum  antha  idaththukku  vanthu,  avanaik  ka'ndu,  pakkamaay  vilagippoanaan.  (lookkaa  10:32)

பின்பு  சமாரியன்  ஒருவன்  பிரயாணமாய்  வருகையில்,  அவனைக்  கண்டு,  மனதுருகி,  (லூக்கா  10:33)

pinbu  samaariyan  oruvan  pirayaa'namaay  varugaiyil,  avanaik  ka'ndu,  manathurugi,  (lookkaa  10:33)

கிட்ட  வந்து,  அவனுடைய  காயங்களில்  எண்ணெயும்  திராட்சரசமும்  வார்த்து,  காயங்களைக்  கட்டி,  அவனைத்  தன்  சுயவாகனத்தின்மேல்  ஏற்றி,  சத்திரத்துக்குக்  கொண்டுபோய்,  அவனைப்  பராமரித்தான்.  (லூக்கா  10:34)

kitta  vanthu,  avanudaiya  kaayangga'lil  e'n'neyum  thiraadcharasamum  vaarththu,  kaayangga'laik  katti,  avanaith  than  suyavaaganaththinmeal  eat’ri,  saththiraththukkuk  ko'ndupoay,  avanaip  paraamariththaan.  (lookkaa  10:34)

மறுநாளிலே  தான்  புறப்படும்போது  இரண்டு  பணத்தை  எடுத்து,  சத்திரத்தான்  கையில்  கொடுத்து:  நீ  இவனை  விசாரித்துக்கொள்,  அதிகமாய்  ஏதாகிலும்  இவனுக்காகச்  செலவழித்தால்,  நான்  திரும்பிவரும்போது  அதை  உனக்குத்  தருவேன்  என்றான்.  (லூக்கா  10:35)

ma’runaa'lilea  thaan  pu’rappadumpoathu  ira'ndu  pa'naththai  eduththu,  saththiraththaan  kaiyil  koduththu:  nee  ivanai  visaariththukko'l,  athigamaay  eathaagilum  ivanukkaagach  selavazhiththaal,  naan  thirumbivarumpoathu  athai  unakkuth  tharuvean  en’raan.  (lookkaa  10:35)

இப்படியிருக்க,  கள்ளர்கையில்  அகப்பட்டவனுக்கு  இந்த  மூன்றுபேரில்  எவன்  பிறனாயிருந்தான்?  உனக்கு  எப்படித்  தோன்றுகிறது  என்றார்.  (லூக்கா  10:36)

ippadiyirukka,  ka'l'larkaiyil  agappattavanukku  intha  moon’rupearil  evan  pi’ranaayirunthaan?  unakku  eppadith  thoan’rugi’rathu  en’raar.  (lookkaa  10:36)

அதற்கு  அவன்:  அவனுக்கு  இரக்கஞ்செய்தவனே  என்றான்.  அப்பொழுது  இயேசு  அவனை  நோக்கி:  நீயும்  போய்  அந்தப்படியே  செய்  என்றார்.  (லூக்கா  10:37)

atha’rku  avan:  avanukku  irakkagnseythavanea  en’raan.  appozhuthu  iyeasu  avanai  noakki:  neeyum  poay  anthappadiyea  sey  en’raar.  (lookkaa  10:37)

பின்பு,  அவர்கள்  பிரயாணமாய்ப்  போகையில்,  அவர்  ஒரு  கிராமத்தில்  பிரவேசித்தார்.  அங்கே  மார்த்தாள்  என்னும்  பேர்கொண்ட  ஒரு  ஸ்திரீ  அவரைத்  தன்  வீட்டிலே  ஏற்றுக்கொண்டாள்.  (லூக்கா  10:38)

pinbu,  avarga'l  pirayaa'namaayp  poagaiyil,  avar  oru  kiraamaththil  piraveasiththaar.  anggea  maarththaa'l  ennum  pearko'nda  oru  sthiree  avaraith  than  veettilea  eat’rukko'ndaa'l.  (lookkaa  10:38)

அவளுக்கு  மரியாள்  என்னப்பட்ட  ஒரு  சகோதரி  இருந்தாள்;  அவள்  இயேசுவின்  பாதத்தருகே  உட்கார்ந்து,  அவருடைய  வசனத்தைக்  கேட்டுக்கொண்டிருந்தாள்.  (லூக்கா  10:39)

ava'lukku  mariyaa'l  ennappatta  oru  sagoathari  irunthaa'l;  ava'l  iyeasuvin  paathaththarugea  udkaarnthu,  avarudaiya  vasanaththaik  keattukko'ndirunthaa'l.  (lookkaa  10:39)

மார்த்தாளோ  பற்பல  வேலைகளைச்  செய்வதில்  மிகவும்  வருத்தமடைந்து,  அவரிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  நான்  தனியே  வேலைசெய்யும்படி  என்  சகோதரி  என்னை  விட்டுவந்திருக்கிறதைக்  குறித்து  உமக்குக்  கவையில்லையா?  எனக்கு  உதவிசெய்யும்படி  அவளுக்குச்  சொல்லும்  என்றாள்.  (லூக்கா  10:40)

maarththaa'loa  pa’rpala  vealaiga'laich  seyvathil  migavum  varuththamadainthu,  avaridaththil  vanthu:  aa'ndavarea,  naan  thaniyea  vealaiseyyumpadi  en  sagoathari  ennai  vittuvanthirukki’rathaik  ku’riththu  umakkuk  kavaiyillaiyaa?  enakku  uthaviseyyumpadi  ava'lukkuch  sollum  en’raa'l.  (lookkaa  10:40)

இயேசு  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  மார்த்தாளே,  மார்த்தாளே,  நீ  அநேக  காரியங்களைக்குறித்துக்  கவலைப்பட்டுக்  கலங்குகிறாய்.  (லூக்கா  10:41)

iyeasu  ava'lukkup  pirathiyuththaramaaga:  maarththaa'lea,  maarththaa'lea,  nee  aneaga  kaariyangga'laikku’riththuk  kavalaippattuk  kalanggugi’raay.  (lookkaa  10:41)

தேவையானது  ஒன்றே,  மரியாள்  தன்னை  விட்டெடுபடாத  நல்ல  பங்கைத்  தெரிந்துகொண்டாள்  என்றார்.  (லூக்கா  10:42)

theavaiyaanathu  on’rea,  mariyaa'l  thannai  vittedupadaatha  nalla  panggaith  therinthuko'ndaa'l  en’raar.  (lookkaa  10:42)


1 comment:

  1. Correction(s) made on (March 18, 2019)

    >>>(Luke 10:6) thanggumm to thanggum

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!