Wednesday, May 04, 2016

Lookkaa 1 | லூக்கா 1 | Luke 1

மகா  கனம்பொருந்திய  தெயோப்பிலுவே,  நாங்கள்  முழுநிச்சயமாய்  நம்புகிற  சங்கதிகளை,  (லூக்கா  1:1)

mahaa  kanamporunthiya  theyoappiluvea,  naangga'l  muzhunichchayamaay  nambugi’ra  sanggathiga'lai,  (lookkaa  1:1)

ஆரம்பமுதல்  கண்ணாரக்கண்டு  வசனத்தைப்  போதித்தவர்கள்  எங்களுக்கு  ஒப்புவித்தபடியே  அவைகளைக்குறித்துச்  சரித்திரம்  எழுத  அநேகம்பேர்  ஏற்பட்டபடியினால்,  (லூக்கா  1:2)

aarambamuthal  ka'n'naarakka'ndu  vasanaththaip  poathiththavarga'l  engga'lukku  oppuviththapadiyea  avaiga'laikku’riththuch  sariththiram  ezhutha  aneagampear  ea’rpattapadiyinaal,  (lookkaa  1:2)

ஆதிமுதல்  எல்லாவற்றையும்  திட்டமாய்  விசாரித்தறிந்த  நானும்  உமக்கு  உபதேசிக்கப்பட்ட  விசேஷங்களின்  நிச்சயத்தை  நீர்  அறியவேண்டுமென்று,  (லூக்கா  1:3)

aathimuthal  ellaavat’raiyum  thittamaay  visaariththa’rintha  naanum  umakku  ubatheasikkappatta  viseashangga'lin  nichchayaththai  neer  a’riyavea'ndumen’ru,  (lookkaa  1:3)

அவைகளை  ஒழுங்காய்  உமக்கு  எழுதுவது  எனக்கு  நலமாய்த்  தோன்றிற்று.  (லூக்கா  1:4)

avaiga'lai  ozhunggaay  umakku  ezhuthuvathu  enakku  nalamaayth  thoan’rit’ru.  (lookkaa  1:4)

யூதேயாதேசத்தின்  ராஜாவாகிய  ஏரோதின்  நாட்களில்,  அபியா  என்னும்  ஆசாரிய  வகுப்பில்  சகரியா  என்னும்  பேர்கொண்ட  ஆசாரியன்  ஒருவன்  இருந்தான்.  அவன்  மனைவி  ஆரோனுடைய  குமாரத்திகளில்  ஒருத்தி,  அவள்  பேர்  எலிசபெத்து.  (லூக்கா  1:5)

yootheayaatheasaththin  raajaavaagiya  earoathin  naadka'lil,  abiyaa  ennum  aasaariya  vaguppil  sagariyaa  ennum  pearko'nda  aasaariyan  oruvan  irunthaan.  avan  manaivi  aaroanudaiya  kumaaraththiga'lil  oruththi,  ava'l  pear  elisabeththu.  (lookkaa  1:5)

அவர்கள்  இருவரும்  கர்த்தரிட்ட  சகல  கற்பனைகளின்படியேயும்  நியமங்களின்படியேயும்  குற்றமற்றவர்களாய்  நடந்து,  தேவனுக்கு  முன்பாக  நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.  (லூக்கா  1:6)

avarga'l  iruvarum  karththaritta  sagala  ka’rpanaiga'linpadiyeayum  niyamangga'linpadiyeayum  kut’ramat’ravarga'laay  nadanthu,  theavanukku  munbaaga  neethiyu'l'lavarga'laayirunthaarga'l.  (lookkaa  1:6)

எலிசபெத்து  மலடியாயிருந்தபடியினால்,  அவர்களுக்குப்  பிள்ளையில்லாதிருந்தது;  இருவரும்  வயதுசென்றவர்களாயும்  இருந்தார்கள்.  (லூக்கா  1:7)

elisabeththu  maladiyaayirunthapadiyinaal,  avarga'lukkup  pi'l'laiyillaathirunthathu;  iruvarum  vayathusen’ravarga'laayum  irunthaarga'l.  (lookkaa  1:7)

அப்படியிருக்க,  அவன்  தன்  ஆசாரிய  வகுப்பின்  முறைப்படி  தேவசந்நிதியிலே  ஆசாரிய  ஊழியம்  செய்துவருகிற  காலத்தில்,  (லூக்கா  1:8)

appadiyirukka,  avan  than  aasaariya  vaguppin  mu’raippadi  theavasannithiyilea  aasaariya  oozhiyam  seythuvarugi’ra  kaalaththil,  (lookkaa  1:8)

ஆசாரிய  ஊழிய  முறைமையின்படி  அவன்  தேவாலயத்துக்குள்  பிரவேசித்துத்  தூபங்காட்டுகிறதற்குச்  சீட்டைப்  பெற்றான்.  (லூக்கா  1:9)

aasaariya  oozhiya  mu’raimaiyinpadi  avan  theavaalayaththukku'l  piraveasiththuth  thoobangkaattugi’ratha’rkuch  seettaip  pet’raan.  (lookkaa  1:9)

தூபங்காட்டுகிற  வேளையிலே  ஜனங்களெல்லாரும்  கூட்டமாய்  வெளியே  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  (லூக்கா  1:10)

thoobangkaattugi’ra  vea'laiyilea  janangga'lellaarum  koottamaay  ve'liyea  jebampa'n'nikko'ndirunthaarga'l.  (lookkaa  1:10)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  ஒருவன்  தூபபீடத்தின்  வலதுபக்கத்திலே  நின்று  அவனுக்குத்  தரிசனமானான்.  (லூக்கா  1:11)

appozhuthu  karththarudaiya  thoothan  oruvan  thoobapeedaththin  valathupakkaththilea  nin’ru  avanukkuth  tharisanamaanaan.  (lookkaa  1:11)

சகரியா  அவனைக்கண்டு  கலங்கி,  பயமடைந்தான்.  (லூக்கா  1:12)

sagariyaa  avanaikka'ndu  kalanggi,  bayamadainthaan.  (lookkaa  1:12)

தூதன்  அவனை  நோக்கி:  சகரியாவே,  பயப்படாதே,  உன்  வேண்டுதல்  கேட்கப்பட்டது;  உன்  மனைவியாகிய  எலிசபெத்து  உனக்கு  ஒரு  குமாரனைப்  பெறுவாள்,  அவனுக்கு  யோவான்  என்று  பேரிடுவாயாக.  (லூக்கா  1:13)

thoothan  avanai  noakki:  sagariyaavea,  bayappadaathea,  un  vea'nduthal  keadkappattathu;  un  manaiviyaagiya  elisabeththu  unakku  oru  kumaaranaip  pe’ruvaa'l,  avanukku  yoavaan  en’ru  peariduvaayaaga.  (lookkaa  1:13)

உனக்குச்  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  உண்டாகும்,  அவன்  பிறப்பினிமித்தம்  அநேகர்  சந்தோஷப்படுவார்கள்.  (லூக்கா  1:14)

unakkuch  santhoashamum  magizhchchiyum  u'ndaagum,  avan  pi’rappinimiththam  aneagar  santhoashappaduvaarga'l.  (lookkaa  1:14)

அவன்  கர்த்தருக்கு  முன்பாகப்  பெரியவனாயிருப்பான்,  திராட்சரசமும்  மதுவும்  குடியான்,  தன்  தாயின்  வயிற்றிலிருக்கும்போதே  பரிசுத்த  ஆவியினால்  நிரப்பப்பட்டிருப்பான்.  (லூக்கா  1:15)

avan  karththarukku  munbaagap  periyavanaayiruppaan,  thiraadcharasamum  mathuvum  kudiyaan,  than  thaayin  vayit’rilirukkumpoathea  parisuththa  aaviyinaal  nirappappattiruppaan.  (lookkaa  1:15)

அவன்  இஸ்ரவேல்  சந்ததியாரில்  அநேகரை  அவர்கள்  தேவனாகிய  கர்த்தரிடத்திற்குத்  திருப்புவான்.  (லூக்கா  1:16)

avan  israveal  santhathiyaaril  aneagarai  avarga'l  theavanaagiya  karththaridaththi’rkuth  thiruppuvaan.  (lookkaa  1:16)

பிதாக்களுடைய  இருதயங்களைப்  பிள்ளைகளிடத்திற்கும்,  கீழ்ப்படியாதவர்களை  நீதிமான்களுடைய  ஞானத்திற்கும்  திருப்பி,  உத்தமமான  ஜனத்தைக்  கர்த்தருக்கு  ஆயத்தப்படுத்தும்படியாக,  அவன்  எலியாவின்  ஆவியும்  பலமும்  உடையவனாய்  அவருக்கு  முன்னே  நடப்பான்  என்றான்.  (லூக்கா  1:17)

pithaakka'ludaiya  iruthayangga'laip  pi'l'laiga'lidaththi’rkum,  keezhppadiyaathavarga'lai  neethimaanga'ludaiya  gnaanaththi’rkum  thiruppi,  uththamamaana  janaththaik  karththarukku  aayaththappaduththumpadiyaaga,  avan  eliyaavin  aaviyum  balamum  udaiyavanaay  avarukku  munnea  nadappaan  en’raan.  (lookkaa  1:17)

அப்பொழுது  சகரியா  தேவதூதனை  நோக்கி:  இதை  நான்  எதினால்  அறிவேன்;  நான்  கிழவனாயிருக்கிறேன்,  என்  மனைவியும்  வயதுசென்றவளாயிருக்கிறாளே  என்றான்.  (லூக்கா  1:18)

appozhuthu  sagariyaa  theavathoothanai  noakki:  ithai  naan  ethinaal  a’rivean;  naan  kizhavanaayirukki'rean,  en  manaiviyum  vayathusen’rava'laayirukki’raa'lea  en’raan.  (lookkaa  1:18)

தேவதூதன்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவசந்நிதானத்தில்  நிற்கிற  காபிரியேல்  என்பவன்;  உன்னுடனே  பேசவும்,  உனக்கு  இந்த  நற்செய்தியை  அறிவிக்கவும்  அனுப்பப்பட்டு  வந்தேன்;  (லூக்கா  1:19)

theavathoothan  avanukkup  pirathiyuththaramaaga:  naan  theavasannithaanaththil  ni’rki’ra  kaabiriyeal  enbavan;  unnudanea  peasavum,  unakku  intha  na’rseythiyai  a’rivikkavum  anuppappattu  vanthean;  (lookkaa  1:19)

இதோ,  தகுந்தகாலத்திலே  நிறைவேறப்போகிற  என்  வார்த்தைகளை  நீ  விசுவாசியாதபடியினால்  இவைகள்  சம்பவிக்கும்  நாள்மட்டும்  நீ  பேசக்கூடாமல்  ஊமையாயிருப்பாய்  என்றான்.  (லூக்கா  1:20)

ithoa,  thagunthakaalaththilea  ni’raivea’rappoagi’ra  en  vaarththaiga'lai  nee  visuvaasiyaathapadiyinaal  ivaiga'l  sambavikkum  naa'lmattum  nee  peasakkoodaamal  oomaiyaayiruppaay  en’raan.  (lookkaa  1:20)

ஜனங்கள்  சகரியாவுக்குக்  காத்திருந்து,  அவன்  தேவாலயத்தில்  தாமதித்ததினால்  ஆச்சரியப்பட்டார்கள்.  (லூக்கா  1:21)

janangga'l  sagariyaavukkuk  kaaththirunthu,  avan  theavaalayaththil  thaamathiththathinaal  aachchariyappattaarga'l.  (lookkaa  1:21)

அவன்  வெளியே  வந்தபோது  அவர்களிடத்தில்  பேசக்கூடாமலிருந்தான்;  அதினாலே  தேவாலயத்தில்  ஒரு  தரிசனத்தைக்  கண்டானென்று  அறிந்தார்கள்.  அவனும்  அவர்களுக்குச்  சைகை  காட்டி  ஊமையாயிருந்தான்.  (லூக்கா  1:22)

avan  ve'liyea  vanthapoathu  avarga'lidaththil  peasakkoodaamalirunthaan;  athinaalea  theavaalayaththil  oru  tharisanaththaik  ka'ndaanen’ru  a’rinthaarga'l.  avanum  avarga'lukkuch  saigai  kaatti  oomaiyaayirunthaan.  (lookkaa  1:22)

அவனுடைய  ஊழியத்தின்  நாட்கள்  நிறைவேறினவுடனே  தன்  வீட்டுக்குப்போனான்.  (லூக்கா  1:23)

avanudaiya  oozhiyaththin  naadka'l  ni’raivea’rinavudanea  than  veettukkuppoanaan.  (lookkaa  1:23)

அந்நாட்களுக்குப்பின்பு,  அவன்  மனைவியாகிய  எலிசபெத்து  கர்ப்பவதியாகி:  ஜனங்களுக்குள்ளே  எனக்கு  உண்டாயிருந்த  நிந்தையை  நீக்கும்படியாகக்  கர்த்தர்  இந்த  நாட்களில்  என்மேல்  கடாட்சம்  வைத்து,  (லூக்கா  1:24)

annaadka'lukkuppinbu,  avan  manaiviyaagiya  elisabeththu  karppavathiyaagi:  janangga'lukku'l'lea  enakku  u'ndaayiruntha  ninthaiyai  neekkumpadiyaagak  karththar  intha  naadka'lil  enmeal  kadaadcham  vaiththu,  (lookkaa  1:24)

எனக்கு  இப்படிச்  செய்தருளினார்  என்று  சொல்லி,  ஐந்து  மாதம்  வெளிப்படாதிருந்தாள்.  (லூக்கா  1:25)

enakku  ippadich  seytharu'linaar  en’ru  solli,  ainthu  maatham  ve'lippadaathirunthaa'l.  (lookkaa  1:25)

ஆறாம்  மாதத்திலே  காபிரியேல்  என்னும்  தூதன்,  கலிலேயாவிலுள்ள  நாசரேத்தென்னும்  ஊரில்,  (லூக்கா  1:26)

aa’raam  maathaththilea  kaabiriyeal  ennum  thoothan,  kalileayaavilu'l'la  naasareaththennum  ooril,  (lookkaa  1:26)

தாவீதின்  வம்சத்தானாகிய  யோசேப்பு  என்கிற  நாமமுள்ள  புருஷனுக்கு  நியமிக்கப்பட்டிருந்த  ஒரு  கன்னிகையினிடத்திற்கு  தேவனாலே  அனுப்பப்பட்டான்;  அந்தக்  கன்னிகையின்  பேர்  மரியாள்.  (லூக்கா  1:27)

thaaveethin  vamsaththaanaagiya  yoaseappu  engi’ra  naamamu'l'la  purushanukku  niyamikkappattiruntha  oru  kannigaiyinidaththi’rku  theavanaalea  anuppappattaan;  anthak  kannigaiyin  pear  mariyaa'l.  (lookkaa  1:27)

அவள்  இருந்த  வீட்டில்  தேவதூதன்  பிரவேசித்து:  கிருபை  பெற்றவளே,  வாழ்க,  கர்த்தர்  உன்னுடனே  இருக்கிறார்,  ஸ்திரீகளுக்குள்ளே  நீ  ஆசீர்வதிக்கப்பட்டவள்  என்றான்.  (லூக்கா  1:28)

ava'l  iruntha  veettil  theavathoothan  piraveasiththu:  kirubai  pet’rava'lea,  vaazhga,  karththar  unnudanea  irukki’raar,  sthireega'lukku'l'lea  nee  aaseervathikkappattava'l  en’raan.  (lookkaa  1:28)

அவளோ  அவனைக்  கண்டு,  அவன்  வார்த்தையினால்  கலங்கி,  இந்த  வாழ்த்துதல்  எப்படிப்பட்டதோ  என்று  சிந்தித்துக்கொண்டிருந்தாள்.  (லூக்கா  1:29)

ava'loa  avanaik  ka'ndu,  avan  vaarththaiyinaal  kalanggi,  intha  vaazhththuthal  eppadippattathoa  en’ru  sinthiththukko'ndirunthaa'l.  (lookkaa  1:29)

தேவதூதன்  அவளை  நோக்கி:  மரியாளே,  பயப்படாதே;  நீ  தேவனிடத்தில்  கிருபைபெற்றாய்.  (லூக்கா  1:30)

theavathoothan  ava'lai  noakki:  mariyaa'lea,  bayappadaathea;  nee  theavanidaththil  kirubaipet’raay.  (lookkaa  1:30)

இதோ,  நீ  கர்ப்பவதியாகி  ஒரு  குமாரனைப்  பெறுவாய்,  அவருக்கு  இயேசு  என்று  பேரிடுவாயாக.  (லூக்கா  1:31)

ithoa,  nee  karppavathiyaagi  oru  kumaaranaip  pe’ruvaay,  avarukku  iyeasu  en’ru  peariduvaayaaga.  (lookkaa  1:31)

அவர்  பெரியவராயிருப்பார்,  உன்னதமானவருடைய  குமாரன்  என்னப்படுவார்;  கர்த்தராகிய  தேவன்  அவருடைய  பிதாவாகிய  தாவீதின்  சிங்காசனத்தை  அவருக்குக்  கொடுப்பார்.  (லூக்கா  1:32)

avar  periyavaraayiruppaar,  unnathamaanavarudaiya  kumaaran  ennappaduvaar;  karththaraagiya  theavan  avarudaiya  pithaavaagiya  thaaveethin  singgaasanaththai  avarukkuk  koduppaar.  (lookkaa  1:32)

அவர்  யாக்கோபின்  குடும்பத்தாரை  என்றென்றைக்கும்  அரசாளுவார்;  அவருடைய  ராஜ்யத்துக்கு  முடிவிராது  என்றான்.  (லூக்கா  1:33)

avar  yaakkoabin  kudumbaththaarai  en'ren’raikkum  arasaa'luvaar;  avarudaiya  raajyaththukku  mudiviraathu  en’raan.  (lookkaa  1:33)

அதற்கு  மரியாள்  தேவதூதனை  நோக்கி:  இது  எப்படியாகும்?  புருஷனை  அறியேனே  என்றாள்.  (லூக்கா  1:34)

atha’rku  mariyaa'l  theavathoothanai  noakki:  ithu  eppadiyaagum?  purushanai  a’riyeanea  en’raa'l.  (lookkaa  1:34)

தேவதூதன்  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  பரிசுத்தஆவி  உன்மேல்  வரும்;  உன்னதமானவருடைய  பலம்  உன்மேல்  நிழலிடும்;  ஆதலால்  உன்னிடத்தில்  பிறக்கும்  பரிசுத்தமுள்ளது  தேவனுடைய  குமாரன்  என்னப்படும்.  (லூக்கா  1:35)

theavathoothan  ava'lukkup  pirathiyuththaramaaga:  parisuththaaavi  unmeal  varum;  unnathamaanavarudaiya  balam  unmeal  nizhalidum;  aathalaal  unnidaththil  pi’rakkum  parisuththamu'l'lathu  theavanudaiya  kumaaran  ennappadum.  (lookkaa  1:35)

இதோ,  உனக்கு  இனத்தாளாயிருக்கிற  எலிசபெத்தும்  தன்  முதிர்வயதிலே  ஒரு  புத்திரனைக்  கர்ப்பந்தரித்திருக்கிறாள்;  மலடியென்னப்பட்ட  அவளுக்கு  இது  ஆறாம்  மாதம்.  (லூக்கா  1:36)

ithoa,  unakku  inaththaa'laayirukki’ra  elisabeththum  than  muthirvayathilea  oru  puththiranaik  karppanthariththirukki’raa'l;  maladiyennappatta  ava'lukku  ithu  aa’raam  maatham.  (lookkaa  1:36)

தேவனாலே  கூடாதகாரியம்  ஒன்றுமில்லை  என்றான்.  (லூக்கா  1:37)

theavanaalea  koodaathakaariyam  on’rumillai  en’raan.  (lookkaa  1:37)

அதற்கு  மரியாள்:  இதோ,  நான்  ஆண்டவருக்கு  அடிமை,  உம்முடைய  வார்த்தையின்படி  எனக்கு  ஆகக்கடவது  என்றாள்.  அப்பொழுது  தேவதூதன்  அவளிடத்திலிருந்து  போய்விட்டான்.  (லூக்கா  1:38)

atha’rku  mariyaa'l:  ithoa,  naan  aa'ndavarukku  adimai,  ummudaiya  vaarththaiyinpadi  enakku  aagakkadavathu  en’raa'l.  appozhuthu  theavathoothan  ava'lidaththilirunthu  poayvittaan.  (lookkaa  1:38)

அந்நாட்களில்  மரியாள்  எழுந்து,  மலைநாட்டிலே  யூதாவிலுள்ள  ஒரு  பட்டணத்திற்குத்  தீவிரமாய்ப்  போய்,  (லூக்கா  1:39)

annaadka'lil  mariyaa'l  ezhunthu,  malainaattilea  yoothaavilu'l'la  oru  patta'naththi’rkuth  theeviramaayp  poay,  (lookkaa  1:39)

சகரியாவின்  வீட்டுக்குள்  பிரவேசித்து,  எலிசபெத்தை  வாழ்த்தினாள்.  (லூக்கா  1:40)

sagariyaavin  veettukku'l  piraveasiththu,  elisabeththai  vaazhththinaa'l.  (lookkaa  1:40)

எலிசபெத்து  மரியாளுடைய  வாழ்த்துதலைக்  கேட்டபொழுது,  அவளுடைய  வயிற்றிலிருந்த  பிள்ளை  துள்ளிற்று;  எலிசபெத்து  பரிசுத்த  ஆவியினால்  நிரப்பப்பட்டு,  (லூக்கா  1:41)

elisabeththu  mariyaa'ludaiya  vaazhththuthalaik  keattapozhuthu,  ava'ludaiya  vayit’riliruntha  pi'l'lai  thu'l'lit’ru;  elisabeththu  parisuththa  aaviyinaal  nirappappattu,  (lookkaa  1:41)

உரத்த  சத்தமாய்:  ஸ்திரீகளுக்குள்ளே  நீ  ஆசீர்வதிக்கப்பட்டவள்,  உன்  கர்ப்பத்தின்  கனியும்  ஆசீர்வதிக்கப்பட்டது.  (லூக்கா  1:42)

uraththa  saththamaay:  sthireega'lukku'l'lea  nee  aaseervathikkappattava'l,  un  karppaththin  kaniyum  aaseervathikkappattathu.  (lookkaa  1:42)

என்  ஆண்டவருடைய  தாயார்  என்னிடத்தில்  வந்தது  எனக்கு  எதினால்  கிடைத்தது.  (லூக்கா  1:43)

en  aa'ndavarudaiya  thaayaar  ennidaththil  vanthathu  enakku  ethinaal  kidaiththathu.  (lookkaa  1:43)

இதோ,  நீ  வாழ்த்தின  சத்தம்  என்  காதில்  விழுந்தவுடனே,  என்  வயிற்றிலுள்ள  பிள்ளை  களிப்பாய்த்  துள்ளிற்று.  (லூக்கா  1:44)

ithoa,  nee  vaazhththina  saththam  en  kaathil  vizhunthavudanea,  en  vayit’rilu'l'la  pi'l'lai  ka'lippaayth  thu'l'lit’ru.  (lookkaa  1:44)

விசுவாசித்தவளே  பாக்கியவதி,  கர்த்தராலே  அவளுக்குச்  சொல்லப்பட்டவைகள்  நிறைவேறும்  என்றாள்.  (லூக்கா  1:45)

visuvaasiththava'lea  baakkiyavathi,  karththaraalea  ava'lukkuch  sollappattavaiga'l  ni’raivea’rum  en’raa'l.  (lookkaa  1:45)

அப்பொழுது  மரியாள்:  என்  ஆத்துமா  கர்த்தரை  மகிமைப்படுத்துகிறது.  (லூக்கா  1:46)

appozhuthu  mariyaa'l:  en  aaththumaa  karththarai  magimaippaduththugi’rathu.  (lookkaa  1:46)

என்  ஆவி  என்  இரட்சகராகிய  தேவனில்  களிகூருகிறது.  (லூக்கா  1:47)

en  aavi  en  iradchagaraagiya  theavanil  ka'likoorugi’rathu.  (lookkaa  1:47)

அவர்  தம்முடைய  அடிமையின்  தாழ்மையை  நோக்கிப்பார்த்தார்;  இதோ,  இதுமுதல்  எல்லாச்  சந்ததிகளும்  என்னைப்  பாக்கியவதி  என்பார்கள்.  (லூக்கா  1:48)

avar  thammudaiya  adimaiyin  thaazhmaiyai  noakkippaarththaar;  ithoa,  ithumuthal  ellaach  santhathiga'lum  ennaip  baakkiyavathi  enbaarga'l.  (lookkaa  1:48)

வல்லமையுடையவர்  மகிமையானவைகளை  எனக்குச்  செய்தார்;  அவருடைய  நாமம்  பரிசுத்தமுள்ளது.  (லூக்கா  1:49)

vallamaiyudaiyavar  magimaiyaanavaiga'lai  enakkuch  seythaar;  avarudaiya  naamam  parisuththamu'l'lathu.  (lookkaa  1:49)

அவருடைய  இரக்கம்  அவருக்குப்  பயந்திருக்கிறவர்களுக்குத்  தலைமுறை  தலைமுறைக்குமுள்ளது.  (லூக்கா  1:50)

avarudaiya  irakkam  avarukkup  bayanthirukki’ravarga'lukkuth  thalaimu’rai  thalaimu’raikkumu'l'lathu.  (lookkaa  1:50)

தம்முடைய  புயத்தினாலே  பராக்கிரமஞ்செய்தார்;  இருதயசிந்தையில்  அகந்தையுள்ளவர்களைச்  சிதறடித்தார்.  (லூக்கா  1:51)

thammudaiya  puyaththinaalea  baraakkiramagnseythaar;  iruthayasinthaiyil  aganthaiyu'l'lavarga'laich  sitha’radiththaar.  (lookkaa  1:51)

பலவான்களை  ஆசனங்களிலிருந்து  தள்ளி,  தாழ்மையானவர்களை  உயர்த்தினார்.  (லூக்கா  1:52)

balavaanga'lai  aasanangga'lilirunthu  tha'l'li,  thaazhmaiyaanavarga'lai  uyarththinaar.  (lookkaa  1:52)

பசியுள்ளவர்களை  நன்மைகளினால்  நிரப்பி,  ஐசுவரியமுள்ளவர்களை  வெறுமையாய்  அனுப்பிவிட்டார்.  (லூக்கா  1:53)

pasiyu'l'lavarga'lai  nanmaiga'linaal  nirappi,  aisuvariyamu'l'lavarga'lai  ve’rumaiyaay  anuppivittaar.  (lookkaa  1:53)

நம்முடைய  பிதாக்களுக்கு  அவர்  சொன்னபடியே,  ஆபிரகாமுக்கும்  அவன்  சந்ததிக்கும்  என்றென்றைக்கும்  இரக்கஞ்செய்ய  நினைத்து,  (லூக்கா  1:54)

nammudaiya  pithaakka'lukku  avar  sonnapadiyea,  aabirahaamukkum  avan  santhathikkum  en'ren’raikkum  irakkagnseyya  ninaiththu,  (lookkaa  1:54)

தம்முடைய  தாசனாகிய  இஸ்ரவேலை  ஆதரித்தார்  என்றாள்.  (லூக்கா  1:55)

thammudaiya  thaasanaagiya  isravealai  aathariththaar  en’raa'l.  (lookkaa  1:55)

மரியாள்  ஏறக்குறைய  மூன்றுமாதம்  அவளுடனே  இருந்து,  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனாள்.  (லூக்கா  1:56)

mariyaa'l  ea’rakku’raiya  moon’rumaatham  ava'ludanea  irunthu,  than  veettukkuth  thirumbippoanaa'l.  (lookkaa  1:56)

எலிசபெத்துக்குப்  பிரசவகாலம்  நிறைவேறினபோது  அவள்  ஒரு  புத்திரனைப்  பெற்றாள்.  (லூக்கா  1:57)

elisabeththukkup  pirasavakaalam  ni’raivea’rinapoathu  ava'l  oru  puththiranaip  pet’raa'l.  (lookkaa  1:57)

கர்த்தர்  அவளிடத்தில்  தம்முடைய  இரக்கத்தை  விளங்கப்பண்ணினாரென்று  அவளுடைய  அயலகத்தாரும்  பந்துஜனங்களும்  கேள்விப்பட்டு,  அவளுடனேகூடச்  சந்தோஷப்பட்டார்கள்.  (லூக்கா  1:58)

karththar  ava'lidaththil  thammudaiya  irakkaththai  vi'langgappa'n'ninaaren’ru  ava'ludaiya  ayalagaththaarum  panthujanangga'lum  kea'lvippattu,  ava'ludaneakoodach  santhoashappattaarga'l.  (lookkaa  1:58)

எட்டாம்நாளிலே  பிள்ளைக்கு  விருத்தசேதனம்  பண்ணும்படிக்கு  அவர்கள்  வந்து,  அதின்  தகப்பனுடைய  நாமத்தின்படி  அதற்குச்  சகரியா  என்று  பேரிடப்போனார்கள்.  (லூக்கா  1:59)

ettaamnaa'lilea  pi'l'laikku  viruththaseathanam  pa'n'numpadikku  avarga'l  vanthu,  athin  thagappanudaiya  naamaththinpadi  atha’rkuch  sagariyaa  en’ru  pearidappoanaarga'l.  (lookkaa  1:59)

அப்பொழுது  அதின்  தாய்:  அப்படியல்ல,  அதற்கு  யோவான்  என்று  பேரிடவேண்டும்  என்றாள்.  (லூக்கா  1:60)

appozhuthu  athin  thaay:  appadiyalla,  atha’rku  yoavaan  en’ru  pearidavea'ndum  en’raa'l.  (lookkaa  1:60)

அதற்கு  அவர்கள்:  உன்  உறவின்  முறையாரில்  இந்தப்  பேருள்ளவன்  ஒருவனும்  இல்லையே  என்று  சொல்லி,  (லூக்கா  1:61)

atha’rku  avarga'l:  un  u’ravin  mu’raiyaaril  inthap  pearu'l'lavan  oruvanum  illaiyea  en’ru  solli,  (lookkaa  1:61)

அதின்  தகப்பனை  நோக்கி:  இதற்கு  என்ன  பேரிட  மனதாயிருக்கிறீர்  என்று  சைகையினால்  கேட்டார்கள்.  (லூக்கா  1:62)

athin  thagappanai  noakki:  itha’rku  enna  pearida  manathaayirukki'reer  en’ru  saigaiyinaal  keattaarga'l.  (lookkaa  1:62)

அவன்  எழுத்துப்  பலகையைக்  கேட்டு  வாங்கி,  இவன்  பேர்  யோவான்  என்று  எழுதினான்;  எல்லாரும்  ஆச்சரியப்பட்டார்கள்.  (லூக்கா  1:63)

avan  ezhuththup  palagaiyaik  keattu  vaanggi,  ivan  pear  yoavaan  en’ru  ezhuthinaan;  ellaarum  aachchariyappattaarga'l.  (lookkaa  1:63)

உடனே  அவனுடைய  வாய்  திறக்கப்பட்டு,  அவனுடைய  நாவும்  கட்டவிழ்க்கப்பட்டு,  தேவனை  ஸ்தோத்திரித்துப்  பேசினான்.  (லூக்கா  1:64)

udanea  avanudaiya  vaay  thi’rakkappattu,  avanudaiya  naavum  kattavizhkkappattu,  theavanai  sthoaththiriththup  peasinaan.  (lookkaa  1:64)

அதினால்  அவர்களைச்சுற்றி  வாசமாயிருந்த  யாவருக்கும்  பயமுண்டாயிற்று.  மேலும்  யூதேயாவின்  மலைநாடெங்கும்  இந்த  வர்த்தமானங்களெல்லாம்  சொல்லிக்கொள்ளப்பட்டது.  (லூக்கா  1:65)

athinaal  avarga'laichsut’ri  vaasamaayiruntha  yaavarukkum  bayamu'ndaayit’ru.  mealum  yootheayaavin  malainaadenggum  intha  varththamaanangga'lellaam  sollikko'l'lappattathu.  (lookkaa  1:65)

அவைகளைக்  கேள்விப்பட்டவர்களெல்லாரும்  தங்கள்  மனதிலே  அவைகளை  வைத்துக்கொண்டு,  இந்தப்  பிள்ளை  எப்படிப்பட்டதாயிருக்குமோ  என்றார்கள்.  கர்த்தருடைய  கரம்  அந்தப்  பிள்ளையோடே  இருந்தது.  (லூக்கா  1:66)

avaiga'laik  kea'lvippattavarga'lellaarum  thangga'l  manathilea  avaiga'lai  vaiththukko'ndu,  inthap  pi'l'lai  eppadippattathaayirukkumoa  en’raarga'l.  karththarudaiya  karam  anthap  pi'l'laiyoadea  irunthathu.  (lookkaa  1:66)

அவனுடைய  தகப்பனாகிய  சகரியா  பரிசுத்த  ஆவியினாலே  நிரப்பப்பட்டு,  தீர்க்கதரிசனமாக:  (லூக்கா  1:67)

avanudaiya  thagappanaagiya  sagariyaa  parisuththa  aaviyinaalea  nirappappattu,  theerkkatharisanamaaga:  (lookkaa  1:67)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக.  (லூக்கா  1:68)

isravealin  theavanaagiya  karththarukku  sthoaththiram  u'ndaavathaaga.  (lookkaa  1:68)

அவர்  நம்முடைய  பிதாக்களுக்கு  வாக்குத்தத்தம்பண்ணின  இரக்கத்தைச்  செய்வதற்கும்;  (லூக்கா  1:69)

avar  nammudaiya  pithaakka'lukku  vaakkuththaththampa'n'nina  irakkaththaich  seyvatha’rkum;  (lookkaa  1:69)

தம்முடைய  பரிசுத்த  உடன்படிக்கையை  நினைத்தருளி:  (லூக்கா  1:70)

thammudaiya  parisuththa  udanpadikkaiyai  ninaiththaru'li:  (lookkaa  1:70)

உங்கள்  சத்துருக்களின்  கைகளினின்று  நீங்கள்  விடுதலையாக்கப்பட்டு,  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  பயமில்லாமல்  எனக்கு  முன்பாகப்  பரிசுத்தத்தோடும்  நீதியோடும்  எனக்கு  ஊழியஞ்செய்யக்  கட்டளையிடுவேன்  என்று,  (லூக்கா  1:71)

ungga'l  saththurukka'lin  kaiga'linin’ru  neengga'l  viduthalaiyaakkappattu,  uyiroadirukkum  naa'lellaam  bayamillaamal  enakku  munbaagap  parisuththaththoadum  neethiyoadum  enakku  oozhiyagnseyyak  katta'laiyiduvean  en’ru,  (lookkaa  1:71)

அவர்  நம்முடைய  பிதாவாகிய  ஆபிரகாமுக்கு  இட்ட  ஆணையை  நிறைவேற்றுவதற்கும்;  (லூக்கா  1:72)

avar  nammudaiya  pithaavaagiya  aabirahaamukku  itta  aa'naiyai  ni’raiveat’ruvatha’rkum;  (lookkaa  1:72)

ஆதிமுதற்கொண்டிருந்த  தம்முடைய  பரிசுத்த  தீர்க்கதரிசிகளின்  வாக்கினால்  தாம்  சொன்னபடியே,  (லூக்கா  1:73)

aathimutha’rko'ndiruntha  thammudaiya  parisuththa  theerkkatharisiga'lin  vaakkinaal  thaam  sonnapadiyea,  (lookkaa  1:73)

தமது  ஜனத்தைச்  சந்தித்து  மீட்டுக்கொண்டு,  நம்முடைய  சத்துருக்களினின்றும்,  நம்மைப்  பகைக்கிற  யாவருடைய  கைகளினின்றும்,  நம்மை  இரட்சிக்கும்படிக்கு,  (லூக்கா  1:74)

thamathu  janaththaich  santhiththu  meettukko'ndu,  nammudaiya  saththurukka'linin’rum,  nammaip  pagaikki’ra  yaavarudaiya  kaiga'linin’rum,  nammai  iradchikkumpadikku,  (lookkaa  1:74)

தம்முடைய  தாசனாகிய  தாவீதின்  வம்சத்திலே  நமக்கு  இரட்சணியக்  கொம்பை  ஏற்படுத்தினார்.  (லூக்கா  1:75)

thammudaiya  thaasanaagiya  thaaveethin  vamsaththilea  namakku  iradcha'niyak  kombai  ea’rpaduththinaar.  (lookkaa  1:75)

நீயோ  பாலகனே,  உன்னதமானவருடைய  தீர்க்கதரிசி  என்னப்படுவாய்;  நீ  கர்த்தருக்கு  வழிகளை  ஆயத்தம்பண்ணவும்,  (லூக்கா  1:76)

neeyoa  paalaganea,  unnathamaanavarudaiya  theerkkatharisi  ennappaduvaay;  nee  karththarukku  vazhiga'lai  aayaththampa'n'navum,  (lookkaa  1:76)

நமது  தேவனுடைய  உருக்கமான  இரக்கத்தினாலே  அவருடைய  ஜனத்துக்குப்  பாவமன்னிப்பாகிய  இரட்சிப்பைத்  தெரியப்படுத்தவும்,  அவருக்கு  முன்னாக  நடந்துபோவாய்.  (லூக்கா  1:77)

namathu  theavanudaiya  urukkamaana  irakkaththinaalea  avarudaiya  janaththukkup  paavamannippaagiya  iradchippaith  theriyappaduththavum,  avarukku  munnaaga  nadanthupoavaay.  (lookkaa  1:77)

அந்தகாரத்திலும்  மரண  இருளிலும்  உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு  வெளிச்சம்  தரவும்,  (லூக்கா  1:78)

anthagaaraththilum  mara'na  iru'lilum  udkaarnthirukki’ravarga'lukku  ve'lichcham  tharavum,  (lookkaa  1:78)

நம்முடைய  கால்களைச்  சமாதானத்தின்  வழியிலே  நடத்தவும்,  அவ்விரக்கத்தினாலே  உன்னதத்திலிருந்து  தோன்றிய  அருணோதயம்  நம்மைச்  சந்தித்திருக்கிறது  என்றான்.  (லூக்கா  1:79)

nammudaiya  kaalga'laich  samaathaanaththin  vazhiyilea  nadaththavum,  avvirakkaththinaalea  unnathaththilirunthu  thoan’riya  aru'noathayam  nammaich  santhiththirukki’rathu  en’raan.  (lookkaa  1:79)

அந்தப்  பிள்ளை  வளர்ந்து,  ஆவியிலே  பலங்கொண்டு,  இஸ்ரவேலுக்குத்  தன்னைக்  காண்பிக்கும்  நாள்வரைக்கும்  வனாந்தரங்களிலே  இருந்தான்.  (லூக்கா  1:80)

anthap  pi'l'lai  va'larnthu,  aaviyilea  balangko'ndu,  isravealukkuth  thannaik  kaa'nbikkum  naa'lvaraikkum  vanaantharangga'lilea  irunthaan.  (lookkaa  1:80)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!