Tuesday, May 31, 2016

Kalaaththiyar 5 | கலாத்தியர் 5 | Galatians 5

ஆனபடியினாலே,  நீங்கள்  மறுபடியும்  அடிமைத்தனத்தின்  நுகத்துக்குட்படாமல்,  கிறிஸ்து  நமக்கு  உண்டாக்கின  சுயாதீன  நிலைமையிலே  நிலைகொண்டிருங்கள்.  (கலாத்தியர்  5:1)

aanapadiyinaalea,  neengga'l  ma’rupadiyum  adimaiththanaththin  nugaththukkudpadaamal,  ki’risthu  namakku  u'ndaakkina  suyaatheena  nilaimaiyilea  nilaiko'ndirungga'l.  (kalaaththiyar  5:1)

இதோ,  நீங்கள்  விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால்  கிறிஸ்துவினால்  உங்களுக்கு  ஒரு  பிரயோஜனமுமிராது  என்று  பவுலாகிய  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (கலாத்தியர்  5:2)

ithoa,  neengga'l  viruththaseathanampa'n'nikko'ndaal  ki’risthuvinaal  ungga'lukku  oru  pirayoajanamumiraathu  en’ru  pavulaagiya  naan  ungga'lukkuch  sollugi’rean.  (kalaaththiyar  5:2)

மேலும்,  விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற  எந்த  மனுஷனும்  நியாயப்பிரமாணம்  முழுவதையும்  நிறைவேற்றக்  கடனாளியாயிருக்கிறான்  என்று  மறுபடியும்  அப்படிப்பட்டவனுக்குச்  சாட்சியாகச்  சொல்லுகிறேன்.  (கலாத்தியர்  5:3)

mealum,  viruththaseathanampa'n'nikko'l'lugi’ra  entha  manushanum  niyaayappiramaa'nam  muzhuvathaiyum  ni’raiveat’rak  kadanaa'liyaayirukki’raan  en’ru  ma’rupadiyum  appadippattavanukkuch  saadchiyaagach  sollugi’rean.  (kalaaththiyar  5:3)

நியாயப்பிரமாணத்தினால்  நீதிமான்களாக  விரும்புகிற  நீங்கள்  யாவரும்  கிறிஸ்துவைவிட்டுப்  பிரிந்து  கிருபையினின்று  விழுந்தீர்கள்.  (கலாத்தியர்  5:4)

niyaayappiramaa'naththinaal  neethimaanga'laaga  virumbugi’ra  neengga'l  yaavarum  ki’risthuvaivittup  pirinthu  kirubaiyinin’ru  vizhuntheerga'l.  (kalaaththiyar  5:4)

நாங்களோ  நீதிகிடைக்குமென்று  ஆவியைக்கொண்டு  விசுவாசத்தினால்  நம்பிக்கையோடே  காத்திருக்கிறோம்.  (கலாத்தியர்  5:5)

naangga'loa  neethikidaikkumen’ru  aaviyaikko'ndu  visuvaasaththinaal  nambikkaiyoadea  kaaththirukki’roam.  (kalaaththiyar  5:5)

கிறிஸ்து  இயேசுவினிடத்தில்  விருத்தசேதனமும்  விருத்தசேதனமில்லாமையும்  ஒன்றுக்கும்  உதவாது,  அன்பினால்  கிரியைசெய்கிற  விசுவாசமே  உதவும்.  (கலாத்தியர்  5:6)

ki’risthu  iyeasuvinidaththil  viruththaseathanamum  viruththaseathanamillaamaiyum  on’rukkum  uthavaathu,  anbinaal  kiriyaiseygi’ra  visuvaasamea  uthavum.  (kalaaththiyar  5:6)

நீங்கள்  நன்றாய்  ஓடினீர்களே;  சத்தியத்திற்குக்  கீழ்ப்படியாமற்போக  உங்களுக்குத்  தடைசெய்தவன்  யார்?  (கலாத்தியர்  5:7)

neengga'l  nan’raay  oadineerga'lea;  saththiyaththi’rkuk  keezhppadiyaama’rpoaga  ungga'lukkuth  thadaiseythavan  yaar?  (kalaaththiyar  5:7)

இந்தப்  போதனை  உங்களை  அழைத்தவரால்  உண்டானதல்ல.  (கலாத்தியர்  5:8)

inthap  poathanai  ungga'lai  azhaiththavaraal  u'ndaanathalla.  (kalaaththiyar  5:8)

புளிப்புள்ள  கொஞ்சமாவானது  பிசைந்த  மாவனைத்தையும்  உப்பப்பண்ணும்.  (கலாத்தியர்  5:9)

pu'lippu'l'la  kognchamaavaanathu  pisaintha  maavanaiththaiyum  uppappa'n'num.  (kalaaththiyar  5:9)

நீங்கள்  வேறுவிதமாய்ச்  சிந்திக்கமாட்டீர்களென்று  நான்  கர்த்தருக்குள்  உங்களைக்குறித்து  நம்பிக்கையாயிருக்கிறேன்;  உங்களைக்  கலக்குகிறவன்  எப்படிப்பட்டவனாயிருந்தாலும்  தனக்கேற்ற  ஆக்கினையை  அடைவான்.  (கலாத்தியர்  5:10)

neengga'l  vea’ruvithamaaych  sinthikkamaatteerga'len’ru  naan  karththarukku'l  ungga'laikku’riththu  nambikkaiyaayirukki’rean;  ungga'laik  kalakkugi’ravan  eppadippattavanaayirunthaalum  thanakkeat’ra  aakkinaiyai  adaivaan.  (kalaaththiyar  5:10)

சகோதரரே,  இதுவரைக்கும்  நான்  விருத்தசேதனத்தைப்  பிரசங்கிக்கிறவனாயிருந்தால்,  இதுவரைக்கும்  என்னத்திற்குத்  துன்பப்படுகிறேன்?  அப்படியானால்  சிலுவையைப்பற்றி  வரும்  இடறல்  ஒழிந்திருக்குமே.  (கலாத்தியர்  5:11)

sagoathararea,  ithuvaraikkum  naan  viruththaseathanaththaip  pirasanggikki’ravanaayirunthaal,  ithuvaraikkum  ennaththi’rkuth  thunbappadugi’rean?  appadiyaanaal  siluvaiyaippat’ri  varum  ida’ral  ozhinthirukkumea.  (kalaaththiyar  5:11)

உங்களைக்  கலக்குகிறவர்கள்  தறிப்புண்டுபோனால்  நலமாயிருக்கும்.  (கலாத்தியர்  5:12)

ungga'laik  kalakkugi’ravarga'l  tha’rippu'ndupoanaal  nalamaayirukkum.  (kalaaththiyar  5:12)

சகோதரரே,  நீங்கள்  சுயாதீனத்திற்கு  அழைக்கப்பட்டீர்கள்,  இந்தச்  சுயாதீனத்தை  நீங்கள்  மாம்சத்திற்கேதுவாக  அநுசரியாமல்,  அன்பினாலே  ஒருவருக்கொருவர்  ஊழியஞ்செய்யுங்கள்.  (கலாத்தியர்  5:13)

sagoathararea,  neengga'l  suyaatheenaththi’rku  azhaikkappatteerga'l,  inthach  suyaatheenaththai  neengga'l  maamsaththi’rkeathuvaaga  anusariyaamal,  anbinaalea  oruvarukkoruvar  oozhiyagnseyyungga'l.  (kalaaththiyar  5:13)

உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக,  என்கிற  இந்த  ஒரே  வார்த்தையிலே  நியாயப்பிரமாணம்  முழுவதும்  நிறைவேறும்.  (கலாத்தியர்  5:14)

unnidaththil  nee  anbukooruvathupoalap  pi’ranidaththilum  anbukooruvaayaaga,  engi’ra  intha  orea  vaarththaiyilea  niyaayappiramaa'nam  muzhuvathum  ni’raivea’rum.  (kalaaththiyar  5:14)

நீங்கள்  ஒருவரையொருவர்  கடித்துப்  பட்சித்தீர்களானால்  அழிவீர்கள்,  அப்படி  ஒருவராலொருவர்  அழிக்கப்படாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  (கலாத்தியர்  5:15)

neengga'l  oruvaraiyoruvar  kadiththup  padchiththeerga'laanaal  azhiveerga'l,  appadi  oruvaraaloruvar  azhikkappadaathapadikku  echcharikkaiyaayirungga'l.  (kalaaththiyar  5:15)

பின்னும்  நான்  சொல்லுகிறதென்னவென்றால்,  ஆவிக்கேற்றபடி  நடந்துகொள்ளுங்கள்,  அப்பொழுது  மாம்ச  இச்சையை  நிறைவேற்றாதிருப்பீர்கள்.  (கலாத்தியர்  5:16)

pinnum  naan  sollugi’rathennaven’raal,  aavikkeat’rapadi  nadanthuko'l'lungga'l,  appozhuthu  maamsa  ichchaiyai  ni’raiveat’raathiruppeerga'l.  (kalaaththiyar  5:16)

மாம்சம்  ஆவிக்கு  விரோதமாகவும்,  ஆவி  மாம்சத்துக்கு  விரோதமாகவும்  இச்சிக்கிறது;  நீங்கள்  செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச்  செய்யாதபடிக்கு,  இவைகள்  ஒன்றுக்கொன்று  விரோதமாயிருக்கிறது.  (கலாத்தியர்  5:17)

maamsam  aavikku  viroathamaagavum,  aavi  maamsaththukku  viroathamaagavum  ichchikki’rathu;  neengga'l  seyyavea'ndumen’rirukki’ravaiga'laich  seyyaathapadikku,  ivaiga'l  on’rukkon’ru  viroathamaayirukki’rathu.  (kalaaththiyar  5:17)

ஆவியினால்  நடத்தப்படுவீர்களானால்,  நீங்கள்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டவர்களல்ல.  (கலாத்தியர்  5:18)

aaviyinaal  nadaththappaduveerga'laanaal,  neengga'l  niyaayappiramaa'naththi’rkuk  keezhppattavarga'lalla.  (kalaaththiyar  5:18)

மாம்சத்தின்  கிரியைகள்  வெளியரங்கமாயிருக்கின்றன;  அவையாவன:  விபசாரம்,  வேசித்தனம்,  அசுத்தம்,  காமவிகாரம்,  (கலாத்தியர்  5:19)

maamsaththin  kiriyaiga'l  ve'liyaranggamaayirukkin’rana;  avaiyaavana:  vibasaaram,  veasiththanam,  asuththam,  kaamavigaaram,  (kalaaththiyar  5:19)

விக்கிரகாராதனை,  பில்லிசூனியம்,  பகைகள்,  விரோதங்கள்,  வைராக்கியங்கள்,  கோபங்கள்,  சண்டைகள்,  பிரிவினைகள்,  மார்க்கபேதங்கள்,  (கலாத்தியர்  5:20)

vikkiragaaraathanai,  pillisooniyam,  pagaiga'l,  viroathangga'l,  vairaakkiyangga'l,  koabangga'l,  sa'ndaiga'l,  pirivinaiga'l,  maarkkabeathangga'l,  (kalaaththiyar  5:20)

பொறாமைகள்,  கொலைகள்,  வெறிகள்,  களியாட்டுகள்  முதலானவைகளே;  இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லையென்று  முன்னே  நான்  சொன்னதுபோல  இப்பொழுதும்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (கலாத்தியர்  5:21)

po’raamaiga'l,  kolaiga'l,  ve’riga'l,  ka'liyaattuga'l  muthalaanavaiga'lea;  ippadippattavaiga'laich  seygi’ravarga'l  theavanudaiya  raajyaththaich  suthantharippathillaiyen’ru  munnea  naan  sonnathupoala  ippozhuthum  ungga'lukkuch  sollugi’rean.  (kalaaththiyar  5:21)

ஆவியின்  கனியோ,  அன்பு,  சந்தோஷம்,  சமாதானம்,  நீடியபொறுமை,  தயவு,  நற்குணம்,  விசுவாசம்,  (கலாத்தியர்  5:22)

aaviyin  kaniyoa,  anbu,  santhoasham,  samaathaanam,  neediyapo’rumai,  thayavu,  na’rku'nam,  visuvaasam,  (kalaaththiyar  5:22)

சாந்தம்,  இச்சையடக்கம்;  இப்படிப்பட்டவைகளுக்கு  விரோதமான  பிரமாணம்  ஒன்றுமில்லை.  (கலாத்தியர்  5:23)

saantham,  ichchaiyadakkam;  ippadippattavaiga'lukku  viroathamaana  piramaa'nam  on’rumillai.  (kalaaththiyar  5:23)

கிறிஸ்துவினுடையவர்கள்  தங்கள்  மாம்சத்தையும்  அதின்  ஆசை  இச்சைகளையும்  சிலுவையில்  அறைந்திருக்கிறார்கள்.  (கலாத்தியர்  5:24)

ki’risthuvinudaiyavarga'l  thangga'l  maamsaththaiyum  athin  aasai  ichchaiga'laiyum  siluvaiyil  a’rainthirukki’raarga'l.  (kalaaththiyar  5:24)

நாம்  ஆவியினாலே  பிழைத்திருந்தால்,  ஆவிக்கேற்றபடி  நடக்கவும்  கடவோம்.  (கலாத்தியர்  5:25)

naam  aaviyinaalea  pizhaiththirunthaal,  aavikkeat’rapadi  nadakkavum  kadavoam.  (kalaaththiyar  5:25)

வீண்  புகழ்ச்சியை  விரும்பாமலும்,  ஒருவரையொருவர்  கோபமூட்டாமலும்,  ஒருவர்மேல்  ஒருவர்  பொறாமைகொள்ளாமலும்  இருக்கக்கடவோம்.  (கலாத்தியர்  5:26)

vee'n  pugazhchchiyai  virumbaamalum,  oruvaraiyoruvar  koabamoottaamalum,  oruvarmeal  oruvar  po’raamaiko'l'laamalum  irukkakkadavoam.  (kalaaththiyar  5:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!