Tuesday, May 31, 2016

Ebeasiyar 4 | எபேசியர் 4 | Ephesians 4

ஆதலால்,  கர்த்தர்நிமித்தம்  கட்டுண்டவனாகிய  நான்  உங்களுக்குச்  சொல்லுகிற  புத்தியென்னவெனில்,  நீங்கள்  அழைக்கப்பட்ட  அழைப்புக்குப்  பாத்திரவான்களாய்  நடந்து,  (எபேசியர்  4:1)

aathalaal,  karththarnimiththam  kattu'ndavanaagiya  naan  ungga'lukkuch  sollugi’ra  buththiyennavenil,  neengga'l  azhaikkappatta  azhaippukkup  paaththiravaanga'laay  nadanthu,  (ebeasiyar  4:1)

மிகுந்த  மனத்தாழ்மையும்  சாந்தமும்  நீடிய  பொறுமையும்  உடையவர்களாய்,  அன்பினால்  ஒருவரையொருவர்  தாங்கி,  (எபேசியர்  4:2)

miguntha  manaththaazhmaiyum  saanthamum  neediya  po’rumaiyum  udaiyavarga'laay,  anbinaal  oruvaraiyoruvar  thaanggi,  (ebeasiyar  4:2)

சமாதானக்கட்டினால்  ஆவியின்  ஒருமையைக்  காத்துக்கொள்வதற்கு  ஜாக்கிரதையாயிருங்கள்.  (எபேசியர்  4:3)

samaathaanakkattinaal  aaviyin  orumaiyaik  kaaththukko'lvatha’rku  jaakkirathaiyaayirungga'l.  (ebeasiyar  4:3)

உங்களுக்கு  உண்டான  அழைப்பினாலே  நீங்கள்  ஒரே  நம்பிக்கைக்கு  அழைக்கப்பட்டதுபோல,  ஒரே  சரீரமும்,  ஒரே  ஆவியும்  உண்டு;  (எபேசியர்  4:4)

ungga'lukku  u'ndaana  azhaippinaalea  neengga'l  orea  nambikkaikku  azhaikkappattathupoala,  orea  sareeramum,  orea  aaviyum  u'ndu;  (ebeasiyar  4:4)

ஒரே  கர்த்தரும்,  ஒரே  விசுவாசமும்,  ஒரே  ஞானஸ்நானமும்,  (எபேசியர்  4:5)

orea  karththarum,  orea  visuvaasamum,  orea  gnaanasnaanamum,  (ebeasiyar  4:5)

எல்லாருக்கும்  ஒரே  தேவனும்  பிதாவும்  உண்டு;  அவர்  எல்லார்மேலும்,  எல்லாரோடும்,  உங்கள்  எல்லாருக்குள்ளும்  இருக்கிறவர்.  (எபேசியர்  4:6)

ellaarukkum  orea  theavanum  pithaavum  u'ndu;  avar  ellaarmealum,  ellaaroadum,  ungga'l  ellaarukku'l'lum  irukki’ravar.  (ebeasiyar  4:6)

கிறிஸ்துவினுடைய  ஈவின்  அளவுக்குத்தக்கதாக  நம்மில்  அவனவனுக்குக்  கிருபை  அளிக்கப்பட்டிருக்கிறது.  (எபேசியர்  4:7)

ki’risthuvinudaiya  eevin  a'lavukkuththakkathaaga  nammil  avanavanukkuk  kirubai  a'likkappattirukki’rathu.  (ebeasiyar  4:7)

ஆதலால்,  அவர்  உன்னதத்திற்கு  ஏறி,  சிறைப்பட்டவர்களைச்  சிறையாக்கி,  மனுஷர்களுக்கு  வரங்களை  அளித்தார்  என்று  சொல்லியிருக்கிறார்.  (எபேசியர்  4:8)

aathalaal,  avar  unnathaththi’rku  ea’ri,  si’raippattavarga'laich  si’raiyaakki,  manusharga'lukku  varangga'lai  a'liththaar  en’ru  solliyirukki’raar.  (ebeasiyar  4:8)

ஏறினார்  என்பதினாலே  அவர்  அதற்குமுன்னே  பூமியின்  தாழ்விடங்களில்  இறங்கினார்  என்று  விளங்குகிறதல்லவா?  (எபேசியர்  4:9)

ea’rinaar  enbathinaalea  avar  atha’rkumunnea  boomiyin  thaazhvidangga'lil  i’rangginaar  en’ru  vi'langgugi’rathallavaa?  (ebeasiyar  4:9)

இறங்கினவரே  எல்லாவற்றையும்  நிரப்பத்தக்கதாக,  எல்லா  வானங்களுக்கும்  மேலாக  உன்னதத்திற்கு  ஏறினவருமாயிருக்கிறார்.  (எபேசியர்  4:10)

i’rangginavarea  ellaavat’raiyum  nirappaththakkathaaga,  ellaa  vaanangga'lukkum  mealaaga  unnathaththi’rku  ea’rinavarumaayirukki’raar.  (ebeasiyar  4:10)

மேலும்  நாம்  அனைவரும்  தேவனுடைய  குமாரனைப்  பற்றும்  விசுவாசத்திலும்  அறிவிலும்  ஒருமைப்பட்டவர்களாகி,  கிறிஸ்துவினுடைய  நிறைவான  வளர்ச்சியின்  அளவுக்குத்தக்க  பூரணபுருஷராகும்வரைக்கும்,  (எபேசியர்  4:11)

mealum  naam  anaivarum  theavanudaiya  kumaaranaip  pat’rum  visuvaasaththilum  a’rivilum  orumaippattavarga'laagi,  ki’risthuvinudaiya  ni’raivaana  va'larchchiyin  a'lavukkuththakka  poora'napurusharaagumvaraikkum,  (ebeasiyar  4:11)

பரிசுத்தவான்கள்  சீர்பொருந்தும்பொருட்டு,  சுவிசேஷ  ஊழியத்தின்  வேலைக்காகவும்,  கிறிஸ்துவின்  சரீரமாகிய  சபையானது  பக்திவிருத்தி  அடைவதற்காகவும்,  (எபேசியர்  4:12)

parisuththavaanga'l  seerporunthumporuttu,  suviseasha  oozhiyaththin  vealaikkaagavum,  ki’risthuvin  sareeramaagiya  sabaiyaanathu  bakthiviruththi  adaivatha’rkaagavum,  (ebeasiyar  4:12)

அவர்,  சிலரை  அப்போஸ்தலராகவும்,  சிலரைத்  தீர்க்கதரிசிகளாகவும்,  சிலரைச்  சுவிசேஷகராகவும்,  சிலரை  மேய்ப்பராகவும்  போதகராகவும்  ஏற்படுத்தினார்.  (எபேசியர்  4:13)

avar,  silarai  appoasthalaraagavum,  silaraith  theerkkatharisiga'laagavum,  silaraich  suviseashagaraagavum,  silarai  meaypparaagavum  poathagaraagavum  ea’rpaduththinaar.  (ebeasiyar  4:13)

நாம்  இனிக்  குழந்தைகளாயிராமல்,  மனுஷருடைய  சூதும்  வஞ்சிக்கிறதற்கேதுவான  தந்திரமுமுள்ள  போதகமாகிய  பலவித  காற்றினாலே  அலைகளைப்போல  அடிபட்டு  அலைகிறவர்களாயிராமல்,  (எபேசியர்  4:14)

naam  inik  kuzhanthaiga'laayiraamal,  manusharudaiya  soothum  vagnchikki’ratha’rkeathuvaana  thanthiramumu'l'la  poathagamaagiya  palavitha  kaat’rinaalea  alaiga'laippoala  adipattu  alaigi’ravarga'laayiraamal,  (ebeasiyar  4:14)

அன்புடன்  சத்தியத்தைக்  கைக்கொண்டு,  தலையாகிய  கிறிஸ்துவுக்குள்  எல்லாவற்றிலேயும்,  நாம்  வளருகிறவர்களாயிருக்கும்படியாக  அப்படிச்  செய்தார்.  (எபேசியர்  4:15)

anbudan  saththiyaththaik  kaikko'ndu,  thalaiyaagiya  ki’risthuvukku'l  ellaavat’rileayum,  naam  va'larugi’ravarga'laayirukkumpadiyaaga  appadich  seythaar.  (ebeasiyar  4:15)

அவராலே  சரீரம்  முழுதும்,  அதற்கு  உதவியாயிருக்கிற  சகல  கணுக்களினாலும்  இசைவாய்க்  கூட்டி  இணைக்கப்பட்டு,  ஒவ்வொரு  அவயவமும்  தன்தன்  அளவுக்குத்தக்கதாய்க்  கிரியைசெய்கிறபடியே,  அது  அன்பினாலே  தனக்குப்  பக்திவிருத்தி  உண்டாக்குகிறதற்கேதுவாகச்  சரீரவளர்ச்சியை  உண்டாக்குகிறது.  (எபேசியர்  4:16)

avaraalea  sareeram  muzhuthum,  atha’rku  uthaviyaayirukki’ra  sagala  ka'nukka'linaalum  isaivaayk  kootti  i'naikkappattu,  ovvoru  avayavamum  thanthan  a'lavukkuththakkathaayk  kiriyaiseygi’rapadiyea,  athu  anbinaalea  thanakkup  bakthiviruththi  u'ndaakkugi’ratha’rkeathuvaagach  sareerava'larchchiyai  u'ndaakkugi’rathu.  (ebeasiyar  4:16)

ஆதலால்,  கர்த்தருக்குள்  நான்  உங்களுக்குச்  சாட்சியாகச்  சொல்லி  எச்சரிக்கிறது  என்னவெனில்,  மற்றப்  புறஜாதிகள்  தங்கள்  வீணான  சிந்தையிலே  நடக்கிறதுபோல  நீங்கள்  இனி  நடவாமலிருங்கள்.  (எபேசியர்  4:17)

aathalaal,  karththarukku'l  naan  ungga'lukkuch  saadchiyaagach  solli  echcharikki’rathu  ennavenil,  mat’rap  pu’rajaathiga'l  thangga'l  vee'naana  sinthaiyilea  nadakki’rathupoala  neengga'l  ini  nadavaamalirungga'l.  (ebeasiyar  4:17)

அவர்கள்  புத்தியில்  அந்தகாரப்பட்டு,  தங்கள்  இருதயகடினத்தினால்  தங்களில்  இருக்கும்  அறியாமையினாலே  தேவனுடைய  ஜீவனுக்கு  அந்நியராயிருந்து;  (எபேசியர்  4:18)

avarga'l  buththiyil  anthagaarappattu,  thangga'l  iruthayakadinaththinaal  thangga'lil  irukkum  a’riyaamaiyinaalea  theavanudaiya  jeevanukku  anniyaraayirunthu;  (ebeasiyar  4:18)

உணர்வில்லாதவர்களாய்,  சகலவித  அசுத்தங்களையும்  ஆவலோடே  நடப்பிக்கும்படி,  தங்களைக்  காமவிகாரத்திற்கு  ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.  (எபேசியர்  4:19)

u'narvillaathavarga'laay,  sagalavitha  asuththangga'laiyum  aavaloadea  nadappikkumpadi,  thangga'laik  kaamavigaaraththi’rku  oppukkoduththirukki’raarga'l.  (ebeasiyar  4:19)

நீங்களோ  இவ்விதமாய்க்  கிறிஸ்துவைக்  கற்றுக்கொள்ளவில்லை.  (எபேசியர்  4:20)

neengga'loa  ivvithamaayk  ki’risthuvaik  kat’rukko'l'lavillai.  (ebeasiyar  4:20)

இயேசுவினிடத்திலுள்ள  சத்தியத்தின்படியே,  நீங்கள்  அவரிடத்தில்  கேட்டறிந்து,  அவரால்  போதிக்கப்பட்டீர்களே.  (எபேசியர்  4:21)

iyeasuvinidaththilu'l'la  saththiyaththinpadiyea,  neengga'l  avaridaththil  keatta’rinthu,  avaraal  poathikkappatteerga'lea.  (ebeasiyar  4:21)

அந்தப்படி,  முந்தின  நடக்கைக்குரிய  மோசம்போக்கும்  இச்சைகளாலே  கெட்டுப்போகிற  பழைய  மனுஷனை  நீங்கள்  களைந்துபோட்டு,  (எபேசியர்  4:22)

anthappadi,  munthina  nadakkaikkuriya  moasampoakkum  ichchaiga'laalea  kettuppoagi’ra  pazhaiya  manushanai  neengga'l  ka'lainthupoattu,  (ebeasiyar  4:22)

உங்கள்  உள்ளத்திலே  புதிதான  ஆவியுள்ளவர்களாகி,  (எபேசியர்  4:23)

ungga'l  u'l'laththilea  puthithaana  aaviyu'l'lavarga'laagi,  (ebeasiyar  4:23)

மெய்யான  நீதியிலும்  பரிசுத்தத்திலும்  தேவனுடைய  சாயலாகச்  சிருஷ்டிக்கப்பட்ட  புதிய  மனுஷனைத்  தரித்துக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  4:24)

meyyaana  neethiyilum  parisuththaththilum  theavanudaiya  saayalaagach  sirushdikkappatta  puthiya  manushanaith  thariththukko'l'lungga'l.  (ebeasiyar  4:24)

அன்றியும்,  நாம்  ஒருவருக்கொருவர்  அவயவங்களாயிருக்கிறபடியால்,  பொய்யைக்  களைந்து,  அவனவன்  பிறனுடனே  மெய்யைப்  பேசக்கடவன்.  (எபேசியர்  4:25)

an’riyum,  naam  oruvarukkoruvar  avayavangga'laayirukki’rapadiyaal,  poyyaik  ka'lainthu,  avanavan  pi’ranudanea  meyyaip  peasakkadavan.  (ebeasiyar  4:25)

நீங்கள்  கோபங்கொண்டாலும்  பாவஞ்செய்யாதிருங்கள்;  சூரியன்  அஸ்தமிக்கிறதற்கு  முன்னாக  உங்கள்  எரிச்சல்  தணியக்கடவது;  (எபேசியர்  4:26)

neengga'l  koabangko'ndaalum  paavagnseyyaathirungga'l;  sooriyan  asthamikki’ratha’rku  munnaaga  ungga'l  erichchal  tha'niyakkadavathu;  (ebeasiyar  4:26)

பிசாசுக்கு  இடங்கொடாமலும்  இருங்கள்.  (எபேசியர்  4:27)

pisaasukku  idangkodaamalum  irungga'l.  (ebeasiyar  4:27)

திருடுகிறவன்  இனித்  திருடாமல்,  குறைச்சலுள்ளவனுக்குக்  கொடுக்கத்தக்கதாகத்  தனக்கு  உண்டாயிருக்கும்படி,  தன்  கைகளினால்  நலமான  வேலைசெய்து,  பிரயாசப்படக்கடவன்.  (எபேசியர்  4:28)

thirudugi’ravan  inith  thirudaamal,  ku’raichchalu'l'lavanukkuk  kodukkaththakkathaagath  thanakku  u'ndaayirukkumpadi,  than  kaiga'linaal  nalamaana  vealaiseythu,  pirayaasappadakkadavan.  (ebeasiyar  4:28)

கெட்ட  வார்த்தை  ஒன்றும்  உங்கள்  வாயிலிருந்து  புறப்படவேண்டாம்;  பக்திவிருத்திக்கு  ஏதுவான  நல்ல  வார்த்தை  உண்டானால்  அதையே  கேட்கிறவர்களுக்குப்  பிரயோஜனமுண்டாகும்படி  பேசுங்கள்.  (எபேசியர்  4:29)

ketta  vaarththai  on’rum  ungga'l  vaayilirunthu  pu’rappadavea'ndaam;  bakthiviruththikku  eathuvaana  nalla  vaarththai  u'ndaanaal  athaiyea  keadki’ravarga'lukkup  pirayoajanamu'ndaagumpadi  peasungga'l.  (ebeasiyar  4:29)

அன்றியும்,  நீங்கள்  மீட்கப்படும்  நாளுக்கென்று  முத்திரையாகப்  பெற்ற  தேவனுடைய  பரிசுத்தஆவியைத்  துக்கப்படுத்தாதிருங்கள்.  (எபேசியர்  4:30)

an’riyum,  neengga'l  meedkappadum  naa'lukken’ru  muththiraiyaagap  pet’ra  theavanudaiya  parisuththaaaviyaith  thukkappaduththaathirungga'l.  (ebeasiyar  4:30)

சகலவிதமான  கசப்பும்,  கோபமும்,  மூர்க்கமும்,  கூக்குரலும்,  தூஷணமும்,  மற்ற  எந்தத்  துர்க்குணமும்  உங்களைவிட்டு  நீங்கக்கடவது.  (எபேசியர்  4:31)

sagalavithamaana  kasappum,  koabamum,  moorkkamum,  kookkuralum,  thoosha'namum,  mat’ra  enthath  thurkku'namum  ungga'laivittu  neenggakkadavathu.  (ebeasiyar  4:31)

ஒருவருக்கொருவர்  தயவாயும்  மனஉருக்கமாயும்  இருந்து,  கிறிஸ்துவுக்குள்  தேவன்  உங்களுக்கு  மன்னித்ததுபோல,  நீங்களும்  ஒருவருக்கொருவர்  மன்னியுங்கள்.  (எபேசியர்  4:32)

oruvarukkoruvar  thayavaayum  manaurukkamaayum  irunthu,  ki’risthuvukku'l  theavan  ungga'lukku  manniththathupoala,  neengga'lum  oruvarukkoruvar  manniyungga'l.  (ebeasiyar  4:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!