Tuesday, May 31, 2016

Ebeasiyar 2 | எபேசியர் 2 | Ephesians 2

அக்கிரமங்களினாலும்  பாவங்களினாலும்  மரித்தவர்களாயிருந்த  உங்களை  உயிர்ப்பித்தார்.  (எபேசியர்  2:1)

akkiramangga'linaalum  paavangga'linaalum  mariththavarga'laayiruntha  ungga'lai  uyirppiththaar.  (ebeasiyar  2:1)

அவைகளில்  நீங்கள்  முற்காலத்திலே  இவ்வுலக  வழக்கத்திற்கேற்றபடியாகவும்,  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகளிடத்தில்  இப்பொழுது  கிரியைசெய்கிற  ஆகாயத்து  அதிகாரப்  பிரபுவாகிய  ஆவிக்கேற்றபடியாகவும்  நடந்துகொண்டீர்கள்.  (எபேசியர்  2:2)

avaiga'lil  neengga'l  mu’rkaalaththilea  ivvulaga  vazhakkaththi’rkeat’rapadiyaagavum,  keezhppadiyaamaiyin  pi'l'laiga'lidaththil  ippozhuthu  kiriyaiseygi’ra  aagaayaththu  athigaarap  pirabuvaagiya  aavikkeat’rapadiyaagavum  nadanthuko'ndeerga'l.  (ebeasiyar  2:2)

அவர்களுக்குள்ளே  நாமெல்லாரும்  முற்காலத்திலே  நமது  மாம்ச  இச்சையின்படியே  நடந்து,  நமது  மாம்சமும்  மனசும்  விரும்பினவைகளைச்  செய்து,  சுபாவத்தினாலே  மற்றவர்களைப்போலக்  கோபாக்கினையின்  பிள்ளைகளாயிருந்தோம்.  (எபேசியர்  2:3)

avarga'lukku'l'lea  naamellaarum  mu’rkaalaththilea  namathu  maamsa  ichchaiyinpadiyea  nadanthu,  namathu  maamsamum  manasum  virumbinavaiga'laich  seythu,  subaavaththinaalea  mat’ravarga'laippoalak  koabaakkinaiyin  pi'l'laiga'laayirunthoam.  (ebeasiyar  2:3)

தேவனோ  இரக்கத்தில்  ஐசுவரியமுள்ளவராய்  நம்மில்  அன்புகூர்ந்த  தம்முடைய  மிகுந்த  அன்பினாலே,  (எபேசியர்  2:4)

theavanoa  irakkaththil  aisuvariyamu'l'lavaraay  nammil  anbukoorntha  thammudaiya  miguntha  anbinaalea,  (ebeasiyar  2:4)

அக்கிரமங்களில்  மரித்தவர்களாயிருந்த  நம்மைக்  கிறிஸ்துவுடனேகூட  உயிர்ப்பித்தார்;  கிருபையினாலே  இரட்சிக்கப்பட்டீர்கள்.  (எபேசியர்  2:5)

akkiramangga'lil  mariththavarga'laayiruntha  nammaik  ki’risthuvudaneakooda  uyirppiththaar;  kirubaiyinaalea  iradchikkappatteerga'l.  (ebeasiyar  2:5)

கிறிஸ்து  இயேசுவுக்குள்  அவர்  நம்மிடத்தில்  வைத்த  தயவினாலே,  தம்முடைய  கிருபையின்  மகா  மேன்மையான  ஐசுவரியத்தை  வருங்காலங்களில்  விளங்கச்செய்வதற்காக,  (எபேசியர்  2:6)

ki’risthu  iyeasuvukku'l  avar  nammidaththil  vaiththa  thayavinaalea,  thammudaiya  kirubaiyin  mahaa  meanmaiyaana  aisuvariyaththai  varungkaalangga'lil  vi'langgachseyvatha’rkaaga,  (ebeasiyar  2:6)

கிறிஸ்து  இயேசுவுக்குள்  நம்மை  அவரோடேகூட  எழுப்பி,  உன்னதங்களிலே  அவரோடேகூட  உட்காரவும்  செய்தார்.  (எபேசியர்  2:7)

ki’risthu  iyeasuvukku'l  nammai  avaroadeakooda  ezhuppi,  unnathangga'lilea  avaroadeakooda  udkaaravum  seythaar.  (ebeasiyar  2:7)

கிருபையினாலே  விசுவாசத்தைக்கொண்டு  இரட்சிக்கப்பட்டீர்கள்;  இது  உங்களால்  உண்டானதல்ல,  இது  தேவனுடைய  ஈவு;  (எபேசியர்  2:8)

kirubaiyinaalea  visuvaasaththaikko'ndu  iradchikkappatteerga'l;  ithu  ungga'laal  u'ndaanathalla,  ithu  theavanudaiya  eevu;  (ebeasiyar  2:8)

ஒருவரும்  பெருமைபாராட்டாதபடிக்கு  இது  கிரியைகளினால்  உண்டானதல்ல;  (எபேசியர்  2:9)

oruvarum  perumaipaaraattaathapadikku  ithu  kiriyaiga'linaal  u'ndaanathalla;  (ebeasiyar  2:9)

ஏனெனில்,  நற்கிரியைகளைச்  செய்கிறதற்கு  நாம்  கிறிஸ்து  இயேசுவுக்குள்  சிருஷ்டிக்கப்பட்டு,  தேவனுடைய  செய்கையாயிருக்கிறோம்;  அவைகளில்  நாம்  நடக்கும்படி  அவர்  முன்னதாக  அவைகளை  ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.  (எபேசியர்  2:10)

eanenil,  na’rkiriyaiga'laich  seygi’ratha’rku  naam  ki’risthu  iyeasuvukku'l  sirushdikkappattu,  theavanudaiya  seygaiyaayirukki’roam;  avaiga'lil  naam  nadakkumpadi  avar  munnathaaga  avaiga'lai  aayaththampa'n'niyirukki’raar.  (ebeasiyar  2:10)

ஆனபடியினால்  முன்னே  மாம்சத்தின்படி  புறஜாதியாராயிருந்து,  மாம்சத்தில்  கையினாலே  செய்யப்படுகிற  விருத்தசேதனமுடையவர்களால்  விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட  நீங்கள்,  (எபேசியர்  2:11)

aanapadiyinaal  munnea  maamsaththinpadi  pu’rajaathiyaaraayirunthu,  maamsaththil  kaiyinaalea  seyyappadugi’ra  viruththaseathanamudaiyavarga'laal  viruththaseathanamillaathavarga'lennappatta  neengga'l,  (ebeasiyar  2:11)

அக்காலத்திலே  கிறிஸ்துவைச்  சேராதவர்களும்,  இஸ்ரவேலுடைய  காணியாட்சிக்குப்  புறம்பானவர்களும்,  வாக்குத்தத்தத்தின்  உடன்படிக்கைகளுக்கு  அந்நியரும்,  நம்பிக்கையில்லாதவர்களும்,  இவ்வுலகத்தில்  தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று  நினைத்துக்கொள்ளுங்கள்.  (எபேசியர்  2:12)

akkaalaththilea  ki’risthuvaich  searaathavarga'lum,  isravealudaiya  kaa'niyaadchikkup  pu’rambaanavarga'lum,  vaakkuththaththaththin  udanpadikkaiga'lukku  anniyarum,  nambikkaiyillaathavarga'lum,  ivvulagaththil  theavanat’ravarga'lumaayiruntheerga'len’ru  ninaiththukko'l'lungga'l.  (ebeasiyar  2:12)

முன்னே  தூரமாயிருந்த  நீங்கள்  இப்பொழுது  கிறிஸ்து  இயேசுவுக்குள்  கிறிஸ்துவின்  இரத்தத்தினாலே  சமீபமானீர்கள்.  (எபேசியர்  2:13)

munnea  thooramaayiruntha  neengga'l  ippozhuthu  ki’risthu  iyeasuvukku'l  ki’risthuvin  iraththaththinaalea  sameebamaaneerga'l.  (ebeasiyar  2:13)

எப்படியெனில்,  அவரே  நம்முடைய  சமாதான  காரணராகி,  இருதிறத்தாரையும்  ஒன்றாக்கி,  பகையாக  நின்ற  பிரிவினையாகிய  நடுச்சுவரைத்  தகர்த்து,  (எபேசியர்  2:14)

eppadiyenil,  avarea  nammudaiya  samaathaana  kaara'naraagi,  iruthi’raththaaraiyum  on’raakki,  pagaiyaaga  nin’ra  pirivinaiyaagiya  naduchsuvaraith  thagarththu,  (ebeasiyar  2:14)

சட்டதிட்டங்களாகிய  நியாயப்பிரமாணத்தைத்  தம்முடைய  மாம்சத்தினாலே  ஒழித்து,  இருதிறத்தாரையும்  தமக்குள்ளாக  ஒரே  புதிய  மனுஷனாகச்  சிருஷ்டித்து,  இப்படிச்  சமாதானம்பண்ணி,  (எபேசியர்  2:15)

sattathittangga'laagiya  niyaayappiramaa'naththaith  thammudaiya  maamsaththinaalea  ozhiththu,  iruthi’raththaaraiyum  thamakku'l'laaga  orea  puthiya  manushanaagach  sirushdiththu,  ippadich  samaathaanampa'n'ni,  (ebeasiyar  2:15)

பகையைச்  சிலுவையினால்  கொன்று,  அதினாலே  இருதிறத்தாரையும்  ஒரே  சரீரமாகத்  தேவனுக்கு  ஒப்புரவாக்கினார்.  (எபேசியர்  2:16)

pagaiyaich  siluvaiyinaal  kon’ru,  athinaalea  iruthi’raththaaraiyum  orea  sareeramaagath  theavanukku  oppuravaakkinaar.  (ebeasiyar  2:16)

அல்லாமலும்  அவர்  வந்து,  தூரமாயிருந்த  உங்களுக்கும்,  சமீபமாயிருந்த  அவர்களுக்கும்,  சமாதானத்தைச்  சுவிசேஷமாக  அறிவித்தார்.  (எபேசியர்  2:17)

allaamalum  avar  vanthu,  thooramaayiruntha  ungga'lukkum,  sameebamaayiruntha  avarga'lukkum,  samaathaanaththaich  suviseashamaaga  a’riviththaar.  (ebeasiyar  2:17)

அந்தப்படியே  நாம்  இருதிறத்தாரும்  ஒரே  ஆவியினாலே  பிதாவினிடத்தில்  சேரும்  சிலாக்கியத்தை  அவர்மூலமாய்ப்  பெற்றிருக்கிறோம்.  (எபேசியர்  2:18)

anthappadiyea  naam  iruthi’raththaarum  orea  aaviyinaalea  pithaavinidaththil  searum  silaakkiyaththai  avarmoolamaayp  pet’rirukki’roam.  (ebeasiyar  2:18)

ஆகையால்,  நீங்கள்  இனி  அந்நியரும்  பரதேசிகளுமாயிராமல்,  பரிசுத்தவான்களோடே  ஒரே  நகரத்தாரும்  தேவனுடைய  வீட்டாருமாயிருந்து,  (எபேசியர்  2:19)

aagaiyaal,  neengga'l  ini  anniyarum  paratheasiga'lumaayiraamal,  parisuththavaanga'loadea  orea  nagaraththaarum  theavanudaiya  veettaarumaayirunthu,  (ebeasiyar  2:19)

அப்போஸ்தலர்  தீர்க்கதரிசிகள்  என்பவர்களுடைய  அஸ்திபாரத்தின்மேல்  கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்;  அதற்கு  இயேசுகிறிஸ்து  தாமே  மூலைக்கல்லாயிருக்கிறார்;  (எபேசியர்  2:20)

appoasthalar  theerkkatharisiga'l  enbavarga'ludaiya  asthibaaraththinmeal  kattappattavarga'lumaayirukki’reerga'l;  atha’rku  iyeasuki’risthu  thaamea  moolaikkallaayirukki’raar;  (ebeasiyar  2:20)

அவர்மேல்  மாளிகை  முழுவதும்  இசைவாய்  இணைக்கப்பட்டு,  கர்த்தருக்குள்  பரிசுத்த  ஆலயமாக  எழும்புகிறது;  (எபேசியர்  2:21)

avarmeal  maa'ligai  muzhuvathum  isaivaay  i'naikkappattu,  karththarukku'l  parisuththa  aalayamaaga  ezhumbugi’rathu;  (ebeasiyar  2:21)

அவர்மேல்  நீங்களும்  ஆவியினாலே  தேவனுடைய  வாசஸ்தலமாகக்  கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.  (எபேசியர்  2:22)

avarmeal  neengga'lum  aaviyinaalea  theavanudaiya  vaasasthalamaagak  koottikkattappattuvarugi’reerga'l.  (ebeasiyar  2:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!