Tuesday, May 31, 2016

Ebeasiyar 1 | எபேசியர் 1 | Ephesians 1

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவினுடைய  அப்போஸ்தலனாகிய  பவுல்,  எபேசுவிலே  கிறிஸ்து  இயேசுவுக்குள்  விசுவாசிகளாயிருக்கிற  பரிசுத்தவான்களுக்கு  எழுதுகிறதாவது:  (எபேசியர்  1:1)

theavanudaiya  siththaththinaalea  iyeasuki’risthuvinudaiya  appoasthalanaagiya  pavul,  ebeasuvilea  ki’risthu  iyeasuvukku'l  visuvaasiga'laayirukki’ra  parisuththavaanga'lukku  ezhuthugi’rathaavathu:  (ebeasiyar  1:1)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்,  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (எபேசியர்  1:2)

nammudaiya  pithaavaagiya  theavanaalum,  karththaraagiya  iyeasuki’risthuvinaalum,  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (ebeasiyar  1:2)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  பிதாவாகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  கிறிஸ்துவுக்குள்  உன்னதங்களிலே  ஆவிக்குரிய  சகல  ஆசீர்வாதத்தினாலும்  நம்மை  ஆசீர்வதித்திருக்கிறார்.  (எபேசியர்  1:3)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  pithaavaagiya  theavanukku  sthoaththiram;  avar  ki’risthuvukku'l  unnathangga'lilea  aavikkuriya  sagala  aaseervaathaththinaalum  nammai  aaseervathiththirukki’raar.  (ebeasiyar  1:3)

தமக்குமுன்பாக  நாம்  அன்பில்  பரிசுத்தமுள்ளவர்களும்  குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,  அவர்  உலகத்தோற்றத்துக்குமுன்னே  கிறிஸ்துவுக்குள்  நம்மைத்  தெரிந்துகொண்டபடியே,  (எபேசியர்  1:4)

thamakkumunbaaga  naam  anbil  parisuththamu'l'lavarga'lum  kut’ramillaathavarga'lumaayiruppatha’rku,  avar  ulagaththoat’raththukkumunnea  ki’risthuvukku'l  nammaith  therinthuko'ndapadiyea,  (ebeasiyar  1:4)

பிரியமானவருக்குள்  தாம்  நமக்குத்  தந்தருளின  தம்முடைய  கிருபையின்  மகிமைக்குப்  புகழ்ச்சியாக,  (எபேசியர்  1:5)

piriyamaanavarukku'l  thaam  namakkuth  thantharu'lina  thammudaiya  kirubaiyin  magimaikkup  pugazhchchiyaaga,  (ebeasiyar  1:5)

தம்முடைய  தயவுள்ள  சித்தத்தின்படியே,  நம்மை  இயேசுகிறிஸ்துமூலமாய்த்  தமக்குச்  சுவிகாரபுத்திரராகும்படி  முன்குறித்திருக்கிறார்.  (எபேசியர்  1:6)

thammudaiya  thayavu'l'la  siththaththinpadiyea,  nammai  iyeasuki’risthumoolamaayth  thamakkuch  suvigaarapuththiraraagumpadi  munku’riththirukki’raar.  (ebeasiyar  1:6)

அவருடைய  கிருபையின்  ஐசுவரியத்தின்படியே  இவருடைய  இரத்தத்தினாலே  பாவமன்னிப்பாகிய  மீட்பு  இவருக்குள்  நமக்கு  உண்டாயிருக்கிறது.  (எபேசியர்  1:7)

avarudaiya  kirubaiyin  aisuvariyaththinpadiyea  ivarudaiya  iraththaththinaalea  paavamannippaagiya  meedpu  ivarukku'l  namakku  u'ndaayirukki’rathu.  (ebeasiyar  1:7)

அந்தக்  கிருபையை  அவர்  சகல  ஞானத்தோடும்  புத்தியோடும்  எங்களிடத்தில்  பெருகப்பண்ணினார்.  (எபேசியர்  1:8)

anthak  kirubaiyai  avar  sagala  gnaanaththoadum  buththiyoadum  engga'lidaththil  perugappa'n'ninaar.  (ebeasiyar  1:8)

காலங்கள்  நிறைவேறும்போது  விளங்கும்  நியமத்தின்படி  பரலோகத்திலிருக்கிறவைகளும்  பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய  சகலமும்  கிறிஸ்துவுக்குள்ளே  கூட்டப்படவேண்டுமென்று,  (எபேசியர்  1:9)

kaalangga'l  ni’raivea’rumpoathu  vi'langgum  niyamaththinpadi  paraloagaththilirukki’ravaiga'lum  booloagaththilirukki’ravaiga'lumaagiya  sagalamum  ki’risthuvukku'l'lea  koottappadavea'ndumen’ru,  (ebeasiyar  1:9)

தமக்குள்ளே  தீர்மானித்திருந்த  தம்முடைய  தயவுள்ள  சித்தத்தின்  இரகசியத்தை  எங்களுக்கு  அறிவித்தார்.  (எபேசியர்  1:10)

thamakku'l'lea  theermaaniththiruntha  thammudaiya  thayavu'l'la  siththaththin  iragasiyaththai  engga'lukku  a’riviththaar.  (ebeasiyar  1:10)

மேலும்  கிறிஸ்துவின்மேல்  முன்னே  நம்பிக்கையாயிருந்த  நாங்கள்  அவருடைய  மகிமைக்குப்  புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,  (எபேசியர்  1:11)

mealum  ki’risthuvinmeal  munnea  nambikkaiyaayiruntha  naangga'l  avarudaiya  magimaikkup  pugazhchchiyaayirukkumpadikku,  (ebeasiyar  1:11)

தமது  சித்தத்தின்  ஆலோசனைக்குத்தக்கதாக  எல்லாவற்றையும்  நடப்பிக்கிற  அவருடைய  தீர்மானத்தின்படியே,  நாங்கள்  முன்குறிக்கப்பட்டு,  கிறிஸ்துவுக்குள்  அவருடைய  சுதந்தரமாகும்படி  தெரிந்துகொள்ளப்பட்டோம்.  (எபேசியர்  1:12)

thamathu  siththaththin  aaloasanaikkuththakkathaaga  ellaavat’raiyum  nadappikki’ra  avarudaiya  theermaanaththinpadiyea,  naangga'l  munku’rikkappattu,  ki’risthuvukku'l  avarudaiya  suthantharamaagumpadi  therinthuko'l'lappattoam.  (ebeasiyar  1:12)

நீங்களும்  உங்கள்  இரட்சிப்பின்  சுவிசேஷமாகிய  சத்திய  வசனத்தைக்  கேட்டு,  விசுவாசிகளானபோது,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  பரிசுத்தஆவியால்  அவருக்குள்  முத்திரைபோடப்பட்டீர்கள்.  (எபேசியர்  1:13)

neengga'lum  ungga'l  iradchippin  suviseashamaagiya  saththiya  vasanaththaik  keattu,  visuvaasiga'laanapoathu,  vaakkuththaththampa'n'nappatta  parisuththaaaviyaal  avarukku'l  muththiraipoadappatteerga'l.  (ebeasiyar  1:13)

அவருக்குச்  சொந்தமானவர்கள்  அவருடைய  மகிமைக்குப்  புகழ்ச்சியாக  மீட்கப்படுவார்கள்  என்பதற்கு  ஆவியானவர்  நம்முடைய  சுதந்தரத்தின்  அச்சாரமாயிருக்கிறார்.  (எபேசியர்  1:14)

avarukkuch  sonthamaanavarga'l  avarudaiya  magimaikkup  pugazhchchiyaaga  meedkappaduvaarga'l  enbatha’rku  aaviyaanavar  nammudaiya  suthantharaththin  achchaaramaayirukki’raar.  (ebeasiyar  1:14)

ஆனபடியினாலே,  கர்த்தராகிய  இயேசுவின்மேலுள்ள  உங்கள்  விசுவாசத்தையும்,  பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள  உங்கள்  அன்பையுங்குறித்து  நான்  கேள்விப்பட்டு,  (எபேசியர்  1:15)

aanapadiyinaalea,  karththaraagiya  iyeasuvinmealu'l'la  ungga'l  visuvaasaththaiyum,  parisuththavaanga'lellaarmealumu'l'la  ungga'l  anbaiyungku’riththu  naan  kea'lvippattu,  (ebeasiyar  1:15)

இடைவிடாமல்  உங்களுக்காக  ஸ்தோத்திரம்பண்ணி,  என்  ஜெபங்களில்  உங்களை  நினைத்து,  (எபேசியர்  1:16)

idaividaamal  ungga'lukkaaga  sthoaththirampa'n'ni,  en  jebangga'lil  ungga'lai  ninaiththu,  (ebeasiyar  1:16)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  தேவனும்  மகிமையின்  பிதாவுமானவர்  தம்மை  நீங்கள்  அறிந்துகொள்வதற்கான  ஞானத்தையும்  தெளிவையும்  அளிக்கிற  ஆவியை  உங்களுக்குத்  தந்தருளவேண்டுமென்றும்,  (எபேசியர்  1:17)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  theavanum  magimaiyin  pithaavumaanavar  thammai  neengga'l  a’rinthuko'lvatha’rkaana  gnaanaththaiyum  the'livaiyum  a'likki’ra  aaviyai  ungga'lukkuth  thantharu'lavea'ndumen’rum,  (ebeasiyar  1:17)

தாம்  நம்மை  அழைத்ததினாலே  நமக்கு  உண்டாயிருக்கிற  நம்பிக்கை  இன்னதென்றும்,  பரிசுத்தவான்களிடத்தில்  தமக்கு  உண்டாயிருக்கிற  சுதந்தரத்தினுடைய  மகிமையின்  ஐசுவரியம்  இன்னதென்றும்;  (எபேசியர்  1:18)

thaam  nammai  azhaiththathinaalea  namakku  u'ndaayirukki’ra  nambikkai  innathen’rum,  parisuththavaanga'lidaththil  thamakku  u'ndaayirukki’ra  suthantharaththinudaiya  magimaiyin  aisuvariyam  innathen’rum;  (ebeasiyar  1:18)

தாம்  கிறிஸ்துவை  மரித்தோரிலிருந்து  எழுப்பி,  அவரிடத்தில்  நடப்பித்த  தமது  பலத்த  சத்துவத்தின்  வல்லமைப்படியே  விசுவாசிக்கிறவர்களாகிய  நம்மிடத்திலே  காண்பிக்கும்  தம்முடைய  வல்லமையின்  மகா  மேன்மையான  மகத்துவம்  இன்னதென்றும்,  நீங்கள்  அறியும்படிக்கு,  அவர்  உங்களுக்குப்  பிரகாசமுள்ள  மனக்கண்களைக்  கொடுக்கவேண்டுமென்றும்  வேண்டிக்கொள்ளுகிறேன்.  (எபேசியர்  1:19)

thaam  ki’risthuvai  mariththoarilirunthu  ezhuppi,  avaridaththil  nadappiththa  thamathu  balaththa  saththuvaththin  vallamaippadiyea  visuvaasikki’ravarga'laagiya  nammidaththilea  kaa'nbikkum  thammudaiya  vallamaiyin  mahaa  meanmaiyaana  magaththuvam  innathen’rum,  neengga'l  a’riyumpadikku,  avar  ungga'lukkup  piragaasamu'l'la  manakka'nga'laik  kodukkavea'ndumen’rum  vea'ndikko'l'lugi’rean.  (ebeasiyar  1:19)

எல்லாத்  துரைத்தனத்துக்கும்,  அதிகாரத்துக்கும்,  வல்லமைக்கும்,  கர்த்தத்துவத்துக்கும்,  இம்மையில்மாத்திரமல்ல  மறுமையிலும்  பேர்பெற்றிருக்கும்  எல்லா  நாமத்துக்கும்  மேலாய்  அவர்  உயர்ந்திருக்கத்தக்கதாக,  (எபேசியர்  1:20)

ellaath  thuraiththanaththukkum,  athigaaraththukkum,  vallamaikkum,  karththaththuvaththukkum,  immaiyilmaaththiramalla  ma’rumaiyilum  pearpet’rirukkum  ellaa  naamaththukkum  mealaay  avar  uyarnthirukkaththakkathaaga,  (ebeasiyar  1:20)

அவரை  உன்னதங்களில்  தம்முடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்படி  செய்து,  (எபேசியர்  1:21)

avarai  unnathangga'lil  thammudaiya  valathupaarisaththil  udkaarumpadi  seythu,  (ebeasiyar  1:21)

எல்லாவற்றையும்  அவருடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தி,  (எபேசியர்  1:22)

ellaavat’raiyum  avarudaiya  paathangga'lukkuk  keezhppaduththi,  (ebeasiyar  1:22)

எல்லாவற்றையும்  எல்லாவற்றாலும்  நிரப்புகிறவருடைய  நிறைவாகிய  சரீரமான  சபைக்கு  அவரை  எல்லாவற்றிற்கும்  மேலான  தலையாகத்  தந்தருளினார்.  (எபேசியர்  1:23)

ellaavat’raiyum  ellaavat’raalum  nirappugi’ravarudaiya  ni’raivaagiya  sareeramaana  sabaikku  avarai  ellaavat’ri’rkum  mealaana  thalaiyaagath  thantharu'linaar.  (ebeasiyar  1:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!