Thursday, May 19, 2016

Appoasthalar 9 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 | Acts 9

சவுல்  என்பவன்  இன்னுங்  கர்த்தருடைய  சீஷரைப்  பயமுறுத்திக்  கொலைசெய்யும்படி  சீறிப்  பிரதான  ஆசாரியரிடத்திற்குப்  போய்;  (அப்போஸ்தலர்  9:1)

savul  enbavan  innung  karththarudaiya  seesharaip  bayamu’ruththik  kolaiseyyumpadi  see’rip  pirathaana  aasaariyaridaththi’rkup  poay;  (appoasthalar  9:1)

இந்த  மார்க்கத்தாராகிய  புருஷரையாகிலும்  ஸ்திரீகளையாகிலும்  தான்  கண்டுபிடித்தால்,  அவர்களைக்  கட்டி  எருசலேமுக்குக்  கொண்டுவரும்படி,  தமஸ்குவிலுள்ள  ஜெபஆலயங்களுக்கு  நிருபங்களைக்  கேட்டு  வாங்கினான்.  (அப்போஸ்தலர்  9:2)

intha  maarkkaththaaraagiya  purusharaiyaagilum  sthireega'laiyaagilum  thaan  ka'ndupidiththaal,  avarga'laik  katti  erusaleamukkuk  ko'nduvarumpadi,  thamaskuvilu'l'la  jebaaalayangga'lukku  nirubangga'laik  keattu  vaangginaan.  (appoasthalar  9:2)

அவன்  பிரயாணமாய்ப்  போய்,  தமஸ்குவுக்குச்  சமீபித்தபோது,  சடிதியிலே  வானத்திலிருந்து  ஒரு  ஒளி  அவனைச்  சுற்றிப்  பிரகாசித்தது;  (அப்போஸ்தலர்  9:3)

avan  pirayaa'namaayp  poay,  thamaskuvukkuch  sameebiththapoathu,  sadithiyilea  vaanaththilirunthu  oru  o'li  avanaich  sut’rip  piragaasiththathu;  (appoasthalar  9:3)

அவன்  தரையிலே  விழுந்தான்.  அப்பொழுது:  சவுலே,  சவுலே,  நீ  என்னை  ஏன்  துன்பப்படுத்துகிறாய்  என்று  தன்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டான்.  (அப்போஸ்தலர்  9:4)

avan  tharaiyilea  vizhunthaan.  appozhuthu:  savulea,  savulea,  nee  ennai  ean  thunbappaduththugi’raay  en’ru  thannudanea  sollugi’ra  oru  saththaththaik  keattaan.  (appoasthalar  9:4)

அதற்கு  அவன்:  ஆண்டவரே,  நீர்  யார்,  என்றான்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  துன்பப்படுத்துகிற  இயேசு  நானே;  முள்ளில்  உதைக்கிறது  உனக்குக்  கடினமாம்  என்றார்.  (அப்போஸ்தலர்  9:5)

atha’rku  avan:  aa'ndavarea,  neer  yaar,  en’raan.  atha’rkuk  karththar:  nee  thunbappaduththugi’ra  iyeasu  naanea;  mu'l'lil  uthaikki’rathu  unakkuk  kadinamaam  en’raar.  (appoasthalar  9:5)

அவன்  நடுங்கித்  திகைத்து:  ஆண்டவரே,  நான்  என்ன  செய்யச்  சித்தமாயிருக்கிறீர்  என்றான்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  எழுந்து,  பட்டணத்துக்குள்ளே  போ,  நீ  செய்யவேண்டியது  அங்கே  உனக்குச்  சொல்லப்படும்  என்றார்.  (அப்போஸ்தலர்  9:6)

avan  nadunggith  thigaiththu:  aa'ndavarea,  naan  enna  seyyach  siththamaayirukki’reer  en’raan.  atha’rkuk  karththar:  nee  ezhunthu,  patta'naththukku'l'lea  poa,  nee  seyyavea'ndiyathu  anggea  unakkuch  sollappadum  en’raar.  (appoasthalar  9:6)

அவனுடனேகூடப்  பிரயாணம்பண்ணின  மனுஷர்கள்  சத்தத்தைக்  கேட்டும்  ஒருவரையுங்  காணாமல்  பிரமித்து  நின்றார்கள்.  (அப்போஸ்தலர்  9:7)

avanudaneakoodap  pirayaa'nampa'n'nina  manusharga'l  saththaththaik  keattum  oruvaraiyung  kaa'naamal  piramiththu  nin’raarga'l.  (appoasthalar  9:7)

சவுல்  தரையிலிருந்தெழுந்து,  தன்  கண்களைத்  திறந்தபோது  ஒருவரையுங்  காணவில்லை.  அப்பொழுது  கைலாகு  கொடுத்து,  அவனைத்  தமஸ்குவுக்குக்  கூட்டிக்கொண்டுபோனார்கள்.  (அப்போஸ்தலர்  9:8)

savul  tharaiyilirunthezhunthu,  than  ka'nga'laith  thi’ranthapoathu  oruvaraiyung  kaa'navillai.  appozhuthu  kailaagu  koduththu,  avanaith  thamaskuvukkuk  koottikko'ndupoanaarga'l.  (appoasthalar  9:8)

அவன்  மூன்று  நாள்  பார்வையில்லாதவனாய்ப்  புசியாமலும்  குடியாமலும்  இருந்தான்.  (அப்போஸ்தலர்  9:9)

avan  moon’ru  naa'l  paarvaiyillaathavanaayp  pusiyaamalum  kudiyaamalum  irunthaan.  (appoasthalar  9:9)

தமஸ்குவிலே  அனனியா  என்னும்  பேருள்ள  ஒரு  சீஷன்  இருந்தான்.  அவனுக்குக்  கர்த்தர்  தரிசனமாகி:  அனனியாவே,  என்றார்.  அவன்:  ஆண்டவரே,  இதோ,  அடியேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  9:10)

thamaskuvilea  ananiyaa  ennum  pearu'l'la  oru  seeshan  irunthaan.  avanukkuk  karththar  tharisanamaagi:  ananiyaavea,  en’raar.  avan:  aa'ndavarea,  ithoa,  adiyean  en’raan.  (appoasthalar  9:10)

அப்பொழுது  கர்த்தர்:  நீ  எழுந்து  நேர்த்தெருவு  என்னப்பட்ட  தெருவுக்குப்போய்,  யூதாவின்  வீட்டிலே  தர்சுபட்டணத்தானாகிய  சவுல்  என்னும்  பேருள்ள  ஒருவனைத்  தேடு;  அவன்  இப்பொழுது  ஜெபம்பண்ணுகிறான்;  (அப்போஸ்தலர்  9:11)

appozhuthu  karththar:  nee  ezhunthu  nearththeruvu  ennappatta  theruvukkuppoay,  yoothaavin  veettilea  tharsupatta'naththaanaagiya  savul  ennum  pearu'l'la  oruvanaith  theadu;  avan  ippozhuthu  jebampa'n'nugi’raan;  (appoasthalar  9:11)

அனனியா  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  தன்னிடத்தில்  வரவும்,  தான்  பார்வையடையும்படி  தன்மேல்  கைவைக்கவும்  தரிசனங்கண்டான்  என்றார்.  (அப்போஸ்தலர்  9:12)

ananiyaa  ennum  pearu'l'la  oru  manushan  thannidaththil  varavum,  thaan  paarvaiyadaiyumpadi  thanmeal  kaivaikkavum  tharisanangka'ndaan  en’raar.  (appoasthalar  9:12)

அதற்கு  அனனியா:  ஆண்டவரே,  இந்த  மனுஷன்  எருசலேமிலுள்ள  உம்முடைய  பரிசுத்தவான்களுக்கு  எத்தனையோ  பொல்லாங்குகளைச்  செய்தானென்று  அவனைக்குறித்து  அநேகரால்  கேள்விப்பட்டிருக்கிறேன்.  (அப்போஸ்தலர்  9:13)

atha’rku  ananiyaa:  aa'ndavarea,  intha  manushan  erusaleamilu'l'la  ummudaiya  parisuththavaanga'lukku  eththanaiyoa  pollaangguga'laich  seythaanen’ru  avanaikku’riththu  aneagaraal  kea'lvippattirukki’rean.  (appoasthalar  9:13)

இங்கேயும்  உம்முடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிற  யாவரையுங்  கட்டும்படி  அவன்  பிரதான  ஆசாரியர்களால்  அதிகாரம்  பெற்றிருக்கிறானே  என்றான்.  (அப்போஸ்தலர்  9:14)

inggeayum  ummudaiya  naamaththaith  thozhuthuko'l'lugi’ra  yaavaraiyung  kattumpadi  avan  pirathaana  aasaariyarga'laal  athigaaram  pet’rirukki’raanea  en’raan.  (appoasthalar  9:14)

அதற்குக்  கர்த்தர்:  நீ  போ;  அவன்  புறஜாதிகளுக்கும்  ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  என்னுடைய  நாமத்தை  அறிவிக்கிறதற்காக  நான்  தெரிந்துகொண்ட  பாத்திரமாயிருக்கிறான்.  (அப்போஸ்தலர்  9:15)

atha’rkuk  karththar:  nee  poa;  avan  pu’rajaathiga'lukkum  raajaakka'lukkum  israveal  puththirarukkum  ennudaiya  naamaththai  a’rivikki’ratha’rkaaga  naan  therinthuko'nda  paaththiramaayirukki’raan.  (appoasthalar  9:15)

அவன்  என்னுடைய  நாமத்தினிமித்தம்  எவ்வளவாய்ப்  பாடுபடவேண்டுமென்பதை  நான்  அவனுக்குக்  காண்பிப்பேன்  என்றார்.  (அப்போஸ்தலர்  9:16)

avan  ennudaiya  naamaththinimiththam  evva'lavaayp  paadupadavea'ndumenbathai  naan  avanukkuk  kaa'nbippean  en’raar.  (appoasthalar  9:16)

அப்பொழுது  அனனியா  போய்,  வீட்டுக்குள்  பிரவேசித்து,  அவன்மேல்  கையை  வைத்து:  சகோதரனாகிய  சவுலே,  நீ  வந்தவழியிலே  உனக்குத்  தரிசனமான  இயேசுவாகிய  கர்த்தர்,  நீ  பார்வையடையும்படிக்கும்  பரிசுத்தஆவியினாலே  நிரப்பப்படும்படிக்கும்  என்னை  அனுப்பினார்  என்றான்.  (அப்போஸ்தலர்  9:17)

appozhuthu  ananiyaa  poay,  veettukku'l  piraveasiththu,  avanmeal  kaiyai  vaiththu:  sagoatharanaagiya  savulea,  nee  vanthavazhiyilea  unakkuth  tharisanamaana  iyeasuvaagiya  karththar,  nee  paarvaiyadaiyumpadikkum  parisuththaaaviyinaalea  nirappappadumpadikkum  ennai  anuppinaar  en’raan.  (appoasthalar  9:17)

உடனே  அவன்  கண்களிலிருந்து  மீன்  செதிள்கள்  போன்றவைகள்  விழுந்தது.  அவன்  பார்வையடைந்து,  எழுந்திருந்து,  ஞானஸ்நானம்  பெற்றான்.  (அப்போஸ்தலர்  9:18)

udanea  avan  ka'nga'lilirunthu  meen  sethi'lga'l  poan’ravaiga'l  vizhunthathu.  avan  paarvaiyadainthu,  ezhunthirunthu,  gnaanasnaanam  pet’raan.  (appoasthalar  9:18)

பின்பு  அவன்  போஜனம்பண்ணிப்  பலப்பட்டான்.  சவுல்  தமஸ்குவிலுள்ள  சீஷருடனே  சிலநாள்  இருந்து,  (அப்போஸ்தலர்  9:19)

pinbu  avan  poajanampa'n'nip  balappattaan.  savul  thamaskuvilu'l'la  seesharudanea  silanaa'l  irunthu,  (appoasthalar  9:19)

தாமதமின்றி,  கிறிஸ்து  தேவனுடைய  குமாரனென்று  ஆலயங்களிலே  பிரசங்கித்தான்.  (அப்போஸ்தலர்  9:20)

thaamathamin’ri,  ki’risthu  theavanudaiya  kumaaranen’ru  aalayangga'lilea  pirasanggiththaan.  (appoasthalar  9:20)

கேட்டவர்களெல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  எருசலேமில்  இந்த  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிறவர்களை  நாசமாக்கி,  இங்கேயும்  அப்படிப்பட்டவர்களைக்  கட்டிப்  பிரதான  ஆசாரியர்களிடத்திற்குக்  கொண்டுபோகும்படி  வந்தவன்  இவனல்லவா  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  9:21)

keattavarga'lellaarum  aachchariyappattu:  erusaleamil  intha  naamaththaith  thozhuthuko'l'lugi’ravarga'lai  naasamaakki,  inggeayum  appadippattavarga'laik  kattip  pirathaana  aasaariyarga'lidaththi’rkuk  ko'ndupoagumpadi  vanthavan  ivanallavaa  en’raarga'l.  (appoasthalar  9:21)

சவுல்  அதிகமாகத்  திடன்கொண்டு,  இவரே  கிறிஸ்துவென்று  திருஷ்டாந்தப்படுத்தி,  தமஸ்குவில்  குடியிருக்கிற  யூதர்களைக்  கலங்கப்பண்ணினான்.  (அப்போஸ்தலர்  9:22)

savul  athigamaagath  thidanko'ndu,  ivarea  ki’risthuven’ru  thirushdaanthappaduththi,  thamaskuvil  kudiyirukki’ra  yootharga'laik  kalanggappa'n'ninaan.  (appoasthalar  9:22)

அநேகநாள்  சென்றபின்பு,  யூதர்கள்  அவனைக்  கொலைசெய்யும்படி  ஆலோசனை  பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  9:23)

aneaganaa'l  sen’rapinbu,  yootharga'l  avanaik  kolaiseyyumpadi  aaloasanai  pa'n'ninaarga'l.  (appoasthalar  9:23)

அவர்களுடைய  யோசனை  சவுலுக்குத்  தெரியவந்தது.  அவனைக்  கொலைசெய்யும்படி  அவர்கள்  இரவும்  பகலும்  கோட்டைவாசல்களைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  9:24)

avarga'ludaiya  yoasanai  savulukkuth  theriyavanthathu.  avanaik  kolaiseyyumpadi  avarga'l  iravum  pagalum  koattaivaasalga'laik  kaaththukko'ndirunthaarga'l.  (appoasthalar  9:24)

சீஷர்கள்  இராத்திரியிலே  அவனைக்  கூட்டிக்கொண்டுபோய்,  ஒரு  கூடையிலே  வைத்து,  மதில்வழியாய்  இறக்கிவிட்டார்கள்.  (அப்போஸ்தலர்  9:25)

seesharga'l  iraaththiriyilea  avanaik  koottikko'ndupoay,  oru  koodaiyilea  vaiththu,  mathilvazhiyaay  i’rakkivittaarga'l.  (appoasthalar  9:25)

சவுல்  எருசலேமுக்கு  வந்து,  சீஷருடனே  சேர்ந்துகொள்ளப்  பார்த்தான்;  அவர்கள்  அவனைச்  சீஷனென்று  நம்பாமல்  எல்லாரும்  அவனுக்குப்  பயந்திருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  9:26)

savul  erusaleamukku  vanthu,  seesharudanea  searnthuko'l'lap  paarththaan;  avarga'l  avanaich  seeshanen’ru  nambaamal  ellaarum  avanukkup  bayanthirunthaarga'l.  (appoasthalar  9:26)

அப்பொழுது  பர்னபா  என்பவன்  அவனைச்  சேர்த்துக்கொண்டு,  அப்போஸ்தலரிடத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  வழியிலே  அவன்  கர்த்தரைக்  கண்ட  விதத்தையும்,  அவர்  அவனுடனே  பேசினதையும்,  தமஸ்குவில்  அவன்  இயேசுவின்  நாமத்தினாலே  தைரியமாய்ப்  பிரசங்கித்ததையும்  அவர்களுக்கு  விவரித்துச்  சொன்னான்.  (அப்போஸ்தலர்  9:27)

appozhuthu  barnabaa  enbavan  avanaich  searththukko'ndu,  appoasthalaridaththil  azhaiththukko'ndupoay,  vazhiyilea  avan  karththaraik  ka'nda  vithaththaiyum,  avar  avanudanea  peasinathaiyum,  thamaskuvil  avan  iyeasuvin  naamaththinaalea  thairiyamaayp  pirasanggiththathaiyum  avarga'lukku  vivariththuch  sonnaan.  (appoasthalar  9:27)

அதன்பின்பு  அவன்  எருசலேமிலே  அவர்களிடத்தில்  போக்கும்  வரத்துமாயிருந்து;  (அப்போஸ்தலர்  9:28)

athanpinbu  avan  erusaleamilea  avarga'lidaththil  poakkum  varaththumaayirunthu;  (appoasthalar  9:28)

கர்த்தராகிய  இயேசுவின்  நாமத்தினாலே  தைரியமாய்ப்  பிரசங்கித்து,  கிரேக்கருடனே  பேசித்  தர்க்கித்தான்;  அவர்களோ  அவனைக்  கொலைசெய்ய  எத்தனம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  9:29)

karththaraagiya  iyeasuvin  naamaththinaalea  thairiyamaayp  pirasanggiththu,  kireakkarudanea  peasith  tharkkiththaan;  avarga'loa  avanaik  kolaiseyya  eththanampa'n'ninaarga'l.  (appoasthalar  9:29)

சகோதரர்  அதை  அறிந்து,  அவனைச்  செசரியாவுக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  தர்சுவுக்கு  அனுப்பிவிட்டார்கள்.  (அப்போஸ்தலர்  9:30)

sagoatharar  athai  a’rinthu,  avanaich  sesariyaavukku  azhaiththukko'ndupoay,  tharsuvukku  anuppivittaarga'l.  (appoasthalar  9:30)

அப்பொழுது  யூதேயா  கலிலேயா  சமாரியா  நாடுகளிலெங்கும்  சபைகள்  சமாதானம்  பெற்று,  பக்திவிருத்தியடைந்து,  கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயத்தோடும்,  பரிசுத்தஆவியின்  ஆறுதலோடும்  நடந்து  பெருகின.  (அப்போஸ்தலர்  9:31)

appozhuthu  yootheayaa  kalileayaa  samaariyaa  naaduga'lilenggum  sabaiga'l  samaathaanam  pet’ru,  bakthiviruththiyadainthu,  karththarukkup  bayappadugi’ra  bayaththoadum,  parisuththaaaviyin  aa’ruthaloadum  nadanthu  perugina.  (appoasthalar  9:31)

பேதுரு  போய்  எல்லாரையும்  சந்தித்துவருகையில்,  அவன்  லித்தா  ஊரிலே  குடியிருக்கிற  பரிசுத்தவான்களிடத்திற்கும்  போனான்.  (அப்போஸ்தலர்  9:32)

peathuru  poay  ellaaraiyum  santhiththuvarugaiyil,  avan  liththaa  oorilea  kudiyirukki’ra  parisuththavaanga'lidaththi’rkum  poanaan.  (appoasthalar  9:32)

அங்கே  எட்டு  வருஷமாய்க்  கட்டிலின்மேல்  திமிர்வாதமுள்ளவனாய்க்  கிடந்த  ஐனேயா  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷனைக்  கண்டான்.  (அப்போஸ்தலர்  9:33)

anggea  ettu  varushamaayk  kattilinmeal  thimirvaathamu'l'lavanaayk  kidantha  aineayaa  ennum  pearu'l'la  oru  manushanaik  ka'ndaan.  (appoasthalar  9:33)

பேதுரு  அவனைப்  பார்த்து:  ஐனேயாவே,  இயேசுகிறிஸ்து  உன்னைக்  குணமாக்குகிறார்;  நீ  எழுந்து,  உன்  படுக்கையை  நீயே  போட்டுக்கொள்  என்றான்.  உடனே  அவன்  எழுந்திருந்தான்.  (அப்போஸ்தலர்  9:34)

peathuru  avanaip  paarththu:  aineayaavea,  iyeasuki’risthu  unnaik  ku'namaakkugi’raar;  nee  ezhunthu,  un  padukkaiyai  neeyea  poattukko'l  en’raan.  udanea  avan  ezhunthirunthaan.  (appoasthalar  9:34)

லித்தாவிலும்  சாரோனிலும்  குடியிருந்தவர்களெல்லாரும்  அவனைக்  கண்டு,  கர்த்தரிடத்தில்  திரும்பினார்கள்.  (அப்போஸ்தலர்  9:35)

liththaavilum  saaroanilum  kudiyirunthavarga'lellaarum  avanaik  ka'ndu,  karththaridaththil  thirumbinaarga'l.  (appoasthalar  9:35)

யோப்பா  பட்டணத்தில்  கிரேக்குப்பாஷையிலே  தொற்காள்  என்று  அர்த்தங்கொள்ளும்  தபீத்தாள்  என்னும்  பேருடைய  ஒரு  சீஷி  இருந்தாள்;  அவள்  நற்கிரியைகளையும்  தருமங்களையும்  மிகுதியாய்ச்  செய்துகொண்டுவந்தாள்.  (அப்போஸ்தலர்  9:36)

yoappaa  patta'naththil  kireakkupbaashaiyilea  tho’rkaa'l  en’ru  arththangko'l'lum  thabeeththaa'l  ennum  pearudaiya  oru  seeshi  irunthaa'l;  ava'l  na’rkiriyaiga'laiyum  tharumangga'laiyum  miguthiyaaych  seythuko'nduvanthaa'l.  (appoasthalar  9:36)

அந்நாட்களில்  அவள்  வியாதிப்பட்டு  மரணமடைந்தாள்.  அவளைக்  குளிப்பாட்டி,  மேல்வீட்டிலே  கிடத்திவைத்தார்கள்.  (அப்போஸ்தலர்  9:37)

annaadka'lil  ava'l  viyaathippattu  mara'namadainthaa'l.  ava'laik  ku'lippaatti,  mealveettilea  kidaththivaiththaarga'l.  (appoasthalar  9:37)

யோப்பா  பட்டணம்  லித்தா  ஊருக்குச்  சமீபமானபடியினாலே,  பேதுரு  அவ்விடத்தில்  இருக்கிறானென்று  சீஷர்கள்  கேள்விப்பட்டு,  தாமதமில்லாமல்  தங்களிடத்தில்  வரவேண்டுமென்று  சொல்லும்படி  இரண்டு  மனுஷரை  அவனிடத்திற்கு  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  9:38)

yoappaa  patta'nam  liththaa  oorukkuch  sameebamaanapadiyinaalea,  peathuru  avvidaththil  irukki’raanen’ru  seesharga'l  kea'lvippattu,  thaamathamillaamal  thangga'lidaththil  varavea'ndumen’ru  sollumpadi  ira'ndu  manusharai  avanidaththi’rku  anuppinaarga'l.  (appoasthalar  9:38)

பேதுரு  எழுந்து,  அவர்களுடனே  கூடப்போனான்.  அவன்  போய்ச்  சேர்ந்தபொழுது,  அவர்கள்  அவனை  மேல்வீட்டுக்கு  அழைத்துக்கொண்டு  போனார்கள்.  அப்பொழுது  விதவைகளெல்லாரும்  அழுது,  தொற்காள்  தங்களுடனேகூட  இருக்கையில்  செய்திருந்த  அங்கிகளையும்  வஸ்திரங்களையும்  காண்பித்து,  அவனைச்  சூழ்ந்துநின்றார்கள்.  (அப்போஸ்தலர்  9:39)

peathuru  ezhunthu,  avarga'ludanea  koodappoanaan.  avan  poaych  searnthapozhuthu,  avarga'l  avanai  mealveettukku  azhaiththukko'ndu  poanaarga'l.  appozhuthu  vithavaiga'lellaarum  azhuthu,  tho’rkaa'l  thangga'ludaneakooda  irukkaiyil  seythiruntha  anggiga'laiyum  vasthirangga'laiyum  kaa'nbiththu,  avanaich  soozhnthunin’raarga'l.  (appoasthalar  9:39)

பேதுரு  எல்லாரையும்  வெளியே  போகச்செய்து,  முழங்காற்படியிட்டு  ஜெபம்பண்ணி,  பிரேதத்தின்  புறமாய்த்  திரும்பி:  தபீத்தாளே,  எழுந்திரு  என்றான்.  அப்பொழுது  அவள்  தன்  கண்களைத்  திறந்து,  பேதுருவைப்  பார்த்து  உட்கார்ந்தாள்.  (அப்போஸ்தலர்  9:40)

peathuru  ellaaraiyum  ve'liyea  poagachseythu,  muzhanggaa’rpadiyittu  jebampa'n'ni,  pireathaththin  pu’ramaayth  thirumbi:  thabeeththaa'lea,  ezhunthiru  en’raan.  appozhuthu  ava'l  than  ka'nga'laith  thi’ranthu,  peathuruvaip  paarththu  udkaarnthaa'l.  (appoasthalar  9:40)

அவன்  அவளுக்குக்  கைகொடுத்து,  அவளை  எழுந்திருக்கப்பண்ணி,  பரிசுத்தவான்களையும்  விதவைகளையும்  அழைத்து,  அவளை  உயிருள்ளவளாக  அவர்களுக்கு  முன்  நிறுத்தினான்.  (அப்போஸ்தலர்  9:41)

avan  ava'lukkuk  kaikoduththu,  ava'lai  ezhunthirukkappa'n'ni,  parisuththavaanga'laiyum  vithavaiga'laiyum  azhaiththu,  ava'lai  uyiru'l'lava'laaga  avarga'lukku  mun  ni’ruththinaan.  (appoasthalar  9:41)

இது  யோப்பா  பட்டணம்  எங்கும்  தெரியவந்தது.  அப்பொழுது  அநேகர்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவர்களானார்கள்.  (அப்போஸ்தலர்  9:42)

ithu  yoappaa  patta'nam  enggum  theriyavanthathu.  appozhuthu  aneagar  karththaridaththil  visuvaasamu'l'lavarga'laanaarga'l.  (appoasthalar  9:42)

பின்பு  அவன்  யோப்பா  பட்டணத்திலே  தோல்  பதனிடுகிறவனாகிய  சீமோன்  என்னும்  ஒருவனிடத்தில்  அநேகநாள்  தங்கியிருந்தான்.  (அப்போஸ்தலர்  9:43)

pinbu  avan  yoappaa  patta'naththilea  thoal  pathanidugi’ravanaagiya  seemoan  ennum  oruvanidaththil  aneaganaa'l  thanggiyirunthaan.  (appoasthalar  9:43)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!