Wednesday, May 18, 2016

Appoasthalar 6 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 | Acts 6

அந்நாட்களிலே,  சீஷர்கள்  பெருகினபோது,  கிரேக்கரானவர்கள்,  தங்கள்  விதவைகள்  அன்றாடக  விசாரணையில்  திட்டமாய்  விசாரிக்கப்படவில்லையென்று,  எபிரெயருக்கு  விரோதமாய்  முறுமுறுத்தார்கள்.  (அப்போஸ்தலர்  6:1)

annaadka'lilea,  seesharga'l  peruginapoathu,  kireakkaraanavarga'l,  thangga'l  vithavaiga'l  an’raadaga  visaara'naiyil  thittamaay  visaarikkappadavillaiyen’ru,  ebireyarukku  viroathamaay  mu’rumu’ruththaarga'l.  (appoasthalar  6:1)

அப்பொழுது  பன்னிருவரும்  சீஷர்  கூட்டத்தை  வரவழைத்து:  நாங்கள்  தேவவசனத்தைப்  போதியாமல்,  பந்திவிசாரணைசெய்வது  தகுதியல்ல.  (அப்போஸ்தலர்  6:2)

appozhuthu  panniruvarum  seeshar  koottaththai  varavazhaiththu:  naangga'l  theavavasanaththaip  poathiyaamal,  panthivisaara'naiseyvathu  thaguthiyalla.  (appoasthalar  6:2)

ஆதலால்  சகோதரரே,  பரிசுத்தஆவியும்  ஞானமும்  நிறைந்து,  நற்சாட்சி  பெற்றிருக்கிற  ஏழுபேரை  உங்களில்  தெரிந்துகொள்ளுங்கள்;  அவர்களை  இந்த  வேலைக்காக  ஏற்படுத்துவோம்.  (அப்போஸ்தலர்  6:3)

aathalaal  sagoathararea,  parisuththaaaviyum  gnaanamum  ni’rainthu,  na’rsaadchi  pet’rirukki’ra  eazhupearai  ungga'lil  therinthuko'l'lungga'l;  avarga'lai  intha  vealaikkaaga  ea’rpaduththuvoam.  (appoasthalar  6:3)

நாங்களோ  ஜெபம்பண்ணுவதிலும்  தேவவசனத்தைப்  போதிக்கிற  ஊழியத்திலும்  இடைவிடாமல்  தரித்திருப்போம்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  6:4)

naangga'loa  jebampa'n'nuvathilum  theavavasanaththaip  poathikki’ra  oozhiyaththilum  idaividaamal  thariththiruppoam  en’raarga'l.  (appoasthalar  6:4)

இந்த  யோசனை  சபையாரெல்லாருக்கும்  பிரியமாயிருந்தது.  அப்பொழுது  விசுவாசமும்  பரிசுத்தஆவியும்  நிறைந்தவனாகிய  ஸ்தேவானையும்,  பிலிப்பையும்,  பிரொகோரையும்,  நிக்கானோரையும்,  தீமோனையும்,  பர்மெனாவையும்,  யூதமார்க்கத்தமைந்தவனான  அந்தியோகியா  பட்டணத்தானாகிய  நிக்கொலாவையும்  தெரிந்துகொண்டு,  (அப்போஸ்தலர்  6:5)

intha  yoasanai  sabaiyaarellaarukkum  piriyamaayirunthathu.  appozhuthu  visuvaasamum  parisuththaaaviyum  ni’rainthavanaagiya  stheavaanaiyum,  pilippaiyum,  pirokoaraiyum,  nikkaanoaraiyum,  theemoanaiyum,  parmenaavaiyum,  yoothamaarkkaththamainthavanaana  anthiyoakiyaa  patta'naththaanaagiya  nikkolaavaiyum  therinthuko'ndu,  (appoasthalar  6:5)

அவர்களை  அப்போஸ்தலருக்குமுன்பாக  நிறுத்தினார்கள்.  இவர்கள்  ஜெபம்பண்ணி,  அவர்கள்மேல்  கைகளை  வைத்தார்கள்.  (அப்போஸ்தலர்  6:6)

avarga'lai  appoasthalarukkumunbaaga  ni’ruththinaarga'l.  ivarga'l  jebampa'n'ni,  avarga'lmeal  kaiga'lai  vaiththaarga'l.  (appoasthalar  6:6)

தேவவசனம்  விருத்தியடைந்தது;  சீஷருடைய  தொகை  எருசலேமில்  மிகவும்  பெருகிற்று;  ஆசாரியர்களில்  அநேகரும்  விசுவாசத்துக்குக்  கீழ்ப்படிந்தார்கள்.  (அப்போஸ்தலர்  6:7)

theavavasanam  viruththiyadainthathu;  seesharudaiya  thogai  erusaleamil  migavum  perugit’ru;  aasaariyarga'lil  aneagarum  visuvaasaththukkuk  keezhppadinthaarga'l.  (appoasthalar  6:7)

ஸ்தேவான்  விசுவாசத்தினாலும்  வல்லமையினாலும்  நிறைந்தவனாய்  ஜனங்களுக்குள்ளே  பெரிய  அற்புதங்களையும்  அடையாளங்களையும்  செய்தான்.  (அப்போஸ்தலர்  6:8)

stheavaan  visuvaasaththinaalum  vallamaiyinaalum  ni’rainthavanaay  janangga'lukku'l'lea  periya  a’rputhangga'laiyum  adaiyaa'langga'laiyum  seythaan.  (appoasthalar  6:8)

அப்பொழுது  லிபர்த்தீனர்  என்னப்பட்டவர்களின்  ஆலயத்தைச்  சேர்ந்தவர்களிலும்,  சிரேனே  பட்டணத்தாரிலும்,  அலெக்சந்திரியா  பட்டணத்தாரிலும்,  சிலிசியா  நாட்டாரிலும்,  ஆசியா  தேசத்தாரிலும்  சிலர்  எழும்பி,  ஸ்தேவானுடனே  தர்க்கம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  6:9)

appozhuthu  libarththeenar  ennappattavarga'lin  aalayaththaich  searnthavarga'lilum,  sireanea  patta'naththaarilum,  aleksanthiriyaa  patta'naththaarilum,  silisiyaa  naattaarilum,  aasiyaa  theasaththaarilum  silar  ezhumbi,  stheavaanudanea  tharkkampa'n'ninaarga'l.  (appoasthalar  6:9)

அவன்  பேசின  ஞானத்தையும்  ஆவியையும்  எதிர்த்துநிற்க  அவர்களால்  கூடாமற்போயிற்று.  (அப்போஸ்தலர்  6:10)

avan  peasina  gnaanaththaiyum  aaviyaiyum  ethirththuni’rka  avarga'laal  koodaama’rpoayit’ru.  (appoasthalar  6:10)

அப்பொழுது  அவர்கள்:  மோசேக்கும்  தேவனுக்கும்  விரோதமாக  இவன்  தூஷண  வார்த்தைகளைப்  பேசக்கேட்டோம்  என்று  சொல்லும்படியாக  மனுஷரை  ஏற்படுத்தி;  (அப்போஸ்தலர்  6:11)

appozhuthu  avarga'l:  moaseakkum  theavanukkum  viroathamaaga  ivan  thoosha'na  vaarththaiga'laip  peasakkeattoam  en’ru  sollumpadiyaaga  manusharai  ea’rpaduththi;  (appoasthalar  6:11)

ஜனங்களையும்  மூப்பரையும்  வேதபாரகரையும்  எழுப்பிவிட்டு;  அவன்மேல்  பாய்ந்து,  அவனைப்  பிடித்து,  ஆலோசனைச்  சங்கத்தாருக்கு  முன்பாக  இழுத்துக்கொண்டுபோய்;  (அப்போஸ்தலர்  6:12)

janangga'laiyum  moopparaiyum  veathapaaragaraiyum  ezhuppivittu;  avanmeal  paaynthu,  avanaip  pidiththu,  aaloasanaich  sanggaththaarukku  munbaaga  izhuththukko'ndupoay;  (appoasthalar  6:12)

பொய்ச்சாட்சிகளையும்  நிறுத்தினார்கள்.  இவர்கள்:  இந்த  மனுஷன்  இந்தப்  பரிசுத்த  ஸ்தலத்துக்கும்  வேதப்பிரமாணத்துக்கும்  விரோதமாகத்  தூஷண  வார்த்தைகளை  ஓயாமற்  பேசுகிறான்;  (அப்போஸ்தலர்  6:13)

poychsaadchiga'laiyum  ni’ruththinaarga'l.  ivarga'l:  intha  manushan  inthap  parisuththa  sthalaththukkum  veathappiramaa'naththukkum  viroathamaagath  thoosha'na  vaarththaiga'lai  oayaama’r  peasugi’raan;  (appoasthalar  6:13)

எப்படியென்றால்,  நசரேயனாகிய  அந்த  இயேசு  இந்த  ஸ்தலத்தை  அழித்துப்போட்டு,  மோசே  நமக்குக்  கொடுத்த  முறைமைகளை  மாற்றுவானென்று  இவன்  சொல்லக்கேட்டோம்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  6:14)

eppadiyen’raal,  nasareayanaagiya  antha  iyeasu  intha  sthalaththai  azhiththuppoattu,  moasea  namakkuk  koduththa  mu’raimaiga'lai  maat’ruvaanen’ru  ivan  sollakkeattoam  en’raarga'l.  (appoasthalar  6:14)

ஆலோசனைச்  சங்கத்தில்  உட்கார்ந்திருந்த  அனைவரும்  அவன்மேல்  கண்ணோக்கமாயிருந்து,  அவன்  முகம்  தேவதூதன்  முகம்போலிருக்கக்  கண்டார்கள்.  (அப்போஸ்தலர்  6:15)

aaloasanaich  sanggaththil  udkaarnthiruntha  anaivarum  avanmeal  ka'n'noakkamaayirunthu,  avan  mugam  theavathoothan  mugampoalirukkak  ka'ndaarga'l.  (appoasthalar  6:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!