Sunday, May 22, 2016

Appoasthalar 27 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 | Acts 27


நாங்கள்  இத்தாலியா  தேசத்துக்குக்  கப்பல்  ஏறிப்  போகும்படி  தீர்மானிக்கப்பட்டபோது,  பவுலையும்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  வேறுசிலரையும்  அகுஸ்து  பட்டாளத்தைச்சேர்ந்த  யூலியு  என்னும்  பேர்கொண்ட  நூற்றுக்கு  அதிபதியினிடத்தில்  ஒப்புவித்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:1)

naangga'l  iththaaliyaa  theasaththukkuk  kappal  ea’rip  poagumpadi  theermaanikkappattapoathu,  pavulaiyum  kaavalil  vaikkappattiruntha  vea’rusilaraiyum  agusthu  pattaa'laththaichsearntha  yooliyu  ennum  pearko'nda  noot’rukku  athibathiyinidaththil  oppuviththaarga'l.  (appoasthalar  27:1)

அதிரமித்தியம்  ஊர்க்கப்பலில்  நாங்கள்  ஏறி,  ஆசியா  நாட்டுக்  கரைபிடித்தோடவேண்டுமென்று  நினைத்துப்  புறப்பட்டோம்.  மக்கெதோனியா  தேசத்துத்  தெசலோனிக்கே  பட்டணத்தானாகிய  அரிஸ்தர்க்கு  எங்களுடனேகூட  இருந்தான்.  (அப்போஸ்தலர்  27:2)

athiramiththiyam  oorkkappalil  naangga'l  ea’ri,  aasiyaa  naattuk  karaipidiththoadavea'ndumen’ru  ninaiththup  pu’rappattoam.  makkethoaniyaa  theasaththuth  thesaloanikkea  patta'naththaanaagiya  aristharkku  engga'ludaneakooda  irunthaan.  (appoasthalar  27:2)

மறுநாள்  சீதோன்  துறைபிடித்தோம்.  யூலியு  பவுலைப்  பட்சமாய்  நடப்பித்து,  அவன்  தன்  சிநேகிதரிடத்திலே  போய்ப்  பராமரிப்படையும்படிக்கு  உத்தரவு  கொடுத்தான்.  (அப்போஸ்தலர்  27:3)

ma’runaa'l  seethoan  thu’raipidiththoam.  yooliyu  pavulaip  padchamaay  nadappiththu,  avan  than  sineagitharidaththilea  poayp  paraamarippadaiyumpadikku  uththaravu  koduththaan.  (appoasthalar  27:3)

அவ்விடம்விட்டு  நாங்கள்  புறப்பட்டு,  எதிர்காற்றாயிருந்தபடியினால்,  சீப்புருதீவின்  ஒதுக்கிலே  ஓடினோம்.  (அப்போஸ்தலர்  27:4)

avvidamvittu  naangga'l  pu’rappattu,  ethirkaat’raayirunthapadiyinaal,  seeppurutheevin  othukkilea  oadinoam.  (appoasthalar  27:4)

பின்பு  சிலிசியா  பம்பிலியா  நாடுகளின்  கடல்வழியாய்  ஓடி,  லீசியா  நாட்டு  மீறாப்பட்டணத்தில்  சேர்ந்தோம்.  (அப்போஸ்தலர்  27:5)

pinbu  silisiyaa  pampiliyaa  naaduga'lin  kadalvazhiyaay  oadi,  leesiyaa  naattu  mee’raappatta'naththil  searnthoam.  (appoasthalar  27:5)

இத்தாலியாவுக்குப்  போகிற  அலெக்சந்திரியாபட்டணத்துக்  கப்பலை  நூற்றுக்கு  அதிபதி  அங்கே  கண்டு,  எங்களை  அதில்  ஏற்றினான்.  (அப்போஸ்தலர்  27:6)

iththaaliyaavukkup  poagi’ra  aleksanthiriyaapatta'naththuk  kappalai  noot’rukku  athibathi  anggea  ka'ndu,  engga'lai  athil  eat’rinaan.  (appoasthalar  27:6)

காற்று  எங்களைத்  தடுத்தபடியினாலே,  நாங்கள்  அநேகநாள்  மெதுவாய்ச்  சென்று,  வருத்தத்தோடே  கினீதுபட்டணத்திற்கு  எதிரே  வந்து,  சல்மோனே  ஊருக்கு  எதிராய்க்  கிரேத்தாதீவின்  ஒதுக்கில்  ஓடினோம்.  (அப்போஸ்தலர்  27:7)

kaat’ru  engga'laith  thaduththapadiyinaalea,  naangga'l  aneaganaa'l  methuvaaych  sen’ru,  varuththaththoadea  kineethupatta'naththi’rku  ethirea  vanthu,  salmoanea  oorukku  ethiraayk  kireaththaatheevin  othukkil  oadinoam.  (appoasthalar  27:7)

அதை  வருத்தத்தோடே  கடந்து,  நல்ல  துறைமுகம்  என்னப்பட்ட  ஒரு  இடத்திற்கு  வந்தோம்;  லசேயபட்டணம்  அதற்குச்  சமீபமாயிருந்தது.  (அப்போஸ்தலர்  27:8)

athai  varuththaththoadea  kadanthu,  nalla  thu’raimugam  ennappatta  oru  idaththi’rku  vanthoam;  laseayapatta'nam  atha’rkuch  sameebamaayirunthathu.  (appoasthalar  27:8)

வெகுகாலம்  சென்று,  உபவாசநாளும்  கழிந்துபோனபடியினாலே,  இனிக்  கப்பல்யாத்திரை  செய்கிறது  மோசத்திற்கு  ஏதுவாயிருக்குமென்று,  பவுல்  அவர்களை  நோக்கி:  (அப்போஸ்தலர்  27:9)

vegukaalam  sen’ru,  ubavaasanaa'lum  kazhinthupoanapadiyinaalea,  inik  kappalyaaththirai  seygi’rathu  moasaththi’rku  eathuvaayirukkumen’ru,  pavul  avarga'lai  noakki:  (appoasthalar  27:9)

மனுஷரே,  இந்த  யாத்திரையினாலே  சரக்குக்கும்  கப்பலுக்கும்  மாத்திரமல்ல,  நம்முடைய  ஜீவனுக்கும்  வருத்தமும்  மிகுந்த  சேதமும்  உண்டாயிருக்குமென்று  காண்கிறேன்  என்று  சொல்லி,  அவர்களை  எச்சரித்தான்.  (அப்போஸ்தலர்  27:10)

manusharea,  intha  yaaththiraiyinaalea  sarakkukkum  kappalukkum  maaththiramalla,  nammudaiya  jeevanukkum  varuththamum  miguntha  seathamum  u'ndaayirukkumen’ru  kaa'ngi’rean  en’ru  solli,  avarga'lai  echchariththaan.  (appoasthalar  27:10)

நூற்றுக்கு  அதிபதி  பவுலினால்  சொல்லப்பட்டவைகளைப்  பார்க்கிலும்  மாலுமியையும்  கப்பல்  எஜமானையும்  அதிகமாய்  நம்பினான்.  (அப்போஸ்தலர்  27:11)

noot’rukku  athibathi  pavulinaal  sollappattavaiga'laip  paarkkilum  maalumiyaiyum  kappal  ejamaanaiyum  athigamaay  nambinaan.  (appoasthalar  27:11)

அந்தத்  துறைமுகம்  மழைகாலத்திலே  தங்குவதற்கு  வசதியாயிராதபடியினால்,  அவ்விடத்தை  விட்டுத்  தென்மேற்கையும்  வடமேற்கையும்  நோக்கியிருக்கும்  கிரேத்தாதீவிலுள்ள  துறைமுகமாகிய  பேனிக்ஸ்  என்னும்  இடத்தில்  சேரக்கூடுமானால்  சேர்ந்து,  மழைகாலத்தில்  தங்கும்படி  அநேகம்பேர்  ஆலோசனை  சொன்னார்கள்.  (அப்போஸ்தலர்  27:12)

anthath  thu’raimugam  mazhaikaalaththilea  thangguvatha’rku  vasathiyaayiraathapadiyinaal,  avvidaththai  vittuth  thenmea’rkaiyum  vadamea’rkaiyum  noakkiyirukkum  kireaththaatheevilu'l'la  thu’raimugamaagiya  peaniks  ennum  idaththil  searakkoodumaanaal  searnthu,  mazhaikaalaththil  thanggumpadi  aneagampear  aaloasanai  sonnaarga'l.  (appoasthalar  27:12)

தென்றல்  மெதுவாயடித்தபடியால்,  தாங்கள்  கோரினது  கைகூடிவந்ததென்று  எண்ணி,  அவ்விடம்விட்டுப்  பெயர்ந்து  கிரேத்தாதீவுக்கு  அருகாக  ஓடினார்கள்.  (அப்போஸ்தலர்  27:13)

then’ral  methuvaayadiththapadiyaal,  thaangga'l  koarinathu  kaikoodivanthathen’ru  e'n'ni,  avvidamvittup  peyarnthu  kireaththaatheevukku  arugaaga  oadinaarga'l.  (appoasthalar  27:13)

கொஞ்சநேரத்துக்குள்ளே  யூரோக்கிலிதோன்  என்னுங்  கடுங்காற்று  அதில்  மோதிற்று.  (அப்போஸ்தலர்  27:14)

kognchanearaththukku'l'lea  yooroakkilithoan  ennung  kadungkaat’ru  athil  moathit’ru.  (appoasthalar  27:14)

கப்பல்  அதில்  அகப்பட்டுக்கொண்டு,  காற்றுக்கு  எதிர்த்துப்போகக்கூடாதபடியினால்  காற்றின்  போக்கிலே  கொண்டுபோகப்பட்டோம்.  (அப்போஸ்தலர்  27:15)

kappal  athil  agappattukko'ndu,  kaat’rukku  ethirththuppoagakkoodaathapadiyinaal  kaat’rin  poakkilea  ko'ndupoagappattoam.  (appoasthalar  27:15)

அப்படிக்  கிலவுதா  என்னப்பட்ட  ஒரு  சின்ன  தீவின்  ஒதுக்கிலே  ஓடுகையில்  வெகு  வருத்தத்தோடே  படவை  வசப்படுத்தினோம்.  (அப்போஸ்தலர்  27:16)

appadik  kilavuthaa  ennappatta  oru  sinna  theevin  othukkilea  oadugaiyil  vegu  varuththaththoadea  padavai  vasappaduththinoam.  (appoasthalar  27:16)

அதை  அவர்கள்  தூக்கியெடுத்தபின்பு,  பல  உபாயங்கள்  செய்து,  கப்பலைச்சுற்றிக்  கட்டி,  சொரிமணலிலே  விழுவோமென்று  பயந்து,  பாய்களை  இறக்கி,  இவ்விதமாய்க்  கொண்டுபோகப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  27:17)

athai  avarga'l  thookkiyeduththapinbu,  pala  ubaayangga'l  seythu,  kappalaichsut’rik  katti,  sorima'nalilea  vizhuvoamen’ru  bayanthu,  paayga'lai  i’rakki,  ivvithamaayk  ko'ndupoagappattaarga'l.  (appoasthalar  27:17)

மேலும்  பெருங்காற்று  மழையில்  நாங்கள்  மிகவும்  அடிபட்டபடியினால்,  மறுநாளில்  சில  சரக்குகளைக்  கடலில்  எறிந்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:18)

mealum  perungkaat’ru  mazhaiyil  naangga'l  migavum  adipattapadiyinaal,  ma’runaa'lil  sila  sarakkuga'laik  kadalil  e’rinthaarga'l.  (appoasthalar  27:18)

மூன்றாம்  நாளிலே  கப்பலின்  தளவாடங்களை  எங்கள்  கைகளினாலே  எடுத்து  எறிந்தோம்.  (அப்போஸ்தலர்  27:19)

moon’raam  naa'lilea  kappalin  tha'lavaadangga'lai  engga'l  kaiga'linaalea  eduththu  e’rinthoam.  (appoasthalar  27:19)

அநேகநாளாய்ச்  சூரியனாவது  நட்சத்திரங்களாவது  காணப்படாமல்,  மிகுந்த  பெருங்காற்றுமழையும்  அடித்துக்  கொண்டிருந்தபடியினால்,  இனி  தப்பிப்  பிழைப்போமென்னும்  நம்பிக்கை  முழுமையும்  அற்றுப்போயிற்று.  (அப்போஸ்தலர்  27:20)

aneaganaa'laaych  sooriyanaavathu  nadchaththirangga'laavathu  kaa'nappadaamal,  miguntha  perungkaat’rumazhaiyum  adiththuk  ko'ndirunthapadiyinaal,  ini  thappip  pizhaippoamennum  nambikkai  muzhumaiyum  at’ruppoayit’ru.  (appoasthalar  27:20)

அநேகநாள்  அவர்கள்  போஜனம்பண்ணாமல்  இருந்தபோது,  பவுல்  அவர்கள்  நடுவிலே  நின்று:  மனுஷரே,  இந்த  வருத்தமும்  சேதமும்  வராதபடிக்கு  என்  சொல்லைக்கேட்டு,  கிரேத்தாதீவை  விட்டுப்புறப்படாமல்  இருக்கவேண்டியதாயிருந்தது.  (அப்போஸ்தலர்  27:21)

aneaganaa'l  avarga'l  poajanampa'n'naamal  irunthapoathu,  pavul  avarga'l  naduvilea  nin’ru:  manusharea,  intha  varuththamum  seathamum  varaathapadikku  en  sollaikkeattu,  kireaththaatheevai  vittuppu’rappadaamal  irukkavea'ndiyathaayirunthathu.  (appoasthalar  27:21)

ஆகிலும்,  திடமனதாயிருங்களென்று  இப்பொழுது  உங்களுக்குத்  தைரியஞ்சொல்லுகிறேன்.  கப்பற்சேதமேயல்லாமல்  உங்களில்  ஒருவனுக்கும்  பிராணச்சேதம்  வராது.  (அப்போஸ்தலர்  27:22)

aagilum,  thidamanathaayirungga'len’ru  ippozhuthu  ungga'lukkuth  thairiyagnsollugi’rean.  kappa’rseathameayallaamal  ungga'lil  oruvanukkum  piraa'nachseatham  varaathu.  (appoasthalar  27:22)

ஏனென்றால்,  என்னை  ஆட்கொண்டவரும்  நான்  சேவிக்கிறவருமான  தேவனுடைய  தூதனானவன்  இந்த  இராத்திரியிலே  என்னிடத்தில்  வந்துநின்று:  (அப்போஸ்தலர்  27:23)

eanen’raal,  ennai  aadko'ndavarum  naan  seavikki’ravarumaana  theavanudaiya  thoothanaanavan  intha  iraaththiriyilea  ennidaththil  vanthunin’ru:  (appoasthalar  27:23)

பவுலே,  பயப்படாதே,  நீ  இராயனுக்கு  முன்பாக  நிற்கவேண்டும்.  இதோ,  உன்னுடனேகூட  யாத்திரைபண்ணுகிற  யாவரையும்  தேவன்  உனக்குத்  தயவுபண்ணினார்  என்றான்.  (அப்போஸ்தலர்  27:24)

pavulea,  bayappadaathea,  nee  iraayanukku  munbaaga  ni’rkavea'ndum.  ithoa,  unnudaneakooda  yaaththiraipa'n'nugi’ra  yaavaraiyum  theavan  unakkuth  thayavupa'n'ninaar  en’raan.  (appoasthalar  27:24)

ஆனபடியினால்  மனுஷரே,  திடமனதாயிருங்கள்.  எனக்குச்  சொல்லப்பட்ட  பிரகாரமாகவே  நடக்கும்  என்று  தேவனிடத்தில்  நம்பிக்கையாயிருக்கிறேன்.  (அப்போஸ்தலர்  27:25)

aanapadiyinaal  manusharea,  thidamanathaayirungga'l.  enakkuch  sollappatta  piragaaramaagavea  nadakkum  en’ru  theavanidaththil  nambikkaiyaayirukki’rean.  (appoasthalar  27:25)

ஆயினும்  நாம்  ஒரு  தீவிலே  விழவேண்டியதாயிருக்கும்  என்றான்.  (அப்போஸ்தலர்  27:26)

aayinum  naam  oru  theevilea  vizhavea'ndiyathaayirukkum  en’raan.  (appoasthalar  27:26)

பதினாலாம்  இராத்திரியானபோது,  நாங்கள்  ஆதிரியாக்  கடலிலே  அலைவுபட்டு  ஓடுகையில்,  நடுஜாமத்திலே  கப்பலாட்களுக்கு  ஒரு  கரை  கிட்டிவருகிறதாகத்  தோன்றிற்று.  (அப்போஸ்தலர்  27:27)

pathinaalaam  iraaththiriyaanapoathu,  naangga'l  aathiriyaak  kadalilea  alaivupattu  oadugaiyil,  nadujaamaththilea  kappalaadka'lukku  oru  karai  kittivarugi’rathaagath  thoan’rit’ru.  (appoasthalar  27:27)

உடனே  அவர்கள்  விழுதுவிட்டு  இருபது  பாகமென்று  கண்டார்கள்;  சற்றப்புறம்  போனபொழுது,  மறுபடியும்  விழுது  விட்டுப்  பதினைந்து  பாகமென்று  கண்டார்கள்.  (அப்போஸ்தலர்  27:28)

udanea  avarga'l  vizhuthuvittu  irubathu  paagamen’ru  ka'ndaarga'l;  sat’rappu’ram  poanapozhuthu,  ma’rupadiyum  vizhuthu  vittup  pathinainthu  paagamen’ru  ka'ndaarga'l.  (appoasthalar  27:28)

பாறையிடங்களில்  விழுவோமென்று  பயந்து,  பின்னணியத்திலிருந்து  நாலு  நங்கூரங்களைப்போட்டு,  பொழுது  எப்போது  விடியுமோ  என்றிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:29)

paa’raiyidangga'lil  vizhuvoamen’ru  bayanthu,  pinna'niyaththilirunthu  naalu  nanggoorangga'laippoattu,  pozhuthu  eppoathu  vidiyumoa  en’rirunthaarga'l.  (appoasthalar  27:29)

அப்பொழுது  கப்பலாட்கள்  கப்பலை  விட்டோடிப்போக  வகைதேடி,  முன்னணியத்திலிருந்து  நங்கூரங்களைப்  போடப்போகிற  பாவனையாய்ப்  படவைக்  கடலில்  இறக்குகையில்,  (அப்போஸ்தலர்  27:30)

appozhuthu  kappalaadka'l  kappalai  vittoadippoaga  vagaitheadi,  munna'niyaththilirunthu  nanggoorangga'laip  poadappoagi’ra  baavanaiyaayp  padavaik  kadalil  i’rakkugaiyil,  (appoasthalar  27:30)

பவுல்  நூற்றுக்கு  அதிபதியையும்  சேவகரையும்  நோக்கி:  இவர்கள்  கப்பலில்  இராவிட்டால்  நீங்கள்  தப்பிப்  பிழைக்கமாட்டீர்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  27:31)

pavul  noot’rukku  athibathiyaiyum  seavagaraiyum  noakki:  ivarga'l  kappalil  iraavittaal  neengga'l  thappip  pizhaikkamaatteerga'l  en’raan.  (appoasthalar  27:31)

அப்பொழுது,  போர்ச்சேவகர்  படவின்  கயிறுகளை  அறுத்து,  அதைத்  தாழவிழவிட்டார்கள்.  (அப்போஸ்தலர்  27:32)

appozhuthu,  poarchseavagar  padavin  kayi’ruga'lai  a’ruththu,  athaith  thaazhavizhavittaarga'l.  (appoasthalar  27:32)

பொழுது  விடிகையில்  எல்லாரும்  போஜனம்பண்ணும்படி  பவுல்  அவர்களுக்குத்  தைரியஞ்சொல்லி:  நீங்கள்  இன்று  பதினாலுநாளாய்  ஒன்றும்  சாப்பிடாமல்  பட்டினியாயிருக்கிறீர்கள்.  (அப்போஸ்தலர்  27:33)

pozhuthu  vidigaiyil  ellaarum  poajanampa'n'numpadi  pavul  avarga'lukkuth  thairiyagnsolli:  neengga'l  in’ru  pathinaalunaa'laay  on’rum  saappidaamal  pattiniyaayirukki’reerga'l.  (appoasthalar  27:33)

ஆகையால்  போஜனம்பண்ணும்படி  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்,  நீங்கள்  தப்பிப்  பிழைப்பதற்கு  அது  உதவியாயிருக்கும்;  உங்கள்  தலையிலிருந்து  ஒரு  மயிரும்  விழாது  என்றான்.  (அப்போஸ்தலர்  27:34)

aagaiyaal  poajanampa'n'numpadi  ungga'lai  vea'ndikko'l'lugi’rean,  neengga'l  thappip  pizhaippatha’rku  athu  uthaviyaayirukkum;  ungga'l  thalaiyilirunthu  oru  mayirum  vizhaathu  en’raan.  (appoasthalar  27:34)

இப்படிச்  சொல்லி,  அப்பத்தை  எடுத்து,  எல்லாருக்குமுன்பாகவும்  தேவனை  ஸ்தோத்திரித்து,  அதைப்  பிட்டுப்  புசிக்கத்தொடங்கினான்.  (அப்போஸ்தலர்  27:35)

ippadich  solli,  appaththai  eduththu,  ellaarukkumunbaagavum  theavanai  sthoaththiriththu,  athaip  pittup  pusikkaththodangginaan.  (appoasthalar  27:35)

அப்பொழுது  எல்லாரும்  திடமனப்பட்டுப்  புசித்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:36)

appozhuthu  ellaarum  thidamanappattup  pusiththaarga'l.  (appoasthalar  27:36)

கப்பலில்  இருநூற்றெழுபத்தாறு  பேர்  இருந்தோம்.  (அப்போஸ்தலர்  27:37)

kappalil  irunoot’rezhubaththaa’ru  pear  irunthoam.  (appoasthalar  27:37)

திருப்தியாகப்  புசித்தபின்பு  அவர்கள்  கோதுமையைக்  கடலிலே  எறிந்து,  கப்பலை  இலகுவாக்கினார்கள்.  (அப்போஸ்தலர்  27:38)

thirupthiyaagap  pusiththapinbu  avarga'l  koathumaiyaik  kadalilea  e’rinthu,  kappalai  ilaguvaakkinaarga'l.  (appoasthalar  27:38)

பொழுது  விடிந்தபின்பு,  இன்னபூமியென்று  அறியாதிருந்தார்கள்.  அப்பொழுது  சமமான  கரையுள்ள  ஒரு  துறைமுகம்  அவர்களுக்குத்  தென்பட்டது;  கூடுமானால்  அதற்குள்  கப்பலையோட்ட  யோசனையாயிருந்து,  (அப்போஸ்தலர்  27:39)

pozhuthu  vidinthapinbu,  innaboomiyen’ru  a’riyaathirunthaarga'l.  appozhuthu  samamaana  karaiyu'l'la  oru  thu’raimugam  avarga'lukkuth  thenpattathu;  koodumaanaal  atha’rku'l  kappalaiyoatta  yoasanaiyaayirunthu,  (appoasthalar  27:39)

நங்கூரங்களை  அறுத்துக்  கடலிலே  விட்டுவிட்டு,  சுக்கான்களுடைய  கட்டுகளைத்  தளரவிட்டு,  பெரும்பாயைக்  காற்றுமுகமாய்  விரித்து,  கரைக்கு  நேராய்  ஓடி,  (அப்போஸ்தலர்  27:40)

nanggoorangga'lai  a’ruththuk  kadalilea  vittuvittu,  sukkaanga'ludaiya  kattuga'laith  tha'laravittu,  perumpaayaik  kaat’rumugamaay  viriththu,  karaikku  nearaay  oadi,  (appoasthalar  27:40)

இருபுறமும்  கடல்  மோதிய  ஒரு  இடத்திலே  கப்பலைத்  தட்டவைத்தார்கள்;  முன்னணியம்  ஊன்றி  அசையாமலிருந்தது,  பின்னணியம்  அலைகளுடைய  பலத்தினால்  உடைந்துபோயிற்று.  (அப்போஸ்தலர்  27:41)

irupu’ramum  kadal  moathiya  oru  idaththilea  kappalaith  thattavaiththaarga'l;  munna'niyam  oon’ri  asaiyaamalirunthathu,  pinna'niyam  alaiga'ludaiya  balaththinaal  udainthupoayit’ru.  (appoasthalar  27:41)

அப்பொழுது  காவல்பண்ணப்பட்டவர்களில்  ஒருவனும்  நீந்தி  ஓடிப்போகாதபடிக்கு  அவர்களைக்  கொன்றுபோடவேண்டுமென்று  போர்ச்சேவகர்  யோசனையாயிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:42)

appozhuthu  kaavalpa'n'nappattavarga'lil  oruvanum  neenthi  oadippoagaathapadikku  avarga'laik  kon’rupoadavea'ndumen’ru  poarchseavagar  yoasanaiyaayirunthaarga'l.  (appoasthalar  27:42)

நூற்றுக்கு  அதிபதி  பவுலைக்  காப்பாற்ற  மனதாயிருந்து,  அவர்களுடைய  யோசனையைத்  தடுத்து,  நீந்தத்தக்கவர்கள்  முந்திக்  கடலில்  விழுந்து  கரையேறவும்,  (அப்போஸ்தலர்  27:43)

noot’rukku  athibathi  pavulaik  kaappaat’ra  manathaayirunthu,  avarga'ludaiya  yoasanaiyaith  thaduththu,  neenthaththakkavarga'l  munthik  kadalil  vizhunthu  karaiyea’ravum,  (appoasthalar  27:43)

மற்றவர்களில்  சிலர்  பலகைகள்மேலும்,  சிலர்  கப்பல்  துண்டுகள்மேலும்  போய்க்  கரையேறவும்  கட்டளையிட்டான்;  இவ்விதமாய்  எல்லாரும்  தப்பிக்  கரைசேர்ந்தார்கள்.  (அப்போஸ்தலர்  27:44)

mat’ravarga'lil  silar  palagaiga'lmealum,  silar  kappal  thu'nduga'lmealum  poayk  karaiyea’ravum  katta'laiyittaan;  ivvithamaay  ellaarum  thappik  karaisearnthaarga'l.  (appoasthalar  27:44)


1 comment:

  1. Correction(s) made on (March 18, 2019)

    >>>(Acts 27:1) pattaa'laththaichserntha to pattaa'laththaichsearntha

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!