Thursday, May 19, 2016

Appoasthalar 12 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 | Acts 12


அக்காலத்திலே  ஏரோதுராஜா  சபையிலே  சிலரைத்  துன்பப்படுத்தத்தொடங்கி;  (அப்போஸ்தலர்  12:1)

akkaalaththilea  earoathuraajaa  sabaiyilea  silaraith  thunbappaduththaththodanggi;  (appoasthalar  12:1)

யோவானுடைய  சகோதரனாகிய  யாக்கோபைப்  பட்டயத்தினாலே  கொலைசெய்தான்.  (அப்போஸ்தலர்  12:2)

yoavaanudaiya  sagoatharanaagiya  yaakkoabaip  pattayaththinaalea  kolaiseythaan.  (appoasthalar  12:2)

அது  யூதருக்குப்  பிரியமாயிருக்கிறதென்று  அவன்  கண்டு,  பேதுருவையும்  பிடிக்கத்தொடர்ந்தான்.  அப்பொழுது  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகை  நாட்களாயிருந்தது.  (அப்போஸ்தலர்  12:3)

athu  yootharukkup  piriyamaayirukki’rathen’ru  avan  ka'ndu,  peathuruvaiyum  pidikkaththodarnthaan.  appozhuthu  pu'lippillaatha  appappa'ndigai  naadka'laayirunthathu.  (appoasthalar  12:3)

அவனைப்  பிடித்துச்  சிறைச்சாலையிலே  வைத்து,  பஸ்காபண்டிகைக்குப்  பின்பு  ஜனங்களுக்கு  முன்பாக  அவனை  வெளியே  கொண்டுவரலாமென்று  எண்ணி,  அவனைக்  காக்கும்படி  வகுப்புக்கு  நான்கு  போர்ச்சேவகராக  ஏற்படுத்திய  நான்கு  வகுப்புகளின்  வசமாக  ஒப்புவித்தான்.  (அப்போஸ்தலர்  12:4)

avanaip  pidiththuch  si’raichsaalaiyilea  vaiththu,  paskaapa'ndigaikkup  pinbu  janangga'lukku  munbaaga  avanai  ve'liyea  ko'nduvaralaamen’ru  e'n'ni,  avanaik  kaakkumpadi  vaguppukku  naangu  poarchseavagaraaga  ea’rpaduththiya  naangu  vaguppuga'lin  vasamaaga  oppuviththaan.  (appoasthalar  12:4)

அப்படியே  பேதுரு  சிறைச்சாலையிலே  காக்கப்பட்டிருக்கையில்  சபையார்  அவனுக்காகத்  தேவனை  நோக்கி  ஊக்கத்தோடே  ஜெபம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  12:5)

appadiyea  peathuru  si’raichsaalaiyilea  kaakkappattirukkaiyil  sabaiyaar  avanukkaagath  theavanai  noakki  ookkaththoadea  jebampa'n'ninaarga'l.  (appoasthalar  12:5)

ஏரோது  அவனை  வெளியே  கொண்டுவரும்படி  குறித்திருந்த  நாளுக்கு  முந்தின  நாள்  இராத்திரியிலே,  பேதுரு  இரண்டு  சங்கிலிகளினாலே  கட்டப்பட்டு,  இரண்டு  சேவகர்  நடுவே  நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்;  காவற்காரரும்  கதவுக்கு  முன்னிருந்து  சிறைச்சாலையைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  12:6)

earoathu  avanai  ve'liyea  ko'nduvarumpadi  ku’riththiruntha  naa'lukku  munthina  naa'l  iraaththiriyilea,  peathuru  ira'ndu  sanggiliga'linaalea  kattappattu,  ira'ndu  seavagar  naduvea  niththiraipa'n'nikko'ndirunthaan;  kaava’rkaararum  kathavukku  munnirunthu  si’raichsaalaiyaik  kaaththukko'ndirunthaarga'l.  (appoasthalar  12:6)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  அங்கே  வந்து  நின்றான்;  அறையிலே  வெளிச்சம்  பிரகாசித்தது.  அவன்  பேதுருவை  விலாவிலே  தட்டி,  சீக்கிரமாய்  எழுந்திரு  என்று  அவனை  எழுப்பினான்.  உடனே  சங்கிலிகள்  அவன்  கைகளிலிருந்து  விழுந்தது.  (அப்போஸ்தலர்  12:7)

appozhuthu  karththarudaiya  thoothan  anggea  vanthu  nin’raan;  a’raiyilea  ve'lichcham  piragaasiththathu.  avan  peathuruvai  vilaavilea  thatti,  seekkiramaay  ezhunthiru  en’ru  avanai  ezhuppinaan.  udanea  sanggiliga'l  avan  kaiga'lilirunthu  vizhunthathu.  (appoasthalar  12:7)

தூதன்  அவனை  நோக்கி:  உன்  அரையைக்  கட்டி,  உன்  பாதரட்சைகளைத்  தொடுத்துக்கொள்  என்றான்.  அவன்  அந்தப்படியே  செய்தான்.  தூதன்  பின்னும்  அவனை  நோக்கி:  உன்  வஸ்திரத்தைப்  போர்த்துக்கொண்டு  என்  பின்னே  வா  என்றான்.  (அப்போஸ்தலர்  12:8)

thoothan  avanai  noakki:  un  araiyaik  katti,  un  paatharadchaiga'laith  thoduththukko'l  en’raan.  avan  anthappadiyea  seythaan.  thoothan  pinnum  avanai  noakki:  un  vasthiraththaip  poarththukko'ndu  en  pinnea  vaa  en’raan.  (appoasthalar  12:8)

அந்தப்படியே  அவன்  புறப்பட்டு  அவனுக்குப்  பின்சென்று,  தூதனால்  செய்யப்பட்டது  மெய்யென்று  அறியாமல்,  தான்  ஒரு  தரிசனங்காண்கிறதாக  நினைத்தான்.  (அப்போஸ்தலர்  12:9)

anthappadiyea  avan  pu’rappattu  avanukkup  pinsen’ru,  thoothanaal  seyyappattathu  meyyen’ru  a’riyaamal,  thaan  oru  tharisanangkaa'ngi’rathaaga  ninaiththaan.  (appoasthalar  12:9)

அவர்கள்  முதலாங்காவலையும்  இரண்டாங்காவலையும்  கடந்து,  நகரத்திற்குப்போகிற  இருப்புக்கதவண்டையிலே  வந்தபோது  அது  தானாய்  அவர்களுக்குத்  திறவுண்டது;  அதின்  வழியாய்  அவர்கள்  புறப்பட்டு  ஒரு  வீதி  நெடுக  நடந்துபோனார்கள்;  உடனே  தூதன்  அவனை  விட்டுப்போய்விட்டான்.  (அப்போஸ்தலர்  12:10)

avarga'l  muthalaangkaavalaiyum  ira'ndaangkaavalaiyum  kadanthu,  nagaraththi’rkuppoagi’ra  iruppukkathava'ndaiyilea  vanthapoathu  athu  thaanaay  avarga'lukkuth  thi’ravu'ndathu;  athin  vazhiyaay  avarga'l  pu’rappattu  oru  veethi  neduga  nadanthupoanaarga'l;  udanea  thoothan  avanai  vittuppoayvittaan.  (appoasthalar  12:10)

பேதுருவுக்குத்  தெளிவு  வந்தபோது:  ஏரோதின்  கைக்கும்  யூதஜனங்களின்  எண்ணங்களுக்கும்  என்னை  விடுதலையாக்கும்படிக்குக்  கர்த்தர்  தம்முடைய  தூதனை  அனுப்பினாரென்று  நான்  இப்பொழுது  மெய்யாய்  அறிந்திருக்கிறேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  12:11)

peathuruvukkuth  the'livu  vanthapoathu:  earoathin  kaikkum  yoothajanangga'lin  e'n'nangga'lukkum  ennai  viduthalaiyaakkumpadikkuk  karththar  thammudaiya  thoothanai  anuppinaaren’ru  naan  ippozhuthu  meyyaay  a’rinthirukki’rean  en’raan.  (appoasthalar  12:11)

அவன்  இப்படி  நிச்சயித்துக்கொண்டு,  மாற்கு  என்னும்  பேர்கொண்ட  யோவானுடைய  தாயாகிய  மரியாள்  வீட்டுக்கு  வந்தான்;  அங்கே  அநேகர்  கூடி  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  12:12)

avan  ippadi  nichchayiththukko'ndu,  maa’rku  ennum  pearko'nda  yoavaanudaiya  thaayaagiya  mariyaa'l  veettukku  vanthaan;  anggea  aneagar  koodi  jebampa'n'nikko'ndirunthaarga'l.  (appoasthalar  12:12)

பேதுரு  வாசற்கதவைத்  தட்டினபோது  ரோதை  என்னும்  பேர்கொண்ட  ஒரு  பெண்  ஒற்றுக்கேட்க  வந்தாள்.  (அப்போஸ்தலர்  12:13)

peathuru  vaasa’rkathavaith  thattinapoathu  roathai  ennum  pearko'nda  oru  pe'n  ot’rukkeadka  vanthaa'l.  (appoasthalar  12:13)

அவள்  பேதுருவின்  சத்தத்தை  அறிந்து  சந்தோஷத்தினால்  கதவைத்  திறவாமல்,  உள்ளேயோடி,  பேதுரு  வாசலுக்குமுன்னே  நிற்கிறார்  என்று  அறிவித்தாள்.  (அப்போஸ்தலர்  12:14)

ava'l  peathuruvin  saththaththai  a’rinthu  santhoashaththinaal  kathavaith  thi’ravaamal,  u'l'leayoadi,  peathuru  vaasalukkumunnea  ni’rki’raar  en’ru  a’riviththaa'l.  (appoasthalar  12:14)

அவர்கள்:  நீ  பிதற்றுகிறாய்  என்றார்கள்.  அவளோ  அவர்தானென்று  உறுதியாய்ச்  சாதித்தாள்.  அப்பொழுது  அவர்கள்:  அவருடைய  தூதனாயிருக்கலாம்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  12:15)

avarga'l:  nee  pithat’rugi’raay  en’raarga'l.  ava'loa  avarthaanen’ru  u’ruthiyaaych  saathiththaa'l.  appozhuthu  avarga'l:  avarudaiya  thoothanaayirukkalaam  en’raarga'l.  (appoasthalar  12:15)

பேதுரு  பின்னும்  தட்டிக்கொண்டிருந்தான்.  அவர்கள்  திறந்தபோது  அவனைக்  கண்டு  பிரமித்தார்கள்.  (அப்போஸ்தலர்  12:16)

peathuru  pinnum  thattikko'ndirunthaan.  avarga'l  thi’ranthapoathu  avanaik  ka'ndu  piramiththaarga'l.  (appoasthalar  12:16)

அவர்கள்  பேசாமலிருக்கும்படி  அவன்  கையமர்த்தி,  கர்த்தர்  தன்னைக்  காவலிலிருந்து  விடுதலையாக்கின  விதத்தை  அவர்களுக்கு  விவரித்து,  இந்தச்  செய்தியை  யாக்கோபுக்கும்  சகோதரருக்கும்  அறிவியுங்கள்  என்று  சொல்லி;  புறப்பட்டு,  வேறொரு  இடத்திற்குப்  போனான்.  (அப்போஸ்தலர்  12:17)

avarga'l  peasaamalirukkumpadi  avan  kaiyamarththi,  karththar  thannaik  kaavalilirunthu  viduthalaiyaakkina  vithaththai  avarga'lukku  vivariththu,  inthach  seythiyai  yaakkoabukkum  sagoathararukkum  a’riviyungga'l  en’ru  solli;  pu’rappattu,  vea’roru  idaththi’rkup  poanaan.  (appoasthalar  12:17)

பொழுது  விடிந்தபின்பு  பேதுருவைக்குறித்துச்  சேவகருக்குள்ளே  உண்டான  கலக்கம்  கொஞ்சமல்ல.  (அப்போஸ்தலர்  12:18)

pozhuthu  vidinthapinbu  peathuruvaikku’riththuch  seavagarukku'l'lea  u'ndaana  kalakkam  kognchamalla.  (appoasthalar  12:18)

ஏரோது  அவனைத்  தேடிக்  காணாமற்போனபோது,  காவற்காரரை  விசாரணைசெய்து,  அவர்களைக்  கொலைசெய்யும்படி  கட்டளையிட்டு,  பின்பு  யூதேயாதேசத்தை  விட்டுச்  செசரியா  பட்டணத்துக்குப்போய்,  அங்கே  வாசம்பண்ணினான்.  (அப்போஸ்தலர்  12:19)

earoathu  avanaith  theadik  kaa'naama’rpoanapoathu,  kaava’rkaararai  visaara'naiseythu,  avarga'laik  kolaiseyyumpadi  katta'laiyittu,  pinbu  yootheayaatheasaththai  vittuch  sesariyaa  patta'naththukkuppoay,  anggea  vaasampa'n'ninaan.  (appoasthalar  12:19)

அக்காலத்திலே  ஏரோது  தீரியர்பேரிலும்  சீதோனியர்பேரிலும்  மிகவுங்  கோபமாயிருந்தான்.  தங்கள்  தேசம்  ராஜாவின்  தேசத்தினால்  போஷிக்கப்பட்டபடியினால்,  அவர்கள்  ஒருமனப்பட்டு,  அவனிடத்தில்  வந்து,  ராஜாவின்  வீட்டு  விசாரணைக்காரனாகிய  பிலாஸ்துவைத்  தங்கள்  வசமாக்கிச்  சமாதானம்  கேட்டுக்கொண்டார்கள்.  (அப்போஸ்தலர்  12:20)

akkaalaththilea  earoathu  theeriyarpearilum  seethoaniyarpearilum  migavung  koabamaayirunthaan.  thangga'l  theasam  raajaavin  theasaththinaal  poashikkappattapadiyinaal,  avarga'l  orumanappattu,  avanidaththil  vanthu,  raajaavin  veettu  visaara'naikkaaranaagiya  bilaasthuvaith  thangga'l  vasamaakkich  samaathaanam  keattukko'ndaarga'l.  (appoasthalar  12:20)

குறித்தநாளிலே,  ஏரோது  ராஜவஸ்திரம்  தரித்துக்கொண்டு,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  அவர்களுக்குப்  பிரசங்கம்பண்ணினான்.  (அப்போஸ்தலர்  12:21)

ku’riththanaa'lilea,  earoathu  raajavasthiram  thariththukko'ndu,  singgaasanaththinmeal  udkaarnthu,  avarga'lukkup  pirasanggampa'n'ninaan.  (appoasthalar  12:21)

அப்பொழுது  ஜனங்கள்  இது  மனுஷசத்தமல்ல,  இது  தேவசத்தம்  என்று  ஆர்ப்பரித்தார்கள்.  (அப்போஸ்தலர்  12:22)

appozhuthu  janangga'l  ithu  manushasaththamalla,  ithu  theavasaththam  en’ru  aarppariththaarga'l.  (appoasthalar  12:22)

அவன்  தேவனுக்கு  மகிமையைச்  செலுத்தாதபடியினால்  உடனே  கர்த்தருடைய  தூதன்  அவனை  அடித்தான்;  அவன்  புழுப்புழுத்து  இறந்தான்.  (அப்போஸ்தலர்  12:23)

avan  theavanukku  magimaiyaich  seluththaathapadiyinaal  udanea  karththarudaiya  thoothan  avanai  adiththaan;  avan  puzhuppuzhuththu  i’ranthaan.  (appoasthalar  12:23)

தேவவசனம்  வளர்ந்து  பெருகிற்று.  (அப்போஸ்தலர்  12:24)

theavavasanam  va'larnthu  perugit’ru.  (appoasthalar  12:24)

பர்னபாவும்  சவுலும்  தர்ம  ஊழியத்தை  நிறைவேற்றினபின்பு  மாற்கு  என்னும்  மறுபேர்கொண்ட  யோவானைக்  கூட்டிக்கொண்டு  எருசலேமைவிட்டுத்  திரும்பிவந்தார்கள்.  (அப்போஸ்தலர்  12:25)

barnabaavum  savulum  tharma  oozhiyaththai  ni’raiveat’rinapinbu  maa’rku  ennum  ma’rupearko'nda  yoavaanaik  koottikko'ndu  erusaleamaivittuth  thirumbivanthaarga'l.  (appoasthalar  12:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!