Thursday, May 19, 2016

Appoasthalar 11 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 | Acts 11

புறஜாதியாரும்  தேவவசனத்தை  ஏற்றுக்கொண்டார்களென்று  யூதேயாவிலிருக்கிற  அப்போஸ்தலரும்  சகோதரரும்  கேள்விப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  11:1)

pu’rajaathiyaarum  theavavasanaththai  eat’rukko'ndaarga'len’ru  yootheayaavilirukki’ra  appoasthalarum  sagoathararum  kea'lvippattaarga'l.  (appoasthalar  11:1)

பேதுரு  எருசலேமுக்குத்  திரும்பிவந்தபோது,  விருத்தசேதனமுள்ளவர்கள்  அவனை  நோக்கி:  (அப்போஸ்தலர்  11:2)

peathuru  erusaleamukkuth  thirumbivanthapoathu,  viruththaseathanamu'l'lavarga'l  avanai  noakki:  (appoasthalar  11:2)

விருத்தசேதனமில்லாத  மனுஷரிடத்தில்  நீர்  போய்,  அவர்களோடே  போஜனம்பண்ணினீர்  என்று,  அவனோடே  வாக்குவாதம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  11:3)

viruththaseathanamillaatha  manusharidaththil  neer  poay,  avarga'loadea  poajanampa'n'nineer  en’ru,  avanoadea  vaakkuvaathampa'n'ninaarga'l.  (appoasthalar  11:3)

அதற்குப்  பேதுரு  காரியத்தை  முதலிலிருந்து  வரிசையாய்  அவர்களுக்கு  விவரிக்கத்  தொடங்கி:  (அப்போஸ்தலர்  11:4)

atha’rkup  peathuru  kaariyaththai  muthalilirunthu  varisaiyaay  avarga'lukku  vivarikkath  thodanggi:  (appoasthalar  11:4)

நான்  யோப்பா  பட்டணத்தில்  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது  ஞானதிருஷ்டியடைந்து,  ஒரு  தரிசனத்தைக்கண்டேன்;  அதென்னவென்றால்,  நாலு  முனைகளும்  கட்டப்பட்ட  பெரிய  துப்பட்டியைப்போல  ஒரு  கூடு  வானத்திலிருந்து  என்னிடத்தில்  இறங்கிவந்தது.  (அப்போஸ்தலர்  11:5)

naan  yoappaa  patta'naththil  jebampa'n'nikko'ndirunthapoathu  gnaanathirushdiyadainthu,  oru  tharisanaththaikka'ndean;  athennaven’raal,  naalu  munaiga'lum  kattappatta  periya  thuppattiyaippoala  oru  koodu  vaanaththilirunthu  ennidaththil  i’ranggivanthathu.  (appoasthalar  11:5)

அதிலே  நான்  உற்றுப்பார்த்துக்  கவனிக்கிறபோது,  பூமியிலுள்ள  நாலுகால்  ஜீவன்களையும்,  காட்டுமிருகங்களையும்,  ஊரும்  பிராணிகளையும்,  ஆகாயத்துப்  பறவைகளையும்  கண்டேன்.  (அப்போஸ்தலர்  11:6)

athilea  naan  ut’ruppaarththuk  kavanikki’rapoathu,  boomiyilu'l'la  naalukaal  jeevanga'laiyum,  kaattumirugangga'laiyum,  oorum  piraa'niga'laiyum,  aagaayaththup  pa’ravaiga'laiyum  ka'ndean.  (appoasthalar  11:6)

அல்லாமலும்:  பேதுருவே,  எழுந்திரு,  அடித்துப்  புசி  என்று  என்னுடனே  சொல்லுகிற  சத்தத்தையும்  கேட்டேன்.  (அப்போஸ்தலர்  11:7)

allaamalum:  peathuruvea,  ezhunthiru,  adiththup  pusi  en’ru  ennudanea  sollugi’ra  saththaththaiyum  keattean.  (appoasthalar  11:7)

அதற்கு  நான்:  ஆண்டவரே,  அப்படியல்ல,  தீட்டும்  அசுத்தமுமாயிருக்கிற  யாதொன்றும்  ஒருக்காலும்  என்  வாய்க்குள்ளே  போனதில்லை  என்றேன்.  (அப்போஸ்தலர்  11:8)

atha’rku  naan:  aa'ndavarea,  appadiyalla,  theettum  asuththamumaayirukki’ra  yaathon’rum  orukkaalum  en  vaaykku'l'lea  poanathillai  en’rean.  (appoasthalar  11:8)

இரண்டாந்தரமும்  வானத்திலிருந்து  சத்தம்  உண்டாகி:  தேவன்  சுத்தமாக்கினவைகளை  நீ  தீட்டாக  எண்ணாதேயென்று  மறுமொழி  சொல்லிற்று.  (அப்போஸ்தலர்  11:9)

ira'ndaantharamum  vaanaththilirunthu  saththam  u'ndaagi:  theavan  suththamaakkinavaiga'lai  nee  theettaaga  e'n'naatheayen’ru  ma’rumozhi  sollit’ru.  (appoasthalar  11:9)

இப்படி  மூன்றுதரம்  சம்பவித்த  பின்பு,  எல்லாம்  வானத்திற்குத்  திரும்ப  எடுத்துக்கொள்ளப்பட்டது.  (அப்போஸ்தலர்  11:10)

ippadi  moon’rutharam  sambaviththa  pinbu,  ellaam  vaanaththi’rkuth  thirumba  eduththukko'l'lappattathu.  (appoasthalar  11:10)

உடனே  செசரியாவிலிருந்து  என்னிடத்திற்கு  அனுப்பப்பட்ட  மூன்று  மனுஷர்  நான்  இருந்த  வீட்டுக்குமுன்னே  வந்து  நின்றார்கள்.  (அப்போஸ்தலர்  11:11)

udanea  sesariyaavilirunthu  ennidaththi’rku  anuppappatta  moon’ru  manushar  naan  iruntha  veettukkumunnea  vanthu  nin’raarga'l.  (appoasthalar  11:11)

நான்  ஒன்றுக்கும்  சந்தேகப்படாமல்  அவர்களோடேகூடப்  போகும்படி  ஆவியானவர்  எனக்குக்  கட்டளையிட்டார்.  சகோதரராகிய  இந்த  ஆறுபேரும்  என்னோடேகூட  வந்தார்கள்;  அந்த  மனுஷனுடைய  வீட்டுக்குள்  பிரவேசித்தோம்.  (அப்போஸ்தலர்  11:12)

naan  on’rukkum  santheagappadaamal  avarga'loadeakoodap  poagumpadi  aaviyaanavar  enakkuk  katta'laiyittaar.  sagoathararaagiya  intha  aa’rupearum  ennoadeakooda  vanthaarga'l;  antha  manushanudaiya  veettukku'l  piraveasiththoam.  (appoasthalar  11:12)

அவனோ  தன்  வீட்டிலே  ஒரு  தேவதூதன்  நிற்கிறதைக்  கண்டதாகவும்,  யோப்பா  பட்டணத்திலிருக்கிற  பேதுரு  என்று  மறுபேர்கொண்ட  சீமோனை  அழைக்கும்படிக்கு  மனுஷரை  அவ்விடத்திற்கு  அனுப்பு;  (அப்போஸ்தலர்  11:13)

avanoa  than  veettilea  oru  theavathoothan  ni’rki’rathaik  ka'ndathaagavum,  yoappaa  patta'naththilirukki’ra  peathuru  en’ru  ma’rupearko'nda  seemoanai  azhaikkumpadikku  manusharai  avvidaththi’rku  anuppu;  (appoasthalar  11:13)

நீயும்  உன்  வீட்டாரனைவரும்  இரட்சிக்கப்படுவதற்கேதுவான  வார்த்தைகளை  அவன்  உனக்குச்  சொல்லுவான்  என்று  அந்தத்  தூதன்  தனக்குச்  சொன்னதாகவும்  எங்களுக்கு  அறிவித்தான்.  (அப்போஸ்தலர்  11:14)

neeyum  un  veettaaranaivarum  iradchikkappaduvatha’rkeathuvaana  vaarththaiga'lai  avan  unakkuch  solluvaan  en’ru  anthath  thoothan  thanakkuch  sonnathaagavum  engga'lukku  a’riviththaan.  (appoasthalar  11:14)

நான்  பேசத்தொடங்கினபோது,  பரிசுத்த  ஆவியானவர்  ஆதியிலே  நம்மேல்  இறங்கினதுபோலவே,  அவர்கள்மேலும்  இறங்கினார்.  (அப்போஸ்தலர்  11:15)

naan  peasaththodangginapoathu,  parisuththa  aaviyaanavar  aathiyilea  nammeal  i’rangginathupoalavea,  avarga'lmealum  i’rangginaar.  (appoasthalar  11:15)

யோவான்  ஜலத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தான்,  நீங்களோ  பரிசுத்த  ஆவியினாலே  ஞானஸ்நானம்  பெறுவீர்கள்  என்று  கர்த்தர்  சொன்ன  வார்த்தையை  அப்பொழுது  நினைவுகூர்ந்தேன்.  (அப்போஸ்தலர்  11:16)

yoavaan  jalaththinaalea  gnaanasnaanang  koduththaan,  neengga'loa  parisuththa  aaviyinaalea  gnaanasnaanam  pe’ruveerga'l  en’ru  karththar  sonna  vaarththaiyai  appozhuthu  ninaivukoornthean.  (appoasthalar  11:16)

ஆதலால்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை  விசுவாசித்திருக்கிற  நமக்குத்  தேவன்  வரத்தை  அநுக்கிரகம்பண்ணினதுபோல  அவர்களுக்கும்  அந்த  வரத்தையே  அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது  தேவனைத்  தடுக்கிறதற்கு  நான்  எம்மாத்திரம்  என்றான்.  (அப்போஸ்தலர்  11:17)

aathalaal  karththaraagiya  iyeasuki’risthuvai  visuvaasiththirukki’ra  namakkuth  theavan  varaththai  anukkiragampa'n'ninathupoala  avarga'lukkum  antha  varaththaiyea  anukkiragampa'n'niyirukkumpoathu  theavanaith  thadukki’ratha’rku  naan  emmaaththiram  en’raan.  (appoasthalar  11:17)

இவைகளை  அவர்கள்  கேட்டபொழுது  அமர்ந்திருந்து:  அப்படியானால்  ஜீவனுக்கேதுவான  மனந்திரும்புதலைத்  தேவன்  புறஜாதியாருக்கும்  அருளிச்செய்தார்  என்று  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (அப்போஸ்தலர்  11:18)

ivaiga'lai  avarga'l  keattapozhuthu  amarnthirunthu:  appadiyaanaal  jeevanukkeathuvaana  mananthirumbuthalaith  theavan  pu’rajaathiyaarukkum  aru'lichseythaar  en’ru  solli,  theavanai  magimaippaduththinaarga'l.  (appoasthalar  11:18)

ஸ்தேவான்  நிமித்தமாய்  எழும்பின  உபத்திரவத்தினாலே  சிதறப்பட்டவர்கள்  சுவிசேஷ  வசனத்தை  யூதர்களுக்கேயன்றி  மற்ற  ஒருவருக்கும்  அறிவியாமல்,  பெனிக்கேநாடு,  சீப்புருதீவு,  அந்தியோகியா  பட்டணம்வரைக்கும்  சுற்றித்திரிந்தார்கள்.  (அப்போஸ்தலர்  11:19)

stheavaan  nimiththamaay  ezhumbina  ubaththiravaththinaalea  sitha’rappattavarga'l  suviseasha  vasanaththai  yootharga'lukkeayan’ri  mat’ra  oruvarukkum  a’riviyaamal,  penikkeanaadu,  seeppurutheevu,  anthiyoakiyaa  patta'namvaraikkum  sut’riththirinthaarga'l.  (appoasthalar  11:19)

அவர்களில்  சீப்புருதீவாரும்  சிரேனே  பட்டணத்தாருமாகிய  சிலர்  அந்தியோகியா  பட்டணத்துக்கு  வந்து,  கிரேக்கருடனே  பேசிக்  கர்த்தராகிய  இயேசுவைக்குறித்துப்  பிரசங்கித்தார்கள்.  (அப்போஸ்தலர்  11:20)

avarga'lil  seeppurutheevaarum  sireanea  patta'naththaarumaagiya  silar  anthiyoakiyaa  patta'naththukku  vanthu,  kireakkarudanea  peasik  karththaraagiya  iyeasuvaikku’riththup  pirasanggiththaarga'l.  (appoasthalar  11:20)

கர்த்தருடைய  கரம்  அவர்களோடே  இருந்தது;  அநேக  ஜனங்கள்  விசுவாசிகளாகி,  கர்த்தரிடத்தில்  திரும்பினார்கள்.  (அப்போஸ்தலர்  11:21)

karththarudaiya  karam  avarga'loadea  irunthathu;  aneaga  janangga'l  visuvaasiga'laagi,  karththaridaththil  thirumbinaarga'l.  (appoasthalar  11:21)

எருசலேமிலுள்ள  சபையார்  இந்தக்  காரியங்களைக்குறித்துக்  கேள்விப்பட்டபோது,  அந்தியோகியாவரைக்கும்  போகும்படிக்குப்  பர்னபாவை  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  11:22)

erusaleamilu'l'la  sabaiyaar  inthak  kaariyangga'laikku’riththuk  kea'lvippattapoathu,  anthiyoakiyaavaraikkum  poagumpadikkup  barnabaavai  anuppinaarga'l.  (appoasthalar  11:22)

அவன்  போய்ச்  சேர்ந்து,  தேவனுடைய  கிருபையைக்  கண்டபோது,  சந்தோஷப்பட்டு,  கர்த்தரிடத்தில்  மனநிர்ணயமாய்  நிலைத்திருக்கும்படி  எல்லாருக்கும்  புத்திசொன்னான்.  (அப்போஸ்தலர்  11:23)

avan  poaych  searnthu,  theavanudaiya  kirubaiyaik  ka'ndapoathu,  santhoashappattu,  karththaridaththil  mananir'nayamaay  nilaiththirukkumpadi  ellaarukkum  buththisonnaan.  (appoasthalar  11:23)

அவன்  நல்லவனும்,  பரிசுத்தஆவியினாலும்  விசுவாசத்தினாலும்  நிறைந்தவனுமாயிருந்தான்;  அநேக  ஜனங்கள்  கர்த்தரிடமாய்ச்  சேர்க்கப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  11:24)

avan  nallavanum,  parisuththaaaviyinaalum  visuvaasaththinaalum  ni’rainthavanumaayirunthaan;  aneaga  janangga'l  karththaridamaaych  searkkappattaarga'l.  (appoasthalar  11:24)

பின்பு  பர்னபா  சவுலைத்  தேடும்படி,  தர்சுவுக்குப்  புறப்பட்டுப்போய்,  அவனைக்கண்டு,  அந்தியோகியாவுக்கு  அழைத்துக்கொண்டுவந்தான்.  (அப்போஸ்தலர்  11:25)

pinbu  barnabaa  savulaith  theadumpadi,  tharsuvukkup  pu’rappattuppoay,  avanaikka'ndu,  anthiyoakiyaavukku  azhaiththukko'nduvanthaan.  (appoasthalar  11:25)

அவர்கள்  ஒரு  வருஷகாலமாய்ச்  சபையோடே  கூடியிருந்து,  அநேக  ஜனங்களுக்கு  உபதேசம்பண்ணினார்கள்.  முதல்  முதல்  அந்தியோகியாவிலே  சீஷர்களுக்குக்  கிறிஸ்தவர்கள்  என்கிற  பேர்  வழங்கிற்று.  (அப்போஸ்தலர்  11:26)

avarga'l  oru  varushakaalamaaych  sabaiyoadea  koodiyirunthu,  aneaga  janangga'lukku  ubatheasampa'n'ninaarga'l.  muthal  muthal  anthiyoakiyaavilea  seesharga'lukkuk  ki’risthavarga'l  engi’ra  pear  vazhanggit’ru.  (appoasthalar  11:26)

அந்நாட்களிலே  எருசலேமிலிருந்து  சில  தீர்க்கதரிசிகள்  அந்தியோகியாவுக்கு  வந்தார்கள்.  (அப்போஸ்தலர்  11:27)

annaadka'lilea  erusaleamilirunthu  sila  theerkkatharisiga'l  anthiyoakiyaavukku  vanthaarga'l.  (appoasthalar  11:27)

அவர்களில்  ஒருவனாகிய  அகபு  என்பவன்  எழுந்து,  உலகமெங்கும்  கொடிய  பஞ்சம்  உண்டாகும்  என்று  ஆவியானவராலே  அறிவித்தான்;  அது  அப்படியே  கிலவுதியு  ராயனுடைய  நாட்களிலே  உண்டாயிற்று.  (அப்போஸ்தலர்  11:28)

avarga'lil  oruvanaagiya  agabu  enbavan  ezhunthu,  ulagamenggum  kodiya  pagncham  u'ndaagum  en’ru  aaviyaanavaraalea  a’riviththaan;  athu  appadiyea  kilavuthiyu  raayanudaiya  naadka'lilea  u'ndaayit’ru.  (appoasthalar  11:28)

அப்பொழுது  சீஷரில்  அவரவர்  தங்கள்  தங்கள்  திராணிக்குத்தக்கதாக  யூதேயாவில்  குடியிருக்கிற  சகோதரருக்கு  உதவியாகப்  பணஞ்  சேகரித்து  அனுப்பவேண்டுமென்று  தீர்மானம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  11:29)

appozhuthu  seesharil  avaravar  thangga'l  thangga'l  thiraa'nikkuththakkathaaga  yootheayaavil  kudiyirukki’ra  sagoathararukku  uthaviyaagap  pa'nagn  seagariththu  anuppavea'ndumen’ru  theermaanampa'n'ninaarga'l.  (appoasthalar  11:29)

அப்படியே  அவர்கள்  சேகரித்து,  பர்னபா  சவுல்  என்பவர்களுடைய  கையிலே  கொடுத்து,  மூப்பரிடத்திற்கு  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  11:30)

appadiyea  avarga'l  seagariththu,  barnabaa  savul  enbavarga'ludaiya  kaiyilea  koduththu,  moopparidaththi’rku  anuppinaarga'l.  (appoasthalar  11:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!