Monday, May 30, 2016

2 Korinthiyar 11 | 2 கொரிந்தியர் 11 | 2 Corinthians 11

என்  புத்தியீனத்தை  நீங்கள்  சற்றே  சகித்தால்  நலமாயிருக்கும்;  என்னைச்  சகித்துமிருக்கிறீர்களே.  (2கொரிந்தியர்  11:1)

en  buththiyeenaththai  neengga'l  sat’rea  sagiththaal  nalamaayirukkum;  ennaich  sagiththumirukki’reerga'lea.  (2korinthiyar  11:1)

நான்  உங்களைக்  கற்புள்ள  கன்னிகையாகக்  கிறிஸ்து  என்னும்  ஒரே  புருஷனுக்கு  ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால்,  உங்களுக்காகத்  தேவவைராக்கியமான  வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.  (2கொரிந்தியர்  11:2)

naan  ungga'laik  ka’rpu'l'la  kannigaiyaagak  ki’risthu  ennum  orea  purushanukku  oppukkodukka  niyamiththapadiyaal,  ungga'lukkaagath  theavavairaakkiyamaana  vairaakkiyangko'ndirukki’rean.  (2korinthiyar  11:2)

ஆகிலும்,  சர்ப்பமானது  தன்னுடைய  தந்திரத்தினாலே  ஏவாளை  வஞ்சித்ததுபோல,  உங்கள்  மனதும்  கிறிஸ்துவைப்பற்றிய  உண்மையினின்று  விலகும்படி  கெடுக்கப்படுமோவென்று  பயந்திருக்கிறேன்.  (2கொரிந்தியர்  11:3)

aagilum,  sarppamaanathu  thannudaiya  thanthiraththinaalea  eavaa'lai  vagnchiththathupoala,  ungga'l  manathum  ki’risthuvaippat’riya  u'nmaiyinin’ru  vilagumpadi  kedukkappadumoaven’ru  bayanthirukki’rean.  (2korinthiyar  11:3)

எப்படியெனில்,  உங்களிடத்தில்  வருகிறவன்  நாங்கள்  பிரசங்கியாத  வேறொரு  இயேசுவைப்  பிரசங்கித்தானானால்,  அல்லது  நீங்கள்  பெற்றிராத  வேறொரு  ஆவியையும்,  நீங்கள்  ஏற்றுக்கொள்ளாத  வேறொரு  சுவிசேஷத்தையும்  பெற்றீர்களானால்,  நன்றாய்ச்  சகித்திருப்பீர்களே.  (2கொரிந்தியர்  11:4)

eppadiyenil,  ungga'lidaththil  varugi’ravan  naangga'l  pirasanggiyaatha  vea’roru  iyeasuvaip  pirasanggiththaanaanaal,  allathu  neengga'l  pet’riraatha  vea’roru  aaviyaiyum,  neengga'l  eat’rukko'l'laatha  vea’roru  suviseashaththaiyum  pet’reerga'laanaal,  nan’raaych  sagiththiruppeerga'lea.  (2korinthiyar  11:4)

மகா  பிரதான  அப்போஸ்தலரிலும்,  நான்  ஒன்றிலும்  குறைவுள்ளவனல்லவென்று  எண்ணுகிறேன்.  (2கொரிந்தியர்  11:5)

mahaa  pirathaana  appoasthalarilum,  naan  on’rilum  ku’raivu'l'lavanallaven’ru  e'n'nugi’rean.  (2korinthiyar  11:5)

நான்  பேச்சிலே  கல்லாதவனாயிருந்தாலும்,  அறிவிலே  கல்லாதவனல்ல;  எந்த  விஷயத்திலும்  எல்லாருக்குமுன்பாகவும்  உங்களுக்குள்ளே  நாங்கள்  வெளிப்பட்டிருக்கிறோமே.  (2கொரிந்தியர்  11:6)

naan  peachchilea  kallaathavanaayirunthaalum,  a’rivilea  kallaathavanalla;  entha  vishayaththilum  ellaarukkumunbaagavum  ungga'lukku'l'lea  naangga'l  ve'lippattirukki’roamea.  (2korinthiyar  11:6)

நீங்கள்  உயர்த்தப்படும்படி  நான்  என்னைத்தானே  தாழ்த்தி,  தேவனுடைய  சுவிசேஷத்தை  இலவசமாய்  உங்களுக்குப்  பிரசங்கித்ததினாலே  குற்றஞ்செய்தேனோ?  (2கொரிந்தியர்  11:7)

neengga'l  uyarththappadumpadi  naan  ennaiththaanea  thaazhththi,  theavanudaiya  suviseashaththai  ilavasamaay  ungga'lukkup  pirasanggiththathinaalea  kut’ragnseytheanoa?  (2korinthiyar  11:7)

உங்களுக்கு  ஊழியஞ்செய்யும்படிக்கு,  மற்றச்  சபைகளிடத்தில்  சம்பளத்தைப்  பெற்று,  அவர்களைக்  கொள்ளையிட்டேன்.  (2கொரிந்தியர்  11:8)

ungga'lukku  oozhiyagnseyyumpadikku,  mat’rach  sabaiga'lidaththil  samba'laththaip  pet’ru,  avarga'laik  ko'l'laiyittean.  (2korinthiyar  11:8)

நான்  உங்களோடிருந்து  குறைவுபட்டபோதும்,  ஒருவரையும்  நான்  வருத்தப்படுத்தவில்லை;  மக்கெதோனியாவிலிருந்து  வந்த  சகோதரர்  என்  குறைவை  நிறைவாக்கினார்கள்;  எவ்விதத்திலேயும்  உங்களுக்குப்  பாரமாயிராதபடிக்கு  ஜாக்கிரதையாயிருந்தேன்,  இனிமேலும்  ஜாக்கிரதையாயிருப்பேன்.  (2கொரிந்தியர்  11:9)

naan  ungga'loadirunthu  ku’raivupattapoathum,  oruvaraiyum  naan  varuththappaduththavillai;  makkethoaniyaavilirunthu  vantha  sagoatharar  en  ku’raivai  ni’raivaakkinaarga'l;  evvithaththileayum  ungga'lukkup  baaramaayiraathapadikku  jaakkirathaiyaayirunthean,  inimealum  jaakkirathaiyaayiruppean.  (2korinthiyar  11:9)

அகாயாநாட்டின்  திசைகளிலே  இந்தப்  புகழ்ச்சி  என்னைவிட்டு  நீங்குவதில்லையென்று  என்னிலுள்ள  கிறிஸ்துவினுடைய  சத்தியத்தைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (2கொரிந்தியர்  11:10)

akaayaanaattin  thisaiga'lilea  inthap  pugazhchchi  ennaivittu  neengguvathillaiyen’ru  ennilu'l'la  ki’risthuvinudaiya  saththiyaththaikko'ndu  sollugi’rean.  (2korinthiyar  11:10)

இப்படிச்  சொல்லவேண்டியதென்ன?  நான்  உங்களைச்  சிநேகியாதபடியினாலேயோ?  தேவன்  அறிவார்.  (2கொரிந்தியர்  11:11)

ippadich  sollavea'ndiyathenna?  naan  ungga'laich  sineagiyaathapadiyinaaleayoa?  theavan  a’rivaar.  (2korinthiyar  11:11)

மேலும்,  எங்களை  விரோதிக்கச்  சமயந்தேடுகிறவர்களுக்குச்  சமயம்  கிடையாதபடிக்கு,  தங்களைக்குறித்து  மேன்மைபாராட்டுகிற  காரியத்தில்  அவர்கள்  எங்களைப்போலக்  காணப்படும்படி,  நான்  செய்வதையே  இன்னும்  செய்வேன்.  (2கொரிந்தியர்  11:12)

mealum,  engga'lai  viroathikkach  samayantheadugi’ravarga'lukkuch  samayam  kidaiyaathapadikku,  thangga'laikku’riththu  meanmaipaaraattugi’ra  kaariyaththil  avarga'l  engga'laippoalak  kaa'nappadumpadi,  naan  seyvathaiyea  innum  seyvean.  (2korinthiyar  11:12)

அப்படிப்பட்டவர்கள்  கள்ள  அப்போஸ்தலர்கள்,  கபடமுள்ள  வேலையாட்கள்,  கிறிஸ்துவினுடைய  அப்போஸ்தலரின்  வேஷத்தைத்  தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.  (2கொரிந்தியர்  11:13)

appadippattavarga'l  ka'l'la  appoasthalarga'l,  kabadamu'l'la  vealaiyaadka'l,  ki’risthuvinudaiya  appoasthalarin  veashaththaith  thariththukko'ndavarga'laayirukki’raarga'l.  (2korinthiyar  11:13)

அது  ஆச்சரியமல்ல,  சாத்தானும்  ஒளியின்  தூதனுடைய  வேஷத்தைத்  தரித்துக்கொள்வானே.  (2கொரிந்தியர்  11:14)

athu  aachchariyamalla,  saaththaanum  o'liyin  thoothanudaiya  veashaththaith  thariththukko'lvaanea.  (2korinthiyar  11:14)

ஆகையால்  அவனுடைய  ஊழியக்காரரும்  நீதியின்  ஊழியக்காரருடைய  வேஷத்தைத்  தரித்துக்கொண்டால்  அது  ஆச்சரியமல்லவே;  அவர்கள்  முடிவு  அவர்கள்  கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.  (2கொரிந்தியர்  11:15)

aagaiyaal  avanudaiya  oozhiyakkaararum  neethiyin  oozhiyakkaararudaiya  veashaththaith  thariththukko'ndaal  athu  aachchariyamallavea;  avarga'l  mudivu  avarga'l  kiriyaiga'lukkuththakkathaayirukkum.  (2korinthiyar  11:15)

பின்னும்  நான்  சொல்லுகிறேன்;  ஒருவனும்  என்னைப்  புத்தியீனனென்று  எண்ணவேண்டாம்;  அப்படி  எண்ணினால்,  நானும்  சற்றே  மேன்மைபாராட்டும்படி,  என்னைப்  புத்தியீனனைப்போலாகிலும்  ஏற்றுக்கொள்ளுங்கள்.  (2கொரிந்தியர்  11:16)

pinnum  naan  sollugi’rean;  oruvanum  ennaip  buththiyeenanen’ru  e'n'navea'ndaam;  appadi  e'n'ninaal,  naanum  sat’rea  meanmaipaaraattumpadi,  ennaip  buththiyeenanaippoalaagilum  eat’rukko'l'lungga'l.  (2korinthiyar  11:16)

இப்படி  நான்  சொல்லுகிறது  கர்த்தருக்கேற்றபடி  சொல்லாமல்,  மேன்மைபாராட்டும்  தைரியத்தினாலே  புத்தியீனனைப்போலச்  சொல்லுகிறேன்.  (2கொரிந்தியர்  11:17)

ippadi  naan  sollugi’rathu  karththarukkeat’rapadi  sollaamal,  meanmaipaaraattum  thairiyaththinaalea  buththiyeenanaippoalach  sollugi’rean.  (2korinthiyar  11:17)

அநேகர்  மாம்சத்திற்கேற்றபடி  மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில்,  நானும்  மேன்மைபாராட்டுவேன்.  (2கொரிந்தியர்  11:18)

aneagar  maamsaththi’rkeat’rapadi  meanmaipaaraattikko'l'lugaiyil,  naanum  meanmaipaaraattuvean.  (2korinthiyar  11:18)

நீங்கள்  புத்தியுள்ளவர்களாயிருந்து  புத்தியில்லாதவர்களைச்  சந்தோஷமாய்ச்  சகித்திருக்கிறீர்களே.  (2கொரிந்தியர்  11:19)

neengga'l  buththiyu'l'lavarga'laayirunthu  buththiyillaathavarga'laich  santhoashamaaych  sagiththirukki’reerga'lea.  (2korinthiyar  11:19)

ஒருவன்  உங்களைச்  சிறையாக்கினாலும்,  ஒருவன்  உங்களைப்  பட்சித்தாலும்,  ஒருவன்  உங்களைக்  கைவசப்படுத்தினாலும்,  ஒருவன்  தன்னை  உயர்த்தினாலும்,  ஒருவன்  உங்களை  முகத்தில்  அறைந்தாலும்  சகித்திருக்கிறீர்களே.  (2கொரிந்தியர்  11:20)

oruvan  ungga'laich  si’raiyaakkinaalum,  oruvan  ungga'laip  padchiththaalum,  oruvan  ungga'laik  kaivasappaduththinaalum,  oruvan  thannai  uyarththinaalum,  oruvan  ungga'lai  mugaththil  a’rainthaalum  sagiththirukki’reerga'lea.  (2korinthiyar  11:20)

நாங்கள்  பலவீனரானதுபோல,  எங்களுக்கு  வந்த  கனவீனத்தைக்குறித்துப்  பேசுகிறேன்;  ஒருவன்  எதிலே  துணிவுள்ளவனாயிருக்கிறானோ  அதிலே  நானும்  துணிவுள்ளவனாயிருக்கிறேன்;  இப்படிப்  புத்தியீனமாய்ப்  பேசுகிறேன்.  (2கொரிந்தியர்  11:21)

naangga'l  balaveenaraanathupoala,  engga'lukku  vantha  kanaveenaththaikku’riththup  peasugi’rean;  oruvan  ethilea  thu'nivu'l'lavanaayirukki’raanoa  athilea  naanum  thu'nivu'l'lavanaayirukki’rean;  ippadip  buththiyeenamaayp  peasugi’rean.  (2korinthiyar  11:21)

அவர்கள்  எபிரெயரா?  நானும்  எபிரெயன்;  அவர்கள்  இஸ்ரவேலரா?  நானும்  இஸ்ரவேலன்;  அவர்கள்  ஆபிரகாமின்  சந்ததியாரா?  நானும்  ஆபிரகாமின்  சந்ததியான்.  (2கொரிந்தியர்  11:22)

avarga'l  ebireyaraa?  naanum  ebireyan;  avarga'l  isravealaraa?  naanum  isravealan;  avarga'l  aabirahaamin  santhathiyaaraa?  naanum  aabirahaamin  santhathiyaan.  (2korinthiyar  11:22)

அவர்கள்  கிறிஸ்துவின்  ஊழியக்காரரா?  நான்  அதிகம்;  புத்தியீனமாய்ப்  பேசுகிறேன்;  நான்  அதிகமாய்ப்  பிரயாசப்பட்டவன்,  அதிகமாய்  அடிபட்டவன்,  அதிகமாய்க்  காவல்களில்  வைக்கப்பட்டவன்,  அநேகந்தரம்  மரண  அவதியில்  அகப்பட்டவன்.  (2கொரிந்தியர்  11:23)

avarga'l  ki’risthuvin  oozhiyakkaararaa?  naan  athigam;  buththiyeenamaayp  peasugi’rean;  naan  athigamaayp  pirayaasappattavan,  athigamaay  adipattavan,  athigamaayk  kaavalga'lil  vaikkappattavan,  aneagantharam  mara'na  avathiyil  agappattavan.  (2korinthiyar  11:23)

யூதர்களால்  ஒன்றுகுறைய  நாற்பதடியாக  ஐந்துதரம்  அடிபட்டேன்;  (2கொரிந்தியர்  11:24)

yootharga'laal  on’ruku’raiya  naa’rpathadiyaaga  ainthutharam  adipattean;  (2korinthiyar  11:24)

மூன்றுதரம்  மிலாறுகளால்  அடிபட்டேன்,  ஒருதரம்  கல்லெறியுண்டேன்,  மூன்றுதரம்  கப்பற்சேதத்தில்  இருந்தேன்,  கடலிலே  ஒரு  இராப்பகல்  முழுவதும்  போக்கினேன்.  (2கொரிந்தியர்  11:25)

moon’rutharam  milaa’ruga'laal  adipattean,  orutharam  kalle’riyu'ndean,  moon’rutharam  kappa’rseathaththil  irunthean,  kadalilea  oru  iraappagal  muzhuvathum  poakkinean.  (2korinthiyar  11:25)

அநேகந்தரம்  பிரயாணம்பண்ணினேன்;  ஆறுகளால்  வந்த  மோசங்களிலும்,  கள்ளரால்  வந்த  மோசங்களிலும்,  என்  சுயஜனங்களால்  வந்த  மோசங்களிலும்,  அந்நிய  ஜனங்களால்  வந்த  மோசங்களிலும்,  பட்டணங்களில்  உண்டான  மோசங்களிலும்,  வனாந்தரத்தில்  உண்டான  மோசங்களிலும்,  சமுத்திரத்தில்  உண்டான  மோசங்களிலும்,  கள்ளச்சகோதரரிடத்தில்  உண்டான  மோசங்களிலும்;  (2கொரிந்தியர்  11:26)

aneagantharam  pirayaa'nampa'n'ninean;  aa’ruga'laal  vantha  moasangga'lilum,  ka'l'laraal  vantha  moasangga'lilum,  en  suyajanangga'laal  vantha  moasangga'lilum,  anniya  janangga'laal  vantha  moasangga'lilum,  patta'nangga'lil  u'ndaana  moasangga'lilum,  vanaantharaththil  u'ndaana  moasangga'lilum,  samuththiraththil  u'ndaana  moasangga'lilum,  ka'l'lachsagoathararidaththil  u'ndaana  moasangga'lilum;  (2korinthiyar  11:26)

பிரயாசத்திலும்,  வருத்தத்திலும்,  அநேகமுறை  கண்விழிப்புகளிலும்,  பசியிலும்  தாகத்திலும்,  அநேகமுறை  உபவாசங்களிலும்,  குளிரிலும்,  நிர்வாணத்திலும்  இருந்தேன்.  (2கொரிந்தியர்  11:27)

pirayaasaththilum,  varuththaththilum,  aneagamu’rai  ka'nvizhippuga'lilum,  pasiyilum  thaagaththilum,  aneagamu’rai  ubavaasangga'lilum,  ku'lirilum,  nirvaa'naththilum  irunthean.  (2korinthiyar  11:27)

இவை  முதலானவைகளையல்லாமல்,  எல்லாச்  சபைகளைக்குறித்தும்  உண்டாயிருக்கிற  கவலை  என்னை  நாள்தோறும்  நெருக்குகிறது.  (2கொரிந்தியர்  11:28)

ivai  muthalaanavaiga'laiyallaamal,  ellaach  sabaiga'laikku’riththum  u'ndaayirukki’ra  kavalai  ennai  naa'lthoa’rum  nerukkugi’rathu.  (2korinthiyar  11:28)

ஒருவன்  பலவீனனானால்  நானும்  பலவீனனாகிறதில்லையோ?  ஒருவன்  இடறினால்  என்  மனம்  எரியாதிருக்குமோ?  (2கொரிந்தியர்  11:29)

oruvan  balaveenanaanaal  naanum  balaveenanaagi’rathillaiyoa?  oruvan  ida’rinaal  en  manam  eriyaathirukkumoa?  (2korinthiyar  11:29)

நான்  மேன்மைபாராட்டவேண்டுமானால்,  என்  பலவீனத்திற்கடுத்தவைகளைக்  குறித்து  மேன்மைபாராட்டுவேன்.  (2கொரிந்தியர்  11:30)

naan  meanmaipaaraattavea'ndumaanaal,  en  balaveenaththi’rkaduththavaiga'laik  ku’riththu  meanmaipaaraattuvean.  (2korinthiyar  11:30)

என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்பட்ட  தேவனும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  பிதாவுமானவர்  நான்  பொய்  சொல்லுகிறதில்லையென்று  அறிவார்.  (2கொரிந்தியர்  11:31)

en’ren’raikkum  sthoaththirikkappatta  theavanum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  pithaavumaanavar  naan  poy  sollugi’rathillaiyen’ru  a’rivaar.  (2korinthiyar  11:31)

தமஸ்குபட்டணத்து  அரேத்தா  ராஜாவினுடைய  சேனைத்தலைவன்  என்னைப்  பிடிக்கவேண்டுமென்று  தமஸ்கருடைய  பட்டணத்தைக்  காவல்வைத்துக்  காத்தான்;  (2கொரிந்தியர்  11:32)

thamaskupatta'naththu  areaththaa  raajaavinudaiya  seanaiththalaivan  ennaip  pidikkavea'ndumen’ru  thamaskarudaiya  patta'naththaik  kaavalvaiththuk  kaaththaan;  (2korinthiyar  11:32)

அப்பொழுது  நான்  கூடையிலே  வைக்கப்பட்டு,  ஜன்னலிலிருந்து  மதில்  வழியாய்  இறக்கிவிடப்பட்டு,  அவனுடைய  கைக்குத்  தப்பினேன்.  (2கொரிந்தியர்  11:33)

appozhuthu  naan  koodaiyilea  vaikkappattu,  jannalilirunthu  mathil  vazhiyaay  i’rakkividappattu,  avanudaiya  kaikkuth  thappinean.  (2korinthiyar  11:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!