Friday, May 27, 2016

1 Korinthiyar 8 | 1 கொரிந்தியர் 8 | 1 Corinthians 8

விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைக்குறித்த  விஷயத்தில்,  நம்மெல்லாருக்கும்  அறிவு  உண்டென்று  நமக்குத்  தெரியுமே.  அறிவு  இறுமாப்பை  உண்டாக்கும்,  அன்போ  பக்திவிருத்தியை  உண்டாக்கும்.  (1கொரிந்தியர்  8:1)

vikkiragangga'lukkup  padaikkappattavaiga'laikku’riththa  vishayaththil,  nammellaarukkum  a’rivu  u'nden’ru  namakkuth  theriyumea.  a’rivu  i’rumaappai  u'ndaakkum,  anboa  bakthiviruththiyai  u'ndaakkum.  (1korinthiyar  8:1)

ஒருவன்  தான்  ஏதேனும்  ஒன்றை  அறிந்தவனென்று  எண்ணிக்கொள்வானானால்,  ஒன்றையும்  அறியவேண்டியபிரகாரமாக  அவன்  இன்னும்  அறியவில்லை.  (1கொரிந்தியர்  8:2)

oruvan  thaan  eatheanum  on’rai  a’rinthavanen’ru  e'n'nikko'lvaanaanaal,  on’raiyum  a’riyavea'ndiyapiragaaramaaga  avan  innum  a’riyavillai.  (1korinthiyar  8:2)

தேவனில்  அன்புகூருகிறவனெவனோ,  அவன்  தேவனால்  அறியப்பட்டிருக்கிறான்.  (1கொரிந்தியர்  8:3)

theavanil  anbukoorugi’ravanevanoa,  avan  theavanaal  a’riyappattirukki’raan.  (1korinthiyar  8:3)

விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைப்  புசிக்கிற  விஷயத்தைப்பற்றி,  உலகத்திலே  விக்கிரகமானது  ஒன்றுமில்லையென்றும்  ஒருவரேயன்றி  வேறொரு  தேவன்  இல்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  (1கொரிந்தியர்  8:4)

vikkiragangga'lukkup  padaikkappattavaiga'laip  pusikki’ra  vishayaththaippat’ri,  ulagaththilea  vikkiragamaanathu  on’rumillaiyen’rum  oruvareayan’ri  vea’roru  theavan  illaiyen’rum  a’rinthirukki’roam.  (1korinthiyar  8:4)

வானத்திலேயும்  பூமியிலேயும்  தேவர்கள்  என்னப்படுகிறவர்கள்  உண்டு;  இப்படி  அநேக  தேவர்களும்  அநேக  கர்த்தாக்களும்  உண்டாயிருந்தாலும்,  (1கொரிந்தியர்  8:5)

vaanaththileayum  boomiyileayum  theavarga'l  ennappadugi’ravarga'l  u'ndu;  ippadi  aneaga  theavarga'lum  aneaga  karththaakka'lum  u'ndaayirunthaalum,  (1korinthiyar  8:5)

பிதாவாகிய  ஒரே  தேவன்  நமக்குண்டு,  அவராலே  சகலமும்  உண்டாயிருக்கிறது;  அவருக்கென்று  நாமும்  உண்டாயிருக்கிறோம்.  இயேசுகிறிஸ்து  என்னும்  ஒரே  கர்த்தரும்  நமக்குண்டு;  அவர்மூலமாய்ச்  சகலமும்  உண்டாயிருக்கிறது,  அவர்  மூலமாய்  நாமும்  உண்டாயிருக்கிறோம்.  (1கொரிந்தியர்  8:6)

pithaavaagiya  orea  theavan  namakku'ndu,  avaraalea  sagalamum  u'ndaayirukki’rathu;  avarukken’ru  naamum  u'ndaayirukki’roam.  iyeasuki’risthu  ennum  orea  karththarum  namakku'ndu;  avarmoolamaaych  sagalamum  u'ndaayirukki’rathu,  avar  moolamaay  naamum  u'ndaayirukki’roam.  (1korinthiyar  8:6)

ஆகிலும்,  இந்த  அறிவு  எல்லாரிடத்திலும்  இல்லை.  சிலர்  இன்றையவரைக்கும்  விக்கிரகத்தை  ஒரு  பொருளென்று  எண்ணி,  விக்கிரகத்துக்குப்  படைக்கப்பட்டதைப்  புசிக்கிறார்கள்;  அவர்களுடைய  மனச்சாட்சி  பலவீனமாயிருப்பதால்  அசுசிப்படுகிறது.  (1கொரிந்தியர்  8:7)

aagilum,  intha  a’rivu  ellaaridaththilum  illai.  silar  in’raiyavaraikkum  vikkiragaththai  oru  poru'len’ru  e'n'ni,  vikkiragaththukkup  padaikkappattathaip  pusikki’raarga'l;  avarga'ludaiya  manachsaadchi  balaveenamaayiruppathaal  asusippadugi’rathu.  (1korinthiyar  8:7)

போஜனமானது  நம்மைத்  தேவனுக்கு  உகந்தவர்களாக்கமாட்டாது;  என்னத்தினாலெனில்,  புசிப்பதினால்  நமக்கு  ஒரு  மேன்மையுமில்லை,  புசியாதிருப்பதினால்  நமக்கு  ஒரு  குறைவுமில்லை.  (1கொரிந்தியர்  8:8)

poajanamaanathu  nammaith  theavanukku  uganthavarga'laakkamaattaathu;  ennaththinaalenil,  pusippathinaal  namakku  oru  meanmaiyumillai,  pusiyaathiruppathinaal  namakku  oru  ku’raivumillai.  (1korinthiyar  8:8)

ஆகிலும்  இதைக்குறித்து  உங்களுக்கு  உண்டாயிருக்கிற  அதிகாரம்  எவ்விதத்திலும்  பலவீனருக்குத்  தடுக்கலாகாதபடிக்குப்  பாருங்கள்.  (1கொரிந்தியர்  8:9)

aagilum  ithaikku’riththu  ungga'lukku  u'ndaayirukki’ra  athigaaram  evvithaththilum  balaveenarukkuth  thadukkalaagaathapadikkup  paarungga'l.  (1korinthiyar  8:9)

எப்படியெனில்,  அறிவுள்ளவனாகிய  உன்னை  விக்கிரகக்கோவிலிலே  பந்தியிருக்க  ஒருவன்  கண்டால்,  பலவீனனாயிருக்கிற  அவனுடைய  மனச்சாட்சி  விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைப்  புசிப்பதற்குத்  துணிவுகொள்ளுமல்லவா?  (1கொரிந்தியர்  8:10)

eppadiyenil,  a’rivu'l'lavanaagiya  unnai  vikkiragakkoavililea  panthiyirukka  oruvan  ka'ndaal,  balaveenanaayirukki’ra  avanudaiya  manachsaadchi  vikkiragangga'lukkup  padaikkappattavaiga'laip  pusippatha’rkuth  thu'nivuko'l'lumallavaa?  (1korinthiyar  8:10)

பலவீனமுள்ள  சகோதரன்  உன்  அறிவினிமித்தம்  கெட்டுப்போகலாமா?  அவனுக்காகக்  கிறிஸ்து  மரித்தாரே.  (1கொரிந்தியர்  8:11)

balaveenamu'l'la  sagoatharan  un  a’rivinimiththam  kettuppoagalaamaa?  avanukkaagak  ki’risthu  mariththaarea.  (1korinthiyar  8:11)

இப்படிச்  சகோதரருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  பலவீனமுள்ள  அவர்களுடைய  மனச்சாட்சியைப்  புண்படுத்துகிறதினாலே,  நீங்கள்  கிறிஸ்துவுக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  8:12)

ippadich  sagoathararukku  viroathamaayp  paavagnseythu,  balaveenamu'l'la  avarga'ludaiya  manachsaadchiyaip  pu'npaduththugi’rathinaalea,  neengga'l  ki’risthuvukku  viroathamaayp  paavagnseygi’reerga'l.  (1korinthiyar  8:12)

ஆதலால்  போஜனம்  என்  சகோதரனுக்கு  இடறலுண்டாக்கினால்,  நான்  என்  சகோதரனுக்கு  இடறலுண்டாக்காதபடிக்கு,  என்றைக்கும்  மாம்சம்  புசியாதிருப்பேன்.  (1கொரிந்தியர்  8:13)

aathalaal  poajanam  en  sagoatharanukku  ida’ralu'ndaakkinaal,  naan  en  sagoatharanukku  ida’ralu'ndaakkaathapadikku,  en’raikkum  maamsam  pusiyaathiruppean.  (1korinthiyar  8:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!