Thursday, May 26, 2016

1 Korinthiyar 7 | 1 கொரிந்தியர் 7 | 1 Corinthians 7

நீங்கள்  எனக்கு  எழுதின  காரியங்களைக்குறித்து  நான்  எழுதுகிறதென்னவென்றால்,  ஸ்திரீயைத்  தொடாமலிருக்கிறது  மனுஷனுக்கு  நல்லது.  (1கொரிந்தியர்  7:1)

neengga'l  enakku  ezhuthina  kaariyangga'laikku’riththu  naan  ezhuthugi’rathennaven’raal,  sthireeyaith  thodaamalirukki’rathu  manushanukku  nallathu.  (1korinthiyar  7:1)

ஆகிலும்  வேசித்தனம்  இராதபடிக்கு  அவனவன்  தன்  சொந்த  மனைவியையும்,  அவளவள்  தன்  சொந்தப்  புருஷனையும்  உடையவர்களாயிருக்கவேண்டும்.  (1கொரிந்தியர்  7:2)

aagilum  veasiththanam  iraathapadikku  avanavan  than  sontha  manaiviyaiyum,  ava'lava'l  than  sonthap  purushanaiyum  udaiyavarga'laayirukkavea'ndum.  (1korinthiyar  7:2)

புருஷன்  தன்  மனைவிக்குச்  செய்யவேண்டிய  கடமையைச்  செய்யக்கடவன்;  அப்படியே  மனைவியும்  தன்  புருஷனுக்குச்  செய்யக்கடவள்.  (1கொரிந்தியர்  7:3)

purushan  than  manaivikkuch  seyyavea'ndiya  kadamaiyaich  seyyakkadavan;  appadiyea  manaiviyum  than  purushanukkuch  seyyakkadava'l.  (1korinthiyar  7:3)

மனைவியானவள்  தன்  சுயசரீரத்திற்கு  அதிகாரியல்ல,  புருஷனே  அதற்கு  அதிகாரி;  அப்படியே  புருஷனும்  தன்  சுயசரீரத்திற்கு  அதிகாரியல்ல,  மனைவியே  அதற்கு  அதிகாரி.  (1கொரிந்தியர்  7:4)

manaiviyaanava'l  than  suyasareeraththi’rku  athigaariyalla,  purushanea  atha’rku  athigaari;  appadiyea  purushanum  than  suyasareeraththi’rku  athigaariyalla,  manaiviyea  atha’rku  athigaari.  (1korinthiyar  7:4)

உபவாசத்திற்கும்  ஜெபத்திற்கும்  தடையிராதபடிக்கு  இருவரும்  சிலகாலம்  பிரிந்திருக்கவேண்டுமென்று  சம்மதித்தாலன்றி,  ஒருவரைவிட்டு  ஒருவர்  பிரியாதிருங்கள்;  உங்களுக்கு  விரதத்துவம்  இல்லாமையால்  சாத்தான்  உங்களைத்  தூண்டிவிடாதபடிக்கு,  மறுபடியும்  கூடி  வாழுங்கள்.  (1கொரிந்தியர்  7:5)

ubavaasaththi’rkum  jebaththi’rkum  thadaiyiraathapadikku  iruvarum  silakaalam  pirinthirukkavea'ndumen’ru  sammathiththaalan’ri,  oruvaraivittu  oruvar  piriyaathirungga'l;  ungga'lukku  virathaththuvam  illaamaiyaal  saaththaan  ungga'laith  thoo'ndividaathapadikku,  ma’rupadiyum  koodi  vaazhungga'l.  (1korinthiyar  7:5)

இதை  நான்  கட்டளையாகச்  சொல்லாமல்,  யோசனையாகச்  சொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  7:6)

ithai  naan  katta'laiyaagach  sollaamal,  yoasanaiyaagach  sollugi’rean.  (1korinthiyar  7:6)

எல்லா  மனுஷரும்  என்னைப்போலவே  இருக்க  விரும்புகிறேன்.  ஆகிலும்  அவனவனுக்குத்  தேவனால்  அருளப்பட்ட  அவனவனுக்குரிய  வரமுண்டு;  அது  ஒருவனுக்கு  ஒருவிதமாயும்,  மற்றொருவனுக்கு  வேறுவிதமாயும்  இருக்கிறது.  (1கொரிந்தியர்  7:7)

ellaa  manusharum  ennaippoalavea  irukka  virumbugi’rean.  aagilum  avanavanukkuth  theavanaal  aru'lappatta  avanavanukkuriya  varamu'ndu;  athu  oruvanukku  oruvithamaayum,  mat’roruvanukku  vea’ruvithamaayum  irukki’rathu.  (1korinthiyar  7:7)

விவாகமில்லாதவர்களையும்,  கைம்பெண்களையும்குறித்து  நான்  சொல்லுகிறது  என்னவென்றால்,  அவர்கள்  என்னைப்போல  இருந்துவிட்டால்  அவர்களுக்கு  நலமாயிருக்கும்.  (1கொரிந்தியர்  7:8)

vivaagamillaathavarga'laiyum,  kaimpe'nga'laiyumku’riththu  naan  sollugi’rathu  ennaven’raal,  avarga'l  ennaippoala  irunthuvittaal  avarga'lukku  nalamaayirukkum.  (1korinthiyar  7:8)

ஆகிலும்  அவர்கள்  விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால்  விவாகம்பண்ணக்கடவர்கள்;  வேகிறதைப்பார்க்கிலும்  விவாகம்பண்ணுகிறது  நலம்.  (1கொரிந்தியர்  7:9)

aagilum  avarga'l  viraththaraayirukkakkoodaathirunthaal  vivaagampa'n'nakkadavarga'l;  veagi’rathaippaarkkilum  vivaagampa'n'nugi’rathu  nalam.  (1korinthiyar  7:9)

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு  நானல்ல,  கர்த்தரே  கட்டளையிடுகிறதாவது:  மனைவியானவள்  தன்  புருஷனை  விட்டுப்  பிரிந்துபோகக்கூடாது.  (1கொரிந்தியர்  7:10)

vivaagampa'n'nikko'ndavarga'lukku  naanalla,  karththarea  katta'laiyidugi’rathaavathu:  manaiviyaanava'l  than  purushanai  vittup  pirinthupoagakkoodaathu.  (1korinthiyar  7:10)

பிரிந்துபோனால்  அவள்  விவாகமில்லாதிருக்கக்கடவள்,  அல்லது  புருஷனோடே  ஒப்புரவாகக்கடவள்;  புருஷனும்  தன்  மனைவியைத்  தள்ளிவிடக்கூடாது.  (1கொரிந்தியர்  7:11)

pirinthupoanaal  ava'l  vivaagamillaathirukkakkadava'l,  allathu  purushanoadea  oppuravaagakkadava'l;  purushanum  than  manaiviyaith  tha'l'lividakkoodaathu.  (1korinthiyar  7:11)

மற்றவர்களைக்குறித்துக்  கர்த்தர்  அல்ல,  நானே  சொல்லுகிறதாவது:  சகோதரனொருவனுடைய  மனைவி  அவிசுவாசியாயிருந்தும்,  அவனுடனே  வாசமாயிருக்க  அவளுக்குச்  சம்மதமிருந்தால்,  அவன்  அவளைத்  தள்ளிவிடாதிருக்கக்கடவன்.  (1கொரிந்தியர்  7:12)

mat’ravarga'laikku’riththuk  karththar  alla,  naanea  sollugi’rathaavathu:  sagoatharanoruvanudaiya  manaivi  avisuvaasiyaayirunthum,  avanudanea  vaasamaayirukka  ava'lukkuch  sammathamirunthaal,  avan  ava'laith  tha'l'lividaathirukkakkadavan.  (1korinthiyar  7:12)

அப்படியே  ஒரு  ஸ்திரீயினுடைய  புருஷன்  அவிசுவாசியாயிருந்தும்,  அவளுடனே  வாசமாயிருக்க  அவனுக்குச்  சம்மதமிருந்தால்,  அவள்  அவனைத்  தள்ளிவிடாதிருக்கக்கடவள்.  (1கொரிந்தியர்  7:13)

appadiyea  oru  sthireeyinudaiya  purushan  avisuvaasiyaayirunthum,  ava'ludanea  vaasamaayirukka  avanukkuch  sammathamirunthaal,  ava'l  avanaith  tha'l'lividaathirukkakkadava'l.  (1korinthiyar  7:13)

என்னத்தினாலெனில்,  அவிசுவாசியான  புருஷன்  தன்  மனைவியால்  பரிசுத்தமாக்கப்படுகிறான்;  அவிசுவாசியான  மனைவியும்  தன்  புருஷனால்  பரிசுத்தமாக்கப்படுகிறாள்.  இல்லாவிட்டால்  உங்கள்  பிள்ளைகள்  அசுத்தமாயிருக்குமே;  இப்பொழுதோ  அவைகள்  பரிசுத்தமாயிருக்கின்றன.  (1கொரிந்தியர்  7:14)

ennaththinaalenil,  avisuvaasiyaana  purushan  than  manaiviyaal  parisuththamaakkappadugi’raan;  avisuvaasiyaana  manaiviyum  than  purushanaal  parisuththamaakkappadugi’raa'l.  illaavittaal  ungga'l  pi'l'laiga'l  asuththamaayirukkumea;  ippozhuthoa  avaiga'l  parisuththamaayirukkin’rana.  (1korinthiyar  7:14)

ஆகிலும்  அவிசுவாசி  பிரிந்துபோனால்  பிரிந்துபோகட்டும்,  இப்படிப்பட்ட  விஷயத்தில்,  சகோதரனாவது  சகோதரியாவது  அடிமைப்பட்டவர்களல்ல.  சமாதானமாயிருக்கும்படிக்கே  தேவன்  நம்மை  அழைத்திருக்கிறார்.  (1கொரிந்தியர்  7:15)

aagilum  avisuvaasi  pirinthupoanaal  pirinthupoagattum,  ippadippatta  vishayaththil,  sagoatharanaavathu  sagoathariyaavathu  adimaippattavarga'lalla.  samaathaanamaayirukkumpadikkea  theavan  nammai  azhaiththirukki’raar.  (1korinthiyar  7:15)

மனைவியானவளே,  நீ  உன்  புருஷனை  இரட்சிப்பாயோ  அல்லவோ  உனக்கு  எப்படித்  தெரியும்?  புருஷனே,  நீ  உன்  மனைவியை  இரட்சிப்பாயோ  அல்லவோ  உனக்கு  எப்படித்  தெரியும்?  (1கொரிந்தியர்  7:16)

manaiviyaanava'lea,  nee  un  purushanai  iradchippaayoa  allavoa  unakku  eppadith  theriyum?  purushanea,  nee  un  manaiviyai  iradchippaayoa  allavoa  unakku  eppadith  theriyum?  (1korinthiyar  7:16)

தேவன்  அவனவனுக்குப்  பகிர்ந்ததெப்படியோ,  கர்த்தர்  அவனவனை  அழைத்ததெப்படியோ,  அப்படியே  அவனவன்  நடக்கக்கடவன்.  எல்லாச்  சபைகளிலேயும்  இப்படியே  திட்டம்பண்ணுகிறேன்.  (1கொரிந்தியர்  7:17)

theavan  avanavanukkup  pagirnthatheppadiyoa,  karththar  avanavanai  azhaiththatheppadiyoa,  appadiyea  avanavan  nadakkakkadavan.  ellaach  sabaiga'lileayum  ippadiyea  thittampa'n'nugi’rean.  (1korinthiyar  7:17)

ஒருவன்  விருத்தசேதனம்  பெற்றவனாய்  அழைக்கப்பட்டிருந்தால்,  விருத்தசேதனமில்லாதவனாயிருக்க  வகைதேடானாக;  ஒருவன்  விருத்தசேதனமில்லாதவனாய்  அழைக்கப்பட்டிருந்தால்,  விருத்தசேதனம்  பெறாதிருப்பானாக.  (1கொரிந்தியர்  7:18)

oruvan  viruththaseathanam  pet’ravanaay  azhaikkappattirunthaal,  viruththaseathanamillaathavanaayirukka  vagaitheadaanaaga;  oruvan  viruththaseathanamillaathavanaay  azhaikkappattirunthaal,  viruththaseathanam  pe’raathiruppaanaaga.  (1korinthiyar  7:18)

விருத்தசேதனமும்  ஒன்றுமில்லை,  விருத்தசேதனமில்லாமையும்  ஒன்றுமில்லை;  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறதே  காரியம்.  (1கொரிந்தியர்  7:19)

viruththaseathanamum  on’rumillai,  viruththaseathanamillaamaiyum  on’rumillai;  theavanudaiya  ka’rpanaiga'laik  kaikko'l'lugi’rathea  kaariyam.  (1korinthiyar  7:19)

அவனவன்  தான்  அழைக்கப்பட்ட  நிலைமையிலே  நிலைத்திருக்கக்கடவன்.  (1கொரிந்தியர்  7:20)

avanavan  thaan  azhaikkappatta  nilaimaiyilea  nilaiththirukkakkadavan.  (1korinthiyar  7:20)

அடிமையாய்  நீ  அழைக்கப்பட்டிருந்தால்,  கவலைப்படாதே;  நீ  சுயாதீனனாகக்கூடுமானால்  அதை  நலமென்று  அநுசரித்துக்கொள்.  (1கொரிந்தியர்  7:21)

adimaiyaay  nee  azhaikkappattirunthaal,  kavalaippadaathea;  nee  suyaatheenanaagakkoodumaanaal  athai  nalamen’ru  anusariththukko'l.  (1korinthiyar  7:21)

கர்த்தருக்குள்  அழைக்கப்பட்ட  அடிமையானவன்  கர்த்தருடைய  சுயாதீனனாயிருக்கிறான்;  அப்படியே  அழைக்கப்பட்ட  சுயாதீனன்  கிறிஸ்துவினுடைய  அடிமையாயிருக்கிறான்.  (1கொரிந்தியர்  7:22)

karththarukku'l  azhaikkappatta  adimaiyaanavan  karththarudaiya  suyaatheenanaayirukki’raan;  appadiyea  azhaikkappatta  suyaatheenan  ki’risthuvinudaiya  adimaiyaayirukki’raan.  (1korinthiyar  7:22)

நீங்கள்  கிரயத்துக்குக்  கொள்ளப்பட்டீர்கள்;  மனுஷருக்கு  அடிமைகளாகாதிருங்கள்.  (1கொரிந்தியர்  7:23)

neengga'l  kirayaththukkuk  ko'l'lappatteerga'l;  manusharukku  adimaiga'laagaathirungga'l.  (1korinthiyar  7:23)

சகோதரரே,  அவனவன்  தான்  அழைக்கப்பட்ட  நிலைமையிலே  தேவனுக்கு  முன்பாக  நிலைத்திருக்கக்கடவன்.  (1கொரிந்தியர்  7:24)

sagoathararea,  avanavan  thaan  azhaikkappatta  nilaimaiyilea  theavanukku  munbaaga  nilaiththirukkakkadavan.  (1korinthiyar  7:24)

அன்றியும்  கன்னிகைகளைக்குறித்து,  கர்த்தரால்  எனக்குக்  கட்டளை  இல்லை.  ஆகிலும்  நான்  உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக்  கர்த்தரால்  இரக்கம்பெற்று,  என்  அபிப்பிராயத்தைத்  தெரியப்படுத்துகிறேன்.  (1கொரிந்தியர்  7:25)

an’riyum  kannigaiga'laikku’riththu,  karththaraal  enakkuk  katta'lai  illai.  aagilum  naan  u'nmaiyu'l'lavanaayirukki’ratha’rkuk  karththaraal  irakkampet’ru,  en  abippiraayaththaith  theriyappaduththugi’rean.  (1korinthiyar  7:25)

அதென்னவெனில்,  இப்பொழுது  உண்டாயிருக்கிற  துன்பத்தினிமித்தம்  விவாகமில்லாமலிருக்கிறது  மனுஷனுக்கு  நலமாயிருக்குமென்று  எண்ணுகிறேன்.  (1கொரிந்தியர்  7:26)

athennavenil,  ippozhuthu  u'ndaayirukki’ra  thunbaththinimiththam  vivaagamillaamalirukki’rathu  manushanukku  nalamaayirukkumen’ru  e'n'nugi’rean.  (1korinthiyar  7:26)

நீ  மனைவியோடே  கட்டப்பட்டிருந்தால்,  அவிழ்க்கப்பட  வகைதேடாதே;  நீ  மனைவி  இல்லாதவனாயிருந்தால்,  மனைவியைத்  தேடாதே.  (1கொரிந்தியர்  7:27)

nee  manaiviyoadea  kattappattirunthaal,  avizhkkappada  vagaitheadaathea;  nee  manaivi  illaathavanaayirunthaal,  manaiviyaith  theadaathea.  (1korinthiyar  7:27)

நீ  விவாகம்பண்ணினாலும்  பாவமல்ல;  கன்னிகை  விவாகம்பண்ணினாலும்  பாவமல்ல.  ஆகிலும்  அப்படிப்பட்டவர்கள்  சரீரத்திலே  உபத்திரவப்படுவார்கள்;  அதற்கு  நீங்கள்  தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.  (1கொரிந்தியர்  7:28)

nee  vivaagampa'n'ninaalum  paavamalla;  kannigai  vivaagampa'n'ninaalum  paavamalla.  aagilum  appadippattavarga'l  sareeraththilea  ubaththiravappaduvaarga'l;  atha’rku  neengga'l  thappavea'ndumen’rirukki’rean.  (1korinthiyar  7:28)

மேலும்,  சகோதரரே,  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  இனிவரும்  காலம்  குறுகினதானபடியால்,  மனைவிகளுள்ளவர்கள்  மனைவிகளில்லாதவர்கள்போலவும்,  (1கொரிந்தியர்  7:29)

mealum,  sagoathararea,  naan  sollugi’rathennavenil,  inivarum  kaalam  ku’ruginathaanapadiyaal,  manaiviga'lu'l'lavarga'l  manaiviga'lillaathavarga'lpoalavum,  (1korinthiyar  7:29)

அழுகிறவர்கள்  அழாதவர்கள்போலவும்,  சந்தோஷப்படுகிறவர்கள்  சந்தோஷப்படாதவர்கள்போலவும்,  கொள்ளுகிறவர்கள்  கொள்ளாதவர்கள்போலவும்,  (1கொரிந்தியர்  7:30)

azhugi’ravarga'l  azhaathavarga'lpoalavum,  santhoashappadugi’ravarga'l  santhoashappadaathavarga'lpoalavum,  ko'l'lugi’ravarga'l  ko'l'laathavarga'lpoalavum,  (1korinthiyar  7:30)

இவ்வுலகத்தை  அனுபவிக்கிறவர்கள்  அதைத்  தகாதவிதமாய்  அனுபவியாதவர்கள்போலவும்  இருக்கவேண்டும்;  இவ்வுலகத்தின்  வேஷம்  கடந்துபோகிறதே.  (1கொரிந்தியர்  7:31)

ivvulagaththai  anubavikki’ravarga'l  athaith  thagaathavithamaay  anubaviyaathavarga'lpoalavum  irukkavea'ndum;  ivvulagaththin  veasham  kadanthupoagi’rathea.  (1korinthiyar  7:31)

நீங்கள்  கவலையற்றவர்களாயிருக்க  விரும்புகிறேன்.  விவாகமில்லாதவன்  கர்த்தருக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  கர்த்தருக்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறான்.  (1கொரிந்தியர்  7:32)

neengga'l  kavalaiyat’ravarga'laayirukka  virumbugi’rean.  vivaagamillaathavan  karththarukku  eppadip  piriyamaayirukkalaamen’ru,  karththarukkuriyavaiga'lukkaagak  kavalaippadugi’raan.  (1korinthiyar  7:32)

விவாகம்பண்ணினவன்  தன்  மனைவிக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  உலகத்திற்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறான்.  (1கொரிந்தியர்  7:33)

vivaagampa'n'ninavan  than  manaivikku  eppadip  piriyamaayirukkalaamen’ru,  ulagaththi’rkuriyavaiga'lukkaagak  kavalaippadugi’raan.  (1korinthiyar  7:33)

அதுபோல,  மனைவியானவளுக்கும்  கன்னிகைக்கும்  வித்தியாசமுண்டு.  விவாகமில்லாதவள்  சரீரத்திலும்  ஆத்துமாவிலும்  பரிசுத்தமாயிருக்கும்படி,  கர்த்தருக்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறாள்;  விவாகம்பண்ணினவள்  தன்  புருஷனுக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  உலகத்திற்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறாள்.  (1கொரிந்தியர்  7:34)

athupoala,  manaiviyaanava'lukkum  kannigaikkum  viththiyaasamu'ndu.  vivaagamillaathava'l  sareeraththilum  aaththumaavilum  parisuththamaayirukkumpadi,  karththarukkuriyavaiga'lukkaagak  kavalaippadugi’raa'l;  vivaagampa'n'ninava'l  than  purushanukku  eppadip  piriyamaayirukkalaamen’ru,  ulagaththi’rkuriyavaiga'lukkaagak  kavalaippadugi’raa'l.  (1korinthiyar  7:34)

இதை  நான்  உங்களைக்  கண்ணியில்  அகப்படுத்தவேண்டுமென்று  சொல்லாமல்,  உங்களுக்குத்  தகுதியாயிருக்குமென்றும்,  நீங்கள்  கவலையில்லாமல்  கர்த்தரைப்  பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும்,  உங்கள்  சுயபிரயோஜனத்துக்காகவே  சொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  7:35)

ithai  naan  ungga'laik  ka'n'niyil  agappaduththavea'ndumen’ru  sollaamal,  ungga'lukkuth  thaguthiyaayirukkumen’rum,  neengga'l  kavalaiyillaamal  karththaraip  pat’rikko'ndirukkavea'ndumen’rum,  ungga'l  suyapirayoajanaththukkaagavea  sollugi’rean.  (1korinthiyar  7:35)

ஆகிலும்  ஒருவன்  தன்  புத்திரியின்  கன்னிகைப்பருவம்  கடந்துபோனதினாலே,  அவள்  விவாகம்பண்ணாமலிருப்பது  அவளுக்குத்  தகுதியல்லவென்றும்,  அவள்  விவாகம்பண்ணுவது  அவசியமென்றும்  நினைத்தால்,  அவன்  தன்  மனதின்படி  செய்யக்கடவன்;  அது  பாவமல்ல,  விவாகம்பண்ணட்டும்.  (1கொரிந்தியர்  7:36)

aagilum  oruvan  than  puththiriyin  kannigaipparuvam  kadanthupoanathinaalea,  ava'l  vivaagampa'n'naamaliruppathu  ava'lukkuth  thaguthiyallaven’rum,  ava'l  vivaagampa'n'nuvathu  avasiyamen’rum  ninaiththaal,  avan  than  manathinpadi  seyyakkadavan;  athu  paavamalla,  vivaagampa'n'nattum.  (1korinthiyar  7:36)

ஆயினும்  அதற்கு  அவசியத்தைக்  காணாமல்,  தன்  இருதயத்திலே  உறுதியுள்ளவனாயும்,  சுயசித்தத்தின்படி  செய்ய  அதிகாரமுள்ளவனாயுமிருந்து,  தன்  புத்திரியின்  கன்னிகைப்  பருவத்தைக்  காக்கவேண்டுமென்று  தன்  இருதயத்தில்  தீர்மானிக்கிறவன்  நன்மைசெய்கிறான்.  (1கொரிந்தியர்  7:37)

aayinum  atha’rku  avasiyaththaik  kaa'naamal,  than  iruthayaththilea  u’ruthiyu'l'lavanaayum,  suyasiththaththinpadi  seyya  athigaaramu'l'lavanaayumirunthu,  than  puththiriyin  kannigaip  paruvaththaik  kaakkavea'ndumen’ru  than  iruthayaththil  theermaanikki’ravan  nanmaiseygi’raan.  (1korinthiyar  7:37)

இப்படியிருக்க,  அவளை  விவாகம்பண்ணிக்  கொடுக்கிறவனும்  நன்மைசெய்கிறான்;  கொடாமலிருக்கிறவனும்  அதிக  நன்மைசெய்கிறான்.  (1கொரிந்தியர்  7:38)

ippadiyirukka,  ava'lai  vivaagampa'n'nik  kodukki’ravanum  nanmaiseygi’raan;  kodaamalirukki’ravanum  athiga  nanmaiseygi’raan.  (1korinthiyar  7:38)

மனைவியானவள்  தன்  புருஷன்  உயிரோடிருக்குங்  காலமளவும்  பிரமாணத்தினால்  கட்டப்பட்டிருக்கிறாள்;  தன்  புருஷன்  மரித்தபின்பு  தனக்கு  இஷ்டமானவனாயும்  கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற  எவனையாகிலும்  விவாகம்பண்ணிக்கொள்ள  விடுதலையாயிருக்கிறாள்.  (1கொரிந்தியர்  7:39)

manaiviyaanava'l  than  purushan  uyiroadirukkung  kaalama'lavum  piramaa'naththinaal  kattappattirukki’raa'l;  than  purushan  mariththapinbu  thanakku  ishdamaanavanaayum  karththarukkudpattavanaayumirukki’ra  evanaiyaagilum  vivaagampa'n'nikko'l'la  viduthalaiyaayirukki’raa'l.  (1korinthiyar  7:39)

ஆகிலும்  என்னுடைய  அபிப்பிராயத்தின்படி  அவள்  அப்படியே  இருந்துவிட்டால்  பாக்கியவதியாயிருப்பாள்.  என்னிடத்திலும்  தேவனுடைய  ஆவி  உண்டென்று  எண்ணுகிறேன்.  (1கொரிந்தியர்  7:40)

aagilum  ennudaiya  abippiraayaththinpadi  ava'l  appadiyea  irunthuvittaal  baakkiyavathiyaayiruppaa'l.  ennidaththilum  theavanudaiya  aavi  u'nden’ru  e'n'nugi’rean.  (1korinthiyar  7:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!