Thursday, May 26, 2016

1 Korinthiyar 3 | 1 கொரிந்தியர் 3 | 1 Corinthians 3

மேலும்,  சகோதரரே,  நான்  உங்களை  ஆவிக்குரியவர்களென்று  எண்ணி  உங்களுடனே  பேசக்கூடாமல்,  மாம்சத்துக்குரியவர்களென்றும்,  கிறிஸ்துவுக்குள்  குழந்தைகளென்றும்  எண்ணிப்  பேசவேண்டியதாயிற்று.  (1கொரிந்தியர்  3:1)

mealum,  sagoathararea,  naan  ungga'lai  aavikkuriyavarga'len’ru  e'n'ni  ungga'ludanea  peasakkoodaamal,  maamsaththukkuriyavarga'len’rum,  ki’risthuvukku'l  kuzhanthaiga'len’rum  e'n'nip  peasavea'ndiyathaayit’ru.  (1korinthiyar  3:1)

நீங்கள்  பெலனில்லாதவர்களானதால்,  உங்களுக்குப்  போஜனங்கொடாமல்,  பாலைக்  குடிக்கக்கொடுத்தேன்;  இன்னமும்  நீங்கள்  மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால்,  இப்பொழுதும்  உங்களுக்குப்  பெலனில்லை.  (1கொரிந்தியர்  3:2)

neengga'l  belanillaathavarga'laanathaal,  ungga'lukkup  poajanangkodaamal,  paalaik  kudikkakkoduththean;  innamum  neengga'l  maamsaththukkuriyavarga'laayirukki’rapadiyaal,  ippozhuthum  ungga'lukkup  belanillai.  (1korinthiyar  3:2)

பொறாமையும்  வாக்குவாதமும்  பேதகங்களும்  உங்களுக்குள்  இருக்கிறபடியால்,  நீங்கள்  மாம்சத்திற்குரியவர்களாயிருந்து  மனுஷமார்க்கமாய்  நடக்கிறீர்களல்லவா?  (1கொரிந்தியர்  3:3)

po’raamaiyum  vaakkuvaathamum  beathagangga'lum  ungga'lukku'l  irukki’rapadiyaal,  neengga'l  maamsaththi’rkuriyavarga'laayirunthu  manushamaarkkamaay  nadakki’reerga'lallavaa?  (1korinthiyar  3:3)

ஒருவன்  நான்  பவுலைச்  சேர்ந்தவனென்றும்,  வேறொருவன்  நான்  அப்பொல்லோவைச்  சேர்ந்தவனென்றும்  சொல்லுகிறபடியால்  நீங்கள்  மாம்சத்திற்குரியவர்களல்லவா?  (1கொரிந்தியர்  3:4)

oruvan  naan  pavulaich  searnthavanen’rum,  vea’roruvan  naan  appolloavaich  searnthavanen’rum  sollugi’rapadiyaal  neengga'l  maamsaththi’rkuriyavarga'lallavaa?  (1korinthiyar  3:4)

பவுல்  யார்?  அப்பொல்லோ  யார்?  கர்த்தர்  அவனவனுக்கு  அருள்  அளித்தபடியே  நீங்கள்  விசுவாசிக்கிறதற்கு  ஏதுவாயிருந்த  ஊழியக்காரர்தானே.  (1கொரிந்தியர்  3:5)

pavul  yaar?  appolloa  yaar?  karththar  avanavanukku  aru'l  a'liththapadiyea  neengga'l  visuvaasikki’ratha’rku  eathuvaayiruntha  oozhiyakkaararthaanea.  (1korinthiyar  3:5)

நான்  நட்டேன்,  அப்பொல்லோ  நீர்ப்பாய்ச்சினான்,  தேவனே  விளையச்செய்தார்.  (1கொரிந்தியர்  3:6)

naan  nattean,  appolloa  neerppaaychchinaan,  theavanea  vi'laiyachseythaar.  (1korinthiyar  3:6)

அப்படியிருக்க,  நடுகிறவனாலும்  ஒன்றுமில்லை,  நீர்ப்பாய்ச்சுகிறவனாலும்  ஒன்றுமில்லை,  விளையச்செய்கிற  தேவனாலே  எல்லாமாகும்.  (1கொரிந்தியர்  3:7)

appadiyirukka,  nadugi’ravanaalum  on’rumillai,  neerppaaychchugi’ravanaalum  on’rumillai,  vi'laiyachseygi’ra  theavanaalea  ellaamaagum.  (1korinthiyar  3:7)

மேலும்  நடுகிறவனும்  நீர்ப்பாய்ச்சுகிறவனும்  ஒன்றாயிருக்கிறார்கள்;  அவனவன்  தன்தன்  வேலைக்குத்  தக்கதாய்க்  கூலியைப்  பெறுவான்.  (1கொரிந்தியர்  3:8)

mealum  nadugi’ravanum  neerppaaychchugi’ravanum  on’raayirukki’raarga'l;  avanavan  thanthan  vealaikkuth  thakkathaayk  kooliyaip  pe’ruvaan.  (1korinthiyar  3:8)

நாங்கள்  தேவனுக்கு  உடன்வேலையாட்களாயிருக்கிறோம்;  நீங்கள்  தேவனுடைய  பண்ணையும்,  தேவனுடைய  மாளிகையுமாயிருக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  3:9)

naangga'l  theavanukku  udanvealaiyaadka'laayirukki’roam;  neengga'l  theavanudaiya  pa'n'naiyum,  theavanudaiya  maa'ligaiyumaayirukki’reerga'l.  (1korinthiyar  3:9)

எனக்கு  அளிக்கப்பட்ட  தேவகிருபையின்படியே  புத்தியுள்ள  சிற்பாசாரியைப்போல  அஸ்திபாரம்போட்டேன்.  வேறொருவன்  அதின்மேல்  கட்டுகிறான்.  அவனவன்  தான்  அதின்மேல்  இன்னவிதமாய்க்  கட்டுகிறானென்று  பார்க்கக்கடவன்.  (1கொரிந்தியர்  3:10)

enakku  a'likkappatta  theavakirubaiyinpadiyea  buththiyu'l'la  si’rpaasaariyaippoala  asthibaarampoattean.  vea’roruvan  athinmeal  kattugi’raan.  avanavan  thaan  athinmeal  innavithamaayk  kattugi’raanen’ru  paarkkakkadavan.  (1korinthiyar  3:10)

போடப்பட்டிருக்கிற  அஸ்திபாரமாகிய  இயேசுகிறிஸ்துவை  அல்லாமல்  வேறே  அஸ்திபாரத்தைப்  போட  ஒருவனாலும்  கூடாது.  (1கொரிந்தியர்  3:11)

poadappattirukki’ra  asthibaaramaagiya  iyeasuki’risthuvai  allaamal  vea’rea  asthibaaraththaip  poada  oruvanaalum  koodaathu.  (1korinthiyar  3:11)

ஒருவன்  அந்த  அஸ்திபாரத்தின்மேல்  பொன்,  வெள்ளி,  விலையேறப்பெற்ற  கல்,  மரம்,  புல்,  வைக்கோல்  ஆகிய  இவைகளைக்  கட்டினால்,  (1கொரிந்தியர்  3:12)

oruvan  antha  asthibaaraththinmeal  pon,  ve'l'li,  vilaiyea’rappet’ra  kal,  maram,  pul,  vaikkoal  aagiya  ivaiga'laik  kattinaal,  (1korinthiyar  3:12)

அவனவனுடைய  வேலைப்பாடு  வெளியாகும்;  நாளானது  அதை  விளங்கப்பண்ணும்.  ஏனெனில்  அது  அக்கினியினாலே  வெளிப்படுத்தப்படும்;  அவனவனுடைய  வேலைப்பாடு  எத்தன்மையுள்ளதென்று  அக்கினியானது  பரிசோதிக்கும்.  (1கொரிந்தியர்  3:13)

avanavanudaiya  vealaippaadu  ve'liyaagum;  naa'laanathu  athai  vi'langgappa'n'num.  eanenil  athu  akkiniyinaalea  ve'lippaduththappadum;  avanavanudaiya  vealaippaadu  eththanmaiyu'l'lathen’ru  akkiniyaanathu  parisoathikkum.  (1korinthiyar  3:13)

அதின்மேல்  ஒருவன்  கட்டினது  நிலைத்தால்,  அவன்  கூலியைப்  பெறுவான்.  (1கொரிந்தியர்  3:14)

athinmeal  oruvan  kattinathu  nilaiththaal,  avan  kooliyaip  pe’ruvaan.  (1korinthiyar  3:14)

ஒருவன்  கட்டினது  வெந்துபோனால்,  அவன்  நஷ்டமடைவான்;  அவனோ  இரட்சிக்கப்படுவான்;  அதுவும்  அக்கினியிலகப்பட்டுத்  தப்பினதுபோலிருக்கும்.  (1கொரிந்தியர்  3:15)

oruvan  kattinathu  venthupoanaal,  avan  nashdamadaivaan;  avanoa  iradchikkappaduvaan;  athuvum  akkiniyilagappattuth  thappinathupoalirukkum.  (1korinthiyar  3:15)

நீங்கள்  தேவனுடைய  ஆலயமாயிருக்கிறீர்களென்றும்,  தேவனுடைய  ஆவி  உங்களில்  வாசமாயிருக்கிறாரென்றும்  அறியாதிருக்கிறீர்களா?  (1கொரிந்தியர்  3:16)

neengga'l  theavanudaiya  aalayamaayirukki’reerga'len’rum,  theavanudaiya  aavi  ungga'lil  vaasamaayirukki’raaren’rum  a’riyaathirukki’reerga'laa?  (1korinthiyar  3:16)

ஒருவன்  தேவனுடைய  ஆலயத்தைக்கெடுத்தால்,  அவனைத்  தேவன்  கெடுப்பார்;  தேவனுடைய  ஆலயம்  பரிசுத்தமாயிருக்கிறது;  நீங்களே  அந்த  ஆலயம்.  (1கொரிந்தியர்  3:17)

oruvan  theavanudaiya  aalayaththaikkeduththaal,  avanaith  theavan  keduppaar;  theavanudaiya  aalayam  parisuththamaayirukki’rathu;  neengga'lea  antha  aalayam.  (1korinthiyar  3:17)

ஒருவனும்  தன்னைத்தானே  வஞ்சியாதிருப்பானாக;  இவ்வுலகத்திலே  உங்களில்  ஒருவன்  தன்னை  ஞானியென்று  எண்ணினால்  அவன்  ஞானியாகும்படிக்குப்  பைத்தியக்காரனாகக்கடவன்.  (1கொரிந்தியர்  3:18)

oruvanum  thannaiththaanea  vagnchiyaathiruppaanaaga;  ivvulagaththilea  ungga'lil  oruvan  thannai  gnaaniyen’ru  e'n'ninaal  avan  gnaaniyaagumpadikkup  paiththiyakkaaranaagakkadavan.  (1korinthiyar  3:18)

இவ்வுலகத்தின்  ஞானம்  தேவனுக்கு  முன்பாகப்  பைத்தியமாயிருக்கிறது.  அப்படியே,  ஞானிகளை  அவர்களுடைய  தந்திரத்திலே  பிடிக்கிறாரென்றும்,  (1கொரிந்தியர்  3:19)

ivvulagaththin  gnaanam  theavanukku  munbaagap  paiththiyamaayirukki’rathu.  appadiyea,  gnaaniga'lai  avarga'ludaiya  thanthiraththilea  pidikki’raaren’rum,  (1korinthiyar  3:19)

ஞானிகளுடைய  சிந்தனைகள்  வீணாயிருக்கிறதென்று  கர்த்தர்  அறிந்திருக்கிறாரென்றும்  எழுதியிருக்கிறது.  (1கொரிந்தியர்  3:20)

gnaaniga'ludaiya  sinthanaiga'l  vee'naayirukki’rathen’ru  karththar  a’rinthirukki’raaren’rum  ezhuthiyirukki’rathu.  (1korinthiyar  3:20)

இப்படியிருக்க,  ஒருவனும்  மனுஷரைக்குறித்து  மேன்மைபாராட்டாதிருப்பானாக;  எல்லாம்  உங்களுடையதே;  (1கொரிந்தியர்  3:21)

ippadiyirukka,  oruvanum  manusharaikku’riththu  meanmaipaaraattaathiruppaanaaga;  ellaam  ungga'ludaiyathea;  (1korinthiyar  3:21)

பவுலாகிலும்,  அப்பொல்லோவாகிலும்,  கேபாவாகிலும்,  உலகமாகிலும்,  ஜீவனாகிலும்  மரணமாகிலும்,  நிகழ்காரியங்களாகிலும்,  வருங்காரியங்களாகிலும்,  எல்லாம்  உங்களுடையது;  (1கொரிந்தியர்  3:22)

pavulaagilum,  appolloavaagilum,  keapaavaagilum,  ulagamaagilum,  jeevanaagilum  mara'namaagilum,  nigazhkaariyangga'laagilum,  varungkaariyangga'laagilum,  ellaam  ungga'ludaiyathu;  (1korinthiyar  3:22)

நீங்கள்  கிறிஸ்துவினுடையவர்கள்;  கிறிஸ்து  தேவனுடையவர்.  (1கொரிந்தியர்  3:23)

neengga'l  ki’risthuvinudaiyavarga'l;  ki’risthu  theavanudaiyavar.  (1korinthiyar  3:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!