Thursday, May 26, 2016

1 Korinthiyar 2 | 1 கொரிந்தியர் 2 | 1 Corinthians 2

சகோதரரே,  நான்  உங்களிடத்தில்  வந்தபோது,  தேவனைப்பற்றிய  சாட்சியைச்  சிறந்த  வசனிப்போடாவது  ஞானத்தோடாவது  அறிவிக்கிறவனாக  வரவில்லை.  (1கொரிந்தியர்  2:1)

sagoathararea,  naan  ungga'lidaththil  vanthapoathu,  theavanaippat’riya  saadchiyaich  si’rantha  vasanippoadaavathu  gnaanaththoadaavathu  a’rivikki’ravanaaga  varavillai.  (1korinthiyar  2:1)

இயேசுகிறிஸ்துவை,  சிலுவையில்  அறையப்பட்ட  அவரையேயன்றி,  வேறொன்றையும்  உங்களுக்குள்ளே  அறியாதிருக்கத்  தீர்மானித்திருந்தேன்.  (1கொரிந்தியர்  2:2)

iyeasuki’risthuvai,  siluvaiyil  a’raiyappatta  avaraiyeayan’ri,  vea’ron’raiyum  ungga'lukku'l'lea  a’riyaathirukkath  theermaaniththirunthean.  (1korinthiyar  2:2)

அல்லாமலும்  நான்  பலவீனத்தோடும்  பயத்தோடும்  மிகுந்த  நடுக்கத்தோடும்  உங்களிடத்தில்  இருந்தேன்.  (1கொரிந்தியர்  2:3)

allaamalum  naan  balaveenaththoadum  bayaththoadum  miguntha  nadukkaththoadum  ungga'lidaththil  irunthean.  (1korinthiyar  2:3)

உங்கள்  விசுவாசம்  மனுஷருடைய  ஞானத்திலல்ல,  தேவனுடைய  பெலத்தில்  நிற்கும்படிக்கு,  (1கொரிந்தியர்  2:4)

ungga'l  visuvaasam  manusharudaiya  gnaanaththilalla,  theavanudaiya  belaththil  ni’rkumpadikku,  (1korinthiyar  2:4)

என்  பேச்சும்  என்  பிரசங்கமும்  மனுஷ  ஞானத்திற்குரிய  நயவசனமுள்ளதாயிராமல்,  ஆவியினாலும்  பெலத்தினாலும்  உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.  (1கொரிந்தியர்  2:5)

en  peachchum  en  pirasanggamum  manusha  gnaanaththi’rkuriya  nayavasanamu'l'lathaayiraamal,  aaviyinaalum  belaththinaalum  u’ruthippaduththappattathaayirunthathu.  (1korinthiyar  2:5)

அப்படியிருந்தும்,  தேறினவர்களுக்குள்ளே  ஞானத்தைப்  பேசுகிறோம்;  இப்பிரபஞ்சத்தின்  ஞானத்தையல்ல,  அழிந்துபோகிறவர்களாகிய  இப்பிரபஞ்சத்தின்  பிரபுக்களுடைய  ஞானத்தையுமல்ல,  (1கொரிந்தியர்  2:6)

appadiyirunthum,  thea’rinavarga'lukku'l'lea  gnaanaththaip  peasugi’roam;  ippirabagnchaththin  gnaanaththaiyalla,  azhinthupoagi’ravarga'laagiya  ippirabagnchaththin  pirabukka'ludaiya  gnaanaththaiyumalla,  (1korinthiyar  2:6)

உலகத்தோற்றத்திற்குமுன்னே  தேவன்  நம்முடைய  மகிமைக்காக  ஏற்படுத்தினதும்,  மறைக்கப்பட்டதுமாயிருந்த  இரகசியமான  தேவஞானத்தையே  பேசுகிறோம்.  (1கொரிந்தியர்  2:7)

ulagaththoat’raththi’rkumunnea  theavan  nammudaiya  magimaikkaaga  ea’rpaduththinathum,  ma’raikkappattathumaayiruntha  iragasiyamaana  theavagnaanaththaiyea  peasugi’roam.  (1korinthiyar  2:7)

அதை  இப்பிரபஞ்சத்துப்  பிரபுக்களில்  ஒருவனும்  அறியவில்லை;  அறிந்தார்களானால்,  மகிமையின்  கர்த்தரை  அவர்கள்  சிலுவையில்  அறையமாட்டார்களே.  (1கொரிந்தியர்  2:8)

athai  ippirabagnchaththup  pirabukka'lil  oruvanum  a’riyavillai;  a’rinthaarga'laanaal,  magimaiyin  karththarai  avarga'l  siluvaiyil  a’raiyamaattaarga'lea.  (1korinthiyar  2:8)

எழுதியிருக்கிறபடி:  தேவன்  தம்மில்  அன்புகூருகிறவர்களுக்கு  ஆயத்தம்பண்ணினவைகளைக்  கண்  காணவுமில்லை,  காது  கேட்கவுமில்லை,  அவைகள்  மனுஷனுடைய  இருதயத்தில்  தோன்றவுமில்லை;  (1கொரிந்தியர்  2:9)

ezhuthiyirukki’rapadi:  theavan  thammil  anbukoorugi’ravarga'lukku  aayaththampa'n'ninavaiga'laik  ka'n  kaa'navumillai,  kaathu  keadkavumillai,  avaiga'l  manushanudaiya  iruthayaththil  thoan’ravumillai;  (1korinthiyar  2:9)

நமக்கோ  தேவன்  அவைகளைத்  தமது  ஆவியினாலே  வெளிப்படுத்தினார்;  அந்த  ஆவியானவர்  எல்லாவற்றையும்,  தேவனுடைய  ஆழங்களையும்,  ஆராய்ந்திருக்கிறார்.  (1கொரிந்தியர்  2:10)

namakkoa  theavan  avaiga'laith  thamathu  aaviyinaalea  ve'lippaduththinaar;  antha  aaviyaanavar  ellaavat’raiyum,  theavanudaiya  aazhangga'laiyum,  aaraaynthirukki’raar.  (1korinthiyar  2:10)

மனுஷனிலுள்ள  ஆவியேயன்றி  மனுஷரில்  எவன்  மனுஷனுக்குரியவைகளை  அறிவான்?  அப்படிப்போல,  தேவனுடைய  ஆவியேயன்றி,  ஒருவனும்  தேவனுக்குரியவைகளை  அறியமாட்டான்.  (1கொரிந்தியர்  2:11)

manushanilu'l'la  aaviyeayan’ri  manusharil  evan  manushanukkuriyavaiga'lai  a’rivaan?  appadippoala,  theavanudaiya  aaviyeayan’ri,  oruvanum  theavanukkuriyavaiga'lai  a’riyamaattaan.  (1korinthiyar  2:11)

நாங்களோ  உலகத்தின்  ஆவியைப்பெறாமல்,  தேவனால்  எங்களுக்கு  அருளப்பட்டவைகளை  அறியும்படிக்குத்  தேவனிலிருந்து  புறப்படுகிற  ஆவியையே  பெற்றோம்.  (1கொரிந்தியர்  2:12)

naangga'loa  ulagaththin  aaviyaippe’raamal,  theavanaal  engga'lukku  aru'lappattavaiga'lai  a’riyumpadikkuth  theavanilirunthu  pu’rappadugi’ra  aaviyaiyea  pet’roam.  (1korinthiyar  2:12)

அவைகளை  நாங்கள்  மனுஷஞானம்  போதிக்கிற  வார்த்தைகளாலே  பேசாமல்,  பரிசுத்தஆவி  போதிக்கிற  வார்த்தைகளாலே  பேசி,  ஆவிக்குரியவைகளை  ஆவிக்குரியவைகளோடே  சம்பந்தப்படுத்திக்  காண்பிக்கிறோம்.  (1கொரிந்தியர்  2:13)

avaiga'lai  naangga'l  manushagnaanam  poathikki’ra  vaarththaiga'laalea  peasaamal,  parisuththaaavi  poathikki’ra  vaarththaiga'laalea  peasi,  aavikkuriyavaiga'lai  aavikkuriyavaiga'loadea  sambanthappaduththik  kaa'nbikki’roam.  (1korinthiyar  2:13)

ஜென்மசுபாவமான  மனுஷனோ  தேவனுடைய  ஆவிக்குரியவைகளை  ஏற்றுக்கொள்ளான்;  அவைகள்  அவனுக்குப்  பைத்தியமாகத்  தோன்றும்;  அவைகள்  ஆவிக்கேற்றபிரகாரமாய்  ஆராய்ந்து  நிதானிக்கப்படுகிறவைகளானதால்,  அவைகளை  அறியவுமாட்டான்.  (1கொரிந்தியர்  2:14)

jenmasubaavamaana  manushanoa  theavanudaiya  aavikkuriyavaiga'lai  eat’rukko'l'laan;  avaiga'l  avanukkup  paiththiyamaagath  thoan’rum;  avaiga'l  aavikkeat’rapiragaaramaay  aaraaynthu  nithaanikkappadugi’ravaiga'laanathaal,  avaiga'lai  a’riyavumaattaan.  (1korinthiyar  2:14)

ஆவிக்குரியவன்  எல்லாவற்றையும்  ஆராய்ந்து  நிதானிக்கிறான்;  ஆனாலும்  அவன்  மற்றொருவனாலும்  ஆராய்ந்து  நிதானிக்கப்படான்.  (1கொரிந்தியர்  2:15)

aavikkuriyavan  ellaavat’raiyum  aaraaynthu  nithaanikki’raan;  aanaalum  avan  mat’roruvanaalum  aaraaynthu  nithaanikkappadaan.  (1korinthiyar  2:15)

கர்த்தருக்குப்  போதிக்கத்தக்கதாக  அவருடைய  சிந்தையை  அறிந்தவன்  யார்?  எங்களுக்கோ  கிறிஸ்துவின்  சிந்தை  உண்டாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  2:16)

karththarukkup  poathikkaththakkathaaga  avarudaiya  sinthaiyai  a’rinthavan  yaar?  engga'lukkoa  ki’risthuvin  sinthai  u'ndaayirukki’rathu.  (1korinthiyar  2:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!