Friday, May 27, 2016

1 Korinthiyar 12 | 1 கொரிந்தியர் 12 | 1 Corinthians 12

அன்றியும்,  சகோதரரே,  ஆவிக்குரிய  வரங்களைக்குறித்து  நீங்கள்  அறியாதிருக்க  எனக்கு  மனதில்லை.  (1கொரிந்தியர்  12:1)

an’riyum,  sagoathararea,  aavikkuriya  varangga'laikku’riththu  neengga'l  a’riyaathirukka  enakku  manathillai.  (1korinthiyar  12:1)

நீங்கள்  அஞ்ஞானிகளாயிருந்தபோது  ஏவப்பட்டபடியே,  ஊமையான  விக்கிரகங்களிடத்தில்  மனதைச்  செலுத்தினீர்களென்று  உங்களுக்குத்  தெரியுமே.  (1கொரிந்தியர்  12:2)

neengga'l  agngnaaniga'laayirunthapoathu  eavappattapadiyea,  oomaiyaana  vikkiragangga'lidaththil  manathaich  seluththineerga'len’ru  ungga'lukkuth  theriyumea.  (1korinthiyar  12:2)

ஆதலால்,  தேவனுடைய  ஆவியினாலே  பேசுகிற  எவனும்  இயேசுவைச்  சபிக்கப்பட்டவனென்று  சொல்லமாட்டானென்றும்,  பரிசுத்த  ஆவியினாலேயன்றி  இயேசுவைக்  கர்த்தரென்று  ஒருவனும்  சொல்லக்கூடாதென்றும்,  உங்களுக்குத்  தெரிவிக்கிறேன்.  (1கொரிந்தியர்  12:3)

aathalaal,  theavanudaiya  aaviyinaalea  peasugi’ra  evanum  iyeasuvaich  sabikkappattavanen’ru  sollamaattaanen’rum,  parisuththa  aaviyinaaleayan’ri  iyeasuvaik  karththaren’ru  oruvanum  sollakkoodaathen’rum,  ungga'lukkuth  therivikki’rean.  (1korinthiyar  12:3)

வரங்களில்  வித்தியாசங்கள்  உண்டு,  ஆவியானவர்  ஒருவரே.  (1கொரிந்தியர்  12:4)

varangga'lil  viththiyaasangga'l  u'ndu,  aaviyaanavar  oruvarea.  (1korinthiyar  12:4)

ஊழியங்களிலேயும்  வித்தியாசங்கள்  உண்டு,  கர்த்தர்  ஒருவரே.  (1கொரிந்தியர்  12:5)

oozhiyangga'lileayum  viththiyaasangga'l  u'ndu,  karththar  oruvarea.  (1korinthiyar  12:5)

கிரியைகளிலேயும்  வித்தியாசங்கள்  உண்டு,  எல்லாருக்குள்ளும்  எல்லாவற்றையும்  நடப்பிக்கிற  தேவன்  ஒருவரே.  (1கொரிந்தியர்  12:6)

kiriyaiga'lileayum  viththiyaasangga'l  u'ndu,  ellaarukku'l'lum  ellaavat’raiyum  nadappikki’ra  theavan  oruvarea.  (1korinthiyar  12:6)

ஆவியினுடைய  அநுக்கிரகம்  அவனவனுடைய  பிரயோஜனத்திற்கென்று  அளிக்கப்பட்டிருக்கிறது.  (1கொரிந்தியர்  12:7)

aaviyinudaiya  anukkiragam  avanavanudaiya  pirayoajanaththi’rken’ru  a'likkappattirukki’rathu.  (1korinthiyar  12:7)

எப்படியெனில்,  ஒருவனுக்கு  ஆவியினாலே  ஞானத்தைப்  போதிக்கும்  வசனமும்,  வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  அறிவை  உணர்த்தும்  வசனமும்,  (1கொரிந்தியர்  12:8)

eppadiyenil,  oruvanukku  aaviyinaalea  gnaanaththaip  poathikkum  vasanamum,  vea’roruvanukku  antha  aaviyinaaleayea  a’rivai  u'narththum  vasanamum,  (1korinthiyar  12:8)

வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  விசுவாசமும்,  வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  குணமாக்கும்  வரங்களும்,  (1கொரிந்தியர்  12:9)

vea’roruvanukku  antha  aaviyinaaleayea  visuvaasamum,  vea’roruvanukku  antha  aaviyinaaleayea  ku'namaakkum  varangga'lum,  (1korinthiyar  12:9)

வேறொருவனுக்கு  அற்புதங்களைச்  செய்யும்  சக்தியும்,  வேறொருவனுக்குத்  தீர்க்கதரிசனம்  உரைத்தலும்,  வேறொருவனுக்கு  ஆவிகளைப்  பகுத்தறிதலும்,  வேறொருவனுக்குப்  பற்பல  பாஷைகளைப்  பேசுதலும்,  வேறொருவனுக்குப்  பாஷைகளை  வியாக்கியானம்பண்ணுதலும்  அளிக்கப்படுகிறது.  (1கொரிந்தியர்  12:10)

vea’roruvanukku  a’rputhangga'laich  seyyum  sakthiyum,  vea’roruvanukkuth  theerkkatharisanam  uraiththalum,  vea’roruvanukku  aaviga'laip  paguththa’rithalum,  vea’roruvanukkup  pa’rpala  baashaiga'laip  peasuthalum,  vea’roruvanukkup  baashaiga'lai  viyaakkiyaanampa'n'nuthalum  a'likkappadugi’rathu.  (1korinthiyar  12:10)

இவைகளையெல்லாம்  அந்த  ஒரே  ஆவியானவர்  நடப்பித்து,  தமது  சித்தத்தின்படியே  அவனவனுக்குப்  பகிர்ந்துகொடுக்கிறார்.  (1கொரிந்தியர்  12:11)

ivaiga'laiyellaam  antha  orea  aaviyaanavar  nadappiththu,  thamathu  siththaththinpadiyea  avanavanukkup  pagirnthukodukki’raar.  (1korinthiyar  12:11)

எப்படியெனில்,  சரீரம்  ஒன்று,  அதற்கு  அவயவங்கள்  அநேகம்;  ஒரே  சரீரத்தின்  அவயவங்களெல்லாம்  அநேகமாயிருந்தும்,  சரீரம்  ஒன்றாகவேயிருக்கிறது;  அந்தப்பிரகாரமாகக்  கிறிஸ்துவும்  இருக்கிறார்.  (1கொரிந்தியர்  12:12)

eppadiyenil,  sareeram  on’ru,  atha’rku  avayavangga'l  aneagam;  orea  sareeraththin  avayavangga'lellaam  aneagamaayirunthum,  sareeram  on’raagaveayirukki’rathu;  anthappiragaaramaagak  ki’risthuvum  irukki’raar.  (1korinthiyar  12:12)

நாம்  யூதராயினும்,  கிரேக்கராயினும்,  அடிமைகளாயினும்,  சுயாதீனராயினும்,  எல்லாரும்  ஒரே  ஆவியினாலே  ஒரே  சரீரத்திற்குள்ளாக  ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,  எல்லாரும்  ஒரே  ஆவிக்குள்ளாகவே  தாகந்தீர்க்கப்பட்டோம்.  (1கொரிந்தியர்  12:13)

naam  yootharaayinum,  kireakkaraayinum,  adimaiga'laayinum,  suyaatheenaraayinum,  ellaarum  orea  aaviyinaalea  orea  sareeraththi’rku'l'laaga  gnaanasnaanampa'n'nappattu,  ellaarum  orea  aavikku'l'laagavea  thaagantheerkkappattoam.  (1korinthiyar  12:13)

சரீரமும்  ஒரே  அவயவமாயிராமல்  அநேக  அவயவங்களாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  12:14)

sareeramum  orea  avayavamaayiraamal  aneaga  avayavangga'laayirukki’rathu.  (1korinthiyar  12:14)

காலானது  நான்  கையாயிராதபடியினாலே,  நான்  சரீரத்தின்  அவயவமல்லவென்றால்,  அதினாலே  அது  சரீரத்தின்  அவயவமாயிராதோ?  (1கொரிந்தியர்  12:15)

kaalaanathu  naan  kaiyaayiraathapadiyinaalea,  naan  sareeraththin  avayavamallaven’raal,  athinaalea  athu  sareeraththin  avayavamaayiraathoa?  (1korinthiyar  12:15)

காதானது  நான்  கண்ணாயிராதபடியினாலே,  நான்  சரீரத்தின்  அவயவமல்லவென்றால்,  அதினாலே  அது  சரீரத்தின்  அவயவமாயிராதோ?  (1கொரிந்தியர்  12:16)

kaathaanathu  naan  ka'n'naayiraathapadiyinaalea,  naan  sareeraththin  avayavamallaven’raal,  athinaalea  athu  sareeraththin  avayavamaayiraathoa?  (1korinthiyar  12:16)

சரீரம்  முழுவதும்  கண்ணானால்,  செவி  எங்கே?  அது  முழுவதும்  செவியானால்,  மோப்பம்  எங்கே?  (1கொரிந்தியர்  12:17)

sareeram  muzhuvathum  ka'n'naanaal,  sevi  enggea?  athu  muzhuvathum  seviyaanaal,  moappam  enggea?  (1korinthiyar  12:17)

தேவன்  தமது  சித்தத்தின்படி,  அவயவங்கள்  ஒவ்வொன்றையும்  சரீரத்திலே  வைத்தார்.  (1கொரிந்தியர்  12:18)

theavan  thamathu  siththaththinpadi,  avayavangga'l  ovvon’raiyum  sareeraththilea  vaiththaar.  (1korinthiyar  12:18)

அவையெல்லாம்  ஒரே  அவயவமாயிருந்தால்,  சரீரம்  எங்கே?  (1கொரிந்தியர்  12:19)

avaiyellaam  orea  avayavamaayirunthaal,  sareeram  enggea?  (1korinthiyar  12:19)

அவயவங்கள்  அநேகமாயிருந்தும்,  சரீரம்  ஒன்றே.  (1கொரிந்தியர்  12:20)

avayavangga'l  aneagamaayirunthum,  sareeram  on’rea.  (1korinthiyar  12:20)

கண்ணானது  கையைப்பார்த்து:  நீ  எனக்கு  வேண்டுவதில்லையென்றும்;  தலையானது  கால்களை  நோக்கி:  நீங்கள்  எனக்கு  வேண்டுவதில்லையென்றும்  சொல்லக்கூடாது.  (1கொரிந்தியர்  12:21)

ka'n'naanathu  kaiyaippaarththu:  nee  enakku  vea'nduvathillaiyen’rum;  thalaiyaanathu  kaalga'lai  noakki:  neengga'l  enakku  vea'nduvathillaiyen’rum  sollakkoodaathu.  (1korinthiyar  12:21)

சரீர  அவயவங்களில்  பலவீனமுள்ளவைகளாய்க்  காணப்படுகிறவைகளே  மிகவும்  வேண்டியவைகளாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  12:22)

sareera  avayavangga'lil  balaveenamu'l'lavaiga'laayk  kaa'nappadugi’ravaiga'lea  migavum  vea'ndiyavaiga'laayirukki’rathu.  (1korinthiyar  12:22)

மேலும்,  சரீர  அவயவங்களில்  கனவீனமாய்க்  காணப்படுகிறவைகளுக்கே  அதிக  கனத்தைக்  கொடுக்கிறோம்;  நம்மில்  இலட்சணமில்லாதவைகளே  அதிக  அலங்காரம்  பெறும்;  (1கொரிந்தியர்  12:23)

mealum,  sareera  avayavangga'lil  kanaveenamaayk  kaa'nappadugi’ravaiga'lukkea  athiga  kanaththaik  kodukki’roam;  nammil  iladcha'namillaathavaiga'lea  athiga  alanggaaram  pe’rum;  (1korinthiyar  12:23)

நம்மில்  இலட்சணமுள்ளவைகளுக்கு  அலங்கரிப்பு  வேண்டியதில்லை.  (1கொரிந்தியர்  12:24)

nammil  iladcha'namu'l'lavaiga'lukku  alanggarippu  vea'ndiyathillai.  (1korinthiyar  12:24)

சரீரத்திலே  பிரிவினையுண்டாயிராமல்,  அவயவங்கள்  ஒன்றைக்குறித்து  ஒன்று  கவலையாயிருக்கும்படிக்கு,  தேவன்  கனத்தில்  குறைவுள்ளதற்கு  அதிக  கனத்தைக்  கொடுத்து,  இப்படிச்  சரீரத்தை  அமைத்திருக்கிறார்.  (1கொரிந்தியர்  12:25)

sareeraththilea  pirivinaiyu'ndaayiraamal,  avayavangga'l  on’raikku’riththu  on’ru  kavalaiyaayirukkumpadikku,  theavan  kanaththil  ku’raivu'l'latha’rku  athiga  kanaththaik  koduththu,  ippadich  sareeraththai  amaiththirukki’raar.  (1korinthiyar  12:25)

ஆதலால்  ஒரு  அவயவம்  பாடுபட்டால்  எல்லா  அவயவங்களும்  கூடப்  பாடுபடும்;  ஒரு  அவயவம்  மகிமைப்பட்டால்  எல்லா  அவயவங்களும்  கூடச்  சந்தோஷப்படும்.  (1கொரிந்தியர்  12:26)

aathalaal  oru  avayavam  paadupattaal  ellaa  avayavangga'lum  koodap  paadupadum;  oru  avayavam  magimaippattaal  ellaa  avayavangga'lum  koodach  santhoashappadum.  (1korinthiyar  12:26)

நீங்களே  கிறிஸ்துவின்  சரீரமாயும்,  தனித்தனியே  அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  12:27)

neengga'lea  ki’risthuvin  sareeramaayum,  thaniththaniyea  avayavangga'laayumirukki’reerga'l.  (1korinthiyar  12:27)

தேவனானவர்  சபையிலே  முதலாவது  அப்போஸ்தலரையும்,  இரண்டாவது  தீர்க்கதரிசிகளையும்,  மூன்றாவது  போதகர்களையும்,  பின்பு  அற்புதங்களையும்,  பின்பு  குணமாக்கும்  வரங்களையும்,  ஊழியங்களையும்,  ஆளுகைகளையும்,  பலவித  பாஷைகளையும்  ஏற்படுத்தினார்.  (1கொரிந்தியர்  12:28)

theavanaanavar  sabaiyilea  muthalaavathu  appoasthalaraiyum,  ira'ndaavathu  theerkkatharisiga'laiyum,  moon’raavathu  poathagarga'laiyum,  pinbu  a’rputhangga'laiyum,  pinbu  ku'namaakkum  varangga'laiyum,  oozhiyangga'laiyum,  aa'lugaiga'laiyum,  palavitha  baashaiga'laiyum  ea’rpaduththinaar.  (1korinthiyar  12:28)

எல்லாரும்  அப்போஸ்தலர்களா?  எல்லாரும்  தீர்க்கதரிசிகளா?  எல்லாரும்  போதகர்களா?  எல்லாரும்  அற்புதங்களைச்  செய்கிறவர்களா?  (1கொரிந்தியர்  12:29)

ellaarum  appoasthalarga'laa?  ellaarum  theerkkatharisiga'laa?  ellaarum  poathagarga'laa?  ellaarum  a’rputhangga'laich  seygi’ravarga'laa?  (1korinthiyar  12:29)

எல்லாரும்  குணமாக்கும்  வரங்களுடையவர்களா?  எல்லாரும்  அந்நியபாஷைகளைப்  பேசுகிறார்களா?  எல்லாரும்  வியாக்கியானம்  பண்ணுகிறார்களா?  (1கொரிந்தியர்  12:30)

ellaarum  ku'namaakkum  varangga'ludaiyavarga'laa?  ellaarum  anniyabaashaiga'laip  peasugi’raarga'laa?  ellaarum  viyaakkiyaanam  pa'n'nugi’raarga'laa?  (1korinthiyar  12:30)

இப்படியிருக்க,  முக்கியமான  வரங்களை  நாடுங்கள்;  இன்னும்  அதிக  மேன்மையான  வழியையும்  உங்களுக்குக்  காண்பிக்கிறேன்.  (1கொரிந்தியர்  12:31)

ippadiyirukka,  mukkiyamaana  varangga'lai  naadungga'l;  innum  athiga  meanmaiyaana  vazhiyaiyum  ungga'lukkuk  kaa'nbikki’rean.  (1korinthiyar  12:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!