Friday, May 27, 2016

1 Korinthiyar 11 | 1 கொரிந்தியர் 11 | 1 Corinthians 11

நான்  கிறிஸ்துவைப்  பின்பற்றுகிறதுபோல,  நீங்கள்  என்னைப்  பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.  (1கொரிந்தியர்  11:1)

naan  ki’risthuvaip  pinpat’rugi’rathupoala,  neengga'l  ennaip  pinpat’rugi’ravarga'laayirungga'l.  (1korinthiyar  11:1)

சகோதரரே,  நீங்கள்  எல்லாவற்றிலும்  என்னை  நினைத்துக்கொண்டு,  நான்  உங்களுக்கு  ஒப்புவித்தபடி  நீங்கள்  கட்டளைகளைக்  கைக்கொண்டு  வருகிறதினிமித்தம்  உங்களைப்  புகழுகிறேன்.  (1கொரிந்தியர்  11:2)

sagoathararea,  neengga'l  ellaavat’rilum  ennai  ninaiththukko'ndu,  naan  ungga'lukku  oppuviththapadi  neengga'l  katta'laiga'laik  kaikko'ndu  varugi’rathinimiththam  ungga'laip  pugazhugi’rean.  (1korinthiyar  11:2)

ஒவ்வொரு  புருஷனுக்கும்  கிறிஸ்து  தலையாயிருக்கிறாரென்றும்,  ஸ்திரீக்குப்  புருஷன்  தலையாயிருக்கிறானென்றும்,  கிறிஸ்துவுக்குத்  தேவன்  தலையாயிருக்கிறாரென்றும்,  நீங்கள்  அறியவேண்டுமென்று  விரும்புகிறேன்.  (1கொரிந்தியர்  11:3)

ovvoru  purushanukkum  ki’risthu  thalaiyaayirukki’raaren’rum,  sthireekkup  purushan  thalaiyaayirukki’raanen’rum,  ki’risthuvukkuth  theavan  thalaiyaayirukki’raaren’rum,  neengga'l  a’riyavea'ndumen’ru  virumbugi’rean.  (1korinthiyar  11:3)

ஜெபம்பண்ணுகிறபோதாவது,  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறபோதாவது,  தன்  தலையை  மூடிக்கொண்டிருக்கிற  எந்தப்  புருஷனும்  தன்  தலையைக்  கனவீனப்படுத்துகிறான்.  (1கொரிந்தியர்  11:4)

jebampa'n'nugi’rapoathaavathu,  theerkkatharisanagn  sollugi’rapoathaavathu,  than  thalaiyai  moodikko'ndirukki’ra  enthap  purushanum  than  thalaiyaik  kanaveenappaduththugi’raan.  (1korinthiyar  11:4)

ஜெபம்பண்ணுகிறபோதாவது,  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறபோதாவது,  தன்  தலையை  மூடிக்கொள்ளாதிருக்கிற  எந்த  ஸ்திரீயும்  தன்  தலையைக்  கனவீனப்படுத்துகிறாள்;  அது  அவளுக்குத்  தலை  சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.  (1கொரிந்தியர்  11:5)

jebampa'n'nugi’rapoathaavathu,  theerkkatharisanagn  sollugi’rapoathaavathu,  than  thalaiyai  moodikko'l'laathirukki’ra  entha  sthireeyum  than  thalaiyaik  kanaveenappaduththugi’raa'l;  athu  ava'lukkuth  thalai  siraikkappattathupoalirukkumea.  (1korinthiyar  11:5)

ஸ்திரீயானவள்  முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால்  தலைமயிரையும்  கத்தரித்துப்போடக்கடவள்;  தலைமயிர்  கத்தரிக்கப்படுகிறதும்  சிரைக்கப்படுகிறதும்  ஸ்திரீக்கு  வெட்கமானால்  முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.  (1கொரிந்தியர்  11:6)

sthireeyaanava'l  mukkaadittukko'l'laavittaal  thalaimayiraiyum  kaththariththuppoadakkadava'l;  thalaimayir  kaththarikkappadugi’rathum  siraikkappadugi’rathum  sthireekku  vedkamaanaal  mukkaadittukko'ndirukkakkadava'l.  (1korinthiyar  11:6)

புருஷனானவன்  தேவனுடைய  சாயலும்  மகிமையுமாயிருக்கிறபடியால்,  தன்  தலையை  மூடிக்கொள்ளவேண்டுவதில்லை;  ஸ்திரீயானவள்  புருஷனுடைய  மகிமையாயிருக்கிறாள்.  (1கொரிந்தியர்  11:7)

purushanaanavan  theavanudaiya  saayalum  magimaiyumaayirukki’rapadiyaal,  than  thalaiyai  moodikko'l'lavea'nduvathillai;  sthireeyaanava'l  purushanudaiya  magimaiyaayirukki’raa'l.  (1korinthiyar  11:7)

புருஷன்  ஸ்திரீயிலிருந்து  தோன்றினவனல்ல,  ஸ்திரீயே  புருஷனிலிருந்து  தோன்றினவள்.  (1கொரிந்தியர்  11:8)

purushan  sthireeyilirunthu  thoan’rinavanalla,  sthireeyea  purushanilirunthu  thoan’rinava'l.  (1korinthiyar  11:8)

புருஷன்  ஸ்திரீக்காகச்  சிருஷ்டிக்கப்பட்டவனல்ல,  ஸ்திரீயே  புருஷனுக்காகச்  சிருஷ்டிக்கப்பட்டவள்.  (1கொரிந்தியர்  11:9)

purushan  sthireekkaagach  sirushdikkappattavanalla,  sthireeyea  purushanukkaagach  sirushdikkappattava'l.  (1korinthiyar  11:9)

ஆகையால்  தூதர்களினிமித்தம்  ஸ்திரீயானவள்  தலையின்மேல்  முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.  (1கொரிந்தியர்  11:10)

aagaiyaal  thootharga'linimiththam  sthireeyaanava'l  thalaiyinmeal  mukkaadittukko'l'lavea'ndum.  (1korinthiyar  11:10)

ஆகிலும்  கர்த்தருக்குள்  ஸ்திரீயில்லாமல்  புருஷனுமில்லை,  புருஷனில்லாமல்  ஸ்திரீயுமில்லை.  (1கொரிந்தியர்  11:11)

aagilum  karththarukku'l  sthireeyillaamal  purushanumillai,  purushanillaamal  sthireeyumillai.  (1korinthiyar  11:11)

ஸ்திரீயானவள்  புருஷனிலிருந்து  தோன்றுகிறதுபோல,  புருஷனும்  ஸ்திரீயினால்  தோன்றுகிறான்;  சகலமும்  தேவனால்  உண்டாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  11:12)

sthireeyaanava'l  purushanilirunthu  thoan’rugi’rathupoala,  purushanum  sthireeyinaal  thoan’rugi’raan;  sagalamum  theavanaal  u'ndaayirukki’rathu.  (1korinthiyar  11:12)

ஸ்திரீயானவள்  தேவனை  நோக்கி  ஜெபம்பண்ணுகையில்,  தன்  தலையை  மூடிக்கொள்ளாமலிருக்கிறது  இலட்சணமாயிருக்குமோ  என்று  உங்களுக்குள்ளே  நிதானித்துக்கொள்ளுங்கள்.  (1கொரிந்தியர்  11:13)

sthireeyaanava'l  theavanai  noakki  jebampa'n'nugaiyil,  than  thalaiyai  moodikko'l'laamalirukki’rathu  iladcha'namaayirukkumoa  en’ru  ungga'lukku'l'lea  nithaaniththukko'l'lungga'l.  (1korinthiyar  11:13)

புருஷன்  மயிரை  நீளமாய்  வளர்க்கிறது  அவனுக்கு  கனவீனமாயிருக்கிறதென்றும்,  (1கொரிந்தியர்  11:14)

purushan  mayirai  nee'lamaay  va'larkki’rathu  avanukku  kanaveenamaayirukki’rathen’rum,  (1korinthiyar  11:14)

ஸ்திரீ  தன்  மயிரை  நீளமாய்  வளர்க்கிறது  அவளுக்கு  மகிமையாயிருக்கிறதென்றும்  சுபாவமே  உங்களுக்குப்  போதிக்கிறதில்லையா?  தலைமயிர்  அவளுக்கு  முக்காடாகக்  கொடுக்கப்பட்டிருக்கிறதே.  (1கொரிந்தியர்  11:15)

sthiree  than  mayirai  nee'lamaay  va'larkki’rathu  ava'lukku  magimaiyaayirukki’rathen’rum  subaavamea  ungga'lukkup  poathikki’rathillaiyaa?  thalaimayir  ava'lukku  mukkaadaagak  kodukkappattirukki’rathea.  (1korinthiyar  11:15)

ஆகிலும்  ஒருவன்  வாக்குவாதஞ்செய்ய  மனதாயிருந்தால்,  எங்களுக்கும்,  தேவனுடைய  சபைகளுக்கும்,  அப்படிப்பட்ட  வழக்கமில்லையென்று  அறியக்கடவன்.  (1கொரிந்தியர்  11:16)

aagilum  oruvan  vaakkuvaathagnseyya  manathaayirunthaal,  engga'lukkum,  theavanudaiya  sabaiga'lukkum,  appadippatta  vazhakkamillaiyen’ru  a’riyakkadavan.  (1korinthiyar  11:16)

உங்களைப்  புகழாமல்  இதைக்குறித்து  உங்களுக்குக்  கட்டளைகொடுக்கிறேன்;  நீங்கள்  கூடிவருதல்  நன்மைக்கேதுவாயிராமல்,  தீமைக்கேதுவாயிருக்கிறதே.  (1கொரிந்தியர்  11:17)

ungga'laip  pugazhaamal  ithaikku’riththu  ungga'lukkuk  katta'laikodukki’rean;  neengga'l  koodivaruthal  nanmaikkeathuvaayiraamal,  theemaikkeathuvaayirukki’rathea.  (1korinthiyar  11:17)

முதலாவது,  நீங்கள்  சபையிலே  கூடிவந்திருக்கும்போது,  உங்களில்  பிரிவினைகள்  உண்டென்று  கேள்விப்படுகிறேன்;  அதில்  சிலவற்றை  நம்புகிறேன்.  (1கொரிந்தியர்  11:18)

muthalaavathu,  neengga'l  sabaiyilea  koodivanthirukkumpoathu,  ungga'lil  pirivinaiga'l  u'nden’ru  kea'lvippadugi’rean;  athil  silavat’rai  nambugi’rean.  (1korinthiyar  11:18)

உங்களில்  உத்தமர்கள்  இன்னாரென்று  வெளியாகும்படிக்கு  மார்க்கபேதங்களும்  உங்களுக்குள்ளே  உண்டாயிருக்கவேண்டியதே.  (1கொரிந்தியர்  11:19)

ungga'lil  uththamarga'l  innaaren’ru  ve'liyaagumpadikku  maarkkabeathangga'lum  ungga'lukku'l'lea  u'ndaayirukkavea'ndiyathea.  (1korinthiyar  11:19)

நீங்கள்  ஓரிடத்தில்  கூடிவரும்போது,  அவனவன்  தன்தன்  சொந்த  போஜனத்தை  முந்திச்  சாப்பிடுகிறான்;  ஒருவன்  பசியாயிருக்கிறான்,  ஒருவன்  வெறியாயிருக்கிறான்.  (1கொரிந்தியர்  11:20)

neengga'l  oaridaththil  koodivarumpoathu,  avanavan  thanthan  sontha  poajanaththai  munthich  saappidugi’raan;  oruvan  pasiyaayirukki’raan,  oruvan  ve’riyaayirukki’raan.  (1korinthiyar  11:20)

இப்படிச்  செய்கிறது  கர்த்தருடைய  இராப்போஜனம்பண்ணுதலல்லவே.  (1கொரிந்தியர்  11:21)

ippadich  seygi’rathu  karththarudaiya  iraappoajanampa'n'nuthalallavea.  (1korinthiyar  11:21)

புசிக்கிறதற்கும்  குடிக்கிறதற்கும்  உங்களுக்கு  வீடுகள்  இல்லையா?  தேவனுடைய  சபையை  அசட்டைபண்ணி,  இல்லாதவர்களை  வெட்கப்படுத்துகிறீர்களா?  உங்களுக்கு  நான்  என்னசொல்லுவேன்?  இதைக்குறித்து  உங்களைப்  புகழ்வேனோ?  புகழேன்.  (1கொரிந்தியர்  11:22)

pusikki’ratha’rkum  kudikki’ratha’rkum  ungga'lukku  veeduga'l  illaiyaa?  theavanudaiya  sabaiyai  asattaipa'n'ni,  illaathavarga'lai  vedkappaduththugi’reerga'laa?  ungga'lukku  naan  ennasolluvean?  ithaikku’riththu  ungga'laip  pugazhveanoa?  pugazhean.  (1korinthiyar  11:22)

நான்  உங்களுக்கு  ஒப்புவித்ததைக்  கர்த்தரிடத்தில்  பெற்றுக்கொண்டேன்;  என்னவெனில்,  கர்த்தராகிய  இயேசு  தாம்  காட்டிக்கொடுக்கப்பட்ட  அன்று  இராத்திரியிலே  அப்பத்தை  எடுத்து,  (1கொரிந்தியர்  11:23)

naan  ungga'lukku  oppuviththathaik  karththaridaththil  pet’rukko'ndean;  ennavenil,  karththaraagiya  iyeasu  thaam  kaattikkodukkappatta  an’ru  iraaththiriyilea  appaththai  eduththu,  (1korinthiyar  11:23)

ஸ்தோத்திரம்பண்ணி,  அதைப்  பிட்டு:  நீங்கள்  வாங்கிப்  புசியுங்கள்,  இது  உங்களுக்காகப்  பிட்கப்படுகிற  என்னுடைய  சரீரமாயிருக்கிறது;  என்னை  நினைவுகூரும்படி  இதைச்  செய்யுங்கள்  என்றார்.  (1கொரிந்தியர்  11:24)

sthoaththirampa'n'ni,  athaip  pittu:  neengga'l  vaanggip  pusiyungga'l,  ithu  ungga'lukkaagap  pidkappadugi’ra  ennudaiya  sareeramaayirukki’rathu;  ennai  ninaivukoorumpadi  ithaich  seyyungga'l  en’raar.  (1korinthiyar  11:24)

போஜனம்பண்ணினபின்பு,  அவர்  அந்தப்படியே  பாத்திரத்தையும்  எடுத்து:  இந்தப்  பாத்திரம்  என்  இரத்தத்தினாலாகிய  புதிய  உடன்படிக்கையாயிருக்கிறது;  நீங்கள்  இதைப்  பானம்பண்ணும்போதெல்லாம்  என்னை  நினைவுகூரும்படி  இதைச்  செய்யுங்கள்  என்றார்.  (1கொரிந்தியர்  11:25)

poajanampa'n'ninapinbu,  avar  anthappadiyea  paaththiraththaiyum  eduththu:  inthap  paaththiram  en  iraththaththinaalaagiya  puthiya  udanpadikkaiyaayirukki’rathu;  neengga'l  ithaip  baanampa'n'numpoathellaam  ennai  ninaivukoorumpadi  ithaich  seyyungga'l  en’raar.  (1korinthiyar  11:25)

ஆகையால்  நீங்கள்  இந்த  அப்பத்தைப்  புசித்து,  இந்தப்  பாத்திரத்தில்  பானம்பண்ணும்போதெல்லாம்  கர்த்தர்  வருமளவும்  அவருடைய  மரணத்தைத்  தெரிவிக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  11:26)

aagaiyaal  neengga'l  intha  appaththaip  pusiththu,  inthap  paaththiraththil  baanampa'n'numpoathellaam  karththar  varuma'lavum  avarudaiya  mara'naththaith  therivikki’reerga'l.  (1korinthiyar  11:26)

இப்படியிருக்க,  எவன்  அபாத்திரமாய்க்  கர்த்தருடைய  அப்பத்தைப்  புசித்து,  அவருடைய  பாத்திரத்தில்  பானம்பண்ணுகிறானோ,  அவன்  கர்த்தருடைய  சரீரத்தையும்  இரத்தத்தையும்  குறித்துக்  குற்றமுள்ளவனாயிருப்பான்.  (1கொரிந்தியர்  11:27)

ippadiyirukka,  evan  abaaththiramaayk  karththarudaiya  appaththaip  pusiththu,  avarudaiya  paaththiraththil  baanampa'n'nugi’raanoa,  avan  karththarudaiya  sareeraththaiyum  iraththaththaiyum  ku’riththuk  kut’ramu'l'lavanaayiruppaan.  (1korinthiyar  11:27)

எந்த  மனுஷனும்  தன்னைத்தானே  சோதித்தறிந்து,  இந்த  அப்பத்தில்  புசித்து,  இந்தப்  பாத்திரத்தில்  பானம்பண்ணக்கடவன்.  (1கொரிந்தியர்  11:28)

entha  manushanum  thannaiththaanea  soathiththa’rinthu,  intha  appaththil  pusiththu,  inthap  paaththiraththil  baanampa'n'nakkadavan.  (1korinthiyar  11:28)

என்னத்தினாலெனில்,  அபாத்திரமாய்ப்  போஜனபானம்பண்ணுகிறவன்,  கர்த்தருடைய  சரீரம்  இன்னதென்று  நிதானித்து  அறியாததினால்,  தனக்கு  ஆக்கினைத்தீர்ப்பு  வரும்படி  போஜனபானம்பண்ணுகிறான்.  (1கொரிந்தியர்  11:29)

ennaththinaalenil,  abaaththiramaayp  poajanabaanampa'n'nugi’ravan,  karththarudaiya  sareeram  innathen’ru  nithaaniththu  a’riyaathathinaal,  thanakku  aakkinaiththeerppu  varumpadi  poajanabaanampa'n'nugi’raan.  (1korinthiyar  11:29)

இதினிமித்தம்,  உங்களில்  அநேகர்  பலவீனரும்  வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்;  அநேகர்  நித்திரையும்  அடைந்திருக்கிறார்கள்.  (1கொரிந்தியர்  11:30)

ithinimiththam,  ungga'lil  aneagar  balaveenarum  viyaathiyu'l'lavarga'lumaayirukki’raarga'l;  aneagar  niththiraiyum  adainthirukki’raarga'l.  (1korinthiyar  11:30)

நம்மை  நாமே  நிதானித்து  அறிந்தால்  நாம்  நியாயந்தீர்க்கப்படோம்.  (1கொரிந்தியர்  11:31)

nammai  naamea  nithaaniththu  a’rinthaal  naam  niyaayantheerkkappadoam.  (1korinthiyar  11:31)

நாம்  நியாயந்தீர்க்கப்படும்போது  உலகத்தோடே  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதபடிக்கு,  கர்த்தராலே  சிட்சிக்கப்படுகிறோம்.  (1கொரிந்தியர்  11:32)

naam  niyaayantheerkkappadumpoathu  ulagaththoadea  aakkinaikku'l'laagath  theerkkappadaathapadikku,  karththaraalea  sidchikkappadugi’roam.  (1korinthiyar  11:32)

ஆகையால்,  என்  சகோதரரே,  நீங்கள்  போஜனம்பண்ணக்  கூடிவரும்போது,  ஒருவருக்காக  ஒருவர்  காத்திருங்கள்.  (1கொரிந்தியர்  11:33)

aagaiyaal,  en  sagoathararea,  neengga'l  poajanampa'n'nak  koodivarumpoathu,  oruvarukkaaga  oruvar  kaaththirungga'l.  (1korinthiyar  11:33)

நீங்கள்  ஆக்கினைக்கேதுவாகக்  கூடிவராதபடிக்கு,  ஒருவனுக்குப்  பசியிருந்தால்  வீட்டிலே  சாப்பிடக்கடவன்.  மற்றக்  காரியங்களை  நான்  வரும்போது  திட்டம்பண்ணுவேன்.  (1கொரிந்தியர்  11:34)

neengga'l  aakkinaikkeathuvaagak  koodivaraathapadikku,  oruvanukkup  pasiyirunthaal  veettilea  saappidakkadavan.  mat’rak  kaariyangga'lai  naan  varumpoathu  thittampa'n'nuvean.  (1korinthiyar  11:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!