Thursday, May 26, 2016

1 Korinthiyar 1 | 1 கொரிந்தியர் 1 | 1 Corinthians 1

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவின்  அப்போஸ்தலனாகும்படி  அழைக்கப்பட்டவனாகிய  பவுலும்,  சகோதரனாகிய  சொஸ்தெனேயும்,  (1கொரிந்தியர்  1:1)

theavanudaiya  siththaththinaalea  iyeasuki’risthuvin  appoasthalanaagumpadi  azhaikkappattavanaagiya  pavulum,  sagoatharanaagiya  sostheneayum,  (1korinthiyar  1:1)

கொரிந்துவிலே  கிறிஸ்து  இயேசுவுக்குள்  பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும்,  பரிசுத்தவான்களாகும்படி  அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற  தேவனுடைய  சபைக்கும்,  எங்களுக்கும்  தங்களுக்கும்  ஆண்டவராயிருக்கிற  நம்முடைய  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்  நாமத்தை  எங்கும்  தொழுதுகொள்ளுகிற  அனைவருக்கும்  எழுதுகிறதாவது:  (1கொரிந்தியர்  1:2)

korinthuvilea  ki’risthu  iyeasuvukku'l  parisuththamaakkappattavarga'laayum,  parisuththavaanga'laagumpadi  azhaikkappattavarga'laayumirukki’ra  theavanudaiya  sabaikkum,  engga'lukkum  thangga'lukkum  aa'ndavaraayirukki’ra  nammudaiya  karththaraagiya  iyeasu  ki’risthuvin  naamaththai  enggum  thozhuthuko'l'lugi’ra  anaivarukkum  ezhuthugi’rathaavathu:  (1korinthiyar  1:2)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (1கொரிந்தியர்  1:3)

nammudaiya  pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (1korinthiyar  1:3)

கிறிஸ்துவைப்பற்றிய  சாட்சி  உங்களுக்குள்ளே  ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,  (1கொரிந்தியர்  1:4)

ki’risthuvaippat’riya  saadchi  ungga'lukku'l'lea  sthirappaduththappattapadiyea,  (1korinthiyar  1:4)

நீங்கள்  இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய்  எல்லா  உபதேசத்திலும்  எல்லா  அறிவிலும்,  மற்றெல்லாவற்றிலும்,  சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,  (1கொரிந்தியர்  1:5)

neengga'l  iyeasuki’risthuvukku'l'laay  ellaa  ubatheasaththilum  ellaa  a’rivilum,  mat’rellaavat’rilum,  sampoora'namu'l'lavarga'laakkappattirukki’rapadiyaal,  (1korinthiyar  1:5)

அவர்  மூலமாய்  உங்களுக்கு  அளிக்கப்பட்ட  தேவகிருபைக்காக,  நான்  உங்களைக்குறித்து  எப்பொழுதும்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (1கொரிந்தியர்  1:6)

avar  moolamaay  ungga'lukku  a'likkappatta  theavakirubaikkaaga,  naan  ungga'laikku’riththu  eppozhuthum  en  theavanai  sthoaththirikki’rean.  (1korinthiyar  1:6)

அப்படியே  நீங்கள்  யாதொரு  வரத்திலும்  குறைவில்லாதவர்களாய்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  வெளிப்படுவதற்குக்  காத்திருக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  1:7)

appadiyea  neengga'l  yaathoru  varaththilum  ku’raivillaathavarga'laay,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthu  ve'lippaduvatha’rkuk  kaaththirukki’reerga'l.  (1korinthiyar  1:7)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்  நாளிலே  நீங்கள்  குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி  முடிவுபரியந்தம்  அவர்  உங்களை  ஸ்திரப்படுத்துவார்.  (1கொரிந்தியர்  1:8)

nammudaiya  karththaraagiya  iyeasu  ki’risthuvin  naa'lilea  neengga'l  kut’ragnsaattappadaathavarga'laayirukkumpadi  mudivupariyantham  avar  ungga'lai  sthirappaduththuvaar.  (1korinthiyar  1:8)

தம்முடைய  குமாரனும்  நம்முடைய  கர்த்தருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவுடனே  ஐக்கியமாயிருப்பதற்கு  உங்களை  அழைத்த  தேவன்  உண்மையுள்ளவர்.  (1கொரிந்தியர்  1:9)

thammudaiya  kumaaranum  nammudaiya  karththarumaayirukki’ra  iyeasuki’risthuvudanea  aikkiyamaayiruppatha’rku  ungga'lai  azhaiththa  theavan  u'nmaiyu'l'lavar.  (1korinthiyar  1:9)

சகோதரரே,  நீங்களெல்லாரும்  ஒரே  காரியத்தைப்  பேசவும்,  பிரிவினைகளில்லாமல்  ஏகமனதும்  ஏகயோசனையும்  உள்ளவர்களாய்ச்  சீர்பொருந்தியிருக்கவும்  வேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  1:10)

sagoathararea,  neengga'lellaarum  orea  kaariyaththaip  peasavum,  pirivinaiga'lillaamal  eagamanathum  eagayoasanaiyum  u'l'lavarga'laaych  seerporunthiyirukkavum  vea'ndumen’ru,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  naamaththinaalea  ungga'lukkup  buththisollugi’rean.  (1korinthiyar  1:10)

ஏனெனில்,  என்  சகோதரரே,  உங்களுக்குள்ளே  வாக்குவாதங்கள்  உண்டென்று  குலோவேயாளின்  வீட்டாரால்  உங்களைக்குறித்து  எனக்கு  அறிவிக்கப்பட்டது.  (1கொரிந்தியர்  1:11)

eanenil,  en  sagoathararea,  ungga'lukku'l'lea  vaakkuvaathangga'l  u'nden’ru  kuloaveayaa'lin  veettaaraal  ungga'laikku’riththu  enakku  a’rivikkappattathu.  (1korinthiyar  1:11)

உங்களில்  சிலர்:  நான்  பவுலைச்  சேர்ந்தவனென்றும்,  நான்  அப்பொல்லோவைச்  சேர்ந்தவனென்றும்,  நான்  கேபாவைச்  சேர்ந்தவனென்றும்,  நான்  கிறிஸ்துவைச்  சேர்ந்தவனென்றும்  சொல்லுகிறபடியால்,  நான்  இப்படிச்  சொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  1:12)

ungga'lil  silar:  naan  pavulaich  searnthavanen’rum,  naan  appolloavaich  searnthavanen’rum,  naan  keapaavaich  searnthavanen’rum,  naan  ki’risthuvaich  searnthavanen’rum  sollugi’rapadiyaal,  naan  ippadich  sollugi’rean.  (1korinthiyar  1:12)

கிறிஸ்து  பிரிந்திருக்கிறாரா?  பவுலா  உங்களுக்காகச்  சிலுவையிலறையப்பட்டான்?  பவுலின்  நாமத்தினாலேயா  ஞானஸ்நானம்  பெற்றீர்கள்?  (1கொரிந்தியர்  1:13)

ki’risthu  pirinthirukki’raaraa?  pavulaa  ungga'lukkaagach  siluvaiyila’raiyappattaan?  pavulin  naamaththinaaleayaa  gnaanasnaanam  pet’reerga'l?  (1korinthiyar  1:13)

என்  நாமத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தேனென்று  ஒருவனும்  சொல்லாதபடிக்கு,  (1கொரிந்தியர்  1:14)

en  naamaththinaalea  gnaanasnaanang  koduththeanen’ru  oruvanum  sollaathapadikku,  (1korinthiyar  1:14)

நான்  கிறிஸ்புவுக்கும்  காயுவுக்குமேயன்றி,  உங்களில்  வேறொருவனுக்கும்  ஞானஸ்நானங்  கொடுக்கவில்லை;  இதற்காகத்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (1கொரிந்தியர்  1:15)

naan  ki’rispuvukkum  kaayuvukkumeayan’ri,  ungga'lil  vea’roruvanukkum  gnaanasnaanang  kodukkavillai;  itha’rkaagath  theavanai  sthoaththirikki’rean.  (1korinthiyar  1:15)

ஸ்தேவானுடைய  வீட்டாருக்கும்  நான்  ஞானஸ்நானங்  கொடுத்ததுண்டு.  இதுவுமல்லாமல்  இன்னும்  யாருக்காவது  நான்  ஞானஸ்நானங்  கொடுத்தேனோ  இல்லையோ  அறியேன்.  (1கொரிந்தியர்  1:16)

stheavaanudaiya  veettaarukkum  naan  gnaanasnaanang  koduththathu'ndu.  ithuvumallaamal  innum  yaarukkaavathu  naan  gnaanasnaanang  koduththeanoa  illaiyoa  a’riyean.  (1korinthiyar  1:16)

ஞானஸ்நானத்தைக்  கொடுக்கும்படி  கிறிஸ்து  என்னை  அனுப்பவில்லை;  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கவே  அனுப்பினார்;  கிறிஸ்துவின்  சிலுவை  வீணாய்ப்போகாதபடிக்கு,  சாதுரிய  ஞானமில்லாமல்  பிரசங்கிக்கவே  அனுப்பினார்.  (1கொரிந்தியர்  1:17)

gnaanasnaanaththaik  kodukkumpadi  ki’risthu  ennai  anuppavillai;  suviseashaththaip  pirasanggikkavea  anuppinaar;  ki’risthuvin  siluvai  vee'naayppoagaathapadikku,  saathuriya  gnaanamillaamal  pirasanggikkavea  anuppinaar.  (1korinthiyar  1:17)

சிலுவையைப்பற்றிய  உபதேசம்  கெட்டுப்போகிறவர்களுக்குப்  பைத்தியமாயிருக்கிறது,  இரட்சிக்கப்படுகிற  நமக்கோ  அது  தேவபெலனாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  1:18)

siluvaiyaippat’riya  ubatheasam  kettuppoagi’ravarga'lukkup  paiththiyamaayirukki’rathu,  iradchikkappadugi’ra  namakkoa  athu  theavabelanaayirukki’rathu.  (1korinthiyar  1:18)

அந்தப்படி  ஞானிகளுடைய  ஞானத்தை  நான்  அழித்து,  புத்திசாலிகளுடைய  புத்தியை  அவமாக்குவேன்  என்று  எழுதியிருக்கிறது.  (1கொரிந்தியர்  1:19)

anthappadi  gnaaniga'ludaiya  gnaanaththai  naan  azhiththu,  buththisaaliga'ludaiya  buththiyai  avamaakkuvean  en’ru  ezhuthiyirukki’rathu.  (1korinthiyar  1:19)

ஞானி  எங்கே?  வேதபாரகன்  எங்கே?  இப்பிரபஞ்சத்  தர்க்கசாஸ்திரி  எங்கே?  இவ்வுலகத்தின்  ஞானத்தைத்  தேவன்  பைத்தியமாக்கவில்லையா?  (1கொரிந்தியர்  1:20)

gnaani  enggea?  veathapaaragan  enggea?  ippirapagnchath  tharkkasaasthiri  enggea?  ivvulagaththin  gnaanaththaith  theavan  paiththiyamaakkavillaiyaa?  (1korinthiyar  1:20)

எப்படியெனில்,  தேவஞானத்துக்கேற்றபடி  உலகமானது  சுயஞானத்தினாலே  தேவனை  அறியாதிருக்கையில்,  பைத்தியமாகத்  தோன்றுகிற  பிரசங்கத்தினாலே  விசுவாசிகளை  இரட்சிக்கத்  தேவனுக்குப்  பிரியமாயிற்று.  (1கொரிந்தியர்  1:21)

eppadiyenil,  theavagnaanaththukkeat’rapadi  ulagamaanathu  suyagnaanaththinaalea  theavanai  a’riyaathirukkaiyil,  paiththiyamaagath  thoan’rugi’ra  pirasanggaththinaalea  visuvaasiga'lai  iradchikkath  theavanukkup  piriyamaayit’ru.  (1korinthiyar  1:21)

யூதர்கள்  அடையாளத்தைக்  கேட்கிறார்கள்,  கிரேக்கர்  ஞானத்தைத்  தேடுகிறார்கள்;  (1கொரிந்தியர்  1:22)

yootharga'l  adaiyaa'laththaik  keadki’raarga'l,  kireakkar  gnaanaththaith  theadugi’raarga'l;  (1korinthiyar  1:22)

நாங்களோ  சிலுவையில்  அறையப்பட்ட  கிறிஸ்துவைப்  பிரசங்கிக்கிறோம்;  அவர்  யூதருக்கு  இடறலாயும்  கிரேக்கருக்குப்  பைத்தியமாயும்  இருக்கிறார்.  (1கொரிந்தியர்  1:23)

naangga'loa  siluvaiyil  a’raiyappatta  ki’risthuvaip  pirasanggikki’roam;  avar  yootharukku  ida’ralaayum  kireakkarukkup  paiththiyamaayum  irukki’raar.  (1korinthiyar  1:23)

ஆகிலும்  யூதரானாலும்  கிரேக்கரானாலும்  எவர்கள்  அழைக்கப்பட்டிருக்கிறார்களோ  அவர்களுக்குக்  கிறிஸ்து  தேவபெலனும்  தேவஞானமுமாயிருக்கிறார்.  (1கொரிந்தியர்  1:24)

aagilum  yootharaanaalum  kireakkaraanaalum  evarga'l  azhaikkappattirukki’raarga'loa  avarga'lukkuk  ki’risthu  theavabelanum  theavagnaanamumaayirukki’raar.  (1korinthiyar  1:24)

இந்தப்படி,  தேவனுடைய  பைத்தியம்  என்னப்படுவது  மனுஷருடைய  ஞானத்திலும்  அதிக  ஞானமாயிருக்கிறது;  தேவனுடைய  பலவீனம்  என்னப்படுவது  மனுஷருடைய  பலத்திலும்  அதிக  பலமாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  1:25)

inthappadi,  theavanudaiya  paiththiyam  ennappaduvathu  manusharudaiya  gnaanaththilum  athiga  gnaanamaayirukki’rathu;  theavanudaiya  balaveenam  ennappaduvathu  manusharudaiya  balaththilum  athiga  balamaayirukki’rathu.  (1korinthiyar  1:25)

எப்படியெனில்,  சகோதரரே,  நீங்கள்  அழைக்கப்பட்ட  அழைப்பைப்  பாருங்கள்;  மாம்சத்தின்படி  ஞானிகள்  அநேகரில்லை,  வல்லவர்கள்  அநேகரில்லை,  பிரபுக்கள்  அநேகரில்லை.  (1கொரிந்தியர்  1:26)

eppadiyenil,  sagoathararea,  neengga'l  azhaikkappatta  azhaippaip  paarungga'l;  maamsaththinpadi  gnaaniga'l  aneagarillai,  vallavarga'l  aneagarillai,  pirabukka'l  aneagarillai.  (1korinthiyar  1:26)

ஞானிகளை  வெட்கப்படுத்தும்படி  தேவன்  உலகத்தில்  பைத்தியமானவைகளைத்  தெரிந்துகொண்டார்;  பலமுள்ளவைகளை  வெட்கப்படுத்தும்படி  தேவன்  உலகத்தில்  பலவீனமானவைகளைத்  தெரிந்துகொண்டார்.  (1கொரிந்தியர்  1:27)

gnaaniga'lai  vedkappaduththumpadi  theavan  ulagaththil  paiththiyamaanavaiga'laith  therinthuko'ndaar;  balamu'l'lavaiga'lai  vedkappaduththumpadi  theavan  ulagaththil  balaveenamaanavaiga'laith  therinthuko'ndaar.  (1korinthiyar  1:27)

உள்ளவைகளை  அவமாக்கும்படி,  உலகத்தின்  இழிவானவைகளையும்,  அற்பமாய்  எண்ணப்பட்டவைகளையும்,  இல்லாதவைகளையும்,  தேவன்  தெரிந்துகொண்டார்.  (1கொரிந்தியர்  1:28)

u'l'lavaiga'lai  avamaakkumpadi,  ulagaththin  izhivaanavaiga'laiyum,  a’rpamaay  e'n'nappattavaiga'laiyum,  illaathavaiga'laiyum,  theavan  therinthuko'ndaar.  (1korinthiyar  1:28)

மாம்சமான  எவனும்  தேவனுக்கு  முன்பாகப்  பெருமைபாராட்டாதபடிக்கு  அப்படிச்  செய்தார்.  (1கொரிந்தியர்  1:29)

maamsamaana  evanum  theavanukku  munbaagap  perumaipaaraattaathapadikku  appadich  seythaar.  (1korinthiyar  1:29)

அந்தப்படி,  நீங்கள்  அவராலே  கிறிஸ்து  இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்.  எழுதியிருக்கிறபடி  மேன்மைபாராட்டுகிறவன்  கர்த்தரைக்குறித்தே  மேன்மைபாராட்டத்தக்கதாக,  (1கொரிந்தியர்  1:30)

anthappadi,  neengga'l  avaraalea  ki’risthu  iyeasuvukkudpattirukki’reerga'l.  ezhuthiyirukki’rapadi  meanmaipaaraattugi’ravan  karththaraikku’riththea  meanmaipaaraattaththakkathaaga,  (1korinthiyar  1:30)

அவரே  தேவனால்  நமக்கு  ஞானமும்  நீதியும்  பரிசுத்தமும்  மீட்புமானார்.  (1கொரிந்தியர்  1:31)

avarea  theavanaal  namakku  gnaanamum  neethiyum  parisuththamum  meedpumaanaar.  (1korinthiyar  1:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!