Monday, April 04, 2016

Sanggeetham 91 | சங்கீதம் 91 | Psalms 91

உன்னதமானவரின்  மறைவிலிருக்கிறவன்  சர்வவல்லவருடைய  நிழலில்  தங்குவான்.  (சங்கீதம்  91:1)

unnathamaanavarin  ma'raivilirukki'ravan  sarvavallavarudaiya  nizhalil  thangguvaan.  (sanggeetham  91:1)

நான்  கர்த்தரை  நோக்கி:  நீர்  என்  அடைக்கலம்,  என்  கோட்டை,  என்  தேவன்,  நான்  நம்பியிருக்கிறவர்  என்று  சொல்லுவேன்.  (சங்கீதம்  91:2)

naan  karththarai  noakki:  neer  en  adaikkalam,  en  koattai,  en  theavan,  naan  nambiyirukki'ravar  en'ru  solluvean.  (sanggeetham  91:2)

அவர்  உன்னை  வேடனுடைய  கண்ணிக்கும்,  பாழாக்கும்  கொள்ளைநோய்க்கும்  தப்புவிப்பார்.  (சங்கீதம்  91:3)

avar  unnai  veadanudaiya  ka'n'nikkum,  paazhaakkum  ko'l'lainoaykkum  thappuvippaar.  (sanggeetham  91:3)

அவர்  தமது  சிறகுகளாலே  உன்னை  மூடுவார்;  அவர்  செட்டைகளின்  கீழே  அடைக்கலம்  புகுவாய்;  அவருடைய  சத்தியம்  உனக்குப்  பரிசையும்  கேடகமுமாகும்.  (சங்கீதம்  91:4)

avar  thamathu  si'raguga'laalea  unnai  mooduvaar;  avar  settaiga'lin  keezhea  adaikkalam  puguvaay;  avarudaiya  saththiyam  unakkup  parisaiyum  keadagamumaagum.  (sanggeetham  91:4)

இரவில்  உண்டாகும்  பயங்கரத்துக்கும்,  பகலில்  பறக்கும்  அம்புக்கும்,  (சங்கீதம்  91:5)

iravil  u'ndaagum  bayanggaraththukkum,  pagalil  pa'rakkum  ambukkum,  (sanggeetham  91:5)

இருளில்  நடமாடும்  கொள்ளைநோய்க்கும்,  மத்தியானத்தில்  பாழாக்கும்  சங்காரத்துக்கும்  பயப்படாதிருப்பாய்.  (சங்கீதம்  91:6)

iru'lil  nadamaadum  ko'l'lainoaykkum,  maththiyaanaththil  paazhaakkum  sanggaaraththukkum  bayappadaathiruppaay.  (sanggeetham  91:6)

உன்  பக்கத்தில்  ஆயிரம்பேரும்,  உன்  வலதுபுறத்தில்  பதினாயிரம்பேரும்  விழுந்தாலும்,  அது  உன்னை  அணுகாது.  (சங்கீதம்  91:7)

un  pakkaththil  aayirampearum,  un  valathupu'raththil  pathinaayirampearum  vizhunthaalum,  athu  unnai  a'nugaathu.  (sanggeetham  91:7)

உன்  கண்களால்  மாத்திரம்  நீ  அதைப்  பார்த்து,  துன்மார்க்கருக்கு  வரும்  பலனைக்  காண்பாய்.  (சங்கீதம்  91:8)

un  ka'nga'laal  maaththiram  nee  athaip  paarththu,  thunmaarkkarukku  varum  palanaik  kaa'nbaay.  (sanggeetham  91:8)

எனக்கு  அடைக்கலமாயிருக்கிற  உன்னதமான  கர்த்தரை  உனக்குத்  தாபரமாகக்கொண்டாய்.  (சங்கீதம்  91:9)

enakku  adaikkalamaayirukki'ra  unnathamaana  karththarai  unakkuth  thaabaramaagakko'ndaay.  (sanggeetham  91:9)

ஆகையால்  பொல்லாப்பு  உனக்கு  நேரிடாது,  வாதை  உன்  கூடாரத்தை  அணுகாது.  (சங்கீதம்  91:10)

aagaiyaal  pollaappu  unakku  nearidaathu,  vaathai  un  koodaaraththai  a'nugaathu.  (sanggeetham  91:10)

உன்  வழிகளிலெல்லாம்  உன்னைக்  காக்கும்படி,  உனக்காகத்  தம்முடைய  தூதர்களுக்குக்  கட்டளையிடுவார்.  (சங்கீதம்  91:11)

un  vazhiga'lilellaam  unnaik  kaakkumpadi,  unakkaagath  thammudaiya  thootharga'lukkuk  katta'laiyiduvaar.  (sanggeetham  91:11)

உன்  பாதம்  கல்லில்  இடறாதபடிக்கு  அவர்கள்  உன்னைத்  தங்கள்  கைகளில்  ஏந்திக்கொண்டுபோவார்கள்.  (சங்கீதம்  91:12)

un  paatham  kallil  ida'raathapadikku  avarga'l  unnaith  thangga'l  kaiga'lil  eanthikko'ndupoavaarga'l.  (sanggeetham  91:12)

சிங்கத்தின்மேலும்  விரியன்  பாம்பின்மேலும்  நீ  நடந்து,  பாலசிங்கத்தையும்  வலுசர்ப்பத்தையும்  மிதித்துப்போடுவாய்.  (சங்கீதம்  91:13)

singgaththinmealum  viriyan  paambinmealum  nee  nadanthu,  baalasinggaththaiyum  valusarppaththaiyum  mithiththuppoaduvaay.  (sanggeetham  91:13)

அவன்  என்னிடத்தில்  வாஞ்சையாயிருக்கிறபடியால்  அவனை  விடுவிப்பேன்;  என்  நாமத்தை  அவன்  அறிந்திருக்கிறபடியால்  அவனை  உயர்ந்த  அடைக்கலத்திலே  வைப்பேன்.  (சங்கீதம்  91:14)

avan  ennidaththil  vaagnchaiyaayirukki'rapadiyaal  avanai  viduvippean;  en  naamaththai  avan  a'rinthirukki'rapadiyaal  avanai  uyarntha  adaikkalaththilea  vaippean.  (sanggeetham  91:14)

அவன்  என்னை  நோக்கிக்  கூப்பிடுவான்,  நான்  அவனுக்கு  மறுஉத்தரவு  அருளிச்செய்வேன்;  ஆபத்தில்  நானே  அவனோடிருந்து,  அவனைத்  தப்புவித்து,  அவனைக்  கனப்படுத்துவேன்.  (சங்கீதம்  91:15)

avan  ennai  noakkik  kooppiduvaan,  naan  avanukku  ma'ruuththaravu  aru'lichseyvean;  aabaththil  naanea  avanoadirunthu,  avanaith  thappuviththu,  avanaik  kanappaduththuvean.  (sanggeetham  91:15)

நீடித்த  நாட்களால்  அவனைத்  திருப்தியாக்கி,  என்  இரட்சிப்பை  அவனுக்குக்  காண்பிப்பேன்.  (சங்கீதம்  91:16)

neediththa  naadka'laal  avanaith  thirupthiyaakki,  en  iradchippai  avanukkuk  kaa'nbippean.  (sanggeetham  91:16)


1 comment:

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!