Saturday, April 09, 2016

Sanggeetham 51 | சங்கீதம் 51 | Psalms 51


தேவனே,  உமது  கிருபையின்படி  எனக்கு  இரங்கும்,  உமது  மிகுந்த  இரக்கங்களின்படி  என்  மீறுதல்கள்  நீங்க  என்னைச்  சுத்திகரியும்.  (சங்கீதம்  51:1)

theavanea,  umathu  kirubaiyinpadi  enakku  iranggum,  umathu  miguntha  irakkangga'linpadi  en  mee'ruthalga'l  neengga  ennaich  suththigariyum.  (sanggeetham  51:1)

என்  அக்கிரமம்  நீங்க  என்னை  முற்றிலும்  கழுவி,  என்  பாவமற  என்னைச்  சுத்திகரியும்.  (சங்கீதம்  51:2)

en  akkiramam  neengga  ennai  mut’rilum  kazhuvi,  en  paavama'ra  ennaich  suththigariyum.  (sanggeetham  51:2)

என்  மீறுதல்களை  நான்  அறிந்திருக்கிறேன்;  என்  பாவம்  எப்பொழுதும்  எனக்கு  முன்பாக  நிற்கிறது.  (சங்கீதம்  51:3)

en  mee'ruthalga'lai  naan  a'rinthirukki'rean;  en  paavam  eppozhuthum  enakku  munbaaga  ni’rki'rathu.  (sanggeetham  51:3)

தேவரீர்  ஒருவருக்கே  விரோதமாக  நான்  பாவஞ்செய்து,  உமது  கண்களுக்கு  முன்பாகப்  பொல்லாங்கானதை  நடப்பித்தேன்;  நீர்  பேசும்போது  உம்முடைய  நீதி  விளங்கவும்,  நீர்  நியாயந்தீர்க்கும்போது  உம்முடைய  பரிசுத்தம்  விளங்கவும்  இதை  அறிக்கையிடுகிறேன்.  (சங்கீதம்  51:4)

theavareer  oruvarukkea  viroathamaaga  naan  paavagnseythu,  umathu  ka'nga'lukku  munbaagap  pollaanggaanathai  nadappiththean;  neer  peasumpoathu  ummudaiya  neethi  vi'langgavum,  neer  niyaayantheerkkumpoathu  ummudaiya  parisuththam  vi'langgavum  ithai  a'rikkaiyidugi'rean.  (sanggeetham  51:4)

இதோ,  நான்  துர்க்குணத்தில்  உருவானேன்;  என்  தாய்  என்னைப்  பாவத்தில்  கர்ப்பந்தரித்தாள்.  (சங்கீதம்  51:5)

ithoa,  naan  thurkku'naththil  uruvaanean;  en  thaay  ennaip  paavaththil  karppanthariththaa'l.  (sanggeetham  51:5)

இதோ,  உள்ளத்தில்  உண்மையிருக்க  விரும்புகிறீர்;  அந்தக்கரணத்தில்  ஞானத்தை  எனக்குத்  தெரியப்படுத்துவீர்.  (சங்கீதம்  51:6)

ithoa,  u'l'laththil  u'nmaiyirukka  virumbugi'reer;  anthakkara'naththil  gnaanaththai  enakkuth  theriyappaduththuveer.  (sanggeetham  51:6)

நீர்  என்னை  ஈசோப்பினால்  சுத்திகரியும்,  அப்பொழுது  நான்  சுத்தமாவேன்;  என்னைக்  கழுவியருளும்,  அப்பொழுது  நான்  உறைந்த  மழையிலும்  வெண்மையாவேன்.  (சங்கீதம்  51:7)

neer  ennai  eesoappinaal  suththigariyum,  appozhuthu  naan  suththamaavean;  ennaik  kazhuviyaru'lum,  appozhuthu  naan  u'raintha  mazhaiyilum  ve'nmaiyaavean.  (sanggeetham  51:7)

நான்  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  கேட்கும்படி  செய்யும்,  அப்பொழுது  நீர்  நொறுக்கின  எலும்புகள்  களிகூரும்.  (சங்கீதம்  51:8)

naan  santhoashamum  magizhchchiyum  keadkumpadi  seyyum,  appozhuthu  neer  no'rukkina  elumbuga'l  ka'likoorum.  (sanggeetham  51:8)

என்  பாவங்களைப்  பாராதபடிக்கு  நீர்  உமது  முகத்தை  மறைத்து,  என்  அக்கிரமங்களையெல்லாம்  நீக்கியருளும்.  (சங்கீதம்  51:9)

en  paavangga'laip  paaraathapadikku  neer  umathu  mugaththai  ma'raiththu,  en  akkiramangga'laiyellaam  neekkiyaru'lum.  (sanggeetham  51:9)

தேவனே,  சுத்த  இருதயத்தை  என்னிலே  சிருஷ்டியும்,  நிலைவரமான  ஆவியை  என்  உள்ளத்திலே  புதுப்பியும்.  (சங்கீதம்  51:10)

theavanea,  suththa  iruthayaththai  ennilea  sirushdiyum,  nilaivaramaana  aaviyai  en  u'l'laththilea  puthuppiyum.  (sanggeetham  51:10)

உமது  சமுகத்தை  விட்டு  என்னைத்  தள்ளாமலும்,  உமது  பரிசுத்த  ஆவியை  என்னிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளாமலும்  இரும்.  (சங்கீதம்  51:11)

umathu  samugaththai  vittu  ennaith  tha'l'laamalum,  umathu  parisuththa  aaviyai  ennidaththilirunthu  eduththukko'l'laamalum  irum.  (sanggeetham  51:11)

உமது  இரட்சணியத்தின்  சந்தோஷத்தைத்  திரும்பவும்  எனக்குத்  தந்து,  உற்சாகமான  ஆவி  என்னைத்  தாங்கும்படி  செய்யும்.  (சங்கீதம்  51:12)

umathu  iradcha'niyaththin  santhoashaththaith  thirumbavum  enakkuth  thanthu,  u’rchaagamaana  aavi  ennaith  thaanggumpadi  seyyum.  (sanggeetham  51:12)

அப்பொழுது  பாதகருக்கு  உமது  வழிகளை  உபதேசிப்பேன்;  பாவிகள்  உம்மிடத்தில்  மனந்திரும்புவார்கள்.  (சங்கீதம்  51:13)

appozhuthu  paathagarukku  umathu  vazhiga'lai  ubatheasippean;  paaviga'l  ummidaththil  mananthirumbuvaarga'l.  (sanggeetham  51:13)

தேவனே,  என்னை  இரட்சிக்குந்  தேவனே,  இரத்தப்பழிகளுக்கு  என்னை  நீங்கலாக்கிவிடும்;  அப்பொழுது  என்  நாவு  உம்முடைய  நீதியைக்  கெம்பீரமாய்ப்பாடும்.  (சங்கீதம்  51:14)

theavanea,  ennai  iradchikkun  theavanea,  iraththappazhiga'lukku  ennai  neenggalaakkividum;  appozhuthu  en  naavu  ummudaiya  neethiyaik  kembeeramaayppaadum.  (sanggeetham  51:14)

ஆண்டவரே,  என்  உதடுகளைத்  திறந்தருளும்;  அப்பொழுது  என்  வாய்  உம்முடைய  புகழை  அறிவிக்கும்.  (சங்கீதம்  51:15)

aa'ndavarea,  en  uthaduga'laith  thi'rantharu'lum;  appozhuthu  en  vaay  ummudaiya  pugazhai  a'rivikkum.  (sanggeetham  51:15)

பலியை  நீர்  விரும்புகிறதில்லை,  விரும்பினால்  செலுத்துவேன்;  தகனபலியும்  உமக்குப்  பிரியமானதல்ல.  (சங்கீதம்  51:16)

baliyai  neer  virumbugi'rathillai,  virumbinaal  seluththuvean;  thaganabaliyum  umakkup  piriyamaanathalla.  (sanggeetham  51:16)

தேவனுக்கேற்கும்  பலிகள்  நொறுங்குண்ட  ஆவிதான்;  தேவனே,  நொறுங்குண்டதும்  நருங்குண்டதுமான  இருதயத்தை  நீர்  புறக்கணியீர்.  (சங்கீதம்  51:17)

theavanukkea’rkum  baliga'l  no'runggu'nda  aavithaan;  theavanea,  no'runggu'ndathum  narunggu'ndathumaana  iruthayaththai  neer  pu'rakka'niyeer.  (sanggeetham  51:17)

சீயோனுக்கு  உமது  பிரியத்தின்படி  நன்மைசெய்யும்;  எருசலேமின்  மதில்களைக்  கட்டுவீராக.  (சங்கீதம்  51:18)

seeyoanukku  umathu  piriyaththinpadi  nanmaiseyyum;  erusaleamin  mathilga'laik  kattuveeraaga.  (sanggeetham  51:18)

அப்பொழுது  தகனபலியும்  சர்வாங்க  தகனபலியுமாகிய  நீதியின்  பலிகளில்  பிரியப்படுவீர்;  அப்பொழுது  உமது  பீடத்தின்மேல்  காளைகளைப்  பலியிடுவார்கள்.  (சங்கீதம்  51:19)

appozhuthu  thaganabaliyum  sarvaangga  thaganabaliyumaagiya  neethiyin  baliga'lil  piriyappaduveer;  appozhuthu  umathu  peedaththinmeal  kaa'laiga'laip  baliyiduvaarga'l.  (sanggeetham  51:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!