Sunday, April 03, 2016

Maththeayu 7 | மத்தேயு 7 | Matthew 7


நீங்கள்  குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு  மற்றவர்களைக்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்.  (மத்தேயு  7:1)

neengga'l  kut’ravaa'liga'len'ru  theerkkappadaathapadikku  mat'ravarga'laik  kut'ravaa'liga'len'ru  theerkkaathirungga'l.  (maththeayu  7:1)

ஏனெனில்,  நீங்கள்  மற்றவர்களைத்  தீர்க்கிற  தீர்ப்பின்படியே  நீங்களும்  தீர்க்கப்படுவீர்கள்;  நீங்கள்  மற்றவர்களுக்கு  அளக்கிற  அளவின்படியே  உங்களுக்கும்  அளக்கப்படும்.  (மத்தேயு  7:2)

eanenil,  neengga'l  mat'ravarga'laith  theerkki'ra  theerppinpadiyea  neengga'lum  theerkkappaduveerga'l;  neengga'l  mat'ravarga'lukku  a'lakki'ra  a'lavinpadiyea  ungga'lukkum  a'lakkappadum.  (maththeayu  7:2)

நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பைப்  பார்க்கிறதென்ன?  (மத்தேயு  7:3)

nee  un  ka'n'nilirukki'ra  uththiraththai  u'naraamal,  un  sagoatharan  ka'n'nilirukki'ra  thurumbaip  paarkki'rathenna?  (maththeayu  7:3)

இதோ,  உன்  கண்ணில்  உத்திரம்  இருக்கையில்  உன்  சகோதரனை  நோக்கி:  நான்  உன்  கண்ணிலிருக்கும்  துரும்பை  எடுத்துப்போடட்டும்  என்று  நீ  சொல்வதெப்படி?  (மத்தேயு  7:4)

ithoa,  un  ka'n'nil  uththiram  irukkaiyil  un  sagoatharanai  noakki:  naan  un  ka'n'nilirukkum  thurumbai  eduththuppoadattum  en'ru  nee  solvatheppadi?  (maththeayu  7:4)

மாயக்காரனே!  முன்பு  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  எடுத்துப்போடு;  பின்பு  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போட  வகைபார்ப்பாய்.  (மத்தேயு  7:5)

maayakkaaranea!  munbu  un  ka'n'nilirukki'ra  uththiraththai  eduththuppoadu;  pinbu  un  sagoatharan  ka'n'nilirukki'ra  thurumbai  eduththuppoada  vagaipaarppaay.  (maththeayu  7:5)

பரிசுத்தமானதை  நாய்களுக்குக்  கொடாதேயுங்கள்;  உங்கள்  முத்துக்களைப்  பன்றிகள்முன்  போடாதேயுங்கள்;  போட்டால்  தங்கள்  கால்களால்  அவைகளை  மிதித்து,  திரும்பிக்கொண்டு  உங்களைப்  பீறிப்போடும்.  (மத்தேயு  7:6)

parisuththamaanathai  naayga'lukkuk  kodaatheayungga'l;  ungga'l  muththukka'laip  pan'riga'lmun  poadaatheayungga'l;  poattaal  thangga'l  kaalga'laal  avaiga'lai  mithiththu,  thirumbikko'ndu  ungga'laip  pee'rippoadum.  (maththeayu  7:6)

கேளுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குக்  கொடுக்கப்படும்;  தேடுங்கள்,  அப்பொழுது  கண்டடைவீர்கள்;  தட்டுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குத்  திறக்கப்படும்;  (மத்தேயு  7:7)

kea'lungga'l,  appozhuthu  ungga'lukkuk  kodukkappadum;  theadungga'l,  appozhuthu  ka'ndadaiveerga'l;  thattungga'l,  appozhuthu  ungga'lukkuth  thi'rakkappadum;  (maththeayu  7:7)

ஏனென்றால்,  கேட்கிறவன்  எவனும்  பெற்றுக்கொள்ளுகிறான்;  தேடுகிறவன்  கண்டடைகிறான்;  தட்டுகிறவனுக்குத்  திறக்கப்படும்.  (மத்தேயு  7:8)

eanen'raal,  keadki'ravan  evanum  pet’rukko'l'lugi'raan;  theadugi'ravan  ka'ndadaigi'raan;  thattugi'ravanukkuth  thi'rakkappadum.  (maththeayu  7:8)

உங்களில்  எந்த  மனுஷனானாலும்  தன்னிடத்தில்  அப்பத்தைக்  கேட்கிற  தன்  மகனுக்குக்  கல்லைக்  கொடுப்பானா?  (மத்தேயு  7:9)

ungga'lil  entha  manushanaanaalum  thannidaththil  appaththaik  keadki'ra  than  maganukkuk  kallaik  koduppaanaa?  (maththeayu  7:9)

மீனைக்  கேட்டால்  அவனுக்குப்  பாம்பைக்  கொடுப்பானா?  (மத்தேயு  7:10)

meenaik  keattaal  avanukkup  paambaik  koduppaanaa?  (maththeayu  7:10)

ஆகையால்,  பொல்லாதவர்களாகிய  நீங்கள்  உங்கள்  பிள்ளைகளுக்கு  நல்ல  ஈவுகளைக்  கொடுக்க  அறிந்திருக்கும்போது,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதா  தம்மிடத்தில்  வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு  நன்மையானவைகளைக்  கொடுப்பது  அதிக  நிச்சயம்  அல்லவா?  (மத்தேயு  7:11)

aagaiyaal,  pollaathavarga'laagiya  neengga'l  ungga'l  pi'l'laiga'lukku  nalla  eevuga'laik  kodukka  a'rinthirukkumpoathu,  paraloagaththilirukki'ra  ungga'l  pithaa  thammidaththil  vea'ndikko'l'lugi'ravarga'lukku  nanmaiyaanavaiga'laik  koduppathu  athiga  nichchayam  allavaa?  (maththeayu  7:11)

ஆதலால்,  மனுஷர்  உங்களுக்கு  எவைகளைச்செய்ய  விரும்புகிறீர்களோ,  அவைகளை  நீங்களும்  அவர்களுக்குச்  செய்யுங்கள்;  இதுவே  நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசனங்களுமாம்.  (மத்தேயு  7:12)

aathalaal,  manushar  ungga'lukku  evaiga'laichseyya  virumbugi'reerga'loa,  avaiga'lai  neengga'lum  avarga'lukkuch  seyyungga'l;  ithuvea  niyaayappiramaa'namum  theerkkatharisanangga'lumaam.  (maththeayu  7:12)

இடுக்கமான  வாசல்வழியாய்  உட்பிரவேசியுங்கள்;  கேட்டுக்குப்  போகிற  வாசல்  விரிவும்,  வழி  விசாலமுமாயிருக்கிறது;  அதின்  வழியாய்ப்  பிரவேசிக்கிறவர்கள்  அநேகர்.  (மத்தேயு  7:13)

idukkamaana  vaasalvazhiyaay  udpiraveasiyungga'l;  keattukkup  poagi'ra  vaasal  virivum,  vazhi  visaalamumaayirukki'rathu;  athin  vazhiyaayp  piraveasikki'ravarga'l  aneagar.  (maththeayu  7:13)

ஜீவனுக்குப்  போகிற  வாசல்  இடுக்கமும்,  வழி  நெருக்கமுமாயிருக்கிறது;  அதைக்  கண்டுபிடிக்கிறவர்கள்  சிலர்.  (மத்தேயு  7:14)

jeevanukkup  poagi'ra  vaasal  idukkamum,  vazhi  nerukkamumaayirukki'rathu;  athaik  ka'ndupidikki'ravarga'l  silar.  (maththeayu  7:14)

கள்ளத்  தீர்க்கதரிசிகளுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்கள்  ஆட்டுத்தோலைப்  போர்த்துக்கொண்டு  உங்களிடத்தில்  வருவார்கள்;  உள்ளத்திலோ  அவர்கள்  பட்சிக்கிற  ஓநாய்கள்.  (மத்தேயு  7:15)

ka'l'lath  theerkkatharisiga'lukku  echcharikkaiyaayirungga'l;  avarga'l  aattuththoalaip  poarththukko'ndu  ungga'lidaththil  varuvaarga'l;  u'l'laththiloa  avarga'l  padchikki'ra  oanaayga'l.  (maththeayu  7:15)

அவர்களுடைய  கனிகளினாலே  அவர்களை  அறிவீர்கள்;  முட்செடிகளில்  திராட்சப்பழங்களையும்,  முட்பூண்டுகளில்  அத்திப்பழங்களையும்  பறிக்கிறார்களா?  (மத்தேயு  7:16)

avarga'ludaiya  kaniga'linaalea  avarga'lai  a'riveerga'l;  mudchediga'lil  thiraadchappazhangga'laiyum,  mudpoo'nduga'lil  aththippazhangga'laiyum  pa'rikki'raarga'laa?  (maththeayu  7:16)

அப்படியே  நல்ல  மரமெல்லாம்  நல்ல  கனிகளைக்  கொடுக்கும்;  கெட்ட  மரமோ  கெட்ட  கனிகளைக்  கொடுக்கும்.  (மத்தேயு  7:17)

appadiyea  nalla  maramellaam  nalla  kaniga'laik  kodukkum;  ketta  maramoa  ketta  kaniga'laik  kodukkum.  (maththeayu  7:17)

நல்ல  மரம்  கெட்ட  கனிகளைக்  கொடுக்கமாட்டாது;  கெட்ட  மரம்  நல்ல  கனிகளைக்  கொடுக்கமாட்டாது.  (மத்தேயு  7:18)

nalla  maram  ketta  kaniga'laik  kodukkamaattaathu;  ketta  maram  nalla  kaniga'laik  kodukkamaattaathu.  (maththeayu  7:18)

நல்ல  கனிகொடாத  மரமெல்லாம்  வெட்டுண்டு,  அக்கினியிலே  போடப்படும்.  (மத்தேயு  7:19)

nalla  kanikodaatha  maramellaam  vettu'ndu,  akkiniyilea  poadappadum.  (maththeayu  7:19)

ஆதலால்,  அவர்களுடைய  கனிகளினாலே  அவர்களை  அறிவீர்கள்.  (மத்தேயு  7:20)

aathalaal,  avarga'ludaiya  kaniga'linaalea  avarga'lai  a'riveerga'l.  (maththeayu  7:20)

பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  சித்தத்தின்படி  செய்கிறவனே  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பானேயல்லாமல்,  என்னை  நோக்கி:  கர்த்தாவே!  கர்த்தாவே!  என்று  சொல்லுகிறவன்  அதில்  பிரவேசிப்பதில்லை.  (மத்தேயு  7:21)

paraloagaththilirukki'ra  en  pithaavin  siththaththinpadi  seygi'ravanea  paraloagaraajyaththil  piraveasippaaneayallaamal,  ennai  noakki:  karththaavea!  karththaavea!  en'ru  sollugi'ravan  athil  piraveasippathillai.  (maththeayu  7:21)

அந்நாளில்  அநேகர்  என்னை  நோக்கி:  கர்த்தாவே!  கர்த்தாவே!  உமது  நாமத்தினாலே  தீர்க்கதரிசனம்  உரைத்தோம்  அல்லவா?  உமது  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்தினோம்  அல்லவா?  உமது  நாமத்தினாலே  அநேக  அற்புதங்களைச்  செய்தோம்  அல்லவா?  என்பார்கள்.  (மத்தேயு  7:22)

annaa'lil  aneagar  ennai  noakki:  karththaavea!  karththaavea!  umathu  naamaththinaalea  theerkkatharisanam  uraiththoam  allavaa?  umathu  naamaththinaalea  pisaasuga'laith  thuraththinoam  allavaa?  umathu  naamaththinaalea  aneaga  a’rputhangga'laich  seythoam  allavaa?  enbaarga'l.  (maththeayu  7:22)

அப்பொழுது,  நான்  ஒருக்காலும்  உங்களை  அறியவில்லை;  அக்கிரமச்  செய்கைக்காரரே,  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்லுவேன்.  (மத்தேயு  7:23)

appozhuthu,  naan  orukkaalum  ungga'lai  a'riyavillai;  akkiramach  seygaikkaararea,  ennaivittu  agan'rupoangga'l  en'ru  avarga'lukkuch  solluvean.  (maththeayu  7:23)

ஆகையால்,  நான்  சொல்லிய  இந்த  வார்த்தைகளைக்  கேட்டு,  இவைகளின்படி  செய்கிறவன்  எவனோ,  அவனைக்  கன்மலையின்மேல்  தன்  வீட்டைக்  கட்டின  புத்தியுள்ள  மனுஷனுக்கு  ஒப்பிடுவேன்.  (மத்தேயு  7:24)

aagaiyaal,  naan  solliya  intha  vaarththaiga'laik  keattu,  ivaiga'linpadi  seygi'ravan  evanoa,  avanaik  kanmalaiyinmeal  than  veettaik  kattina  buththiyu'l'la  manushanukku  oppiduvean.  (maththeayu  7:24)

பெருமழை  சொரிந்து,  பெருவெள்ளம்  வந்து,  காற்று  அடித்து,  அந்த  வீட்டின்மேல்  மோதியும்,  அது  விழவில்லை;  ஏனென்றால்,  அது  கன்மலையின்மேல்  அஸ்திபாரம்  போடப்பட்டிருந்தது.  (மத்தேயு  7:25)

perumazhai  sorinthu,  peruve'l'lam  vanthu,  kaat'ru  adiththu,  antha  veettinmeal  moathiyum,  athu  vizhavillai;  eanen'raal,  athu  kanmalaiyinmeal  asthibaaram  poadappattirunthathu.  (maththeayu  7:25)

நான்  சொல்லிய  இந்த  வார்த்தைகளைக்கேட்டு,  இவைகளின்படி  செய்யாதிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  வீட்டை  மணலின்மேல்  கட்டின  புத்தியில்லாத  மனுஷனுக்கு  ஒப்பிடப்படுவான்.  (மத்தேயு  7:26)

naan  solliya  intha  vaarththaiga'laikkeattu,  ivaiga'linpadi  seyyaathirukki'ravan  evanoa,  avan  than  veettai  ma'nalinmeal  kattina  buththiyillaatha  manushanukku  oppidappaduvaan.  (maththeayu  7:26)

பெருமழை  சொரிந்து,  பெருவெள்ளம்  வந்து,  காற்று  அடித்து,  அந்த  வீட்டின்மேல்  மோதினபோது  அது  விழுந்தது;  விழுந்து  முழுவதும்  அழிந்தது  என்றார்.  (மத்தேயு  7:27)

perumazhai  sorinthu,  peruve'l'lam  vanthu,  kaat'ru  adiththu,  antha  veettinmeal  moathinapoathu  athu  vizhunthathu;  vizhunthu  muzhuvathum  azhinthathu  en'raar.  (maththeayu  7:27)

இயேசு  இந்த  வார்த்தைகளைச்  சொல்லி  முடித்தபோது,  அவர்  வேதபாரகரைப்போல்  போதியாமல்,  அதிகாரமுடையவராய்  அவர்களுக்குப்  போதித்தபடியால்,  (மத்தேயு  7:28)

iyeasu  intha  vaarththaiga'laich  solli  mudiththapoathu,  avar  veathapaaragaraippoal  poathiyaamal,  athigaaramudaiyavaraay  avarga'lukkup  poathiththapadiyaal,  (maththeayu  7:28)

ஜனங்கள்  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  (மத்தேயு  7:29)

janangga'l  avarudaiya  poathagaththaikku'riththu  aachchariyappattaarga'l.  (maththeayu  7:29)


1 comment:

  1. Correction (March 17, 2019) >>> changed unga'lukkum to ungga'lukkum (maththeayu 7:2)

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!