Wednesday, April 20, 2016

Maththeayu 22 | மத்தேயு 22 | Matthew 22

இயேசு  மறுபடியும்  அவர்களோடே  உவமைகளாய்ப்  பேசிச்  சொன்னது  என்னவென்றால்:  (மத்தேயு  22:1)

iyeasu  ma'rupadiyum  avarga'loadea  uvamaiga'laayp  peasich  sonnathu  ennaven'raal:  (maththeayu  22:1)

பரலோகராஜ்யம்  தன்  குமாரனுக்குக்  கலியாணஞ்செய்த  ஒரு  ராஜாவுக்கு  ஒப்பாயிருக்கிறது.  (மத்தேயு  22:2)

paraloagaraajyam  than  kumaaranukkuk  kaliyaa'nagnseytha  oru  raajaavukku  oppaayirukki'rathu.  (maththeayu  22:2)

அழைக்கப்பட்டவர்களைக்  கலியாணத்திற்கு  வரச்சொல்லும்படி  அவன்  தன்  ஊழியக்காரரை  அனுப்பினான்;  அவர்களோ  வர  மனதில்லாதிருந்தார்கள்.  (மத்தேயு  22:3)

azhaikkappattavarga'laik  kaliyaa'naththi’rku  varachsollumpadi  avan  than  oozhiyakkaararai  anuppinaan;  avarga'loa  vara  manathillaathirunthaarga'l.  (maththeayu  22:3)

அப்பொழுது  அவன்  வேறு  ஊழியக்காரரை  அழைத்து:  நீங்கள்  போய்,  இதோ,  என்  விருந்தை  ஆயத்தம்பண்ணினேன்,  என்  எருதுகளும்  கொழுத்த  ஜெந்துக்களும்  அடிக்கப்பட்டது,  எல்லாம்  ஆயத்தமாயிருக்கிறது;  கலியாணத்திற்கு  வாருங்கள்  என்று  அழைக்கப்பட்டவர்களுக்குச்  சொல்லுங்களென்று  அனுப்பினான்.  (மத்தேயு  22:4)

appozhuthu  avan  vea'ru  oozhiyakkaararai  azhaiththu:  neengga'l  poay,  ithoa,  en  virunthai  aayaththampa'n'ninean,  en  eruthuga'lum  kozhuththa  jenthukka'lum  adikkappattathu,  ellaam  aayaththamaayirukki'rathu;  kaliyaa'naththi’rku  vaarungga'l  en'ru  azhaikkappattavarga'lukkuch  sollungga'len'ru  anuppinaan.  (maththeayu  22:4)

அழைக்கப்பட்டவர்களோ  அதை  அசட்டைபண்ணி,  ஒருவன்  தன்  வயலுக்கும்,  ஒருவன்  தன்  வியாபாரத்துக்கும்  போய்விட்டார்கள்.  (மத்தேயு  22:5)

azhaikkappattavarga'loa  athai  asattaipa'n'ni,  oruvan  than  vayalukkum,  oruvan  than  viyaabaaraththukkum  poayvittaarga'l.  (maththeayu  22:5)

மற்றவர்கள்  அவன்  ஊழியக்காரரைப்  பிடித்து,  அவமானப்படுத்தி,  கொலைசெய்தார்கள்.  (மத்தேயு  22:6)

mat’ravarga'l  avan  oozhiyakkaararaip  pidiththu,  avamaanappaduththi,  kolaiseythaarga'l.  (maththeayu  22:6)

ராஜா  அதைக்  கேள்விப்பட்டு,  கோபமடைந்து,  தன்  சேனைகளை  அனுப்பி,  அந்தக்  கொலைபாதகரை  அழித்து,  அவர்கள்  பட்டணத்தையும்  சுட்டெரித்தான்.  (மத்தேயு  22:7)

raajaa  athaik  kea'lvippattu,  koabamadainthu,  than  seanaiga'lai  anuppi,  anthak  kolaipaathagarai  azhiththu,  avarga'l  patta'naththaiyum  sutteriththaan.  (maththeayu  22:7)

அப்பொழுது,  அவன்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  கலியாண  விருந்து  ஆயத்தமாயிருக்கிறது,  அழைக்கப்பட்டவர்களோ  அதற்கு  அபாத்திரராய்ப்  போனார்கள்.  (மத்தேயு  22:8)

appozhuthu,  avan  than  oozhiyakkaararai  noakki:  kaliyaa'na  virunthu  aayaththamaayirukki'rathu,  azhaikkappattavarga'loa  atha’rku  abaaththiraraayp  poanaarga'l.  (maththeayu  22:8)

ஆகையால்,  நீங்கள்  வழிச்சந்திகளிலே  போய்,  காணப்படுகிற  யாவரையும்  கலியாணத்திற்கு  அழைத்துக்கொண்டுவாருங்கள்  என்றான்.  (மத்தேயு  22:9)

aagaiyaal,  neengga'l  vazhichsanthiga'lilea  poay,  kaa'nappadugi'ra  yaavaraiyum  kaliyaa'naththi’rku  azhaiththukko'nduvaarungga'l  en'raan.  (maththeayu  22:9)

அந்த  ஊழியக்காரர்  புறப்பட்டு,  வழிகளிலே  போய்,  தாங்கள்  கண்ட  நல்லார்  பொல்லார்  யாவரையும்  கூட்டிக்கொண்டு  வந்தார்கள்;  கலியாணசாலை  விருந்தாளிகளால்  நிறைந்தது.  (மத்தேயு  22:10)

antha  oozhiyakkaarar  pu'rappattu,  vazhiga'lilea  poay,  thaangga'l  ka'nda  nallaar  pollaar  yaavaraiyum  koottikko'ndu  vanthaarga'l;  kaliyaa'nasaalai  virunthaa'liga'laal  ni'rainthathu.  (maththeayu  22:10)

விருந்தாளிகளைப்  பார்க்கும்படி  ராஜா  உள்ளே  பிரவேசித்தபோது,  கலியாண  வஸ்திரம்  தரித்திராத  ஒரு  மனுஷனை  அங்கே  கண்டு:  (மத்தேயு  22:11)

virunthaa'liga'laip  paarkkumpadi  raajaa  u'l'lea  piraveasiththapoathu,  kaliyaa'na  vasthiram  thariththiraatha  oru  manushanai  anggea  ka'ndu:  (maththeayu  22:11)

சிநேகிதனே,  நீ  கலியாண  வஸ்திரமில்லாதவனாய்  இங்கே  எப்படி  வந்தாய்  என்று  கேட்டான்;  அதற்கு  அவன்  பேசாமலிருந்தான்.  (மத்தேயு  22:12)

sineagithanea,  nee  kaliyaa'na  vasthiramillaathavanaay  inggea  eppadi  vanthaay  en'ru  keattaan;  atha’rku  avan  peasaamalirunthaan.  (maththeayu  22:12)

அப்பொழுது,  ராஜா  பணிவிடைக்காரரை  நோக்கி:  இவனைக்  கையுங்காலும்  கட்டிக்  கொண்டுபோய்,  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கிற  புறம்பான  இருளிலே  போடுங்கள்  என்றான்.  (மத்தேயு  22:13)

appozhuthu,  raajaa  pa'nividaikkaararai  noakki:  ivanaik  kaiyungkaalum  kattik  ko'ndupoay,  azhugaiyum  pa’rkadippum  u'ndaayirukki'ra  pu'rambaana  iru'lilea  poadungga'l  en'raan.  (maththeayu  22:13)

அந்தப்படியே,  அழைக்கப்பட்டவர்கள்  அநேகர்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ  சிலர்  என்றார்.  (மத்தேயு  22:14)

anthappadiyea,  azhaikkappattavarga'l  aneagar,  therinthuko'l'lappattavarga'loa  silar  en'raar.  (maththeayu  22:14)

அப்பொழுது,  பரிசேயர்  போய்,  பேச்சிலே  அவரை  அகப்படுத்தும்படி  யோசனைபண்ணி,  (மத்தேயு  22:15)

appozhuthu,  pariseayar  poay,  peachchilea  avarai  agappaduththumpadi  yoasanaipa'n'ni,  (maththeayu  22:15)

தங்கள்  சீஷரையும்  ஏரோதியரையும்  அவரிடத்தில்  அனுப்பினார்கள்.  அவர்கள்  வந்து:  போதகரே,  நீர்  சத்தியமுள்ளவரென்றும்,  தேவனுடைய  மார்க்கத்தைச்  சத்தியமாய்ப்  போதிக்கிறவரென்றும்,  நீர்  முகதாட்சணியம்  இல்லாதவராகையால்  எவனைக்குறித்தும்  உமக்குக்  கவலையில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  (மத்தேயு  22:16)

thangga'l  seesharaiyum  earoathiyaraiyum  avaridaththil  anuppinaarga'l.  avarga'l  vanthu:  poathagarea,  neer  saththiyamu'l'lavaren'rum,  theavanudaiya  maarkkaththaich  saththiyamaayp  poathikki'ravaren'rum,  neer  mugathaadcha'niyam  illaathavaraagaiyaal  evanaikku'riththum  umakkuk  kavalaiyillaiyen'rum  a'rinthirukki'roam.  (maththeayu  22:16)

ஆதலால்,  உமக்கு  எப்படித்  தோன்றுகிறது?  இராயனுக்கு  வரிகொடுக்கிறது  நியாயமோ,  அல்லவோ?  அதை  எங்களுக்குச்  சொல்லும்  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  22:17)

aathalaal,  umakku  eppadith  thoan'rugi'rathu?  iraayanukku  varikodukki'rathu  niyaayamoa,  allavoa?  athai  engga'lukkuch  sollum  en'ru  keattaarga'l.  (maththeayu  22:17)

இயேசு  அவர்கள்  துர்க்குணத்தை  அறிந்து:  மாயக்காரரே,  நீங்கள்  என்னை  ஏன்  சோதிக்கிறீர்கள்?  (மத்தேயு  22:18)

iyeasu  avarga'l  thurkku'naththai  a'rinthu:  maayakkaararea,  neengga'l  ennai  ean  soathikki'reerga'l?  (maththeayu  22:18)

வரிக்காசை  எனக்குக்  காண்பியுங்கள்  என்றார்;  அவர்கள்  ஒரு  பணத்தை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  (மத்தேயு  22:19)

varikkaasai  enakkuk  kaa'nbiyungga'l  en'raar;  avarga'l  oru  pa'naththai  avaridaththil  ko'nduvanthaarga'l.  (maththeayu  22:19)

அப்பொழுது  அவர்:  இந்தச்  சுரூபமும்  மேலெழுத்தும்  யாருடையது  என்று  கேட்டார்.  (மத்தேயு  22:20)

appozhuthu  avar:  inthach  suroobamum  mealezhuththum  yaarudaiyathu  en'ru  keattaar.  (maththeayu  22:20)

இராயனுடையது  என்றார்கள்.  அதற்கு  அவர்:  அப்படியானால்,  இராயனுடையதை  இராயனுக்கும்,  தேவனுடையதைத்  தேவனுக்கும்  செலுத்துங்கள்  என்றார்.  (மத்தேயு  22:21)

iraayanudaiyathu  en'raarga'l.  atha’rku  avar:  appadiyaanaal,  iraayanudaiyathai  iraayanukkum,  theavanudaiyathaith  theavanukkum  seluththungga'l  en'raar.  (maththeayu  22:21)

அவர்கள்  அதைக்கேட்டு  ஆச்சரியப்பட்டு  அவரை  விட்டுப்  போய்விட்டார்கள்.  (மத்தேயு  22:22)

avarga'l  athaikkeattu  aachchariyappattu  avarai  vittup  poayvittaarga'l.  (maththeayu  22:22)

உயிர்த்தெழுதல்  இல்லை  என்று  சாதிக்கிற  சதுசேயர்  அன்றையத்தினம்  அவரிடத்தில்  வந்து:  (மத்தேயு  22:23)

uyirththezhuthal  illai  en'ru  saathikki'ra  sathuseayar  an'raiyaththinam  avaridaththil  vanthu:  (maththeayu  22:23)

போதகரே,  ஒருவன்  சந்தானம்  இல்லாமல்  இறந்துபோனால்,  அவனுடைய  சகோதரன்  அவன்  மனைவியை  விவாகம்பண்ணி,  தன்  சகோதரனுக்குச்  சந்தானம்  உண்டாக்கவேண்டும்  என்று  மோசே  சொன்னாரே.  (மத்தேயு  22:24)

poathagarea,  oruvan  santhaanam  illaamal  i'ranthupoanaal,  avanudaiya  sagoatharan  avan  manaiviyai  vivaagampa'n'ni,  than  sagoatharanukkuch  santhaanam  u'ndaakkavea'ndum  en'ru  moasea  sonnaarea.  (maththeayu  22:24)

எங்களுக்குள்ளே  சகோதரர்  ஏழுபேர்  இருந்தார்கள்;  மூத்தவன்  விவாகம்பண்ணி,  மரித்து,  சந்தானமில்லாததினால்  தன்  மனைவியைத்  தன்  சகோதரனுக்கு  விட்டுவிட்டுப்போனான்.  (மத்தேயு  22:25)

engga'lukku'l'lea  sagoatharar  eazhupear  irunthaarga'l;  mooththavan  vivaagampa'n'ni,  mariththu,  santhaanamillaathathinaal  than  manaiviyaith  than  sagoatharanukku  vittuvittuppoanaan.  (maththeayu  22:25)

அப்படியே  இரண்டாம்  மூன்றாம்  சகோதரன்முதல்  ஏழாம்  சகோதரன்வரைக்கும்  செய்தார்கள்.  (மத்தேயு  22:26)

appadiyea  ira'ndaam  moon'raam  sagoatharanmuthal  eazhaam  sagoatharanvaraikkum  seythaarga'l.  (maththeayu  22:26)

எல்லாருக்கும்  பின்பு  அந்த  ஸ்திரீயும்  இறந்துபோனாள்.  (மத்தேயு  22:27)

ellaarukkum  pinbu  antha  sthireeyum  i'ranthupoanaa'l.  (maththeayu  22:27)

ஆகையால்,  உயிர்த்தெழுதலில்  அவ்வேழுபேரில்  எவனுக்கு  அவள்  மனைவியாயிருப்பாள்?  அவர்கள்  எல்லாரும்  அவளை  விவாகம்பண்ணியிருந்தார்களே  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  22:28)

aagaiyaal,  uyirththezhuthalil  avveazhupearil  evanukku  ava'l  manaiviyaayiruppaa'l?  avarga'l  ellaarum  ava'lai  vivaagampa'n'niyirunthaarga'lea  en'ru  keattaarga'l.  (maththeayu  22:28)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  வேதவாக்கியங்களையும்,  தேவனுடைய  வல்லமையையும்  அறியாமல்  தப்பான  எண்ணங்கொள்ளுகிறீர்கள்.  (மத்தேயு  22:29)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  neengga'l  veathavaakkiyangga'laiyum,  theavanudaiya  vallamaiyaiyum  a'riyaamal  thappaana  e'n'nangko'l'lugi'reerga'l.  (maththeayu  22:29)

உயிர்த்தெழுதலில்  கொள்வனையும்  கொடுப்பனையும்  இல்லை;  அவர்கள்  பரலோகத்திலே  தேவதூதரைப்போல்  இருப்பார்கள்;  (மத்தேயு  22:30)

uyirththezhuthalil  ko'lvanaiyum  koduppanaiyum  illai;  avarga'l  paraloagaththilea  theavathootharaippoal  iruppaarga'l;  (maththeayu  22:30)

மேலும்  மரித்தோர்  உயிர்த்தெழுதலைப்பற்றி:  நான்  ஆபிரகாமின்  தேவனும்,  ஈசாக்கின்  தேவனும்,  யாக்கோபின்  தேவனுமாயிருக்கிறேன்  என்று  தேவனால்  உங்களுக்கு  உரைக்கப்பட்டிருக்கிறதை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  (மத்தேயு  22:31)

mealum  mariththoar  uyirththezhuthalaippat’ri:  naan  aabirahaamin  theavanum,  eesaakkin  theavanum,  yaakkoabin  theavanumaayirukki'rean  en'ru  theavanaal  ungga'lukku  uraikkappattirukki'rathai  neengga'l  vaasikkavillaiyaa?  (maththeayu  22:31)

தேவன்  மரித்தோருக்குத்  தேவனாயிராமல்,  ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்  என்றார்.  (மத்தேயு  22:32)

theavan  mariththoarukkuth  theavanaayiraamal,  jeevanu'l'loarukkuth  theavanaayirukki'raar  en'raar.  (maththeayu  22:32)

ஜனங்கள்  இதைக்  கேட்டு,  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  (மத்தேயு  22:33)

janangga'l  ithaik  keattu,  avarudaiya  poathagaththaikku'riththu  aachchariyappattaarga'l.  (maththeayu  22:33)

அவர்  சதுசேயரை  வாயடைத்தார்  என்று  பரிசேயர்  கேள்விப்பட்டு,  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  (மத்தேயு  22:34)

avar  sathuseayarai  vaayadaiththaar  en'ru  pariseayar  kea'lvippattu,  avaridaththil  koodivanthaarga'l.  (maththeayu  22:34)

அவர்களில்  நியாயசாஸ்திரி  ஒருவன்  அவரைச்  சோதிக்கும்படி:  (மத்தேயு  22:35)

avarga'lil  niyaayasaasthiri  oruvan  avaraich  soathikkumpadi:  (maththeayu  22:35)

போதகரே,  நியாயப்பிரமாணத்திலே  எந்தக்  கற்பனை  பிரதானமானது  என்று  கேட்டான்.  (மத்தேயு  22:36)

poathagarea,  niyaayappiramaa'naththilea  enthak  ka’rpanai  pirathaanamaanathu  en'ru  keattaan.  (maththeayu  22:36)

இயேசு  அவனை  நோக்கி:  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்  உன்  முழு  ஆத்துமாவோடும்  உன்  முழு  மனதோடும்  அன்புகூருவாயாக;  (மத்தேயு  22:37)

iyeasu  avanai  noakki:  un  theavanaagiya  karththaridaththil  un  muzhu  iruthayaththoadum  un  muzhu  aaththumaavoadum  un  muzhu  manathoadum  anbukooruvaayaaga;  (maththeayu  22:37)

இது  முதலாம்  பிரதான  கற்பனை.  (மத்தேயு  22:38)

ithu  muthalaam  pirathaana  ka’rpanai.  (maththeayu  22:38)

இதற்கு  ஒப்பாயிருக்கிற  இரண்டாம்  கற்பனை  என்னவென்றால்,  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பதே.  (மத்தேயு  22:39)

itha’rku  oppaayirukki'ra  ira'ndaam  ka’rpanai  ennaven'raal,  unnidaththil  nee  anbukooruvathupoalap  pi'ranidaththilum  anbukooruvaayaaga  enbathea.  (maththeayu  22:39)

இவ்விரண்டு  கற்பனைகளிலும்  நியாயப்பிரமாணம்  முழுமையும்  தீர்க்கதரிசனங்களும்  அடங்கியிருக்கிறது  என்றார்.  (மத்தேயு  22:40)

ivvira'ndu  ka’rpanaiga'lilum  niyaayappiramaa'nam  muzhumaiyum  theerkkatharisanangga'lum  adanggiyirukki'rathu  en'raar.  (maththeayu  22:40)

பரிசேயர்  கூடியிருக்கையில்,  இயேசு  அவர்களை  நோக்கி:  (மத்தேயு  22:41)

pariseayar  koodiyirukkaiyil,  iyeasu  avarga'lai  noakki:  (maththeayu  22:41)

கிறிஸ்துவைக்குறித்து  நீங்கள்  என்ன  நினைக்கிறீர்கள்,  அவர்  யாருடைய  குமாரன்?  என்று  கேட்டார்.  அவர்  தாவீதின்  குமாரன்  என்றார்கள்.  (மத்தேயு  22:42)

ki'risthuvaikku'riththu  neengga'l  enna  ninaikki'reerga'l,  avar  yaarudaiya  kumaaran?  en'ru  keattaar.  avar  thaaveethin  kumaaran  en'raarga'l.  (maththeayu  22:42)

அதற்கு  அவர்:  அப்படியானால்,  தாவீது  பரிசுத்த  ஆவியினாலே  அவரை  ஆண்டவர்  என்று  சொல்லியிருக்கிறது  எப்படி?  (மத்தேயு  22:43)

atha’rku  avar:  appadiyaanaal,  thaaveethu  parisuththa  aaviyinaalea  avarai  aa'ndavar  en'ru  solliyirukki'rathu  eppadi?  (maththeayu  22:43)

நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று  கர்த்தர்  என்  ஆண்டவரோடே  சொன்னார்  என்று  சொல்லியிருக்கிறானே.  (மத்தேயு  22:44)

naan  ummudaiya  saththurukka'lai  umakkup  paathapadiyaakkip  poadumvaraikkum  neer  ennudaiya  valathupaarisaththil  udkaarum  en'ru  karththar  en  aa'ndavaroadea  sonnaar  en'ru  solliyirukki'raanea.  (maththeayu  22:44)

தாவீது  அவரை  ஆண்டவர்  என்று  சொல்லியிருக்க,  அவனுக்கு  அவர்  குமாரனாயிருப்பது  எப்படி  என்றார்.  (மத்தேயு  22:45)

thaaveethu  avarai  aa'ndavar  en'ru  solliyirukka,  avanukku  avar  kumaaranaayiruppathu  eppadi  en'raar.  (maththeayu  22:45)

அதற்கு  மாறுத்தரமாக  ஒருவனும்  அவருக்கு  ஒரு  வார்த்தையும்  சொல்லக்கூடாதிருந்தது.  அன்றுமுதல்  ஒருவனும்  அவரிடத்தில்  கேள்விகேட்கத்  துணியவில்லை.  (மத்தேயு  22:46)

atha’rku  maa'ruththaramaaga  oruvanum  avarukku  oru  vaarththaiyum  sollakkoodaathirunthathu.  an'rumuthal  oruvanum  avaridaththil  kea'lvikeadkath  thu'niyavillai.  (maththeayu  22:46)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!