Wednesday, April 20, 2016

Maththeayu 20 | மத்தேயு 20 | Matthew 20


பரலோகராஜ்யம்  வீட்டெஜமானாகிய  ஒரு  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறது;  அவன்  தன்  திராட்சத்தோட்டத்துக்கு  வேலையாட்களை  அமர்த்த  அதிகாலையிலே  புறப்பட்டான்.  (மத்தேயு  20:1)

paraloagaraajyam  veettejamaanaagiya  oru  manushanukku  oppaayirukki'rathu;  avan  than  thiraadchaththoattaththukku  vealaiyaadka'lai  amarththa  athikaalaiyilea  pu'rappattaan.  (maththeayu  20:1)

வேலையாட்களுடன்  நாளொன்றுக்கு  ஒரு  பணம்  கூலிபேசி,  அவர்களைத்  தன்  திராட்சத்தோட்டத்துக்கு  அனுப்பினான்.  (மத்தேயு  20:2)

vealaiyaadka'ludan  naa'lon'rukku  oru  pa'nam  koolipeasi,  avarga'laith  than  thiraadchaththoattaththukku  anuppinaan.  (maththeayu  20:2)

மூன்றாம்  மணிவேளையிலும்  அவன்  புறப்பட்டுப்போய்,  கடைத்தெருவிலே  சும்மா  நிற்கிற  வேறு  சிலரைக்  கண்டு:  (மத்தேயு  20:3)

moon'raam  ma'nivea'laiyilum  avan  pu'rappattuppoay,  kadaiththeruvilea  summaa  ni’rki'ra  vea'ru  silaraik  ka'ndu:  (maththeayu  20:3)

நீங்களும்  திராட்சத்தோட்டத்துக்குப்  போங்கள்,  நியாயமானபடி  உங்களுக்குக்  கூலி  கொடுப்பேன்  என்றான்;  அவர்களும்  போனார்கள்.  (மத்தேயு  20:4)

neengga'lum  thiraadchaththoattaththukkup  poangga'l,  niyaayamaanapadi  ungga'lukkuk  kooli  koduppean  en'raan;  avarga'lum  poanaarga'l.  (maththeayu  20:4)

மறுபடியும்,  ஆறாம்  ஒன்பதாம்  மணிவேளையிலும்  அவன்  போய்  அப்படியே  செய்தான்.  (மத்தேயு  20:5)

ma'rupadiyum,  aa'raam  onbathaam  ma'nivea'laiyilum  avan  poay  appadiyea  seythaan.  (maththeayu  20:5)

பதினோராம்  மணிவேளையிலும்  அவன்  போய்,  சும்மா  நிற்கிற  வேறு  சிலரைக்கண்டு:  நீங்கள்  பகல்  முழுவதும்  இங்கே  சும்மா  நிற்கிறதென்ன  என்று  கேட்டான்.  (மத்தேயு  20:6)

pathinoaraam  ma'nivea'laiyilum  avan  poay,  summaa  ni’rki'ra  vea'ru  silaraikka'ndu:  neengga'l  pagal  muzhuvathum  inggea  summaa  ni’rki'rathenna  en'ru  keattaan.  (maththeayu  20:6)

அதற்கு  அவர்கள்:  ஒருவரும்  எங்களுக்கு  வேலையிடவில்லை  என்றார்கள்.  அவன்  அவர்களை  நோக்கி:  நீங்களும்  திராட்சத்தோட்டத்துக்குப்  போங்கள்,  நியாயமானபடி  கூலி  பெற்றுக்கொள்வீர்கள்  என்றான்.  (மத்தேயு  20:7)

atha’rku  avarga'l:  oruvarum  engga'lukku  vealaiyidavillai  en'raarga'l.  avan  avarga'lai  noakki:  neengga'lum  thiraadchaththoattaththukkup  poangga'l,  niyaayamaanapadi  kooli  pet’rukko'lveerga'l  en'raan.  (maththeayu  20:7)

சாயங்காலத்தில்,  திராட்சத்தோட்டத்துக்கு  எஜமான்  தன்  காரியக்காரனை  நோக்கி:  நீ  வேலையாட்களை  அழைத்து,  பிந்திவந்தவர்கள்  தொடங்கி  முந்திவந்தவர்கள்வரைக்கும்  அவர்களுக்குக்  கூலிகொடு  என்றான்.  (மத்தேயு  20:8)

saayanggaalaththil,  thiraadchaththoattaththukku  ejamaan  than  kaariyakkaaranai  noakki:  nee  vealaiyaadka'lai  azhaiththu,  pinthivanthavarga'l  thodanggi  munthivanthavarga'lvaraikkum  avarga'lukkuk  koolikodu  en'raan.  (maththeayu  20:8)

அப்பொழுது  பதினோராம்  மணிவேளையில்  வேலையமர்த்தப்பட்டவர்கள்  வந்து  ஆளுக்கு  ஒவ்வொரு  பணம்  வாங்கினார்கள்.  (மத்தேயு  20:9)

appozhuthu  pathinoaraam  ma'nivea'laiyil  vealaiyamarththappattavarga'l  vanthu  aa'lukku  ovvoru  pa'nam  vaangginaarga'l.  (maththeayu  20:9)

முந்தி  அமர்த்தப்பட்டவர்கள்  வந்து,  தங்களுக்கு  அதிக  கூலி  கிடைக்கும்  என்று  எண்ணினார்கள்,  அவர்களும்  ஆளுக்கு  ஒவ்வொரு  பணம்  வாங்கினார்கள்.  (மத்தேயு  20:10)

munthi  amarththappattavarga'l  vanthu,  thangga'lukku  athiga  kooli  kidaikkum  en'ru  e'n'ninaarga'l,  avarga'lum  aa'lukku  ovvoru  pa'nam  vaangginaarga'l.  (maththeayu  20:10)

வாங்கிக்கொண்டு,  வீட்டெஜமானை  நோக்கி:  (மத்தேயு  20:11)

vaanggikko'ndu,  veettejamaanai  noakki:  (maththeayu  20:11)

பிந்திவந்தவர்களாகிய  இவர்கள்  ஒரு  மணி  நேரமாத்திரம்  வேலைசெய்தார்கள்;  பகலின்  கஷ்டத்தையும்  வெயிலின்  உஷ்ணத்தையும்  சகித்த  எங்களுக்கு  இவர்களைச்  சமமாக்கினீரே  என்று  முறுமுறுத்தார்கள்.  (மத்தேயு  20:12)

pinthivanthavarga'laagiya  ivarga'l  oru  ma'ni  nearamaaththiram  vealaiseythaarga'l;  pagalin  kashdaththaiyum  veyilin  ush'naththaiyum  sagiththa  engga'lukku  ivarga'laich  samamaakkineerea  en'ru  mu'rumu'ruththaarga'l.  (maththeayu  20:12)

அவர்களில்  ஒருவனுக்கு  அவன்  பிரதியுத்தரமாக:  சிநேகிதனே,  நான்  உனக்கு  அநியாயஞ்செய்யவில்லை;  நீ  என்னிடத்தில்  ஒரு  பணத்துக்குச்  சம்மதிக்கவில்லையா?  (மத்தேயு  20:13)

avarga'lil  oruvanukku  avan  pirathiyuththaramaaga:  sineagithanea,  naan  unakku  aniyaayagnseyyavillai;  nee  ennidaththil  oru  pa'naththukkuch  sammathikkavillaiyaa?  (maththeayu  20:13)

உன்னுடையதை  நீ  வாங்கிக்கொண்டு  போ,  உனக்குக்  கொடுத்ததுபோலப்  பிந்தி  வந்தவனாகிய  இவனுக்கும்  கொடுப்பது  என்னுடைய  இஷ்டம்.  (மத்தேயு  20:14)

unnudaiyathai  nee  vaanggikko'ndu  poa,  unakkuk  koduththathupoalap  pinthi  vanthavanaagiya  ivanukkum  koduppathu  ennudaiya  ishdam.  (maththeayu  20:14)

என்னுடையதை  என்  இஷ்டப்படி  செய்ய  எனக்கு  அதிகாரமில்லையா?  நான்  தயாளனாயிருக்கிறபடியால்,  நீ  வன்கண்ணனாயிருக்கலாமா  என்றான்.  (மத்தேயு  20:15)

ennudaiyathai  en  ishdappadi  seyya  enakku  athigaaramillaiyaa?  naan  thayaa'lanaayirukki'rapadiyaal,  nee  vanka'n'nanaayirukkalaamaa  en'raan.  (maththeayu  20:15)

இவ்விதமாக,  பிந்தினோர்  முந்தினோராயும்,  முந்தினோர்  பிந்தினோராயும்  இருப்பார்கள்;  அழைக்கப்பட்டவர்கள்  அநேகர்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ  சிலர்  என்றார்.  (மத்தேயு  20:16)

ivvithamaaga,  pinthinoar  munthinoaraayum,  munthinoar  pinthinoaraayum  iruppaarga'l;  azhaikkappattavarga'l  aneagar,  therinthuko'l'lappattavarga'loa  silar  en'raar.  (maththeayu  20:16)

இயேசு  எருசலேமுக்குப்  போகும்போது,  வழியிலே  பன்னிரண்டு  சீஷரையும்  தனியே  அழைத்து:  (மத்தேயு  20:17)

iyeasu  erusaleamukkup  poagumpoathu,  vazhiyilea  pannira'ndu  seesharaiyum  thaniyea  azhaiththu:  (maththeayu  20:17)

இதோ,  எருசலேமுக்குப்  போகிறோம்;  மனுஷகுமாரன்  பிரதான  ஆசாரியரிடத்திலும்  வேதபாரகரிடத்திலும்  ஒப்புக்கொடுக்கப்படுவார்;  அவர்கள்  அவரை  மரண  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  (மத்தேயு  20:18)

ithoa,  erusaleamukkup  poagi'roam;  manushakumaaran  pirathaana  aasaariyaridaththilum  veathapaaragaridaththilum  oppukkodukkappaduvaar;  avarga'l  avarai  mara'na  aakkinaikku'l'laagath  theerththu,  (maththeayu  20:18)

அவரைப்  பரியாசம்பண்ணவும்,  வாரினால்  அடிக்கவும்,  சிலுவையில்  அறையவும்  புறஜாதியாரிடத்தில்  ஒப்புக்கொடுப்பார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  (மத்தேயு  20:19)

avaraip  pariyaasampa'n'navum,  vaarinaal  adikkavum,  siluvaiyil  a'raiyavum  pu'rajaathiyaaridaththil  oppukkoduppaarga'l;  aagilum  moon'raam  naa'lilea  avar  uyiroadea  ezhunthiruppaar  en'raar.  (maththeayu  20:19)

அப்பொழுது,  செபெதேயுவின்  குமாரருடைய  தாய்  தன்  குமாரரோடுகூட  அவரிடத்தில்  வந்து,  அவரைப்  பணிந்துகொண்டு:  உம்மிடத்தில்  ஒரு  விண்ணப்பம்  பண்ணவேண்டும்  என்றாள்.  (மத்தேயு  20:20)

appozhuthu,  sebetheayuvin  kumaararudaiya  thaay  than  kumaararoadukooda  avaridaththil  vanthu,  avaraip  pa'ninthuko'ndu:  ummidaththil  oru  vi'n'nappam  pa'n'navea'ndum  en'raa'l.  (maththeayu  20:20)

அவர்  அவளை  நோக்கி:  உனக்கு  என்ன  வேண்டும்  என்று  கேட்டார்.  அதற்கு  அவள்:  உம்முடைய  ராஜ்யத்திலே  என்  குமாரராகிய  இவ்விரண்டுபேரில்  ஒருவன்  உமது  வலதுபாரிசத்திலும்,  ஒருவன்  உமது  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  அருள்செய்யவேண்டும்  என்றாள்.  (மத்தேயு  20:21)

avar  ava'lai  noakki:  unakku  enna  vea'ndum  en'ru  keattaar.  atha’rku  ava'l:  ummudaiya  raajyaththilea  en  kumaararaagiya  ivvira'ndupearil  oruvan  umathu  valathupaarisaththilum,  oruvan  umathu  idathupaarisaththilum  udkaarnthirukkumpadi  aru'lseyyavea'ndum  en'raa'l.  (maththeayu  20:21)

இயேசு  பிரதியுத்தரமாக:  நீங்கள்  கேட்டுக்கொள்ளுகிறது  இன்னது  என்று  உங்களுக்குத்  தெரியவில்லை.  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிக்கவும்,  நான்  பெறும்  ஸ்நானத்தை  நீங்கள்  பெறவும்  உங்களால்  கூடுமா  என்றார்.  அதற்கு  அவர்கள்:  கூடும்  என்றார்கள்.  (மத்தேயு  20:22)

iyeasu  pirathiyuththaramaaga:  neengga'l  keattukko'l'lugi'rathu  innathu  en'ru  ungga'lukkuth  theriyavillai.  naan  kudikkum  paaththiraththil  neengga'l  kudikkavum,  naan  pe'rum  snaanaththai  neengga'l  pe'ravum  ungga'laal  koodumaa  en'raar.  atha’rku  avarga'l:  koodum  en'raarga'l.  (maththeayu  20:22)

அவர்  அவர்களை  நோக்கி:  என்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிப்பீர்கள்,  நான்  பெறும்  ஸ்நானத்தையும்  நீங்கள்  பெறுவீர்கள்;  ஆனாலும்,  என்  வலதுபாரிசத்திலும்  என்  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  என்  பிதாவினால்  எவர்களுக்கு  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ  அவர்களுக்கேயல்லாமல்,  மற்றொருவருக்கும்  அதை  அருளுவது  என்  காரியமல்ல  என்றார்.  (மத்தேயு  20:23)

avar  avarga'lai  noakki:  en  paaththiraththil  neengga'l  kudippeerga'l,  naan  pe'rum  snaanaththaiyum  neengga'l  pe'ruveerga'l;  aanaalum,  en  valathupaarisaththilum  en  idathupaarisaththilum  udkaarnthirukkumpadi  en  pithaavinaal  evarga'lukku  aayaththampa'n'nappattirukki'rathoa  avarga'lukkeayallaamal,  mat’roruvarukkum  athai  aru'luvathu  en  kaariyamalla  en'raar.  (maththeayu  20:23)

மற்றப்  பத்துப்பேரும்  அதைக்கேட்டு,  அந்த  இரண்டு  சகோதரர்பேரிலும்  எரிச்சலானார்கள்.  (மத்தேயு  20:24)

mat’rap  paththuppearum  athaikkeattu,  antha  ira'ndu  sagoathararpearilum  erichchalaanaarga'l.  (maththeayu  20:24)

அப்பொழுது,  இயேசு  அவர்களைக்  கிட்டவரச்செய்து:  புறஜாதியாருடைய  அதிகாரிகள்  அவர்களை  இறுமாப்பாய்  ஆளுகிறார்கள்  என்றும்,  பெரியவர்கள்  அவர்கள்மேல்  கடினமாய்  அதிகாரஞ்  செலுத்துகிறார்கள்  என்றும்,  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  (மத்தேயு  20:25)

appozhuthu,  iyeasu  avarga'laik  kittavarachseythu:  pu'rajaathiyaarudaiya  athigaariga'l  avarga'lai  i'rumaappaay  aa'lugi'raarga'l  en'rum,  periyavarga'l  avarga'lmeal  kadinamaay  athigaaragn  seluththugi'raarga'l  en'rum,  neengga'l  a'rinthirukki'reerga'l.  (maththeayu  20:25)

உங்களுக்குள்ளே  அப்படி  இருக்கலாகாது;  உங்களில்  எவனாகிலும்  பெரியவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்குப்  பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.  (மத்தேயு  20:26)

ungga'lukku'l'lea  appadi  irukkalaagaathu;  ungga'lil  evanaagilum  periyavanaayirukka  virumbinaal,  avan  ungga'lukkup  pa'nividaikkaaranaayirukkakkadavan.  (maththeayu  20:26)

உங்களில்  எவனாகிலும்  முதன்மையானவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்கு  ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  (மத்தேயு  20:27)

ungga'lil  evanaagilum  muthanmaiyaanavanaayirukka  virumbinaal,  avan  ungga'lukku  oozhiyakkaaranaayirukkakkadavan.  (maththeayu  20:27)

அப்படியே,  மனுஷகுமாரனும்  ஊழியங்கொள்ளும்படி  வராமல்,  ஊழியஞ்  செய்யவும்,  அநேகரை  மீட்கும்பொருளாகத்  தம்முடைய  ஜீவனைக்  கொடுக்கவும்  வந்தார்  என்றார்.  (மத்தேயு  20:28)

appadiyea,  manushakumaaranum  oozhiyangko'l'lumpadi  varaamal,  oozhiyagn  seyyavum,  aneagarai  meedkumporu'laagath  thammudaiya  jeevanaik  kodukkavum  vanthaar  en'raar.  (maththeayu  20:28)

அவர்கள்  எரிகோவிலிருந்து  புறப்பட்டுப்போகையில்,  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (மத்தேயு  20:29)

avarga'l  erigoavilirunthu  pu'rappattuppoagaiyil,  thira'laana  janangga'l  avarukkup  pinsen'raarga'l.  (maththeayu  20:29)

அப்பொழுது  வழியருகே  உட்கார்ந்திருந்த  இரண்டு  குருடர்,  இயேசு  அவ்வழியே  வருகிறார்  என்று  கேள்விப்பட்டு:  ஆண்டவரே,  தாவீதின்  குமாரனே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  கூப்பிட்டார்கள்.  (மத்தேயு  20:30)

appozhuthu  vazhiyarugea  udkaarnthiruntha  ira'ndu  kurudar,  iyeasu  avvazhiyea  varugi'raar  en'ru  kea'lvippattu:  aa'ndavarea,  thaaveethin  kumaaranea,  engga'lukku  iranggum  en'ru  kooppittaarga'l.  (maththeayu  20:30)

அவர்கள்  பேசாதிருக்கும்படி  ஜனங்கள்  அவர்களை  அதட்டினார்கள்.  அவர்களோ:  ஆண்டவரே,  தாவீதின்  குமாரனே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  அதிகமாய்க்  கூப்பிட்டார்கள்.  (மத்தேயு  20:31)

avarga'l  peasaathirukkumpadi  janangga'l  avarga'lai  athattinaarga'l.  avarga'loa:  aa'ndavarea,  thaaveethin  kumaaranea,  engga'lukku  iranggum  en'ru  athigamaayk  kooppittaarga'l.  (maththeayu  20:31)

இயேசு  நின்று,  அவர்களைத்  தம்மிடத்தில்  அழைத்து:  நான்  உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறீர்கள்  என்றார்.  (மத்தேயு  20:32)

iyeasu  nin'ru,  avarga'laith  thammidaththil  azhaiththu:  naan  ungga'lukku  enna  seyyavea'ndum  en'rirukki'reerga'l  en'raar.  (maththeayu  20:32)

அதற்கு  அவர்கள்:  ஆண்டவரே,  எங்கள்  கண்களைத்  திறக்கவேண்டும்  என்றார்கள்.  (மத்தேயு  20:33)

atha’rku  avarga'l:  aa'ndavarea,  engga'l  ka'nga'laith  thi'rakkavea'ndum  en'raarga'l.  (maththeayu  20:33)

இயேசு  மனதுருகி,  அவர்கள்  கண்களைத்  தொட்டார்;  உடனே  அவர்கள்  பார்வையடைந்து,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (மத்தேயு  20:34)

iyeasu  manathurugi,  avarga'l  ka'nga'laith  thottaar;  udanea  avarga'l  paarvaiyadainthu,  avarukkup  pinsen'raarga'l.  (maththeayu  20:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!